எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Wednesday, January 18, 2012

ஒய் திஸ் கொலைவெறி

நான் ஒரு முட்டாளுங்க 
ரொம்ப நல்லா படிச்சவுங்க 
நாலுபேரு சொன்னாங்க 
நான் ஒரு முட்டாளுங்க ........


அட நம்ம ரிங் டோன் சார் ,
(ஜூனியர் மங்கு மைன்ட் வாய்ஸ்  உங்க நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு டாடி ) 

பொங்கல் அன்னைக்கு காலைல போன் அடிச்சது ,போன்ல நம்ம கோகுலத்தில் சூரியன் வெங்கட் ......

"ஹலோ ஹேப்பி பொங்கல் வெங்கட்  "

"ஹி,ஹி,ஹி...தேங்க்ஸ் , உங்களுக்கு நான் நாளைக்கு போன்பண்ணி  பொங்கல் வாழ்த்து சொல்லுறேன் மங்கு "

"ஏன்? " 

"நாளைக்கு தான் மாட்டுப்பொங்கல் அதான் "
(உஸ்ஸ் ...... இதுக்கு தான் படிச்ச பயலுககூட சேராதேன்னு எங்கப்பா அப்பவே சொன்னார் )

"சரி , சரி ..விசயத்துக்கு வாங்க "

"ஒன்னும் இல்லை மங்கு , எங்க வீட்டுக்கு பக்கத்துல ஒரு அரசமரம் இருக்கு , அதோட வேர் வந்து எங்க வீட்டு காம்பவுண்ட் சுவர டேமேஜ் பண்ணுது , வேர
கட்பன்னவும் மனசு வரல , உனக்கு ஏதாவது ஐடியா இருந்தா சொல்லேன் "

" என்னது வேர்  வந்து சுவர டேமேஜ் பண்ணுதா ? இம்மம்ம்ம் ...... பேசாம ஒரு நாலடி குழிதோண்டி அதுக்குள்ளே ஒரு TAKE  DIVERSION அப்படின்னு ஒரு போர்டு வச்சுப்பாருங்களேன் "

"என்னது?"

"அப்படியும் கேக்கலைன்ன   NO ENTRY    அப்படின்னு வைங்க "

" அடிங் ...... ங்கொய்யாலே , பன்னாட, பரதேசி ,  டோமரு , டுபாகூரு, சோமாறி , கயித, கசுமாலம்,  கேப்மாரி,  பொறம்போக்கு, பேமானி ,மொள்ளமாரி , முடிச்சவிக்கி , கஸ்மாலம் , பாடு , சாவுகிராக்கி ,நன்னாரி  நாதாரி நாயே ............. "

" அய்யோ ஸ்டாப் , ஸ்டாப் ..... நீங்க டீசன்ட்டான பதிவர் இப்படியெல்லாம் திட்டக்கூடாது வெங்கட் "

"ஓ..... டென்சன்ல மறந்துட்டேன் ,   ஸ்டுபிட் , பூல் , நான்சென்ஸ் ...... இருடா எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை நேர்ல வந்து உன்னைய  வாயிலேயே வெட்டுறேன் "

நல்லது சொன்னா தப்பாய்யா ??? 

அவனுகளா போன் பன்றாணுக, கேள்வி கேக்குரானுக, பதில்சொன்னா நேர்ல வந்து வாயிலேயே வெட்டுவேங்கிராணுக   , 

நன்றிகெட்ட உலகமடா  மங்கு , பீ கேர்புல் .....