எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, August 30, 2010

என்ன கொடும சார் இது?

என்ன கொடும சார் இது , நான் பாட்டுக்கு சிவனேன்னு நான் உண்டு ஏன் பிளாக் உண்டுன்னு இருக்கேன் . யாரையாவது டிஸ்ட்ரப் பண்ணினனா ? இல்லை யாரையாவது ஆணி புடுங்க சொல்லி கம்பல் பன்னிநேனா ?

ஏற்கனவே இதபத்தி ஒரு பதிவு போட்டு இருக்கேன் . ஆனாலும் இந்த ஏகாதிபத்திய, அடக்கு முறை கொண்ட பாசிஸ முதலாளித்துவ வர்க்கத்தினரின் போக்கு சிறிதும் மாறவில்லை .

நான் அவுங்கள் கிட்ட ஏற்கனவே பலமுறை கூறியும் , விடாது, பாசிஸ கொள்கைகளை கொண்ட மேல்தட்டு வர்கத்தின் கைகூலிகள் என்னை ஆணி புடுங்க சொல்லி அநியாயம் பன்னுராணுக . இதனால் என் நண்பர்களின் பிளாக் பக்கம் போகமுடியவில்லை . இதே போல இன்னும் ஒரு வாரம் போச்சுனுன்னா எல்லா பயபுள்ளைகளும் நம்மள மறந்துருவாணுக போல. அப்புறம் நான் பஸ்டுல இருந்து ஆரம்பிக்கணும் .

இதற்கு என்ன காரணம் ? யாருடைய சதி ? நாம் என் துன்புறுத்தப் படுகிறோம் ?

நமகென்று ஒரு சங்கம் இல்லாத்ததுதான் .

எனவே என்னை போல் பாதிக்கப்பட்ட பிளாக் சமுதாயத்தினரே ஒன்று கூடுங்கள் , நமக்கென முதலில் ஒரு சங்கம் அமைப்போம் , பின் அதை ஒரே மாபெரும் அரசில் சக்தி கட்சியாக மாற்றுவோம் .


அதன் பின் ஆணி புடுங்க சொல்லி தொந்திரவு பண்ணினா உடனே நாம மவுன்ட் ரோட பிளாக் பண்ணலாம் . (என்ன மக்களா ? ம@#$ போறானுக நமக்கு என்ன ?)

நீங்க கவலையே படாதிங்க நம்ம மக்களுக்கு அந்த அளவுக்கு ரோசம் கிடையாது , எந்திரன் பட டிக்கட் இலவசமா குடுத்தா நாம ஆட்சிய கூட புடுச்சிடலாம்.


இனி நடக்கும் சட்டமன்ற தேர்தலில் நமது கூட்டணி இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது .

ஏதாவது ஒரு ஜாதிக் கட்சியுடனோ அல்லது ஒரு பைசா கூட பிளாக் மணி (அது தாங்க கருப்பு பணம் ) வாங்காமல் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த கஷ்டப்பட்டு நடித்து சம்பாதித்த காசுகளை ஆட்சியை பிக்க நினைக்காமல் ஏழை பொது மக்களுக்காக செலவு செய்யும் மக்கள் நேசக் கட்சியுடனோ , அல்லது ஏழைகளின் துயர் துடைக்க எலக்சனுக்கு மட்டும் மலைபிரதேசத்திலிருந்து வெளிவந்து பாடுபடுவோர் கட்சியுடனோ அல்லது உலகுக்கே நன்றாகத் தெரிந்த
குடும்பத்தினோடோ கூட்டணிஅமைத்து ,

வரும் சட்டமன்ற தேர்தலில் நமது கட்சியின் தலைமையில் ஆட்சி அமைப்போம் , அடுத்து வரம் பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று (சூழ்நிலை சரியாக இருந்தால் ) மத்தியிலும் நமது ஆட்சியை அமையும் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் பதவி போன்ற பதவிகளுக்கு விருப்பப் படுவோர் விண்ணப்பிக்கலாம்.

டிஸ்கி : ஏன்டா மங்கு உன்னைய ஆணி புடுக சொன்னா நீ ஆட்சியவே புடுச்சிடுவ போல இருக்கே ?

Monday, August 23, 2010

தக்காளி செத்தடா நீ

பாருங்க அன்னைக்கு காலைலேயே பூனை குறுக்க போச்சு (யார்ர அவன் பூனைக்கு என்னாச்சுன்னு சவுண்டு விடுறவன்? ) , நரி ஊளை இட்டுச்சு (யோவ், அது அதோட பிகருக்கு சிக்னல் கொடுக்குதுய்யா ), பல்லி சொட்டான் போட்டுச்சு(குளிக்காத உன் மூஞ்சிய பாத்து பயந்திருக்கும் ). ஆஹா..., இன்னைக்கு இயற்கை மொத்தமும் நமக்கு எதிரா செயல்படுதே , என்ன நடக்கப் போகுதோ???

டக்குன்னு காலண்டருல நம்ம ராசிக்கு என்னா பலன்னு பாத்தேன் , "தக்காளி செத்தடா நீ " (காலண்டருல இப்படியெல்லாமா ராசிபலன் போடுவாங்க ?) அப்படின்னு போட்டு இருந்தது .

