எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Tuesday, June 28, 2011

என்னையும் உன்னைய மாதிரி கேனன்னு நினைச்சுக்கிட்டியா ???

சாயிந்தரம் வீட்டுக்கு போனா   அங்க ஜூனியர் மங்கு ( என்பையன் தாங்க) படிக்காம ஜாலியா டி.வி பாத்துக்கிட்டு இருந்தான் , எனக்கு வந்துச்சே பாருங்க கோவம் .........

"டேய் , அறிவுகெட்டவனே ஏன்டா  படிக்கிற நேரத்துல இப்படி டி.வி பாத்துக்கிட்டு இருக்கியே நீயல்லாம் எப்படி உருப்புடுவ ?" 

" யோவ் லூசு "

"என்னது லூசா ? "

"ஆமாய்யா , இப்போ எதுக்கு கரடியா கத்துற ?"

"இப்படியே படிக்காம டி.வி பாத்தா அப்புறம் பெரியவனா ஆனதும் வேலை கிடைக்காம மாடு மேயிக்கதான் போகனும்."

"போய்யா.....என்னையும் உன்னைய மாதிரி கேனன்னு நினைச்சுக்கிட்டியா ???"

"என்னடா சொல்ற ?"

"இலவச அரிசி  வாங்கி 

இலவச கிரைண்டர்ல அரைச்சு

இலவச கேஸ் அடுப்புல இட்லி சுட்டு 

இலவச மிக்ஸ்சில சட்னி அரைச்சு சாப்ட்டு 

இலவச திருமண உதவிப்பணம் வாங்கி 

இலவச திருமணம் பண்ணிக்கிட்டு 

இலவச கான்கிரீட் வீட்டுல 

இலவச மிசாரத்துல 

இலவச ஃபேன் போட்டு 

இலவச டி.வில 

இலவச நெட் கணக்சன்ல 

இலவசமா உல்லாசமா படம் பாக்குறத விட்டு கஷ்ட்டப்பட்டு  என்னா ம@#த்துக்கு நான்  படிக்கனும்  அப்புறம்  உன்னைய மாதிரி லோள்படனும்???"


இதுல 


இலவச ரெண்டு ஏக்கர் நிலத்த என்னபன்றதுன்னு வேற யோசிக்கணும் .


என்ன படிக்கலைன்னா.............. 


இலவச சைக்கிளும் 


இலவச  லேப் டாப்பும் கிடைக்காது........ நோ பிராப்ளம்..... அதுக்காக படிக்கவெல்லாம் முடியாது "

வாழ்க ஜனநாயகம்

நன்றி - எஸ்.எம்.எஸ்.
டிஸ்கி :  வேறு ஏதாவது இலவசம்  விட்டுப் போயிருந்தால் என்னை மன்னித்தருளுமாறு  மிக தாழ்மையுடன்  கேட்டுக்கொள்கிறேன் .

Saturday, June 25, 2011

தயவு செய்து படியுங்கள்

தயவு செய்து படியுங்கள் -  ஓட்டு  போடுங்கள் அது நிறைய பேரை சென்றடைய உதவும் , மேலும் உங்களால் முடிந்த அளவு இந்த நிகழ்வை பரப்புங்கள் . 


---------------

வந்தாரை வாழ வைக்கும் தமிழர்களே....!

சானல் 4 வீடியோ தொகுப்பு மூலமாக இலங்கை அரசின் உண்மையான நோக்கம் என்னவென்பதை முழுமையாக தெரிந்து கொண்டோம். மற்றநாட்டு அரசுகளுக்கு இவை முன்பே நன்கு தெரியும் என்றாலும், அவர்களுக்கு இருக்கும் வேறு சில உள்நோக்கங்களால் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். எங்கோ இருக்கும் சானல் 4-ற்கு இருக்கும் அக்கறையில் ஒரு சதவீதம் கூட நம் தமிழக தொலைக்காட்சிகளுக்கு இல்லையே? அதிகாரம், பணபலம், மீடியா எல்லாம் குறுகிய எண்ணம் கொண்ட ஒரு சிலரின் கையில் சிக்கி நம் வாழ்வு, சுற்றுச் சூழல், தொழில் வளர்ச்சி, சமூக மேம்பாடு என அனைத்தும் சீரழிந்து வருவதை ஆற்றாமையோடு பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இருக்கிறோம்.

