எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, August 12, 2013

நேசனல் பெர்மிட் லாரில அடிபட்டு செத்துப்போன சொறிநாய பாக்கிறது மாதிரி

சிவனேன்னு சிஸ்டத்துல சீட்டு விளையாடிக்கிட்டு இருந்தேன், யாரு கண்ணு பட்டுச்சோ டேமேஜர் என்னைய கூப்பிட்டு பேங்க் போயிட்டு வர சொன்னான் .....

(அவ்வ்வ்வ்.....என்னது நாமதானே இந்த கம்பனி ஓனர் இந்த டேமேஜர் நம்மள வேலைவாங்குறான் ,  எனக்கு வந்த கோவத்துக்கு .....சரி பேங்குல நல்ல பிகர் ஒன்னு இருக்கு அதவாவது பார்த்திட்டு வரலாம்ன்னு கிளம்பினேன் )

பேங்க்ல ஃபார்ம்  ஃபில் பண்ண ஒரு பொண்ணுகிட்ட பேனா கேட்டேன் ,

அது என்னைய ஹைவேஸ்ல
நேசனல் பெர்மிட் லாரில அடிபட்டு செத்துப்போன சொறிநாய பாக்கிறது மாதிரி பார்த்திட்டு பேனா குடுத்திச்சு , 

(ங்கொய்யாலே 5 ரூபாய் பேனாவுக்கு இவ்ளோ அலட்டலா என்னமோ தங்கத்துல செஞ்ச பேனா மாதிரி ஓவரா பன்னுறாளே  )

நானும் குழம்பிப்போய் 
ஃபார்ம் ஃ பில்பன்னிட்டு பேனாவ திரும்ப குடுத்தேன்,

மறுபடியும் அதே லுக்.....

என்ன கருமம்டா இது , நாம என்ன இப்போ I love you வா சொன்னோம் பேனாதானே கேட்டோம்ன்னு ஏன் இப்படி ஓவரா பில்ட் அப் குடுக்குதுன்னு  யோசிச்சு பார்த்தா.....

ஹி,ஹி,ஹி... என் பாகட்டுலேயே என்னோட  பேனா இருக்கு...

(நல்ல வேலை  காரி, காரி துப்பாம கவுரவமா விட்டாளே )

@ பேங்க் போனா ஓசில தான் பேனா வாங்கணுமின்னு நம்ம சப் கான்சியஸ் மைண்ட்ல செட்டாகிடுச்சு போல ???

4 comments:

Unknown said...

ஹாஹா மங்குனி மங்குனி

Madhavan Srinivasagopalan said...

//ஹி,ஹி,ஹி... என் பாகட்டுலேயே என்னோட பேனா இருக்கு...//

நல்லா யோசிச்சு சொல்லுங்க.. அது 'உங்க' பேனா தானா ?

மங்குனி அமைச்சர் said...

சக்கர கட்டி said...

ஹாஹா மங்குனி மங்குனி ///தேங்க்ஸ் ... :-)))))

மங்குனி அமைச்சர் said...


Madhavan Srinivasagopalan said...

//ஹி,ஹி,ஹி... என் பாகட்டுலேயே என்னோட பேனா இருக்கு...//

நல்லா யோசிச்சு சொல்லுங்க.. அது 'உங்க' பேனா தானா ?///ஏன் ? ஏன் ? ஏன் ??? இதுல எதுவும் டபுள் மீனிங் இருக்கா ?? :-)))