எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Friday, October 29, 2010

சுயசொறிதல் - பரிணாம வளர்ச்சி

நேற்று இரவு முதல் சென்னையில் பருவமழை ஆரம்பித்து தொடர்ந்து மழை , வழக்கம் போல் மழை மற்றும் சாக்கடை நீர் நிறைந்த , மேடுபள்ளமான , குண்டும் குழியுமான சென்னை இன்று காலை அனைத்து மக்களின் அவசர கதியான இயந்திர வாழ்க்கையின் அசுர வேகத்தை மட்டுப் படுத்தி மக்களை பொறுமையாகவும் , நிதானமாகவும் இயங்க ஆண்டி முதல் அரசர் வரை அனைவருக்கும் உத்தரவிட்டது.

இது மழையின் உத்தரவா? இல்லை குண்டும் குழியுமான சாலையின் உத்தரவா? இல்லை அந்த சாலைகளை சரிசெய்யாமல் விட்ட அதிகாரிகள் உத்தரவா? அல்லது இந்தியாவை வல்லரசாக மாற்றிக்கொண்டு இருப்பதால் இந்த வேலைகளை கவனிக்க முடியாத அரசியல் வாதிகளின் உத்தரவா?

ஏதோ ஒன்னு , ஆனால் ஆப்பு மட்டும் எல்லா தரப்பு மக்களுக்கும் , இதில் ஏழை , நடுத்தர வர்க்கம் , பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் மழையில் நனைந்த தமிழ் நாட்டின் தலைநகரம் சென்னை ஜனநாயக மற்றும் கம்யுனிச கொள்கைகளுடன் தனது கடமையை செவ்வனே செய்து கொண்டுள்ளது .


சென்னையின் மையப் பகுதியில் இப்படி என்றால் புறநகர் பகுதிகளை பற்றி கொஞ்சம் யோசித்து பாருங்கள்? சென்னையை சுற்றி உள்ள அனைத்து நீர் நிலைக்கும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மழை நீர் வடிந்து செல்ல வழியில்லாம புறநகர் பகுதிகளை சுற்றிவளைத்து மிதக்க வைக்கிறது .

வற்றிய நிலையில் உள்ள ஏரியில் வீடுகட்டி விட்டு மழைகாலங்களில் வீட்டிருக்குள் தண்ணீர் வருகிறது என்று புலம்பும் பைத்தியக்கார மக்களுக்கு அந்த புறம்போக்கு இடங்களை விற்ற அரசியல் வாதிகள் அறிவாளிகளா ? இல்லை அந்த வீடுகளுக்கு மின்சார இணைப்பும் , குடிநீரி இணைப்பும் குடுத்துவிட்டு இப்பொழுது வந்து அந்த வீடுகளை ஆக்கிரமிப்புகள் என்று கூறி அகற்றும் அதிகாரிகள் அறிவாளிகளா ?

மின்சார இணைப்பும் , குடிநீரி இணைப்பும் வழங்கும் அரசு அதிகாரிகளுக்கு அந்த இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நீர் நிலைகள் என்று இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கும் போது தெரியவில்லையா ?

தென்னை மரத்தில் உள்ள இளநீர் முற்றி கீழே உள்ள பலா மரத்தில் உள்ள கனிந்த பலா பழத்தின் மேல் விழுந்து அந்த பலா பழத்தை உடைத்து அதற்கு கீழ் மாமரத்தில் விழுந்து மாங்கனிகளை உதிர்த்து பின் அதற்க்கு கீழே உள்ள வாழை மரத்தின் மீது விழுந்த வாழைத்தாரை சிதைத்து அதற்குபின் தரையில் அந்த தென்னகாய் விழுந்தது என்று நமது நாட்டின் இயற்க்கை வளத்தை பற்றி பாடிவைத்துள்ளனர் .

ஆனால் இப்பொழுது அந்த நியதி மாறி கீழிருந்து மேலாக ஒரு மத்திய அல்லது மாநில அரசு அலுவலகத்தில் உள்ள பியூன் வாங்கும் லஞ்சத்தின் பங்கு அது அப்படியே பயணப்பட்டு கிளார்க் , அதிகாரி , உதவி ஆய்வாளர் , ஆய்வாளர் , கலக்டர் , மந்திரி அப்புறம் தலைமை என்று பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது .

அட அதெல்லாம் விடுங்க சாமி , சென்ற ஆண்டின் தீபாவளி மதுபான வருமானமான 250 கோடியை உயர்த்தி இந்த ஆண்டிக்கு 300 கோடியாக வரம்பு நிர்ணயித்துள்ள நமது அரசு கொள்கைகள் வெற்றிபெற பொது மக்களாகிய நாம் நமது ஜனநாயக கடைமையை செய்து அரசின் இந்த முயற்சி வெற்றி பெற உறுதுணையாக இருப்போம்.

ஜெய் ஹிந்த்

டிஸ்கி : பாவம் யாரும் பெத்த புள்ளையோ ஒரு நாள் மழைக்கே இப்படி மனநிலை பாதிக்கப்பட்டு கிடக்குறான்.



Wednesday, October 27, 2010

மங்குனி ஹைகோர்ட்டில் ஜாமீன் மனு


டீ கிளாச நங்குன்னு சத்தத்தோட வைக்கும் போதே தெரிஞ்சிருச்சு இன்னும் என்னோட வீட்டு காரம்மாவுக்கு கோபம் தீரலன்னு(உனக்கு வீட்டுல டீயெல்லாம் தர்றாங்களா ?) . இதென்னங்க அநியாயமா இருக்கு , நேத்து நைட்டு பூராம் வெட்கம் , மானம் , ரோசம் எல்லாம் தட்கல் டிக்கட் வாங்கி வைகை எக்ஸ்ப்ரெஸ் புடிச்சு போற அளவுக்கு சொரனைகெட்டுப்போயி திட்டு வாங்கினது நானு, அக்சுவலா நான்ல கோபப்படனும் .(என்ன அக்சுவலா , பெசிகளா , பிசிகலான்னு பீலா விடுற , எங்க ஒரு வாட்டி கோபப்பட்டுத்தான் பாரேன் ?)


ஒன்னும் இல்லைங்க , நேத்து நைட்டு வீட்டுக்கு போயி சாப்பாடு வைம்மான்னு ஒரு வார்த்த தாங்க சொன்னேன்.

"பாவம் அந்த பொண்ணு துளசி , அவ வீட்டுகாரர அவ கண்ணு முன்னாடியே வெட்டி போட்டானுக , இத கேள்விப்பட்ட துளசியோட அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்திருச்சு , இந்த நேரத்துல துளசிய கள்ளக்காதல்னால அவளே ஆள் வச்சு புருசன வெட்டிட்டான்னு பொய் கேஸ் போட்டு போலீஸ் துளசிய அரஸ்ட் பண்ணிட்டாங்க, பாவம் துளசின்னு நான் கவலை பட்டுகிட்டு இருக்கேன் , உனக்கு (நல்லா கவனிங்க ஒருமை ) சாப்பாடு கேட்குதா சாப்பாடு............????? "

எனக்கு நெஞ்சமெல்லாம் பதறிப் போச்சு ஐய்யய்யோ .... அடப் பாவமே , யாரும்மா அந்த துளசின்னு பதறிப்போய் கேட்டேன் .அது "தென்றல்" சீரியல்ல வர்ற ஹீரோயின் துளசியாம்.





(நமது பன்னிகுட்டியின் விருப்பத்திற்கு இணங்கி படம் சேர்க்கப்பட்டுள்ளது )


அடக் கொடுமையே , ... டி.வி சீரியல்ல ஹீரோயின அரஸ்ட் பண்ணினா நான் என்ன சார் பண்ணுவேன் ???.

டீ கிளாஸ வச்சிட்டு , "ஏங்க அந்த பொண்ணு துளசிக்கு ஜாமீன் கிடைக்க நாலு நாள் ஆகும்ன்னு சொல்றாங்க , பாவம் அந்த பொண்ணு , நீங்க கொஞ்சம் ஜாமீனுக்கு ட்ரை பன்னுங்களேன் ."


என்னது டீ.வி சீரியல்ல நடக்குரத்துக்கு ஜாமீனா ??? அடக்கலிகாலமே ...............

நாம நம்ம வீட்ல எதிர்த்து பேசமுடியுமா ? முடியாது...............

சரின்னு நேரா ஹை கோர்ட்டுல போயி ஒரு ஜாமீன் மனு தாக்கல் பண்ணினேன் . ஜட்சு என்னைய நேசனல் பெர்மிட் லாரில அடிபட்டு செத்துப்போன சொறிநாய பாக்குற மாதிரி பாத்தாரு .....