கடவுளே இன்னைக்கு வர்ற சோதனைல இருந்து என்னைய காப்பத்திட்டன்னா , நம்ம பட்டாப்பட்டி, ஜெய்லானி ,ஜெய் , பன்னிகுட்டி, டெர்ரர் பாண்டி , முத்து , அருண் பிரசாத் , பனங்காட்டுநரி,கோமாளி , ரமேஷ் (ஐ .... மாட்னிங்களா, மாட்னிங்களா, மாட்னிங்களா) எல்லாருக்கும் மொட்டை போட்டு காத்து குத்தி தீச்சட்டி எடுக்க வக்கிறேன்னு வேண்டிக்கிட்டேன் .(இதுல விட்டு போனவுங்க அவுங்களா மரியாதையா வந்து மொட்டை போட்டுகங்க ).

"டேய் மங்கு ...."
(எங்க அப்பா தாங்க )

"இங்க வா , இந்த கவர கொண்டு போய் , போடில இருக்க நம்ம ஆடிட்டர் கிட்ட குடுத்திட்டு வா"

"சரிப்பா"

"அவரு வீடு தெரியும்ல ?"

"அட்ரஸ் குடுங்கப்பா போயிடுவேன் "

"நான் ஒரு வாட்டி சொல்றேன் கேட்டுக்க "

"(எனக்கு பகீருன்னு ஆகிப் போச்சு , ஏன்னா? அவரு அட்ரஸ் டீடைல் சொல்றத பத்தி உங்களுக்கு தெரியாது, ஆஹா .....இன்னைக்கு ராசி பலன் பலிச்சிடும் போல இருக்கே ?) "

"நேரா பஸ்டாண்டு போ , அங்க போடி பஸ் இருக்கான்னு பாரு , இல்லை பாளையம் , கம்பம் பஸ் இருக்கான்னு பாரு"


"சரி "

" வழி சின்னமன்னூர் அப்படின்னு போட்டு இருக்கும்............

"இம் .............."

அதுல ஏறிராத, வழி போடி
போட்ருக்கும் , அதுல ஏறு "

"(ஆஹா இதுதான் சோதனையின் ஆரம்பமா ) "அப்பா எனக்கு தெரியும்ப்பா "

"அதுக்கில்லைடா , நீபாட்டுக்கு மாத்தி போயிட்டா ? போடிக்கு போனவுடனே பஸ்ட்டு பார்க் ஸ்டாப் நிக்கும்.... இறங்கிராத, அடுத்து அரண்மனை ஸ்டாப் நிக்கும்.... அதுல இறங்கிராத , அடுத்தது பெருமாள் கோவில் ஸ்டாப் நிக்கும்.... அதிலையும் இறங்கிராத "

"(அவ்வ்வ்வ்வ்வ்...............................என்னங்கடா .....அடிச்சு கூட கேப்பாக , அப்பவும் சொல்லிராதிக கதையா இருக்கே? )

"நேரா பஸ்டாண்டுல போய் இறங்கு "

"( பஸ் ஸ்டாண்டுல போய் இறங்குன்னு முதல்லே சொல்லிருக்கலாம்ல? )"


"பஸ்டாண்ட விட்டு வெளியவந்த உடனே லெப்ட்ல பாத்தா ஒரு சந்து போகும்ல ?"

"ஆமா"

"அதுல போயிராத "

"(உஸ்.................முடியல , வேணாம்........... அழுதிடுவேன் )"

"அதுக்கு அடுத்த சந்துல போனேன்னா , இடது கைபக்கம் பஸ்ட்டு புளுகலர் கேட் போட்ட வீடு இருக்கும்"

"சரி"

"அந்த வீடு இல்லை , அதுக்கு அடுத்த கிரீன் கலர்ல கேட் போட்டு போட்ட வீடு இருக்கும் "

"இம் .................(எவ்ளோ நேரந்தான் வலிக்காதது மாதிரியே நடிக்கிறது)"

"அந்த வீட்டுக்கு எதிர்த்த வீடு தான் ஆடிட்டர் வீடு , வெளில கூட போர்டு போட்டு இருக்கும் "

"("போடி பஸ்டாண்டுக்கு வெளிய செகண்டு லெப்டுல ரைட் சைடு ரெண்டாவது வீடுன்னு சொல்லவேண்டியதுதானே? , ஏன் இந்த கொல வெறி? )"

"அந்த வீட்டுல போய் காலிங் பெல் அடிச்சேன்னா? தலையல்லாம் நரச்சுபோன வயசான ஒருத்தர் முண்டா பனியன் போட்டுக்கிட்டு வந்து கதவ திறப்பார் "

"அவர்கிட்ட குடுத்துடவா ?"

"அட அவரு ஆடிட்டர் இல்லைப்பா , அவரு மகன் தான் ஆடிட்டர் , அவரு மகன் கிட்ட குடுக்க சொல்லி இந்த கவர அவர் கிட்ட குடுத்திட்டு வா "

"ஹா, ஹா, ஹா...............ஹா, ஹா, ஹா ..............."

"ஏன்டா சிரிக்கிற? "

"இல்ல உங்க ஆபீசுல உங்களுக்கு கீழ வேலை செய்றவங்க நிலமைய யோசிச்சு பாத்தேன்........ ஹா, ஹா, ஹா ...............ஹா, ஹா, ஹா ..............."

"அப்ப நீ இந்த வேலைக்கு சரிபட்டு வரமாட்ட , உங்க அண்ணன் எங்க ? அவன அனுப்பலாம் , டேய் .................."

