எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Tuesday, November 30, 2010

ரேடியோவுக்குள்ள குட்டி, குட்டி ஆளுங்க

லாங், லாங் யகோ , சோ லாங் யகோ .............

கி.மு-லையா ...

ரொம்ப லாங்கா போயிட்டிங்க கொஞ்சமா பார்வர்ட்

சேர , சோழ , பாண்டியர் காலம் ....

நோ .நோ.....இன்னும் கொஞ்சம் பார்வர்ட்

முஹலாயர்கள் ஆட்சி காலமா ..........

இன்னும் கொஞ்சம்

ஆங்கிலேயர் ஆட்சி காலமா .....

இன்னும் பார்வர்ட்

சுதந்திரம் வாங்கினப்பவா?

ஆங் ..... இன்னும் கொஞ்சம் லிட்டில் பார்வர்ட்

நாயே. நீயே சொல்லித்தொலை

அதாவது 1985 + அப்ப நான் படு பிர்லியட்டான சுட்டிப் பையன் , என்னுடைய கேள்வி ஞானத்துக்கு நோபல் பரிசும் , சுட்டித்தனத்துக்கு ஆஸ்கார் அவார்டும் அப்பவே குடுத்தாங்கன்னா பாத்துக்கங்க .......

என்னுடைய குழந்தை பருவம்தான் " இந்தியாவின் பொற்காலம்" அப்படின்னு மேல் நாட்டு அறிஞர் சுப்ரமணிய சுவாமி (இம் ....அவரேதான் ) கூட சொல்லி இருக்கார்.(மவனே அவன் மட்டும் என் கைல கிடைச்சான்..... ) ,

அந்த கால கட்டத்துல எங்க அப்பா ஒரு ரேடியோ வாங்கிட்டு வந்தாரு , அது பாட்டு பாடுச்சு.............

ஏம்பா ரேடியோவுக்குள்ள குட்டிக் குட்டி ஆளுங்க

இருக்காங்களாப்பா ???

எங்கப்பாவோட
மைன்ட் வாய்ஸ்

"ஒரு லூசு, புள்ளையா வந்து பொறந்துருக்கு"ஓகே ... நௌ, இப்ப (ரெண்டும் ஒண்ணுதாண்டா பன்னாட ) நிகழ காலத்துக்கு வாங்க ...... இப்ப என்னடான்னா எங்க வீட்டு ரேடியோவுல கண்ணாடி வச்சு , அந்த ஆளுங்க எல்லாம் பாடுறது மட்டும் இல்லாம நடிக்கவும் ஆரம்பிச்சிட்டாங்க .....

டெக்னாலஜி இம்ப்ரூவ்டு சோ மச் யா ............

அதுக்கு பேரு கூட இப்ப டி.வி-யாம் இது என்ன அதிசயம்ன்னா எங்க வீட்டு டி.வில இருக்க அதே ஆளுங்க அச்சடிச்ச மாதிரி ஊருக்கு போனா அங்க இருக்க டி.வியிலும் இருக்காங்க . அட அதவிடுங்க ....எங்க சிஸ்டர்ஸ் வீட்டுக்கு போனா அவுங்க டிவியிலும் அச்சடிச்ச மாதிரி அதே மாத்ரி ஆளுங்க ................

உலகத்துல ஒரே மாதிரி ஏழுபேரு இருப்பாங்கன்கிறது நிஜம்தான் போல !!!

என் பையன் மைன்ட் வாயிஸ்

"ஒரு லூசுக்கு போயி புள்ளையா பொறந்திருக்கமே ?????"

Monday, November 29, 2010

ங்கொய்யாலே தமிழனா கொக்கா ????

நல்ல காலை நேரத்தில , செராங்கூன் ரோட்டில (சிங்கபூர்) ‘தம்’ அடிச்சுட்டு நடந்து போயி அனுபவிச்சிருக்கீங்களா?.............இல்லையா?..

அடக்கொடுமையே.. வாழ்க்கையில இதெல்லாம் சிறுசிறு இனபம் சார்.

உடனே, ப்ளைட் டிக்கெட் புக் பண்ணி, போகப்பாருங்க.

இப்ப நான் சொல்லப்போவது, ஒருத்தரை பற்றி.. ஆனா யாருனு சொன்னா, ப..............டிய உருவிவிட்டு அடிப்பான். எனக்கு வன்முறைனாவே, கை கால் , பிரபு தேவா மாறி ஆடும்..

ஆனா, ஜனநாயக கடமைனு ஒண்ணு இருக்கே.. அதைப் பண்ணாட்டி, தெய்வக்குத்தம் ஆகிவிடுமோனு பயந்து, உயிர் பயமில்லாம இங்க பதியறேன்..

அன்று அப்படித்தான், அவரு, தம் அடிச்சுட்டு, அடுத்த எலெக்‌ஷம் முடிச்ஞதும், தமிழநாடு முன்னேறுமா?.. இல்ல பின்னேறுமானு தீவிர சிந்தனை பண்ணிக்கிட்டு போயிட்டு இருந்திருக்காரு..

தும்மல், வந்தா தும்மனும். பிகர் வந்தா சைட் அடிக்கணும் , கடன்காரன் வந்தா ஓடி ஒழியனும் .. அதுபோல, சிகரெட் குடிச்சு முடிஞ்சதும், என்ன பண்ணுவோம்?????.

தூக்கி வீசுவோம்.. (குட அலர்ட்டா தான் இருக்கீங்க )

சராசரி மனிதனா, அதைதான் பண்ணியிருக்காரு நம்ம தலைவரு..

ஆனா..வந்து சுத்தி வளைச்சிடானுக ஆபீஸர்ஸ்.. நம்ம தலைவரு.. என்னாடா, குண்டு வீசினமாறி பயப்பட்டு, இவ்வளவு பேர் வந்திருக்கானுக?. என்னா விசயம்னு கேட்க, அவனுக , ஒரு வெள்ளப்பேப்பர்ல, அவரு பேரு, வயசு..கட்டவேண்டிய பைன்னு எழுதி கொடுத்திட்டு , அடுத்த ஆளை பிடிக்க போயிட்டாங்க..


அவரும். சரி கர்மத்தை கட்டிடலாமுனு பார்த்தா, அய்யோ... $500..
(ஹா.ஹா.. ரெண்டாவது தடவை மாட்டினா, $500ஆம்.. முதல் முறை குற்றத்துக்கு , $300.. நம்ம தல, போன வருஷமே, மாட்டி, $300 கட்டின பார்ட்டி.. ”பழைச மறக்கனுமு”னு, பதிவுலகத்தில யாரோ சொன்னதை கேட்டு, அதையும் மறந்துவிட்டது போல.. ஹா.ஹா. )

விதி கொடியது.. கட்டலேனா, கோர்ட் போகனும் .. அங்க போனா, ஈசியா $2000 கட்டச்சொல்லுவாங்க.. வேற வழியில்லாம $ 500 கட்டுனாரு


இவனுகள எப்படிடா பழிவாங்குரதுன்னு நம்ம தலைவரு ரெண்டுநாள் ரூம் போட்டு யோசிச்சாரு . (ரெண்டுநாள் ரூம் வாடகை $1400 , பரவாயில்ல விடு நமக்கு மானம் தான முக்கியம் )

கடைசில பளீர்ன்னு மூளைல பலப் எரிஞ்சது , நேரா கிளம்பி சந்தோசா ஐலேண்ட் போனாரு , அங்க போயி நைசா பார்க்குள்ள ஒரு வாட்டு உச்சா போனாரு, அப்படியே ஒரு கூல்ட்ரிங்க்ஸ் குடிச்சிட்டு(?????) ஒரு தம்ம போட்டாரு . இந்த தம்ம கரக்ட்டா டஸ்ட்டு பின்னுள்ள போட்டு மறுபடியும் அந்த பார்க்குள்ள போயி உச்சா போனாரு .

ஹா,ஹா.ஹா,............ இப்போ அவனுகளையும் பழிவாங்கியாச்சு , $700 டாலரும் மிச்சம் பண்ணியாச்சு . தக்காளி யாருகிட்ட விளயாடுரிங்க நாங்கல்லாம் தன்மான தமிழர்கள் ....விடுவமா ....ம்ம்ம்ம்ம்..........

எனக்கு மண்ட காஞ்சு போச்சு என்னா தல எப்படி $700 மிச்சம்ன்னு கேட்டேன் .....

