எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Tuesday, May 24, 2011

வாடகைக்கு - புதிதாக கட்டிய சட்டசபை

நம்ம வெங்கட் இருக்காரே சும்மாவே இருக்கிறது இல்லை போன போட்டு புதுசா கட்டுன   சட்டசபைய என்ன செய்யலாம் ஐடியா கேட்டு ஒரே தொந்தரவு ,


 "நானும் பத்து  ஐடியா சொன்னேன் வொர்கவுட் ஆகல அதுனால நீங்கதான் ஏதாவது பண்ணியே ஆகனுமின்னு" 


சட்டசபை கட்டிடத்தோட பொறுப்ப  எந்தலைல  கட்டிட்டு போயிட்டார் , வேற வழியில்லாம நானும் செயல்ல இறங்கிட்டேன் .......பஸ்ட்டு வருமானத்துக்கு ஏதாவது  வழியிருக்கா  பார்ப்போம் ???


வாடகைக்கு - புதிதாக கட்டிய சட்டசபை
301524 சதுர அடிகள் பரப்புள்ள புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடம்  சட்டசபைக்கு (மட்டும்)  வாடகைக்கு விடப்படும் . எந்த மாநில அரசாக இருந்தாலும் பரவாயில்லை . 

* வாடகை Rs 4000/-

* அட்வான்ஸ் - பத்துமாச வாடகை 

* புரோக்கர் கமிசன் - ரெண்டுமாச  மாச வாடகை (ஹி.ஹி.ஹி....)

* காலைல 6 டு 8  , சாயந்திரம் 7 டு 9  இந்த டைம்ல தான் தண்ணி திறந்து விடுவோம்  நீங்க தேவைக்கு ஏற்ப புடிச்சு வச்சிக்கிரனும் 

* அதேமாதிரி கரண்ட் - காலைல 11 டு 12  சாயந்திரம் 4  டு 5  டைம்ல மட்டும்  தான் இருக்கும் . யூனிட்டுக்கு Rs  250 /-  

* பிரதி மாதம் 5 தேதி கரக்ட்டா வாடகைய குடுத்திடனும் 

* சுவத்துல கண்ட இடத்துல ஆணி அடிக்ககூடாது  

* சொந்தக்காவுங்க யாரும் வந்து தங்கக்கூடாது

* நான்-வெஜ் சமைக்க கூடாது 

* நைட்டு 10  மணிக்கு கேட் மூடிடுவோம் 

விருப்பமுடையவர்கள் தொடர்பு  கொள்ளவேண்டிய தொலைபேசி எண் - 99999 99999 .


அப்படி வருமானத்துக்கு செட் ஆகலைன்னா , மக்களுக்கு உபயோகப்படுறது மாதிரி சில ஐடியா இருக்கு அதை வேணா டிரை பண்ணுங்க .....


1  ) அதுக்குள்ளார ஒரு பீச் கட்டி விட்டோமின்னா மக்கள் பகல்ல வெயில் தொந்திரவு இல்லாம ஜாலியா பீச்சுக்கு வந்து போவாங்க .

2  ) இல்லைன்னா அதுக்குள்ளே ஒரு ரெண்டுமூணு புளோர்ல  மொட்டைமாடி கட்டிவிட்டா பசங்க பட்டம் விட வசதியா இருக்கும் .  இந்த பட்ட நூல் ஆக்ஸிடன்ட்   நடக்காது .

3 ) இல்லன்னா ஒரு இன்டோர் ஏர்போர்ட் கட்டலாம் , மழை காலங்கள்ல பிளைட் வந்து போக ஈசியா இருக்கும் . 

