எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Thursday, April 29, 2010

அசைவ கொத்துபரோட்டா , part: II

முஸ்கி : ரொம்ப முக்கியமானது , அனைத்து சொந்த, பந்த ப்ளாகர்ஸ் , எனது பின்னூட்ட பகுதியில் தவறாக யாரும் பின்னூட்டம் இட்டு அல்லது நீங்கள் எழுதும் பின்னூட்டத்திற்கு யாராவது பதில் எழுதி அது உங்களுக்கு பிடிக்காமல் போனால் உடனடியாக எனக்கு மெயில் மூலம் தெரியபடுத்தவும்.

mail id : yasinshaji@gmail.com


நம்ம பட்டாப்பட்டி எனக்கு ஒரு முக்கியமான பொறுப்பு கொடுத்துட்டாரு, அதாவது

"தனி மனித தாகுதல்னா என்ன ?"

என்பதை பத்தி விளக்கமா பதில் சொல்ல சொல்லிருக்கார் !!!!!!!!!!!!!!!

தனி மனித தாக்குதல் பற்றி தெரிஞ்சுக்கிறதுக்கு முன்னாடி ஒரு விஷயம் இருக்கு அதாவது

"தனி மனித ஒழுக்கம்" ,

அதாவது "தனி மனித ஒழுக்கம்" அப்படின்னா ....................................

கொஞ்சம் இருங்க தண்ணி குடிச்சுட்டு வர்றேன்

(டே, பன்னாட, பரதேசி , டோமரு (don't do இல்ல ), டுபாகூரு, சோமாறி , கயித, கசுமாலம், பேமானி கேப்மாரி, மொள்ளமாரி , முடிச்சவுக்கி, பொறம்போக்கு, ...... ங்கொய்யாலே நான் உனக்கு என்னா துரோகம் ............... சாரிப்பா ஒரு டென்சன், கோபம் , பயத்துல நாக்கு கொலரிடுச்சு ,

ஏம்பா, பட்டா நான் உனக்கு என்னா துரோகம் பன்னேன், பாத்தா படிச்சவன் மாதிரி ஒரு பட்டா பட்டி டவுசர் போட்டு டீசன்டா இருக்க இப்படி என்னைய ஏன் கோத்து விட்டு வேடிக்கை பாக்குர? இது உனக்கே நல்லாருக்கா ? என்னைய பாத்தா அப்படி விவரமான ஆளு மாதிரியா தெரியுது ? எனக்கு கேள்வி மட்டும் தான் கேட்டதேரியும் , பதில் எல்லாம் சொல்ல தெரியாது ,இல்லைனா ஏதாவது பிட்டு குடு அப்படியே காபி பேஸ்ட் பன்னிடுறேன்.................

மரியாதையா நீயே ஏதாவது சொல்லி சமாளி)


டுஸ்கி: என்னோட ஆங்கில புலமை அறிவை பத்தி போன பதிவுல பாத்துருப்பிகளே ? அதுனால தான் இந்த முயற்சி


அப்புறம் இப்ப பாத்திகன்னா நம்ம தமிழ் படம் எதுவும் ஆஸ்கார் அவார்டு வாங்குறது இல்ல ,

ஏன்?

ஏன்னா ?

நம்ம படம் அங்க வரைக்கு ரீச் ஆகல ,

ஏன் ரீச் ஆகல ?

மொழி பிரச்னை , அதாவது அவுக யாருக்கு தமிழ் தெரியாது , அதுனால தமிழ் படத்தை எல்லாம் ஆங்கிலத்துக்கு மொழி மாற்றம் செய்து அவுங்களுக்கும் ரீச் ஆகுற மாதிரி செய்யபோறேன் ,

முதல்ல பழைய தமிழ் பாடல்கல மொழி மாற்றம் செய்யபோறேன் ,

முதல் முயற்சி:

பாலும் பலமும் கைகளில் ஏந்தி .. இந்த பாட்ட இங்கிலீசுல மொழி பெயர்த்துள்ளேன் படித்துவிட்டு உங்கள் அபிபிராயம் சொல்லுங்க

"பாலும் பழமும் கைகளில் ஏந்தி" ................என்ற பாடல் ராகத்தோடு படிக்கவும்


மில்க்கும் புரூட்டும் ஹேண்டில் ஏந்தி
பவள மௌத்தில் ஸ்மைலை சீந்தி
கோல பீகாக்போல் நீ கம்வாயே
கொஞ்சும் பேரட்டே சைலன்ட்கொள்வாயே
..ம்ம்.....ம்..ம்....ம்ம்ம்ம்ம்...........


ஈன்ற மம்மியை யாம் கண்டதில்லை
.............................


இருங்க.. இருங்க.. இருங்க .... பஸ்ட்டு கோபத்த அடக்க கத்துக்கனும் , இப்படி அநியாயமா கோபபட்டா அப்புறம் பி.பி வந்துடும், அதுக்கு மீறி கோபபட்டா ஒடம்பு ரகளமாயிடும் (நான் என் உடம்ப சொன்னேன் ) .


டிஸ்கி : தக்காளி என்னமா யோசிகிரானுக.............. (டாட்டூஸ் தாங்க, கொஞ்சம் அசைவம் ஜாஸ்தி)
?
?
?
?
?
?