அது வேற ஒன்னும் இல்லை இங்க உச்சா போனா முதல் வாட்டி $500 பைன் , ரெண்டாவது வாட்டு $1000 டாலர் பைன் , நான் பைன் கட்டாம ஏமாத்தி ரெண்டு வாட்டி உச்சா போயிட்டேன் . அப்போ நமக்கு $1500 லாபம் , முன்னாடி தம்மடிச்சதுக்கு $800 கட்டினேன் ....இப்ப கூட்டி கழிச்சு பாரு கணக்கு சரியா வரும்

அடங்....ங்கொன்னியா எப்படியெல்லாம் யோசிக்கிராணுக

Thursday, November 25, 2010

லிவிங் டுகெதர் (18 +)

உஸ்.................... அப்பா முடியல ..................... என்னத்த எழுத ................அதான் எல்லாம் பிரிச்சு மேஞ்சு , தொவைச்சு காயப்போட்டாங்க .

நாமளும் இதைப்பத்தி ஒரு பதிவு போட்டு எப்படியும் பிரபல பதிவரா ஆயிடனும்.

சீரியஸ்ஸா எழுதலாம்ன்னு பாத்தா நம்ம வெங்கட் போன் போட்டு கண்டபடி திட்ராப்ள அதுவும் கன்னடத்துல ............... ஏதோ கெட்ட வார்த்தைன்னு தெரியுது ஆனா அர்த்தம்தான் புரிய மாட்டேங்குது . கூட டெர்ரர் வேற அருவாளோட சுத்துறான்.

சரி காமடியா எழுதலாமுன்னா நம்ம பிராபள பிரபல வெளிநாட்டுப் பதிவர் ( பட்டாப்பட்டி தான் - ஆஃப் ரெகார்டா வச்சுக்கங்க,) வேற ஒழுங்கா தப்புல்லாம தமிழ்ல எழுதுடான்னு " @#@$@#%$" இப்படி திட்றாரு , அது என்ன லாங்குவேஜ்ன்னே தெரியல? ...அப்புறம் எப்படி அர்த்தம் புரியும் . நான் என்ன வச்சுகிட்டா வஞ்சகம் பன்றேன், சட்டில இருந்தாத்தானே அகப்பைல வரும் .

சரி என்னதான் மேட்டர் ,

லிவிங் டுகெதர் - அப்படின்னா ஆண்களும், பெண்களும் நிறையா பேரு காண்டம் பாக்கட்டோட வரிசைல நிக்கிறதா நிறைய பேரு நினச்சுகிட்டாங்க . இன்னைக்கு ஒரு ஆளோட செக்ஸ் , நாளைக்கு வேற ஆளோட செக்ஸ் அப்படின்னு எல்லாரும் செக்ஸ் மட்டுமே அடிப்படைன்னு நினைச்சுக்கிட்டு சண்டைக்கு வர்றாங்க.

அங்க யாரும் ஆறுமாசம்தான் உன்னுடன் சேர்ந்து வாழ்வேன் என்று முடிவு செய்துகொண்டு வாழ்வதில்லை. அவர்கள் வாழ்க்கை ஆரம்பிக்கும் போது கடைசிவரை ஒன்றாக வாழவேண்டும் என்று நினைத்துத்தான் வாழ்க்கையை தொடங்குகிறார்கள் .ஆனால் அவர்களுடைய தனிமனித சுதந்திரம் சிறு கருத்து வேறுபாடு வந்தால் கூட பிரிந்து செல்லும் மனநிலையை தருகிறது . அவர்கள் அந்த வாழ்க்கையில் பழக்கப்பட்டவர்கள் .

நம் ஒரு தலைமுறையால் அவர்களது வாழ்க்கைமுறையில் உள்ள தவறுகளையும் அதனால் ஏற்படும் இழப்புகளையும் தெரிந்துகொள்ள முடியாது .

லிவிங் டுகெதர் வாழ்க்கை முறையில் நம்மை மிகவும் ஈர்ப்பது அவர்களுடைய தனிமனித சுதந்திரம்தான் . நமது கலாச்சாரத்திலும் தனிமனித சுதந்திரம் , முக்கியமாக பெண்களுக்கு அதிகரித்துக்கொண்டே வருகிறது .

உடன்கட்டை ஏறுதல் , பாலியல் திருமணம் , விதவைகள் மறுமணம் , விவாகரத்து இதெல்லாம் கலாச்சார சீரழிவுன்னு மிகக்கடுமையா எதிர்த்த காலம் போயி இப்ப உடன்கட்டை ஏறுதல் , பாலியல் திருமணம் செய்தாலோ விதவைகள் மறுமணம் , விவாகரத்து செய்வதை தடுத்தால் குற்றம்ன்னு அதுக்கு எதிரா சட்டமே கொண்டுவந்தாச்சு .

லிவிங் டுகெதர் தப்பாக போனால் அதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். நமது திருமண முறையில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சொந்த பந்த சுற்றத்தாரின் பாதுகாப்பு உண்டு .


இன்னும் நம்மிடம் உள்ள வரதச்சனை கொடுமைகள் , ஆணாதிக்கம் போன்றவற்றை தவிர்த்துவிட்டால் இன்னும் சிறப்பான வாழ்க்கைமுறை அமையும்.

நம்மால் நமது பருவத்தை தவிர , குழந்தைப்பருவம் , வயது முதிர்ந்த பருவங்களில் அவர்கள் வாழும் வாழ்க்கையை வாழமுடியாது .

ஆனால், பெண்கள் தங்கள் சுயமாக கடைசிவரை வாழும் நிலை வரும்போது நாம் விரும்பினாலும் , எதிர்த்தாலும் மாற்றங்கள் வந்தே தீரும்.


நீதி : ஹி.ஹி.ஹி......யாராவது புரிஞ்சா சொல்லுங்க
.

Tuesday, November 23, 2010

சரியான லூசுப் பசங்க சார்

ட்ரைன்ல ஊருக்கு போயிகிட்டு இருந்தேன் சார் , காலைல 10 மணிக்கு விழுப்புரம் ஸ்டேசன் வந்தது ,அட பதிவு போடுற டைம் ஆச்சேன்னு நானும் நேர டிரைவர் கிட்ட போயி சார் ஒரு அரைமணி நேரம் நில்லுங்க நான் போயி ஒரு பதிவு போட்டு வர்றேன் கேட்டேன் , அந்த ஆளு என்னைய ஏதோ பைத்தியத்த பாக்குற மாதிரி பாத்துட்டு ஸ்டேசன் மாஸ்டர் கிட்ட போயி கேட்க்க சொன்னாரு .

நானும் நேரா ஸ்டேசன் மாஸ்டர்கிட்ட போயி கேட்டேன் அந்த ஆளு என்ன கோவத்துல இருந்தானோ டக்குன்னு வேலைய ரிசைன் பண்ணிட்டு ஓடிட்டான் , இதென்னடா வம்பாப் போச்சுன்னு அவரு பக்கத்துல இருந்த ஆளுகிட்ட கேட்டேன் , அவரு அதெல்லாம் நிக்க முடியாது சார் நீங்க வேணுமின்னா ட்ரைன் போயிகிட்டு இருக்கும் போதே பதிவு போட்டுக்கங்கன்னு சொன்னாரு .

சரியான லூசுப் பயலுக சார் , ட்ரைன்ல சிஸ்டத்த கொண்டுபோனா சென்னைல இருந்து மதுரை வரைக்கும் அவ்ளோ பெரிய வயருக்கு நான் எங்க சார் போவேன் ?(கேபிள் சங்கர் சார் கிட்ட தான் கேட்டுப்பாக்கணும் )

-----#####-----

அப்புறம் நம்ம பிரண்டு ஒரு பய சார் , கூடப் படிச்ச பய , சின்ன வயசுல நம்மள மாதிரி பிர்லியன்ட் கிடையாது , அவனுக்கு சரியா படிப்பு வராது . பாவம் 10th ல டிஸ்ட்ரிக்ட் பஸ்ட்டு மார்க் எடுத்து ஸ்கூலோட பேர கெடுத்துட்டான் . ஸ்கூல்ல அவனுக்கு +1 சீட்டு தரமாட்டேன்னு சொல்லிட்டாங்க . அப்புறம் நாங்கல்லாம் போயி சாரி சார் இனிமே நல்லா படிப்பான்னு ரிகமன்ட் பண்ணி மறுபடியும் ஸ்கூல்ல சேத்தோம் .

அந்த பரதேசி பன்னாடப்பய மறுபடியும் +2 ல டிஸ்ட்ரிக்ட் பஸ்ட்டு வந்து மறுபடியும் ஸ்கூல் பேர நாரடிச்சிட்டான் . இது தெரிஞ்ச எங்க ஊரு காலேஜுல அவன சத்தியமா சேக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க . அப்புறம் என்ன நாங்க எங்க ஊரு காலேஜுல ஜாலியா படிச்சோம் , அவன் போயி மதுரைல ஏதோ மெடிகல் காலேஜாமே ?? அதுல சேந்தான் . பாவம் சார் எம்.பி.பி.எஸ் முடிச்ச உடன் நீ சரியா படிக்கிறதில்ல இன்னும் படிக்கனுமின்னு சொன்னாங்க , உடனே பி.ஜி எங்க காலேஜுல சேர வந்தான் . அப்பவும் சேக்கல , அப்புறம் வேற வழியில்லாம சென்னை மெடிகல் காலேஜுல எம்.எஸ் முடிச்சான் .

