எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Friday, March 26, 2010

மனசு வலிக்குது

முஸ்கி : இளகிய மனசுள்ளவர்கள் பார்க்க வேண்டாமே ?
ம்ம்ம்ம்மாமாமா.................(நமக்கு எவளவு வயதானுளும் அம்மா நமக்கு அம்மாதான் )
ரொம்ப வலிக்குது , என்ன விட்று..................செத்துட்டா வலி தெரியாதுல்ல ?மான்குட்டி : அங்கிள் , உங்க பேரு என்னா அங்கிள் ?

ஐய்யய்யோ ..... , அம்மா இலாத என்னோட ரெனி குட்டி நானும் போய்டா அன்னதையாயிடுமே
என்னை சீக்கிரம் வலி தெரியாம கொன்று நண்பா ..........................

ஸ்வாகா.............................

ஹலோ பட்டாப்பட்டி , இந்த புல்லையும் உப்பு பத்தல ....

டுஸ்கி:இதுவரை எல்லாம் இயற்கையின் கைவண்ணம் , ஒத்துகல்லாம் . இது நடக்க வில்லை என்றால் நான்-வெஜிடேரியன் உயிரினங்கள் அழிந்து விடும். ஏன் எல்லா உயிரினங்களும் வெஜிடேரியனா இருக்க கூடாது ? (மனிதன் உட்பட ).

அடுத்த படம்
மனசே, மனசே கதவைத்திற ..................................

இது இயற்கையா ? கவனகுறைவா ?


டிஸ்கி : மேலும் எனக்கு ஒரு கேள்வி தோன்றுகிறது , ஆனால் யாரை பார்த்து கேட்பது என்று தான் தெரியவில்லை .


கிஸ்கி :ஆக்சுவலா இதுக்கு வேற தலைப்பு , வேற கேள்விகள் கேட்டு தான் முதல்ல ரெடி பண்ணேன் , அப்புறம் ஜெய்லானி தான் அத வேண்டம்னுடான். ஏன் நண்பா ? கொஞ்சம் மெயில் அனுப்பு


Tuesday, March 23, 2010

பேருந்தில் ( vs சைக்கிள்) காதல் , தொடர் பதிவு

முஸ்கி : பேருந்தில் காதல் - தொடர் பதிவுக்கு அழைத்த பிரபாகருக்கு நன்றி. அப்புறம் தலைப்பே பேருந்து காதல் என்பதால் கல்லூரியில் நடந்த விசயங்களை தவிர்த்து பேருந்தில் நடந்தவைகளை மட்டுமே எழுதயுள்ளேன்.

மணி 9 :05 , இன்னும் 5 இல்லாட்டி 10 நிமிடத்தில் பஸ் கிராஸ் ஆகும். கிளம்பி ரெடியாகி தலை சீவ ஆரம்பிப்பேன். அந்த பஸ் எங்கள் வீட்டு சந்தை கிராஸ் செய்யும் வரை தலசீவிகிட்டே........ தான் இருப்பேன்.
"அது எங்க காலேஜ் லேடிஸ் பஸ்" .
2 அல்லது 3 வினாடிகளில் எங்கள் வீட்டு சந்தை கிராஸ் செய்துவிடும் அதற்குள் நாங்கள் இருவரும் கண்டுகொள்வோம். சில நேரம் ஜன்னலோர சீட்ல உட்கார்து இருப்பா . பெரும்பாலும் நின்று கொண்டுதான் வருவாள் , மிகசரியாக என் வீட்டை கடக்கும் போது குனிந்து ஜன்னல் வழியாக பார்த்து லேசாக சிரிப்பா பாருங்க , என் உச்சி மண்டைல (அப்பவே) கிர்ருங்கும்.