உங்களோட சேத்து மொத்தம் 1647255 மனுக்கள் இந்த கேசுக்கு ஜாமீன் கேட்டு பைல் ஆகி இருக்குன்னார் . (அட....நாம மட்டும் அடிமை இல்லை , நம்மள மாதிரி ஊருக்குள்ள நிறையா பேரு இருக்காங்கன்னு மனசுக்குள்ள ஒரு நிம்மதி )

அப்புறம் ஜட்சு லேசா கண்ண தொடச்சுகிட்டு (ஒய் பிளட் , செம் பிளட் ,.... பாவம் அவரும் அவுங்க வீட்ல பாதிக்கப்பட்டு இருப்பார் போல ?) என்னைய பாத்து இந்த கேச நாலு நாள் தள்ளி வக்கிறேன்னு சொன்னாரு .... என்னான்னு கேட்டா அந்த சீரியல்ல ஜாமீன் மனுவோட தீர்ப்பு அன்னைக்கு தான் சொல்றாங்களாம் , அத பார்த்துட்டு இவரு தீர்ப்பு சொல்கிறாராம் .

டிஸ்கி : இதற்காக ஹைகோர்ட் வளாகத்தில் சங்கம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது . மனுதாக்கல் செய்பவர்கள் வந்து சங்கத்தில் இணைந்து கொள்ளலாம்.

Monday, October 25, 2010

"லேடிஸ் டெய்லர்" பலான படம் ???? (18 +)

நம்ம குரூப்புல ஒரு பன்னாட 10 th முடிச்சிட்டு(எச்சகல பேமிலியா .... சாரி டன்க்கு ஸ்லிப் ஆயிடுச்சு எக்ஸ்சிகுடிவ் பேமிலியா இருப்பான் போல ) பாலிடெக்னிக் போயி சேந்தான் . அங்க போயி ஹாஸ்டல்ல சீனியர் ஸ்டுடண்ட்ஸ் கூட சேந்து பலான படத்த பாத்துட்டு(தக்காளி எவன் இந்த பலான படம்ன்னு பேர கண்டுபுடிச்சான்னு தெரியல? ) வந்து எங்க கிட்ட ஒரே அலம்பல் பண்ணினான். ஆஹா ... ஓவரா பந்தா பன்றானே? இவன பலிக்கு பலி வாங்க நாங்களும் பலான படம் பாக்குறதுன்னு செயற்குழு கூட்டி முடிவு பண்ணினோம் .(என்ன ஒரு அற்புதமான நாட்ட காப்பாத்துற முடிவு?)

அப்ப நாங்க +1 படிச்சுகிட்டு இருந்தோம் , சரின்னு அந்த மாதிரி படம் போட்ட தியேட்டருக்கு போனோம் . ஏங்கடா (புளூரலாமாமா) மொளைச்சு மூணு இல்லை விடல அதுக்குள்ளே உங்களுக்கு இந்த படம் கேட்டுதான்னு தியேட்டர் காரனுக்க தொரத்தி விட்டாணுக .(எவண்டா அவன் அடிச்சு தொரத்திருப்பானுகன்னு சொல்றது? )

சரி எவன் வீட்டையாவது ஊருக்கு போனா டெக்குல பாத்துகிறலாம்ன்னு காத்துகிட்டு இருந்தோம். அந்த நேரம் பாத்து ஒரு நண்பன் ஓடி வந்து எங்க காதுல தேன் பாயவச்சான். (அதாங்க அவுங்க வீட்ல ரெண்டு நாள் ஊருக்கு போறாங்களாம் ). இதுல அவுங்க பேரன்ட்ஸ் எங்கள கூப்பிட்டு வீட்ட பத்திரமா பாத்துக்க சொன்னாங்க . (க்கிக் , க்கிக், க்கிக் .............சனாவுக்கு சிட்டிய காவலுக்கு வச்சிட்டு போறாங்க .........) அவன் வீட்டுல டெக்கு வேற இருக்கு .

கேசட் கடைல போய் முதல்ல ரெண்டு மூணு தமிழ் படம் வாங்கிட்டு ,அப்புறம் நைசா பேசி பலான படம் கேசட் கேட்டோம் , முதல்ல ரொம்ப பிகு பண்ணிட்டு அப்புறம் யாருகிட்டயும் சொல்லக் கூடாதுன்னு கண்டிசனோட ஒரு கேசட் குடுத்தான் .(கொலைகாரப்பாவி .....)

ஓகே , எல்லாம் ரெடி , முதல்ல ஒரு தமிழ் படத்த போட்டு சத்தமா சவுண்டு வச்சு பாத்தோம் (பக்கத்துவீட்டு காரவுங்கள ஏமாத்துரமாமாம்) , மணி நைட் 12 ஆச்சு , அடுத்து நம்ம கேசட் ,ஒரு பயல்ட்ட இருந்தும் பேச்சு மூச்சு இல்லை , பின் டிராப் சைலன்ஸ் , படம் ஸ்டார்ட் ஆச்சு அது ஒரு மலையாளப் படம் , படத்தோட பெயர்

"லேடிஸ் டெய்லர் "
(எங்க இந்த படம் பாத்தவுங்க எல்லாம் கைய தூக்குங்க ?)


அது ஒரு நேசனல் அவார்டு வாங்கும் தகுதி உடைய முழுநீள மலையாளப் படம் . அந்த படத்த பாத்து கண்கலன்காதவன் சனி உச்சத்தில் இருக்கும் போது அம்மாவாசைல பிறந்த அகாரதி புடிச்ச பயலாதான் இருக்கனும். (மலையாளத்தான் கூட அந்த படத்த முழுசா பாக்க மாட்டானுக .)

நாதாரிங்க,.... அந்த கேசட்டுல கடைசி வரைக்கு ஒரு பொண்ணோட கணுக்கால கூட காட்டல , நாங்களும் ஏதாவது தெரியுமான்னு அந்த படத்த திரும்ப , திரும்ப "மூணு வாட்டி போட்டு பாத்தோம்" . ஊஹும் ......................(அதுக்கு பேசாமா ஸ்ரேயா இல்ல நமிதா நடிச்ச படத்துக்கு போயி இருக்கலாம் .)

இதவிட காமெடி மறுநாள் அந்த கேசட் கடைக்காரர் தம்பிகளா கேசட் எப்படி சூப்பரா இருந்துச்சான்னு கேட்டாரு பாருங்க !!!!!(தக்காளி ... அப்புறம் நேரா கோவில்ல போயி அந்த கடைக்காரன் பேரச்சொல்லி காசுவெட்டி போட்டு வந்து தான் அடுத்த வேல பாத்தோம் )

டிஸ்கி : படிச்சு பாத்துட்டு ஏமாந்து போயி கோபப்பட்டு காரி துப்பனுமின்னு நினைக்கிரவுங்க கீழ கமண்ட்ஸ் பாக்ஸ்ல போயி துப்பிட்டு போங்க (அவ்வ் வ் வ் வ் வ்........................)


Friday, October 22, 2010

கேட்டா............டாம் பாரு ஒரு கேள்வி

அன்னைக்கு சண்டே லீவுநாள, நம்ம ராமாபுரம் ஜமீந்தார் கனவான் (நான்தானுங்க ) காலைல எர்லிமார்னிங் 12 ஓ கிளாக் எழுந்தார். (மத்த வொர்கிங் டேஸ்ல அதெல்லாம் கரக்ட்ட பொறுப்பா மார்னிங் 10 ஓ கிளாக் எழுந்திடுவார் ).

சண்டேல வந்த ரெண்டுல ஒன்ன பிக்கப் பண்ணிட்டு , டி.வி முன்னாடி உட்கார்ந்தா
நம்ம கேப்டன் இந்தியாவ காப்பாத்த தீவிர வாதிங்களோட தீவிரமா சண்டை போட்டுக்கிட்டு இருந்தார் .( தீவிர வாதிகள் சார் , தீவிர வாதிகள் சார் எவ்ளோ செலவானாலும் பரவாஇல்லை தயவு செய்து நீங்க எல்லாம் மொத்தமா குரூப் சூசைட் பண்ணிக்கங்க சார் , இந்த கேப்டன் இம்ச தாங்கமுடியல )

ஆகா இந்த வெயில்ல இவனுக காலங்காத்தாலே டென்சன் பண்ணிட்டானுகளே? , சரி கூல் ஆகலாமுன்னு நம்ம பாண்டிய கூப்பிட்டேன். (பயபுள்ள ரொம்ப டெர்ரர் ஆனா ஆளு )

"பாண்டி , பாண்டி....."