அதுக்கப்புறம் ஏதோ ஒரு என்ட்ரன்ஸ் எக்ஸாம் இருக்காம் அத எழுதி ஸ்டேட் பஸ்ட்டு வந்து நம்ம ஸ்டேட்டையே அசிங்கப் படுத்திட்டான் . அப்புறம் கவுருமெண்ட்டு இனிமேயாவது ஒழுங்கா படின்னு ஏதோ கேன்சர பத்தி படிக்கிற படிப்பு குடுத்து இருக்காக .

அந்த முட்டாப் பய போன் பண்ணி கார் வாங்கி இருக்கேன் வாடா ஜாலியா வெளிய போயிட்டு வரலாமுன்னு சொன்னான் , சரிடா வாடான்னு சொன்னேன் , அவனும் கார எடுச்சுக்கிட்டு வந்தான் , காருக்குள்ள உட்காந்தா கிடுகிடுன்னு நடுங்குன் அவ்வளவு புல் ஏ.சி ஓடிகிட்டு இருக்கு . காசுவந்த கொழுப்புள இவ்ளோ ஏ.சி வச்சிருக்கான்னு அவன பாத்தா அவனும் நடுங்கிக்கிட்டு இருக்கான் .

டக்குன்னு ஏ.சிய குறைச்சேன் , அதுக்கு அவன் கேட்டாம் பாருங்க ஒரு கேள்வி ..............

"ஏன் மச்சான் ஏ.சிய குறைக்கலாமா ?" இது தெரியாம நான் இவ்ளோ நேரம் நடுங்கிட்டே வந்தேன்டா " (இது நெஜம்மா நடந்துச்சு சார் , நான் தலைல அடிச்சுக்கிட்டேன் )

ஆனா எங்க போனாலும் பில்லுக்கு காசு மட்டும் என்னைய கொடுக்க வச்சிடுறான் சார் , இதுல மட்டும் எப்படி இவ்ளோ விவரமா இருக்கான்னு தெரியல ????

Friday, November 19, 2010

பில்லி , சூனியம் , ஏவள்......???

நைட்டு ஒரு மணி - திடீர்ன்னு என் போன் ரிங் ஆச்சு , நமக்கு இருட்டுன்னாலே பயம் , பகல்ல கூட கருப்பு கலர கண்டா பயப்படுவேன் , டு ராத்திரில போன்..... பயந்துகிட்டே எடுத்தேன் ......

"ஹலோ "

"ஹலோ சார் நாங்க ICICI Bankல இருந்து பேசுறேன் , உங்களுக்கு Axis Bank கிரடிட் கார்டு வேணுமா சார் "

"என்னது ICICI Bank ல Axis Bank கிரடிட் கார்டா ??? "(அழகான ஸ்வீட் வாய்ஸ்ல ஒரு பொண்ணு பேசிச்சு , அந்த ஸ்வீட் வாய்ஸ் நால என் போன்ல எறும்பு மொய்க்க ஆரம்பிச்சதுன்னா பாத்துக்கங்க )

"ஆமா சார் , பிளாட்டினம் கார்டு தர்றோம் "

பிளாட்டினமா? அது விலை ஜாஸ்த்தி ஆச்சே ? சரி வாங்கி வித்திடலாமுன்னு ஒரு ஐடியாவோட -

"அது சரி
ம்மா இந்த டு ராத்திரில போன் பன்ற?"

அதுக்குள்ள டக்குன்னு ஒரு ஆண் குரல் - "சாரி சார் , என்பொண்ணு தான் அது , கால் சென்டர்ல வொர்க்பன்றா அதோட தூக்கத்துல பேசுற வியாதி இருக்கு , அதான் தூக்கத்துல போன் பண்ணிட்டா ரொம்ப சாரி சார் "

அடப்பாவிகளா ..... புதுசு புதுசா டார்ச்சர் பன்ரானுகளே .......... சரின்னு மறுபடியும் தூங்கினேன் ............

கொர்,கொர்,கொர் ................ (அட தூங்குறேன் சார்)

மறுபடியும் போன் ரிங்காச்சு .....ஆகா அந்த பொண்ணுதான்னு நினைச்சுகிட்டு போன் எடுத்து....

"ஹலோ "

"ஹலோ , சார் நாங்க கேரளா பேய் மாந்தரீக கம்பனில இருந்து பேசுறோம் , செல்லமா வீட்ல வளக்க குட்டி பேய் ஏதாவது வேணுமா சார் ?"

என்னது பேயா ? எனக்கு கை கால் எல்லாம் ஆடிப்போச்சு ,போன்ல மொச்சுக்கிட்டு இருந்த எறும்பெல்லாம் தெறிச்சு ஓடிப்போச்சுக , பாருங்க அது பேசுற டைலாக்கூட கருப்பு கலர்ல இருக்கு

"என்னம்மா , என்ன சொல்ற ?"

"இல்லைங்க சார் நாங்க வீடுகள்ல செல்லமா வளக்க குட்டி நாய் மாதிரி குட்டி பேய் சப்ளை பன்றோம் சார் "

"யம்மா , எனக்கு அதெல்லாம் வேணாம்மா" (நடுங்கிக்கிட்டே பதில் சொன்னேன் )

"பரவால்லிங்க சார் நீங்க யாருக்காவது பில்லி , சூனியம் , ஏவள் பண்ணுமா இல்ல முட்டை மந்திரிச்சு வைக்கணுமா சார் ?"

(எனக்கு தலைக்குள்ள பளீர்ன்னு லைட் எரிஞ்சிச்சு , அட துக்கெல்லாம் இப்ப மார்கெட்டிங் பண்ண ஆரம்பிச்சிட்டாங்களா ? வெரி குட் , இதுதான் நல்ல சான்ஸ்...... நிறைய பயபுள்ளைக பிளாக்கு தக்காளி இன்னைக்கு சூனியம் வச்சிர வேண்டியது தான் )

"ஆமாங்க மேடம் அதுக்கு ன்னா பார்மாலிட்டி ?"

ஹா,ஹா,ஹா,...............மக்களே டீலிங் பேசி முடிச்சிட்டேன் , இந்த மனுஷனுக்கு வக்கிரத்துக்கு தலைமுடி , பழைய டிரஸ்சு , காலடி மண்ணு மாதிரி பிளாக்கு சில ஐட்டங்கள் உங்க பிளாக்குல இருந்து திருடிட்டு இன்னைக்கு நைட் ரெண்டுமணிக்கு சுடுகாட்டுக்கு வரச்சொல்லிருக்கு ........... ஹா.ஹா.ஹா.....நாளை முதல் உங்கள் பிளாக் ............ஹா.ஹா.ஹா..........

Thursday, November 18, 2010

குலதெய்வ கோவில்ல கிடாவெட்டு

லீவுக்கு ஊருக்கு போயிருந்தப்ப பக்கத்து ஊரு பிரண்டுகிட்ட இருந்து போன்வந்துச்சு

"ஹலோ......... சொல்றா மாப்ள "
"மச்சான் நான்தான் , என் குழந்தைக்கு காதுகுத்து வச்சிருக்கேன் , வந்திடு "
"எங்க? "
"குலசாமி கோவில்ல "
"அது எங்க இருக்கு? "
"நம்ம கானா விளக்கு ஜங்சன்ல லெப்ட்டு எடுத்து ஒரு 12 கிலோ மீட்டர் உள்ள வந்தா ஒரு பெரிய்ய ஆறுவரும் அந்த ஆத்தங்கரைலதான் கோவில் இருக்கு , நாங்க எர்லி மார்னிங் கிளம்பிடுவோம் நீ நம்ம சிவா கூட வண்டில வந்திடு , ரோடு கொஞ்சம் மோசமா இருக்கும் பாத்துவா "
"கிடா வெட்டு இருக்கா"
"ஆமா"
"ஓகே டா"

ஆஹா , இன்னைக்கு எப்படியும் கிடாவெட்டுவாங்க விருந்துல போயி ஒரு கட்டு கட்டனுமின்னு காலைல இருந்தே பச்ச தண்ணி கூட பல்லுல படாம பாத்துகிட்டேன் .

நான் சிவாவுக்கு போன் பன்னி கண்பார் பன்னிக்கிட்டேன், ஒரு 11 : 30 கிளம்பலாம்ன்னு பிளான் .