டிஸ்கி : ஜஸ்ட்டு மிஸ்ஸு , மக்கா பட்டாப்பட்டி, ஜெய்லானி ,ஜெய் , பன்னிகுட்டி, டெர்ரர் பாண்டி , முத்து , அருண் பிரசாத் , பனங்காட்டுநரி, கோமாளி , ரமேஷ் உங்களுக்கு மொட்டை கன்பாம்

Thursday, August 19, 2010

வெரைட்டி ரைஸ்

உலக தலைவர்களில் மிகச்சிறந்த தலைவர்களில் நமது பிரதமர் மன்மோகன் சிங் முதலிடத்தை பெற்றுள்ளதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று கருத்துக் கணிப்பில் கூறியுள்ளது . மிகவும் சந்தோசம் . இந்தியாவை 21 நூற்றாண்டில் மிகச்சிறந்த முறையில் வழிநடத்திக் கொண்டு செல்வதாகவும் , அனைவரும் விரும்பும் பாசம், அன்பு மிகுந்த மனிதர் என்றும் கூறியுள்ளது . நல்ல விஷயம் தானே ???
-----@@@@@-----

180 மேலுள்ள உலக நாடுகளில் , மக்கள் தொகையில் இரண்டாம் உலகில் இடம், அனைத்து கனிம வளங்கள் , மிகப்பெரிய தொழில் முன்னேற்றம் மற்றும் மிக அதிக விளை நிலங்களை கொண்ட நமது இந்திய நாடு , உலக நாடுகளின் தவரிசை பட்டியலில் 78 இடத்தை தான் பெற்றுள்ளது . (மேலுள்ள செய்தியையும் இதையும் தொடர்பு படுத்தி பார்த்தால் அதற்க்கு நிர்வாகம் பொறுப்பல்ல )
-----@@@@@-----
சட்டக் கல்லூரி மாணவர்கள் நேற்று சுமார் ஏழு மணி நேரம் சென்னை பாரிமுனையில் சாலை மறியல் செய்துள்ளனர். இதனால் மிகப் பெரிய அளவில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அவர்களின் கோரிக்கை நியாயமாதாக கூட இருக்கலாம் , அதற்காக பொது மக்கள் மிகக் கடுமையாக பதிக்கப் படலாமா ? பல ஆம்புலன்ஸ் வண்டிகள் சைரன் ஒலியுடன் டிராபிக் நடுவே மாட்டிக் கொண்டது , திரும்பியும் போகமுடியாது நடுவில் மாட்டிக் கொண்டது. மாணவர்கள் தங்களது எதிர்ப்பை கோசம் போடலாம் , உள்ளிருப்பு போராட்டம் நடத்தலாம் , உண்ணாவிரதம் இருக்கலாம். இப்படி பொது மக்களுக்கு இடையூறு செய்வது எந்த விதத்தில் நியாயம் ???
-----@@@@@-----
இது வரை சுமார் 2000 பேருக்கும் மேல் கொன்று குவித்த மாவோயிஸ்ட்டுகளின் தலைவர் ஆசாத் என்கவுண்டர் முறையில் சுட்டுக் கொல்லப்பட்டது தவறு என மம்தாபானர்ஜி அறிக்கை வெளியிடுகிறார். இன்னொரு மாவோயிஸ்ட்டு தலைவர் ஆசாத் சுட்டுக் கொல்லப்பட்டது சட்ட விரோதம் என பேட்டி கொடுக்கிறார் . இது என்ன பைத்திய காரத்தனமா இருக்கு , அப்பாவி மக்களையும் போலீஸ் அதிகாரிகள் , மற்றும் காவலர்களை கொலை செய்பவர்களை வேறு என்ன செய்ய சொல்கிறார்கள் என்று தெரியவில்லை . இப்படியும் அரசியல் செய்கிறார்கள் .
-----@@@@@-----

