எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, September 2, 2013

யப்பா சாமிகளா blog's பக்கம் இன்னும் ஒரு வாரத்துக்கு வந்துடாதிங்க :-)))

எல்லா பயபுள்ளைகளும் நேத்து சென்னையில் நடந்த பதிவர்கள் சந்திப்ப பத்தியே பதிவு/போட்டோ  போட்டு சாவடிப்பாணுக :) :) :)

ஜப்பானுல இருந்து ஜாக்கிசான் வந்தாக , அமெரிக்காவுல இருந்து மைகேல் ஜாக்ஸன் வந்தாக , ஆப்கானிஸ்தான்ல இருந்து ஒசாமா பின் லேடன் வந்தாக மற்றும் நம் உறவினர்கள் எல்லாம் வந்தாகன்னு ஆரம்பிச்சு ... கக்கா உச்சா போனதில இருந்து , கைகழுவாம சாப்பிட்டது எல்லாத்தையும் போட்டோவோட போட்டு உயிரை வாங்கிடுவாங்க...... 

டிஸ்கி : புதிய பதிவர், பழைய பதிவர் பெரிய்ய அப்பாடக்கர் பதிவர்ஸ் அப்படின்னு எந்த வேற்றுமையும் இல்லாமல் அனைவரையும் சமமாக நடத்தி மிகச்சிறப்பாக பதிவர்கள் சந்திப்பு நடந்து முடிந்ததாம்., ரொம்ப சந்தோசம் ,இது மிக மிக நல்ல விஷயம்.....

இப்படி சமமாக நடத்துவது புடிக்காமலே லுக்கிலக் , சாதிஆ என்ற இரண்டு அப்பாடக்க வெங்காய பதிவர்கள் வரவில்லையாம்...... ரொம்ப நல்லதா போச்சு..... கிளம்புங்க கிளம்புங்க காத்து வரட்டும்........

:-)))))

Saturday, August 31, 2013

.ங்கொய்யாலே மோடிக்கே ஆப்பு ...

தல நீ .சிங்கம்டா....... 

திண்டுக்கல் பிஜேபி பிரமுகரே..... நீ உண்மையிலே சிங்கம்டா....

சிங்கம்ன்னு சொன்னா என் பிரண்டு ஒருத்தன் கேப்பான் .......

"மச்சி அவனோட  தாத்தா சிங்கம் வளர்த்தாரா ....இல்ல அவுங்க அம்மா காட்டுக்குள்ள போயிட்டு வந்தாங்களா ????"

(ங்கொய்யாலே இதுக்கு அர்த்தம் புரிச்சவன் புரிஞ்சுக்கோ புரியாதவன் நாண்டுக்கிட்டு செத்துப்போ  ....)

ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்..........

தான் தனித்து பிரபலமாக மிக கேவலமான நாயிகள் மோடி, அத்வானி செய்த அதே சீப் பப்ளிசிடியை தான் இவன் செயதுள்ளான் .....

ஹா,ஹா,ஹா.... பின்னாடி இவன் மிகப்பெரிய பிஜேபி தலைவனா வருவான்.....ங்கொய்யாலே மோடிக்கே வைப்பான் ஆப்பு ...

அத்வானிக்கு ரத யாத்திரை , மோடிக்கு குஜராத் கலவரம்.....இவனுக்கு பெட்ரோல் பாம்........ எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே 

அதேபோல் அவனே அவன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி...அதுவும் அவன் நிறைமாத கர்பிணி மனைவியின் மீது......... வேறு மதத்தவர்கள் மேல பழிபோட்டு போலீஸ் பாதுகாப்பு பெற முயற்சி செய்துள்ளான்.......

இதுல இந்த பத்திரிகை  ஊடக  நாய்கள் ...... BJP வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சுன்னு முதல் பக்கத்தில் தலைப்பு செய்தியா  போட்ட நாயிகள்...... உண்மையை 4 வது பக்கத்தில் சும்மா சின்னதா போட்டு இருக்கானுக..........

பஸ்ட்டு இந்த மீடியா நாதாரிகள்தான்  முதல் தீவிர வாதிகள்......

சென்னை பதிவர்கள் சந்திப்பு - மெனு (உணவு அட்டவணை )

சென்னை பதிவர்கள் சந்திப்பு - மெனு (உணவு அட்டவணை ) 

காலை   
வெஜ் - பொங்கல் , பூரி , இட்லி, தோசை ,வடை ,இடியாப்பம் , நெய் தோசை, அடை அவியல், கிச்சடி, பிரட் டோஸ்ட் வித் ஆம்லெட்  

நான்-வெஜ் - பரோட்டா ஆட்டுகால் பாயா,  போட்டி , இடியாப்பம் மட்டன் குருமா. முட்டை சப்பாத்தி 

11 மணிக்கு டீ , ஜூஸ் 
டீ, லைம் , கிரேப்,அப்பிள் , பைன் ஆப்பிள் ஜூஸ்வகைகள்  

மதியம் அன்-லிமிடெட் மீல்ஸ் 
வெஜ் - சாம்பார்,வத்தகுழம்பு  ரசம், மோர், 2 வகை கூட்டு , 2 வகை பொரியல் , அப்பளம் , ஸ்வீட் , ஊறுகாய் , வாட்டர் பாட்டில் , பீடா

நான்-வெஜ் - மட்டன் பிரியாணி , ஃபிஸ் பிறை, சிக்கன் கிரேவி , அவிச்ச முட்டை , தயிர் சட்னி , ஸ்வீட் 

சயிந்திரம் டீ , பிஸ்கட் 

நல்லா போயி ஒரு கட்டு கட்டிட்டு வாங்க......

அப்புறம் வெளியூர் பதிவர்களுக்கு ரிடர்ன் ஏர் / டிரைன் டிக்கட்ஸ் வித் A/C அக்காமடேசன் 

டிஸ்கி : ஹா,ஹா,ஹா...... நிர்வாகிகள கோர்த்து விட்டாச்சு....... ஹப்பாடா இப்போதான் நிம்மதியா இருக்கு .......

பட்டிக்காட்டான் ஜெய் (நிர்வாக குழு முக்கிய உறுப்பினர் ) : நாதாரி மங்கு நாயே  10 பைசா கூட டொனேசன் குடுக்கல....தக்காளி இது பேச்ச பாரு பன்னாட , பரதேசி நாயே...... என் கண்ணுல சிக்கிராத அப்புறம் நான் கொலை கேசுல உள்ள போகவேண்டி இருக்கும் ...... சென்னை பக்கம் வந்திடாத...அப்படியே துபாய் பக்கம் ஓடிபோயிடு.....

எனது தோல்விக்கு பின்னால் இருந்த பெண்கள்


ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பாள்..... 
அப்போ தோல்விக்கு  பின்னால்.....ங்கொய்யாலே நிறையா பொண்ணுக இருப்பாளுக....

எனது தோல்விக்கு பின்னால் இருந்த பெண்கள் 

5- 6 வது படிக்கும் போது - கணக்கு டீச்சர் 
7-8 வது படிக்கும் போது - மஞ்சுளா 
9-10 வது படிக்கும் போது - லக்ஸ்மி 
11-12 வது படிக்கும் போது - ஹேமா 
 UG ல - பவானி 
PG ல - லாவண்யா..... ...

@ தக்காளி நம்மள எங்க படிக்க விட்டாளுக 

Thursday, August 22, 2013

மரிப்பதற்கு முன் மறக்கவே நினைக்கிறேன்


நீண்ட நாட்களுக்கு பின் எனது கல்லூரி டைரியை எடுத்து புரட்டிப் பார்த்தேன் ...........மறந்து விட்டதாக் என்னை நானே ஏமாற்றிக்கொண்ட நினைவுகள் ......

அவளுடன் உண்டான சண்டையின் போது என் மணிக்கட்டில் சிகிரட்டால் சுட்டுக்கொண்ட தழும்பை இப்பொழுது தடவி பார்த்தேன்.

நடு இரவு நேரத்தில் சிறிது தொலைவில் இருந்து அவள் வீட்டையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்த நாட்கள்.

மறக்க முடியாத நாட்கள் . மறக்க விரும்பாத நாட்கள் . மீண்டும் கிடைக்காத நாட்கள் .ஆனால் மறக்க வேண்டிய நாட்கள். 

லேசா மழைபெய்யும் போது கல்லூரி வராண்டாவில் காதலிக்காக காத்துக்கிடப்பது தனி சுகம் .

மழை காலங்களில் கல்லூரி விடுமுறை நாட்களில் அவள் வரமாட்டாள் என்று தெரிந்தும் கல்லூரி வராண்டாவில் காத்திருந்த நாட்கள் . 

அவள் உதட்டோரம் சுழிக்கும் சிரிப்புக்காக ஏங்கி நின்ற நாட்கள் .

பாதி சாப்பிட்ட தின்பண்டங்களை பரிமாறிக்கொண்ட நாட்கள் , அவள் தொட்ட பேனாவை நானும் தொட வேண்டும் என்பதற்காக வேண்டும் என்றே பேனா எடுத்துப்போகாத நாட்கள், எனக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காவே இரண்டு பேனாக்கள் அவள் கொண்டு வரும் நாட்கள்.

அவளிடம் திட்டு வாங்குவதற்கென்றே அவளுக்கு பயந்து கொண்டு மறைப்பது போல நடித்து அவளுக்கு தெரியுமாறு சிகரட் பிடித்த நாட்கள் ,

அவளிடம் திருடிய கர்ஷிப்கள் , ஹேர் கிளிப்க்கள் , அவளிடம் தொலைப்பதற்கு வேண்டும் என்றே நான் வாங்கி தொலைத்த பரிசுப்பொருட்கள்.

இப்பொழுது என் நினைவுகளில் மட்டும் உயிர் வாழ்கின்றன ....

- மீள் பதிவு   

facebook -ல் 90,810 likes வாங்கிய ஃபோட்டோ


மச்சி பீர் பாட்டீல பார்த்தியாடா ???


சார் உங்களுக்கு போன் 

 என் இனமடா  நீ .....


டேய் சீக்கிரம் இறங்குங்கடா காதுல அரிக்குது facebook -ல் 90,810 likes வாங்கிய ஃபோட்டோ  , இதுதான்., seemore அப்படின்னு ஒரு ஐடில  வந்தது 


Wednesday, August 21, 2013

என்னைய கெட்ட வார்த்தைல திட்டுறானுக சார்

கண்ணா இந்த லெட்டர 15 ஜெராக்ஸ் காப்பி எடுத்திட்டு வா " (எவன்டா அவன் லவ் லெட்டரான்னு சவுண்டு விடுறது )

நம்ம ஆபீஸ்பாய் கிட்ட சொன்னேங்க , பையன் ஜெராக்ஸ் மெசின் ரூமுக்கு போயிட்டு வந்து

" சார் , ஜெராக்ஸ் எடுக்குற பேப்பர் ( ஒயிட் சீட்) இல்லை , 4 வொயிட் சீட் தான் இருக்கு, பேப்பர் வாங்கணும் "

"அடடா .....இப்ப அவசரமா வேணுமே , நீ ஒன்னு பண்ணு பஸ்ட்டு ஒரு ஒயிட் சீட்ட வச்சு 15 ஒயிட்சீட் ஜெராக்ஸ்போட்டுக்க , அப்புறம் அந்த பேபர்கள வச்சு லெட்டர ஜெராக்ஸ் எடு"

"சார் , ஜெராக்ஸ் போடத்தான் பேப்பர் இல்லை "

"அதாம்பா , பஸ்ட்டு ஒயிட் சீட்ட வச்சு ஜெராக்ஸ் போட்டேன்னா , உனக்கு நிறையா ஒயிட் சீட் கிடைச்சிடும் , அதை யூஸ் பண்ணிக்கோ "

"என்னங்க சார் வாழப்பழ கதையா இருக்கு, ஒயிட் சீட்ட ஜெராக்ஸ் போடவா ?"