கரக்ட்டா சிவாவும் வண்டிய எடுத்துகிட்டு வந்துட்டான் , வண்டிய பாத்ததும் பயங்கர சாக் ஆகிட்டேன்

"என்னடா மாமா வண்டில ரெண்டு வீல் தான் இருக்கு மீதி ரெண்டுவீலக்காணோம்?"
"நாயே..... இது பைக் ரெண்டுவீல்தான் இருக்கும் "
"ஓ........ சாரிடா மாமா , வண்டின்னதும் நான் காருன்னு நினைச்சிட்டேன் "

சரின்னு கிளம்பி போனோம் . சரியான வெயில் அடிச்சு ...

"மாமா ஓவரா வெயிலா இருக்கு கொஞ்சம் ஏ.சிய போடு "

அவன் ஒண்ணுமே சொல்லல , வண்டிய ஓரமா நிப்பாடி பின்னாடி திரும்பி பளார்ன்னு என் கன்னத்துல ஒன்னு விட்டான்.

"இனிமே வாயத்தொறந்த மவனே உனக்கு இன்னைக்கு என் கைல தாண்டா சாவு ."
(எனக்கு கொய்ய்ய்ன்னு காதுக்குள்ள ஒரு சத்தம் , பைக்ல ஏ.சி இல்லன்னா வாயில சொல்லலாமுல்ல .......... என்னா கோவக்காரனா இருக்கான்? .)

கானா விளக்கு லெப்ட்டுல கட்பண்ணி போனோம்.. போனோம்... 15 கிலோ மீட்டர் போயிட்டோம் , ஒரு ஆறு ஐயும் காணோம் , ரோடு மோசமாவெல்லாம் இல்லை படு கேவலமா இருந்துச்சு . அங்க இருந்த நம்ம பயலுக்கு போன் பன்னி என்னடான்னு கேட்டோம் . அவனும் கோவிலுக்கு போற வழியில இருக்க ஒவ்வொரு அடையாளமா சொல்லி அதெல்லாம் பாத்திங்கலான்னு கேட்டான் . நாங்க அவன் சொன்ன அடையாளம் ஒன்னகூட பாக்கள் , கடைசீல என்னான்னு பாத்தா கானா விளக்குல இருந்து ரைடல போகணும் .

அந்த நாயி ஊர்ல இருந்த வரும்போது கானாவிலக்கு கோவிலுக்கு லெப்ட்ல கட் பண்ணனும் , எங்க ஊர்ல இருந்து வரும்போது கோவிலுக்கு ரைட்க கட் பண்ணனும் .

சரின்னு திரும்பி மறுபடியும் கானாவிலக்கு வந்து , சரியான ரூட்ட புடிச்சு நாங்க போயிசேர 4 :30 மணி ஆயிடுச்சு , அங்க எல்லாம் சாப்ட்டு பாத்திரபண்டத்தைஎல்லாம் கழுவி வச்சிட்டு கிளம்பிக்கிட்டு இருந்தாங்க . கடைசில ரசம் சோறு கூட கிடைக்கல . (கடவுள் இருக்கார் சார் )

அப்புறம் என்ன பன்றது ஆத்துல ஓடுன பச்ச தண்ணியத்தான் குடிச்சோம் .

Tuesday, November 16, 2010

மீருக்கு தெலுங்கு தெரியுமா....லூ........?

/////////டியர் பிரண்ட்ஸ் - மன்னிக்கவும் - ஆக்சுவலா தமிழ்மணம் இந்த மாதிரி வாரா, வராம் பெஸ்ட்டு பிளாக்கர்ஸ் லிஸ்ட்டு போட்டா நம்ம பசங்க எல்லாம் இன்னும் தலைய பிச்சுக்கிட்டு சிஸ்டம் முன்னாடியே இருப்பானுகன்னு நேத்து சொல்லவந்தேன் .......கடைசில அது வேற ஒரு அர்த்தமா வந்திருச்சு ....... எனக்கே வாழ்த்து சொல்லி கமண்ட்ஸ் வர வரத்தான் புரிய ஆரம்பிச்சது ....ஒரு சுயதம்பட்டம் அடிச்சமாதிரி ஆகிப்போச்சு , ரொம்ப சாரி - எனக்கு புடிக்காத விஷயம் இது . ////////////


நேற்றைய பதிவில் கடைசியில் நம்ம வினு போட்ட காமன்ட்சுக்கு ஒரு சிறு விளக்கம் .


வினு நான் ஒரு விஷயம் சொல்றேன் அப்புறம் உங்க கருத்து சொல்லுங்க. அந்த என்கவுடர் நடந்த அன்று காலை எனது நண்பர்களுடன் டீக்கடையில் டீ சாப்பிடும் போது இந்த டாபிக் வந்தது , கடைல மொத்தம் சுமார் ஒரு 15 பேருக்கு மேல இருந்தாங்க , அதுல முக்கால்வாசிப்பேர் என்கவுன்டர் சரின்னும் மீதிப்பேர் என்கவுன்டர் தப்புன்னும் விவாதம் பண்ணினாங்க . சரின்னு சொன்னவுங்க எல்லாம் உணர்ச்சிப்பூரவமாதான் பேசினாங்க தப்புன்னு சொன்னவங்க உண்மையிலே நியாயமா விவாதம் பண்ணினாங்க .

உண்மையில் மக்கள் என்ன நினைக்கிறாங்கன்னு தெரிஞ்சிக்கிரனுமின்னு எனக்கு ஆர்வம் அதிகமாயிடுச்சு , அதற்காகத்தான் அந்த பதிவு . ஏன் ஒட்டு போடச்சொன்னேன்னா , டெயிலி நிறைய பேர் வந்து படிச்சிட்டு சும்மா போயிடுறாங்க (ஹிட்ஸ் பாத்திங்கன்னா தெரியும் ) அவுங்களோட கருத்து என்னன்னு தெரிஞ்சுக்கிரனுமின்னு தான் ஒட்டு போடச்சொன்னே . அந்த பதிவில் வந்த பின்னூட்டங்களில் எவ்வளவு விவாதம் நடந்தது ??? நிஜம்மா அத வச்சு நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டேன் .

நிறையா ஒட்டு வாங்கி பிரபலமாகனும் என்பது என் நோக்கம் இல்லை .

--------------@@@@@-------------

ஓகே இப்ப நம்ம மேட்டருக்கு வருவோம்

இன்னைக்கு காலைல என் வைபுக்கு போன் வந்தது , அவளோட பிரண்டு ஆந்திராவுல இருந்து பேசினாங்க . போன்ல 45 நிமிஷம் பேசுறாங்க . இதுல என்ன பெரிய ஆச்சரியம்ன்னு கேட்டிங்கன்னா ????

அந்த பொண்ணுக்கு சுத்தமா தமிழ் தெரியாது , என்னோட வீட்டுகாரம்மாவுக்கு சுத்தமா தெலுங்கு தெரியாது , இவுங்க ரெண்டுபேருக்கும் இங்கிலீசு கொஞ்சம் அரகொற ......... இல்லை ரொம்ப கொரகொர .

இன்னைக்கு காலைல நான் மூணு தோசை சாப்பிட 45 நிமிஷம் ஆச்சுங்க , போன காதுல வச்சுகிட்டு இங்க கைல சைகை பண்ணுறாங்க . அதாவது சைகைலே போன்ல பேசுறாங்க . (என்ன கொடும சார் இது )

எங்க வீட்டு பக்கத்து வீட்டுக்கு புதுசா குடி வந்த தெலுங்கு பேமிலி பொண்ணு தான் அது . ரெண்டு பேரும் பிரண்ட்ஸ் . பேச்சு வார்த்தை எல்லாம் சைகைலேதான் . அத பாத்தா செம காமடியா இருக்கும் , நான் அத பாத்துட்டு ஊட்டில போயி ரூம் போட்டு ரெண்டுநாள் சிரிச்சிட்டு வந்தேன்னா பாத்துக்கங்க .

நேர்லே ஒழுங்கா பேசமுடியாது சைகைலதான் பேசுவாங்க , இந்த நிலைமைல போன்ல 45 நிமிஷம் .

அவுங்க பேசிக்கிட்டே சில வார்த்தைகள்

டூ மெம்பர்சு கம்முலூ......வா .........

ரெயின் ஸ்டார்ட் கஷ்டமா......லூ ..........

மீரு அப்பாலு செப்புனான்களா...........

Monday, November 15, 2010

தமிழ்மணம் - பத்தவச்சிட்டியே பரட்ட ???

ஏற்கனவே இங்க பலபேரு பைத்தியம் புடிச்சு பாயபிராண்டிகிட்டு இருக்கான் , இதுல தமிழ்மணம் வேற கைல கொள்ளிகட்டைய கொடுத்து தலையசொரிய சொல்றாங்க . அதாங்க .................

