எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, June 28, 2010

என்னா டெக்குனிக்கு ????

முக்கிய செய்தி : இளைஞகர்களுக்கு பயன் தரும் வகையில் ஒரு நாவல் எழுதிக்கொண்டு உள்ளேன்
- ரஞ்சிதா ( அட , நம்ம நித்தி புகழ் ரஞ்சி தாங்க )
- நன்றி தினத்தந்தி

அந்த சி.டி மட்டும் ரிலீஸ் ஆகட்டும் , அடச்சே ..... அந்த புக்கு மட்டு வெளிவரட்டும், 2010 இந்தியா வல்லரசுதான் , ஆகா நாம அப்துல் கலாம் கண்ட கனவு இவ்வளவு சீக்கிரத்தில நடக்கும்ன்னு நினைக்கல ? .இளைஞககளே உங்களுக்கு ஒரு வளமான எதிகாலம் காத்திருக்கிறது .

(சத்தியமாக இதில் எவ்விதமான உள்குத்தும் இல்லை என்பதை கம்பனி சார்பாக தெரிவித்துகொள்கிறேன் )

------------------------------------------------------

அடப்பாவிகளா , என்னமா டெக்னிக் பன்றாணுக???


எங்க ஆபீசுல ரெண்டு பசங்க இருக்கானுக , எப்ப பாத்தாலும் பிசியாவே இருப்பானுக ,
யாருகிட்டயும் எதுவும் பேசமாட்டாணுக, எப்ப பாத்தாலும் கேபின்ல உட்காதுகிட்டு சீரியஸா பைல் பாத்துகிட்டு இருப்பானுக , என்னான்னு கேட்டா?

" மேனேஜ்மென்ட்டுல ஒரு முக்கியமான புராஜக்ட் கொடுத்திருக்காங்க , அது ரொம்ப கான்பிடன்சியல் யாருகிட்டயும் காட்டவோ சொல்லாவோ கூடாதுன்னு மேலிடத்திலிருந்து ஆடர்" ஆப்படின்னு ஓவரா சீன் போடுவானுக

எங்களுக்கு பொறாமையா இருக்கும் , சே .. அவனுகளுக்கு மட்டும் முக்கியமான புராஜட் கொடுத்துருக்காங்கலேன்னு (அடிங் ங்கொய்யாலே........உன்னைய வேலைக்கு வச்சுருக்கதே பெரியவிசயம்? , இப்ப குடுத்துருக்க சாதாரண ஆணிவே நீ ஒழுங்கா புடுங்குறது இல்ல ? இதுல முக்கியமான புராஜெட் வேற ஒனக்கு வேணுமா ?)

இப்படி கொஞ்ச நாள் போச்சுக , அதுலயும் ஒரு ரெட் கலர் ஃபைல் இருக்கு அத ரொம்ப ரகசியமா மெயின்டைன் பண்ணுவானுக , திடீர் ரெண்டு மூணு நாளைக்கு ஒருக்கா அந்த ஃபைல வீட்டுக்கு எடுத்திட்டு போயிட்டு மறுநாள் கொண்டு வருவானுக , ( பார்ரா?? எவ்ளோ சின்சியரா வீட்ல கூட போய் வேலைபாக்குரானுகன்னு கொஞ்சம் பெருமையா கூட அவனுகள பத்தி நினைச்சோம் .)

திடீர்ன்னு சின்னதா ஒரு டவுட்டு வந்துச்சு , பெர்சனல் டிபார்ட்மன்ட் இருக்க நம்ம பிகர் கிட்ட சொல்லி ஏன்னா புராஜக்டுன்னு டிரேஸ் பண்ண சொன்னோம்? , அதுவும் அலசி ஆராயிந்து அப்படி ஒன்னும் முக்கியமான புராஜக்ட் எதுவும் அவனுகளுக்கு குடுக்கல அப்படின்னு சொல்லுச்சு .

அப்பத்தான் , ஆகா? என்னவோ நடக்குதுன்னு நம்ம எட்டாவது அறிவு சிக்னல் கொடுத்துச்சு ? சரின்னு இன்வெஸ்டிகேசன பன்னி ஸ்கெட்ச் போட ஆரம்பிச்சோம் ,


இனிமேல் கேர்புல்லா கண்சிமிட்டாம வாட்ச் பண்ணுங்க......


1) தக்காளி பஸ்ட்டு அந்த ஃபைல் வக்கிர எடத்த கண்டு பிடிச்சோம்

2) அவனுக இல்லாத நேரத்துல அந்த ஃபைல்ல கரக்ட் பண்ணினோம்3) ஃபைல்ல தொறந்து பாத்தா , அடங் கொன்னியா .....................????????

?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
??
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?

இந்த பன்னாடைக டெயிலி சக்கடிச்சுகிட்டு இருந்திருக்குக , தக்காளி சரக்கு காலியான உடனே ரெண்டுநாளைக்கு ஒரு தடவ ஃபைல்ல வெளிய எடுத்துட்டு போய் சரக்க புல் பண்ணிட்டு வந்திருக்காணுக.