" ஆமா கண்ணா"

"போங்கடா நீங்களும் உங்க வேலையும் ...................இத பொழப்புக்கு நான் குடும்பத்தோட மருந்த குடிச்சு சாகலாம் .......... நீ எல்லாம் ஒரு மனுசனா .........அடிங்... ங்கொ..........@@##$%^&^%%............."

"ஹேய் , ஹேய் ....நோ பேட் வேர்ட்ஸ் .........மை பேமிலி பாவம் "

(அடப்பாவி என்னா கோவக்காரனா இருக்கான் ? )

நீங்களே சொல்லுங்க சார் ஜெராக்ஸ் எடுக்க ஒயிட் சீட் பத்தலைன்னா , இருக்க ஒரு ஒயிட் சீட்ட ஒரு 20 காபி ஜெராக்ஸ் போட்டா அப்புறம் நமக்கு 20 ஒயிட் சீட் எக்ஸ்ட்ரா கிடைச்சிடும் அதை வச்சு அப்புறம் லெட்டர ஜெராக்ஸ் எடுத்துக்கிரலாம்ல, இதைச்சொன்னா என்னைய கெட்ட வார்த்தைல திட்டுறானுக ..... எல்லாம் கலிகாலம் சார் ..

டிஸ்கி : யாருக்காவது ஏதாவது புரிஞ்சதா ??? புரிந்தவர்கள் தயவு கூர்ந்து எனக்கு விளக்கமளிக்கவும் .- மீள் பதிவு

ஒரே ஒரு ஐஸ்கிரீம் வாங்கி குடுத்தேன், டக்குன்னு கிஸ் குடுத்தா.

பொண்ணுகள ஈசியா ஏமாத்தலாம் சார்....

என் பிளாட்  பக்கத்துல புதுசா ஒரு குடும்பம் குடி வந்துச்சு.... பார்த்தா அந்த குடும்பத்துல ஒரு அழகான பொண்ணு ...... அவ்வ்வ்வ்வ்வ்...

ரெண்டு , மூணு நாள் கழிச்சு கேசுவலா கை காட்டுறது மாதிரி சிரிச்சுக்கிட்டே கை காட்டினேன்.... இம்ம்ஹும் ...

அவ கண்டுக்கவே இல்லை ....

தக்காளி இவ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா  , இவள எப்படியாது மடக்கனும்ன்னு முடிவு பண்ணினேன்.....

சரின்னு அப்படி இப்படின்னு கரக்ட் பண்ணி நைஸா ஒரு நாள் ஐஸ்கிரீம் பார்லர் போகலாமான்னு கேட்டேன் ..... 

தக்காளி டக்குன்னு சரின்னு சொல்லிட்டா...... எனக்கு பயங்கர ஆச்சரியமா போச்சு....

அப்புறம் என்ன பார்லர் கூட்டிட்டுபோயி 85 ரூபாயிக்கு ஒரே ஒரு ஐஸ்கிரீம் தாங்க வாங்கி குடுத்தேன்.....

டக்குன்னு அழகான கிஸ் குடுத்தா..... அதுல இருந்து நானும் அவளும் குளோஸ் பிரண்ட்ஸ்....

@ பக்கத்து வீட்டு குட்டி பாப்பா UKG படிக்கிறா

Tuesday, August 20, 2013

விஜய் டிவியில் சொதப்பிய கேபிள் சங்கர்

விஜய் டிவி ....நீயா,நானா.....நிகழ்ச்சியில் இன்று காலை (மறுஒளிபரப்பாக இருக்கலாம் )

"இன்டெர் நெட் தெரிந்தவர்கள் , தெரியாதவர்கள்......."

தலைப்பு இதுதான்..........

இதுல பிளாக் எழுத தெரிந்தவர்களுக்காக்  கேபிள் சங்கர் இருந்தார்...கூட நாலு அல்லகைகள்  ..... அவனுக எல்லாம் வெளிநாட்டுல வெங்காயம் வித்து டாலர்ல சம்பாரிக்கிற நாய்கள் .....

எல்லாரும் நெட்டுல , பிளாக்குல நான் பெரிய்ய அப்பாடக்கர்னு சொன்னானுகளே தவிர எதிராளிகள் கேட்ட கேள்விக்கு சரியான பதிலே சொல்ல.....

முதல் இரண்டு மூன்று கேள்விகளை தவிர , அடுத்து எதற்கும் கோபிநாத் கேபிள் சங்கர் பக்கம் திரும்பவே இல்லை......

கேபிள் சங்கர் நிகழ்ச்சி முடியும் வரை மைக்கை   வாங்க மிகவும் டிரை பண்ணினார்..... கடைசி வரை யாருமே குடுக்க வில்லை.....

பிளாக் உலகில் மிக முக்கிய  இடத்தில இருப்பவர் மற்றும் பிளாக்கின் அப்பாடக்கராக நினைத்துக்கொண்டு இருக்கும் ஒருவர் பிளாக் பத்தி எவ்ளோ நல்லா  பாயிண்ட் , பாயிண்ட்டா பேசலாம்.......

பட் இந்த புரோகிராம் ...வழவழ கொலகொல சொதப்பலோ சொதப்பலா முடிச்சிட்டார் கேபிள் சங்கர்..... (பாவம் அவர் வொர்த் அவ்ளோதானோ ???)

கேபிள் சார்...பீ அலெர்ட்...

IT பசங்களுக்கு பிரண்டா இருக்கிறதைவிட கேரளாவுக்கு அடிமாடா போயிடலாம்

உஸ்ஸ்ஸ்ஸ் .......

இவனுக என்னமோ பிச்சை எடுக்கிறது மாதிரியும் , கவுருமெண்ட் இவனுக கழுத்துல கத்திய வச்சு டேக்ஸ் கட்ட சொல்றதுமாதிரியும் , இவனுக பொலம்புற பொலம்பல் இருக்கே......அவ்வ்வ்வ்வ்...

ரெண்டு  பீர் வாங்கி குடுத்திட்டு இவனுக குடுக்கிற இமசை இருக்கே...... கடவுளே .......... (இந்த மானம் கெட்ட பீர குடிக்கிறதுக்கு மருந்த குடிச்சு சாகலாம் )

இவனுக வாங்கி குடுத்த பீருக்கு மட்டும் காது இருந்து இவனுக  பண்ணுற அழிச்சாட்டியத்த கேட்டா  இந்நேரம் நாண்டுக்கிட்டு செத்துப்போயிருக்கும்.

டேக்ஸ் கட்ட ரொம்ப கஷ்டமா இருந்தா வேலைய ரிசைன் பண்ணிட்டு வீட்டுல இருங்கடா மூதேவிகளா ,  அப்புறம் ஒரு பய ஒரு பைசா கூட டேக்ஸ் கேக்க  மாட்டானுக.....

நாதாரிக ......... மாசம் 10000 , 15000 டேக்ஸ் புடிக்கிரானுகன்னு ஓவரா புலம்புராணுக .... அப்புறம் வருஷம் 13 lks , 16 lks சம்பளம் வாங்கினா வருஷம் 1 lkh இல்ல 1.5 lkh டாக்ஸ் கட்டிதான் ஆகணும்.......... சம்பாரிக்கிரதுல ஒரு 10% டேக்ஸ் கட்ட மாட்டின்ன்களோ பன்னாட பரதேசிகளா ........

இனிமே எவனாவது டேக்ஸ் பத்தி  பேசினிங்க...... ரூம்ல கட்டிப்போட்டு சாகிற வரைக்கும் "தலைவா" படத்த பார்க்க வச்சிருவேன்....ஜாக்கிரதை....

@ ஐயையோ சத்தம் போட்டு பேசிட்டனே , அடுத்த பீர கேன்சல் பண்ணிடுவானோ ???

Monday, August 19, 2013

பெட்ரோல் போடாமல் கார் ஓட்டுவது எப்படி ??


என்னமோ ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 100 km போற கார கண்டுபுடிச்சிட்டேன்னு ரொம்ப பீத்திக்கிரானுக, மச்சி  நான் பெட்ரோலே போடாம கார் ஒட்டிக்கிட்டு இருக்கேன் "
" என்ன மச்சி சொல்ற பெட்ரோல் இல்லாம கார் ஒட்டுரியா ?"

'ஆமாண்டா மச்சி நானும் 4, 5 வருசமா பெட்ரோல் இல்லாமதான் ஒட்டிக்கிட்டு இருக்கேன் "

" என்னடா மச்சி அச்சால்ட்டா சொல்ற ,  எப்படி ஓட்டுற  ? "

" டீசல் போட்டுதான் "

" போடாங்.....,@#@##@,  #$@$#@$@$$@"

"அடப்பாவி இவன் இதுக்கே இம்புட்டு கோவப்படுரானே ............ "

"மச்சி இது கூட பரவாயில்லைடா , பெட்ரோல் விலை கூடினதுல இருந்து நான் பைக்கு பெட்ரோல் போடுறதே இல்லைடா "

"டீசல் கார் இருக்கு ஓகே , டீசல் பைக் கிடையாதே .....பெட்ரோல் போடாம எப்படி மச்சி ஓட்டுற ?? மச்சி  பிளீஸ் சொல்லுடா.....  நான் பெட்ரோலுக்காக நிறையா  செலவு பண்ணுறேன் "

"அதுக்கெல்லாம் தனி திறமை வேணும்டா . உன்னால முடியாது, சரி குளோஸ் பிரண்ட்டா போயிட்ட , சொல்றேன் நீ யார்கிட்டயும் சொல்லிடாத "

" என் பக்கத்து வீட்டுக்காரன் மாமியார் மேல சத்தியமா யார்கிட்டயும் சொல்ல  மச்சி ....நீ சொல்லு "

" ஓகே .... பெட்ரோல் போடாம எப்படி ஓட்டுறேன்னு ...பார்...அதே மாதிரி நீயும் டிரை பண்ணு ... ""எப்படி நல்ல ஓட்டுறனா ??? "

பளார்ன்னு என் கன்னத்துல ஒன்னு விட்டான்.

லீவுக்கு ஊருக்கு போயிருந்தப்ப பக்கத்து ஊரு பிரண்டுகிட்ட இருந்து போன்வந்துச்சு

"ஹலோ......... சொல்றா மாமா "


"மச்சான் நான்தான் , என் குழந்தைக்கு காதுகுத்து வச்சிருக்கேன் , வந்திடு "

"எங்க? "

"குலசாமி கோவில்ல "

"அது எங்க இருக்கு? "

"நம்ம சிவாகிட்ட சொல்லிருக்கேன் நீ அவன் கூட வண்டில வந்திடு "

"கிடா வெட்டு இருக்கா"


"ஆமா"

"ஓகே டா"


ஆஹா , இன்னைக்கு எப்படியும் கிடாவெட்டுவாங்க விருந்துல போயி ஒரு கட்டு கட்டனுமின்னு காலைல இருந்தே பச்ச தண்ணி கூட பல்லுல படாம பாத்துகிட்டேன் .