"எஸ் சார் "

"இந்த இந்த 20 ரூபாயிக்கு போயி அரை லிட்டர் கோக் ஒன்னு வாங்கிட்டு வா "

"ஓகே சார் "

அந்த நேரம் பாத்து நம்ம பக்கத்து ஜமீந்தார் கனவான் பன்னிகுட்டி ராம்சாமி வந்தார் . அவருக்கு கோக் பிடிக்காது உடனே மறுபடியும் பாண்டிய கூப்ட்டு இன்னொரு 20 ரூபாய் குடுத்து .

"இந்த பாண்டி இந்த 20 ரூபாயிக்கு ஒரு மிரண்டா வாங்கிட்டு வா "

"ஓகே சார் "

(என்னா தைரியம் ?)


பயலும் வேகமா தலையாட்டிட்டு போயிட்டான் .
சரின்னு அப்புறம் நானும் பன்னிகுட்டி ராம்சாமியும் நாட்டை எப்படி முன்னேத்தலான்னு பேசிகிட்டு இருந்தோம் ,டாக்குடர் விஜய் பிரதமர் ஆகிட்டா நாடு தன்னால முன்னேரிடும்ன்னு நம்ம சொன்னார் .(யோவ் .... யாருய்யா அங்க தலைல அடிச்சுகிட்டு சிரிக்கிறது ?)

இந்த பாண்டி பய போயி ஒன் அவர் ஆச்சு ஆள காணோம். இத பாத்தா நம்ம பன்னிகுட்டி ராம்சாமி

"என்னப்பா பையன் ஒரு மாதிரின்னு சொன்ன , அவன கடைக்கு அனுப்பி இருக்க சரியா வாங்கிட்டு வருவானா?"

"சே..சே... பய முன்ன மாதிரி இல்லை , அவன் திருந்திட்டேன்னு அவனே சொன்னான் பன்னி ?"

"சரி, சரி எப்படியோ வந்து சேந்தா சரி ?"


அப்புறம் ஒரு அரை மணி நேரம் ஆச்சு
அப்பவும் வரல எனக்கு சின்னதா ஒரு டவுட் வந்து அவனுக்கு போன் போட்டேன்

நான் ஒரு முட்டாளுங்க , ரொம்ப நல்லா படிச்சவுங்க நாலு பேரு சொன்னாங்க ..... (அட இது பாண்டியோட ரிங் டோனுங்க)

"ஹலோ .."

"ஹலோ , பாண்டி எங்க இருக்க ? கூல்ட்ரிங்க்ஸ் வாங்கிட்டியா ?"

"இல்லைங்க சார் , அதுல ஒரு சின்ன டவுட்டு ?"

"அதுல என்னடா டவுட்டு ?"

"இருங்க நேர்ல வந்து சொல்றேன்"

"சரி வா"

எனக்கு ஒரே குழப்பமா போச்சு , என்ன டவுட்டு அவனுக்கு , சரி வரட்டும் கேட்கலாம் . பய வந்து சேந்தான்.

"என்னடா டவுட்டு ?"

ரெண்டு கையையும் நீட்டி விரிச்சான் , ஒவ்வொரு கைளையும்
20 ரூபா இருந்துச்சு ,

"சாரி சார் மறந்துட்டேன் நானும் ரொம்ப நேரமா யோசிச்சு பாக்குறேன் நியாபகம் வரமாட்டேங்குது , இதுல எந்த 20 ரூபாயிக்கு கோக் வாங்கனும் , எந்த 20 ரூபாயிக்கு மிரண்டா வாங்கனும்?"

"@@##%%$$......................."

டிஸ்கி : பாவம் இத கேட்ட நம்ம பன்னிகுட்டி ராம்சாமி ஜமீந்தார் வேலைய ரிசைன் பண்ணிட்டு , டாக்குடர் விஜய் கட்சில சேந்து கட்சிக்கு விளம்பரம் பண்ண போயிட்டார் .

(பழைய காமெடி )

Wednesday, October 20, 2010

"போரம்" நல்லதா? கெட்டதா?

போரம் - திடீரென்று ஒரு மோதல் - ஒரே ரணகளம், ரத்த பூமியா ஆகிப்போச்சு . ஏன் ? எதற்கு ? எப்படி ? என்று ஆராய்ந்தால் உங்களுக்கும் எனக்கும் வயசாகிப் போகும் , இரண்டு பக்கமும் மூட்டை, மூட்டையாக ஆதாரங்கள் வெளியிட்டார்கள் . (ஒரு பயலும் அதை முழுசா படிக்கல )

அதில அவுங்களுக்குள்ளே கருத்து வேறுபாடு புகைந்து கொண்டு இருந்த போது , வினவு ஒரு பெண்ணுக்கு ஆதரவா ஒரு பதிவு போட , இந்த பக்கமும் அந்த பக்கமும் கூட்டம் சேர அது அப்படியே கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது . நண்பர்களுக்குள் பரிமாறிக்கொண்ட சொந்த விஷயங்கள் நடு ரோட்டில் இழுத்து நாறடிக்கப் பட்டது .

இதில் பெண் பதிவர்கள் மிக வக்கிரமாக தாக்கப் பட்டார்கள். இந்த சண்டையில் ஹைலைட் என்னவென்றால் "வார்த்தைகள்". எல்லாம் பெரிய்ய இலக்கிய விஞ்ஞானி ஆயிட்டாங்க . நான் ஏற்கனவே சொன்ன மாதிரி சுயசொறிதல் , ஆணாதிக்கம் , பெண்ணியம் , வன்புணர்ச்சி, துகிலுரிதல் , நாட்டாம ,சொம்புதூக்கி, அடிவருடி ....இன்னும் பல பதிவிடமுடியாத வார்த்தைகள் . (அவுங்க பதிவுல போட்டாங்க ).இந்த மாத்ரி எதார்தத்தை மீறிய வார்த்தைகள் உபயோகித்தால் தான் தாம் இலக்கியவாதி என்று நிரூபிக்கபடுவோம் என்று நினைத்துக் கொண்டார்கள் போலும்.

எனக்கு தெரிந்து "
வினவு" பெண் பதிவர்களுக்கு ஆதரவாக பதிவிட்டதால் ஏற்பட்ட இரண்டாவது பெரிய சர்ச்சை இது . நண்பர்களுக்குள் சண்டைக்குள் பேசிமுடிய வேண்டிய விஷயம் ,தேவையே இல்லாது ஏற்பட்ட வினவுவின் தலையீட்டால் இந்த இரண்டு விசயங்களும் பெரிதாக்கப் பட்டது .இரண்டு பேருக்கு இடையே நடந்த சண்டையை , கோஷ்டி மோதலாக மாற்றியது வினவு . ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்னும் கொள்கையை வினவு கடைபிடிப்பதாக எனக்கு தோன்றுகிறது .


இதி ஒரு தரப்பினர் போத்துக்கு வெளியேயும் , மற்றொரு தரப்பினர் தன் தரப்பு நியாயத்தை கூறுகிறேன் என்ற பெயரில் போரத்தில் புலம்பிக்கொண்டார்கள். இவர்களின் தொந்திரவு தாங்காது இதில் இந்த பிரச்சனையில் எந்த சம்பந்தமும் இல்லாத சிலர் போரத்தை விட்டு வெளியேறினார்கள்.

தினமும் நான்கு ஐந்து பேர் கொண்ட ஒரு தரப்பினர் ஏதோ மூன்றாம் உலகப்போர் அவர்கள் மேல் திணிக்கப் பட்டது மாதிரி சீரியஸ் ஆக தேவையே இல்லாது ஒண்ணுமே இல்லாத விஷயத்தை விவாதித்துக் கொண்டு இருந்தார்கள்.

இதில் போரம்மில் உள்ள மற்றவர்கள் தொந்திரவாக இருக்கிறது என்று சொல்லும்போது , நீங்கள் உங்கள் மெயிலுக்கு பில்டர் வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள் .

நாலு பேரு கூடுற சந்தைல வந்து நின்னுகிட்டு நீ பில்டர் காப்பி வச்சுக்க , பிளாக் டீ போட்டுக்கோன்னு சொல்லக்கூடாது , நாங்க ன்னா செய்யனுமின்னு எங்களுக்குதெரியும் . நீங்க உங்க நாலுபேருக்கும் ஒரு குரூப் மெயில் உருவாக்கி அதற்குள் விவாதத்தை வைத்துக் கொண்டால் நாங்கள் ஏன் தலையிடுகிறோம் . இதை எதிர்க்காமல் krp செந்தில் சார் , சிரிப்பு போலீஸ் ரமேஸ் மற்றும் பலர் போரத்தை விட்டு வெளியேறியது சுத்த பைத்தியக்காரத்தனம்.