அடப்பாவிகளா , என்னமா டெக்னிக் பன்றாணுக??? , (மங்கு நீயும் இருக்கியே சுத்த வேஸ்ட்டுடா )


Thursday, June 24, 2010

நாம இப்ப விசயத்துக்கு வருவோம்

உலக தமிழ் செம்மொழி மாநாடு ?

நல்ல விஷயம் நடக்கட்டும்.
ஆனால் "இது உலக தமிழ் மாநாடு" இல்லை . உலக தமிழ் அமைப்பு அதற்கு அனுமதி தரவில்லை , உலக தமிழ் மாநாடு நடத்த ஆறுமாத கால அவகாசம் பத்தாது என்று சொல்லி விட்டார்கள் . எனவே அது "உலக தமிழ் செம்மொழி மாநாடாக" நடத்தப் படுக்கிறது .

ரைட் , நாம இப்ப விசயத்துக்கு வருவோம் . மாநாடு நடக்கும் நாட்களில் கோவையிலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் காவல் பலமாக்கப்பட்டு , முகாம்களை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது என்று உத்தரவு போடப்பட்டுள்ளது . இதில் பல அகதிகள் தினமும் தினக்கூலியாக பல இடங்களுக்கு சென்று வருபவர்கள் , அவர்களது வருமானம் தடைபட்டுள்ளது .
"சிறை கைதிகள் போல் எங்களை அடைத்து வைத்துள்ளார்கள் என்று அவர்கள் ஒரு தனியார் தொலைகாட்சியில் பேட்டி கொடுத்துள்ளார்கள்".
மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது . பாவம் அவர்களும் தமிழர்கள் தான். அவர்களால் என்ன பிரச்சனை வரும் என்று எனக்கு தெரிய வில்லை????????

தமிழ் நாட்டில் உள்ள 75 சதவீத பேருந்துகள் அனைத்தும் கோவைக்கு திருப்பி விடப்பட்டுள்ளன , கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பஸ் பற்றாகுறையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர் . இதற்க்கு தகுந்த முன்னேற்பாடு செய்திருக்க வேண்டும் , எல்லா அரசு அதிகாரிகளுக்கும் இது நன்றாக தெரியும் , இருந்தாலும் அலட்சியம் .

என்ன செய்வது ?????

ஒன்னும் பன்னமுடியாது , இன்னைக்கு 2 :30 -க்கு இந்தியா- இலங்கை கிரிக்கெட் பைனல்ஸ் இருக்கு, பாப்கான் சாப்டே அத போய் பாரு ...

***********************************

தமிழ் நாட்டு எல்லையோரம் உள்ள ஆந்திரா கிராமத்தில் கள்ள சாராய வேட்டைக்கு சென்ற ஒரு S.I உட்பட ஆறு போலீஸ்காரர்களை அந்த கிராம மக்கள் சிறை பிடிச்சது , மரத்தில் கட்டிவைத்துள்ளனர் . அந்த ஊர் பெரியவர்கள் வந்து நீங்கள் யார் இங்கு ரைடு வர என்று சத்தம் போட்டுள்ளனர், பின் ஆந்திரா போலீஸ் உயர் அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தி தமிழ் நாட்டு போலீஸ்காரர்களை மீட்டு வந்துள்ளனர் . (நன்றி தின தந்தி )

சார் , எனக்கு ஒன்னும் புரியல , என்ன பைத்தியகாரத்தனமா இருக்கு , தமிழ் நாட்டு போலீஸ் ஆந்திரா செல்லக்கூடாதா ? அவர்களை கள்ள சாராய கும்பல் சிறைபிடித்து , கட்டிவைத்து மிரட்டி உள்ளனர். அவர்களை விடுவிக்க ஆந்திரா போலீசார் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர் .
என்ன நாடு இது ?
சாராய கும்பலிடம் பேச்சுவார்த்தை?
எந்த உலகத்தில் இருக்கிறோம் ? ??????????

Wednesday, June 23, 2010

செந்தழல்

"அண்ணே இந்த வாரம் சனிக்கிழமை காசுகுடுதிறேன்"

"அதுக்கு சொல்லலாமா , பாரு நானும் காசுகுடுத்து தான் சந்தையில இருந்து சாமான் வாங்க வேண்டி இருக்கு , நீ ஒரு ஆளு மூணு மாசம் பாக்கிவச்சா நான் எப்படிம்மா சமாளிப்பேன்?"

"இல்லண்ணே அவருக்கு மூணுமாசமா சம்பளம் தரல , இந்த வாரம் வந்திடும்ன்னு சொன்னாரு , வர்ற சனிக்கிழம தந்துடுறேன் "

"சரிம்மா என்னா வேணும்?"