4 ) அதுவும் சரியில்லைன்னா  பேசாம எனக்கு எழுதி வச்சிடலாம் . (ஹி.ஹி.ஹி......  இது நல்லா இருக்குல்ல )

டிஸ்கி : இன்னும் ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன

(இந்த பதிவு  சும்மா காமடிக்கு மட்டும் ) 


Thursday, May 19, 2011

பின்னங்கால் பிடரில அடிக்க எடுத்தே.....ன் பாரு ஓட்டம்

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்........... வெயில் மண்டைய பொளக்குது . அதுல பைக்ல  டிராவல் பன்றது  மண்டை காயுது . என்ன பண்ணலாம் .......???????பேசாம சூரியனுக்கு புல்லா ஏ.சி பண்ணிடலாமா ???

இம்ம்ம் .... அது சரிவராது கரண்ட்டு பில்லு ஜாஸ்த்தியா வரும் ...... வேற என்ன பன்னலாம் ??????? 

என்னோட குளோஸ் பிரண்டுதான் பைக் மெக்கானிக் , நேர அவன் வொர்க் சாப் போனேன் 


" மாமா வெயில் தாங்க முடியல என் பைக்கு  ஏ .சி போட்டு குடேன் "


" என்னானானானாது .........????"


" சென்ட்ரலைஸ்டு  ஏ.சி பண்ண முடியாட்டியும் பரவாஇல்லை ரெண்டு சீட்ட மட்டும் ஏ.சிபன்னி குடு " 


" டேய் , மாப்ள நான் ஏற்கனவே காலைல என் பொண்டாட்டிகிட்ட செருப்படி வாங்குன வேகாலத்துல இருக்கேன் , மரியாதையா ஓடிப்போயிடு  அநியாயமா என்னைய ஒரு கொலைகாரனாக்காத "


அப்பத்தான்  ஏற்கனவே பிரண்டு கூட பைக்ல போகும் போது ஏ.சி போடச்சொல்லி பொலேர்ன்னு அடிவாங்கினது எனக்கு டக்குன்னு நியாபகம் வந்துச்சு , சரி பைக்கு ஏ.சி மாட்ட முடியாது போல ...........


" சரிடா மாமா பைக்கு ஏ.சி  பன்னமுடியாட்டி பரவாயில்ல , அட்லீஸ்ட் என் ஹெல்மெட்டுக்காவது ஏ.சி போட்டுகுடேன் "


" அடிங் .......... பிக்காளிப் பயலே , நான் ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லைடா உன்னைய மாதிரி ஆளுக இனி உயிரோட இருக்கக்கூடாது " "  


அப்படின்னு சொல்லிக்கிட்டே ஒரு ஸ்பானர   எடுத்துக்கிட்டு என்னைய நோக்கி கொலை வெறியோட  வந்தான் " 


ஹே,ஹே,ஹே....... யாருகிட்ட? நம்ம கிட்டேயா?? ,நாங்க மானத்துல தமிழ் நாட்டு அரசியல்வாதிக ஜாதி ......  டக்குன்னு கால் விழுந்துட்டேன் .....


"மாமா கோபப்படாத எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்கிடலாம் "


"......ங்ங்ங்கொய்யாலே.... பஸ்ட்டு உன்னைய தீத்துட்டு, அப்புறம் கோர்ட்டுல பேசிக்கிறேன்டா   "


அப்படியும் விடாம ஸ்பானரால  அடிக்க வந்தான் ...........


முடியுமா? , நடக்குமா ??...... நாமெல்லாம் யாரு ?????


பின்னங்கால் பிடரில அடிக்க  எடுத்தே....ன் பாரு ஓட்டம் ......... நேரா ஒரு ஹெல்மெட் விக்கிற கடைல போயி நின்னேன் .....


அங்க இருந்த பொண்ணு என்னைய  பைத்தியக்காறன பாக்குற மாதிரியே பாத்துச்சு .


" மேடம் , என்னோட ஹெல்மெட்டுல  ஏ.சி போடணும்  "


" என்னங்க சார் ?"