இந்த விவாதம் நடந்து கொண்டு இருக்கும் போது போரத்தை ஆரம்பித்த கேபிள் சங்கர் அவர்களுக்கு நிறைய பேர் சண்டையை தவிர்க்கும்படி கேட்டுக்கொண்டார்கள் , அதை அவர் கண்டுகொண்ட மாதிரி தெரியவில்லை . அவர் நினைத்து இருந்தால் அதை தவிர்த்து இருக்கலாம் . அப்பொழுதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு அவரை பற்றி யாரோ பதிவு போட்டவுடன் ஒரு பதிவில் போட்டு அதில் தன்னை பற்றிய விசயங்களை தவிர்க்க சொல்கிறார். என்னை எந்த பிரச்சனையிலும் இழுக்காதீர்கள் என்று நாகரீகமாக சொல்லிவிட்டார். அது அவரது நிலைப்பாடு. அதில் வினாவுக்கும் ஒரு "ஃ" ன்னா வைத்து உள்ளார் .அவரது இந்த செயல் வினவுவின் எதிர் குழுவை ஆதரிப்பது போல் உள்ளது .

------------------

போரம் உலகம் முழுவது நமக்கு புதிய நண்பர்களை ஏற்படுத்தி தரும் தளமாகவும் , பிரச்சனை என்று வந்தால் அதை பெரிது படுத்த உதவும் களமாகவும் உள்ளது .

எங்க இப்ப நீங்க சொல்லுங்க போரம் நல்லதா ? கெட்டதா ?

Monday, October 18, 2010

எப்படியெல்லாம் கலாயிக்கிரானுக ???

நானும் பட்டாபட்டியும் காலேஜுல யுஜி தேர்டு இயர் படிக்கும் போது ....

(ஹி.ஹி.ஹி......என்னது பட்டாபட்டியும், நீயும் காலேஜுல........ஹி.ஹி.ஹி. ...ஹய்யோ , ஹய்யோ, தமாசு , தமாசு .... )

ஆஹா ஆரம்பிச்சிட்டானுகளே ? இவனுக கிட்ட இன்னிக்கு சிக்கி சின்னாபின்ன மாகாம எப்படியாவது வீடு போயி சேரனும்டா சாமி .

(என்ன வேண்டுதலா ?)

அடப்பாவிகளா கரக்ட்டா கண்டுபுடிச்சிட்டானுக, டேய்.....முந்தாநாள் கட்டுன கரண்ட்டு பில்லு மேல சத்தியமா நான் காலேஜு படிச்சண்டா...... , நம்புங்கடா..... , எத்தின தடவ கரடியா கத்துனாலும் ஒரு பயபுள்ளையும் நம்ப மாட்டேங்கிரானுகளே?

(அதுதான் எங்களுக்கும் டவுட்டு?, கரடி எங்கையாவது காலேஜுக்கு போகுமா ? இல்ல காலேஜுல தான் கரடிய சேப்பான்களா ?)

நான் பஸ்ட்டு இயர் படிக்கும் போது லவ் பண்ணின தேர்டு இயர் படிச்ச பொண்ணுமேல சத்தியமா நான் காலேஜு படிச்சண்டா ?

(லவ் பண்ணியதெல்லாம் சரி , அந்த பொண்ண கைய புடிச்சி இழுத்தியா ? சே.... தூ ..... பஸ்ட்டு ஸ்கூல்ல படிச்சியா ? )

அவ்வ்வ்வ்வ்..............சாகடிக்கிரானுகளே? விசயத்த சொல்லவிடுங்கடா,இப்படி நீங்க கலாயிக்கிற அளவுக்கு நான் வொர்த்த் இல்லைடா ?

(நீ ஒரு ஒண்ணுக்கும் விளங்காத டம்மி பீசுன்னு எங்களுக்கு தெரியும் , சொல்ல வந்தத சொல்லு )

என்ன எங்கடா பேச விடுறிங்க? எது சொன்னாலும் எதுகை மோனையா கலாயிக்கிரதுலே குறியா இருக்கிங்களே ?இவனுககிட்ட சிக்கி சீரழிஞ்சு போறதே நமக்கு வேலையா போச்சு .

(இன்னும் நீ விசயத்துக்கு வரல )

ஹேய் ...ஸ்டாப் இட் , பிச்சுபுடுவேன் பிச்சு , என்ன சின்னபுள்ள தனமா இருக்கு , வாயத்தொறக்க விடமாட்டேங்கிரானுக, இனி எவனாவது சவுண்டு விடுங்க அப்புறம் சுறா படத்த போட்டு விட்ருவேன் .

(ஐயய்யோ ... சாமி , உன்கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டு கொள்கிறோம் , தயவு செய்து நீயே சொல்லு சுறா படம் மட்டும் போட்றாத) .

உம் ... அந்த பயம் இருக்கட்டும் ..... என்ன????? சுறா படத்த போடா வேணாமா ? அடப்பாவிகளா நான் பேசுறது அதவிட கொடூரமாவா இருக்கு ?

(அத நாங்க எங்க வாயல வேற சொல்லனுமா ?)

அய்யோ எப்படி இவனுக கிட்ட வந்து சிக்குன்னேன்னு தெரியலையே? ,எங்கிட்டு போனாலும் கேட் போட்டு மடக்குரானுகளே ? சொக்கா இவனுக கிட்ட இருந்து என்ன எப்படியாவது காப்பாத்து .பத்து மாசமா பல்லு விளக்காத பனங்காட்டு நரிய புடிச்சு உனக்கு படையல் போடுறேன் .

(பஸ்ட்டு நீ பல்லு விளக்குடா நாதாரி , உன் கப்பு தாங்க முடியாம நாலு நாயி செத்து போயிருக்கு , பட்டாப்பட்டி வேலைய ரிசைன் பண்ணிட்டு இமயமலைக்கு சந்நியாசம் போயி அங்கேயே கல்யாணம் பண்ணி செட்டில் ஆயிட்டான் )

ஸ்டுபிட், நான்சன்ஸ், பிளடி ஃபூல், இடியட்ஸ்...... ஒரு உயர் அதிகாரிகிட்ட இப்படியா டீல் பன்றது ? நன்னாறிப் பசங்களா ? எப்படியெல்லாம் கலாயிக்கிரானுக ?

(என்னது உயர் அதிகாரியா ? குட மார்னிங் ஆபீசர், அப்புறம்..... டீலிங்கா? ..... என்னா டீலிங்கு?)

அய்யோ இப்படி கொலையாகொல்ரானுகளே ? இருங்கடா , நான் சொல்ல வந்தத சொல்லிடுறேன்.

(அதத்தானடா அப்ப இருந்து கேட்டுகிட்டு இருக்கோம் , சொல்லித்தொலடா நாதாரி )

கடைசிவரைக்கு சொல்லவே விடமாட்டேன்குரானுகளே , என்ன விடுங்கடா நான் காலேலேலே............ஜே படிக்கல ......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...............................இந்த பொழப்புக்கு கேரளாவுக்கு அடிமாடா போயிடலாம் .

(இத , இத , இதத்தான நாங்க எதிர்பார்த்தோம் )

Saturday, October 16, 2010

சிரிப்பு போலிசு (மீள்பதிவு )

இதை வழங்குவோர்
லீவு நாளில் புது பதிவு போட சோம்பேறித்தனம் பட்டுகிட்டு ஆவ்வ்வ்வ்வ்................ கொட்டாவி விட்டுக் கொண்டே காப்பி பேஸ்ட் செய்து மீள்பதிவு போட்டு அரைத்தூக்கம் தூங்குவோர் சங்கம் .

------@@@@@------


முஸ்கி : இதை படித்து விட்டு யாராவது கொலை அல்லது தற்கொலை முயற்ச்சியில் ஈடுபட்டால் அதற்க்கு நிர்வாகம் பொறுப்பல்ல .....


ஆபிசில இருந்து டீ சாப்டலாம்னு கிளம்பினேம்பா வெளிய பார்த்தா ஒரே டிராபிக் சரின்னு அப்படி இப்படின்னு வளைஞ்சு நெளிஞ்சு சிக்னல தாண்டினா ஒரு 20 டிராபிக் போலீஸ் , அதுல நாலு என்னசுத்துபோட்டு ஓரமா கூட்டிட்டு போனாக.

போலிசு: யோவ் லைசென்ஸ் என்கையா ?

நம்ம : சார் மரியாதையா கேளுங்க ?

போலிசு: சரிங்க பப்ளிக் லைசென்ஸ் எங்க பப்ளிக் ?

நம்ம : லைசென்ஸ் இந்தாங்க

போலிசு : ஆர்சி புக் எங்க சார் ?