சானல் 4-ன் கொலைக்களம் காணொளியை பார்த்த பின்னரும் நாம் எதையும் கண்டு கொள்ளாது இருந்தால் வரலாறு நம்மை மன்னிக்காது மக்களே! நம்மால் பெரிதாக எதுவும் செய்துவிட முடியாது என்றாலும், குறைந்தபட்ச உணர்வுகளையாவது வெளிப்படுத்துவோம். இதன்மூலம் இலங்கையில் தமிழர்கள் அரைமனிதர்களாக நடத்தப்பட்டு வரும் நிலையாவது மாறட்டும்.


மெல்லிதயம் கொண்டோரே
மெழுகுதிரி ஏந்த
மெரினாவிற்கு வாரீர்.

சென்னையில்,
நாள்: ஜூன் 26
நேரம்: மாலை 5 மணி
இடம்: சென்னை மெரினா கண்ணகி சிலை.மதுரையில்,
தமிழ் அன்னை சிலை
தமுக்கம் அருகில் ,மதுரை
ஈழ ஆதரவாளர் கூட்டமைப்பு -9443917588 இந்த எண்ணுக்கு போன் செய்து கேட்டு கொள்ளவும் .அல்லது உங்கள் வருகையை .உறுதி படுத்தி கொள்ளவும் .

கோவையில்,

இன்னும் இடம் உறுதி செய்ய படவில்லை. அதனால் .
திரு .பிரபாகர் அவர்களை 9865417418 தொடர்பு கொள்ளவும்.


டிவீட்டரில் பிரச்சாரத்தை முன்னெடுக்க, உங்கள் ட்வீட்டுகளில் #June26Candle ஐ சேர்த்துக் கொள்ளுங்கள்!

நன்றி!

சுகவீனமாக போதிலும் அயராது முயற்சி எடுத்து வரும் நண்பர் கும்மி அவர்களுக்கு ஒரு சல்யூட்!
--------------

நன்றி பன்னிகுட்டி ராமசாமி , கும்மி 

Tuesday, June 21, 2011

இந்த பதிவர் பெரிய்ய சி.பி.ஐ ஆபீசர் போல

என்ன கொடும சார் இது , ஆள் பாக்க டீசன்ட்டா இருகாரு பன்றது எல்லாம் டகால்டி வேலையா இருக்கே ...... இல்ல ஒரு வேல நம்ம வெங்கட் பெரிய்ய்ய்ய்ய ஏ.பி.சி. ஆபீசரா சீ......., தூ....... சி.பி.ஐ ஆபீசரா இருப்பாரு போல???

பாருங்க நான் கம்யுடர் கம்பனிக்கு எழுதின லெட்டர டிரேஸ் பண்ணிருக்காரே..... 

ஆக்சுவலா என்ன நடந்ததுன்னா ............. (கொஞ்சம் இருங்க சார் பிளாஸ் பேக் சிம்பல் போட்டு வர்றேன் )

சாரி சார் அவசரத்துக்கு சிம்பல் கிடைக்கல ...நீங்களே கற்பனை பண்ணிக்கங்க 

இம்ம்ம்.......... இப்போ ஸ்டாட் மூசிக் ...........

நான் கம்ப்யுடர் வாங்கின உடனே பஸ்ட்டு நம்ம வெங்கட்டுக்குதான்    சார் போன் போட்டேன் (போன போட்டா உடைஞ்சிராது???)   .........என்னங்க என்ன என்னமோ குடுத்திருக்கானுக இதெல்லாம் என்னன்னு  கேட்டேன் 

அதுக்கு அவரு பட்டனா இருக்கிறது "கீ" போர்டு , சின்னதா வாலோட இருக்கிறது "மௌஸ்"  , அப்புறம் கண்ணாடிமாதிரி இருக்கிறது "மானிட்டர்" , பாக்ஸ் பாதிரி இருக்கிறது சி.பி.யு ன்னாரு .....

அப்படியா சரின்னு நானும் கீ போர்டுல வரிசையா ஆணிகள  சொருகி எங்க வீட்டு "கீஸ்" எல்லாத்தையும் மாட்டி வச்சேங்க (ஆணி சொருகுரதுக்கு வசதியாத்தான் பட்டனா குடுத்திருக்காங்க )

அப்புறம்  ஒரு எலி கூண்டு வாங்கி கூண்டுக்குள்ள "மௌஸ" புடிச்சு உள்ள போட்டேன்.

சி.பி.யு.   அது என்னான்னு எனக்கு தெரியலை ......அப்புறம் ஒரு டி.வி. ............. ஆனா பாருங்க நான் கம்ப்யுடர்தான் கேட்டேன் இந்த நாதாரிப்பசங்க கம்ப்யுடர் அனுப்பாம என்னென்னமோ அனுப்பி இருக்கானுக .