கரக்ட்டா சிவாவும் வண்டிய எடுத்துகிட்டு வந்துட்டான் , வண்டிய பாத்ததும் பயங்கர சாக் ஆகிட்டேன்

"என்னடா மாமா வண்டில ரெண்டு வீல் தான் இருக்கு மீதி ரெண்டுவீலக்காணோம்?"

"நாயே..... இது பைக் ரெண்டுவீல்தான் இருக்கும் "

 "ஓ........ சாரிடா மாமா , வண்டின்னதும் நான் காருன்னு நினைச்சிட்டேன் "


சரின்னு கிளம்பி போனோம் . சரியான வெயில் அடிச்சு ...

"மாமா ஓவரா வெயிலா இருக்கு கொஞ்சம் ஏ.சிய போடு "


அவன் ஒண்ணுமே சொல்லல , வண்டிய ஓரமா நிப்பாடி பின்னாடி திரும்பி பளார்ன்னு என் கன்னத்துல ஒன்னு விட்டான்.

"இனிமே வாயத்தொறந்த மவனே உனக்கு இன்னைக்கு என் கைல தாண்டா சாவு ."

(எனக்கு கொய்ய்ய்ன்னு காதுக்குள்ள ஒரு சத்தம் , பைக்ல ஏ.சி இல்லன்னா வாயில சொல்லலாம்ல .......... என்னா கோவக்காரனா இருக்கான்? .)

கடைசீல இந்த நாயி ரூட்டு மாறிப்போய் , திரும்ப கோவில தேடி, தேடி நாங்க போயி சேர்றப்ப மணி 4.30 .

அங்க எல்லாம் சாப்ட்டு பாத்திரபண்டத்தைஎல்லாம் கழுவி வச்சிட்டு கிளம்பிக்கிட்டு இருந்தாங்க . கடைசில ரசம் சோறு கூட கிடைக்கல . (கடவுள் இருக்கார் சார் )

அப்புறம் என்ன பன்றது ஆத்துல ஓடுன தண்ணியத்தான் குடிச்சோம் .

-  பழைய பதிவிலிருந்து

பின்ன செருப்பு கால கடிக்காம தொப்புளவா போய் கடிக்கும்.

நேத்து சண்டே அதுவுமா எர்லி மார்னிங் 11:30 க்கு நான் அமலா பால் கூட டூயட் பாடிக்கிட்டே நல்லா தூங்கிக்கிட்டு இருந்த போது .......

கரடி மாதிரி ,என்னோட gf போன் பண்ணினா ......
(எப்படித்தான் தெரியுதோ... மூக்கு வேர்த்து கரக்ட்டா கால் பண்ணிட்டா )

"ஹலோ....டேய் என்னடா பண்ணுற? "

" செய்வாய் கிரகத்துக்கு ராக்கட் விட்டுக்கிட்டு இருக்கண்டி....சொல்லு என்ன விஷயம் "

" ஒன்னும் இல்லைடா , நேத்து சாப்பிங் போனப்ப  2000 ரூபாய் குடுத்து woodlandட செருப்பு வாங்கினேன்டா, அது என் கால  கடிக்குதுடா , என்னடா பண்றது ???"

ம்ம்ம்ம் போயி போலீசுல கம்ப்லைண்ட் பண்ணு

@ ங்கொய்யாலே  பின்ன செருப்பு கால கடிக்காம தொப்புளவா போய்  கடிக்கும்...... நாதாரி கேக்கிறா பாரு கேள்வி ....இங்க அவன், அவன் சண்டே அதுவுமா சரக்குக்கு சைடிஸ் வாங்க காசில்லாம அலையிரான் இதுல இவ 2000 ஓவா குடுத்து செருப்பு வாங்கினாளாம் செருப்பு...... காலங்கார்த்தாளா வயித்தெரிச்சல  கிளப்புறதுக்கின்னே போன் பன்னுராளுக ..... ஸ்டூபிட் , நான்சென்ஸ் பெல்லோ  ....

அடிப்பாவி நான் பாட்டுக்கு சிவனேன்னு அமலாபால் கூட டூயட் பாடிக்கிட்டு இருந்தேன்.....சே..... இனி மறுபடியும் அமலாபால் வருவாளான்னு தெரியலையே ???

Saturday, August 17, 2013

சொந்த செலவுல சூனியம் வச்சுகிறது இது தானோ ?

ஒரு மனுஷன் பல்பு வாங்கலாம் , ஒரு பல்பு கடையே வாங்குனா ?

"போடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு.... போடா .போடா ........ ..... ... ........ ...."

அட நம்ம மொபைல் ரிங் டோனுங்க, அட நம்ம சிவா திருச்சிலருந்து

"ஹலோ, என்னடா சிவா இந்த நேரத்துல ? "

"ஒன்னுமில்ல சுமாதான் , ஆமா இப்ப நீ எங்க இருக்க ? "

"ஏன்? வீட்லதான் "

"கதவ தொரடா பன்னாட "

ஆஹா , சனிகிழமை அதுவுமா சனி சங்கூத ஆரபிசுடுசே எழுந்து மணி பாத்தா 6 , தக்காளி மிட்நைடட்ல வந்து உயிரை வாங்குறான்னு நினசுகிட்டே போய் கதவ திறந்தேன்

"வாடா சிவா , என்னா திடீர்ன்னு? "

"ஒண்ணுமில்ல சும்மா ஒரு ஆபிஸ் மீட்டிங்

திடீர்னு மனசுல ஒரு பல்ப் பளீன்னு எஞ்சிசு , ஆஹா... அடிமை சிக்கிட்டான் இவன வச்சு இன்னைக்கு பொழுத குஜாலா ஓட்டிடலாம்....... , பயபுள்ளவேற நல்லா சம்பாரிகிரானாம்.

சரின்னு காலைல கிளம்பி இவன்தான பில்லு குடுக்க போறான்னு டெய்லி நாமசாப்புடுற கையேந்தி பவன விட்டு நேரா அசோக் நகர் சரவணபவனுக்கு வண்டியவிட்டேன்.

பொங்கல் , வடை , பூரி , நெய்ரோஸ்ட் (ஓசிதானே ) சாப்படு பாத்தா? , கரக்டாஅவன் கைகழுவ போனப்ப சர்வர் பில்ல கொண்டுவந்து நீட்றான் , சரிகாலைடிபன் கம்மி பில்லு தானேன்னு நானே 380 அழுது தொலைச்சேன்.

"என்னாடா அதுக்குள்ள பில்ல குடுத்திட்டியா , சரி வா போகலாம் "

சரின்னு வெளிய வந்து கார எடுத்து மூவ் பன்றேன் , காருக்கு முன்னாடி டைட்டா டி சர்ட் போட்டு ஒரு பொண்ணு வந்து கை ரெண்டையும் தூக்கி மறிச்சு கிட்டு போலிஸ் , போலிஸ்ன்னு கத்துச்சு , இதென்னடா இம்சையா போச்சுன்னு இறங்கி என்னான்னு கேட்டா "காரு" அவளுதாம் ,அப்பத்தான் இந்த சிவா பன்னாட சொன்னான்

"டே, நாம பைக்ல வந்தோம் "

(அடப்பாவி இத முன்னாலே சொல்லகூடாதா , அடிவாங்க விட்டு வேடிக்க பாப்பான் போலருக்கே ?)

சாரி மேம் , உங்க கார எடுத்துகங்க , ஆனா பாருங்க பஸ்டு கார மாத்துங்க, பைக்சாவிகே ஸ்டார்ட் ஆகிடுச்சுன்னு, கார் கார பிகருக்கு அட்வைஸ் பன்னிட்டுநம்ம பைக்க எடுத்திட்டு நேரா போய் அவன் ஆபீஸ் மீட்டிங் முடிச்சிட்டு ,அப்புறம்நேரா நம்ம சரக்கு மேட்டருக்கு போனோம்.

பில்லு 21050 அங்க போனா பந்தாவா கிரெடிட் கார்ட் எடுத்து குடுத்தான் , சர்வர்போயிட்டு வந்து கூலா...

"சார், கிரெடிட் கார்ட் வொர்க் பன்னல"

"அடடா... என்கிட்ட கேஷ் இல்ல போய் ATM ல எடுக்கணும், மச்சான் உன் கார்டகுடு "

சனி சம்மனம் போட்டு என் தல மேல உட்காந்துரிச்சு

என் மூஞ்சி ஹைவேஸ்ல நேசனல் பெர்மிட் லாரில அடிபட்ட நாய் மாதிரி ஆச்சு, அப்புறம் வேற வழியில்லாம என் கார்ட குடுத்தேன்.

முடிச்சிட்டு வெளிய வந்தோம் , இப்ப லஞ்ச சாப்பிடனும், இந்த நாயி கார்டுவொர்க் பன்னல , பேசாம லட்சுமி பவன் போய் ரெண்டு வெஜ் மீல்ஸ் சாப்டம்னா , 60 பது ரூபாயோட முடின்சிடும்ன்னு, இப்ப கரக்ட்டா என் பைக்க போய்எடுத்தேன்.

"மச்சான் நேரா ஏதாவது ATM போ "

என் காதுல தேன் வந்து பாய்ந்தது , அப்பாடா லட்சுமி பவன் வேண்டாம் , நேராஅஞ்சப்பர் போனோம்.

ங்கொய்யாலே.... எப்படியாவது பில்ல ஏத்தனும். நடப்பன , ஊர்வன , பறப்பன , நீந்துவன எல்லா வகைளையும் ஒரு கை பாத்தேன். சாப்டு முடிச்சிட்டு கைகழுவிபீடா போடும்போது சிவாவோட மொபைல் ரிங் ஆச்சு , என்னை பாத்து , உஸ்ஸ்ஸ்..... உதட்டு மேல கைய வச்சு சொல்லிட்டு , மொபைல எடுத்திட்டுவெளிய போய் பேச ஆரம்பிச்சிட்டான் , நம்மள பத்தி எப்படிதான் கண்டு புடிகிரான்களோ, தக்காளி கரக்டா சர்வர் அந்த நேரம் பாத்து பில்லு கொண்டுவந்தான் .

ஹா.... ஹா.... ஹா..... விதி வலியது , கடவுள் இருக்காரு சார்

960 பில்லு எந்தலைல . ஆஹா .......... இவன்கூடசுத்துனம்னா நம்ம டவுசர கிழிசிருவான்னு, அங்கிருந்தது நேரா வீட்டுக்குபோய்டோம்.

தூங்கி எழுந்து ஈவினிங் நேரா பஸ் ஸ்டாண்ட்லபோய் டிராப் பன்னேன். பஸ்சுலஏறி உட்காந்தான், பஸ்ஸு கிளம்ப போச்சு,(அப்பாடா...... நைட் டிபன் செலவில இவன்ட இருந்து தப்பிச்சிட்டோம் )

"ஓகே , பை டா சீ யு"

"டே ... மச்சான் கூலா ஒரு வாடர் பாட்டில் வாங்கு , மச்சான், மச்சான் அப்படியே ஒரு ஆனந்தவிகடன் , ஒரு பாக்கட் கிங்க்ஸ் "

"வாழ்வே மாயம் , இந்த வாழ்வே மாயம் , வாழ்வே மாயம் .......... .......... ....... ....."

பக்கத்துல யாரோட மொபைலோ இந்த பாட்ட ரிங்குச்சு.