பஸ் போன 5 வது நிமிடம் நான் என்னோட டூ வீலர் (அதாங்க சைக்கிள் ) எடுத்திட்டு காலேஜ் கிளம்பிடுவேன். கூடவே சிவா , என் பிரண்டு எப்பவும் ஒன்னாதான் சுத்துவோம் . இப்ப அந்த நாதாரி திருச்சி "RANE "- ல ஆணிபுடுங்கிட்டு இருக்காரு. மழை பெய்தால் எங்களுக்கு ரொம்ப கொண்டாட்டம் கண்டிப்பா நனைந்திடுவோம்.

என் வீட்டு பக்கத்து வீட்டு அண்ணன் ஒரு டிரைவர் , சில நேரம் காலேஜ் ஜென்ட்ஸ் பஸ்ல வருவாரு , சிலநேரம் லேடீஸ் பஸ்ல வருவாரு.

அன்று காலேஜ் விடும்போது சரியான மழை, எங்களுக்கு ஒரே குசி , புக்ஸ் எல்லாம் பஸ்ல வர்ற பிரண்டு கிட்ட குடுத்திட்டு வழக்கம் போல நனைந்து கொண்டே சைக்கிள்ள கிளம்பினோம்.

பின்னாடி பாத்த லேடீஸ் பஸ் , டிரைவர் நம்ம அண்ணன்....... , அன்னைக்கு கிட்ட தட்ட 1 .5 கிலோ மீடர் தூரத்துக்கு பஸ்சுக்கு வழி விடாமல் சைக்கிள் வேகத்தில் வழிநடத்தி சென்றோம். நம்ம அண்ணாச்சியும் சிரிச்சுகிட்டே எங்கள ஓவர் டேக் பண்ணாம எங்க சைக்கிள் பின்னாடியே ஸ்லோவா பஸ்ஸ ஓட்டிட்டு வந்தார்.

இத பாத்த முன்சீட்ட்ல இருந்த பொண்ணுக நம்ம ஆளுக்கு சேதி அனுப்பி உடனே நம்ம ஆளையும் முன்னாடி வர வச்சுடாங்க , அப்புறம் என்னா....... அன்னைக்கு ஈவினிங் "இதயத்தை திருடாதே" (பிரபாகர் சார் சேம் பிளட் ) படம் பாத்துட்டு நைட்டு புல்லா மொட்ட மாடியில மல்லாக்க படுத்துகிட்டு வானத்த பாத்து கவித பாடிகிட்டு......... ஒரே லவ் மூடு தான்.

டுஸ்கி: இப்ப பஸ் vs சைக்கிள் சேசிங் .....

ஈவினிங்க்ள காலேஜ் விட்டு நேரா ரயில் வே கிராஸ் பக்கத்துல வந்து நம்ம ஆளு பஸ்சுக்காக வெயிட் பண்ணுவோம், அங்க இருந்தது தான் சேசிங் தொடங்கும் , பஸ்ஸ போகவிட்டு ஊருக்குள்ள முதல் புதூர் ஸ்டாப்ல பஸ்ஸ ஓவர் டேக் பண்ணுவோம் ,(கரக்டா நமக்காகவே ரைட்சைடு ஜன்னல் ஓரம் உட்காந்துகுவா) , அப்ப நம்ம ஆள்ட்ட இருந்து ஒரு லுக், ஒரு சிரிப்பு கிடைக்கும், அடுத்து பஸ்ஸ முன்னாடி விட்டு அடுத்து அரண்மனை ஸ்டாப், ஒரு ஓவர் டேக் , அங்க ஒரு லுக், ஒரு சிரிப்பு , அடுத்து பெருமாள் கோவில் , அஞ்சுராந்தால் , போலீஸ் ஸ்டேசன் என எல்லா ஸ்டாபிலும் ஒரு ஓவர் டேக் , ஒரு லுக், ஒரு சிரிப்பு அடுத்து அவ இறங்க போற பூக்கடை ஸ்டாப் அங்க பஸ்சுக்கு முனாடியே போய் வெயிட் பான்னுவோம் , பஸ்ச விட்டு இறங்கிய உடன் நம்மள பாத்து ஒரு சிரிப்பு சிரிப்பா பாருங்க................ , அந்த சிரிப்பு மறுநாள் காலை 9 :10 வரைக்கு தாங்கும் .

