எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Saturday, August 17, 2013

சொந்த செலவுல சூனியம் வச்சுகிறது இது தானோ ?

ஒரு மனுஷன் பல்பு வாங்கலாம் , ஒரு பல்பு கடையே வாங்குனா ?

"போடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு.... போடா .போடா ........ ..... ... ........ ...."

அட நம்ம மொபைல் ரிங் டோனுங்க, அட நம்ம சிவா திருச்சிலருந்து

"ஹலோ, என்னடா சிவா இந்த நேரத்துல ? "

"ஒன்னுமில்ல சுமாதான் , ஆமா இப்ப நீ எங்க இருக்க ? "

"ஏன்? வீட்லதான் "

"கதவ தொரடா பன்னாட "

ஆஹா , சனிகிழமை அதுவுமா சனி சங்கூத ஆரபிசுடுசே எழுந்து மணி பாத்தா 6 , தக்காளி மிட்நைடட்ல வந்து உயிரை வாங்குறான்னு நினசுகிட்டே போய் கதவ திறந்தேன்

"வாடா சிவா , என்னா திடீர்ன்னு? "

"ஒண்ணுமில்ல சும்மா ஒரு ஆபிஸ் மீட்டிங்

திடீர்னு மனசுல ஒரு பல்ப் பளீன்னு எஞ்சிசு , ஆஹா... அடிமை சிக்கிட்டான் இவன வச்சு இன்னைக்கு பொழுத குஜாலா ஓட்டிடலாம்....... , பயபுள்ளவேற நல்லா சம்பாரிகிரானாம்.

சரின்னு காலைல கிளம்பி இவன்தான பில்லு குடுக்க போறான்னு டெய்லி நாமசாப்புடுற கையேந்தி பவன விட்டு நேரா அசோக் நகர் சரவணபவனுக்கு வண்டியவிட்டேன்.

பொங்கல் , வடை , பூரி , நெய்ரோஸ்ட் (ஓசிதானே ) சாப்படு பாத்தா? , கரக்டாஅவன் கைகழுவ போனப்ப சர்வர் பில்ல கொண்டுவந்து நீட்றான் , சரிகாலைடிபன் கம்மி பில்லு தானேன்னு நானே 380 அழுது தொலைச்சேன்.

"என்னாடா அதுக்குள்ள பில்ல குடுத்திட்டியா , சரி வா போகலாம் "

சரின்னு வெளிய வந்து கார எடுத்து மூவ் பன்றேன் , காருக்கு முன்னாடி டைட்டா டி சர்ட் போட்டு ஒரு பொண்ணு வந்து கை ரெண்டையும் தூக்கி மறிச்சு கிட்டு போலிஸ் , போலிஸ்ன்னு கத்துச்சு , இதென்னடா இம்சையா போச்சுன்னு இறங்கி என்னான்னு கேட்டா "காரு" அவளுதாம் ,அப்பத்தான் இந்த சிவா பன்னாட சொன்னான்

"டே, நாம பைக்ல வந்தோம் "

(அடப்பாவி இத முன்னாலே சொல்லகூடாதா , அடிவாங்க விட்டு வேடிக்க பாப்பான் போலருக்கே ?)

சாரி மேம் , உங்க கார எடுத்துகங்க , ஆனா பாருங்க பஸ்டு கார மாத்துங்க, பைக்சாவிகே ஸ்டார்ட் ஆகிடுச்சுன்னு, கார் கார பிகருக்கு அட்வைஸ் பன்னிட்டுநம்ம பைக்க எடுத்திட்டு நேரா போய் அவன் ஆபீஸ் மீட்டிங் முடிச்சிட்டு ,அப்புறம்நேரா நம்ம சரக்கு மேட்டருக்கு போனோம்.

பில்லு 21050 அங்க போனா பந்தாவா கிரெடிட் கார்ட் எடுத்து குடுத்தான் , சர்வர்போயிட்டு வந்து கூலா...

"சார், கிரெடிட் கார்ட் வொர்க் பன்னல"

"அடடா... என்கிட்ட கேஷ் இல்ல போய் ATM ல எடுக்கணும், மச்சான் உன் கார்டகுடு "

சனி சம்மனம் போட்டு என் தல மேல உட்காந்துரிச்சு

என் மூஞ்சி ஹைவேஸ்ல நேசனல் பெர்மிட் லாரில அடிபட்ட நாய் மாதிரி ஆச்சு, அப்புறம் வேற வழியில்லாம என் கார்ட குடுத்தேன்.