கடந்த ஏழு நாட்களில் முதல் 20 இடம் பெற்ற வலைப்பதிவுகளின் பட்டியல்

பிரண்டுக்கு லவ் லெட்டர் குடுக்கப்போயி , அந்த பிகர் நமக்கே உஷாரான கதையா(அட......... பழமொழி மங்கு பின்றடா) எதார்த்தமா போனவாரம் சீரியஸ் மேட்டர் நடக்க நம்மள தூக்கி ரெண்டாவது பிளேஸ்ல வைக்கக்கூடிய அசம்பாவிதம் நடந்து போச்சு . நானெல்லாம் காமடி பீசு சார் , அந்த அளவுக்கெல்லாம் ஒர்த் இல்லைங்க சார் .............. (மங்கு பீ கேர்புல் மறுபடியும் இந்த மாதிரி அசம்பாவிதம் நடக்காம பாத்துக்க )

///இடைச்செருகல் - இவ்ளோ பெரிய அங்கீகாரம் கொடுத்த தமிழ்மணத்திற்கு ரொம்ப நன்றி ////

நம்ம பன்னிகுட்டி ராமசாமி 24 மணிநேரமும் 365 நாளும் சிஸ்டம் முன்னாடியே தான் இருக்கான் , அவன் எப்ப சாப்புடுறான் எப்ப தூங்குறான்னு யாருக்குமே தெரியல . சங்கர் கிட்ட சொல்லி எக்ஸ்ட்ரா ரெண்டு கை பிட்பன்னிருப்பான் போல .....................


போனவார சீரியஸ் பதிவா பாத்துட்டு நம்ம டெர்ரர் பாண்டி வேற

"அவன நிறுத்தச்சொல் நாள் நான் நிறுத்துறேன்னு "

கைல ரெண்டு ஆள் உயர வீச்சு அருவாளோட "அவனுக்கு என்கையாலதான் சாவுன்னு" கொலவெறியோட நம்மள தேடிக்கிட்டு இருககானாம் .


சரி இப்ப என்ன பண்ணலாம்?

தமிழ்மணம் செய்யிறது சரியா ? தவறா ?


சரி என்பவர்கள் பாசிடிவ் ஓட்டும்

தவறு என்....................ஐயோ...... , ஐயையோ...... , ஐயோ .............டேய் நிறுத்துங்கடா , நிறுத்துங்கடா .............. ஸ்டாப் இட் ..........

எவன்டா பேசிகிட்டு இருக்கும்போது அடிக்கிறது , பிச்சுபோடுவேன் பிச்சு , பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் ,

சின்னப்புள்ளத்தனமா இருக்கு ...............ஒரு புள்ளபூச்சிய போட்டு அடிக்கிறிங்க ....அப்புறம் கொலகேசுல உள்ள போயிடுவிங்க ஜாக்கிரத ...............நான்தான் சொல்றன்ல இனிமே அந்த அசம்பாவிதம் நடக்காதுன்னு ......

Saturday, November 13, 2010

அவசர உதவி 108

உண்மையில் அவசர உதவி 108 மிகச்சிறப்பாக சேவை செய்கிறது . எங்கிருந்தாலும் உடனடியாக வந்து உதவுகிறார்கள் . பல ஏழைகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன .

எனது நண்பர் கூறியது :

நேத்து சாலிகிராமம் பிரசாத் ஸ்டுடியோ பக்கத்துல ஒரு வயதானவர் மீது கார் மோதி விட்டது , பெரியவருக்கு நல்ல அடி , உடனே பப்ளிக் 108 போன்பன்ன ஆம்புலன்ஸ் உடனே வந்து விட்டது . ஆம்புலன்சில் வந்த ஊழியர்கள் அந்த பெரியவரை ஹாஸ்பிடல் கூட்டிச்செல்ல மறுத்தனர் .

காரணம் அந்த பெரியவர் உடம்பில் இருந்து இரத்தம் வரவில்லையாம் ?????????


இரத்தம் வந்தால் தான் ஏற்றிச்செல்வோம் என்று கூறியுள்ளனர். அங்கிருந்த பொதுமக்கள் வாக்குவாதம் செய்யவும் அந்த ஊழியர்கள் அவர்களது மேலதிகாரிகளிடம் போனில் பேசிவிட்டு சரி கூட்டிட்டு போறோம் நீங்கள் யாரவது கூடவந்து டாக்டரிடம் சாட்சி சொல்லுங்கள் என்று கூறியுள்ளனர் .................நம்ம பொதுஜனங்கள் வழக்கம்போல பின்வாங்க ....................................

அதற்குள் நமது நண்பரும் உதவிபன்னமுடியாத நிலையில் அங்கிருந்து கிளம்பி விட்டார் . பின் என்ன நடந்தது என்று தெரியவில்லை ??????

இதே போல் சில மாதங்களுக்கு முன் கோம்பையில் ஆற்றில் குளிக்கும் போது சிறுவன் ஒருவன் மூழ்கிவிட்டான் என்ற செய்தி கேட்ட உடன் ஆம்புலன்ஸ் வந்துவிட்டது , ஆனால் சிறுவன் இறந்து விட்டான் , இறந்த சிறுவனின் உடலை ஏற்றிச்செல்ல 108 மறுத்துவிட்டதாம்.


விபத்தில் அடிபட்டு ரத்தம் வந்தால்தான் கூட்டி செல்வார்களா ?

காப்பாற்றும் போது இறந்தால் அந்த உடலை கொண்டுசெல்ல கூடாதா ?

இப்படியெல்லாம் ரூல்ஸ் இருக்கா ?

அப்போ ஹார்ட் அட்டாக் வந்தால் என்ன பன்றது?

இந்த சின்ன சின்ன குறைகளை நிவர்த்திசெய்தல் இன்னும் சிறப்பாக 108 -ன் சேவை இருக்கும் .


Wednesday, November 10, 2010

என்கவுன்டர் - எனது கருத்து

என்கவுண்டர் முறையில் மோகன்ராஜ் சுட்டுக்கொல்லப்பட்டது தப்புதான், பொதுமக்கள் மத்தியில் அடுத்து இந்த மாதிரி தப்பு பண்ணலாமான்னு யோசிக்கிறதுக்கு கூட பயப்படுறமாதிரி கொடூரமா கொன்னு இருக்கணும்.

///damildumil said... இந்த சம்பவத்தில் அவனுக்கு சிறிதளவு பங்கு இருந்தாலும் அடித்தே கொல்ல வேண்டிய நாய் தான் அது///

இவன் மாதிரி கொடூர கொலை செய்யும் முதல் குற்றவாளிகளை எவ்கவுண்டர் செய்வது இது முதல் முறை அல்ல . முன் ஆந்திராவில் ஒரு கல்லூரி மாணவி மீது ஆசிட் ஊற்றி கொலைசெய்த இரண்டு மாணவர்கள் என்கவுண்டர் செய்யப்பட்டார்கள்.

இந்த கருத்துக்கணிப்பில் ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் குற்றவாளி கடுமையா தண்டிக்கப்படனுமின்னு தான் சொல்லிருக்காங்க , அதுல சிலபேர் என்கவுண்டர் முறைக்கு எதிரா வோட்டு போட்டு இருக்காங்க , குற்றவாளிக்கு ஆதரவா இல்லை , இப்படி என்கவுன்டரை ஆதரித்தால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்று கூறுகிறார்கள்.

போலீஸ் என்ன காலைல ஒன்னு சாயந்திரம் ஒண்ணுன்னு டெய்லி என்கவுண்டர் பன்றாங்களா ?

உண்மைய சொல்லனுமின்னா என்கவுட்டருக்கு பயந்து தான் பல ரவுடிகள் ஒழுங்கா இருக்கானுக . இதில் மாற்றம் வரணும்ன்னா சட்டம் மிகக் கடுமையாக்கப்படும் , தண்டனைகளை பார்த்து அடுத்து தப்பு செய்ய பயப்படனும் .

முதலில் இது முதல் என்கவுண்டர் அல்ல , இதற்கு முறை பலமுறை நடந்துள்ளது . இப்ப யாரு சார் சட்டத்திற்கு பயப்படுறாங்க?, எந்த அரசியல் வாதி , எந்த தொழில்முறை ரவுடி சட்டத்திற்கு பயப்படுகிறான்?. கொலை செய்து விட்டு கூட்டாக தைரியமாக கூலா போயி நீதிமன்றத்தில் சரணடைந்து விடுகிறார்கள் .இப்ப போலீசே அரசியல் வாதிகளுக்கு ரவுடிகளுக்கு பயந்து பணிந்து வேலைசெய்ய வேண்டி உள்ளது.

என்கவுண்டர் அல்லாத அனைத்து குற்றவாளிகளுக்கும் மிக நியாயமான தண்டனை கிடைத்து விட்டதா ? இல்லையே .................

போலீசார் & பத்திரிக்கையாளர்கள் கூட்டணி இருக்கு , விசாரணைக்கு பின்னால் நீங்களே இந்த போலீசை காரித்துப்புவிங்கன்னு ஒரு பத்திரிகை காரர் சொல்லி இருக்கார்.