Wednesday, August 18, 2010

உமாசங்கருக்காக -- ஒரு விண்ணப்பம்

உமாசங்கருக்காக -- ஒரு விண்ணப்பம்
உமாசங்கர் நியாயமான அதிகாரி, அவர் மீது அரசு ஏவி இருக்கும் கொடூரத்தை நாம் கண்டும் காணாமலும் இருக்க வேண்டுமா? -- இந்தக் கேள்வியை எனக்கு நானே கேட்டுக் கொண்டபோது எனக்குத் தோன்றிய பதில் - ஏன் பதிவர்களாகிய நாம் அனைவரும் இம்முறை நம் ஒட்டு மொத்த ஆதரவை அந்த அதிகாரிக்குத் தெரிவிக்கக் கூடாது. அப்படி நாம் ஏதும் செய்தாலும் அது எந்த அளவுக்கு அவருக்கு உதவும் என்பதை விடவும், ஓரளவாவது நாம் நம் கடமையைச் செய்தோம் என்ற நல்ல உணர்வு நமக்கு ஏற்படலாம். அதற்காகவாவது எனக்குத் தோன்றிய ஒன்றை உங்களிடம் கூறுகிறேன். சரியென்றால் ஒட்டு மொத்தமாக ஒரே ஒரு சின்ன காரியம் செய்வோம்.இந்த அதிகாரி தவறான காரணங்களுக்காக அரசால் தண்டிக்கப்படுகிறார் என்ற எண்ணமுள்ள பதிவர்கள் அனைவரும் ஒன்றாக, ஒரே நாளில் --வருகின்ற வாரத்தில் ஒரு நாள் - புதன் / வியாழக் கிழமை -- நாலைந்து வரிகள் கொண்ட ஒரே ஒரு இடுகையை அவரவர்கள் பதிவில் இடுவோம். அந்த ஒரு நாளில் ஒரே மாதிரியான இடுகைகள் இட்டு நம் ஒற்றுமையான உணர்வை அரசுக்குத் தெரிவிப்போம்.இதனால் என்ன பயன் என்று கேட்பீரின், என்ன பயன் கிடைக்குமென்று தெரியாது. ஆனால் முழு இணையப் பதிவுலகமே ஒரு மனிதனின் பின்னால் நின்றால் அது அந்த மனிதனுக்கு நிச்சயம் தேவையான மன வலுவைத் தரும். அரசும் சிந்திக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு.ஒருவேளை நான் ஒரு எதிர்க்கட்சிக்காரன், அதற்காக இந்த முயற்சி என்று யாரேனும் நினைத்தால் அவர்களுக்கு ஒரு வார்த்தை: அந்தக் கட்சி, அதன் தலைவர்கள் எதுவுமே என் மரியாதைக்குரியதல்ல. கனவில் கூட நான் அந்தக் கட்சிக்கு வாக்களிக்க மாட்டேன் என்ற உறுதி எனக்கு எப்போதும் உண்டு.இது நிச்சயமாக நியாயம் செத்து வரும் வேளையில் ஒரு தனி மனிதன் பல எதிரப்புகளையும் தாங்கி நியாயத்தின் பக்கம் நிற்கிறானே, அவனுக்கு நம்மாலான எளிய இந்த உதவியைச் செய்வோமே என்ற ஒரே எண்ணம்தான்.வாருங்கள் ... ஒன்றுபட்டு நின்று நாம் நினைப்பதைச் செயலில் காட்டுவோம். இத்தனை பதிவர்கள் ஒன்றிணைந்தால் நல்லது நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கையோடு ஒன்றிணைவோம். வாருங்கள் ....பி.கு.1.அவ்வாறு இடுகையிட சம்மதிப்பின், யாராவது நல்ல நான்கு வரிகள் தயார் செய்து அளித்தால் அதை அனைவருமே ஒட்டு மொத்தமாக ஒன்று போல் இடுகையிடலாம்.


2. //கார்த்திகைப் பாண்டியன் said... புதன்கிழமை.. எல்லாருமே செய்யலாம் ஐயா..// அப்படியானால், எல்லோரும் புதன் கிழமை ஒன்றுபோல் இப்பதிவை இடுவோம்.


3. கா.பா. போன்ற பதிவர்கள் இதை மறுபதிப்பாக இட்டால் இன்னும் பலரின் கண்களுக்குப் போய்ச் சேரும். Please ... மறு பதிப்புகள் வரவேற்கப்படுகின்றன.


4. பால், சாதி, சமயம், இருக்குமிடம் எந்த வேறுபாடுமின்றி இதில் ஒன்றுபடுவோமே ...


5. நண்பர்களுக்கும் இச்செய்தியை இட்டுச் செல்லுங்கள். ஒன்றாக இடுகை இட உதவுங்கள்.


6.ஒட்டு மொத்தக்குரல் அரசை அடையும்
(நன்றி வால்பையன் )

Monday, August 16, 2010

பட்டாபட்டியின் வாழ்த்தா? இல்லை ஆப்பா ?

கிஸ்கி : காலைல வந்து மெயில் திறந்தா பட்டாப்பட்டி கிட்ட இருந்து ஒரு மெயில் . (குடுத்த காச எது திரும்ப கேட்பானோ ?) மெல்ல திறந்து படிச்சு பாத்தேன் , எனக்கு என்னமோ இது ஆட்ட பலி குடுக்குறதுக்கு முன்னாடி குளிக்க வச்சு மாலை போட்டு மஞ்சள் குங்குமம் வச்சு ஊர்வலமா கூப்டு போவாங்களே அதுதான் நினப்பு வந்துச்சு , கொஞ்சம் நீங்களும் படிச்சிட்டு நான் நினச்சது சரியான்னு சொல்லுங்களேன் .(இதுல ரெட் கலர்ல பிராக்கட்டுல வர்றது எல்லாம் என்னோட டவுட்டுங்க )

-------@@@@@------

அன்பின் மங்குனி..
என்னடா, Internet காலத்தில ஈ-மெயில அனுப்புகிறானே! என்று உன் புருவம் உயர்வது Monitor (நீ கம்யுடர் மானிடர தான சொல்லற ?)
மூலமாக எனக்கு தெரிகிறது.. ஏன்ன செய்ய?.. பண்பாட்டை விட்டு கொடுக்க முடியாதே?..(தக்காளி ஒரு மெயில்ல ஒழுங்கா அலைன் பண்ணி அனுப்ப தெரியல , இதுல பண்பாடு வேறே ?)
( நார்வே பதிவர் வாழ்க..எதுக்கும், இப்பவே சொல்லி வெச்சுக்கிறது பின்னாளில் உபயோகமாயிருக்கும்..அதுவுமில்லா
ம, சார்வாள் துப்பாக்கியெல்லாம் தூக்கிட்டு போஸ் கொடுப்பது,
என் அடி வயிற்றை கலக்குகிறது..)(ஏம்பா பட்டா , சின்னராசு கூட குடிச்ச காப்பி யோட எஃபெக்ட் இன்னும் குறையலையா ?)

