எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Sunday, August 11, 2013

கடுப்பேத்துறாங்க யுவர் ஆனர்

கேனத்தனமான கேள்விகள் மங்குவின்  பதில்கள் -

1. படுக்கையில் படுத்து கண்மூடும்போது....தூங்கப்போரியா ?
[இல்லை தூக்குல தொங்கப்போறேன்)  

2. மழை நேரத்தில் வெளில கிளம்புறதைப் பார்த்துட்டு..... மழைல வெளியே போறியா?
[ இல்லை மாரியாத்தாவுக்கு கூல் ஊத்தப்போறேன்:-) ]

3. அறிவாளி நண்பன் லேண்ட் லைனுக்கு கால் பண்ணிட்டு...... மச்சி எங்கிருக்கே?
[ உங்க ஆயா வீட்ல இருக்கேன் மச்சி  ]

4. பாத்ரூம்லேர்ந்து ஈரத்தோட தலை துவட்டிகிட்டு வெளில வரும்போது..... குளிச்சியா?
[ இல்லை கும்மி அடிச்சேன்  ]

5. தரைதளத்தில் லிஃப்டுக்காக காத்திருக்கும் போது... மேலே மாடிக்கி போறியா?
[ இல்லை அமெரிக்கா போறேன்  ]

6. அழகான பூங்கொத்தை டார்லிங்குக்கு குடுக்கும் போது..... இது என்ன பூவா?
[ இல்லை புளியம்பழம்  ]

7. சினிமா டிக்கெட் எடுக்க வரிசையில் நிக்கிம்போது, அறிவாளி நண்பன் .....இங்கே என்ன பன்றே?
[ ம்ம் மண்ணெண்ணெய் வாங்க நிக்கிறேன்  ]

8. கேண்டீன்ல நின்னுகிட்டிருகும்போது, நண்பன்....... என்ன மச்சி சாப்பிட வந்தியா?
[ இல்லை சாணி வறட்டி தட்ட வந்தேன் மச்சி  ]

9. எழுதிட்டிருக்கும் போது, நண்பன்.... மச்சி எழுதிட்டிருக்கியா?
[ இல்லை மச்சி எருமை மாடு மேய்ச்சிட்டு இருக்கேன்  ]

10. தடிக்கி தரையில் விழுந்ததை பார்த்துட்டு, நண்பன்.... என்ன மச்சி விழுந்துட்டியா?
[ இல்லை, நீச்சல் அடிச்சிட்டிருக்கேன்  ]

- மெயில் அப்லோட்ஸ் 

2 comments:

அமுதா கிருஷ்ணா said...

கூல் இல்லை கூழ்...உங்கள் தமிழில் தவறு இருக்கிறது.

மங்குனி அமைச்சர் said...

அமுதா கிருஷ்ணா said...
கூல் இல்லை கூழ்...உங்கள் தமிழில் தவறு இருக்கிறது. ///

எவ்வளவு பிழை உள்ளது அவ்வளவு குறைத்துக்கொன்ன்டு கமண்ட் போடுங்கள் .......யாராவது கண்டு புடிக்கிராங்கலான்னு பார்க்க நான் வேண்டும் என்றே தான் போட்டேன் , (அவ்வ்வ்வ்வ்வ்வ்........தப்பிக்க எப்படியெல்லாம் பொழப்பு நடத்த வேண்டி இருக்கு ) குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்குபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் :-))))