அப்ப மக்கள் எல்லாம் பைத்தியக்காரன்களா? , என்னா மயி@#@#கு தப்பான நியுஸ் போடுறிங்க , மக்கள் பத்திரிகை , டி.வி போன்ற ஊடகங்களை பார்த்துதான் செய்திகளை அறிந்து கொள்கிறார்கள்.

நாங்க
ஒவ்வொருத்தரும் போயி அந்த பாட்டிகிட்டவும் , டாக்டர் கிட்டவும் உண்மையை கேட்கணுமா ?

பத்திரிகை நிருபர்களும் லஞ்சம் (கட்டாய அன்பளிப்பு) வாங்கும்
அயோக்கியர்கள் என்று நீங்கள்தான் ஒரு பதிவு போட்டு இருக்கீங்க . அப்புறம் எங்களை உணர்ச்சிவசப்படாதிங்க , உண்மை தெரியாமல் பேசாதிங்கன்னு சொல்ல எந்த லஞ்சம் (கட்டாய அன்பளிப்பு) வாங்கும் நல்லவர்களுக்கும் உரிமை இல்லை .ஒரு முக்கியமான கேள்வி இவன்தான் உண்மையான குற்றவாளியா ???

இருந்துவிட்டால் ? - கோர்ட்டுக்கு போயிருந்தால் நிச்சையமாக தப்பிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது .

இல்லாவிட்டால் ? - எத்தனை ராணுவ வீரர்கள் நாட்டுக்காக தன உயிரை இழந்திருக்கிறார்கள் , எத்தனை அப்பாவி மக்கள் தீவிரவாதிகளால் கொலைசெய்யப்பட்டு இருக்கிறார்கள் . இந்த மாதிரி கொடூர குற்றங்கள் இனி நடக்க விடாமல் தடுப்பதற்கு தன் உயிரை விட்ட மிகப்பெரிய தியாகிஆவான் .இந்த தவறை செய்தவர்களுக்கும் தண்டனை கிடைக்கும் .


Tuesday, November 9, 2010

கோவை குழந்தைகளை கொன்றவர்கள் சுட்டுக்கொலை (என்கவுன்டர்)

கோவையில் முஸ்கின் (11 வயது ) , ரித்திக் ( 8 வயது) என்ற அக்காள் தம்பி கடத்தி சென்றனர் . 11 வயதான முஸ்கின்ஐ பாலியல் பலாத்காரம் செய்து பின் முஸ்கின் , ரித்திக் இருவரையும் வாய்காலில் தள்ளி கொலைசெய்த மோகன்ராஜ் மற்றும் மனோகர் கைது செய்யப்பட்டனர். இன்று அதிகாலை 5 :30 மணிக்கு விசாரணைக்கு அழைத்து செல்லும் போது போலீசார்களை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றபோது மோகன்ராஜ் சுட்டுக்கொல்லப்பட்டான் . மனோகர் நிலை என்னவென்று இன்று காலை 9 மணிவரை தெரியவில்லை .

எனது கருத்தை பின்னால் கூறுகிறேன் .

ஒரு சின்ன கருத்துக் கணிப்பு :

மோகன்ராஜ் என்கவுன்டர் முறையில் சுட்டுக்கொல்லப்பட்டது சரியா ? தவறா ?

* "சரி" என்பவர்கள் "பாசிடிவ்" ஓட்டுப் போடுங்கள் .

* "தவறு" என்பவர்கள் "நெகடிவ்" ஒட்டு போடுங்கள் .


அனைவரும் தங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் கண்டிப்பாக கூறுங்கள் .

வழக்கம் போல படிச்சிட்டு சும்மா போகாம தயவுசெய்து கண்டிப்பாக உங்கள் பாசிடிவ் அல்லது நெகடிவ் ஓட்டுக்களை அளியுங்கள் .Monday, November 8, 2010

பெண்களை கிண்டல் செய்த வாலிபர் கைது

சென்னை (08-11-2010) திங்கட்கிழமை


இரண்டுசக்கர வாகனத்தில் சென்று பெண்களை கிண்டல் செய்த வாலிபர் கைது

நவ , 8 , சென்னையில் இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் பெண்களை பின் தொடர்ந்து சென்று கிண்டல் செய்த வாலிபர் நேற்று கையும் களவுமாக கைது செய்யப்பட்டார் .

அண்ணாநகரிலிருந்து தி.நகருக்கு வேலைக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற போலீஸ் பெண் உயர் அதிகாரியை பின் தொரடர்ந்து கிண்டல் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார் . ............

--------@@@@@--------

முஸ்கி : மேலே உள்ள செய்திக்கும் , கீழே நடந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் .


கடந்த நாலு நாளா இருந்த சென்னை இருக்கே ????!!!!!! சொர்க்கம் சார் ............எங்க போனாலும் டிராபிக் கிடையாது ரோடு எல்லாம் காலியா இருந்தது .

(ஹலோ மைக் டெஸ்டிங் 1 , 2 .........3 )

ஆகா பிராக்கட் பார்ட்டி வந்துட்டானே , இனி என்ன சொன்னாலும் ஆப்பு அடிப்பானே ?

வருடா வருடம் இரண்டு மூன்று நாட்கள் சென்னையில் தீபாவளி சமயத்தில் இந்த அதிசயம் நடக்கும் சார் .

(
ஆமா..... கண்டுபுடிச்சிட்டாருயா தாமஸ் ஆல்வா எடிசன் )

அண்ணே.......... ஏன்ணே?.....ஏன்?

தீபாவளிக்கு பாதிப்பேரு ஊருக்கு போயிருப்பான் மீதிப்பேறு டி.வி முன்னாடி இருப்பானுக . நீங்க எந்த ரோடு போனாலும் டிராபிக் இல்லாம பிரீயா இருக்கும்.

அடடே ...எங்க அந்த பிராக்கட் பாரட்டிய ஆளக்காணோம்? , போயிட்டானோ ??????

பைக் ஓட்ட செம ஜாலியா இருக்கும் . பாட்டு பாடிகிட்டே வண்டி ஓட்டலாம் ,ரெண்டு கைவிட்டு ஓட்டலாம் , கண்ண மூடிக்கிட்டு ............சே,சே....வேணாம் ரிஸ்க்கு , பிகர் பாத்துகிட்டே ஓட்டலாம் .............

(பஸ்ட்டு உன் மூஞ்சிய கண்ணாடில பாரு ........)
ஆஹா , வந்துட்டான்யா ,வந்துட்டான்யா ........ கிருகதுருவம் புடிச்சவன் வந்துட்டான்யா ......


அப்படித்தான் சனிக்கிழமை காலைல ஜாலியா ஒரு பிகரா பாத்துகிட்டே ஒட்டிக்கிட்டு வந்தேன் , கடைசில பாத்தா அண்ணா நகர்ல நிக்கிறேன். ஹி.ஹி.ஹி........என் ஆபீசு தி.நகர்ல இருக்கு .

(ஹா, ஹா.ஹா.............. டேய் பன்னாட ..... உன் வீட்டுக்காரம்மா போன் நம்பர் *(*$!) %$^&% இது தானே)
பிராக்கட் சார், பிராக்கட் சார் நான் உங்களுக்கு என்ன துரோகம் பண்ணினேன் , ஏன் இந்த கொலைவெறி ...............?

அப்புறம் அங்க இருந்து இன்னொரு பிகர பிக்கப் பண்ணி லைட்டா ஜாலியா சில்மிஷம் பண்ணிக்கிட்டே ( சே.....வீட்ட அண்ணா நகருக்கு மாத்தணும் , அதுவரைக்கு அண்ணாநகர் வழியா ஆபீஸ் வந்து போகணும் . ன்னா பிகர்ஸ்?????? ...........இம்ம்ம்ம்ம்....................) வந்தேன் , கடைசில பாத்தா அந்த பிகரு நம்ம ஆபீஸ் எதுக்க இருக்க போலீஸ் ஸ்டேசன் பக்கத்துல வண்டிய நிப்பாட்டுச்சு .........................................


(ஹா,ஹா,ஹா,....................ஹி.ஹி,ஹி.........ஹோ,ஹோ,ஹோ,.............க்கிக்,க்கிக்,க்கிக், க்கிக்.................)
என்னா சந்தோசம் பாரு ?????????????Saturday, November 6, 2010

நாளை கறிசோறு ???


வருடம் ஒரு முறை
உண்ணும் கறிசோறும்
இந்த முறை
வெள்ளிக்கிழமையால்
வெறும் சோறாக்கிப் போச்சு!!!

இருந்த ஒரே
புது சட்டையில்
பட்டாசு போட்ட
கோலப்புள்ளிகளை
அப்பாவுக்கு தெரியாமல்
எப்படி மறைப்பது ?