" என்னோட ஹெல்மெட்டுக்கு ஏ.சி பண்ணனும் "


இப்போ அந்த பொண்ணு  பைத்தியத்துக்கு  வைத்தியம் பாக்குற வைத்தியர பைத்தியமாக்குற பரம்பர பைத்தியக்காறன பாக்குறது மாதிரி   என்னை பாத்துச்சு 


"இம்ம்ம்மம்ம்ம்ம் ...........ஆயிரம் ரூபா ஆகும் , பரவாயில்லையா ?"


"அட இவ்ளோ சீப்பா இருக்கே , உடனே பண்ணிக்குடுங்க மேடம் "


" பஸ்ட்டு பணத்த  கட்டுங்க "


" ஓகே மேடம் , இந்தாங்க "
பத்து நிமிஷம் ........... என்னா  அழகா ஏ.சி போட்டு குடுத்துட்டாங்க பாருங்க ....


*
*
*
*
*
*
*
ஹி.ஹி.ஹி.......... எப்புடி நல்லா இருக்கா ????ஏ.சின்னா இப்படியா இருக்கும்......... குளு ,குளுன்னு இருக்கனுமே ????? ஒரே குழப்பமா இருக்கே ...........

Monday, May 16, 2011

பெட்ரோல் விலை ஜஸ்ட்டு Rs. 67.22 தாங்க

பெட்ரோல் விலை ஜஸ்ட்டு  Rs. 67.22  தாங்க  ...........லிட்டருக்கு 5 ரூபாய்தான் கூட்டி இருக்காங்க ,   இதுக்கு போயி மக்கள்  ரொம்ப பீலிங்க்ஸ் காட்டுறாங்க ..... பாருங்க நான் போன வருசமே எப்படி டெக்னிக் பண்ணி சமாளிச்சு இருக்கேன்னு .......

***************

ஆகா பெட்ரோல் விலை மறுபடியும் ஏறிடுச்சு    , இனி நம்மக்கு பெட்ரோல் போட்டு கட்டுபடியாகாது , என்ன பன்னலாம்னு மெரிடியன்ல ரூம் போட்டு யோசிச்சப்ப ஒரு அருமையான ஐடியா தோணிச்சு ,

"பேசாம நாம் ஏன் ஒரு குதிரை வாங்ககூடாது "

குட் , உடனே நம்ம ஏரியாவுல இருக்க சூபர் மார்கெட் போய், குதிரை இருக்கா?  என்னா விலைன்னு கேட்டேன் , அதுக்கு டக்குன் அந்த சூபர் மார்கெட் ஓனர் வேலைய ரிசைன் பன்னிட்டு போயிட்டாரு .

டுஸ்கி: ஒன்னு இருக்குன்னு சொல்லனும் , இல்ல இல்லைன்னு சொல்லனும். என்னா கோபகாரனா இருக்கானுக .

விசாரிச்சப்ப குதிரைல்லாம் சூபர் மார்கெட்ல விக்க மாட்டாங்கன்னு சொன்னாக , சரி எங்க கிடைக்கும்னு விசாரிச்சா, பீச்சுல கிடைக்கும்னு சொன்னாக , சரின்னு பீச்சுக்கு போய் பாத்தா அங்க நாலுபேரு காக்கி டிரஸ் போட்டு குதிரை ஓட்டிகிட்டு இருந்தாக ,


அண்ணே இந்த குதிர என்னா விலைன்னு தாங்க கேட்டேன் அவரு என்னா கோபத்தில இருந்தாரோ , நேரா குதிரையோட போய் கடல்ல குதிச்சு தற்கொல பண்ணிகிட்டார் .