நம்ம : ஆர்சி புக் இந்தாங்க

போலிசு : இன்சூரன்ஸ் எங்க சார் ?

நம்ம : இன்சூரன்ஸ் இந்தாங்க

போலிசு : சார்ஜென்ட் சார் , இவரு எல்லாம் கரக்டா வச்சுருக்காரு சார்ஜென்ட் : எல்லாம் கரக்டா இருக்கா !!!!!!!!! ஏன்யா ஓவர் ஸ்பீட்ல வந்த ?

நம்ம : என்னது ஓவர் ஸ்பீட ? சார் நான் நடந்து வந்தேன்

சார்ஜென்ட் : அப்போ பைக எங்கய ?

நம்ம : பைக் ஆபிசுல இருக்கு சார்

சார்ஜன்ட் : பைக் இல்லையா ? லைசென்சு , ஆர்சி புக், இன்சூரன்ஸ் எல்லாம் எடுத்திட்டு வந்திருக்க பைக் ஏன் எடுத்திட்டு வரல முன்னூர் ரூபா பைன் கட்டு
!!!!!!!
நம்ம : அய்யய்யோ சார்

சார்ஜென்ட் : இங்க கட்னா முண்ணூறு கோர்ட்ல கட்னா ஆயிரம் , இங்க கட்டுறியா இல்ல கோர்ட்ல கட்டுறியா ?

நம்ம : ???????????????????????????

ஏற்கனவே கெரகம் சயில்லைன்னு நம்ம பட்டாப்பட்டி ஜோசியர் சொல்லியிருக்கார்
சரின்னு முன்னூர் ரூபா fine -அ கட்டிட்டு டீ கூட குடிக்காம ஆபீஸ் வந்துட்டேன்.

டுஸ்கி: இவ்வளவு தூரம் வந்துட்டிங்களா !!! உயிர்மேல பயம் இல்லையா ? ஹா.. ஹா.. ஹா.. ..காட் மஸ்ட் டு பீ கிரேசி................



ஆபீஸ்ல மூடே சரியில்ல சரின்னு லீவ போட்டு நைட் (????????) சோ சினிமாக்கு கிளம்பிட்டேன்.படம் பாத்திட்டு மிட்நைட் திரும்பி வரும்போது பாத்தா தேனாம்பேட்ட சிக்னல்ல மறுபடியும் டிராபிக் போலிஸ் வழக்கம் போல நாலு பேர் நம்மள மடக்குனாக . நாம தான் இப்ப பைக் -கும் எடுத்திட்டு வந்திருக்கமேனு தெனாவெட்டா வண்டிய நிறுத்தினேன் .



போலிசு: லைசென்ஸ், ஆர்சி புக் , இன்சூரன்ஸ் காமிங்க

நம்ம : இந்தாங்க சார்

போலிசு : சார்ஜென்ட் சார் , இவரு எல்லாம் கரக்டா வச்சுருக்காரு

சார்ஜென்ட்: எங்க சார் போயிடு வர்ரிங்க ?

நம்ம : படத்துக்கு சார்

சார்ஜென்ட்: என்னா படம் ?

நம்ம : அந்த கொடுமைய ஏன் சார் கேட்குறிங்க ?

சார்ஜென்ட்: சரி, சரி ...........எந்த தியேட்டர் ?

நம்ம : சத்யம் சார்

சார்ஜென்ட்: எங்க டிக்கெட்ட காமிங்க ?

நம்ம : இந்தாங்க சார்

சார்ஜென்ட்: என்ன சார் இது ?

நம்ம : சார் டிக்கெட் சார்

சார்ஜென்ட்: இந்த டிக்கெட் யாருக்கு வேணும் , நான் கேட்டது IPL டிக்கெட் ?

நம்ம : சார் ..............................................

சார்ஜென்ட்: அது தான் எல்லா டிவி-லையும் விளம்பரம் போடுறாங்களே சார் IPL டிக்கெட் தான் பெரிய டிக்கெட்-ன்னு?


நம்ம : *****&&&&&^^^^^%%%%%$$$$$#####@@@@@!!!!!!

சார்ஜென்ட்: IPL டிக்கெட்-அ காட்றீகளா இல்ல முன்னூர் ரூபா பைன் கட்ரீகளா ?

நம்ம : !!!@@@###$$$%%%^^^&&&***((()))



(அப்புறம் நம்மள குற்றாலம் கூப்பிட்டு போய் ரெண்டு வாரம் ட்ரீட்மென்ட் எடுத்தா எங்க அப்பா சொன்னார்)

டிஸ்கி : சென்னைல நைட் சோ படம் பார்த்திட்டு வந்தா படத்தோட டிக்கெட்ட வெரிபிகேசனுக்கு போலீஸ் கேட்பாங்கோ ......


Thursday, October 14, 2010

சென்னை நகர பெண்களே உஷார்

சென்னை நகர பெண்களே உங்களை நோக்கி எப்பொழுது ஒரு கேமரா படமெடுக்க காத்துக்கொண்டுள்ளது , பொது இடத்தில் , நடக்கும் போது , பஸ்ஸில் பயணம் செய்யும் அதுவும் பஸ் சீட்டில் அமர்திருக்கும் போது மிக கவனமாக இருங்கள் . உங்களை தவறான கோணத்தில் படம் எடுக்க ஒரு கும்பல் அலைகிறது .

பிளாட் பார கடைகளில் பொருட்கள் வாங்கும் போதும் , கூட்ட நெரிசலில் நடக்கும் போதும் கவனமாக இருங்கள் . கீழே கிடக்கும் பொருட்கள் எடுப்பதை தவிர்த்து விடுங்கள் . தி.நகர் போன்ற பகுதிகளில் உள்ள பிளாட்பாம் கடைகளில் மிக மிக விலைகுறைவாக பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் எச்சரிக்கையாக இருங்கள் . விற்பனை செய்பவரின் பின்புறம் உங்களுக்காக கேமரா காத்திருக்கலாம் .

அவர்களது மெயின் டார்கெட் வண்டி ஓட்டுபவர்கள் தானாம் . எனவே இரு சங்ககர வாகனங்கள் ஓட்டிச்செல்லும் பெண்கள் தங்களுது மேலாடை (துப்பட்டா ) அல்லது சேலை சைடு பகுதிகளில் சரியாக கவர் செய்து உள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள் . ஏனென்றால் மற்ற இடங்களை விட நீங்கள் வண்டி ஓட்டும் போது படம் எடுக்கப்பட்டால் அதை உங்களால் நிச்சியமாக கண்டுபிடிக்க இயலாது.

சமீபத்தில் எனது நண்பர் ஒருவர் கூறினார். சென்னை நகரில் பெண்களை படமெடுக்க மொபைல் கேமராவுடன் ஒரு பெரிய கும்பல் அலைந்து கொண்டு உள்ளதாம் . அவர்களுக்கு ஆபாசமாக மட்டும் படம் எடுப்பதில்லை , எல்லா பெண்களையும் ஆபாசமில்லாமலும் படம் பிடிக்கிறார்கள் . இவர்கள் பிடிக்கும் படங்கள் இவர்கள் ரசிப்பதற்காக அல்ல , இதற்கென்று ஒரு பெரிய நெட்வொர்க் உள்ளது , இந்த படங்களை விலை கொடுத்து வாங்கிகொள்கிறார்களாம் .

அது அந்த படத்தின் ஆபாசத்தை பொறுத்து ஒரு ஒரு ரூபாயிலிருந்து
இரண்டாயிரம் ரூபாய் வரை வாங்கப் படுகிறதாம். நமது இந்திய பெண் முகங்கள் அதுவும் முக்கியமாக தென் இந்திய பெண் முகங்களுக்கு ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் நிறைய டிமாண்ட் உள்ளதாம்.

இதை படம் பிடிப்பவர்களுக்கு தினமும் குறைந்த பட்சம் 250 ரூபாய் வருமானம் கிடைக்கின்றதாம் .படம் எடுப்பவர்கள் எல்லாம் விடலை பசங்கதான் . 4 அல்லது 5 பேர் கொண்ட கும்பலாக வளம் வருகிறார்களாம் .
அவர்களுடைய டார்கட் எல்லாம் மேலே துப்பட்டா போடாமல் எடுப்பாக மார்பகம் உடைய பெண்கள் , முகத்தோடு சேர்த்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு கவர்ச்சியாக படம் எடுக்கின்றார்கள் .