சில நாள் ஈவினிங்க்ள அவளுக்கு தெரியாம லெப்ட் சைடுல பஸ்ஸ சேஸ் பண்ணுவோம் , அப்ப அவ ஒவ்வொரு பஸ்ச்டாபிளையும் நம்மள தேடுவா பாருங்க ? அவ தேடுறத பாத்தா நமக்கு மனசு வலிக்கும்.


"பஸ் டே" கொண்டாட்டம் இது ரொம்ப நல்லா இருக்கும் . அன்னைக்கு மட்டும் மூணு ஜென்ட்ஸ் பஸ் , ரெண்டு லேடிஸ் பஸ் எல்லாம் ஒன்னா வரிசையா ஊர்வலமா போவோம். ஊரே ஜே... ஜே...ன்னு (அட இது அந்த ஜே.ஜே இல்லைங்க ) இருக்கும். பசங்க எல்லாம் கலர் பொடி தூவிக்கிட்டு செம ஜாலியா இருக்கும் ,பொண்ணுகளும் அவுங்க பஸ்சுக்குள்ளே கலர் பொடி பூசிப்பாங்க . ஆனா ரெண்டு லேடீஸ் பஸ்சுக்கும் லெக்சரர்ஸ் வோட பயங்கர எஸ்காட் டீம் இருக்கும் , லேடீஸ் பஸ் பக்கமே பசங்கள விடமாடாக . தேர்டு இயர்ல அப்படிதான் அவ்வளவு எஸ்காட் டீமுக்கு நடுவிலும் நைசா போய் ஜன்னலோரம் உட்காந்து இருந்த நம்ம ஆளுமேல கலர் பொடி தூவினே பாரு, அவ பயத்திலையும், பதட்டதிலையும் அழுதுட்டா , அப்புறம் வெட்கமா ஒரு சிரிப்பு சிரிச்சா பாருங்க ............ அத நெனச்சா எனக்கு இப்ப கண்ணு கலங்குதுங்க.
(மேலே செய்த குறும்புகளுக்காக காலேஜ்ல என்ன பனிஸ்மென்ட் தந்தாங்கன்னு சொல்ல வேண்டியதில்ல , ஏன்னா இது காதலுக்காக மட்டுமே இந்த தொடர் பதிவு , ரைட்டா ?)

டிஸ்கி : அப்புறம் அந்த காதலோட முடிவு என்னாகிறத உங்களுக்கு சொல்லமுடியாது , ஏன்னா அந்த முடிவு பஸ்ல நடக்கல .......................................................


கிஸ்கி : பேருந்தில் காதல் செய்த அனைவரும் இதை தொடரலாமே............

Friday, March 19, 2010

சிரிப்பு போலிசு

முஸ்கி : இதை படித்து விட்டு யாராவது கொலை அல்லது தற்கொலை முயற்ச்சியில் ஈடுபட்டால் அதற்க்கு நிர்வாகம் பொறுப்பல்ல .....

ஆபிசில இருந்து டீ சாப்டலாம்னு கிளம்பினேம்பா வெளிய பார்த்தா ஒரே டிராபிக் சரின்னு அப்படி இப்படின்னு வளைஞ்சு நெளிஞ்சு சிக்னல தாண்டினா ஒரு 20 டிராபிக் போலீஸ் , அதுல நாலு என்னசுத்துபோட்டு ஓரமா கூட்டிட்டு போனாக.