சமையல் சாமான்களுடன் வீட்டிற்கு வந்து பசியால் அழுது கொண்டிருத்த குழந்தையை ஆசுவாசபடுத்தி விட்டு சமைக்க தொடங்கினால் . மறுநாள் இரவு ஏழுமணிக்கு முருகேசன் வந்துவிட்டான் .

"புள்ள இந்தா மூணுமாச சம்பளத்தையும் சேத்து குடுத்திட்டாக , நல்லா சமைச்சு வையி நான் வெளியில போயிட்டு வர்றேன்" .

"மாமா சீக்கிரம் வந்திடு ரொம்ப குடிக்காத"

"சரி, சரி "

பணத்தை சாமி படத்துக்கு அருகில் வைத்து கும்பிட்டால் . குழந்தையை தூக்கி கொண்டு அண்ணாச்சி கடைக்கு சென்றால்

"அண்ணாச்சி , அவுக சம்பளம் வாங்கிட்டு வந்துட்டாக , இன்னைக்கு விளக்கு வச்சாச்சு அதுனால காலைல காச செட்டில் பண்ணிடுறேன் "

"சரிம்மா இப்ப என்ன வேணும்? "

"அண்ணாச்சி இத லிஸ்ட்டுல இருக்காத போட்டு வைங்க , நான் போய் கோழி வாங்கிட்டு வர்றேன் "

"சரிம்மா குடு "

கோழி வாங்க பாலம் தாண்டி மெயின் ரோடு முக்கை நோக்கி நடந்தால்...

"என்னா முருகேசு இன்னைக்கு தான் வந்தியா? "

"ஆமாண்ணே , கொஞ்சம் சரக்கு சாப்பிடுங்க "

"இல்லைப்பா இப்ப தான் சாப்பிட்டேன் "

"அண்ணே கொஞ்சம் சாப்பிடுங்க "

"சரிப்பா ஒரு கட்டிங் மட்டும் ஊத்து "

திடீரென்று குப்பத்தில் ஒரே சத்தம் .....

முருகேசன் அடிச்சு விழுந்து ஓடிவந்து பார்த்தான் , குப்பத்தில் பல குடிசைகள் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்தன ,

ஆறு தீயணைப்பு வண்டிகள் நான்கு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்

எறிந்த நாற்பது குடிசைகளில் முருகேசன் குடிசையும் ஒன்று.

மூன்று மாத சம்பள பணத்துடன் எரிந்துபோயிருந்தது.


-------------------------------


டிஸ்கி : ஸ்டாப் , ஸ்டாப்............... , ஸ்ஸ்ஸ்டாப் ........... என்னா சின்னபுள்ள தனமா இருக்கு , எதுனாலும் பேசி தீத்துகல்லாம் , நல்லா இருந்தா புடிச்சிருக்குன்னு சொல்லுங்க இல்லை புடிக்கலைன்னு சொல்லுங்க , அத விட்டுட்டு.................. பஞ்சாயத்துல வச்சு பேசிக்கலாம் ...........

Monday, June 21, 2010

என்னா கொலவெறி???

என்னா உலகம்டா இது ? எதுக்கும் ஒரு அளவு இருக்கு , ஒரு நாள் அடிக்கலாம் ரெண்டு நாள் அடிக்காலாம் , கண்ணுல படுரநேரம் எல்லாம் அடிக்க தொரத்தினா எப்படி ??? என்னா கொலவெறி? , (ஒரு பிரண்டுன்னு கூட பாக்காம தரத்தி துரத்தி அடிக்கிறானுக.)

அப்புறம் ஒரு மனுஷன் எப்படித்தான் உயிர் வாழ்வது ??? நீங்களே ஒரு நியாயத்த சொல்லுங்க?.


அந்த விஷயம் கூட இன்னைக்கு நேத்து நடக்களைங்க , காலேஜு படிக்கும் போது நடந்தது , இன்னும் மறக்காம அதே கொலவெறியோட தொரத்துராணுக ,(இவனுககிட்ட இருந்து தப்பிச்சு ஓடுறதே பொழப்பா போச்சு) , அப்படி என்னத்தங்க செஞ்சிட்டோம்???
(என்னம்மோ இவனுக பிகர்கூட கடலை போட்டத அவனுக பொண்டாட்டிட போட்டுகுடுத்த மாதிரி)

அப்படி என்னதான் நடந்ததுன்னா ??????

அன்னைக்கு சனிகிழமை , காலேஜ் லீவு , 7 தடவையா "இதயத்தை திருடாதே" (அப்பைஎல்லாம் ஒரே லவ்ஸ் தான் ) படம் பாக்கலாம்ன்னு நானும் , என் பிரண்டு சிவாவும் எங்க ஊரு போடில இருந்து , தேனிக்கு (தேனி எங்க ஊருக்கு பக்கத்து ஊரு ) கிளம்பினோம் , தேனிலா பச்ச விட்டு இறங்கி தியேட்டருக்கு போயிட்டு இருக்கும் போது வழியில எங்க காலேஜ் கிளாஸ் மேட் பாலா (காலேஜுலே பெரிய்ய டெர்ரர் இவரு ) வந்தான்..... ,

"டே, மச்சான்ஸ் வாங்கடா ? என்னா இந்த பக்கம் ?"