எல்லாம் இதை இப்பொழுது ஒரு தொழிலாகவே செய்கிறார்களாம் .
தற்போது நமது காவல் துறையும் இது பற்றி அறிந்து இது சம்பந்தமான முழு நெட் வொர்கையும் டிரேஸ் செய்து கொண்டு உள்ளார்களாம் . எனவே அனைவரும் கவனமாக இருங்கள் , உங்களுக்கு தெரிந்த பெண்களிடமும் கூறி எச்சரிக்கையாக இருக்கச்சொல்லுங்கள்.

Tuesday, October 12, 2010

மொக்கை போடுவது எப்படி ?

// பயபுள்ளைக, பன்னாட , பரதேசி,நாதாரி , முடுச்சவிக்கி , மொள்ளமாரி , கேப்மாரி , டோமரு , ங்கொய்யாலே , கொலைவெறி , தக்காளி , அடங்....ங்கொன்னியா, டகால்டி , கலாயித்தல், மொக்கை, ஹி,ஹி,ஹி .... கும்மி, கிடாவெட்டு ///

இதெல்லாம் என்னன்னு பாக்குறிங்களா , நம்ம மொக்கை பதிவர்கள் சங்கத்தில் அப்ரூவல் கொடுக்கப் பட்ட தமிழ் வார்த்தைகள் ,இதில் குறைந்த பட்சம் 4 வார்த்தைகள் உபயோகிக்காமல் பதிவு எழுதக்கூடாது எனபது எங்கள் மொக்கை பதிவர்கள் சங்கத்தில் எழுத்தப்படாத சட்டம்.

பயபுள்ளைக எந்த பன்னாடையாவது இதை உபயோகிக்காமல் பதிவு போட்டால் , அந்த பரதேசி பிளாக்கில் கும்மி அடிச்சு கிடா வெட்டு நடத்த ஒரு நாதாரி கூட்டமே இருக்கு , அதோட சில முடிச்சவிக்கி , மொள்ளமாரி , கேப்மாரி பசங்க எங்கடா டோமரு மாட்டுன்னு ங்கொய்யாலே, கொலவெறியோட அலையுராணுக ,ஆனா தக்காளி அவனுகளே மூக்குமேல விரல் வக்கிர மாதிரி அடங்....ங்கொன்னியான்னு ஒரு டகால்டி வேல பத்து சும்மா கலாச்சு விட்ருவோம்ல . ஆனா மொக்க போட்டா மட்டும் ஹி.ஹி.ஹி ...... கும்மி , கிடா வெட்டு எல்லாம் நடக்குது , எனவே பொது மக்களே எங்க கிடாவெட்டு நடந்தாலும் அனைவரும் வந்து விருந்து சாப்பிட்டு போகுமாறு எங்கள் மொக்கை பதிவர்கள் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

///ஆணாதிக்கம், பெண்ணியம் , சுயசொறிதல் , வன்புணர்ச்சி ///

நான் போட மறந்த முன்நவீனத்துவம், பின் நவீனத்துவம், கீழ்நவீனத்துவம், மேல் நவீனத்துவம் முற்காலம், கற்காலம் தற்காலம் போன்ற சொற்களை எடுத்து குடுத்த பன்னிகுட்டி ராமசாமிக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் . (மங்கு இதெல்லாம் எப்படி மிஸ் பண்ணின ,???? பயிற்சி போதவில்லையோ ??)

இதெல்லாம் என்னன்னு பாக்குறிங்களா எல்லாம் நம்ம சங்ககால , தற்கால மற்றும் பிற்கால இலக்கியங்களை எழுதும் இலக்கிய வாதிகள் அடிக்கடி அவர்களுக்குள் சண்டை இட்டுக்கொள்ளும் போது உபயோகிக்கும் வார்த்தைகள் சார் . சோ .... நோ கமண்ட்ஸ் .... ஏன்னா இது எங்கடிபார்ட்மென்ட் இல்லை.

------@@@@@------

இதுல சில புதுசா வந்த மொக்கை பதிவர்களுக்கு மொக்கை எப்படி போடுறதுன்னு சரியா தெரியல , அதுனால மொக்கை எப்படி போடுறதுன்னு நான் ஏற்கனவே போட்ட ஒரு சின்ன பதிவு ......


மொக்க போடுவது எப்படி?

இத பத்தி நீங்க படிக்கணும்னா ஆஸ்த்ரேலியாவில் உள்ள எல்டர் பிரதர் யுனிவெர்சிட்டி-ல் (அதான்ங்க அண்ணா யுனிவெர்சிட்டி) டூ இயர்ஸ் கோர்ஸ் இருக்கு (வெளியூர்காரன் : ஆஸ்த்ரேலியாவில் அண்ணா யுனிவேர்சிட்யா ஆஹா வந்துட்டாய கிருகதுருவம் புடிச்சவன் ) , அந்த யுனிவெர்சிட்டி ரொம்ப ஸ்ட்ரிக்ட் காலை ப்ரேக் பாஸ்ட் சாப்பிடனும் மதியம் லஞ்ச் சாப்பிடனும் அப்புறம் நைட் சரகடிக்காம சாப்பிட விடமாட்டானுக. இவ்வளவு கஷ்டப்பட்டு தான் நான் படிச்சேன் . உங்க சொந்த காசுல யாரும் போய் படிக்காதிங்க (என்னது நானா ஹி ஹி ஹி...............) மொத்தம் 23 கோடி செலவாகும் (ரெட்டைவால்ஸ் : நம்ம கஜானாவில் திருடிய ஆள கண்டுபுடிசிடண்டா )

பட்டாப்பட்டி said : விசயத்துக்கு வாடா டோமரு

சரி, சரி இப்ப மொக்க போடனும்னா முதல்ல ஒரு ஒத்த "கொம்பு" போட்டுக்க அப்புறம் "ம" போட்டுக்க அப்புறம் "துனகாலு" போட்டுக்க அப்புறம் "க" போட்டு மேல புள்ளி வச்சுக்கோ கடைசியா ஒரு "க" போடு , இப்ப படிச்சு பாரு "மொக்க " சரியா??

டிஸ்கி : கோபத்தில் உங்கள் மானிடரை (அட கம்ப்யுடர் மானிடர சொன்னேன் ) ஒடச்சா அதுக்கு நான் பொறுப்பு இல்ல .

Monday, October 11, 2010

நாடு விளங்கிடும்

கருத்து கந்தசாமி

செய்தி : இனி அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடக்காது எனவே இந்த இந்த வேலைக்கு இவ்வளவு லஞ்சம் என்று நிர்ணயித்து கொள்ளலாம் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வருத்தத்துடன் கருத்து கூறியுள்ளனர் . (சத்தியமா தினத்தந்தில தான் படிச்சேன் சாமிகளா )
- நன்றி , தினத்தந்தி


அன்னை சோனியா காந்தி :
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் கருத்தை ஏற்று உடனடியாக இதற்கென்று தனியாக ஒரு துறை ஆரம்பிக்கப் படும் , அந்த துறைக்கு ஒரு அமைச்சர் மற்றும் இரண்டு இணை அமைச்சர்கள் நியமிக்கப் படுவார்கள் .


பா.ஜா .க: எங்கள் ஆட்சில் மேல்தட்டு அரசாங்க அதிகாரிகளே பெரிய தொகைகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு இருந்தார்கள் , கீழ்தட்டு அரசு ஊழியர்கள் கொஞ்சமாக லஞ்சம் வாங்கி மக்களை பாதிக்காத அளவில் இருந்தார்கள் . இப்பொழுது தலைகீழாக உள்ளது எல்லோரும் பெரும்தொகையையே லஞ்சமாக வாங்குகிறார்கள் , எனவே "எந்த வேலைக்கு எவ்வளவு லஞ்சம்" என்ற அரசின் இத முடிவை வரவேற்கிறோம் .

கோபாலபுரம் : ஆஹா மக்களுக்கு சேவை செய்ய என்ன ஒரு அருமையான வாய்ப்பு , ஆனால் அந்தோ பரிதாபம் மக்களுக்கு சேவை செய்ய எனக்கு வாரிசுகள் பத்த வில்லையே? இப்பொழுது நான் என்ன செய்வேன் ? சரி, சரி நம்ம துணை முதல்வரின் பேத்திக்கு இந்த பதவியை கொடுத்து விடலாம் .

தைலாபுர தோட்டம் :
சொக்கா, சொக்கா இப்ப நான் என்ன செய்வேன் ? ஏன் இந்த சோதனை ? இப்படி ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்குமா ? டே , வண்டிய கட்டுங்கடா கோபாலபுரத்துக்கு..... மகனே
கவலைப்படாதே உன் பசலை நோயை குணப்படுத்த இந்த முறை கால்களில் விழுந்தாவது பதவியுடன் வருகிறேன் .