என்னான்னு கேட்டா அவரு போலிசாம் குதிரை கவுருமென்டு குதிரையாம் , அங்க இருந்து சத்தம் இல்லாம எஸ்கேப் ஆகி கூகுள் தேடினால குதிர சவுதி அரேபியாவுல கிடைக்கும்னு இருந்துச்சு , சரின்னு பக்கத்து வீட்டு காரரிடம் passport கடன் வாங்கிட்டு சவுதி அராபியாவுல போய் ஒரு குதிரை வாங்கிட்டு வந்தேன்


மறுநாள் காலைல பந்தாவா ஆபிசுக்கு குதிரைல போனேன் , போகும்போது ஒன்னும் பிரச்னை இல்லை , ஆனா வரும் போது வழக்கம் போல நாலு டிராபிக் போலீஸ் நம்மள சுத்துபோட்டாக. என்னான்னு கேட்டேன் , மறுபடியும் ஆர்சி புக் , இன்சூரன்ஸ் , டிரைவிங் லைசென்ஸ் , எங்க குதிரைக்கு ஹெட் லைட்டு , அப்படி இப்படின்னு ...கேட்டாக , என்னாது ? குதிரைக்கு ஆர்சி புக் , இன்சூரன்ஸ் , டிரைவிங் லைசென்ஸ்ஆ....... நான் டென்சனாகி குதிரைய அவுகல்டே குடுத்துட்டு பொடி நடையா வூடுபோய் சேந்தேன்.


டிஸ்கி:அன்னைக்கு நைட் புல்லா தூங்காம கொசு வத்தி சுருள சுத்திகிட்டே யோசிச்சதுல ஒரு சூபர் ஐடியா கிடைச்சு , இப்ப அத தான் நான் பாலோ பன்றேன், அது எப்படின்னு தெரியணும்னா கொஞ்சம் கீழ போங்க 

??
?
?
?
?
?
?

?
?

?
கிஸ்கி : நல்லா பிராக்டிஸ் பன்னிட்டு அப்புறம் தான் ஓட்டனும்,....சரியா .......

?
?
?

?

?
?
?
?

பட்டாப்பட்டி said......
ஆமா இவரு பெரிய்ய லாடு லபக்கு தாசு , மீள்பதிவு போடுராராம்....மீள்பதிவு ...... போடா போயி  வேலை ம@#% பாரு ..

Saturday, May 14, 2011

தமிழ்மணம் விழித்துக்கொண்டது - ஆப்பு வைக்க தயாராகிவிட்டது .


ஹா,ஹா,ஹா....... தமிழ்மணம் விழித்துக்கொண்டது ..... இனி ஆபாசமாகவும் , பரபரப்பு தலைப்பும் வைத்து சூடான இடுக்கைகளிலும் , ரேங்க்கிலும் இடம்புடிக்க நினைக்கு பதிவர்களுக்கு ஆப்பு வைக்க தயாராகிவிட்டது  . 

எனது போன டூ பீஸ் உடையில் அனுஷ்கா (18 +++) என்ற    பதிவை தமிழ் மணம் திரட்டியில் இருந்து நீக்கிவிட்டது . அதற்க்கான மெயில் எனக்கு அனுப்பி உள்ளது . 

-----------********--------------

show details 11:58 PM (11 hours ago)
Dear author,
Your post டூis removed by tamilmanam.net Administrator due to follwing reason,
பதிவருக்கு, அண்மைக்காலத்திலே தலைப்பிலே பரபரப்பினை ஏற்படுத்தியே சூடான இடுகைகளிலே இடம்பிடிக்க பதிவர்கள் சிலர் முனைந்திருப்பதாலே, 18+ என்பதாகவும் அதுபோன்று மிகவும் தெளிவாகவே பரபரப்புத்தலைப்பு இட்டு வரும் இடுகைகளையும் அப்படியான ஓட்டம் அடங்கும்வரைக்கும் தமிழ்மணம் திரட்டியிலே தோன்றாது அகற்றி வைத்திருக்க, தமிழ்மணம் எண்ணுகிறது. இதனால், நேர்மையாகவே எழுதும் பதிவர்கள் சிலரும் பாதிக்கப்படுவதை அறிவோம். ஆனாலும், இதையே இப்போதைக்குச் செய்யமுடிகின்றது. புரிந்துகொள்வீர்களென நம்புகிறோம். தொடரும் உங்கள் ஆதரவுக்கு நன்றி. தமிழ்மணம் சார்பாக இரமணிதரன், க.
நிர்வாகி

-----------********--------------
தமிழ் மணம் நிர்வாகி அவர்களுக்கு , தங்களது மெயில் கிடைத்தது நன்றி....