"இந்தாடா"

"ஓகே பை டா மச்சான் , அனேகமா அடுத்த வெனஸ்டே மறுபடியும் வந்தாலும்வருவேன் , நீ இருப்பில்ல ? கொஞ்சம் சாபிங் போய் டிரஸ் எடுக்கனும் "

"%&#*%&#"

டிஸ்கி : யாரும் தயவு செய்து நான் வாங்குன பல்ப எண்ணி கமண்டஸ்ல போட்டு மானத்த வாங்கிடாதிங்க

கிஸ்கி: சன்டே , நாலாவது வாட்டி காலிங் பெல் அடிச்சு , முழிச்சேன் மணி பாத்தேன் மிட்னைட் 6 , டக்குன்னு மொபைல சுவிட்ச் ஆப் பண்ணினேன்

- மீள் பதிவு 

மோடியா , அத்வானியா ???

இரண்டு பேருமே மதத்தை முன்னிறுத்தி வளர்ந்தவர்கள் , இதில இவர்களின் மதத்தில் உள்ள பாரமற மக்களை மட்டுமே இவர்களால் கவர முடிந்தது.........

இவர்களுக்கு மற்ற மதத்தினரின் எதிர்ப்பை விட  இவர்களின் சமூகத்தில் , மதத்தில் உள்ளவர்களின் எதிர்ப்புதான் .....அதிகம்...

ஆனால் இவர்களால் நேரு குடும்ப ஆட்ச்சிக்கு எதிராக வேறு அரசியல் பண்ண தெரியவில்லை........ இவர்களுக்கு வேற வழியும் இல்லை . 

அதனாலே மதத்தை கையில் எடுத்தவன் தான் அத்வானி.......

இதில்  முக்கியமாக அத்வானி   தனது சுயநலத்துக்காக மத உணர்வை தூண்டிவிட்டவன் ........

மோடி மீது இதுவரை எந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்க படவில்லை.....அதனால் அவன் யோக்கியன் என்று  சொல்ல முடியாது ....

குஜராத்தில் நடந்த கலவரம் அவனால் உருவாக்கப்பது அல்ல......

ஒன்றை மட்டும் கவனியுங்கள்....BJP ஆட்ச்சியில் இருக்கும் போது மதக்கலவரங்கள் நடப்பதில்லை......

அவரளுக்கு மதம் முக்கியம் இல்லை பதவிதான்  முக்கியம் ...

BJP ஆட்ச்சிக்கு வந்தால்  இந்தியாவில் கடைசிவரை ராமர் கோவில் கட்ட மாட்டார்கள்.......

எனக்கு தெரிந்த வரை அத்வானி ஒரு சுயநல பதவி வெறி புடித்த சைக்கோ.......

 மோடியின் ஆட்ச்சியில் இதுவரை குஜராத் கலவரத்தை தவிர  வேறு எந்த கெட்ட பேரும்   கிடையாது......

மிகச்சிறந்த நிர்வாகி  என்று நிரூபித்துள்ளான்..........

சரி அதெல்லாம் விட்டிட்டு....... இருக்கிற திருடர்களில் யாரு நல்லவன்னு நாம வழக்கம் போல தேட ஆரம்பிக்கலாம்....

Friday, August 16, 2013

விஜய் - காசு/பதவிக்காக பீ....யை...​​​​ கூட தின்னுவான்


 விஜய் - காசு/பதவிக்காக  பீ....யை...​​​​ கூட தின்னுவான்

காங்கிரஸ், தி.மு.க கூட்டணியில் இருக்கும் போது ராகுல் காந்தியை சந்தித்து தமிழ்நாடு காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் பதவியை கேட்டவன்தான் இந்த பொறம்போக்கு ........

அப்போ பிஞ்ச செருப்பால அடிச்சு விரட்டி விட்டாங்க........

தி.மு.கா. கூட்டணியில் இருந்த கட்சியில் பதவி கேட்ட ஒருவன் ஆ.தி.மு.கா.வுக்கு எதிரானவன்......... 

இப்போ அவனோட படம் வெளிவரலன்னா உடனே......... 

அம்மா மக்களுக்காக இட்லி கடை வச்சிருக்காக, அம்மா இலங்கை தமிழர்களுக்காக போராடுறாங்க, அம்மா தமிழ் நாட்டை இந்தியாவின் முதல் மாநிலமாக கொண்டுவர போராடுறாங்க....... இந்த இடைவிடாத பணிக்கு இடையில் அம்மா  "தலைவா" படத்தை திரையிட உதவி செய்வார்கள் என்று பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிறான்......

இதுல அந்த புரடியுசர்...... நாதாரி நாயி ரொம்ப நல்லவன் மாதிரி படம் வெளி வரலைனா என் குடும்பத்தோட நடுத்தெருவுல தான் நிக்கனுமின்னு பேட்டி குடுக்கிறான்...........

இவ்ளோ பேசுற விஜய் .... நஷ்டப்பட்டா என் சம்பளத்தை திருப்பி தர்றேன்னு இது வரைக்கும் ஒரு வார்த்தை சொல்லிருக்கானா ???

புரடுயூசர் தாயோளி நாயே என்னமோ சுனாமில பாதிக்க பட்டவுங்களுக்கு சொந்த காசப்போட்டு வீடு கட்டி குடுத்தேன் ஆனா கவுருமெண்ட்டு தடை பண்ணிட்டாங்கன்னு சொல்ற நல்லவன் மாதிரியே புலம்புறான்.....

தே......பைய்யா....... குடும்பத்தோட நடுத்தெருவுல இல்ல நடு  கூவத்துல கூட  விழுந்து செத்துப்போடா .....

நீ உண்மையான ஆம்பளையா இருந்தா தலைவா படத்துக்கு பிலாக் , வொயிட்...ரெண்டையும் சேர்த்து விஜய்க்கு எவ்ளோ சம்பளம் குடுத்தன்னு சொல்ல  முடியுமா.........???

உன் குடும்பம் எல்லாம் வாழனுமின்னு அவசியமே இல்லைடா...... நாதாரி....குடும்பத்தோட செத்து ஒழிங்க ....

நீ தண்ணி லாரிலையோ இல்ல கார்பரேசன் குப்ப லாரிலையோ அடிபட்டு தான்டா சாவ

"போடா பொறம்போக்கு, உனக்கு நல்ல சாவே வராதுடா , நீ தண்ணி லாரிலையோ இல்ல கார்பரேசன் குப்ப லாரிலையோ அடிபட்டு தான்டா  சாவ, பன்னாட.....@##$#$$$"

@ சே... இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி கேவலமா திட்டுறான், என் பிரண்டு ஒருத்தன் கிட்ட

"மச்சி மொபைல் வாங்கணும் எங்கடா சீப்பா இருக்கும்ன்னு கேட்டேன் , அதுக்கு அவன்..."

" மச்சி நீ கவலையே படாதே , எனக்கு ரொம்ப தெரிஞ்ச பிரண்ட் மொபைல் சோரும் வச்சிருக்கான், நல்ல டிஸ்கவுன்ட்டுல வாங்கி தர்ரண்டா , லாஸ்ட் டைம் கூட எனக்கு 7500 வேல்யு மொபைல 5500 க்கு வாங்கினேண்டா "


"அப்படியா , மச்சி அப்போ 2000 டிஸ்கவுன்ட் தந்தானா ??? மச்சி , மச்சி அப்போ ஒரு 1000 ரேன்ஜ் உள்ள மொபைல ஃபிரியா வாங்கிட்டு பேலன்ஸ் 1000 ரூபாய கேஸா வாங்கி குடுத்திடுரா "

" என்னாது ???"

"இல்ல மச்சி அவரு உனக்கு 2000 டிஸ்கவுன்ட் தர்றாருல அதுல 1000க்கு ஒரு போன் வாங்கினா அதுல 2000 டிஸ்கவுன்ட் பண்ணினா மீதம் 1000ரூபா அவர் தரனும் அத் கேஸா வாங்கி குடுடா மச்சி..... "

இப்படி சொனதுக்கு தான்  கேவலமா திட்டுறான் சார் ,  இப்போ நான் என்ன சார் தப்பா கேட்டுட்டேன், அவனுக்கு குடுத்த அதே 2000 டிஸ்கவுன்ட் கேட்டேன் அது தப்பா சார் ???

Thursday, August 15, 2013

ஜோக்ஸ் (2) - உங்களையெல்லாம் நினைச்சா எனக்கு பாவமா இருக்கு

" மச்சி சூரியன் ராத்திரியான எங்கடா போயிடுது ? "

" அது எங்கயும் போகாது மச்சி , இருட்டா இருக்கிறதால நமக்கு தெரிய மாட்டேங்கிது "

*****

mangus gf - டேய் செல்லம் நாளை என்னுடைய Birthday

mangu - ஹேய்ய்ய்...... அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே.

mangus gf - சரிடா எனக்கு என்ன gift தருவடா

mangu - என்ன செல்லம் உனக்கு வேணும் ?

mangus gf - இம்ம்ம்ம்.... எனக்கு 'ரிங்' வேண்டும்


mangu - என்ன செல்லம் இப்படி சொல்லிட்ட இதுகூட செய்ய மாட்டனா , சரி நான் உனக்கு மொபைல்ல ஒரு 'ரிங்' கொடுக்கிறேன்...ஆனால் 'அட்டெண்ட்' பண்ணிடாதே... எனக்கு 'பேலன்ஸ்' ரொம்பக் கம்மியா இருக்கு...!*****

நல்ல வேலை கரண்ட்ட கண்டு புடிச்சாங்க, இல்லைன்னா டி.வி , பிரிட்ஜ் , வாசிங் மெசின், மிக்ஸி , கிரைண்டர் எல்லாம் வேஸ்ட்டா போயிருக்கும்.

*****

Wednesday, August 14, 2013

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆக்கிட்டானுக .....

என்னைய வச்சு காமடி, கீமடி எடுதுவும் பண்ணலையே.....

போதும்.. முடியல , வேணாம்.................... அழுதுடுவேன்....... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........ 

சந்தோசத்திலே பெரிய சந்தோசம் அடுத்தவுங்கள சிரிக்க வச்சு பார்க்கிறதுன்னு சொல்லுவாங்க.......
சார் விளையாட்டுக்கு சொல்லல நிஜம்மா ரொம்ப சந்தோசமா இருக்கு ...... 

ஒரே ஒருத்தர் கேட்டு இருந்தாலும் இத நான் விலை மதிக்க முடியாத அவார்டா நினைச்சுக்கிர்றேன்...... இதுக்கு மேல ஒரு எழுத்தாளனுக்கு  என்ன சார் வேணும் ..

(அடிங் ....பன்னாட ,பரதேசி நாதாரி நாயே..... சந்தடி  சாக்குல உன்னைய எழுத்தாளன் சொல்லிக்கிற ....பிச்சு போடுவேன் பிச்சு....வாயக்கழுவுடா.....இத கேட்டு நாலு நாயி செத்துப்போச்சு , மூணு எருமைக்கு பைத்தியம் புடிச்சுப்போச்சு....இவனெல்லாம் எழுத்தாளனாம் ...கேப்மாரிப்பயலே.... )

பெண்களை சாட்டில் மடக்குவது எப்படி ???

பெண்களை சாட்டில் மடக்குவது எப்படி என்று ஐடியா குடுத்ததற்கு கோடான கோடி நன்றிகள் இந்திரா கிறுக்கல்கள் மேம் கோடான கோடி நன்றிகள் 

பெண்களை சாட்டில் மடக்க கீழ்க்கண்ட விதிகளை வரிசை மாறாமல் பின்பற்றவும் ......... 