தற்போதைய கருப்பு MGR : இந்தியாவில் அரசு ஊழியர்கள் 26487002 பேர் , அதில் மத்திய அரசு ஊழியர்கள் 2498722 பேர் , மாநில அரசு ஊழியர்கள் 6482266 , மற்றும் ஒப்பந்த அரசு ஊழியர்கள் ......................... (டே ,போதும் நிறுத்துடா டோமரு )

கொடநாடு எஸ்டேட் : "எனது" ஆட்சி காலத்திலேயே மக்கள் நலம்பெற வேண்டும் என்று "நான்" ஏற்கனவே மத்திய அரசுக்கு தெரியப்படுத்தினேன் , மைனாரிட்டி தி,மு,க அரசு அதை தடுத்து விட்டது . மைனாரிட்டி தி.மு.க அரசு , மைனாரிட்டி தி.மு.க அரசு , மைனாரிட்டி தி.மு.க அரசு , மைனாரிட்டி தி.மு.க அரசு...................... (எச்சூச்மி.............. , ஸ்டாப் மூசிக் )

தமிழ் நாடு காங்கிரஸ் : இந்தியாவும் சலாமியாவும் சமாதன நாடுகள் , அன்னை சோனியா ஜி சொல்படி நடப்போம் . இந்தியாவும் சலாமியாவும் சமாதன நாடுகள் , அன்னை சோனியா ஜி சொல்படி நடப்போம் . இந்தியாவும் சலாமியாவும் சமாதன நாடுகள் , அன்னை சோனியா ஜி சொல்படி நடப்போம் .



Saturday, October 9, 2010

உங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா? (தொடர் பதிவு )

முஸ்கி : நண்பர்களே நேற்று சந்தோஷ்பக்கங்கள் இந்த பதிவை போட்டு இருந்தார் , "இந்த விஷயத்தை உங்களால் முடிந்தால் நாலு பேருக்கு பகிருங்க" அப்படின்னு கேட்டு இருந்தார் , ரொம்ப நல்ல விஷயம் எனவே நண்பர்களே உங்களால் முடிந்த அளவுக்கு அனைவரும் குறைந்த பட்சம் ஒரே ஒரு நாளாவது உங்கள் பிளாக்கில் இந்த பதிவை போடுங்க நிறைய பேருக்கு ரீச் ஆகும் . விருப்பமுள்ளவர்கள் அனைவரும் இந்த தொடர்பதிவை தொடரலாம் .

For referance: http://santhoshpakkangal.blogspot.com/2010/10/blog-post.html

உங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா?

உங்க கிட்ட நீங்க உபயோகப்படுத்தாத பொருட்கள் ஆடைகள், பொம்மைகள் இருக்கா? அதை தூக்கி எறியவும் மனசு இல்லாமல் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிங்களா? அதை எங்களிடம் குடுங்க நாங்க அதை ஏழை எளியவர்களுக்கு குடுக்குறோம்.


CTC - Chennai Trekking Club என்று ஒரு இயக்கம் இருக்கிறது.. நீங்க மேற் சொன்ன விஷயங்களை எங்களிடம் அளிக்க விரும்பினால் இந்த சுட்டியில் (https://spreadsheets1.google.com/viewform?hl=en&formkey=dEU1d2gzVnNVVTBMR3Z2eGNiMS1RaVE6MQ#gid=0) உள்ள Excel Formஜ நிரப்பினால் எங்க தன்னார்வலர் ஒருவர் உங்களை தொடர்பு கொண்டு உங்களை சந்தித்து அதை பெற்றுக்கொள்வார். இப்போதைக்கு இது சென்னையில் உள்ளவர்களுக்கு மட்டுமே.. உங்களால் நீங்க அளிக்க இருக்கும் பொருட்களை சென்னைக்கு அனுப்ப முடிந்தால் நீங்க கூட எங்களை தொடர்பு கொள்ளலாம்.

முத்துலட்சுமி அக்கா சொன்ன மாதிரி இது ஆதரவற்ற முதியோர்களுக்கும், குழந்தைகளுக்கும் குடுக்க போறாங்க..எனவே தயவு செய்து திரும்ப உபயோகப்படுத்தும் நிலையில் இருந்தால் மட்டும் குடுங்க.. கிழிந்த துணிகளை எல்லாம் குடுக்காதிங்க பிளீஸ்..

பொதுவா நான் ஓட்டு போடுங்க, கமெண்டு போடுங்கன்னு கேக்க மாட்டேன். இது ஒரு நல்ல விஷயம் நாலு பேருக்கு தெரிந்தால் கூட நாலு ஜந்து பேருக்கு உதவி செய்யலாம். இந்த விஷயத்தை உங்களால் முடிந்தால் நாலு பேருக்கு பகிருங்க.
(நன்றி :சந்தோஷ்பக்கங்கள் )

-------------------
டிஸ்கி :உதவி பண்றேன்னு பெருமைக்காக நிறைய பேர் கிழிந்த , உடைந்த பொருட்களை தருகிறார்கள் , உங்களை யாரும் கட்டாயப் படுத்தவில்லை , கொடுக்கபோகும் துணிகளை நன்றாக துவைத்து , அயன் பன்னி உபயோகிக்கும் நிலையில் கொடுங்கள் இல்லையென்றால் சும்மா இருங்கள் யாரும் உங்களை குறைசொல்ல மாட்டார்கள். . அனைவரும் கட்டாயம் ஓட்டுப் போடுங்க , அது நிறைய பேரை சென்றடைய உதவும் .

நண்பர்களே பிளீஸ் இந்த பதிவில் கும்மி வேண்டாம்.


Thursday, October 7, 2010

என் கல்லூரிக்காதல் நாட்கள்

நேற்று டி.வி யில் இதயத்தை திருடாதே படம் ஓடியது , என்னுடைய எண்ணங்களும் எனது கல்லூரி காதல் நாட்களை நோக்கி ஓடியது, நீண்ட நாட்களுக்கு பின் எனது கல்லூரி டைரியை எடுத்து புரட்டிப் பார்த்தேன் ...........

அவளுடன் உண்டான சண்டையின் போது என் மணிக்கட்டில் சிகிரட்டால் சுட்டுக்கொண்ட தழும்பை இப்பொழுது தடவி பார்த்தேன்.

மறக்க முடியாத நாட்கள் . மறக்க விரும்பாத நாட்கள் . மீண்டும் கிடைக்காத நாட்கள் .ஆனால் மறக்க வேண்டிய நாட்கள்.

லேசா மழைபெய்யும் போது கல்லூரி வராண்டாவில் காதலிக்காக காத்துக்கிடப்பது தனி சுகம் . மழை காலங்களில் கல்லூரி விடுமுறை நாட்களில் அவள் வரமாட்டாள் என்று தெரிந்தும் கல்லூரி வராண்டாவில் காத்திருந்த நாட்கள் . அவள் உதட்டோரம்
சுழிக்கும் சிரிப்புக்காக ஏங்கி நின்ற நாட்கள் .

பாதி சாப்பிட்ட தின்பண்டங்களை பரிமாறிக்கொண்ட நாட்கள் , அவள் தொட்ட பேனாவை நானும் தொட வேண்டும் என்பதற்காக வேண்டும் என்றே பேனா எடுத்துப்போகாத நாட்கள், எனக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காவே இரண்டு பேனாக்கள் அவள் கொண்டு வரும் நாட்கள்.

நாடு இரவு நேரத்தில் சிறிது தொலைவில் இருந்து அவள் வீட்டையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்த நாட்கள்.

அவளிடம் திட்டு வாங்குவதற்கென்றே அவளுக்கு பயந்து கொண்டு மறைப்பது போல நடித்து அவளுக்கு தெரியுமாறு சிகரட் பிடித்த நாட்கள் ,


அவளிடம் திருடிய கர்ஷிப்கள் , ஹேர் கிளிப்க்கள் , அவளிடம் தொலைப்பதற்கு வேண்டும் என்றே நான் வாங்கி தொலைத்த பரிசுப்பொருட்கள்.


அவளுக்கு கொடுப்பதற்காக எழுதிய கவிதைக்கடிதம் இன்னும் குடுக்கப் படாமல் என் டைரியில் . இப்ப படிக்கும் போது சிறுபிள்ளை தனமாக இருக்கு ,


காதலை ........
துடிக்கின்றதே
சொல்ல
இதழ்
ஆவலில்......
மறுக்கின்றதே
மூட
இமை


நான் .........
உனக்கானவே

தெரியுமா
இதயமே?


நீதானடி ........
என்
கனவு

தெரியுமா

கவிதையே ?



டிஸ்கி: இந்த கவிதையில் ஒரு உள் அர்த்தம் உள்ளது , அதை புரிந்து கொண்டவர்கள் சொல்லுங்கள் பார்க்கலாம் ?

