எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Friday, August 9, 2013

இன்கம்டாக்ஸ் ஆபிஸ்ல டேபிள்ள பிஸ் அடிப்பேன்

மிஸ்டர். எக்ஸ் அவர்களை இன்கம்டாக்ஸ் அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்திருந்தார்கள். அளவுக்கு அதிகமாக அவர் பந்தயம் கட்டி பணம் ஈட்டியிருப்பதாக அவர் மீது புகார் வந்திருந்தது.

விசாரணைக்கு புகழ்பெற்ற வக்கீல் ஒருவரை அழைத்து வந்திருந்தார்.

“எங்களுக்கு தெரியும் நீங்க வக்கீலை கூட்டிட்டு வருவீங்கன்னு.. இதிலேயே உங்க மேல இருக்கிற குற்றம் உறுதியாகுது.. நீங்க அளவுக்கு அதிகமா பந்தயம் கட்டுவீங்கதானே?” என அதிகாரிகள் கேட்டனர்.

“அப்படியெல்லாம் இல்லீங்க.. ஏதோ சுமாரா பந்தயம் கட்டுவேன். இப்ப ஒரு பந்தயம்... நான் என் கண்ணை பல்லால கடிப்பேன். பத்தாயிரம் பெட்..” என்றார் மிஸ்டர் எக்ஸ்.

கண்ணை எப்படி பல்லால கடிக்க முடியும்? அதனால் சரி என ஒப்புக் கொண்டனர் அதிகாரிகள்.

மிஸ்டர் எக்ஸ்க்கு ஒரு கண் இல்லை அங்கே போலி கண்ணை சொருகி வைத்திருந்தார். எனவே அந்த போலி கண்ணை எடுத்து கடித்து காண்பித்தார். இப்போது பந்தயத்தில் தோற்று பத்தாயிரம் பணம் தந்தனர் அதிகாரிகள்.

“சரி இப்போ என்னோட இன்னொரு கண்ணையும் பல்லால கடிப்பேன். பத்தாயிரம் பெட் ஓகேவா?”

இவருக்கு பார்வை இல்லாம இருக்க சான்ஸ் இல்ல எனவே இன்னொரு கண்ணை கடிக்க முடியாது என நினைத்து ஒப்புக் கொண்டனர் அதிகாரிகள். ஆனால் மிஸ்டர் எக்ஸ் தன் பல் செட்டை கழற்றி நல்லா இருந்த கண்ணை கடித்து காண்பித்தார்.

மீண்டும் பத்தாயிரம் பணம் தோற்று கடுப்புடன் இருந்தார்கள் அதிகாரிகள். ஆனால் மிஸ்டர் எக்ஸ், “சரி கடைசியா ஒரு பந்தயம்... இதுல தோற்றால் இதுவரை ஜெயிச்ச 20 ஆயிரத்தை திருப்பி தந்திடுறேன். ஆனா ஜெயிச்சிட்டா இன்னொரு இருபதாயிரம் தரணும். என்ன பெட்டுனா.. டேபிளோட ஒரு முனையில் நின்னுகிட்டு இன்னொரு முனையில் இருக்குற குப்பை கூடையில் பிஸ் அடிப்பேன் ஆனா ஒரு சொட்டு கூட சிந்தாது.” என்றார்.

அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர். ஆனால் இம்முறை டேபிள் மேலெல்லாம் சிந்தியதால் மிஸ்டர் எக்ஸ் பந்தயத்தில் தோற்றார். அதிகாரிகள் குதுகலித்து சத்தம் போட்டனர்.

ஆனால் வக்கீல் மயக்கம் போட்டு விழுந்தார்.

வக்கீலை மயக்கம் தெளிய வைத்து கேட்டபோது சொன்னார்.. “மிஸ்டர் எக்ஸ் வரும்போதே என்கிட்ட பெட் கட்டினார்.. நான் இன்கம்டாக்ஸ் ஆபிஸ்ல டேபிள்ள பிஸ் அடிப்பேன்... ஆனா அதுக்கு அதிகாரிகள் கோவிச்சுக்காம சந்தோசப்படுவாங்க... அப்படின்னு பந்தயம்.. இரண்டு லட்சம்...”

- mail updates

6 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரைட்டு....

மங்குனி அமைச்சர் said...

கவிதை வீதி... // சௌந்தர் // said...
ரைட்டு.... ///ஓகே ...அப்போ நான் லெப்ட்ல இன்டிகேடர் போட்டு ஸ்ட்ரைட்டா கிளம்புறேன் :-)))

'பரிவை' சே.குமார் said...

நடத்துங்க... நடத்துங்க...

சென்னை பித்தன் said...

ஹா ஹா ஹா!

மங்குனி அமைச்சர் said...

சே. குமார் said...

நடத்துங்க... நடத்துங்க... //

ஹி,ஹி,ஹி....... சரிங்க நீங்க பெட் கட்ட மாட்டிங்க சரியா ??? 10000 ரூபா பெட்டு

மங்குனி அமைச்சர் said...

சென்னை பித்தன் said...

ஹா ஹா ஹா! //