எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Wednesday, August 22, 2012

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடம்


ங்கொய்யாலே பிளாக்குல பதிவு போடுறதுக்கு மேட்டர் இல்லைன்னு பேஸ் புக் பக்கம் போனா அங்க இதைவிட மோசம்.......  பிளாக்குளையாவது வாரத்துக்கு ஒரு பதிவு போட்டு மெயிடைன் பண்ணலாம் , ஆனா பேஸ் புக்குல டெயிலி ஒரு ஸ்டேட்ஸ் போடலைன்னா நம்மள மறந்திடுறாங்க........ புலி வால    விட்டு பூனை வால  புடிச்ச கதையா ....... சே....தூ ...பாருங்க ஒரு மாசம் பேஸ் புக்ல இருந்ததுல பைத்தியமே புடிச்சிருச்சு....... பூனை வாலவிட்டு  புலி வால புடிச்ச கதையா ஆகிப்போச்சுங்க . 

சரி அத விடுங்க நாம் விசயத்துக்கு வருவோம் .பேஸ் புக்குல போட்ட ஒரு மேட்டர சொல்லுறேன் , அதாவது ........ 


நான் காலேஜ் படிக்கும் போது என்னோடு கிளாஸ் மேட் ஒரு பொண்ணு டாலர் வச்ச புதுசா செயின்  போட்டு வந்தா , நான் என்ன புது செயினான்னு கேட்டேன் ...

ஆமா புதுசுதான் முருகன் டாலர் வச்ச செயின் எங்கப்பா பழனில இருந்து வாங்கிட்டு வந்தாருன்னு சொன்னா ............. 

நான் எதார்த்தமா 

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடம் அப்படின்னேன் ........

தக்காளி அதுக்கப்புறம் எங்க காலேஜுல எந்த பொண்ணுமே முருகன் டாலர் வச்ச செயின் போடுறது இல்லை .


# நானும் ஏன் இவளுக முருகன் டாலர் போடமாட்டிங்கிராங்கன்னு யோசிச்சு பாக்குறேன் என்னோட மரமண்டைக்கு எதுவுமே இதுவரைக்கும் புரியல சார் ...!!!!