STOP
(அசைவம் புடிக்காத பிளாகர்ஸ் நீங்க இங்கருந்து நேரா கமண்ட்ஸ் பாக்ஸ் போயிடுங்க)
?
?
?
?
?
?
?
?
?
?
?
?

thank you


கிஸ்கி : என்னத்த.......... சொல்ல .................

Monday, April 26, 2010

எமகாத பயபுள்ளைக


முஸ்கி : தயவு செய்து யாரும் இந்த ரகசியத்த யார்கிட்டயும் சொல்லிடாதிக,
மிரட்டி கேப்பாக சொல்லிடாதிக, அடிச்சு கூட கேப்பாக அப்வும் சொல்லிடாதீக

எங்க காலேஜுல இன்டேனல் எக்ஸ்ஜாம், இன்டேனல் எக்ஸ்ஜாம் அப்படின்னு ஒன்னு நடக்கும்,


"ஜெய்லானி : டே, கூமுட்ட
மங்கு, இன்டேனல் எக்ஸ்ஜாம் எல்லா காலேஜிலையும் நடக்கும் "

"சரிப்பா விடு , எந்நேரமும் ஆப்பு வைகிரதுலே குறியா இருக்கானுக ."


நமக்கு மேஜர் மாத்ஸ்(?????????)


"பட்டாப்பட்டி : டே , நீ எப்ப , எதுக்கு காலேஜ் போன ? , .................... அங்க கேன்டின் நடதுனியா?"

"உஸ்ஸ்ஸ்ஸ்.............எங்க போனாலும் இழுத்து வச்சு கும்மி அடிகிரானுகளே"


அதுனால இங்கிலீசு எல்லாம் அவ்வளவு சரியா வராது , மத்த பேப்பர் எல்லாம் அடுத்தவன பாத்து எழுதிடுவோம் , ஆனா , இங்கிலீச யாரையும் பாத்து எழுத முடியாது , ஏன்னா ? எவனுக்குமே இங்கிலீஸ் தெரியாது


"வெளியூர்காரன் : என்னமோ , மத்ததுல எல்லாம் பின்னிபெடலெடுக்குற மாதிரி ..."

"போதும்................, என்னால முடியல , என்னா அளிச்சாட்டியம் பன்றானுக?"

யு.ஜில பஸ்ட்டு நாலு செமஸ்டருக்கு லாங்குவேஜ் இங்கிலீஸ் இருக்கும் , இன்டேனல் அப்ப பஸ்ட்டு தமிழ் எக்ஸ்ஜாம் ரெண்டு மூணு அடிசனல் சீட் சுட்டுவந்துருவோம் , மறுநாள் இங்கிலீஸ் எக்ஸாம் முக்கு வரபோற " essay" அப்படியே கம்ப்ளீட்டா எழுதிட்டு போய் மறுநாள் எக்ஸாம் உள்ள சொருகிடுவோம்.

முஸ்கி : எதிலையும் ஒரு நேர்மை இருக்கனும், ஆனா காலேஜ் நிவாகத்துக்கு அது தெரியலையே ?

பாருங்க இது பொறுக்காம (என்னமோ நாங்க இந்திய ராணுவரகசியத்த கடத்திட்ட மாதிரி ) அப்புறம் அடிசனல் சீட்ல "a "," "b" , "c " ,"d " அப்படின்னு சீல் போட்டு குடுக்க ஆரமிச்சாங்க.

ஒரு நாள் எக்ஸ்ஜாம் புல்லா ஏதாவது ஒரு சீல் இருக்கும் , மறுநாள் எச்ஜாமுக்கு என்ன சீல் வரும்னு தெரியாது , இப்ப என்ன செய்றது?

வாழ்க்கைல
இப்படி பல தடைகள் வரத்தான் செய்யும் , அதை கண்டு துவன்டு விடகூடாது. அப்படின்னு சாலமன் பாப்பையா சொல்லிருகாரு

சரின்னு
எல்லா டிபார்ட்மென்ட் பசங்களையும் ஒன்னுகூட்டி ஒரு ரகசிய அவசரஆலோசனை நடத்தினோம் ,

"சித்ரா:அப்ப கூட படிச்சு எழுதனும்ன்னு நினைசானுகளா பாருங்க "

"சித்ரா மேடம் நீங்களுமா.............. , ஆஹா இன்னைக்கு ஊரே ஒன்னு கூடிடாங்கப்பா"


ஸ்டூடன்ட்சா கொக்கா , அடுத்த எக்ஸ்ஜாமில இருந்து டெய்லி ஒரு சீல்னு அடிசனல் பேப்பர் சுட்டு வந்து , அடுத்த இண்டேனல் இங்கிலீஸ் எக்ஸ்சாமுக்கு எல்லா சீல்லையும் , ஒரே "essay" எழுதிட்டு போய் அன்னைக்கு எந்த சீல் பேப்பர்தர்றாங்களோ அந்த அடிசனல் சீட்ட எடுத்து சொருகிட்டு வந்துகிட்டே இருப்போம் (தக்காளி அப்படியும் பாடர்ல தான் பாஸ் பன்னுவோம்).