பஸ்ட்டு கொஞ்ச நாள் சும்மா ஜாலியா சாட் பண்ணிட்டு அப்புறம் ...... 

1. உன்ன நா எப்டி கூப்பிட்றது?? அப்படின்னு ஆரம்பிங்க.....

2. டி“போட்டு பேச ஆரம்பிக்கணும் ..


3. உனக்கு நா யாரு?4. உனக்காக ரொம்ப நேரம் வெயிட் பண்றேன்..5. உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்..6. பசிக்கவே மாட்டீங்குது.. உன்கூட பேசினா போதும்..7. கொசுவத்தி சுத்தணும் ..


8. இந்த அளவுக்கு நா யார்கிட்டயும் பேசினதில்ல..


9. அப்புறம்.. சொல்லு..10. உன் ப்ரெண்ட்ஷிப் கிடைக்க குடுத்துவச்சிருக்கணும்.11. என்னையெல்லாம் யாருக்குப் பிடிக்கப்போகுது??12. உனக்குப் பிடிக்கலேனா யூரின் கூட போக மாட்டேன்..13. நா ரொம்ப நல்லவனாக்கும்..14. உன்கிட்ட உண்மைய மட்டும் தான் பேசுவேன்..15. என் மேல நம்பிக்கை இல்லேனா....டிஸ்கி : மக்களே உடனே லேடிஸ்ன்னா உனக்கு அவ்வளவு கேவலமா போச்சான்னு சண்டைக்கு வரும் பெண்ணுரிமை போராளிகளே இந்த டிப்ஸ் கொடுத்தது நான் இல்லை ,   இந்திரா கிறுக்கல்கள் என்று தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்....... நேரா அங்க போயி போராட்டத்த ஆரம்பியுங்க :-))))


விசா இல்லாமல் அமெரிக்க செல்ல.....

ங்கொய்யாலே நல்லதுக்கு காலமே இல்லை சார் ......

பூமி சுத்திக்கிட்டு தானே இருக்கு, அப்போ ஒரு ஹெலிகாப்டர்ல 100 மீட்டர் உயரம் போயி அப்படியே ஒரே இடத்துல 12 மணி நேரம் பறந்துக்கிட்டே நின்னுக்கிட்டு இருந்து திரும்ப கீழ இறங்கினா அமேரிக்கா வந்திடும் , விசா  , பாஸ்போர்ட் எதுவும் தேவையில்லை .......

இத சொன்னா நம்மள பைத்தியம்கிரானுக ......

இல்லைன்னா இன்னொரு வழி இருக்கு

பூமி உருண்டையாதானே இருக்கு , அப்போ இங்க இருந்து ஓட்டை போட்டு தோண்டிக்கிட்டே போனா அந்தப்பக்கம் அமெரிக்கா வந்திடும்

இத சொன்னாலும் பைத்தியம்கிரானுக ......

அன் எஜுகேட்டெட் பூவர் பேட் பாய்ஸ்


Tuesday, August 13, 2013

டேய் மாச்சான் , நம்ம கவுருமென்ட்டுக்கு அறிவே இல்லைடா

"டேய் மாச்சான் , நம்ம கவுருமென்ட்டுக்கு அறிவே இல்லைடா "

"ஏன்டா மச்சி? "

"இல்லை மச்சான் நேத்து ஊருக்கு போயிட்டு வரும்போது வழியில பார்த்தேன் ஒரு இடத்துல விபத்துப்பகுதி , மெதுவாக செல்லவும்ன்னு போர்டு வச்சு இருந்தானுக "

"சரிடா நல்ல விஷயம் தானே "

"ங்கொய்யாலே அதான் விபத்துப் பகுதின்னு தெரியுதுல்ல , அப்புறம் எதுக்கு அங்க போயி ஏன் ரோடு போடனும் , அப்புறம் போர்டு வககனும்? "

"டேய் ஏற்கனவே நான் சரக்கடிக்க காசு இல்லையேன்னு கொலைவெறில இருக்கேன் மரியாதையா ஓடிப்போயிரு ."

" அது இல்லைடா மச்சான் , அப்புறம் ஒரு இடத்துல ஆபத்தான வளைவுன்னு போர்டு வச்சிருக்கானுக "

"உஸ்ஸ்ஸ்...... சரியாத்தானடா வச்சிருக்காங்க "

"இல்ல மச்சான்  அவ்ளோ கஷ்ட்டப்பட்டு ரோட ஏன் வளைச்சு போடணும் அப்புறம் ஏன் போர்ட் வைக்கணும் , முதல்லே நேரா போட்டு இருக்கலாம்ல "

"போடாங் ...#@@#, @#$#$, @#!@#$"..

விஜய்..கமல்,ரஜினி .எல்லா மயிராண்டிகளும் ஒன்னுதான்

தலைவா பிரச்சனை...... 

அடப்பாவிகளா.... ரத்தம் வடிய , வியர்வை சிந்தி வாரம் முழுவதும் உழைத்த காசை சம்பத்தமே இல்லாத ஒரு நாதாரியோட படத்துக்கு  உங்கள், வியர்வையையும் விலையாக குடுத்தது உங்கள் குடும்பத்தை நடுத்தெருவில் விட்டு உயிரை குடுத்து படம் பார்க் துடிக்கும் அறிவுகெட்ட நாதாரிகளா...................

உங்களுக்காக அவன் என்ன செய்தான்.... ஒரு மண்ணும் கிடையாது ....உங்களுக்கு கிடைக்கும் இலவச வேட்டி  சேலைக்கு கூட காசுகுடுக்காமல் வரிகட்டாமல் பிளாக் மணியாக சேர்த்து வைத்துக்கொண்டுள்ளான் .....

இதில் விஜய்,உலக நாயகன் கமலகாசன் , சூப்பர் ஸ்டார் ரஜினி .....எல்லா மயிராண்டிகளும் ஒண்ணுதான் 

இதுல எந்த நாயையாவது அவனுக வாயில இருந்து யோக்கியன்னு சொல்ல சொல்லேன் பார்ப்போம் 

இதுல இந்த நாயிக்க டீவில வந்து நியாம் வேற பேசுதுக......

ஒரே ஒரு கேள்வி ?????

இந்த நாதாரிக தனது சம்பாத்தியத்தை காண்பித்து  சரியான வரி கட்டி உள்ளாரா ???? இதுக்கு மட்டும் கணக்கு காமிக்கட்டும் ..............நான் நடு  ரோட்டில் தூக்குபோட்டு செத்து விடுகிறேன்..

இல்லைன்னா இவன்கள்  நம்பர் ஒன பிராடு பசங்கன்னு ஒத்துக்குவானுகளா ???

ஜோக்ஸ் - பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் அடிக்கவரக்கூடாது

" நல்ல வேலை நியுடன் புவி ஈர்ப்பு சக்திய கண்டுபிடிச்சார்"

"அதுக்கு என்னா இப்போ ?"

" இல்லைன்னா நாம எல்லாம் இப்போ மிதந்துகிட்டே இருப்போம் "

*****

" என்னடா மச்சி இது ஒரு கால்ல புளு கலர் சாக்ஸ் இன்னொரு கால்ல வொயிட் சாக்ஸும் போட்டுருக்க ? "

" அது தான்டா எனக்கும் புரியல மச்சி , இதே மாதிரி இன்னொரு செட் வீட்டுலேயும் இருக்கு "

*****

உன் பேரு என்ன..?

" சௌமியா "

உங்க வீட்ல உன்னை எப்படி
கூப்பிடுவாங்க..?

தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க.,
பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.,

****

- sms 

இது நிஜமாக நடந்த விஷயம், அலட்சியம் செய்யாதீர்

கண்டமன்னூர் பக்கத்தில் உள்ள காரமடை கோவிலில் சாமி கும்பிட சென்ற தம்பதியினர் கோவில் வளாகத்தில் இரண்டு மாத குழந்தையை வைத்துவிட்டு சாப்பிட்டு கைகழுவி விட்டு பார்த்த அந்த தம்பதியினர் அதிர்ச்சியில் உறைந்தனர், அங்கு அந்த கோவிலுக்கு சொந்தமான பாம்பும் , அந்த இரண்டு மாத குழந்தையும் பேசிக்கொண்டு இருந்தனர், இவர்கள் வருவதை பார்த்த அந்த பாம்பு இவர்களிடம் "இப்பொழுது நீங்கள் பார்த்த விஷயத்தை உங்கள் பிளாக்கில் பதிவாக  போடுங்க, அதை படிப்பவர்கள் வோட்டு, கமண்ட்  போட்டு மறுபதிவிடனும் அப்படி செய்தால்  15 நாட்களில் அவர்கள் குடும்பத்திற்கு நல்லது நடக்கும்" என்று சொல்லி அந்த பாம்பு மறைந்து விட்டது.....

உடனடியாக அந்த தம்பதியினர் பிளாக்கில் பதிவு  போட்டனர், அவர்கள் போட்டு 12 நாட்களில் அவர்களுக்கு சொந்தமான வீட்டின் மீது இருந்த கேஸ் இவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது ......

இதை பதிவிட்ட அசிடன்ட் கமிசினர் ஆறுச்சாமி பிரமோசன் கிடைத்து கான்ஸ்டபில் கந்தசாமியா ஆகிட்டாரு.

இதை படித்து விட்டு அலட்சியபடுத்திய பட்டுகோட்டையை சேர்த்த பரந்தாமன் 2 நாட்களில் ரத்தம் கக்கி செத்தான்.

அலட்சியபடுத்திய குமாரமங்களும் குப்புசாமியோட ரெண்டாவது பொண்டாட்டி எதிர்த்தவீட்டு ஏகாம்பரத்தோட ஓடிப்போயிட்டா 

Monday, August 12, 2013

சிரிப்பு போலீஸு ( எவனடா அவன் சிரிக்கிறது )

இதை படித்து விட்டு யாராவது கொலை அல்லது தற்கொலை முயற்ச்சியில் ஈடுபட்டால் அதற்க்கு நிர்வாகம் பொறுப்பல்ல .....
ஆபிசில இருந்து டீ சாப்டலாம்னு கிளம்பினேம்பா வெளிய பார்த்தா ஒரே டிராபிக் சரின்னு அப்படி இப்படின்னு வளைஞ்சு நெளிஞ்சு சிக்னல தாண்டினா ஒரு 20 டிராபிக் போலீஸ் , அதுல நாலு என்னசுத்துபோட்டு ஓரமா கூட்டிட்டு போனாக.

போலிசு: யோவ் லைசென்ஸ் என்கையா ?

நம்ம : சார் மரியாதையா கேளுங்க ?

போலிசு: சரிங்க பப்ளிக் லைசென்ஸ் எங்க பப்ளிக் ?

நம்ம : லைசென்ஸ் இந்தாங்க

போலிசு : ஆர்சி புக் எங்க சார் ?

நம்ம : ஆர்சி புக் இந்தாங்க

போலிசு : இன்சூரன்ஸ் எங்க சார் ?

நம்ம : இன்சூரன்ஸ் இந்தாங்க

போலிசு : சார்ஜென்ட் சார் , இவரு எல்லாம் கரக்டா வச்சுருக்காரு சார்ஜென்ட் : எல்லாம் கரக்டா இருக்கா !!!!!!!!! ஏன்யா ஓவர் ஸ்பீட்ல வந்த ?