"ஒன்னும் இல்ல மாப்பு , சும்மா படத்துக்கு வந்தோம்"

"என்னா படம்
?"

"அதுதான் , இதயத்தை திருடாதே
"

"அட டோமருங்களா எத்தினவாட்டிடா பாப்பிங்க ? சரி , சுரேஷ் எங்க? அவன் வரைலயா ?
"
(நம்ம இன்னொரு பிரண்டுங்க , போடில இருக்கான் )


"உனக்கு தெரியாதா? சுரேஸ நாய் கடிச்சிருச்சு ."
(சத்தியா சும்மா விளையாட்டுக்கு சொன்னோம் , பிளான் கூட பண்ணல)

"ஐயோ, எப்படா ?
"

"இன்னைக்கு காலைல தான் , அதுதான் அவன் ஊசிபோட்டு வீட்ல படுத்துருக்கான்."

"எங்கடா கடிச்சு?"

"பெருமாள் கோவில் பக்கத்துல
"

"அடிங் ங்கொய்யாலே
.... வாயில கெட்ட வார்த்த வந்திடும் , அவன் ஒடம்புல எந்த இடத்தில கடிச்சு ?

"ஓ
அதுவா ?
, வலது கால்லடா ."

"சரி மாப்ள , பை டா?
"

"ஓகே மாம்ஸ் , பை
"

சரின்னு ஒரே லவ் மூடோட படத்த பாத்திட்டு வந்தோம் , போடிக்கு வந்தா நம்ம சுரேஷ் எதுக்க வர்றான்............. ,
"எங்கடா போயிட்டு வர்ரிங்க ?"

"தேனிக்கு படத்துக்கு போனம்டா ?
"

"என்ன "இதயத்தை திருடாதே" படமா?


"ஆமாடா மச்சி எப்படிடா கண்டுபுடிச்ச ?"


"
கழுத கெட்டா குட்டிச்சுவறு
, சரி பாலாவ பாத்திகளா ?"

"ஆமாடா , அவன் வீட்டுக்கு போனோம் பாவம் அவன நாய் கடிச்சிருச்சு ?
"

"அடடா , எப்போ ?
"

"காலைல .
"
......
......


மறுநாள் , சண்டே வழக்கம் போல மொக்க போட்டு , அடுத்த நாள் மண்டே வழக்கம் போல லேட்டா காலேஜுக்கு போனோம் , காலேஜ் என்ற்றன்சுல கூட நுழையலங்க , அந்த நாயக சுரேசும் , பாலாவும்(கிளாசுக்கு கூட போகாம எங்களுக்காக வைட்பன்னிருக்காணுக ) விட்டு தொரத்தி , தொரத்தி அடிக்கிறானுக !!!

நாம யாரு விடுவமா??? எடுத்தேன் பாரு ஓட்டம் இன்னும் நிக்களைங்க!!!

என்னடா இந்த கோபத்துல தொரத்துரானுகன்னு தீவிரமா கிளாஸ் பொண்ணுக கிட்ட (பாருங்க எல்லா பயபுள்ளைகளும் , பொண்ணுக கிட்ட மட்டும் தான் உண்மையா சொல்லுறானுக ) விசாரிச்சு பாத்தா!!!

இவனுக ரெண்டு பெரும் நாங்க சொன்ன மறுநாள் சண்டே அன்னைக்கு , இந்த லூசு பசங்க இவன பாக்க அவனும் , அவன பாக்க இவனும்
(அதுவும் கைல பழங்கள் எல்லாம் வாங்கிகிட்டு ) போயிருக்காணுக . அதுக்கு நாங்களாங்க பொறுப்பு ?

டிஸ்கி : இது ஏற்கனவே நான் ப்ளாக் ஆரம்பிச்ச புதுசுல போட்ட பதிவு தான் , அப்ப புதுசுநாலா சரியா எழுதல எனக்கும் அது திருப்தியா இல்லை , அதனால்தான் இந்த மீள் பதிவு , படிச்சிட்டு இது எப்படி இருக்குன்னு சொல்லுங்க


Wednesday, June 16, 2010

சமைத்து சாவடிக்கலாம் - மங்குனி டி.வி

அன்பான மங்குனி டி.வி நேயர்களே , இன்றைய "சமைத்து சாவடிக்கலாம் " நிகழ்ச்சியில் உங்களுக்காக சமைத்து சாவடிக்கபோகிறவர் "கையேந்திபவன் மர்டர் மாணிக்கம்".