சரி இதுக்கு இந்த அவசர மெயில?..நீ கேட்பது எனக்கு தெரியும்....

அதாவது பிரபல பதிபவராக இருந்த வெளியூர்காரன், நேற்று முதல் “World Famous Veliyoorkaran" (பாத்தியா எனக்கு இங்கிலீசு தெரியாதுன்னு குத்தி காட்டுற ?) ஆக பதிவு உயர்வு பெற்று விட்டார். இதை வெளியே சொன்னால், சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுவிடமென, ரகசிய உளவுதுறையின் ஆலோசனை கொடுக்குது...
அதனாலத்தான் இந்தசெய்தியை, இதுவரை வெளியிடவில்லை.( நம்புயா...)

மேலும் இந்த ரகசியம் கசிந்தால், பன்முனை தாக்குதல் இருக்கும். அதை சரி செய்ய ராணுவத்தை அழைக்க வேண்டி வரும்.. அவர்கள் ராஜபட்ஷேக்கு (ராஜபட்ஷேக்கு ஏதாவது "படை" நால உதவி தேவைப்பட்டு இருக்குமோ ?) உதவி செய்வதிலேயே முனைப்பாக இருப்பதால், வெளி நாட்டு ராணுவத்தை அழைக்கவேண்டி வரும்..( யோவ்.. யாருய்யா அது இத்தாலி ராணுவம் என கூவியது?..)

அதனால், சிங்கை டோமர்ஸ், ( நாங்கதான்..ஹி..ஹி ) அந்த போஸ்ட்க்கு.. உம்மை ரெக்கமெண்ட் செய்யலாமென முடிவு செய்துள்ளோம்..
ஆமாய்யா.. நிசமாவேதான்....
இன்று முதல் ”பிரபல பதிவர் மங்குனி அமைச்சர்” (அவ்வ்வ்வ்வ்........ கொடுத்த காசுக்கு மேலே கூவுராண்ட இந்த பாட்டா ) என நாடு முழுவதும் நீர் அறியப்படுப்வாய்..(அப்ப நான் ஏற்கனேவே பிரபல பதிவர் இல்லையா ?)

என்னாது? பித்தன் சாருக்கும், ரமேஸ் நல்லவனுக்கும் வேண்டுமா?..
அதுமட்டும் முடியாது.. லீவில் போகிறேன் என்று சொல்லிவிட்டு , பித்தன் எஸ் ஆனாதால், அடுத்த முறை அவருக்கு போஸ்ட் கொடுப்பதைப்பற்றி பரிசீலிக்கலாம் .. மேலும் அவரை முதல்ல பதிவை போடச்சொல்(நல்ல வேலை தப்பிச்சாரு )

அடுத்து ரமேஸ்..
அவரு சிஙகை வந்து என்னை சந்திக்காமல் சென்றதால்.. சரி..சரி.. நாந்தான் போய் சந்திக்கலே..
காரணம் சொன்னா நீ சிரிப்பே..(நீ காரணம் சொல்லாட்டியும் நான் சிரிப்பேன் , ஹி,ஹி,ஹி )
அதாவது அவர் இருந்த இடத்துக்கு , என்னுடை இடத்துக்கும் நடுவில பெரிய நதி.. அதில முதலைகள்.பாம்புகள்...( பாம்புனா ஆங்கிலத்தில் ஸ்நேக்..ஹி..ஹி) ( அப்ப முதலைக்கு ஆங்கிலத்தில் என்னா?)
அதை சொன்னா..நான் பயந்தாங்கோழினு சொலவாங்க..
மேலும் முதலைகளுடம் பேசும் அளவுக்கு எனக்கு சீன மொழிப்புலமையில்லை..அதனாலதான் பார்க்கவில்லை...ஹி..ஹி..
(அப்ப ரமேஷ வரச்சொல்லி இருக்க வேண்டியது தானே? ங்கொய்யாலே நல்ல சான்ச மிஸ் பண்ணிட்டியே பட்டா ?)

சரி .. எதுக்கு திடீர்னு இப்படி?..மெயில்..


ஹி..ஹி
ஹி..ஹி..ஹி

யோவ்......அடுத்தது உன்னோட 50 ஆவது பதிவையா...(ஆடு ரெடி )


அதுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..(நன்றி .... பட்டா .. ம்ம்ம்ம்........ அது ஒன்னும் இல்லை ஆனந்த கண்ணீர் )

( இனியாவது ஒழுக்கமா..ஹி..ஹி... பதிவை எழுது..இது நான் சொல்லலே..வெளியூர்காரன் சொல்லச்சொன்னான்)(ஒ .. இதுல அவன் வேற கூட்டா ?ரொம்ப கேர்புல்லா இருக்கணுமே )

( ஒழுக்கமா எழுதணுமா? நான் என்ன வச்சுகிட்டா வஞ்சகம் பண்ணறேன் , சட்டில இருந்தாதானே அகப்பையில வரும் (ஐ .. பழமொழி ))


Friday, August 13, 2010

திருநெல்வேலிக்கே அல்வா

நம்ம பிரண்டு ஒரு பயபுள்ள காப்பி அடிச்சு, பிட் அடிச்சு பேப்பர் சேஸ் பண்ணி , எக்ஸாம்ல ஆள்மாறாட்டம் பண்ணி எப்படியோ ரொம்ப கஷ்டப்பட்டு (படிச்சான்னு யாரும் கேட்டக கூடாது? ) டாக்டர் ஆகிட்டான் . (உன் பிரண்டா இருந்தா எப்படி படிச்சு டாக்டர் ஆக முடுயும்? ).