அந்த மெயிலுக்கு ரிப்ளே பண்ண நினைத்தேன் அது ரிஜெக்ட் ஆகிவிட்டது . (ஹி,ஹி,ஹி,...... நமக்கு அந்த அளவுக்கு விவரம் பத்தாதுங்க )
தகவலுக்கு நன்றி தமிழ் மணம் ,

நீங்கள் கூறியது மிக மிக உண்மை , அந்த மாதிரியான பதிவர்களை நக்கல் அடிக்கவே நான் வேண்டுமென்றே  தான் அந்த பதிவை எழுதினேன்.(ஹி.ஹி,ஹி........வேற எப்படி தப்பிக்கிறது )  பதிவை நீங்கள் படித்தீர்கள் என்றால் தெரியும். 

எனது  முக்கிய சந்தேகங்கள் :

1 )  அந்த தலைப்புக்கு   மாறாக உள்ளே பதிவில் இருந்ததால் அதை எடுத்தீர்களா ? 

2 ) ஒரு வேலை உண்மையில் அனுச்காவின் டூ பீஸ் படங்களை போட்டு இருந்தால் அனுமதித்து இருப்பீர்களா ?

3 ) இனிமேல் யாருடைய  18 + தலைப்பு பதிவும் தமிழ் மனத்தில் வெளிவராதா?

4 ) அதேபோல் ஆபாச படம் போட்ட பதிவுகளுக்கும் இதே நிலை தானா ? 
5 ) அப்படி என்றால் இது சம்பத்தமாக தமிழ் மணத்தில் ஒரு பொது  அறிவிப்பு தரலாமே ?

பத்திரிகைகளில் வரும் செய்திகளை அப்படியே திருப்பி எழுதியும் , ஆபாச படங்கள் போட்டும்  பரபரப்பை உண்டாக்குகிறார்கள் , இதனால் சொந்த சிந்தனையில் ஆக்கங்களை உருவாக்கும் பதிவர்கள் பாதிக்கப் படுகிறார்கள் . 

இந்த மாதிரியான முடிவுகளை அந்தந்த பதிவு வெளியான உடனேயே எடுங்கள். தற்போது எனது இந்த பதிவை தூக்கியது டூ லேட் . (ஹி.ஹி.ஹி........... அந்த பதிவின் நோக்கம் ஏற்கனவே நிறைவேறிவிட்டது ) 

தாங்கள் எடுத்த முடிவு மிகச்சிறந்தது.தொடர்ந்து இந்த முறையை செய்யல் படுத்த வேண்டும் ...தமிழ்மணத்திற்கு என் பாராட்டுக்கள் ....

நன்றி 
மங்குனி அமைச்சர் 

டிஸ்கி : ரொம்ப, ரொம்ப  முக்கியமான ஹி.ஹி.ஹி..........விஷயம் 

பஸ்ட்டு ஆப்பு எனக்குத்தான் .....


மொத்தமாக இப்படிக்கு 

மங்குனி அமைச்சர் 
(மானம், மரியாதை , வெக்கம் ,  ரோசம் இல்லாமல் தான் வாங்கிய ஆப்பை கூச்சம் , அசிங்கம் பார்க்காமல்  ல் வெளியே சொல்வோர் சங்க தலைவன் )

Wednesday, May 11, 2011

டூ பீஸ் உடையில் அனுஷ்கா (18+++)

நம்ம ஃபிரண்ட்    ஒருத்தன் சினி பீல்டுல இருக்கானுங்க , நேத்தைக்கு போன் பண்ணினான், இவன் போன் பண்ணினா ஹாட் நியுஸ் தருவான்  .... நான் போன எடுத்து ஆன் பன்னி......... 