நம்ம : என்னது ஓவர் ஸ்பீட ? சார் நான் நடந்து வந்தேன்

சார்ஜென்ட் : அப்போ பைக எங்கையா  ? 

நம்ம : பைக் ஆபிசுல இருக்கு சார்

சார்ஜன்ட் : பைக் இல்லையா ? லைசென்சு , ஆர்சி புக், இன்சூரன்ஸ் எல்லாம் எடுத்திட்டு வந்திருக்க பைக் ஏன் எடுத்திட்டு வரல முன்னூர் ரூபா பைன் கட்டு
!!!!!!!

நம்ம : அய்யய்யோ சார் 

சார்ஜென்ட் : இங்க கட்னா
முன்னூறு கோர்ட்ல கட்னா ஆயிரம் , இங்க கட்டுறியா இல்ல கோர்ட்ல கட்டுறியா ?

நம்ம : ???????????????????????????

ஏற்கனவே கெரகம் சயில்லைன்னு நம்ம காரமடை ஜோசியர் சொல்லியிருக்கார்
சரின்னு முன்னூர் ரூபா fine -அ கட்டிட்டு டீ கூட குடிக்காம ஆபீஸ் வந்துட்டேன். 
 
- மீள் பதிவு  

இந்த பொழப்புக்கு குடும்பத்தோட மருந்த குடிச்சு சாகலாம் :-)))

மூணு பேரு டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோல வேலை செய்றவங்க ஒரு ஜூவுல மீட் பண்ணாங்க, மூணு பேரும் க்ளாஸ் மேட்ஸ்....... அப்ப ஒருத்தன் நம்மள்ல யாரு பெஸ்ட்னு ஒரு சின்ன போட்டி வெச்சுப்பார்க்கலாம்னான். மூணு பேரும் அங்க இருந்த ஒரு குரங்க சிரிக்க வெக்கிறதுன்னு முடிவாகுச்சு.

மொதல்ல இன்ஃபோசிஸ்காரன். இன்ஃபோசிஸ் கல்ச்சரான பேசியே சரிக்கட்டுற டெக்னிக்க ஃபாலோ பண்ணி ஜோக்சா சொன்னான்........ குரங்கு அசையவே இல்ல.......

அடுத்து விப்ரோக்காரன் அவங்க ப்ராக்டிகல் ஒரியண்டட். கோமாளி மாதிரி சேட்டை பண்ணி காட்டுனான். சைகை காட்டுனான். ம்ஹூம்.. குரங்கு கொஞ்சம் கூட ரியாக்சன் காட்டல.

அடுத்து டிசிஎஸ்காரன். குரங்கு பக்கத்துல போய் காதுல என்னமோ சொன்னான். உடனே குரங்கு பயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சிருச்சு.

மத்த ரெண்டு பேருக்கும் ஆச்சர்யம், இருந்தாலும் தோல்விய ஒத்துக்காம, சரி இன்னொரு ரவுண்டு வெச்சுக்கலாம். பட் இந்த வாட்டி குரங்கை அழ வைக்கனும் அப்படின்னாங்க.

மறுபடியும் மொதல்ல இன்ஃபோசிஸ்காரன் வந்து சோகமான உருக்கமான விஷயங்களா சொன்னான். குரங்கு கண்டுக்கவே இல்லை.

அடுத்து விப்ரோக்காரன். அழுகுற மாதிரி ஆக்ட் பண்ணி காட்டுனான். அதையும் குரங்கு சட்டை பண்ணலை

டிசிஎஸ்காரன், வந்து மறுபடியும் குரங்கு காதுல போய் என்னமோ சொன்னான். உடனே குரங்கு ஓன்னு அழ ஆரம்பிச்சிடுச்சு.

ரெண்டு பேருக்கும் அதிர்ச்சியா போச்சு, இதையும் ஒத்துக்காம இன்னொரு டெஸ்ட் வெக்கனும்னு முடிவு பண்ணாங்க. இந்த வாட்டி குரங்கை ஓடவைக்கனும்னு சொல்லிட்டாங்க.

வழக்கம் போல இன்ஃபோசிஸ்காரன் முதல்ல வந்தான். குரங்க பார்த்து குரைச்சான். பயமுறுத்துனான். எந்திரிச்சி ஓடுன்னு கெஞ்சிப்பாத்தான். வழக்கம் போல குரங்குபாட்டுக்கு பேசாம உக்காந்திருச்சு.

விப்ரோக்காரன் வந்து குரங்கை புடிச்சி தள்ளிவிட்டான். வெரட்டி பார்த்தான். குரங்கு அசரவே இல்ல.

டிசிஎஸ்காரன் இந்தவாட்டியும் குரங்கு காதுல போய் என்னமோ சொன்னான். அதைக் கேட்டதும் உடனே குரங்கு தலைதெறிக்க ஓடி போயிருச்சு....

கடைசியா வேறவழியில்லாம ரெண்டு பேரும் தோல்விய ஒப்புக்கிட்டாங்க. டிசிஎஸ்காரன்கிட்ட அப்படி குரங்கு காதுல என்னதான் சொன்னேன்னு கேட்டானுங்க.

டிசிஎஸ்காரன் சொன்னான்.
ஃபர்ஸ்ட் குரங்குகிட்ட நான் டிசிஎஸ்ல வேல செய்றேன்னு சொன்னேன், உடனே சிரிக்க ஆரம்பிச்சிடுச்சு,
அடுத்து என்னோட சம்பளத்த சொன்னேன், அது அழுதுடுச்சு.
கடைசியா டிசிஎஸ்கு வேலைக்கு ஆள் எடுக்கதான் இங்க வந்திருக்கேன்னு சொன்னேன்........ அது ஓடியே போய்டுச்சி......

- மெயில் அப்டேட்ஸ்

நேசனல் பெர்மிட் லாரில அடிபட்டு செத்துப்போன சொறிநாய பாக்கிறது மாதிரி

சிவனேன்னு சிஸ்டத்துல சீட்டு விளையாடிக்கிட்டு இருந்தேன், யாரு கண்ணு பட்டுச்சோ டேமேஜர் என்னைய கூப்பிட்டு பேங்க் போயிட்டு வர சொன்னான் .....

(அவ்வ்வ்வ்.....என்னது நாமதானே இந்த கம்பனி ஓனர் இந்த டேமேஜர் நம்மள வேலைவாங்குறான் ,  எனக்கு வந்த கோவத்துக்கு .....சரி பேங்குல நல்ல பிகர் ஒன்னு இருக்கு அதவாவது பார்த்திட்டு வரலாம்ன்னு கிளம்பினேன் )

பேங்க்ல ஃபார்ம்  ஃபில் பண்ண ஒரு பொண்ணுகிட்ட பேனா கேட்டேன் ,

அது என்னைய ஹைவேஸ்ல
நேசனல் பெர்மிட் லாரில அடிபட்டு செத்துப்போன சொறிநாய பாக்கிறது மாதிரி பார்த்திட்டு பேனா குடுத்திச்சு , 

(ங்கொய்யாலே 5 ரூபாய் பேனாவுக்கு இவ்ளோ அலட்டலா என்னமோ தங்கத்துல செஞ்ச பேனா மாதிரி ஓவரா பன்னுறாளே  )

நானும் குழம்பிப்போய் 
ஃபார்ம் ஃ பில்பன்னிட்டு பேனாவ திரும்ப குடுத்தேன்,

மறுபடியும் அதே லுக்.....

என்ன கருமம்டா இது , நாம என்ன இப்போ I love you வா சொன்னோம் பேனாதானே கேட்டோம்ன்னு ஏன் இப்படி ஓவரா பில்ட் அப் குடுக்குதுன்னு  யோசிச்சு பார்த்தா.....

ஹி,ஹி,ஹி... என் பாகட்டுலேயே என்னோட  பேனா இருக்கு...

(நல்ல வேலை  காரி, காரி துப்பாம கவுரவமா விட்டாளே )

@ பேங்க் போனா ஓசில தான் பேனா வாங்கணுமின்னு நம்ம சப் கான்சியஸ் மைண்ட்ல செட்டாகிடுச்சு போல ???

Sunday, August 11, 2013

அடேய் ஜோதிட நாதாரிகளே

அடேய் ஜோதிட நாதாரிகளே , நீங்கள் பணம் சம்பாரிக்க அடுத்தவர்கள் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் .

எனது நண்பன் ஒருவன் புதிதாக திருமணம் ஆனவன் , சென்னையில் ஒரு புது flat புக் பண்ணினான் , அவனது மனைவி கற்பமாக இருந்தார் , அவுங்க ஊருக்கு போனப்ப அந்த ஊரு ஜோசியக்காரனிடன் புது flat plan ஐ காண்பித்து ஜோசியம் கேட்டு உள்ளனர் அதற்கு அந்த நாதாரி, வாஸ்த்துப்படி பாத்ரூம் இங்க இருக்க கூடாது அப்படி இருந்தா உங்களுக்கு குழந்தை ஊனமாக பிறக்கும் அப்படின்னு சொல்லிருக்கான். என் நண்பனின் மனைவீட்டில் அப்படியே இடிந்து போயி விட்டனர்.

என் நண்பனுக்கோ ஜோசியத்தில் நம்பிக்கை கிடையாது , இருந்தாலும் மனைவிக்காக பில்டரிடம் போயி பாத்ரூமை மாற்றி தரும் படி கேட்டுள்ளான் . 
அதற்கு பில்டரோ சார் நாங்க  மிக்கபெரிய வாசத்து சாஸ்த்திரம் பார்பவரிடம் வாசத்து பார்த்து மிக சரியாகத்தான் கட்டி, இருக்கிறோம், பாத் ரூமை மாற்ற முடியாது என்று கூறி விட்டனர். என் நண்பன் சாதாரணமாக எடுத்துக்கொண்டான் அவன் மனைவி ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவள் , பாவம்  இடிந்து போயி இருந்தாள் .

இது  8 மாதத்திருக்கு முன் நடந்தது , தற்போது அந்த தம்பதியருக்கு அழகான , ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்துள்ளது .

டாக்டர்கள் ஸ்கேன் பார்த்து குழந்தைக்கு ஒரு ஊனமும் இல்லை ஆரோக்கிய மாக உள்ளது என்றாலும் குழந்தை பிறக்கும் வரை அவர்கள் பயந்த பயம் இருக்கிறதே ........  

இப்பொழுதான் நிம்மதியாக இருக்கிறார்கள்......

அந்த ஜோசியக்காற நாயை  என்ன பண்ணினா தகும் ??? 