வாழ்வே மாயம் , இந்த வாழ்வே மாயம் ......
(அட நம்ம ரிங் டோனு தாங்க, அந்த டாக்டர் பயபுள்ளதான் )

"ஹலோ "

"மச்சான் நான் சூசைட் பண்ணிக்க போறான்டா"

(எனக்கு திக்குன்னு ஆகிப் போச்சு இப்ப என்னா சொல்லிட்டம் , வெறும் ஹலோ தானே சொன்னோம் அதுக்கே இவன் சூசைட் பன்ன போறேன்குறான் , இன்னு நான் அஞ்சு நிமிஷம் பேசுனா குடும்பத்தோட சூசைட் பண்ணிக்குவான் போல இருக்கே ?)

"டே , மச்சான் இருடா இருடா , என்னடா பிரச்சன ?"

"அது வந்து நீ நேர்ல வா சொல்றேன் "
....................

நேர்ல போயி

"ஏன்டா மச்சான் நீ ஊருக்கே அல்வா குடுத்து சம்பாரிக்குற , உனக்கு என்ன பிரச்சனை? ""

"கிளினிக்கல நடந்த கொடுமைய சொல்லறேன் , அத கேட்டு நீயே ஒரு முடிவ சொல்லு ?"

"சரி சொல்லு "

@@@@@.........@@@@@


டாக்டர் : யோவ் உனக்கு பிளட் ஏறிகிட்டு இருந்துச்சே? இப்ப எப்படி வாயெல்லாம் ரத்தாம் , வாயில ஏதும் அடிபட்ருச்சா ?

பேசன்ட்: இல்லைங்க டாக்டர் பிளட் கை வழியா ஏத்துனா ரொம்ப சுலோவா ஏறுது அது தான் அப்படியே குடிச்சிட்டேன்

டாக்டர் : ????????????

@@@@@.........@@@@@


டாக்டர் : இந்த டானிக்க டெயிலி காலைல ரெண்டு ஸ்பூன் , ராத்திரி ரெண்டு ஸ்பூன் அப்படின்னு , மூணு நாளைக்கு சாப்பிடுங்க

பேசன்ட் : டாக்டர் , எங்க வீட்ட்ல மொத்தமே அஞ்சு ஸ்பூன் தான் இருக்கு , மீதிக்கு ஸ்பூனுக்கு என்னா பன்றது?

டாக்டர் : ???????

@@@@@.........@@@@@


"இது ரெண்டையும் கூட விடுறா , போன மாசம் ஒரு பேசன்ட் வந்தான் , அவன் கிட்ட உங்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகமா இருக்கு , நீங்க டெயிலி ஆறு கிலோ மீட்டர் நடக்கனுமின்னு சொன்னேன் "

சரியாதான் சொல்லி இருக்க , இதுல என்ன பிரச்சன ?"

அந்த ஆளு இன்னைக்கு காலைல போன் பண்ணி ,

" சார் நீங்க சொன்னமாதிரி தினமும் ஆறுகிலோ மீட்டர் நடந்து இப்ப திண்டிவனம் வந்துட்டேன் , இன்னும் நடக்கனுமா இல்லை போதுமா?" அப்படிங்குறான் .

நான் ஒண்ணுமே பேசல , சைலண்டா திரும்பி வந்துட்டேன் , பாவம் அவன் ஜாதகத்துல சனி உட்டிச்சத்துல இருக்கு போல .........

டிஸ்கி : இவை எல்லாம் எங்கேயோ எப்போதோ கேட்டவை .


இப்படிக்கு
பதிவு எழுத தெரியாமல் ஜோக் போட்டு சமாளிப்போர் சங்கம்

Monday, August 9, 2010

இன்பச்சுற்றுலா...(டெர்ரராக )

டிஸ்கி : சாரி, திட்டாதிங்க , பதிவு கொஞ்சம் பெரிசா போச்சு , நானும் எவ்ளவோ எடிட் பண்ணிப் பாத்தேன் அப்பவும் முடியல , very sorry .

இன்பச்சுற்றுலா ............... பேரே நல்லா இருக்குல்ல ? நான் ஸ்கூல்ல படிக்கும் போது வருடா வருடம் கூட்டிகிட்டு போவாங்க . அத அப்புறம் பார்க்கலாம் . இப்ப நான் சிங்கபூர், மலேசியா , இந்தோனேசியா இன்பச்சுற்றுலா போயிட்டு வந்த கதைய சொல்றேன் .

அங்க ஒரு பிரண்டு ஃபேமிலியோட இருக்கான், அவனும் அடிக்கொருதரம் சிகபூருக்கு என்னை வரசொல்லுவான் , நாம என்ன மயிலாப்பூர் பார்த்தசாரதியா? இல்லை பட்டாபட்டியா ? ஃபேமிலி மேன் கூடபோயி சும்மா கோயில் குளமுன்னு சுத்தி பாக்க???