Tuesday, October 5, 2010

நான் ஒரு தற்குறி சார்

நானெல்லாம் பாருங்க ஒரு தற்குறியா , செல்பிஷா இருக்கேன் சார் , கவுருமெண்ட்ட ஏமாத்துறது , டாக்ஸ் கட்டுறதுல பிராடுவேல பண்றது , கிரடிட் கார்டுக்கு பணம் கட்டாம ஏமாத்துறது , ரெட் சிக்னல்ல கிராஸ் பன்றது , ஹெல்மெட் போடாம வண்டி ஓடறது அட அதெல்லாம் விடுங்க சார் , ஒரு புரடுயுசர் பாவம் சொத்து பத்த வித்து கந்து வட்டிக்கு கடன் வாங்கி பலகோடி ரூபா போட்டு ஒரு படம் எடுத்தா அத ஓசில பாக்குறது இல்ல திருட்டு DVD 20 ரூபாயிக்கு வாங்கி அதுல பாக்குறது , பாவம் அந்த புரடுயுசர் தலைல துண்ட போட்டு போகவேண்டியது தான் சார் .

இவ்ளோ திருட்டுத்தனம், கேப்மாரித்தனம், மொள்ளமாரித்தனம் பன்ன நான் திருந்த கூடாதா சார்?

நேத்து ஒரு நியுஸ் பாத்தேன் சார் , அதுல இருந்து என்னோட தன்மானம் என்னைய கொலையா கொன்னுகிட்டு இருக்கு சார் , நாமெல்லாம்(நாமெல்லாம் என்பது எங்கள் ப.மு.க கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமே, தக்காளி எல்லாம் மாட்னின்களா ???) என்னா வாழ்க்கை வாழ்ந்துகிட்டு இருக்கோம்?, இதெல்லாம் ஒரு பொழப்பா ?

அந்த நியுச பாத்ததில இருந்து சுயபச்சாதாபத்துளையும் , வெட்கத்துளையும் அப்படியே உங்க முன்னாடி கூனிகுருகி போய் நிக்கிறேன் சார் . இனி நான் திருநதியே ஆகணும், பிளீஸ் எனக்கு ஒரு சான்ஸ் குடுங்கள் , பிளீஸ் , பிளீஸ் ......


பாருங்க சார் அவனுக தான் சார் மனிசனுக , பாவம் கஞ்சிக்கு கூட வழியில்லாமல் இருக்கும் நிலையிலும் பிளாக் மணி எதுவும் சேர்க்காமல் கரட்டா டக்ஸ் கட்டுற நம்ம கலாநிதிமாறன் , ரொம்ப கஷ்டப்பட்டு 200 கோடி ரூபாய் செலவு செய்து , அதில் நேர்மையாக கணக்கு காட்டி டாக்ஸ் கட்டும் நம்ம ரஜினி சார் கூட 40 கோடி மட்டும் குறைந்த படச்ச சம்பளமாக வாங்கிக்கொண்டு நடித்து கொடுத்த "எந்திரன்" படத்தின் திருட்டு VCD விற்ற கடுங் குற்றவாளியை , இதுவரை யாரையும் ஏமாற்றாத , ஒழுங்காக டாக்ஸ் கட்டும் , ரெட் சிக்னல்ல கிராஸ் பண்ணாத , ஹெல்மெட் அணிந்து வண்டியோட்டும் அதோடு முக்கியமா இது வரை எந்த ஒரு படத்தையும் திருட்டு VCD யில் பார்க்காத நமது ரஜினி ரசிகர்கள் அந்த குற்றவாளியை பிடித்து நையை புடைத்து போலீசில் ஒப்படைத்துள்ளார்கள் . (ஹே........ அப்பா...... எவ்ளோ....... பெரிய..... வாக்கியம் ...... இருங்க கொஞ்சம் மூச்சு வாங்கிகிர்றேன் ).

நானும் மனிசன் தான் சார் , நானும் இனிமேல் வெட்கம் , மானம். ரோசம், பயிர்ப்பு , பண்பாடு எல்லாத்துக்கும் கட்டுப்பட்டு அவர்களைப் போல் ஒரு நல்ல மனிதனா , குடிமகனா , இந்தயனா வாழ ஆசைப்படுறேன் சார் , என்னை எல்லோரும் ஆசிர்வதியுங்கள் சார் .

-----நன்றி-----

Saturday, October 2, 2010

நானும் எந்திரன் பாத்துட்டனே !!!!! பாத்துட்டனே !!!!! பாத்துட்டனே !!!!!

வழக்கம் நேத்து போல தொழில பாக்க காலைல கார எடுத்துக்கிட்டு மாயாஜால் போனேங்க , தன்க்காளி ஒரே டிராபிக் ஜாம் , ஏகப்பட்ட காருகள் , அந்த கூட்டத்துல ஒரு வழியா போய் கார பார்க் பண்ணிட்டு , நம்ம வழக்கமா பிச்சை எடுக்குற என்ட்ரன்ஸ் பக்கத்துல வந்து குத்தவச்சு உட்கார்ந்து பிஸினெஸ் ஸ்டார்ட் பண்ணேன் , செம கலக்க்சன் சார். அதுல நமக்கு ரெகுலரா பிச்சை போடுற ஒரு பொண்ணு (அண்ணா யுனிவர்சிட்டில இப்ப செகண்டு இயற் படிக்குது ) டக்குன்னு ஒரே சின்ன பிட்டு பேபர போட்டுச்ச்சு , என்னடான்னு பாத்தா "எந்திரன்" படத்துக்கு டிக்கட்டு , சரின்னு நம்ம பிசினச்சுக்கு லீவு விட்டு உள்ள போய் உட்கார்தேன் , எனக்கு பக்கத்து சீட்ல அந்த பொண்ணு கைல பீசா, பர்கர் , மக்ருன்னி கோக் எல்லாம் வாங்கி வச்சுகிட்டு ரெடியா இருந்துச்சு .(யோவ் பட்டாப்பட்டி பன்னாட , படம் பாக்கத்தான் ).

இப்போ எந்திரன் ???????


இது ரஜினி படம் இல்லை , ரஜினி இந்த படத்துல நடிச்சு இருக்கார் அவ்வளவுதான். ரஜினியோட ஸ்டைல்,மேனரிசம், பஞ்ச டையலாக் எதுவமே இல்லை.இது டைரக்டர் சங்கர் படம்.

முதல் பாதி ரோபோ ரஜினி , ஐஸ்வர்யாராய் இவர்களுடன் அருமையாக நல்ல காமடியா ஜாலியா போச்சு . தியேட்டரில் ஒரே விசில் கும்மாளம் . ஆனா செகண்ட் பார்ட் ??????

நீ வெண்ணெய்கட்டி மாதிரி இருக்க , நான் பன்னிகுட்டி மாதிரி இருக்கேன் . (யோவ் பன்னி இது படத்துல வர்ற டைலாக் )

செகண்டு ஆஃப் சொதப்பி எடுத்துட்டாங்க , ஏதோ சின்ன பசங்க வீடியோ கேம் ஆடுறமாதிரி இருக்குது. ஓவர் கிராபிக்ஸ் . வில்லன் ரோபோ ரஜினி மாதிரியே எல்லாம் ரோபோக்களும் வடிவைக்க பட்டது சரியா இல்லை. ரஜினிய வேலைக்கார ரோபோக்களாக பார்க்க நன்றாக இல்லை .வில்லன் ரஜினி ரோபோ தவிர மற்ற ரோபோக்களுக்கு வேறு கெடப் குடுத்து இருக்கலாம் .

செகண்டு ஆஃப்ல தியேட்டர் முழுவது அமைதியாக இருந்தது . ரஜினி ரசிகர்களுக்கு எப்படி ரியாக்ட் பண்ணறதுன்னு தெரியாம கன்பியுஸ் ஆகிட்டாங்க.மொத்தத்துல முதல் பாதியோட என்டர்டைன்மன்ட்ட ரெண்டாவது பாதி கெடுத்திடுச்சு.

டைரக்சன் , கிராபிக்ஸ் , எடிடிங் , முயூசிக் மற்றும் யெல்லாம் டெக்னிகல் சார்ந்த விசயங்களும் சூப்பர் . இந்த படத்திற்கு ரஜினி என்னும் பெரிய்ய மாஸ் ஹீரோ தேவையே இல்லை .

டிஸ்கி : எவனாவது என்கூட படம் பாத்த பொண்ண பத்தி அப்புறம் என்ன ஆச்சுன்னு கேட்டிங்க பிச்சு போடுவேன் பிச்சு