போலிசு: யோவ் லைசென்ஸ் என்கையா ?
நம்ம : சார் மரியாதையா கேளுங்க ?
போலிசு: சரிங்க பப்ளிக் லைசென்ஸ் எங்க பப்ளிக் ?
நம்ம : லைசென்ஸ் இந்தாங்க


போலிசு : ஆர்சி புக் எங்க சார் ?

நம்ம : ஆர்சி புக் இந்தாங்க

போலிசு : இன்சூரன்ஸ் எங்க சார் ?

நம்ம : இன்சூரன்ஸ் இந்தாங்க
போலிசு : சார்ஜென்ட் சார் , இவரு எல்லாம் கரக்டா வச்சுருக்காரு சார்ஜென்ட் : எல்லாம் கரக்டா இருக்கா !!!!!!!!! ஏன்யா ஓவர் ஸ்பீட்ல வந்த ?

நம்ம : என்னது ஓவர் ஸ்பீட ? சார் நான் நடந்து வந்தேன்
சார்ஜென்ட் : அப்போ பைக எங்கய ?

நம்ம : பைக் ஆபிசுல இருக்கு சார்

சார்ஜன்ட் : பைக் இல்லையா ? லைசென்சு , ஆர்சி புக், இன்சூரன்ஸ் எல்லாம் எடுத்திட்டு வந்திருக்க பைக் ஏன் எடுத்திட்டு வரல முன்னூர் ரூபா பைன் கட்டு
!!!!!!!
நம்ம : அய்யய்யோ சார்

சார்ஜென்ட் : இங்க கட்னா முண்ணூறு கோர்ட்ல கட்னா ஆயிரம் , இங்க கட்டுறியா இல்ல கோர்ட்ல கட்டுறியா ?

நம்ம : ???????????????????????????

ஏற்கனவே கெரகம் சயில்லைன்னு நம்ம பட்டாப்பட்டி ஜோசியர் சொல்லியிருக்கார்
சரின்னு முன்னூர் ரூபா fine -அ கட்டிட்டு டீ கூட குடிக்காம ஆபீஸ் வந்துட்டேன்.

டுஸ்கி: இவ்வளவு தூரம் வந்துட்டிங்களா !!! உயிர்மேல பயம் இல்லையா ? ஹா.. ஹா.. ஹா.. ..காட் மஸ்ட் டு பீ கிரேசி................ஆபீஸ்ல மூடே சரியில்ல சரின்னு லீவ போட்டு நைட் (????????) சோ சினிமாக்கு கிளம்பிட்டேன்.படம் பாத்திட்டு மிட்நைட் திரும்பி வரும்போது பாத்தா தேனாம்பேட்ட சிக்னல்ல மறுபடியும் டிராபிக் போலிஸ் வழக்கம் போல நாலு பேர் நம்மள மடக்குனாக . நாம தான் இப்ப பைக் -கும் எடுத்திட்டு வந்திருக்கமேனு தெனாவெட்டா வண்டிய நிறுத்தினேன் .

போலிசு: லைசென்ஸ், ஆர்சி புக் , இன்சூரன்ஸ் காமிங்க

நம்ம : இந்தாங்க சார்
போலிசு : சார்ஜென்ட் சார் , இவரு எல்லாம் கரக்டா வச்சுருக்காரு
சார்ஜென்ட்: எங்க சார் போயிடு வர்ரிங்க ?
நம்ம : படத்துக்கு சார்
சார்ஜென்ட்: என்னா படம் ?
நம்ம : அந்த கொடுமைய ஏன் சார் கேட்குறிங்க ?
சார்ஜென்ட்: சரி, சரி ...........எந்த தியேட்டர் ?
நம்ம : சத்யம் சார்
சார்ஜென்ட்: எங்க டிக்கெட்ட காமிங்க ?
நம்ம : இந்தாங்க சார்
சார்ஜென்ட்: என்ன சார் இது ?
நம்ம : சார் டிக்கெட் சார்
சார்ஜென்ட்: இந்த டிக்கெட் யாருக்கு வேணும் , நான் கேட்டது IPL டிக்கெட் ?
நம்ம : சார் ..............................................
சார்ஜென்ட்: அது தான் எல்லா டிவி-லையும் விளம்பரம் போடுறாங்களே சார் IPL டிக்கெட் தான் பெரிய டிக்கெட்-ன்னு?நம்ம : *****&&&&&^^^^^%%%%%$$$$$#####@@@@@!!!!!!

