எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Thursday, December 29, 2011

விடைபெறுகிறேன் நண்பர்களே


டியர் பிரண்ட்ஸ் ,


எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல, என்னால இனிமே இந்த வலையுலகில் தொடர்ந்து செயல்படமுடியாத சூழல் உருவாகிவிட்டது . ஆனால் கடந்த நாட்களில் எனக்கு இந்த உலகம் முழுவதிலிருந்து பல நண்பர்கள் கிடைத்தார்கள் .  எனது நட்பின் மூலம் அதில் சிலருக்கு மனவருத்தங்களும் சங்கடங்களும் ஏற்பட்டு இருக்கலாம் , எனவே நண்பர்களே விடைபெறும் இந்த நேரத்தில் அவர்களிடம் நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் . தயவு செய்து உங்கள் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். கலங்கிய கண்களுடன் விடைபெறுகிறேன் .

இப்படிக்கு

2011டுஸ்கி : தயவுசெய்து கீழேயுள்ள டிஸ்கியை யாரும் படிக்காதீர்கள் .

டிஸ்கி : ஹி.ஹி.ஹி.....ஒன்னும் இல்லைங்க போனவருசம் (2010 ) ஒரு பதிவர் இந்தமாதிரி பதிவு போட்டு இருந்தார். இந்த கான்செப்ட் ரொம்ப எனக்கு புடிச்சிருந்தது அதான். (@பட்டா ..... இந்த இடத்துல தான் நீ காரி துப்பனும் )

சரி இப்போ மேட்டருக்கு வருவோம் ..........

டெர்ரர் கும்மி குரூப்புல இருந்த நாங்க பதிவர்களின் பதிவுகளுக்கு  ஒரு சின்ன பரிசுப்போட்டி    வச்சிருக்கோம் . கீழ உள்ளத கிளிக் பண்ணி டீடைல்ஸ் பார்த்துக்கங்க .  

இதுல முதல் முக்கியமான கண்டிசன் என்னான்னா ??? 

டெர்ரர் கும்மி மெம்பர்கள் யாரும் போட்டி  நடுவர்கள் கிடையாது  .

அடடா ..... ஆமா இவனுக பூராம்  ஹை கோர்ட் ஜட்ஜா இருந்தவுங்க , தீர்ப்பு சொல்லிட்டாலும் .......???


இதுல ரெண்டாவது  முக்கியமான கண்டிசன் என்னான்னா ??? 

டெர்ரர் கும்மியை சேர்ந்த யாரும் இந்த போட்டில கலந்துக்க கூடாது .

அடிங்.... ங்கொய்யாலே , நாதாரி கும்மி நாயிகளா என்னமோ இவனுகள கலந்துக்க விட்டுட்டா எல்லாரும் பரிசு வாங்கி குவிக்கப்போறது  மாதிரி  என்னமா பில்டப் குடுத்திருக்காணுக. ஒரு பயலுக்கு (முக்கியமா என்னையும் சேர்த்துதான்)  ஒழுங்கா ஒரு பதிவு எழுத தெரியாது , இப்படி ஒரு கண்டிசன் இவனுகளா போட்டு போட்டில கலந்து தோத்துபோயி  கேவலப்படுரதுல இருந்து தப்பிக்க ஐடியா பண்ணிட்டானுக .