"வணக்கம் "கையேந்திபவன் மர்டர் மாணிக்கம்" (உஸ். அப்பா ....... எவ்ளோ பெரிய பேரு ) அவர்களே"

"வ
ணக்கம் "

"சார் முதல்ல ஒரு டவுட்டு "

"கேளுங்க சார் "

"உங்களுக்கு எப்படி இவ்ளோபெரிய பெயர் வந்துச்சு ?"

"சார் என் மாணிக்கம் தான் , நான் தேனாம் பேட்ட சிக்னல்ல ஒரு கையேந்தி பவன் வச்சு கிட்ட தட்ட இதுவரைக்கும் 166 பேர சாப்பாடு போட்டே கொன்னுருக்கேன். என்னோட சாப்பாட சாப்படு 100 வது ஆள் செத்தத பாராட்டி "இங்கிலாந்து இளவரசர்" குடுத்த பட்டம் தான் "கையேந்திபவன் மர்டர் மாணிக்கம் ."


ஓகே. ஓகே இன்னைக்கு என்ன சமைத்து சாடிக்க போறீங்க ? அதை நேயர்களிடம் நீங்களே சொல்லிடுங்க

வணக்கம் மங்குனி டி.வி நேயர்களே , இன்று நான் செய்யபோகும் ஐட்டத்தின் பெயர் "அரளிவிதை டீப் பிரை "

தேவையான பொருட்கள்


அரளி விதை (நன்கு முற்றியது ) - 1 /2 கிலோ

நுவகிறான் - 100 ml டிக் 20 - 100 ml
(நுவகிறான் , டிக் 20: எல்லா உரம், பூச்சி மருந்து கடைகளில் கிடைக்கும் )

தூக்க மாத்திரை - 10

விஷம் பாட்டில் - 1
(இது எல்லா தமிழ் பட வீடுகளிலும் இருக்கும )

கரம் மசாலா - 1 பாகெட்

விளக்கெண்ணெய் - 1 /2 லிட்டர்


சயனைட் - 10 கிராம்


செய்முறை


நுவகிறான் , டிக் 20 இரண்டையும் கலந்து அரளி விதையை நன்கு கழுவி அந்த கலவையில் 1 மணி நேரம் ஊறவைக்கவும் . தூக்க மாத்திரையை நன்றாக பொடிசெய்து கொள்ளவும் .ஒரு வானெலியில் விளக்கெண்ணையை ஊற்றி நன்றாக காய வைக்கவும் . என்னை காயிந்தவுடன் ஊறவைத்த அரளிவிதையை பொடியாக்கிய தூக்க மாத்திரையில் பிரட்டி எடுத்து பின் எண்ணையில் விட்டு நல்ல பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.

பொறித்து எடுத்த அரளிவிதையை ஒரு தட்டில் வைத்து அதன் மேல் சயனைட் பொடியை தூவிவிடவும்.

அரளிவிதை டீப் பிரை ரெடி , இதை விஷம் தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும் .

நன்றி கையேந்திபவன் மர்டர் மாணிக்கம் , நேயர்களே இன்னைக்கு சமைத்து சாவடிக்கலாம் நிகழ்ச்சிய பாத்திங்க , மீண்டும் அடுத்த வாரம் (உசிரோட இருந்தால் ) நிகழ்ச்சியில் சந்திக்கலாம்.

டிஸ்கி : பின் விளைவுகளுக்கு நிவாகம் பொறுப்பல்ல

Thursday, June 10, 2010

திருட்டு பயபுள்ளைக .................

முஸ்கி : காலேஜுல ஏகப்பட்ட களேபரங்கள் நடக்கும் , காலேஜ் வாழ்க்கை முழுவதுமே சுவாரசியமானது .(அதெல்லாம் காலேஜ் படிச்சவுங்களுக்கு , உன்னைய மாதிரி கேண்டின் நடத்துனவுங்களுக்கு இல்லை )

எங்க காலேஜுல எல்லோரும் லஞ்ச் கொண்டுவருவோம் (பார்ரா உலக அதிசியத்த? ) . மதியம் குரூப் , குரூப்பா உட்கார்ந்து சாப்பிடுவோம் , எல்லா
பயபுள்ளைகளும் லஞ்ச்சுக்கு சோறோட தொட்டுகுற (சைடிஷ்) ஏதாவது ... (சைடிஸ்ச எங்க ஊருல "தொட்டுகுற " அப்படின்னு சொல்லுவோம் ) தேங்காய்சில் , அவிச்ச முட்டை , உருளைக்கிழங்கு , பொறியல் இப்படி ஏதாவது ஒன்னு கொண்டு வருவானுக.

