எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Wednesday, March 14, 2012

விஞ்ஞானிகள் உடனடியாக மேடைக்கு வரவும்

அன்புள்ளம் கொண்ட விஞ்ஞானிகளே தயவுசெய்து ஏன் பிரச்னைக்கு நல்ல தீர்வு தருமாறு மிகத்தாழ்மையுடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் .

பிரச்சனை என்னன்னா ????

  
பூரான் , பூரான் , பூரான்

 (ஒரு பூரான் தாங்க ஒரு பில்டப்புக்காக மூணுவாட்டி சொன்னேங்க )வீட்டு (பஸ்ட்டு புளோர் )  பாத்ரூம்தண்ணி போற ஹோல்ஸ் வழியா வாரத்துக்கு ரெண்டுதடவை இந்த சனியன் வந்திடுதுங்க . எனக்கு இத கண்டாலே பயங்கர அலர்ஜி. உள்ளங்கால்ல இருந்து உச்சந்தலை வரைக்கும் இருக்க முடியெல்லாம் நட்டமா நின்னுக்கும்.

 சின்ன வயசுல நான் ரொம்ப தைரியசாலி , இத பார்த்தவுடன் பின்னகால் பிடரீல அடிக்க ஓடிப்போயிடுவேன் , இப்போ பாருங்க பயத்துல ஓடக்கூட முடியலை . அதுவும்  என்னைய பார்த்ததும் எப்படிதான் கண்டுபுடிக்குதுதோ தன்னோட அம்பது கால் மேல மீதி அம்பதொகால தூக்கி போட்டு என்னைய பார்த்து நக்கலா சிரிக்கும்.

அதை பார்த்து நான் போடுற சத்தத்தை கேட்டு என் பொண்டாட்டி  வந்து கார்பரேசன் குப்பைலாரில அடிபட்ட சொறிநாய பாக்குறது மாதிரி என்னை பார்த்துட்டு (மனசுக்குள்ள என்ன சொல்லி திட்டுறாலோ???)  பூரான ஹிட் (HIt  ) அடிச்சு கொன்னு தூக்கி போட்டுருவா.

இதுல முக்கியமான மேட்டர் வீட்டு டைல்ஸ் எல்லாம்  டார்க் கலர் , பூரான் பாத்ரூமை விட்டு வெளியே வந்துட்டா அத கண்டு புடுக்கிறதே கஷ்டம் . நானும் ஹவுஸ் ஓனர்கிட்ட போயி சார் டைல்ஸ் எல்லாம்  லைட் கலரா மாத்திக்குடுங்கன்னு கேட்டேன் . 

அவன் என்ன கோவத்துல இருந்தானோ + 2  பசங்க சுவாலாஜி லேபுல மல்லாக்க போட்டு கால்ல ஆணி அடிச்சு   அருத்துபோட்ட தவலைய பாக்குறது மாதிரியே பார்த்தான் , அப்புறம் டைல்ஸ் எல்லாம் மாத்தமுடியாது வாடகைவேன்னா 2000  ரூபா ஏத்துறேன்னு வாடகைய  ஏத்திட்டான் . 

எனவே அன்பும் , பண்பும் , பாசமும் , நேசமும் கொண்ட அன்பு நண்பர்களே இதற்கொரு நிரந்தர தீர்வு இருந்தால் சொல்லவும்.

டிஸ்கி : யப்பா தெய்வகளா நிஜம்மா நல்ல தீர்வா சொல்லுங்க . HIt  வாங்குறதுக்கு மாசம் ஒரு பெரிய்ய பட்ஜெட் ஒதுக்கவேண்டி இருக்கு .