" ஹலோ மச்சான் சொல்லுடா  "


" மச்சான் உனக்கு ஒரு விஷயம் தெரியுமா , நம்ம அனுஷ்கா    டூ பீஸ் டிரெஸ்ல நடிச்சதாம் "

"என்னடா சொல்ற ?"

"ஆமாடா மச்சான் நேத்து ஒரு படத்துல ஒரு பாட்டு சீன்ல டூ பீஸ் டிரெஸ் குடுத்து போட   சொல்லி இருக்காங்க , ஆனா அனுஷ்கா டூ பீஸ் உடையெல்லாம் போடமாட்டேன்னு ஒரே அடம் புடிச்சிச்சாம் "

" ஆஹா தமிழ் கலாச்சாரம் .......... அப்புறம் என்ன ஆச்சு? "

 " அப்புறம் டைரக்டர் , புரடியுசர் எல்லாரும் கதைக்கு தேவைன்னு எடுத்து சொல்லிருக்காங்க    "

"அடடா கதை ரொம்ப முக்கியமாச்சே , அப்புறம் கடைசியா என்ன ஆச்சு ?"

"அப்புறம் கடைசில செட்டுல இருந்த எல்லாரையும் வெளியபோக சொல்லிட்டு  கேமராமேன் , டைரக்டர் இவுங்கள மட்டும் இருக்கச்சொல்லி நடிச்சி குடுத்துச்சாம் "

"அப்படி போடு , மச்சான் அந்த டூ பீஸ் போடோ எதுவும் கிடைக்குமாடா"


" இருக்கு  அதுவேனுமின்னா எனக்கு  ஒரு பார்ட்டி வைக்கணும் "


"பார்ட்டி என்னடாபார்ட்டி ?, ரெசிடன்சில பார்ட்டி குடுக்குறேன் "


"ஓகே , இரு உனக்கு போடோவ  மெயில் பண்ணுறேன் "


யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் *
*
*
*
*

இந்த படத்திற்கும் இந்த பதிவிற்கும் எந்த தொடர்பும் இல்லை ....... நம்ம மேட்டர் படம் பாக்க இன்னும் கொஞ்சம் கீழ வாங்க
*
*
*
*
*
*
*
*
*
*
*
*

பாருங்க என் பிரண்டு ஒருத்தன் அழகான ஒரு நாய்   வாங்கி அதுக்கு அழகா அனுஷ்கான்னு பேருவச்சி , அந்த அனுச்காவும் இப்போ ராம நாராயணன் படத்துல நடிக்கிது .


ஸ்பெசல் சமையல் குறிப்பு :

சிறிதளவு   கடுகு, சீரகம் , மஞ்சள் ,மிளகாய் , சோம்பு , இஞ்சி, மிளகு , ஏலக்காய் , கிராம்பு போன்றவற்றை நன்றாக அரைத்து அத்துடன் சிறிதளவு எலுமிச்சம் சாற்றை கலந்து நாய் குறைக்கும்  போது குப்பை தொட்டியில்  ஊற்றினால் இந்த கொலைவெறி கோபம் குறைய வாய்ப்புள்ளது .  


முக்கிய செய்திகள் :

2G ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட நமது மங்குனி அமைசர் தற்போது டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்  . எனவே யாரும் அவரை தேட வேண்டாம் என்றும் , தேடினாலும் கிடைக்க மாட்டார் என்றும் சி.பி.ஐ அதிகாரிகள் கூறினார் . மேலும் ......

டிஸ்கி : உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்............. அப்பா உசுர காப்பாத்திக்க எப்படியெல்லாம் செய்தி பரப்ப வேண்டி இருக்கு ........
Monday, May 9, 2011

இன்னைக்கு நம்ம ஜாதகத்துல சனி உச்சத்துல இருக்கு போல???

ஒரு வேலைவிசயமா அசோக் லேலண்டு ஆபீசுக்கு போனேங்க . அண்டர் கிரவுண்டுல போயி நம்ம பிஃப்டி பிரசன்ட் கார பார்க் பண்ணிட்டு ரிசப்சனுக்கு போனேன் .