சாப்பிடும் போது சைடிஷ் எடுத்து டிபன் பாக்ஸ் மூடில வைப்பானுக , நானும் , சிவாவும் (நம்ம பிரண்டுங்க ) உடனே அவனுக சைடிஸ்ச எடுத்து லபக்குன்னு வாயில போட்டு சாப்பிட்ருவோம் (ங்கொய்யாலே ...திருட்டு பன்னாடைகளா ? நானா இருந்தா கரப்பான் பூச்சி பிரை கொண்டுவந்துருப்பேன் ). ஆனா எங்க சைடிஷ்ச மெதுவா எடுத்து வாயிக்குள்ள வச்சு எச்சி பண்ணிட்டு எங்க மூடில வச்சுருவோம் (உங்க மூஞ்சிய பாத்தாலே தெரியுது நீங்க எச்சகல பேமிளின்னு ) , எச்சின்னு ஒரு பய அத தொட மாட்டான். (எப்படி நம்ம டெக்னிக்கு ) .

பாருங்க கொஞ்ச நாள்ல எல்லா பயபுள்ளைகளும் இ
ந்த டெக்னிக்க பாலோ பண்ண ஆரம்பிச்சுட்டானுக (அடப்பாவிகளா..., ஒரு ஊரையே எச்சகல ஊராக்கிடிங்களே ?) .

இப்ப என்னா பன்றது?

ஒன்னியும் பன்ன முடியாது


டுஸ்கி: அடுத்து தீவிர ஆலோசனை பன்னி (ஆமா பெரிய்ய உள்துறை அமைச்சரு , ஆலோசன பன்றாரு ),

எங்க கவனத்த லேடிஸ் டிபன் பாக்ஸ் பக்கம் திருப்பினோம்.
ஒவ்வொரு கிளாஸ் முடிஞ்சா உடன் , 5 நிமிடம் பிரேக் விடுவாக , அந்த டைம்ல லேடிஸ் பாக்ஸ்ல இருக்க சைடிஷ்கள காலி பன்ன ஆரம்பிச்சோம் (இந்த மானங்கெட்ட பொழப்புக்கு குடும்பத்தோட மருந்த குடிச்சு சாகலாம் ), பாவம் அந்த புள்ளைக டெயிலி ஏமாந்து போகுங்க.

இப்படியே கொஞ்ச நாள் ஓடிச்சு திடீர்ன்னு ஒரு நாள் பாத்தா லேடிஸ் பாக்ஸ் எதுலையும் சைடிஸ்ஸ காணும் , தொடர்ச்சியா ரெண்டுமூணு நாள் சைடிஸ் காணும் , நமக்கு பயந்துகினு சைடிஸ் எடுத்திட்டு வர்றதில்லைன்னு பெருமையா நினைசிகிட்டு இருந்தோம் , ஆனா லஞ்ச் முடிஞ்சப்புறம் கேட்டா ஏதாவது ஒரு சைடிஷ் சாபிடோம்ன்னு சொல்லுவாளுக (கேனப்பயலுக .... அப்படின்னு பொண்ணுக மனசுக்குள்ள திட்றமாதிரி ஒரு பீலிங் ),

எங்களுக்கு ஒரே டென்சன் , உடனே செயற்குழு கூட்டினோம் (அட , மொத்த குழுவே நாங்க ரெண்டுபேர் தாங்க )


இல்லாத எங்க மூளைய யூஸ் பன்னி ஒரு அற்புதமான ஆராய்ச்சி பன்னி ஒரு புது ஐடியாவ கண்டுபிடிச்சோம்.(நீங்க மூளைக்கார பயபுள்ளைகடா)

மறுநாள் லேடிஸ் டிபன் பாக்ஸ் எடுத்து சோத்துக்குள்ள விரல் விட்டு பாத்தா , அடிப்பாவிகளா??? எல்லா புள்ளைகளும் சோத்துக்கு அடியில சைடிஸ் வச்சுருக்காளுக!!! (என்னா வில்லத்தனம் ?)

வெற்றி , வெற்றி அப்படின்னு எங்களுக்குள்ளே சத்தம் இல்லாம சத்தம் போட்டுக்கிட்டு புகுந்து விளையாடிட்டோம் , அன்னைக்கு பாக்கணுமே எங்க கிளாஸ் பொண்ணுக மூஞ்சிகள ஒரே அசடு வழிஞ்சது.(மனசுக்குள்ள கெட்ட வார்த்தைல திட்டிருப்பாளுகளோ ?)

பாவம் அந்த பொண்ணுக , அஞ்சு வருஷ காலேஜ் லைப்ல ஒரு நாள் கூட (நாங்க திருட ஆரம்பிச்ச பிறகு ) நிம்மதியா சைடிஸ் சாப்பிட்டதே இல்லை .

டிஸ்கி : அவளுக விட்ட சாபமோ என்னவோ , இப்பல்லாம் ஓசி சாப்பாடே கிடைக்க மாட்டேங்கிது.

Monday, June 7, 2010

மானங்கெட்ட மறத்தமிழர்களே ???


செய்தி : சென்னை மாநகரில் ஜூன் '6 முதல் பிச்சை எடுக்க தடை .......................

பிச்சை எடுக்குரதுன்னா என்னா சார் ?
கோவில், தர்கா , சிக்னல் போன்ற இடங்களில் இனாமாக காசு கேட்பது தான் பிச்சை.