"வால்பையன் : சேம் பிளட் "
"வா தல, நீ எங்கயும் போகாத என் பக்கத்திலே இரு , சுத்தி, சுத்தி அடிகிரானுகப்பா
"


அப்படி இப்படின்னு கஷ்டப்பட்டு , யு .ஜி பாஸ் பன்னிட்டு (டே , பட்டா நம்ம ஜெய்லானி மேல சத்தியமா பாஸ் பண்ணிட்டேன் சும்மா நொன்ன நோனாங்கி தனமா எதுவும் கேட்காத ), பி .ஜி ல இதே மாதிரி அடிசனல் சீட்ல essay எழுதிட்டு போய் , செகண்ட் டே இன்டேனல் சொருகிட்டு வந்துட்டேன் , வெளிய வந்து பொம்பள புள்ளைகல்ட்ட பெருமையா சொன்னேன் , அதுக ஆபிரிக்கா காட்டு ஜந்து போல பாத்துசுக , என்னாடான்னு கேட்டா பி.ஜி.ல லாங்குவேஜ் பேபரே கிடையாதாம்!!!!!

டிஸ்கி : சே , இந்த பயபுள்ளைக எப்பவுமே இப்படிதான் கிண்டி விட்டு வேடிக்க பாப்பானுக்க , முன்னாடியே பி.ஜி ல எல்லாம் லாங்குவேஜ் பேப்பர் கிடையாதுன்னு சொல்லகூடாது ?


கிஸ்கி :
ஆஹா , ஊருக்குள்ள நமக்கு எதிரிக்க ஜாஸ்தி ஆகி போச்சு , பேசாம கன்னத்துல ஒரு மருவ வச்சுக்கிட்டு, ஒரு கூலிங் கிளாஸ் மாட்டிகினு மாறுவேசத்துல திரிய வேண்டியதுதான்.


------- /// --------- /// ............


என்னோட சின்ன வயசு போட்டோ ஒன்னு இப்பதான் கிடைச்சு , பாருங்க

?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?

மம்மி..... அந்த லைடர எடு.............

( நாங்கல்லாம் பிறக்கும் போதே ரவுடிக)


எதிர்ப்பு தெரிவிக்கும் ப்ளாகர்ஸ்...... , சிகரெட்ட பத்த வச்சாதான் பேச்சு...................


Monday, April 19, 2010

தனக்கு தானே சூனியம் வச்சுகிறது இது தானோ ?

டிஸ்கி :ஒரு மனுஷன் பல்பு வாங்கலாம் , ஒரு பல்பு கடையே ஒரு மனுசனவாங்குனா ?

நாலாவது வாட்டியும் காலிங் பெல் அடிச்சு , எவன்டா அவன், கதவ தொறக்காம விட்டம்னா வீட்ல ஆள் இல்லைன்னு போயிடுவான்னு பாத்தாவிடாம அடிக்கிறானே ? நாம யாரு? அப்பையும் விடாம தூங்குற மாதிரியே நடிச்சோம் . ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு

"போடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு.... போடா .போடா ........ ..... ... ........ ...."

அட நம்ம மொபைல் ரிங் டோனுங்க, அட நம்ம சிவா திருச்சிலருந்து

"ஹலோ, என்னடா சிவா இந்த நேரத்துல ? "
"ஒன்னுமில்ல சுமாதான் , ஆமா இப்ப நீ எங்க இருக்க ? "
"ஏன்? வீட்லதான் "
"கதவ தொரடா பன்னாட "

ஆஹா , சனிகிழமை அதுவுமா சனி சங்கூத ஆரபிசுடுசே எழுந்து மணி பாத்தா 6 , தக்காளி மிட்நைடட்ல வந்து உயிரை வாங்குறான்னு நினசுகிட்டே போய் கதவ திறந்தேன்

"வாடா சிவா , என்னா திடீர்ன்னு? "

"ஒண்ணுமில்ல சும்மா ஒரு ஆபிஸ் மீட்டிங் , நினச்சன்டா நாலுவாட்டிபெல்அடிச்சும் தொறகலையா? நீ உள்ளதான் இருக்கேன்னு கன்பாம்பன்னிட்டேன்"

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....... எல்லா பயபுள்ளைகளும் நம்மள பத்தி நல்லா தெரிஞ்சு வச்சிருகானுக, திடீர்னு மனசுல ஒரு பல்ப் பளீன்னு எஞ்சிசு , ஆஹா... அடிமை சிக்கிட்டான் இவன வச்சு இன்னைக்கு பொழுத குஜாலா ஓட்டிடலாம் , பயபுள்ளவேற நல்லா சம்பாரிகிரானாம்.

சரின்னு காலைல கிளம்பி இவன்தான பில்லு குடுக்க போறான்னு டெய்லி நாமசாப்புடுற கையேந்தி பவன விட்டு நேரா அசோக் நகர் சரவணபவனுக்கு வண்டியவிட்டேன்.

பொங்கல் , வடை , பூரி , நெய்ரோஸ்ட் (ஓசிதானே ) சாப்படு பாத்தா? , கரக்டாஅவன் கைகழுவ போனப்ப சர்வர் பில்ல கொண்டுவந்து நீட்றான் , சரிகாலைடிபன் கம்மி பில்லு தானேன்னு நானே 280 அழுது தொலைச்சேன்.