முடிச்சிட்டு வெளிய வந்தோம் , இப்ப லஞ்ச சாப்பிடனும், இந்த நாயி கார்டுவொர்க் பன்னல , பேசாம லட்சுமி பவன் போய் ரெண்டு வெஜ் மீல்ஸ் சாப்டம்னா , 60 பது ரூபாயோட முடின்சிடும்ன்னு, இப்ப கரக்ட்டா என் பைக்க போய்எடுத்தேன்.

"மச்சான் நேரா ஏதாவது ATM போ "

என் காதுல தேன் வந்து பாய்ந்தது , அப்பாடா லட்சுமி பவன் வேண்டாம் , நேராஅஞ்சப்பர் போனோம்.

ங்கொய்யாலே.... எப்படியாவது பில்ல ஏத்தனும். நடப்பன , ஊர்வன , பறப்பன , நீந்துவன எல்லா வகைளையும் ஒரு கை பாத்தேன். சாப்டு முடிச்சிட்டு கைகழுவிபீடா போடும்போது சிவாவோட மொபைல் ரிங் ஆச்சு , என்னை பாத்து , உஸ்ஸ்ஸ்..... உதட்டு மேல கைய வச்சு சொல்லிட்டு , மொபைல எடுத்திட்டுவெளிய போய் பேச ஆரம்பிச்சிட்டான் , நம்மள பத்தி எப்படிதான் கண்டு புடிகிரான்களோ, தக்காளி கரக்டா சர்வர் அந்த நேரம் பாத்து பில்லு கொண்டுவந்தான் .

ஹா.... ஹா.... ஹா..... விதி வலியது , கடவுள் இருக்காரு சார்

960 பில்லு எந்தலைல . ஆஹா .......... இவன்கூடசுத்துனம்னா நம்ம டவுசர கிழிசிருவான்னு, அங்கிருந்தது நேரா வீட்டுக்குபோய்டோம்.

தூங்கி எழுந்து ஈவினிங் நேரா பஸ் ஸ்டாண்ட்லபோய் டிராப் பன்னேன். பஸ்சுலஏறி உட்காந்தான், பஸ்ஸு கிளம்ப போச்சு,(அப்பாடா...... நைட் டிபன் செலவில இவன்ட இருந்து தப்பிச்சிட்டோம் )

"ஓகே , பை டா சீ யு"

"டே ... மச்சான் கூலா ஒரு வாடர் பாட்டில் வாங்கு , மச்சான், மச்சான் அப்படியே ஒரு ஆனந்தவிகடன் , ஒரு பாக்கட் கிங்க்ஸ் "

"வாழ்வே மாயம் , இந்த வாழ்வே மாயம் , வாழ்வே மாயம் .......... .......... ....... ....."

பக்கத்துல யாரோட மொபைலோ இந்த பாட்ட ரிங்குச்சு.

"இந்தாடா"

"ஓகே பை டா மச்சான் , அனேகமா அடுத்த வெனஸ்டே மறுபடியும் வந்தாலும்வருவேன் , நீ இருப்பில்ல ? கொஞ்சம் சாபிங் போய் டிரஸ் எடுக்கனும் "

"%&#*%&#"

டிஸ்கி : யாரும் தயவு செய்து நான் வாங்குன பல்ப எண்ணி கமண்டஸ்ல போட்டு மானத்த வாங்கிடாதிங்க

கிஸ்கி: சன்டே , நாலாவது வாட்டி காலிங் பெல் அடிச்சு , முழிச்சேன் மணி பாத்தேன் மிட்னைட் 6 , டக்குன்னு மொபைல சுவிட்ச் ஆப் பண்ணினேன்

- மீள் பதிவு 

6 comments:

மாதேவி said...

ஹா......ஹா

MADURAI NETBIRD said...

பாஸ் இதுக்குத்தான் எப்பவுமே பர்சுல விசிடிங் கார்டு மட்டும் வைக்கணும்.

Jayadev Das said...

சரின்னு வெளிய வந்து கார எடுத்து மூவ் பன்றேன் \\கார்தான் உங்களது இல்லியே, உங்க பைக் சாவியை வச்சா காரை ஸ்டார்ட் பண்ணுனீங்க?

Jayadev Das said...

.

Anonymous said...

ச்சே உங்களை மாதிரி ஒரு பிரண்ட் எனக்கு கிடைக்கலியே.. அவ்வ்வ் ! :)

'பரிவை' சே.குமார் said...

ஹா... ஹா... நண்பன் அமைவதெல்லாம்....