அப்புறம் ஒரு பேச்சுலர் பிரண்டு சிங்கபூருக்கு போனான் , அவனும் என்னைய சிங்கபூருக்கு வாடா , வாடான்னு கூப்பிட்டான் (பாவம் அவன் நாக்குல சனி , அவன் தலைஎழுத்து ) . ரைட்டு ரெண்டு அடிமைக சிக்கிட்டாணுக இனி விடுவமா ..... நானும் கிளம்பிட்டேன் .


சிங்கபூர் எபோர்ட்டுல இறங்கிய உடன் ஃபிரண்டுக்கு போன் பண்ணினேன் ........... புல் ரிங்கு போய் கடைசீல ஒரு பொண்ணு.......

"சூ கவாங் கிட்டாசி மிச்ட்ஜுபுச்சி மொஹாங்"

அப்படின்னு ஏதோ சைனீசுல சொல்லுச்சு. எனக்கு பகீருன்னு போச்சு , (நாம ஒரு கணக்கு போட்ட கடவுள் வேற கணக்கு போடுவாருன்னு சும்மாவா சொன்னாங்க ) ஆஹா ... இவனுக நம்மள இங்க பிச்சை எடுக்க விட்டுட்டானுகன்னு ...... அங்க இருந்த ஒரு மேடம் கிட்ட

"எச்சூச்மி மேடம் இந்த ஊருல எங்க பிட்ச்சை எடுத்தா அதிக கல்லா கட்டும்? "

"இல்தக்க கொச்சு மச்ஹூங்கி சூமியா சைய்யா "


அடப்பாவிகளா பிட்ச்சை எடுக்க பஸ்ட்டு சைனீஸ் கத்துக்கமே , சரின்னு இன்னொரு வாட்டி நம்ம பிரண்டுக்கு போன் டிரை பண்ணினேன் ,

ரிங்கு போச்சு ....................

போச்சு ............

ச்சு ................

சு................

"ஹலோ
(ஃபிரண்டுதான் , ஹிப் , ஹிப் ஹுர்ர்ர்ர்ரே ) "

"டே மச்சான் நான்தாண்டா ... "

"செல்லுடா மச்சான் என்ன விசேஷம்?"

"என்ன விசேஷமா??? அடப்பாவி நான் இப்ப சிங்கபூர் ஏர்போர்ட்ல இருக்கன்டா"

"அட ஆமா நீ வர்றேன்னு சொன்னில? , மறந்துட்டேன்? , சரி
டாக்ஸி புடிச்சிட்டு நான் குடுத்த அட்ரஸ்க்கு வா "

"மறந்துட்டேனா ??" அட நன்றி கெட்டவனே , இந்த நாயி ஒவ்வொரு வாட்டியும் வெளிநாடு போகும்போதும் , வரும்போதும் சென்னை ஏர்போர்டுக்கு போயிட்டு வந்தமே , நாம இப்பத்தான் முதல் வாட்டியா வெளிநாடு வந்திருக்கோம் இவன் ஏர்போர்டுக்கு கூட வரலையேன்னு ரொம்ப கவலைப்பட்டேன் . (உண்மைலே ரொம்ப ஃபீல் பண்ணேன் சார் )

அப்புறம் டாக்ஸி புடிச்சு "திலக் பிளாங்கா ரைஸ் " (இந்த பேர வச்சு ஒரு காமடி நடந்துச்சு அத அப்புறம் சொல்றேன் ) போனேன் . செகண்டு புளோர் போய் அவன் சொன்ன டோர் நம்பர் கதவ தட்டினே , ஒரு அழகான சைனீஸ் பொண்ணு வந்து கதவ தொரந்துச்சு . (ஆகா .... இவன் ஊருக்கு தெரியாம இங்க குடும்பமே நடத்துறானே ?) . அட்ரஸ் எழுதின பேபர காட்டினேன் , அது கீழ் புளோர கைய காட்டுச்சு ,

(என்னடான்னு பாத்தா , சிங்கபூருல கிரவுண்டு புளோர பஸ்ட்டு புலோருங்குறான் பஸ்ட்டு புளோர செகண்டுபுலோருங்கறான் , ஆஹா ... வந்த உடனே குழப்புரானுகளே ?) குழம்பிபோய் கீழ போய் கதவ தட்டினா , அது தான் அவன் ரூம் அங்க இருந்த அவன் பிரண்டு

"சார் , அவரு பிரண்டு ஒருத்தர் இந்தியாவுல இருந்து வர்றாரு , அவர பிக்அப் பண்ண ஏர்போர்ட் போயிருக்கார் ."

"என்னது எர்போர்ட்டுக்கா ? நான் தான் சார் இந்தியாவுல இருந்து வந்த
அவரோட பிரண்டு "

"அப்ப , உங்கள பிக்கப் பண்ணத்தான் ஏர்போர்ட் போயிருக்கான் , உடனே நீங்க ஏர்போர்ட் போங்க "


(அவ்வ்வ்வ்வ்வ்....................... டேய்... என்னங்கடா சின்னபுள்ள தனமா இருக்கு ), மறுபடியும் ஃபிரண்டுக்கு போன் போட்டேன் , டே , நீ அங்கே இரு நான் வர்றேன்னு சொல்லிட்டு வந்து சேந்தான் .