சார்ஜென்ட்: IPL டிக்கெட்-அ காட்றீகளா இல்ல முன்னூர் ரூபா பைன் கட்ரீகளா ?

நம்ம :
!!!@@@###$$$%%%^^^&&&***((()))(அப்புறம் நம்மள குற்றாலம் கூப்பிட்டு போய் ரெண்டு வாரம் ட்ரீட்மென்ட் எடுத்தா எங்க அப்பா சொன்னார்)

டிஸ்கி : சென்னைல நைட் சோ படம் பார்த்திட்டு வந்தா படத்தோட டிக்கெட்ட வெரிபிகேசனுக்கு போலீஸ் கேட்பாங்கோ ......

கிஸ்கி: எனது இந்த பதிவை பிரசுகரித்த "வெள்ளிநிலா" வுக்கு நன்றி .

Monday, March 15, 2010

பின்னூட்ட "குலசாமிக்கு" ஒரு படையல் (தொடர் பதிவு )

முஸ்கி : நைட் கனவுல நம்ம "பின்னூட்ட குலசாமி " (அது தாங்க "கமெண்ட்ஸ் குலசாமி") வந்து ஒரே ரவ்சு பண்ணிட்டாரு, "ஏன்டா ப்ளாக்கர்ஸ் உங்க முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம் நான் தான் , என்ன நீங்க மதிக்க மாட்ரிங்க , ஒரு திருவிழா கொண்டாட மாட்ட்ரிங்கன்னு" ஒரு அலபர பண்ணிட்டார் . அதுக்கு தான் சரி நம்ம குலசாமிக்கு படையல் போட்ரலாம்னு இந்த தொடர் பதிவு.

கன்டிசன்ஸ்:
1 ) உங்களுக்கு வந்த , நீங்க அனுப்பிய பின்னூட்டங்கள்ள உங்களுக்கு பிடித்த பத்து
2 ) மொக்கைக்கு முன்னுரிமை
3 )காப்பி
அடிக்க கூடாது (டீ வேனா அடிச்சுக்கல்லாம்)
4 ) :-) , :-)) இப்படி போடக்கூடாது
அப்புறம் இது தான் முக்கியமான கன்டிசன்
5) மேலே உள்ள எந்த கன்டிசனையும் பாலோ பன்னக்கூடாது


இன்கமிங்க்ஸ்

1 ) தண்டோரா said...

கககக..... போ....

2 ) பட்டாப்பட்டி said....

யோவ் மங்குனி,நன்றி சொல்ர நேரமாய்யா இது...உட்டா உனக்கு , மாலை போட, ஒரு கூட்டமேஅலை மோதிட்டு இருக்கு..
சீக்கிரம் டாஸ்மார்க்கில இருந்து வெளிய வாய்யா...போயி, ரெட்டை, வெளியூரு , பட்டாபட்டி ப்ளாக்குக்குபோயி பாரு.. சதி திட்டம் போட்டுட்டு இருக்கானுகோ..அவ்வளவுதான் சொல்லுவேன்...

3 ) ஜெய்லானி said...
//பம்பரம் - இதிலும் மூன்று நான்கு வகை உண்டு//

1.ஆனி வச்சது 2.ஆனி ைக்காத்து 3.சாட்டை உள்ளது 4.சாட்டை இல்லாத்து.

4 ) யூர்கன் க்ருகியர் said...
அதே திருட்டு ;அதே அடி ;

What a pity :) ..... same blood here...