"என்னாடா அதுக்குள்ள பில்ல குடுத்திட்டியா , சரி வா போகலாம் "

சரின்னு வெளிய வந்து கார எடுத்து மூவ் பன்றேன் , காருக்கு முன்னாடி ஒருத்தன் ஓடி வந்து கை ரெண்டையும் தூக்கி மறிச்சு கிட்டு போலிஸ் , போலிஸ்ன்னு கத்துறான் , இதென்னடா இம்சையா போச்சுன்னு இறங்கி என்னடான்னு கேட்டா "காரு" அவனுதாம் ,அப்பத்தான் இந்த சிவா பன்னாட சொன்னான்

"டே, நாம பைக்ல வந்தோம் "

(அடப்பாவி இத முன்னாலே சொல்லகூடாதா , அடிவாங்க விட்டு வேடிக்க பாப்பான் போலருக்கே ?)


சாரி சார் , உங்க கார எடுத்துகங்க , ஆனா பாருங்க பஸ்டு கார மாத்துங்க, பைக்சாவிகே ஸ்டார்ட் ஆகிடுச்சுன்னு, கார் காரனுக்கு அட்வைஸ் பன்னிட்டுநம்ம பைக்க எடுத்திட்டு நேரா போய் அவன் ஆபீஸ் மீட்டிங் முடிச்சிட்டு ,அப்புறம்நேரா நம்ம மேட்டருக்கு போனோம்.

பில்லு 1320 அங்க போனா பந்தாவா கிரெடிட் கார்ட்எடுத்து குடுத்தான் , சர்வர்போயிட்டு வந்து கூலா...

"சார், கிரெடிட் கார்ட் வொர்க் பன்னல"
"அடடா... என்கிட்ட கேஷ் இல்ல போய் ATM எடுக்கணும், மச்சான் உன் கார்டகுடு "

டுஸ்கி : சனி சம்மனம் போட்டு என் தல மேல உட்காந்துரிச்சு

என் மூஞ்சி ஹைவேஸ்ல நேசனல் பெர்மிட் லாரில அடிபட்ட நாய் மாதிரி ஆச்சு, அப்புறம் வேற வழியில்லாம என் கார்ட குடுத்தேன். (பட்டா விசிடிங் கார்டு இல்ல கிரடிட்கார்டு, தக்காளி இவன் கரக்ட்டா நொன்ன தனமா கேட்பான் )

முடிச்சிட்டு வெளிய வந்தோம் , இப்ப லஞ்ச சாப்பிடனும், இந்த நாயி கார்டுவொர்க் பன்னல , பேசாம லட்சுமி பவன் போய் ரெண்டு வெஜ் மீல்ஸ் சாப்டம்னா , 60 பது ரூபாயோட முடின்சிடும்ன்னு, இப்ப கரக்ட்டா என் பைக்க போய்எடுத்தேன்.

"மச்சான் நேரா ஏதாவது ATM போ "

என் காதுல தேன் வந்து பாய்ந்தது , அப்பாடா லட்சுமி பவன் வேண்டாம் , நேராஅஞ்சப்பர் போனோம்.

கொய்யாலே.... எப்படியாவது பில்ல ஏத்தனும். நடப்பன , ஊர்வன , பறப்பன , நீந்துவன எல்லா வகைளையும் ஒரு கை பாத்தேன். சாப்டு முடிச்சிட்டு கைகழுவிபீடா போடும்போது சிவாவோட மொபைல் ரிங் ஆச்சு , என்னை பாத்து , உஸ்ஸ்ஸ்..... உதட்டு மேல கைய வச்சு சொல்லிட்டு , மொபைல எடுத்திட்டுவெளிய போய் பேச ஆரம்பிச்சிட்டான் , நம்மள பத்தி எப்படிதான் கண்டு புடிகிரான்களோ, தக்காளி கரக்டா சர்வர் அந்த நேரம் பாத்து பில்லு கொண்டுவந்தான் .

ஹா.... ஹா.... ஹா..... விதி வலியது , கடவுள் இருக்காரு சார்

660 பில்லு எந்தலைல . ஆஹா .......... இவன்கூடசுத்துனம்னா நம்ம டவுசர கிழிசிருவான்னு, அங்கிருந்தது நேரா வீட்டுக்குபோய்டோம்.

தூங்கி எழுந்து ஈவினிங் நேரா பஸ் ஸ்டாண்ட்லபோய் டிராப் பன்னேன். பஸ்சுலஏறி உட்காந்தான், பஸ்ஸு கிளம்ப போச்சு,(அப்பாடா...... நைட் டிபன் செலவில இவன்ட இருந்து தப்பிச்சிட்டோம் )

"ஓகே , பை டா சீ யு"
"டே ... மச்சான் கூலா ஒரு வாடர் பாட்டில் வாங்கு , மச்சான், மச்சான் அப்படியே ஒரு ஆனந்தவிகடன் , ஒரு பாக்கட் கிங்க்ஸ் "

"வாழ்வே மாயம் , இந்த வாழ்வே மாயம் , வாழ்வே மாயம் .......... .......... ....... ....."