என்னடான்னா...???? ஏர்போர்ட்டுக்கு வரலைன்னு சொல்லிட்டு , ஏர்போர்ட்டுக்கு வந்து அப்புறம் திடீருன்னு நம்ம முன்னாடி வந்து சர்ப்ரைஸ் தரனுமின்னு, கதவோரமா இருந்த குப்ப தொட்டிக்கு பின்னாடி குத்த வச்சு உட்காந்து இருந்திருக்கான் , நானும் கவனிக்கல , அவனும் என்னைய மிஸ்பன்னிட்டான். கடைசீல ரெண்டு டாக்ஸி செலவு .
இது பரவா இல்லைங்க இன்னொரு டெர்ரர் வேலை பன்னான் பாருங்க ..................................... தொடரும்


Thursday, August 5, 2010

யாரு ஏமாளி ?

டீவில வர்ற விளம்பரங்கள பாத்தா நமக்கு தலை சுத்தி டென்சனாகி போகுதுங்க .............. அதுல ஒன்னு காம்ப்ளான் விளம்பரம் ......


"காம்ப்ளான் குடிக்காத குழந்தைக வளர்ராங்க 3 செட்டிமீட்டர், காம்ப்ளான் குடிக்கிற குழந்தைக வளர்ராங்க 6 செட்டிமீட்டர் , காம்ப்ளான் குடிக்காத குழந்தைகளவிட காம்ப்ளான் குடிக்கிற குழந்தைக இரட்டிப்பு வளர்ச்சி அடையுறாங்க .."

அப்படின்னா 18 வயசுல காம்ப்ளான் குடிக்காத குழந்தைக 6 அடி இருந்தா , காம்ப்ளான் குடிக்கிற குழந்தைக 12 அடி இருக்குமா ???

-----@@@@@-----

இன்னொன்னு டிவி கிளாரிட்டி பத்தி ,

"ஒரு டீவில நிகழ்ச்சிகள் மங்களா இருக்கும் , அதே விளம்பரம் குடுக்கும் கம்பனி டீவில தெளிவா கிளாரிட்டியா தெரியிற மாதிரி காட்டிட்டு , பாருங்கள் எங்கள் டிவியில் எவ்வளவு கிளாரிட்டியா இருக்குன்னு சொல்லுவானுக"

அட மட மாக்கானுகளா எங்கவீட்டுல இருக்க டிவியோட கிலாரிடில தான் மொத்த விளம்பரமும் தெரியும் ???

-----@@@@@-----

நான் ரொம்ப குழம்பி போன விளம்பரம் இதுதானுங்க , முன்னாடி அடிக்கொரு முறை வரும் இப்ப காணோம் .

"முட்டை சாப்பிடுங்க , எல்லோரும் முட்டை சாப்பிடுங்கோன்னு ஒரு விளம்பரம் வருமுங்க , அதுல ஏதாவது கம்பனி பேர சொல்லி அந்த கம்பனி முட்டைய சாப்பிடுங்கன்னு சொன்னாலும் பரவாஇல்லை சும்மா மொட்டையா முட்டை சாப்பிடுங்கன்னு வரும் ."

யாரு? எதுக்கு குடுக்குரானுகண்ணே தெரியாது ?.

-----@@@@@-----

"அப்புறம் இப்ப எல்லா கடைகளிலும் ஆடிக்கு 50 பிரசன்ட் தள்ளுபடி தர்ரானுக , . குடுக்குற 50 பிரசன்ட் தள்ளுபடி போக மீதமுள்ள 50 பிரசன்ட் ல மிக குறைந்த பட்சம் 10 பிரசன்ட் லாபமாவது இருக்கும் . சும்மா லாபம் இல்லாமல்தர அவனுக யாரும் நமக்கு சொந்த பந்தம் கிடையாது. "

அப்படின்னா ?
200 ரூபா சேலைய 50 பிரசன்ட் தள்ளுபடி போக 100 ரூபாயிக்கு தர்ரானுக , அதுல 10 பிரசன்ட் 10 லாபம் பத்து ரூபா , ஓகே . அதே சேலை ஆடித்தள்ளுபடி இல்லாத போது 200 விக்கிராணுக. அப்ப 200 ரூபாயிக்கு விற்கும் சேலையில் லாபம் மொத்தம் 110 ரூபாயா ?

-----@@@@@-----

"அப்புறம் இந்த CSE , ABC , IJK ன்னு ஒரே கம்ப்யுடர் கிளாஸ் எடுக்கும் கம்பனிகளின் விளம்பரம் , எங்க கம்பனில கம்பியுடர் கோர்ஸ் முடிச்ச உடனே லட்சகனக்கான் ரூபாய் சம்பளத்துல வெளிநாடுகளில் விலை கிடைக்கும் அப்படின்னு விளம்பரம் பண்ணுவானுக ."


அட பன்னாட , பரதேசிகளா இப்படி விளம்பரம் குடுத்து சம்பாரிக்கிரதுக்கு நீங்களே வெளிநாடுகள்ள போய் வேலைக்கு சேர வேண்டியதுதானே ? சொல்லிகுடுக்குற உங்களுக்கே வேலை kidaikkaama தானே இந்த வேலை பாக்குரிக்க ?

-----@@@@@-----

டிஸ்கி: பாருங்க இதெல்லாம் ஏண்டான்னு கேட்டா என்ன லூசுங்குராணுக.(பட்டாப்பட்டி : கேட்கலைனாலும் நீ லூசு தான மங்கு )