பாழாய் போன மழை
நமத்துப்போன
வேட்டுக்களை நனைத்து
கொளுத்த விடவில்லை
சொக்கபானை!!!!

இன்று சனிக்கிழமை
நாளையாவது
கறிசோறு சமைப்பாளா
அம்மா ???

Wednesday, November 3, 2010

தீபாவளி பரிசு மழை (மாட்னின்களா ?)முஸ்கி : ஊரு உலகமே தீபாவளிக்கு பரிசு மற்றும் ஆஃபார் தர்றாங்க . அது தவிர பரிசு தந்தாத்தான மக்கள் வந்து போறாங்க , எனவே இந்த போட்டியும் பொறாமையும் புடிச்ச உலகத்தில பிரபல பதிவராகனுமின்னா நீயும் தீபாவளிக்கு பரிசு குடுத்தாதான் பிரபலபதிவராக முடியுமுன்னு நம்ம காரமட ஜோசியர் கனவுல வந்து சொன்னாருங்க .

------######--------

தித்திக்கும் தீபாவளிக்கு சிறப்பு பரிசுகள் , மங்குனி ப்ளாக் பாருங்கள் பரிசுகளை வெல்லுங்கள் , விசிட் செய்யும் அனைவருக்கும் நிச்சைய பரிசு ........

மங்குனி ப்ளாக் வழங்கும் பலகோடி ரூபாய் மதிப்பிலான தீபாவளி பரிசு மழை

* இந்த பதிவை படிப்பவர்களுக்கு அனைவருக்கு சாலமன் பாப்பையா அவர்கள் வழங்கும் எட்டாம் வகுப்பு கோனார் தமிழ் உரை நிச்சைய பரிசாக வழங்கப்படும்.

* காலை 12 மணிக்குள் படிப்பவர்களுக்கு 50 % சலுகையாக அசோக் லேலாண்ட் வழங்கும் அரைபாடி லாரி இலவசம் .

* முதல் பத்து கமன்ட் போடுபவர்களுக்கு திருநெல்வேலி இருட்டுக்கடை வழங்கும் அரை கிலோ அல்வா இலவசம்.

* தொடர்ச்சியாக மூன்று கமன்ட் போடுபவர்களுக்கு பனங்காட்டு நரி உபயோகிக்கும் நாத்தம்புடிச்ச நான்கு சோப்புக்கள் பரிசு .

* 50 100 மற்றும் 200 என கமன்ட் போடுபவர்களுக்கு பட்டாபட்டியின் படு கேவலமான திட்டுக்கள் இலவசம்.

* ஒட்டு போடும் அனைவருக்கும் சிரிப்புபோலீஸ் மாமா கடையிலிருந்து பட்டாசுகள் இலவசமாக திருடி தரப்படும் .

* கள்ள ஒட்டு போடும் நல்ல உள்ளங்களுக்கு நாயுடுஹால் வழங்கும் 40 பக்க கோடுபோட்ட நோட்டு பரிசாக வழங்கப்படும் .

* 5 கள்ள ஓட்டுக்கு மேல் ஒட்டு போடுபவர்கள் குழுக்கள் முறையில் தேர்தெடுக்கப்பட்டு ஜெட் ஏர்வேஸ் வழங்கும் போயின் 747 விமானங்கள் இரண்டு பேருக்கு .

* படித்து விட்டு ஒட்டு போடாமல் செல்பவர்களது கன்னத்தில் நமது இன்சைஅரசன் பாபு அருவாளைக்கொண்டு செல்லமாக இரண்டு இழுப்பு இழுக்கப்படும்.

* மேலும் கமன்ட் போடாமல் செல்பவர்கள் காதில் காப்படி கட்டெறும்பு காம்பிளிமெண்டாக கவிழ்த்தப்படும்.


* தீபாவளியின் பம்பர் பரிசாக ஒரு அதிர்ஷ்ட்டசாலி குழுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு மவுன்ட் ரோடு அஞ்சப்பர் அருகில் உள்ள கையேந்தி பவனில் ரெண்டு இட்லி கெட்டிசட்னி ஸ்பெசல் பரிசாக வாங்கித்தரப்படும்.

எனவே மக்களே பந்திக்கு முதுங்கள் படைக்கு பிந்துங்கள் (சே.... சாரி பாஸ் பழக்க தோசத்துல ஒரு புலோவுல வந்திருச்சு )

எனவே மக்களே மங்குனி ப்ளாக் படியுங்கள் பலகோடி மதிப்பிலான பரிசுகளை வெல்லுங்கள்.Tuesday, November 2, 2010

தீபாவளியை மனிதர்களோடு கொண்டாடுங்கள்

முஸ்கி : நாம் வெங்கட் லேட்டா வந்து கமன்ட் போட்டு , கடைசீல வந்திருச்சு பச்ட்டுல கொண்டுவான்னு (என்னா வில்லத்தனம் ) போன் பண்ணி ரொம்ப பீஃல் பண்ணாரு அதான் பதிவுலே பஸ்ட்டா மேல போட்டுட்டேன் . ஓகே வா வெங்கட்??? ...............

வெங்கட் said...

// ஊர்ல போயி சொந்த பந்தங்களுடன் சேர்ந்து தீபாவளியை இனிமையாக கொண்டாடுங்கள் , அன்று ஒரு நாள் மட்டும் உங்கள் வீட்டில் உள்ள டி.வியை ஆஃப் செய்து விடுங்கள் .//

இது சொன்னீங்களே.. இது ரொம்ப நியாயமான வார்த்தை.... உங்களால மட்டும் எப்படி இப்படி எல்லாம் Think பண்ண முடியுது..?
அமைச்சரே.. Really U R Great..!!
ஆனா பாருங்க.. உங்களை நான் பாராட்டி Comment போட்டு இருக்கேன்..அது ரொம்ப கீழே., 104வது Comment-ஆ வரப்போகுது.. அதான் ஒரே பீலிங்கா இருக்கு..!!
கொஞ்சம் நம்ம Comment மேல வர்ற மாதிரி எதாவது பாத்து பண்ண முடியுமா..?!!


-------@@@@@@------


அனைவருக்கு தீபாவளி நல் வாழ்த்துக்கள் , அனேகமா எல்லாலும் தீபாவளிக்கு ஊருக்கு செல்ல சந்தோசமாக ரெடியாகிகொண்டு இருப்பீர்கள்
.

இந்தியாவில் உள்ள மக்கள் அதிக ஆசையுடனும், சந்தோசத்துடனும் கொண்டாடும் மிகப்பெரிய பண்டிதை தீபாவளி , இதற்காக வெளிஊர்களில் வேலை செய்யும் அனைவரும் தமது சொந்த பந்தத்துடன் சேர்ந்து பண்டிகை கொண்டாட ஆர்வத்துடனும் தமது சொந்த ஊருக்கு செல்கிறார்கள் .

தீபாவளிக்கு முன்பதிவு ஆரம்பித்த சில நிமிடங்களில் இந்தியாவில் உள்ள அனைத்து ரயில் மற்றும் பஸ்களின் டிக்கட்டுகளும் விற்று தீர்ந்தன , மக்களுக்கு அவ்வளவு ஆர்வம் ஆசை .


ஆனால் என்ன நடக்கிறது , தீபாவளி மற்றும் பண்டிகை தினத்தன்று காலை 6 மணிக்கு போடப்படும் டி.வி இரவு 12 மணி வரை ஓடிக்கொண்டுள்ளது . அதில் ஆயிரத்தெட்டு ஒன்னுக்கு உபயோகம் இல்லாத நிகழ்ச்சிகள் விளம்பரங்கள் . இதை தவிர்த்து..........


ஊர்ல போயி சொந்த பந்தங்களுடன் சேர்ந்து தீபாவளியை இனிமையாக கொண்டாடுங்கள் , அன்று ஒரு நாள் மட்டும் உங்கள் வீட்டில் உள்ள டி.வியை ஆஃப் செய்து விடுங்கள் . உங்களது அருமையான நேரத்தை வெட்டியாக விரயம் செய்யும் சாதனம் அது.


அந்தக்காலங்களில் அனேகமாக குடும்ப உறுப்பினர்கள் , மற்றும் சொந்த பந்தங்கள் அனைவரும் ஒரே ஊரில் இருப்பார்கள், அவர்கள் ஒருவரை ஒருவர் நிறைய விசேஷங்கள் மற்றும் பண்டிகைகளில் பார்த்துக்கொள்ள அதிக வாய்ப்புகள் இருந்தது .

அனால் இப்போது அனைத்து குடும்பங்களிலும் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் வேலைநிமித்தம் காரணமாக தொலைதூர வெளியூர்களில் வசிக்க வேண்டிய கட்டாயம் , சொந்தபந்தங்களை அடிக்கொருமுறை பார்க்கமுடியாத சூழ்நிலை . ஊர்களில் நடக்கும் அனைத்து விசேசங்களுக்கு போயி வர முடியாத வேலைப்பளு, தூரம் .