பக்கத்துல யாரோட மொபைலோ இந்த பாட்ட ரிங்குச்சு.


"இந்தாடா"
"ஓகே பை டா மச்சான் , அனேகமா அடுத்த வெனஸ்டே மறுபடியும் வந்தாலும்வருவேன் , நீ இருப்பில்ல ? கொஞ்சம் சாபிங் போய் டிரஸ் எடுக்கனும் "
"%&#*%&#"

டிஸ்கி : யாரும் தயவு செய்து நான் வாங்குன பல்ப எண்ணி கமண்டஸ்ல போட்டு மானத்த வாங்கிடாதிங்க


கிஸ்கி: சன்டே , நாலாவது வாட்டி காலிங் பெல் அடிச்சு , முழிச்சேன் மணி பாத்தேன் மிட்னைட் 6 , டக்குன்னு மொபைல சுவிட்ச் ஆப் பண்ணினேன்Monday, April 12, 2010

இந்த அநியாயத்த கேட்க யாருமே இல்லையா ?

டிஸ்கி : என்ன கொடுமை சார் இது , எனக்கு நடந்த இந்த கொடும நம்ம பிளாகர்ஸ்வேற யாருக்கும் நடக்க கூடாதுன்னு , நம்ம பட்டாபட்டிய பழனில காவடிஎடுகுரதாகவும் , ஜெயலானிய தல முடிய திருப்திக்கு காணிக்கை செய்றதாகவும் வேண்டிகிட்டு இருக்கேன் . (ரோஸு நீ தான் இந்த பசங்க கூப்டு போயிவேண்டுத நிரவேத்தனும் )


என்னா உலகம் சார் இது ? , நான் பாட்டுக்கு சிவனேன்னு நான் உண்டு ன் பிளாக்உண்டுன்னு இருக்கேன் ?, யாரையாவது தொந்திரவு பண்ணினனா? இல்ல ரெண்டு "பீரு", ரெண்டு "தம்"மை தவிர யார்கிட்டையாவது எக்ஸ்ட்ரா எதுவும் கேட்ருக்கனா?

அறிவுகெட்ட பரதேசி, பன்னாட , நாதாரி எந்த
எச்சகல நாயோ வந்து ஆணி கேட்டுச்சாம் , அதுக்கு என் ஆபிசுல என்னைய ஆணிபுடுங்க சொல்றானுக ?


இந்த
அநியாயம்உலகத்தில எங்கயாவது நடக்குமா ? அவனுக கிட்ட நான் எப்பவாவது ஆணிபுடுங்க சொல்லிருக்கனா ? பாருங்க இந்த 4 நாளா பிளாக் படிக்க முடியாம , கமெண்ட்ஸ் போடா முடியாம கை எல்லாம் நடுங்குது , இது ஆண்டவனுக்கே
பொறுக்குமா ? இதுக்கு தான் எங்கப்பா அப்பவே சொன்னார் , 3 வதுக்கு மேல படிக்காதடா , பின்னாடி ரொம்ப கஸ்டபடுவன்னார் , கேட்டனா ? பின்னூட்ட கொலசாமிக்கு காசு வெட்டி போட்டு இவனுக கண்ணுரெண்டையும் அவிஞ்சு போக செய்யல நான் மங்குனி அமைசர் இல்ல? சரிவேலைய ராஜினாமா பண்ணிடலாம்னா , ஒபாமா என்னோட ராஜினாமாவைஏத்துக்க மாட்றார், நீங்க ராஜினாமா பண்ணிட்டா அப்புறம் இந்த உலகத்த யார் காப்பாத்துவா ? அப்படிங்குறார்

நம்ம பிளாக் பயபுள்ளைகள பாக்காம, பேசாம மனசெல்லாம் ஒடஞ்சு போச்சுஅதுனால நம்ம ரெட்ட , வெளியூரு , முத்து இவுகளுக்கு சயனைடு வாங்கி
கொடுத்து தற்கொல பன்னவைக்க போறேன்.


டுஸ்கி: சரின்னு கிடைச்ச கொஞ்ச நேரத்தில சின்னதா பித்தன் வாக்கு சார் மாதிரிஒரு சமையல் குறிப்பு போட்டேன். சமைச்சு சாப்பிட்டு பாத்து எப்படிஇருந்ததுன்னு மறக்காம பின்னூட்டத்தில போடனும்.

( "சமைத்து அசத்தலாம் "," சமையல் அட்டகாசங்கள் " நீங்க ரெண்டு
பேரும் சமையல் செய்வது எப்படின்னு முதல்ல இத பாத்து கத்துகிட்டு அப்புறம் பதிவு போடுங்க. வந்துட்டாங்க, சும்மா அரகொறையா கத்துகிட்டு வந்து இங்க படம் காட்ட கூடாது ? )


"வெஜ் சாம்பார்" செய்வது எப்படி ?