5 ) பித்தனின் போக்கு said...
தொடருங்க தொடருங்க, ரொம்ப நல்லா இருக்கு, முஸ்கி,டுஸ்கி,டிஸ்கி கண்டுபிடிப்பெல்லாம் சூப்பர். விஸ்கி அடிச்ச மாதிரி எழுதறிங்க. ஆமா அத்தனை வருசத்தில ஒரு தபா கூட உண்டியல் மேட்டருல மாட்டுனது இல்லையா? இல்லை அக்கா போட்டுக் கொடுக்கவில்லையா? நன்றி மங்குனி.


டுஸ்கி: சும்மா எதுகெடுத்தாலும் கோப்படகூடாதுஅவுட்கோயிங்க்ஸ்

6 ) To: தண்டோரா
:நம்ம சங்கத்து ஆள அடிச்சவன்(பேட்டி எடுத்தவன்) எவன்டா (சாரி பார் தி "டா ")

:யாரோ தண்டோராவாம்
:சங்கத்துல நான் இருக்கேன்னு தெரியுமாடா
: தெரிஞ்ச பெறகுதான் நல்லா அடிச்சான்
:அடிச்சவன் பேக் ரௌண்டு எப்படி

:மொத்தம் 91857 page, visits ஒரு 64545 அப்புறம் follower ஒரு 194 அவ்வளவுதான்
:.................. நான் ஊர்ல இல்லைன்னு அடிவாங்கினவன் கிட்ட சொல்லிடுவர ஒரு மாசம் ஆகும்னு மறக்காம சொல்லிடு , நெக்ஸ்ட் மீட்பன்னுவோம்

7 ) To சேட்டைக்காரன்
"சேட்ட ஜாதகத்த காரமடை ஜோசியர் கிட்ட காண்பிச்சு கேட்டதுல , சேட்டைக்கு சனி சைடுல இருக்கு அதுனால உசுருக்கு பயமில்ல, ராகும் , கேதும் "அசல்" படம் பார்க்க போயிருப்பதால் இப்போதைக்கு டென்சன் இல்லை , சுக்கிரனும் மத்த பார்ட்டிகளும் சீட்டு விளையாண்டுகிட்டு இருப்பதால் பிரச்னை இல்ல , நம்ம குரு சேட்டைக்காரன் கூடே இருப்பதால சேட்டை கொஞ்சம் உச்சத்துக்கு போகும்னு காரமடை ஜோசியர் பலன் சொல்லி இருக்கார்."

8 ) To பித்தனின் வாக்கு
ஹி ஹி ஹி , ஒன்னும் இல்ல நம்ம cable சங்கர் சார் ப்ளாக்- HOT SPOT - இருக்கிற அந்த பொண்ணோட பேசிக்கிட்டு ( நெஜம்மா பேசிக்கிட்டுதான் இருந்தேன் ) இருந்தேன் அதுதான் லேட். அட கொக்க மக்கா அதுக்குள்ளே ஒரு ஆனந்தா, டேய் பட்டா நக்கீரனுன்க்கு போனபோட்ரா , நம்ம ரோஷ்விக் கூட ஒரு கேமரா வச்சுருக்காராம் அதையும் பிக் அப் பண்ணின்க்க , அப்புறம் கேப்டன போடோ புடிசியே அந்த கேமராவையும் பிக் அப் பண்ணின்க்க. அதோட அந்த தொப்பையானந்தா சைடு - இருக்க அந்த ரெண்டு குட்டிகளையும் பிக் அப் பண்ணி நம்ம அந்தபுரதுக்கு அனுப்பிட்டு எல்லா கேமராவையும் எல்லா ஆங்கில்லையும் வச்சு அந்த தொப்பைய குளோஸ் அப்- படம்புடி . தக்காளி இனி எல்லார் வீட்லயும் இந்த போடோ தான் திருஷ்டிக்கு இருக்கணும்.

