எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Tuesday, August 6, 2013

சரக்கடிச்சிட்டு வண்டி ஒட்டணுமா ??? இத படிங்க .....

விபத்துக்களில் உயிர் விடுவதை விட படுகாயத்துடன் உயிரோடு இருப்பது கொடுமையானது.

கண்டமனூர் மெடிக்கல் காலேஜ் General Hospital- க்கு ஒரு டாக்டர் நண்பனோட போயிருந்தேன், விபத்து மற்றும் எலும்பு முறிவு பகுதிகளை சுற்றிப்பார்க்க நேர்ந்தது.....

என்னை அறியாமல் மனதுக்குள் ஒரு நடுக்கம் வந்து விட்டது .....

பார்பதற்கு மிகவும் கலக்கமாகவும் கொடூரமாகவும் இருந்தது , ஒரு நொடி தவறினால் ஏற்படும் விபத்தால் அவங்களின் மொத்த வாழ்க்கையையும் கேள்விக்குறி ஆக்கிவிடுறது , அது மட்டும் அல்லாமல் அவர்களில் குடும்பத்தாரையும் சேர்த்து பாதிக்கிறது.

விபத்து என்று பார்க்கும் போது , குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதும் விபத்திற்கு முக்கிய காரணியாக உள்ளது, இதில்
வாடைகை காரில் இப்பொழுது குடித்துவிட்டு ஓட்டும் டிரைவர்கள் கிடையாது என்றே சொல்லலாம்.

சொந்த காரில்
குடித்துவிட்டு  self drive செய்பவர்களே விபத்துக்குள்ளாவதில்  அதிகமாக இருக்கிறார்கள் . இதில் இவர்கள் மட்டுமல்லாது கூட வரும் குடும்பத்தார் அல்லது நம்பர்கள் மற்றும் எதிரே வந்த வாகனத்தில் உள்ளவர்களும் பாதிக்கப்படுகிறார்கள் .

வரும்போது வண்டிய மிக மெதுவாகவும் நிதானமாகவும் ஒட்டி வந்தேன் .இன்னும் மனதுக்குள் லேசான நடுக்கம் இருக்கிறது .

குடித்திருக்கும் போது வாகனம் ஓட்டக்கூடாது என்று முடிவெடுத்துள்ளேன்.

12 comments:

அமுதா கிருஷ்ணா said...

நல்ல முடிவு.

'பரிவை' சே.குமார் said...

நல்ல முடிவு... குடிதான் விபத்துக்கான முதல் காரணி...

ப.கந்தசாமி said...

அப்போ இதுக்கு முன்னாடி சரக்கடிச்சிட்டு வாகனம் ஓட்டியிருக்கீங்க, அப்படித்தானே?

MANO நாஞ்சில் மனோ said...

இந்த நடுக்கம் எல்லாருக்கும் வேணும்.

மங்குனி அமைச்சர் said...

அமுதா கிருஷ்ணா said...

நல்ல முடிவு.//

நன்றி மேம்

மங்குனி அமைச்சர் said...

சே. குமார் said...

நல்ல முடிவு... குடிதான் விபத்துக்கான முதல் காரணி...///

நன்றி குமார்

மங்குனி அமைச்சர் said...

பழனி. கந்தசாமி said...

அப்போ இதுக்கு முன்னாடி சரக்கடிச்சிட்டு வாகனம் ஓட்டியிருக்கீங்க, அப்படித்தானே?///

ஹி.ஹி.ஹி.....எஸ் சார்.....

மங்குனி அமைச்சர் said...

ANO நாஞ்சில் மனோ said...

இந்த நடுக்கம் எல்லாருக்கும் வேணும் ///
தேங்க்ஸ் தல

தமிழ்வாசி பிரகாஷ் said...

நடுக்கம் வந்தாலும் நடுங்காம வண்டிய ஓட்டுங்க...

Manimaran said...

நல்ல முடிவு...!

Manimaran said...

திரும்பவும் எழுதவாங்க சார்... காமெடி பதிவுகள் இல்லாமல் பதிவுலகம் வெக்கையாக இருக்கு..

JesusJoseph said...

நல்ல முடிவு தான்