தேவையான பொருட்கள் :

கிச்சன் : 1 (உங்க வீட்டில் இருக்கணும் )
கேஸ் அடுப்பு : 1 (இரண்டு பர்னர் கொண்டது )
கேஸ் சிலிண்டர் : 1 (கேஸ் உடன் )
கேஸ் : தேவையான அளவு
பாத்திரம் : 2 (சைஸ் உங்களுக்கு தேவையான அளவு )
கரண்டி : 2 (பாதாள கரண்டி இல்லை )
டேபிள் ஸ்பூன் : 3 (டேபிள் இல்லாமல் )
லைட்டர் : 1 (இல்லாவிட்டால் தீப்பெட்டி )
தண்ணீர் : 6 லிட்டர்


செய்முறை :

முதலில் கிச்சனுக்குள் நுழையவும் , பின்பு லைட்டர் அல்லது தீப்பெட்டி கொண்டு கேஸ் அடுப்பை பற்ற வைக்கவும் .ஒரு லிட்டர் தண்ணீர் எடுத்து இரண்டுபாத்திரங்களையும் கழுவிகொள்ளவும் , ஒரு பாத்திரத்தை பற்ற வைத்த அடுப்பின்மேல் வைக்கவும் , அதில் இரண்டு லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவைக்கவும். கொதிக்க வைத்த நீரை வைத்து அடுத்த பாத்திரத்தை கழுவவும் , பின்பு பிரிட்ஜில் இருக்கும் நேத்து வைத்த சாம்பாரை எடுத்து அந்த பாத்திரத்தில்ஊற்றி 5 நிமிடம் சிம்மில் வைக்கவும் , சுவையான "வெஜ் சாம்பார்" ரெடி .


அடுத்து உங்கள் இஷ்டம் போல் பக்கத்து வீட்டிலோ , எதிர்த்த வீட்டிலோ தேவையான அளவு சோறு ஓசி வாங்கி , இந்த சுவையான "வெஜ் சாம்பார்" ஊற்றிசாப்பிட்டால் சுவையாக இருக்கும்.டிஸ்கி : எனவே நண்பர்களே இன்னொரு 10 நாளைக்கு எப்ப வருவேன் எப்ப போவேன்னு எனக்கு தெரியாது , ஆனா அடிக்கடி வருவேன், அதுனால ஒரு 10 நாள் என்னோட பயம் இல்லாம நீங்க உயிர்வாழலாம்


கிஸ்கி : இப்படிக்கு வருத்தபடாத வாலிபர்கள் சங்கம்

Friday, April 9, 2010

கேனப்பய vs மங்குனி அமைசர்

முஸ்கி: //....................................................................................// இந்த கோட்ட தாண்டி நீங்களும் வரக்கூடாது, நானும் வரமாட்டேன் , பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்.(யப்பா மனுஷன் என்னா சேபிடியா வாழவேண்டி இருக்கு )

--------------- ---------------


கேனப்பய: நல்ல வேல நியுடன் புவி ஈர்ப்பு சக்திய கண்டுபிடிச்சார்

மங்குனி அமைசர்: அதுக்கு என்னா இப்போ ?

கேனப்பய: இல்லைன்னா நாம எல்லாம் இப்போ மிதந்துகிட்டே இருப்போம்


--------------- ---------------

கேனப்பய: ஏம்பா நியூ காலேஜ் கட்டி எத்தன வருஷம் ஆச்சு ?

மங்குனி அமைசர்: 1951
கட்னது , 59 வருஷம் ஆச்சு , ஏன் கேட்குற ?

கேனப்பய: 59 வருஷம் ஆச்சே அப்புறம் ஏன் இன்னும் நியூ காலேஜ்ன்னு சொல்றாக ....


டுச்கி: நிறைய ப்ளாகர்ஸ் அவுகளுக்கு நடந்த சோகத்தை எல்லாம் "னக்கு
மட்டும் ஏன் இப்படி நடக்குது" அப்படின்னு எழுதிருக்காக, நானும் என் சோகத்த கொஞ்சம் பகிர்துகிறேன்


னக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?

1 . எப்பவுமே பந்தில எனக்கு பக்கத்து இலைல தான் நெறையா மட்டன் பீசு இருக்கும் .இதுவே வெஜ்ஆ இருந்தா எனக்கு பக்கத்து இலைல தான் பெரிய அப்பளமா இருக்கும்

2 . ஆபிசுக்கு லீவு போட்டு , நல்லா செட்டப்பா நான் உங்கார்ந்து கிரிகெட் மேட்ச் பாக்கும்போதுதான் சச்சின் 4 ரன்ல அவுட் ஆவாரு .

3 . நான் போன் பன்னும் போது தான் எப்பவுமே என் நம்பர் பிசியாவே இருக்கும்

4 . தியேட்டர்ல என் பக்கத்து சீட்ல இருக்க ப்ரண்டுக்கு பக்கத்து சீட்ல தான் நல்லா பிகர் வந்து உட்காரும். (அந்த பன்னாட இன்ட்ரோல்ல கூட என்ன மாத்தி உட்கார விட மாட்டான் .