9 ) To பட்டாப்பட்டி...
டேய் மைலாப்பூர் பார்த்தசாரதி, உன்னோட இந்த கமென்ட்- படிச்சவுடனே ஒபாமா ரிசைன் பண்ணிட்டாராம், பின்லேடன் சூசைட் பணிகிட்டானாம் , நம்ம பால் தாக்ரே முஸ்லீமா கன்வர்ட் ஆயிட்டாராம் , வேணாம் பட்டா உடனே உன் முடிவ மாத்து, நாட்டாம தீர்ப்ப மாத்து.............

10 ) To சமைத்து அசத்தலாம் .
ஆக இப்படியெல்லாம் பயபடுவிகளா கொஞ்சம் உங்க போன் நம்பர் குடுங்க (ஆஹா டேய் மகுனி இது டம்மி பிசுடா சும்மா மிஸ்டு கால் குடுத்தே சொத்த எழுதி வாகிடலாம்டா) ஏம்பா பஸ்ட் கமென்ட் யாருக்குமே போடவிட மாட்டிங்கள (ஒரு குரூப்பா தாய அலையிறாங்கே)


கீழ் கானும் வூடுகாரவுங்க எல்லாம் இந்த படையலை தொடர்ந்து போடு மாறு நம் குலசாமி கட்டளை இட்டுள்ளது (போய் டிஸ்கி பாருங்க தொடர்ந்து படையல் போடலைன்னா என்னா நடக்கும்னு தெரியும்)

பட்டாப்பட்டி, பித்தனின் வாக்கு , ரெட்டை ,வெளியூரு , ஜெய்லானி, தமிழா தமிழா , முத்து, , இல்லுமினாடி,சேட்டைக்காரன் ,ரோஸ்விக் , சைவகொத்துபரோட்டா ,வெள்ளிநிலா (உனக்கு பதிலா நானே போடுறேன் (:-). :-((, :-))), :-((((, :-))))), :-((((((, :-))))))), :-:-((((((((, :-))))))))), :-(((((((((( ), மர்மயோகி ( ஆமா உங்களுக்கு இன்கமிங் , அவுட்கோயிங் டோடல் 10 வராதே ), கொஞ்சம் வெட்டி பேச்சு , சமைத்து அசத்தலாம், கவிசிவா, கவிப்பக்கம் (NEW),சமையல் அட்டகாசங்கள் (உஸ்...... அப்பா முடியல ) மற்றும் நம் உறவினர்கள் அனைவரும் அன்போடு அழைக்கபடுகிறார்கள்.

டிஸ்கி :
படையல் போடலைன்னா சாமி குத்தம் ஆகிபோகும் , அப்புறம் 11 வருசத்துக்கு மழை பெய்யாது , காடு, கர வத்திபோகும், நாட்டுல பெரிய்ய பஞ்சம் வந்திடும் . அதுமட்டுமில்லாம.................
ராமராஜன் , ஜே .கே . ரித்தீஸ் மீண்டும் படம் எடுக்க ஆரம்பிப்பார்கள் , எல்லார் வூட்டுக்கும் "அசல்" பார்ட்- II சி.டி பார்சல்ல வரும், குலஞர் பாராட்டு விழாவிற்கு கட்டாய டிக்கெட் வரும், கோயஸ் மம்மி கூட போடோ எடுத்து அது பேப்பர்ல வரும், விஜய.T. ராஜேந்தர் அடுத்த டத்தில நீங்கதான் ஹிரோ (OR) ஹிரோயின் , இன்னும் ................................................. எல்லாம் நடக்கும்னு நம்ம குலதெய்வம் என் கனவுல சொல்லுச்சு , சோ, பி கேர் புல் ..


கிஸ்கி : இப்ப என்னா செய்விங்க , இப்ப என்னா செய்விங்க, இப்ப என்னா செய்விங்க.........................
ஸ்டார்ட் மியுசிக்