எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Wednesday, August 21, 2013

என்னைய கெட்ட வார்த்தைல திட்டுறானுக சார்

கண்ணா இந்த லெட்டர 15 ஜெராக்ஸ் காப்பி எடுத்திட்டு வா " (எவன்டா அவன் லவ் லெட்டரான்னு சவுண்டு விடுறது )

நம்ம ஆபீஸ்பாய் கிட்ட சொன்னேங்க , பையன் ஜெராக்ஸ் மெசின் ரூமுக்கு போயிட்டு வந்து

" சார் , ஜெராக்ஸ் எடுக்குற பேப்பர் ( ஒயிட் சீட்) இல்லை , 4 வொயிட் சீட் தான் இருக்கு, பேப்பர் வாங்கணும் "

"அடடா .....இப்ப அவசரமா வேணுமே , நீ ஒன்னு பண்ணு பஸ்ட்டு ஒரு ஒயிட் சீட்ட வச்சு 15 ஒயிட்சீட் ஜெராக்ஸ்போட்டுக்க , அப்புறம் அந்த பேபர்கள வச்சு லெட்டர ஜெராக்ஸ் எடு"

"சார் , ஜெராக்ஸ் போடத்தான் பேப்பர் இல்லை "

"அதாம்பா , பஸ்ட்டு ஒயிட் சீட்ட வச்சு ஜெராக்ஸ் போட்டேன்னா , உனக்கு நிறையா ஒயிட் சீட் கிடைச்சிடும் , அதை யூஸ் பண்ணிக்கோ "

"என்னங்க சார் வாழப்பழ கதையா இருக்கு, ஒயிட் சீட்ட ஜெராக்ஸ் போடவா ?"

" ஆமா கண்ணா"

"போங்கடா நீங்களும் உங்க வேலையும் ...................இத பொழப்புக்கு நான் குடும்பத்தோட மருந்த குடிச்சு சாகலாம் .......... நீ எல்லாம் ஒரு மனுசனா .........அடிங்... ங்கொ..........@@##$%^&^%%............."

"ஹேய் , ஹேய் ....நோ பேட் வேர்ட்ஸ் .........மை பேமிலி பாவம் "

(அடப்பாவி என்னா கோவக்காரனா இருக்கான் ? )

நீங்களே சொல்லுங்க சார் ஜெராக்ஸ் எடுக்க ஒயிட் சீட் பத்தலைன்னா , இருக்க ஒரு ஒயிட் சீட்ட ஒரு 20 காபி ஜெராக்ஸ் போட்டா அப்புறம் நமக்கு 20 ஒயிட் சீட் எக்ஸ்ட்ரா கிடைச்சிடும் அதை வச்சு அப்புறம் லெட்டர ஜெராக்ஸ் எடுத்துக்கிரலாம்ல, இதைச்சொன்னா என்னைய கெட்ட வார்த்தைல திட்டுறானுக ..... எல்லாம் கலிகாலம் சார் ..

டிஸ்கி : யாருக்காவது ஏதாவது புரிஞ்சதா ??? புரிந்தவர்கள் தயவு கூர்ந்து எனக்கு விளக்கமளிக்கவும் .- மீள் பதிவு

4 comments:

kathalan said...

ஒத்துக்கிறோம்........
நீங்க மங்குனி அமைச்சர்னு ஒத்துக்கிறோம்

முத்தரசு said...

யோவ் மீண்டுமாபுதிதவர்களுக்கு நடக்கட்டும்

'பரிவை' சே.குமார் said...

நல்லவேளை அவன் கொஞ்சமா திட்டியிருக்கான்...

Ponchandar said...

ஏன் இப்படி கூட பண்ணலாமே !! ஒரு வொயிட் ஷீட்டை ஸ்கேன் பண்ணி, போட்டோ ஷாப்-ல போய் சுத்தமான வொயிட் ஷீட்டா மாத்தி 20 காப்பி போட்டுற வேண்டியதுதானே ! ! சிம்பிள் ! !