டிஸ்கி: இந்தா பாருங்க இந்த கேனபய யாருன்னு , கேனத்தனமா எல்லாம் என்கிட்ட கேட்ட கூடாது. அப்புறம் நான் நாம ராமராஜன் நடிச்ச "துறை" பட சி.டி உங்க வீட்டுக்கு அனுப்ப வேண்டி இருக்கும் ஜாக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்ரத...................
ஒரு போடோ காமெடி
(இது நான் இல்லைங்க, அந்த கேனப்பய இவருதாங்க )


ever pregnant never delivery
கிஸ்கி: மங்கு இந்த வாட்டி எப்படியோ உயிர் காபத்திகிட்ட , இப்படியே மெயின்டன் பன்னுMonday, April 5, 2010

அசைவகொத்துபுரோட்டா

முஸ்கி: எல்லாரும் கொத்து பரோட்டா போடுறாக , சரி நாமளும் ஒன்னு போடலாம்னு யோசிச்சா சைவம் போடலாமா இல்ல அசைவம் போடலாமான்னு ஒரு கேள்வி ? நமக்கு சைவம் சரியா வராது , அதுனால அசைவகொத்துபுரோட்டா போட்டேன் , சாப்டு கொல வெறியோட என்ன தேடாம , பின்னுட்டத்துல போய் பின்னிஎடுங்க


முதல்ல ஒரு சந்தோசமான விஷயம்

அப்பாடா இந்த வருசமும் " good friday " sunday வரலே , ஒரு நாள் லீவ் வேஸ்ட் ஆகல , கவுருமென்ட் வருசா வருஷம் லீவு தர்றதே 12 நாள் தான் , அதுல ஏதாவது ரெண்டு மூணு சண்டே வந்து வேஸ்டா போய்டும் , இந்த வருஷம் "good friday " , friday வந்து ஒரு லீவு தப்பிச்சது .


குட்டி கவுஜ

கருப்பு வளையல்
கையுடன் ஒருத்தி
குனிந்து

வளைந்து

பெருக்கி போனால்
வாசல் சுத்தமாச்சு
மனசு குப்பையாச்சு


கரக்ட்டு தானே

சரக்கு ரயில்
தடம்
புரண்டது
இதில்
என்ன ஆச்சரியம்????


டுஸ்கி: நோக்கியா கேமரா மொபைல் போட்டியின் 5 கேள்விகளில் 4 கேள்விகளுக்குஅனைவரும் மிக சரியான பதில் கூறியுள்ளீர்கள் , அந்த 3-வது கேள்விக்குமங்குனி அமைசர் தவிர யாரும் சரியான பதில் சொல்லாததால் அந்த நோக்கியாகேமரா மொபைல் மங்குனி அமைச்சருக்கு பரிசாக வழங்கபடுகிறது.மூளை கார பயபுள்ள என்னா கேள்வி கேட்குது பாருங்க

ஆமா சோமாலியாவுல கடலை கொள்ளையடிகளையே !!! கப்பல தானே கொள்ளையடிகிறாங்க அப்புறம் ஏன் எல்லோரும் அவுகள கடல் கொள்ளையர்கள்ன்னு சொல்றோம்?

இப்படிக்கு
ஓசி டீயோட ஓசி பேப்பர் படிப்போர் சங்கம்கொள்ளிவாய் பிசாசு

திடீர்ன்னு எங்க ஊர்ல ஒரே பரபரப்பு .. மேட்டர் இது தான்

"தினமும் நைட்டு 8 மணிக்கு மேல எங்க ஊர் பக்கத்துல இருக்க சுடுகாட்ல கொள்ளிவாய் பிசாசு வந்து டான்ஸ் ஆடுது "

ஊருல இருந்து 2 கிலோமீட்டர் தள்ளி ஆத்த தான்டி போனா ஒரு சுடுகாடு இருக்கு. ஆத்து மேட்ல இருந்து பாத்தா சுடுகாடு தெரியும், அங்க ஒரு எரிக்கிற மேடையும் நிறைய சமாதிகளும் இருக்கும் . நம்ம பயபுள்ளைக ரெண்டு பேரு ஒரு நாள்நைட்டு 8 மணிக்கு ஆத்துக்கு போயிட்டு எதார்த்தமா சுடுகாட்ட பாத்துகங்க , அங்கசாமாதிகளுக்கு நடுவுல திடீர்ன்னு ஒரு செகண்டு தீ மாதிரி பளிச்சுன்னுஆடிருக்கு , அவ்வளவுதான் பயபுள்ளைக அங்க புடுச்ச ஓட்டம் அவிங்க வீட்லபோய் தான் நின்னாங்க , மறுநாள் ஒருத்தனுக்கு காயிச்சல் வந்துருச்சு , ஊருக்குள்ள ஒரே பரபரப்பு .

இந்த பேய் பிசாசு நம்பிக்க இல்லாத நாலு பேரு சிரிச்சுகிட்டே பகல்ல சுடுகாட்லபோய் பாத்தா அங்க ஒன்னும் இல்லை . பகல்ல எப்படி கொள்ளிவாய் பிசாசுவரும்? , வந்தாலும் வெளிச்சதுல்ல எப்படி தெரியும்? அப்படின்னு நாலு பேர்சொல்ல , சரின்னு நைட் போய் பாத்தாக .