முடிந்தால் உங்கள் கருத்துக்களை கூறுங்கள் 

கடுப்பேத்துறாங்க யுவர் ஆனர்

கேனத்தனமான கேள்விகள் மங்குவின்  பதில்கள் -

1. படுக்கையில் படுத்து கண்மூடும்போது....தூங்கப்போரியா ?
[இல்லை தூக்குல தொங்கப்போறேன்)  

2. மழை நேரத்தில் வெளில கிளம்புறதைப் பார்த்துட்டு..... மழைல வெளியே போறியா?
[ இல்லை மாரியாத்தாவுக்கு கூல் ஊத்தப்போறேன்:-) ]

3. அறிவாளி நண்பன் லேண்ட் லைனுக்கு கால் பண்ணிட்டு...... மச்சி எங்கிருக்கே?
[ உங்க ஆயா வீட்ல இருக்கேன் மச்சி  ]

4. பாத்ரூம்லேர்ந்து ஈரத்தோட தலை துவட்டிகிட்டு வெளில வரும்போது..... குளிச்சியா?
[ இல்லை கும்மி அடிச்சேன்  ]

5. தரைதளத்தில் லிஃப்டுக்காக காத்திருக்கும் போது... மேலே மாடிக்கி போறியா?
[ இல்லை அமெரிக்கா போறேன்  ]

6. அழகான பூங்கொத்தை டார்லிங்குக்கு குடுக்கும் போது..... இது என்ன பூவா?
[ இல்லை புளியம்பழம்  ]

7. சினிமா டிக்கெட் எடுக்க வரிசையில் நிக்கிம்போது, அறிவாளி நண்பன் .....இங்கே என்ன பன்றே?
[ ம்ம் மண்ணெண்ணெய் வாங்க நிக்கிறேன்  ]

8. கேண்டீன்ல நின்னுகிட்டிருகும்போது, நண்பன்....... என்ன மச்சி சாப்பிட வந்தியா?
[ இல்லை சாணி வறட்டி தட்ட வந்தேன் மச்சி  ]

9. எழுதிட்டிருக்கும் போது, நண்பன்.... மச்சி எழுதிட்டிருக்கியா?
[ இல்லை மச்சி எருமை மாடு மேய்ச்சிட்டு இருக்கேன்  ]

10. தடிக்கி தரையில் விழுந்ததை பார்த்துட்டு, நண்பன்.... என்ன மச்சி விழுந்துட்டியா?
[ இல்லை, நீச்சல் அடிச்சிட்டிருக்கேன்  ]

- மெயில் அப்லோட்ஸ் 

Saturday, August 10, 2013

கள்ளக்காதாலாடா பன்றன்னு செருப்பால அடிக்க வர்றா

ஆடி போனா ஆவணி அவ ஆள மயக்கும் தாவணி.............

நம்ம ரிங் தாங்க , அட நம்ம Gokulathil Suriyan வெங்கட்.....

"ஹலோ , வெங்கட் சொல்லுங்க எப்படி இருக்கீங்க ?"

" சூப்பரா இருக்கேன் "

கொஞ்ச நேரம் பேசிட்டு .....

" சரிங்க வெங்கட் நான் கிளம்புறேன் "

" எங்க கிளம்பிட்டிங்க ?? "

" வீக் எண்ட் சரக்கடிக்கத்தான் "

"ஓகே,ஓகே.... மங்கு ஓவரா குடிக்காதிங்க அளவோட குடிங்க "

(சே........ மனுசனுக்கு என் மேல எவ்ளோ பாசம், நம்ம உடம்பு மேல எவ்ளோ அக்கறை....)

" ரொம்ப தேங்க்ஸ் வெங்கட் , என் மேல அக்கறை கொண்டதுக்கு ,ரொம்ப, ரொம்ப தேங்க்ஸ் வெங்கட் "

" என்னது அக்கறையா ??? அடிங்......... ங்கொய்யாலே , நாதாரி, பன்னாட, பொறம்போக்கு நாயே , ஓவரா தண்ணியப்போட்டு போன் போட்டு நைட்டு பூராம் என் உயிரைல்ல வாங்குவ நாயே, அதிலையும் மிஸ்டு கால் குடுப்ப , அப்புறம் நீ பொண்ணுக கூட சாட் பன்றத சொல்லி என் வயித்தெரிச்சல கிளப்புவ , இதுல என் பொண்டாட்டி ஏதோ போன்ல பொண்ணுகூட பேசுறேன்னு நினைச்சுக்கிட்டு , கள்ளக்காதாலாடா பன்றன்னு செருப்பால அடிக்க வர்றா , ஒரு வாட்டி போதைய போட்டு போன்ல "மச்சி என் தீப்பெட்டிய பார்த்தியான்னு" கேட்ட ஆள் தானடா நீ ......... ங்கொய்யாலே எனக்கு இவரு மேல அக்கறையாம்...பரதேசி நாயே "

@ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்............ நம்மளால ரொம்ப பாதிக்கப்பட்டு இருப்பான் போல
 
 

ஏன்டா இன்போசிஸ் வேலைய விட்டுட்டியா ?

காலைல இன்போசிஸ்ல வொர்க் பண்ணிக்கிட்டு இருக்க ஒரு பிரண்ட ரோட்டுல பார்த்தேன் ,

"மச்சான் எங்கடா போற ?:"

"முடிவெட்ட போறான்டா மச்சி ? "

" ஏன்டா இன்போசிஸ் வேலைய விட்டுட்டியா ? "


"இல்ல மச்சி , முடிவெட்ட சலூனுக்கு போயிக்கிட்டு இருக்கேன் "

"அதான்டா நானும் கேக்குறேன் இன்போசிஸ்ஸ விட சலூன்ல சம்பளம் ரொம்ப கம்மியா இருக்குமேடா ?"

" அடிங் ங்கொய்யாலே ,பன்னாட , பரதேசி, நாதாரி , நான் எனக்கு முடிவெட்ட போயிக்கிட்டு இருக்கிரன்டா சனி உச்சத்துல இருக்கும் பொது அம்மாவாசைல பிறந்த கிருகதுருவம் புடிச்ச பரதேசி நாயே , @##$#@@@, ##$%%#### (கேவலமான கெட்ட வார்த்த )"

@ இதோ முதல்லே தெளிவா சொல்லிருக்கலாம்ல அத விட்டு இப்போ கேவலமா திட்டுறானுக அன் எஜுகேட்டேடு பேட் பாய்ஸ்

Friday, August 9, 2013

அடங்கொன்னியா விளங்கிடும், ஆணியே புடுங்க வேண்டாம் ,

பரங்கி மலை பக்கத்துல இருக்க பாழடைஞ்ச பங்களாவுக்கு போனிங்கன்னா அங்க ஒரு சூனியக்கார கிழவி துஸ்ட  தேவதைகளுக்கு பூஜை பண்ணிக்கிட்டு இருப்பா.

அவ கிட்ட ஒரு பறக்கும் பாய் இருக்கு.

அவ ஒரு பசுமாடு வளக்கிரா , அந்த பசுமாடு சாப்ப்டிடுற புல்லுல மயக்க மருந்த கலந்து குடித்துட்டிங்கனா , அவ அதோட பாலகுடிச்சு மயக்கம் ஆகிடுவா, 

அப்போ அவளுக்கு தெரியாம நைஸா அந்த பறக்கும் பாய எடுத்து அதுல பறந்துக்கிட்டே  மேற்கு திசைல ஏழு கடல் ஏழு மலை தாண்டி போங்க .....

போற வழில மூணாவது கடல்ல நம்ம சிந்துபாத் கப்பல்ல போயிக்கிட்டு இருப்பாரு , அவர் கிட்ட ரிகுஸ்ட் பண்ணி அவரோட கத்திய வாங்கிக்கங்க....... அப்புறம் 

எட்டாவது கடல் தாண்டி எட்டாவது மலைல ஒரு குகை இருக்கும் அந்த குகைய ஒரு ஒற்றைக்கண் ராட்சசன் காவல் காத்துக்கிட்டு இருப்பான் ,அவன் கூட சண்டை  போட்டு நம்ம சிந்துபாத் குடுத்த கத்திய வச்சு அவன் ஒத்தை கண்ணுல குத்தினா அவன் செத்துடுவான், 

அப்புறம் குகைக்குள்ள போனா அங்க ஒரு மந்திர  கூடு இருக்கும் , அத ஒரு  7 தலை நாகம் காவல் காத்துக்கிட்டு இருக்கும் அத எப்படியாவது கொன்னுட்டு 

அந்த கூண்ட திறந்திங்கன்னா அதுக்குள்ளே ஒரு கிளி இருக்கும், அந்த கிளியோட  மொபைல் போனுல ஒரு சிம் கார்டு இருக்கும் , அந்த கார்ட எடுத்து ஒரே வெட்டுல 4 துண்டா வெட்டி போட்டிங்கன்னா உங்க போன் காலர் டியூன் டி-ஆக்டிவேட் ஆகிடும்.

@ அடங்கொன்னியா விளங்கிடும்  .....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....ஆணியே புடுங்க வேண்டாம் , 

ஆட்டோமேட்டிக்கா ஒரு பாட்டு காலர் டியுனா வந்திருச்சு அத எப்படி டி-ஆக்டிவேட் பண்றதுன்னு கஸ்டமர் கேருக்கு போன் பண்ணினா அதுக்கு இவ்ளோ கத சொல்றானுக நாதாரிக 

இன்கம்டாக்ஸ் ஆபிஸ்ல டேபிள்ள பிஸ் அடிப்பேன்

மிஸ்டர். எக்ஸ் அவர்களை இன்கம்டாக்ஸ் அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்திருந்தார்கள். அளவுக்கு அதிகமாக அவர் பந்தயம் கட்டி பணம் ஈட்டியிருப்பதாக அவர் மீது புகார் வந்திருந்தது.

விசாரணைக்கு புகழ்பெற்ற வக்கீல் ஒருவரை அழைத்து வந்திருந்தார்.

“எங்களுக்கு தெரியும் நீங்க வக்கீலை கூட்டிட்டு வருவீங்கன்னு.. இதிலேயே உங்க மேல இருக்கிற குற்றம் உறுதியாகுது.. நீங்க அளவுக்கு அதிகமா பந்தயம் கட்டுவீங்கதானே?” என அதிகாரிகள் கேட்டனர்.

“அப்படியெல்லாம் இல்லீங்க.. ஏதோ சுமாரா பந்தயம் கட்டுவேன். இப்ப ஒரு பந்தயம்... நான் என் கண்ணை பல்லால கடிப்பேன். பத்தாயிரம் பெட்..” என்றார் மிஸ்டர் எக்ஸ்.

கண்ணை எப்படி பல்லால கடிக்க முடியும்? அதனால் சரி என ஒப்புக் கொண்டனர் அதிகாரிகள்.

மிஸ்டர் எக்ஸ்க்கு ஒரு கண் இல்லை அங்கே போலி கண்ணை சொருகி வைத்திருந்தார். எனவே அந்த போலி கண்ணை எடுத்து கடித்து காண்பித்தார். இப்போது பந்தயத்தில் தோற்று பத்தாயிரம் பணம் தந்தனர் அதிகாரிகள்.

“சரி இப்போ என்னோட இன்னொரு கண்ணையும் பல்லால கடிப்பேன். பத்தாயிரம் பெட் ஓகேவா?”

இவருக்கு பார்வை இல்லாம இருக்க சான்ஸ் இல்ல எனவே இன்னொரு கண்ணை கடிக்க முடியாது என நினைத்து ஒப்புக் கொண்டனர் அதிகாரிகள். ஆனால் மிஸ்டர் எக்ஸ் தன் பல் செட்டை கழற்றி நல்லா இருந்த கண்ணை கடித்து காண்பித்தார்.

மீண்டும் பத்தாயிரம் பணம் தோற்று கடுப்புடன் இருந்தார்கள் அதிகாரிகள். ஆனால் மிஸ்டர் எக்ஸ், “சரி கடைசியா ஒரு பந்தயம்... இதுல தோற்றால் இதுவரை ஜெயிச்ச 20 ஆயிரத்தை திருப்பி தந்திடுறேன். ஆனா ஜெயிச்சிட்டா இன்னொரு இருபதாயிரம் தரணும். என்ன பெட்டுனா.. டேபிளோட ஒரு முனையில் நின்னுகிட்டு இன்னொரு முனையில் இருக்குற குப்பை கூடையில் பிஸ் அடிப்பேன் ஆனா ஒரு சொட்டு கூட சிந்தாது.” என்றார்.

அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர். ஆனால் இம்முறை டேபிள் மேலெல்லாம் சிந்தியதால் மிஸ்டர் எக்ஸ் பந்தயத்தில் தோற்றார். அதிகாரிகள் குதுகலித்து சத்தம் போட்டனர்.

ஆனால் வக்கீல் மயக்கம் போட்டு விழுந்தார்.

வக்கீலை மயக்கம் தெளிய வைத்து கேட்டபோது சொன்னார்.. “மிஸ்டர் எக்ஸ் வரும்போதே என்கிட்ட பெட் கட்டினார்.. நான் இன்கம்டாக்ஸ் ஆபிஸ்ல டேபிள்ள பிஸ் அடிப்பேன்... ஆனா அதுக்கு அதிகாரிகள் கோவிச்சுக்காம சந்தோசப்படுவாங்க... அப்படின்னு பந்தயம்.. இரண்டு லட்சம்...”

- mail updates

Thursday, August 8, 2013

"தலைவா " - விமர்சனம்

"தலைவா' படத்த விமர்சனம் பன்னனும் அப்படின்னு எனக்கும் ஆசைதான் , என்னா   பண்ணி தொலையிறது இன்னும் படம் ரிலீஸ் ஆகல ,அப்படியே படத்த பார்த்தாலும் எனக்கு விமர்சனம் எல்லாம் பண்ண தெரியாது .......

அதுனால வெளிநாட்டுல  மாப்பு யாராவது இன்னைக்கு பார்த்திருந்தா எப்படி இருக்கும் கொஞ்சம் கமண்ட் பாக்ஸ்ல விமர்சனம் பண்ணிட்டு போங்க .....

டேய், டேய் எவண்டா அவன் கல்லகொண்டி எரியுறது ........
நோ,நோ,நோ..... பேச்சு, பேச்சாத்தான் இருக்கணும் 

டிஸ்கி: இந்த பதிவை படித்தவர்கள் கண்டிப்பாக கீழ்க்கண்ட கசாயத்தை குடித்தால் உடம்புக்கு நல்லது ....... நீங்க குடிச்சா என் உடம்புக்கு நல்லதுன்னு சொன்னேன்  

சுடுதண்ணில கொஞ்சம் மிளகு, சீரகம் , திப்பிலி ,ஓமம், போட்டு நல்லா காயிச்சி வடிகட்டி கொஞ்சம் தேன் கலந்து குடிச்சா கோபம் , bp போன்ற நோய்கள் கட்டுப்படும்.

கொலைகேசுல உள்ள போயிராதிங்க..

சின்ன வயசுல நானும் எங்கப்பா மாதிரியே பெரிய ஆளா வரணும்னு ஆசை சார் ,

அந்த ஆசையே வெறியா மாறிச்சு சார், அதை ஒரு லட்சியமா எடுத்துக்கிட்டு , அந்த லைசியத்தில்  வெற்றி  பெற வெறியோட  படிச்சேன் சார்

கடைசியா என்னோட 22 வயசுல என்னோட ஆசை , லட்சியம் எல்லாத்துலையும் ஜெயிச்சிட்டேன் சார். 

எங்கப்பாவோட ஹைட் 171 cm 
இப்போ என்னோட ஹைட் 177 cm

கர்ர்ர்ர்ர்ர்....... மங்குனியை  அடிக்க நினைப்பவர்கள் ஒரு புறமாகவும் , காரி, காரி துப்ப நினைப்பவர்கள் மறுபுறமாகவும் வரிசையில் வரும்படி விழாக்குழு சார்பாக மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்ள படுகிறார்கள் ....

வெயிட் ,வெயிட் ,வெயிட்........ நானெல்லாம் ஒரு டம்மி பீசு,  என் மூஞ்சிய உத்து பார்த்திங்கன்னா ஒரு வாரத்துக்கு ஊட்டில போயி ரூம் போட்டு சிரிச்சிட்டு வருவிங்க .....அடிதடின்னு போயி கொலைகேசுல உள்ள போயிராதிங்க..பேசாம நாண்டுக்கிட்டு சாவுடா கேப்மாரி

காலைல ஆபீஸ் வந்த உடனே செம டென்சன் சார் , நெட்டு வேலை செய்யலை , நேத்து மதியத்துல இருந்தே வேலை செய்யலைன்னு ஆபீஸ் பொண்ணு சொல்லுச்சு கடுப்பாகிட்டேன். கஸ்டமர் கேர் போன் போட்டு ......

"சார் என்ன சார் சர்வீஸ் பண்ணுரிங்க ??? "

"சார் என்ன சார் ஆச்சு ??"

" ரெண்டுநாளா ஆபீசுல நெட் வொர்க் பண்ணலை என்னோட பிசினெஸ் என்ன ஆகிறது, நீங்கல்லாம் எதுக்கு வேலைக்கு வர்றிங்க , எங்கையாவது மாடு மேய்க்க போக வேண்டியது தானே......."

"சார் , சார் வெரி வெரி சாரி , இப்போ உடனே பார்க்க சொல்றேன் சார் ..உங்க நெட் கனெக்சன் ஐ.டி கொஞ்சம் சொல்லுங்க சார் ....."

சொன்னேன் ........................
*
*
*
*
*
"பன்னாட, பரதேசி , நாதாரி நாயே பஸ்ட்டு பில்ல கட்டுடா டோமரு , படுகாலிப்பயலே நீ எங்கள மாடு மேய்க்க போகச்சொல்ரியா கேப்மாரி நாயே , இந்த பொழப்பு பொழைக்கிறதுக்கு
பேசாம நாண்டுக்கிட்டு சாவுடா கேப்மாரி , ஆபீஸ் வச்சிருக்கானாம் ஆபீஸ்...... அடிங் @@#$@$#, @@###  "

அவ்வ்வ்வ்.........  கொஞ்சம் ஓவராத்தான் பேசிட்டமோ ??? பில்லு கட்டலன்னாலும் நெட் வேலை செய்யாதோ ???

Wednesday, August 7, 2013

அந்த பொண்ணு என் கிட்ட நெருங்கி வந்து .......

KPN ல ஊருக்கு போகலாம்ன்னு கிளம்பினேன் , பக்கத்து சீட்டுல ஒரு அழகான பிகர் வந்து உட்கார்ந்துச்சு .......

உட்கார்ந்தவுடன் போன எடுத்து பேச ஆமபிச்சிருச்சு , கொஞ்ச நேரத்துல போன்ல blogspot  பத்தி பேசிக்கிட்டு வந்திச்சு....... எனக்கு துரு துருன்னு ஆகிபோச்சு, நைசா பேச்சு குடுத்தேன்....

" மேம் நீங்க
blog வச்சிருக்கிங்களா ?"

"எஸ் அப்கோர்ஸ் , ஏன் கேக்குறிங்க ?"

" நானும் வச்சிருக்கேன் அதான் கேட்டேன் "

நான் மங்கு
blog பத்தி சொல்லாம என் சொத்த blog சொன்னேன் அப்படியே பேச்சு blog பத்தி போச்சு , எனக்கு மனசுக்குள்ள ஒரு சந்தேகம் , மன்குனிய தெரியுமான்னு தெரிஞ்சுக்க அப்படியே நைசா .....

"மேம்
blog எனக்கு புடிச்சவுங்க நிறையா இருக்கான , அதுல குறிப்பா மங்குனி அமைச்சர் அப்படின்னு ஒருத்தர் இருக்கார் , அவர ரைட்டிங் எனக்கு ரொம்ப புடிக்கும் "

அவ்ளோ தாங்க சொன்னேன்....... அதுக்கு அந்த பொண்ணு துள்ளி குத்திச்சுக்கிட்டு

" சார் எனக்கும் ரொம்ப புடிக்கும் , எங்க காலேஜுல நிறையா பேர் அவரோட ஃபேன்ஸ் , குறிப்பா எங்க குரூப் ஒரு பத்து பதினைந்து பொண்ணுங்களுக்கு  அவர்தான் ஹீரோ "

அப்படின்னு புகழ்த்து தள்ள ஆரம்பிச்சிருச்சு..

எனக்கு அப்படியே உடம்பெல்லாம்  புல்லரிச்சுப்போய்  வானத்துல பறக்கிறது மாதிரி ஆகிடுச்சு , நான் மெதுவா

" மேம் நான்தான் மங்குனி அமைசர் "

அவ்ளோதான் அந்த பொண்ணு துள்ளி , குதிச்சிருச்சு என் கைய புடிச்சு குலுக்கிகிட்டே , நெருங்கி வந்து
*
*
*
*
*
*
*
*

*
*
@ சார், சார் ..........யோவ் எழுந்திருய்யா , திருச்சி வந்து அரைமணி நேரம் ஆச்சு , காலங்காத்தால பன்னாட கனவு காணுது போல - பஸ் ஹெல்பர்

-fb ஸ்டேடஸ்ஆ போட்டது

Tuesday, August 6, 2013

சரக்கடிச்சிட்டு வண்டி ஒட்டணுமா ??? இத படிங்க .....

விபத்துக்களில் உயிர் விடுவதை விட படுகாயத்துடன் உயிரோடு இருப்பது கொடுமையானது.

கண்டமனூர் மெடிக்கல் காலேஜ் General Hospital- க்கு ஒரு டாக்டர் நண்பனோட போயிருந்தேன், விபத்து மற்றும் எலும்பு முறிவு பகுதிகளை சுற்றிப்பார்க்க நேர்ந்தது.....

என்னை அறியாமல் மனதுக்குள் ஒரு நடுக்கம் வந்து விட்டது .....

பார்பதற்கு மிகவும் கலக்கமாகவும் கொடூரமாகவும் இருந்தது , ஒரு நொடி தவறினால் ஏற்படும் விபத்தால் அவங்களின் மொத்த வாழ்க்கையையும் கேள்விக்குறி ஆக்கிவிடுறது , அது மட்டும் அல்லாமல் அவர்களில் குடும்பத்தாரையும் சேர்த்து பாதிக்கிறது.

விபத்து என்று பார்க்கும் போது , குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதும் விபத்திற்கு முக்கிய காரணியாக உள்ளது, இதில்
வாடைகை காரில் இப்பொழுது குடித்துவிட்டு ஓட்டும் டிரைவர்கள் கிடையாது என்றே சொல்லலாம்.

சொந்த காரில்
குடித்துவிட்டு  self drive செய்பவர்களே விபத்துக்குள்ளாவதில்  அதிகமாக இருக்கிறார்கள் . இதில் இவர்கள் மட்டுமல்லாது கூட வரும் குடும்பத்தார் அல்லது நம்பர்கள் மற்றும் எதிரே வந்த வாகனத்தில் உள்ளவர்களும் பாதிக்கப்படுகிறார்கள் .

வரும்போது வண்டிய மிக மெதுவாகவும் நிதானமாகவும் ஒட்டி வந்தேன் .இன்னும் மனதுக்குள் லேசான நடுக்கம் இருக்கிறது .

குடித்திருக்கும் போது வாகனம் ஓட்டக்கூடாது என்று முடிவெடுத்துள்ளேன்.