இந்த நிலையில் தீபாவளிக்கு அனைவரும் தன சொந்த ஊருக்கு செல்கின்றார்கள் , சில பேர் தீபாவளிக்கு மட்டுமே சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள் . அதிக பட்சம் இரண்டு மூன்று நாள் தங்கமுடிகிறது.

இந்த நிலையில் எவனோ கோடிக்கணக்கில் சம்பாரிக்க பொழுதுபோக்கு என்ற பெயரில் டி.வி சேனல்கள் உங்கள் நேரத்தை தின்று விடுகிறது. இரண்டு மணிநேரம் ஓடக்கூடிய ஒரு படத்தை நான்கரை மணிநேரம் ஓட்டும் திறமை அவர்களுக்கு மட்டுமே உண்டு .

எல்லாம் விளம்பரம் , விளம்பரம் , விளம்பரம் ...

இதனால் நமக்கு எந்த பயனும் இல்லை. பத்து பைசா பிரயோஜனமும் இல்லை . உங்களை வைத்துக்கொன்ன்டு கோடிக்கணக்கில் டி.வி நிறுவனங்கள் சம்பாரிக்கின்றன .

இந்த முறை ஊருக்கு செல்பவர்கள் தீபாவளி அன்று ஒரு நாள் மட்டும் டி.வியை ஆஃப் செய்து விடுங்கள் . உங்கள் சொந்த பந்தங்கள் அனைவரையும் நேரில் சென்று பார்த்து வாழ்த்துக்களும் , இனிப்புகளும் வழங்குங்கள். முக்கியமா வயதான தாத்தா, பாட்டி போன்றவர்களை தேடிச்சென்று சந்தியுங்கள் . அவர்க உங்கள் வருகைக்காவே ஆவலோடு வருடம் முழுவது காத்துக்கோடு இருப்பார்கள் . டி.வியின் முன் கைதியாகாமல் அனைத்து குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுங்கள். குழந்தைகளை விளையாட விடுங்கள் .

இனி பண்டிகைகளை மனிதர்களோடு கொண்டாடுங்கள் , பொழுதுபோக்கு சாதனங்களோடு வேண்டாம் .

மீண்டும் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் .


Monday, November 1, 2010

டைரடக்கர் டாக்குட்டர் விஜய்

முஸ்கி : கை விரல்களை மடக்கி நரம்புகள் முறுக்கேறி புடைக்க ஆவேசத்துடனும் ஒரு மாபெரும் மாஸ் ஹீரோவின் பில்டப்புடனும் கீழே உள்ள முதல் பாராவை படிக்கவும்.(இளைய தளபதியின் மூன்று வயது போடோ )


இத்தாலி எனும் அந்நிய நாட்டு சதிக்கு எதிராக பீனிக்ஸ் பறவை போல மீண்டும் எழுந்து வந்து தடைகளை தனது இரும்ப்புக் கரங்களால் உடைத்தெறிந்து இந்தியாவை காக்க பிச்சுவா கத்தியால் தனது பெருவிரலை கீறி வந்த ரத்தத்தில் ஆக்ரோசமாக சூளுரைத்த நமது வீரத்தளபதி டாக்குட்டர் விஜய் அவர்களின் உலக மக்களை காக்க எடுக்கும் அடுத்த அவதாரம் தான்...........
(வரும் காலத்தில் பல நூறு கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் போகக்கூடிய சேர் )

இப்ப கூல் பேபி கூல் , கூல் ........................டொன்ட்ட.. டொன்ட்ட.. டொன்ட்ட.... டொய்ய்ய்ய்ய்யின்...........


டைரடக்கர் டாக்குட்டர் விஜய்


(டைரடக்கர் டாக்குட்டர் விஜய் டைரக்சன் வியு பார்க்கும் அபூர்வ புகைப்படம் )எங்க எல்லாரும் மூணுவாட்டி சத்தமா சொல்லுங்க ,வாழ்த்துகோசம் விண்ணைப் பிளக்க வேண்டும்

"
புதிய அவதாரம் டைரடக்கர் டாக்குட்டர் விஜய் "

"வாழ்க "

"
புதிய அவதாரம் டைரடக்கர் டாக்குட்டர் விஜய் "

"வாழ்க ,வாழ்க "

"புதிய அவதாரம் டைரடக்கர் டாக்குட்டர் விஜய் "

"வாழ்க ,வாழ்க,வாழ்க "

நடிகனாக அவர் திருத்திய வில்லன்களும் அடித்து நொறுக்கிய அடியாள்களும் புரட்டி எடுத்த அரசியவாதிகளும் ன் உயிரையும் துச்சமென மதித்து காப்பாற்றிய ஏழைகளும்புடைசூழ, தனது புது அவதாரத்திர்க்குள் தனது காலை எடுத்து வைத்தார் டாக்குட்டர் விஜய்.

டைரடக்கர் டாக்குட்டர் விஜய்யுடன் ஒரு பேட்டி

(இனி பேட்டி முழுவதும் நமது டைரடக்கர் டாக்குட்டர் விஜய் அவர்கள் சுக்கமாகவும் , செல்லமாகவும் டை. டா. விஜய் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப் படுவார் )


"வணக்கம் டை. டா. விஜய் சார்"

"வணக்கம் , வணக்கம் "
.

"ஏன் சார் திடீரென்று இப்படி ஒரு புதிய அவதாரம் ?"

"இது என்னுடைய 50 ஆண்டு கால கனவு. "

"இந்த டை. டா. விஜய் அவதாரத்தின் நோக்கம் ?"

"இந்தியாவை வல்லரசாக்குவது"

"வல்லரசுன்னா ன்னா சார் ?"

"இது கூட தெரியாதா? கேப்டன் வியஜகாந்த் நடிச்ச படம்"

"சரி என்ன படம் டைரக்ட் பண்ண போறீங்க ?"

"யுவாங் சுவாங் , அப்படின்னு ஒரு சைனீஸ் படம் , அதுல சீன சுரங்கத்துல கஷ்டப்படுற எழைகள காப்பாத்த போற ஒரு தமிழ் நாட்டு படிப்பறிவில்லாத பட்டிகாட்டு இளைஞன் எப்படி அமெரிக்க ஜனாதிபதியா ஆகுராங்குறது தான் கதை ."
(ஹீரோ டா. விஜய்க்கு நடிப்பு சொல்லிக் கொடுக்கும் டை. டா. விஜய் )


"சீன மொழி படம் எப்படி தமிழ்ல ?"

"இல்லை இது சீன மொழியில் எடுக்கப்பட்ட முழுநீள தமிழ் படம் தான் ."

"ஹீரோ ??"

"வேற யாரு , நம்ம உலகப் புகழ் இளையதளபதியாகிய நானேதான் . "


(யுவாங் சுவாங் படத்தில் மாறுபட்ட கெட்டப்பில் டாக்குடர் விஜய் )


"கதை பத்தி இன்னும் ???"

"சீனாவுல இருக்க ஒரு சுரங்கத்துக்குள்ள தண்ணி புகுந்திடுது , நம்ம ஹீரோ இங்க இருந்து சைக்கிள்ள போயி சைடிஸ் , மிக்சிங் சோடா கூட இல்லாம அப்படியே ராவா எல்லா தண்ணியையும் குடிச்சிட்டு மட்டையாயிடுறார் . இங்கதான் கதையோட "நாட்" இருக்கு ."

"சார் ஹீரோயின் பத்தி ??"

"புதுமுகம்தான் தேடிக்கிட்டு இருக்கேன் , நம்ம பன்னிகுட்டி பதிவுல போட்ட அந்த மூணு பேருல ஒரு ஹீரோயின நீங்களே செலக்ட் பண்ணி சொல்லுங்க . "
"அப்புறம் கிளைமாக்ஸ் பத்தி ?"

"எல்லாத்தையும் பேட்டியிலேயே சொல்ல முடியுமா ? மீதியை வெண்திரையில் காண்க "டிஸ்கி: (இது ஆஃப தி ரிகார்டு யாருகிட்டயும் சொல்லிடாதிங்க) அடுத்த வருடம் யுவாங் சுவாங் படம் 8 ஆஸ்கார் விருதுகளை வென்ற பின் பத்திரிக்கைகளுக்கு கொடுப்பத்தர்க்காக இப்பொழுதே எடுத்து வைக்கப்பட்டுள டை.டா .விஜய் அவர்களின் போடோ கீழே ...................
(ஊரு கண்ணு ஏன்? உலக கண்ணு பட்டு இருக்கு இப்பவே திருஷ்டி சுத்திபோடனும் )