பாத்தா நிஜமாவே தீ மாதிரி ஒன்னுஆடுது , அதுவும் ஒரு செகண்டு தான் , ஆனா ஒரு மணி நேரத்துல மூணு நாலு வாட்டி ஆடுது. இத பாத்தா பேய் பிசாசு நம்பிக்க இல்லாத நாலு பேரும் ஆடிபோயிட்டாக . அப்புறம் ஒரு வாரம் அனலைஸ் பண்ணி என்னான்னு பாத்தா , சாமாதிகளுக்கு நடுவுல ஒரு சமாதில கருப்பு டைல்ஸ்ல செந்தவுகள பத்தின டீடைல்ஸ் போட்டு இருந்தது , நைட்டு மெயின் ரோட்டல வர்ற வண்டிக லைட்டு ஒரு ஆங்கிள்ள படும்போது இங்க ஆத்து மேட்ல இருந்து பாத்தா அந்த கருப்புகல்லு கிளார் அடிக்குது , அது உண்மைலே ஏதோ தீ டான்ஸ் ஆடுறமாதிரிதான் இருந்தது . அந்த ஒரு வாரம் எங்க ஊரே ஒரே டென்சன் தான் போங்க , வீட்டுக்கு முன்னாடி பழைய செருப்ப கட்டி தொங்க விடுறது , பூசாரி மந்திருத்துகொடுக்கும் தண்ணிய வீட்ட சுத்தி தொளிசுகிட்டும் ஒரே அமர்களமா இருந்துச்சு .டிஸ்கி : பித்தன் சார் " , விளக்காடும் விநாயகர்" படிச்சப்புறம் , எங்க ஊர்ல நடந்த இந்தகொள்ளிவாய் பிசாசு நியாபகம் வந்தது


கிஸ்கி : வேணாம்..........., சொன்னா கேளுங்க.............,
அப்புறம் கொல கேஸ்ல உள்ள போய்டுவிங்க , ஆமா சொல்லிபுட்டேன் .

Friday, April 2, 2010

நோகியா கேமரா மொபைல் பரிசு


முஸ்கி : மங்குனி அமைசர் ப்ளாக்ல் வேலை செய்யும் ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் இப்போட்டியில் கலந்துகொள்ள அனுமதி இல்லை .

கீழே கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு மிகசரியான விடை எழுதுவோர்களில் குலுக்கல் முறையில் தேர்தெடுக்கப்பட்டு ஒருவருக்கு கீழே உள்ள "நோக்கியா கேமரா மொபைல்" பரிசு வழங்கப்படும்..


1 )
கேபிள் சங்கர் யார் ?

a .
கேபிள் டி.வி நடத்துபவர்
b .
கேபிள் இல்லாத டி.வி நடத்துபவர்
c . கேபிள் டி.வி நடிகர்


2 )
பட்டாபட்டி டவுச்சரில் எத்தை கோடுகள் உள்ளன ?

a .
பட்டாபட்டி டவுசரா , அப்படின்னா ?
b .
நான் எண்ணியதே இல்லை
c . மேலுள்ள இரண்டும் கிடையாது


3 )
டூ வீலருக்கு எத்தனை சக்கரங்கள் உள்ளன ?

a .
இரண்டு சக்கரங்கள்
b .
இரண்டு சக்கரங்கள்
c .
இரண்டு சக்கரங்கள்4 ) T 20 கிரிக்கட் மேட்சில் எத்தனை ஓவர்கள் வீசபடுகின்றன ?

a .
ரெண்டு ஆபாயில் பார்சல்
b .
2010 நவம்பரில் உலகப்போர்
c .
டீலா, நோ டீலாடிஸ்கி :இனி வருவது கொஞ்சம் ஸ்பெஷல் கேள்வி நல்லா யோசிச்சு பாத்து பதில் கூறவும்5 )
நடந்து முடிந்த இடை தேர்தலில் வெற்றி பெற்றது யார் ?

a .
சிம்ரன்
b .
நயன்தாரா
c .
ஸ்ரேயா
d . திரிஷா
e . அசின்
f . நமீதா
g . ப்ரியாமணி
h . மாளவிகா
i . ரீமா சென்

j. சோனா

k. மேல உள்ள எல்லாரும்
l . இல்ல உங்களுக்கு புடிசவுங்க பேரு


நீங்கள் வோடோபோன், ஏர்டெல் , ஏர்செல் , டோகோமோ வாடிக்கையாளராகஇருந்தால்

"உங்கபேர்" ஸ்பேஸ் "மங்குனி" ஸ்பேஸ் "கேள்வி நம்பர்" ஸ்பேஸ் "a" or "b" or "c" என்று டைப் செய்து 58585 என்ற எண்ணுக்கு sms அனுப்பினால்...........

பத்து பைசா கூட கிடைக்காது


டிஸ்கி :ஒழுங்கா என் கமான்ட்ஸ்ல ஆன்ஸ்வர் எழுதுங்க , வெற்றி பெரும் அதிர்ஷ்டசாலிக்கு கீழே உள்ள நோகியா கேமரா மொபைல் பரிசளிக்கப்படும்
?
?
?/


கிஸ்கி : நிர்வாகத்தின் தீர்ப்பே இறுதியானது
(அப்பாட............ இனி நம்ம இஷ்டம் யாருக்கு வேனாலும் குடுதுகலாம்)

?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?