இனிமே இந்த மாதிரி பிச்சை எடுப்பது சட்டப்படி தப்பு , ஆனா இலவச கலர் TV , இலவச வேஷ்டி சேலை , இலவச சைக்கிள், இலவச பொங்கல் சமையல் பொருட்கள் , இலவச மின்சாரம் , இலவச நிலம் என பிச்சை போட்டுக்கொண்டே இருப்பார்கள் .

அட பன்னாட பரதேசி மானங்கெட்ட , மடப்பய மறத்தமிழ் மக்களே இதெல்லாம் எவன் வீட்டு காசு? , எதுவும் அவுங்க சொந்த காசு கிடையாது, எல்லாம் நம்ம காசு. கடை தேங்காய எடுத்து வழிபிள்ளையாருக்கு உடைத்த கதையா உங்க காச எடுத்து உங்களுக்கே பிச்சை போடுறாங்க .

அரசாங்கமே பிச்சை எடுப்பது தப்பு என்றால் பிச்சை போடுவது அதைவிட தவறு , எதையும் பிச்சை போடாம மக்களுக்கு வாங்கும் சக்தியை அதிகப்படுத்து , விலைவாசியை குறைத்து கட்டுக்குள் வை . தனி மனித வருமானத்தை மிக மிக அதிகமாக்கு , முடியாதது எதுவும் இல்லை ,

வருடம் 500 கோடிக்கு மேல் நஷ்டத்தில் இயங்கி வந்த ரயில்வே துறை தற்போது வருடம் 1000 கோடிக்கு மேல் லாபத்தில் இயங்கி வருகிறது .(அடடா.... அதுக்கு காரணம் நம்ம லல்லு தான்னு யாரும் தப்பா எடுத்துகாதிக பிறகு லல்லு ரொம்ப வருத்தபடுவாறு , எல்லாம் I.A.S எனும் மூன்றேழுத்து செய்த வேலை , இதை சுதந்திரமாக செயல் பட விட்டால் எல்லாம் முடியும் )

36 ரூபாய் கொடுத்து ஒரு கிலோ அரிசி வாங்கினால் , அதை உற்பத்தி செய்யும் உழவருக்கு 4 ரூபாய் தான் போய் சேருகிறது , ஏன் இவ்வளவு பெரிய்ய வித்தியாசம்? இதை முதலில் சரி செய்தாலே எதையும் யாருக்கும் பிச்சை போட தேவையில்லை , அவர்களுக்கு தேவையானதை அவர்களே வாங்கிகொள்வார்கள்.

யோசி அரசாங்கமே , யோசி ?????

சார் , அதெல்லாம் விடு சார் , வர்ற டிசம்பர்ல எலக்சன் வரப்போகுதாம் , ஏன்னா? 1991 மற்றும் 2001 A.D.M.K ஆட்சிக்கு வந்தாங்களாம் , அடுத்த வருஷம் 2011 சென்டிமென்ட்டா எதுக்கு வில்லங்கம்முன்னு இந்த வருஷ கடைசிலே ஏலேக்க்சன் வைக்க போறாங்களாம் .


அப்ப என்ன பிச்சை போடுவாங்க ?

இந்த எலெக்சனுக்கு விவசாயிகளுக்கு மொபைல் போன் , போன தபா T.V வாங்குனவுகளுக்கு வெட் கிரைண்டர் (நன்றி ஜூவி ), அப்புறம் செலவுக்கு கைநிறைய காசு பிச்சை போடுவாக , ஐ .. ஜாலி ஜாலி ......

Thursday, June 3, 2010

போங்கடா நீங்களும், உங்க சீரியஸ் பதிவும்!!??

காணவில்லை

மேலே படத்தில் உள்ள "மங்குனி அமைசர்" என்பவரை நேற்றிலிருந்து காணவில்லை , இவர் கொஞ்சம் மனநிலை சரியில்லாதவர் (எல்லாருக்கு உச்சி குளுந்துருக்குமே?) , காணாமல் போகும்போது சிகப்பு கலர் உடை அணிந்திருந்தார் , இவரை கண்டுபுடிபோர் உடனடியாக விஷம் கொடுத்து , கத்தியால் குத்தி , தூக்குல போட்டு ,அப்புறம் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு , அப்புறம் பெட்ரோல் ஊத்தி கொளுத்திட்டு , பின் கீழ் கண்ட முகவரிக்கு வந்து 1000 ரூபாய் பரிசு பெற்றுகொள்ளவும் .( என்னாது 1000 மா ??? இது டம்மி பீசாச்சே , இதுக்கு 100ரே அதிகம் )

---------------------------------------------------------

ஏன் இந்த மாதிரி ஒரு நியுஸ் வந்துச்சுன்னு நீங்க தெரிசுகனும்னா , ஒரு பிளாஸ் பேக் !!!!?????????????


