எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Wednesday, August 7, 2013

அந்த பொண்ணு என் கிட்ட நெருங்கி வந்து .......

KPN ல ஊருக்கு போகலாம்ன்னு கிளம்பினேன் , பக்கத்து சீட்டுல ஒரு அழகான பிகர் வந்து உட்கார்ந்துச்சு .......

உட்கார்ந்தவுடன் போன எடுத்து பேச ஆமபிச்சிருச்சு , கொஞ்ச நேரத்துல போன்ல blogspot  பத்தி பேசிக்கிட்டு வந்திச்சு....... எனக்கு துரு துருன்னு ஆகிபோச்சு, நைசா பேச்சு குடுத்தேன்....

" மேம் நீங்க
blog வச்சிருக்கிங்களா ?"

"எஸ் அப்கோர்ஸ் , ஏன் கேக்குறிங்க ?"

" நானும் வச்சிருக்கேன் அதான் கேட்டேன் "

நான் மங்கு
blog பத்தி சொல்லாம என் சொத்த blog சொன்னேன் அப்படியே பேச்சு blog பத்தி போச்சு , எனக்கு மனசுக்குள்ள ஒரு சந்தேகம் , மன்குனிய தெரியுமான்னு தெரிஞ்சுக்க அப்படியே நைசா .....

"மேம்
blog எனக்கு புடிச்சவுங்க நிறையா இருக்கான , அதுல குறிப்பா மங்குனி அமைச்சர் அப்படின்னு ஒருத்தர் இருக்கார் , அவர ரைட்டிங் எனக்கு ரொம்ப புடிக்கும் "

அவ்ளோ தாங்க சொன்னேன்....... அதுக்கு அந்த பொண்ணு துள்ளி குத்திச்சுக்கிட்டு

" சார் எனக்கும் ரொம்ப புடிக்கும் , எங்க காலேஜுல நிறையா பேர் அவரோட ஃபேன்ஸ் , குறிப்பா எங்க குரூப் ஒரு பத்து பதினைந்து பொண்ணுங்களுக்கு  அவர்தான் ஹீரோ "

அப்படின்னு புகழ்த்து தள்ள ஆரம்பிச்சிருச்சு..

எனக்கு அப்படியே உடம்பெல்லாம்  புல்லரிச்சுப்போய்  வானத்துல பறக்கிறது மாதிரி ஆகிடுச்சு , நான் மெதுவா

" மேம் நான்தான் மங்குனி அமைசர் "

அவ்ளோதான் அந்த பொண்ணு துள்ளி , குதிச்சிருச்சு என் கைய புடிச்சு குலுக்கிகிட்டே , நெருங்கி வந்து
*
*
*
*
*
*
*
*

*
*
@ சார், சார் ..........யோவ் எழுந்திருய்யா , திருச்சி வந்து அரைமணி நேரம் ஆச்சு , காலங்காத்தால பன்னாட கனவு காணுது போல - பஸ் ஹெல்பர்

-fb ஸ்டேடஸ்ஆ போட்டது

10 comments:

அமுதா கிருஷ்ணா said...

அய்யோ பாவம் கனவு தானா...

வெளங்காதவன்™ said...

thu

'பரிவை' சே.குமார் said...

கனவா... சந்தோஷம் போச்சா....

தமிழ்வாசி பிரகாஷ் said...

அடடே? கனவு வெளம்பரம்...

கும்மாச்சி said...

நெனைச்சேன் என்னாடா இது அம்சமான பிகரு, மங்குனி சேரமாட்டேங்குதேன்னு.

மங்குனி அமைச்சர் said...

Blogger அமுதா கிருஷ்ணா said...

அய்யோ பாவம் கனவு தானா... ///

ஆமாம்ங்க மேடம் , ஆமா..

மங்குனி அமைச்சர் said...

வெளங்காதவன்™ said...

thu //

ரொம்ப நன்றி மச்சி :-))))

மங்குனி அமைச்சர் said...

சே. குமார் said...

கனவா... சந்தோஷம் போச்சா.... ///

உஸ்ஸ்ஸ்....என்ன பண்றது சார் , நம்ம தலைல எளுதிருக்கது அவ்ளோதான்

மங்குனி அமைச்சர் said...

அடடே? கனவு வெளம்பரம்...///

ஹி,ஹி,ஹி,...... என்ன பண்றது , இப்படித்தான் வியாபாரம் பண்ணவேண்டி இருக்கு :-))))

மங்குனி அமைச்சர் said...

Blogger கும்மாச்சி said...

நெனைச்சேன் என்னாடா இது அம்சமான பிகரு, மங்குனி சேரமாட்டேங்குதேன்னு.///

இப்போ உங்களுக்கு குளு , குளுன்னு இருக்குமே :-)))))