நானும் செம டென்சன் ஆகி கம்பனிக்கு போன் பண்ணப்போனேன் அந்த நேரம் பார்த்து என் பையன் ஸ்கூல்ல விட்டு  வந்து எல்லாத்தையும் பார்த்தான் ...........

அப்புறம் தேவதாஸ் பக்கத்துல இருக்கிற சொறிநாய பாக்குறது மாதிரி என்னைய பார்த்தான் .பொறுமையா கால்ல இருந்த  சூவ கழட்டி   பளார்ன்னு ............. (சென்சார்டு )

அப்புறம் சிஸ்டத்த மாட்டி இது தான் கம்ப்யுடர்ன்னு சொன்னான் ..... அதுக்கப்புறம்தான் எனக்கு  இந்த டவுட்  எல்லாம் வந்துச்சு ...........

சரின்னு மறுபடியும் நம்ம வெங்கட்டுக்கு போன் பண்ணி டவுட்ட எல்லாம் கேட்டேன் அதுக்கு அவரு எனக்கும் இதே டவுட்டு நீ கம்பனிக்கு லெட்டர் எழுதுன்னாரு.........

ஆனா கடைசி வரைக்கு யாரும் என்னோட சந்தேகத்த தீர்க்களைங்க ...தயவு செய்து பெரிய படிப்பு படிச்ச யாராவது கொஞ்சம் டவுட்டுகள கிளியர் பண்ணினா உங்களுக்கு புண்ணியமா போகும் .


   

Monday, June 6, 2011

நாடகமாடும் பாபா ராம்தேவ்

என்னங்க இது கேனத்தனமா இருக்கு . பாபா ராம்தேவ் நேத்துதான் பிறந்தாரா இல்லை இந்தியாவுல கடந்த ரெண்டு நாளாதான்    ஊழலும் , கருப்பு பணமும் உண்டாச்சா ?

என்னமோ முந்தாநேத்து காலைல தான் இந்தியாவுல ஊழல் உருவானது மாதிரி என்னமா பில்டப்  குடுக்குரானுக  . இவ்வளவு நாளா என்ன ம!@#@#$ பு@#@#@ இருந்த . வந்துட்டானுக நாட்ட காப்பாத்த  . 

அன்னா ஹசாரே அமைதியான முறையில உண்ணாவிரதம் ஆரம்பிச்சு அது நியாமா மக்களுக்கு தோன்றியதால அவரது போராட்டம் பிரபலம் அடைஞ்சு வெற்றி  பெற்றது .

இவரு   நான் ஜெயிலுக்கு போறேன் நான் ஜெயிலுக்கு போறேன் நான் ஜெயிலுக்கு போறேன் கதையா நான் உண்ணாவிரதம் இருக்க போறேன் ,நான் உண்ணாவிரதம் இருக்க போறேன் ,நான் உண்ணாவிரதம் இருக்க போறேன்னு பப்ளிசிட்டிபன்னி கூட்டத்த சேர்த்து உண்ணாவிரதத்தையே அசிங்கப் படுத்திட்டார்.

ஒரு யோகா சொல்லித்தரும் குருவிற்கு இப்படி ஒரு சீப்பான பப்ளிசிட்டி தேவையா ?

ரைட்டோ தப்போ போலீஸ் வந்துட்டா அவுங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியதுதானே ? இவரு அந்த மேடைல அங்க ஓடுறது , இங்க தாவுறது........... ஒரு யோகா சொல்லித்தர்ற குரு மாதிரியா நடந்த்துக்கிட்டார் ?

ஏன் வீட்டுல இல்ல ஆசிரமத்துல உண்ணாவிரதம் இருக்க வேண்டியது தான ?

இதுல மத்திய அரசு இவரு கூட பேச்சுவார்த்தைவேற நடத்துது . 

அப்படியே உண்ணாவிரதம் இருந்து சாவுடான்னு விடவும் முடியாது . ஏன்னா இது ஜனநாயக நாடு . 

இப்படியே எல்லாரும் கிளம்புங்கடா நாடு விளங்கிடும்.மத்திய அரசுக்கு ஓர் எச்சரிக்கை 

நாட்டில் ஊழலை ஒழித்து வெளிநாட்டில் இருக்கும்  கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்து அரசுடமை ஆக்கும் வரை எங்கள் டெர்ரர் கும்மிய சேர்ந்த பாண்டி , மாணவன் , பன்னி , போலீசு , வைகை, எஸ்.கே, அருண் (ஜூனியர் & சீனியர் ) சவுந்தர்  ......... அனைவரும் (என்னை   தவிர..... அப்புறம் மத்திய அரசோட பேச்சு வார்த்தை நடத்தா ஆள் வேணுமில்ல  ) சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பார்கள் என்பதை இங்கு மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கிறேன் .