(நீங்களே கொசுவத்திய சுத்திகிட்டே படிங்க )

அட போங்கப்பா , எங்க பாத்தாலும் ஒரே சண்ட கொலைவெறி தாக்குதல்கள் ??? (ஆதிமூலம் , நர்சிம் , மயில் , கார்க்கி , பூக்காரி , அப்புறம் நம்ம கேப்டன்னுக்கு தமிழ்லே புடிக்காத வார்த்த ..... அட அது தாங்க "மன்னிப்பு" , கொலவெறி...... இது தாங்க மொத்த மேட்டர் )

இந்தவாரம் ஒரே
ரணகள ரத்த பூமியா ஆகிப்போச்சு , ஆளாளுக்கு கத்தியோடதான் அலையுரானுக, எங்க போனாலும் ஒரே ரத்த வாடை , சரி நம்மளும் களத்துல குதிச்சு சண்ட போடலாம்னு பாத்தா ? இன்னைக்கு வியாழக்கிழமை, விரதம் ..... வியாழக்கிழமை ரத்தம் பாக்கமாட்டேன்னு நம்ம அசின் தல மேல அடிச்சு சத்தியம்பன்னி குடுத்திட்டேன் , என்ன பன்னலாம்???????

சரி வழக்கம் போல ஒரு காமெடி பதிவு போடலாம்ன்னு உட்கார்ந்து யோசிச்சேன் ??

தக்காளி ஒரு யோசனையும் வரல .


ரெசிடன்சில ரூம் போட்டு கூட யோசிச்சு பாத்தேன் ஒன்னும் வேலைக்காகல !!!
(ஆகா நம்ம பிரைன்ல காமெடி ட்ரேக் வேலை செய்ற பக்கம் தேஞ்சு போச்சு போல....................... )


பட்டாப்பட்டி : என்னாது உனக்கு பிரைனா ? நீ எழுதுறது காமெடியா ? ஏ... மங்கு சும்மா ஜோக் அடிக்காத...........

(டே மங்கு , நீ சீரியஸ் பதிவுலையும் கிங்கு , சும்மா அசத்துடா .................அட? நம்ம மனசாட்சி தாங்க)

சரி சீரியஸா ஒரு பதிவு போடலாம்ன்னு நைட்டு புல்லா யோசிச்சு எழுதினேன் , என் வூட்டுகாரம்மா கூட டீ , ஸ்நாக்ஸ் கொடுத்து நல்ல என்கரேஜ் பண்ணாங்க.

புல்லா எழுதிட்டு படிச்சு பாத்தேன் , என் கண்ணுல தண்ணி வந்துரிச்சு , உச்சி குளுந்து போச்சு , உடம்பெல்லாம் புல்லரிச்சு போச்சு , என்ன அருமையா , உயிரோட்டத்தோட....................................
(மங்கு என்னவோ போடா , உன்ன அடிச்சுக்க ஆளே இல்லடா...... மறுபடியும் மனசாட்சி தாங்க )

சரின்னு பப்ளிஸ் பன்ன போனேன் , டக்குன்னு ஒரு யோசனை , நம்ம வுட்டுகாரம்மா கிட்ட காட்டி படிக்க சொன்னேன் .அவுகளும் பொறும்மையா படிச்சாக ,படிச்சிட்டு என்னைய பாத்து லேசா சிரிச்சாக !!!

நானும் ரொம்ப பெருமையா கேட்டேன் ,

"எப்படிமா இருக்கு ??"


அவுக ஒண்ணுமே சொல்லல , நேர போய் போன எடுத்து அவுக அப்பாவுக்கு , அதாவது என் மாமனாருக்கு போன் போட்டாக

எங்கே நிம்மதி , நிம்மதி என்று தேடி பார்தேன் அது எங்கேயும் இல்ல ...............
.

(அட .. இது என்னோட மாமனார் ரிங் டோன்னுங்க)

"ஹலோ .."

"அப்பா உடனே எனக்கு டைவர்ஸ் வாங்கி தாங்க?
"

"ஐயோ .. ஏம்மா ? என்னாச்சு ?
"

"இந்தாளுக்கு (என்னதான் ) பைத்தியம் புடுச்சு போச்சு , பைத்தியம் கூடவெல்லாம் என்னால குப்ப கொட்ட முடியாது , மரியாதையா டைவேர்ஸ் வாங்குங்க இல்ல ????"

"...................."

"நடு ராத்திரில இந்தாளு தலைய அம்மிக்கல்ல போட்டு...... சாரி... கிரைண்டர் கல்ல போட்டு கொன்னு போடுவேன் , என்னைய தேவையில்லாம ஒரு கொலை கேசுல மாட்டிவிடாதிக"

டிஸ்கி : ...ம்ம்ம்ம்.................... இப்ப தெரியுதா ஏன் அந்த நியுஸ் வந்துச்சுன்னு (என்னா புன்னியம் அதுதான் கைமீரி போச்சே? )