எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Saturday, June 2, 2012

என்ன கருமாந்திரம் புடிச்ச உலகம் சார் இது?
ஒரு நல்லது சொன்னா தப்பா சார் , இப்படி போட்டு தொரத்தி ,தொரத்தி அடிக்கிறானுக 

நேத்தைக்கு அயன் வண்டி வந்து துணி இருக்கான்னு கேட்டான் , நானும் என்  வைஃப்  கிட்ட ,

" ஏம்மா அயன் பண்ண துணி இருக்கா?"

"இல்லைங்க "

"அயன் வண்டி வர்றதே ரொம்ப ரேர் , துணி இருக்கான்னு நல்லா பாரும்மா "

'இல்லைங்க  எல்லாம் துவைக்கணும்"

"ஏம்மா அவன் வந்ததே பெரிசு , நீ ஒன்னுபன்னு  பஸ்ட்டு எல்லா துணியையும் இன்னைக்கு அயன் பன்னிக்க  அப்புறமா துவைச்சுக்க "

"போடா......@#@#@#௬௬௬............"

ஏய் , ஏய் .........ஸ்டாப் , ஸ்டாப் , ஸ்டாப் .......

என்ன அநியாயம் சார் இது , இப்போ பொம்பளைங்க கூட கெட்ட வார்த்தையில் திட்ட ஆரம்பிச்சிட்டாங்க சார் .