டிஸ்கி: இந்த கருப்பு பணம்ன்னு சொல்றாங்களே , பணம் கருப்பா இருந்தா  அதுல 100 ,200  . 500 , 1000 ௦௦௦ ரூபான்னு எப்படி கண்டுபுடிக்கிறது ??? # டவுட் 

Thursday, June 2, 2011

மரண மொக்கைகள் - தயவுசெய்து படிக்காதீர்கள்

நாமெல்லாம் நாண்டுக்கிட்டு சாகலாம் சார் . (பன்னாட நாயே நீ சாவுடா எங்களை ஏன்டா இழுக்குற ) . 

சரி, சரி கோபப்படாதிங்க ஒரு புலோவுல வந்திருச்சு . இந்த ஊர்கார  பசங்க எஸ்.எம்.எஸ்ல அடிக்கிற லூட்டி இருக்கே ....... பின்னி பெடலெடுக்குரானுக    சார் . 

--------******--------


தமிழ் டீச்சர் : "மகா கவி பாரதி " பற்றி சொல்லு ?

டெர்ரர் பாண்டி  : பெருசா ஒன்னும் சொல்றதுக்கு இல்லை டீச்சர் ..... மூனும் சப்பை பிகரு .


--------******--------

சிரிப்பு போலீசு (சோகமான பீலிங்க்ஸ்   )  : 

சும்மா லவ் பன்னினா 20   மார்க் 
சுமாரா லவ் பன்னினா  40  மார்க் 
நல்லா லவ் பன்னினா  80  மார்க் 
சின்சியரா லவ் பன்னினா ........................................ 

நரி : இம்ம்மம்ம்ம்ம் ...........டாஸ்மா(ர்)க்

மாலுமி : மச்சி ஒரு குவாட்டர் சொல்லு 

சிரிப்பு போலீசு மைன்ட் வாய்ஸ் -   " அப்போ நமக்கு கடைசி வரைக்கு கல்யாணமே நடக்காதா ??? "

     
--------******--------


செல்வாவின் மாஸ்டர் பிளான் : 

வீட்டுல எறும்பு தொல்லை ஜாஸ்தியா இருந்தா சுகர்ல கொஞ்சம் சில்லி பவுடர்  கலந்து தூவி விடுங்க . அது சுகர்னு நினைச்சு சாப்பிட்டு அப்புறம் காரம் தாங்க முடியாம தண்ணி குடிக்க வாட்டர் டேங்க்கு வரும் நீங்க அப்படியே தெரியாம பின்னாடியே போயி தண்ணிக்குள்ள தள்ளி விட்ருங்க எறும்பு செத்துப் போகும் . 

பப்ளிக்:   அவ்வவ்வ்வ்வ் ........ 

செல்வா:  அழக்கூடாது , அழக்கூடாது , தன்னம்பிக்கைதான் வாழ்க்கை ....... நாளைக்கு கொசுவ எப்படி கொல்றதுன்னு சொல்லித்தர்றேன் 

--------******--------

டிஸ்கி : இன்னும் பட்டா, பன்னி மற்றும் நம்ம டெர்ரர் கும்மி நாதாரிக எல்லாத்துக்கும் பொருத்தமா இந்த பயபுள்ளைக அருமையான எஸ்.எம்.எஸ். வச்சிருக்கானுக ....ஒன்னு ஒன்னா ரிலீஸ் பன்னுறேன் . 

பட்டாப்பட்டி says ..... ஆமா இவரு பெரிய்ய விக்கிலீக் தலைவரு ரிலீஸ் பண்ணபோறாரு ........    

கிஸ்கி : ஏன்டா லோகல் நன்னாறிப் பயலுகளா நீங்க எல்லாம் இந்த தமிழ் நாட்டுல இருத்துக்கிட்டு எஸ்.எம்.எஸ் எல்லாம் படிச்சிர்ரிங்க, நம்ம  வெளிநாடு வாழ்  (???) பதிவர்கள் பாவம் இல்லையா ? அவுங்க மட்டும் எப்படி நிம்மதியா இருக்கலாம் ??? அதான் என்னால் முடிஞ்சா உதவி...............

 ஹி.ஹி.ஹி.......... 

ஏய் , ஏய் ......ஐயோ ...அம்மா........அடிக்கவெல்லாம் கூடாது பேச்சு பேச்சாத்தான் இருக்கனும்