எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Thursday, August 22, 2013

மரிப்பதற்கு முன் மறக்கவே நினைக்கிறேன்


நீண்ட நாட்களுக்கு பின் எனது கல்லூரி டைரியை எடுத்து புரட்டிப் பார்த்தேன் ...........மறந்து விட்டதாக் என்னை நானே ஏமாற்றிக்கொண்ட நினைவுகள் ......

அவளுடன் உண்டான சண்டையின் போது என் மணிக்கட்டில் சிகிரட்டால் சுட்டுக்கொண்ட தழும்பை இப்பொழுது தடவி பார்த்தேன்.

நடு இரவு நேரத்தில் சிறிது தொலைவில் இருந்து அவள் வீட்டையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்த நாட்கள்.

மறக்க முடியாத நாட்கள் . மறக்க விரும்பாத நாட்கள் . மீண்டும் கிடைக்காத நாட்கள் .ஆனால் மறக்க வேண்டிய நாட்கள். 

லேசா மழைபெய்யும் போது கல்லூரி வராண்டாவில் காதலிக்காக காத்துக்கிடப்பது தனி சுகம் .

மழை காலங்களில் கல்லூரி விடுமுறை நாட்களில் அவள் வரமாட்டாள் என்று தெரிந்தும் கல்லூரி வராண்டாவில் காத்திருந்த நாட்கள் . 

அவள் உதட்டோரம் சுழிக்கும் சிரிப்புக்காக ஏங்கி நின்ற நாட்கள் .

பாதி சாப்பிட்ட தின்பண்டங்களை பரிமாறிக்கொண்ட நாட்கள் , அவள் தொட்ட பேனாவை நானும் தொட வேண்டும் என்பதற்காக வேண்டும் என்றே பேனா எடுத்துப்போகாத நாட்கள், எனக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காவே இரண்டு பேனாக்கள் அவள் கொண்டு வரும் நாட்கள்.

அவளிடம் திட்டு வாங்குவதற்கென்றே அவளுக்கு பயந்து கொண்டு மறைப்பது போல நடித்து அவளுக்கு தெரியுமாறு சிகரட் பிடித்த நாட்கள் ,

அவளிடம் திருடிய கர்ஷிப்கள் , ஹேர் கிளிப்க்கள் , அவளிடம் தொலைப்பதற்கு வேண்டும் என்றே நான் வாங்கி தொலைத்த பரிசுப்பொருட்கள்.

இப்பொழுது என் நினைவுகளில் மட்டும் உயிர் வாழ்கின்றன ....

- மீள் பதிவு   

2 comments:

'பரிவை' சே.குமார் said...

ம்... நினைவுகள் சுகமானவை.

பித்தனின் வாக்கு said...

ethukku suthi valaichu solara,,, neee loosu pola irutha nattkal sonna poththa manguni