எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Tuesday, August 20, 2013

IT பசங்களுக்கு பிரண்டா இருக்கிறதைவிட கேரளாவுக்கு அடிமாடா போயிடலாம்

உஸ்ஸ்ஸ்ஸ் .......

இவனுக என்னமோ பிச்சை எடுக்கிறது மாதிரியும் , கவுருமெண்ட் இவனுக கழுத்துல கத்திய வச்சு டேக்ஸ் கட்ட சொல்றதுமாதிரியும் , இவனுக பொலம்புற பொலம்பல் இருக்கே......அவ்வ்வ்வ்வ்...

ரெண்டு  பீர் வாங்கி குடுத்திட்டு இவனுக குடுக்கிற இமசை இருக்கே...... கடவுளே .......... (இந்த மானம் கெட்ட பீர குடிக்கிறதுக்கு மருந்த குடிச்சு சாகலாம் )

இவனுக வாங்கி குடுத்த பீருக்கு மட்டும் காது இருந்து இவனுக  பண்ணுற அழிச்சாட்டியத்த கேட்டா  இந்நேரம் நாண்டுக்கிட்டு செத்துப்போயிருக்கும்.

டேக்ஸ் கட்ட ரொம்ப கஷ்டமா இருந்தா வேலைய ரிசைன் பண்ணிட்டு வீட்டுல இருங்கடா மூதேவிகளா ,  அப்புறம் ஒரு பய ஒரு பைசா கூட டேக்ஸ் கேக்க  மாட்டானுக.....

நாதாரிக ......... மாசம் 10000 , 15000 டேக்ஸ் புடிக்கிரானுகன்னு ஓவரா புலம்புராணுக .... அப்புறம் வருஷம் 13 lks , 16 lks சம்பளம் வாங்கினா வருஷம் 1 lkh இல்ல 1.5 lkh டாக்ஸ் கட்டிதான் ஆகணும்.......... சம்பாரிக்கிரதுல ஒரு 10% டேக்ஸ் கட்ட மாட்டின்ன்களோ பன்னாட பரதேசிகளா ........

இனிமே எவனாவது டேக்ஸ் பத்தி  பேசினிங்க...... ரூம்ல கட்டிப்போட்டு சாகிற வரைக்கும் "தலைவா" படத்த பார்க்க வச்சிருவேன்....ஜாக்கிரதை....

@ ஐயையோ சத்தம் போட்டு பேசிட்டனே , அடுத்த பீர கேன்சல் பண்ணிடுவானோ ???

3 comments:

Yaathoramani.blogspot.com said...

உங்க்க கஷ்டம் உங்களுக்கு
அவங்க கஷ்டம் அவங்களுக்கு
ஆனா இதைச் சொல்லிப்போனவிதம்
எங்களுக்கு அருமையாகத்தான் இருக்கு

குட்டிபிசாசு said...

வருமான வரி கட்ட இவனுங்களுக்கு வலிக்கும். ஆனா இந்தியா அமேரிக்கா போல இல்லையே ஐரோப்பா போல இல்லையே என கதை சொல்லுவாங்க.

ப.கந்தசாமி said...

பத்து லட்சத்திற்கு மேல் 30 பெர்சென்ட் டாக்ஸ் கட்டோணும். வலிக்காதா பின்னே?