எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, August 19, 2013

பெட்ரோல் போடாமல் கார் ஓட்டுவது எப்படி ??


என்னமோ ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 100 km போற கார கண்டுபுடிச்சிட்டேன்னு ரொம்ப பீத்திக்கிரானுக, மச்சி  நான் பெட்ரோலே போடாம கார் ஒட்டிக்கிட்டு இருக்கேன் "
" என்ன மச்சி சொல்ற பெட்ரோல் இல்லாம கார் ஒட்டுரியா ?"

'ஆமாண்டா மச்சி நானும் 4, 5 வருசமா பெட்ரோல் இல்லாமதான் ஒட்டிக்கிட்டு இருக்கேன் "

" என்னடா மச்சி அச்சால்ட்டா சொல்ற ,  எப்படி ஓட்டுற  ? "

" டீசல் போட்டுதான் "

" போடாங்.....,@#@##@,  #$@$#@$@$$@"

"அடப்பாவி இவன் இதுக்கே இம்புட்டு கோவப்படுரானே ............ "

"மச்சி இது கூட பரவாயில்லைடா , பெட்ரோல் விலை கூடினதுல இருந்து நான் பைக்கு பெட்ரோல் போடுறதே இல்லைடா "

"டீசல் கார் இருக்கு ஓகே , டீசல் பைக் கிடையாதே .....பெட்ரோல் போடாம எப்படி மச்சி ஓட்டுற ?? மச்சி  பிளீஸ் சொல்லுடா.....  நான் பெட்ரோலுக்காக நிறையா  செலவு பண்ணுறேன் "

"அதுக்கெல்லாம் தனி திறமை வேணும்டா . உன்னால முடியாது, சரி குளோஸ் பிரண்ட்டா போயிட்ட , சொல்றேன் நீ யார்கிட்டயும் சொல்லிடாத "

" என் பக்கத்து வீட்டுக்காரன் மாமியார் மேல சத்தியமா யார்கிட்டயும் சொல்ல  மச்சி ....நீ சொல்லு "

" ஓகே .... பெட்ரோல் போடாம எப்படி ஓட்டுறேன்னு ...பார்...அதே மாதிரி நீயும் டிரை பண்ணு ... ""எப்படி நல்ல ஓட்டுறனா ??? "

4 comments:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

No comments!

'பரிவை' சே.குமார் said...

முடிலே... முடிலே...

ப.கந்தசாமி said...

//"எப்படி நல்ல ஓட்டுறனா ??? "//

அட்டகாசம், மாப்பிள்ளே !

சேக்காளி said...

பாக்குற எனக்கே இப்பிடி தலை சுத்துச்சுன்னா ஓட்டுன ஒனக்கு எப்படி சுத்தியிருக்கும்.
முடியலப்பா.கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கிறியா