"எஸ் , வாட் கேன் ஐ டூ ஃபார்  யு? "

" மீ  வான்ட்டு மீட்டு ஒன் ஆபீசர் அண்ட் டேக்   ஒன் கையெழுத்து ஃபிரம் தட் ஆபீசர் "  (எங்க கிட்டயே இங்கிலீசா ........ நாங்களும் பேசுவம்ல )

"பிப்த் ப்ளோர் போங்க "

சரின்னு நேரா லிப்ட்டுல அஞ்சாவது மாடிக்கு போனேன் , அங்க ஒரு ஆபீசர்கிட்ட  டீடைல் சொன்னே அவுங்களும் கீழ ரிசப்சன்ல வெயிட்பன்னுங்க ஒரு 20 மினிட்ஸ்ல    கூப்புடுறேன்னு சொன்னாங்க , நானும் கீழ வந்து  வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்

அந்த நேரம் பாத்து நம்ம  பிரபல  பதிவர் வெங்கட்  போன்  பண்ணினாப்ள , ஆஹா.....  இன்கம்மிங் கால் ஓசில  மொக்க போட ஒரு ஆள் கிடச்சிட்டான்னு மொக்கபோட ஆரம்பிச்சேன் ............

ரிசப்சனிஸ்ட் " மிஸ்டர் உங்கள மேல கூப்புடுறாங்க "

போன் பேசிக்கிட்டே(பின்ன கட்பன்னிட்டா மறுபடியும் நான் கால் பண்ணினா துட்டு செலவாகுமே ) லிப்ட்டுல போயி பிப்த் புளோர் பட்டன அமுக்கினேன் , லிப்ட்டு போயி நின்னிச்சு.

நானும் சுவாரசியமா போன்ல பேசிக்கிட்டே   லிப்ட்ட விட்டு இறங்கி பாத்தா .................

ஆபீஸ் செட்டப்பே  மாறி இருக்கு ........... 

"ஐயையோ இங்க இருந்த ஆஃபீசக்காணோம் ,ஆஃபீசக்காணோம் ,ஆஃபீசக்காணோம் ......."

டக்குன்னு  அங்க இருந்த செகுரிடி என்னைய புடிச்சு 

"யோவ் என்னையா கெனத்த காணோம்     கதையா இருக்கு , எந்த ஆஃபீசைய்யா காணோம்? "

" சார் , சார் ஒரு அரைமணி நேரத்துக்கு  முன்னாடி இருந்த ஆபீஸ இப்போ காணோம் சார் மாறிப்போயிருக்கு "

"மொதோ எந்த ஆபீசுயா இருந்தது? "

"அசோக் லேலாண்ட் சேல்ஸ் டிபார்ட்மென்ட் சார் "

"அட நாதாரி நாயே , அது ஃபிப்த்து புளோர்ல இருக்கு "

"என்னது ஃபிப்த்து புளோரா ??? அப்போ இது எந்த புளோறு ? "

" பன்னாட இது தேர்டு புளொரு "

அடங்....ங்கொன்னியா , எவனோ லிப்ட்ட யூஸ் பண்ண பட்டன அழுத்தி இருக்கான் , அதுக்குள்ள வேற லிப்ட்டுவந்து அதுல போயிட்டான் . நான் வந்த லிப்ட்டு தேர்டு புளோருல  நிக்கவும்  போன் பேசுற சுவாரசியத்துல அத கவனிக்காம   இறங்கிருக்கேன் .......அவ்வ்வ்வவ்வ்வ்வவ்

சரின்னு ஃபிப்த்து புளோர் போயி வேலைய முடிச்சிட்டு லிப்ட்டுக்கு வந்தேன். நான் பேஸ்மென்ட் போயி பைக்க எடுக்கணும் ......... லிப்ட்டுல இருந்த கடைசி பட்டன அழுத்தினேன் , லிப்ட்டும் கீழ போயி நின்னிச்சு .

இறங்கி போயி பாத்தா  நான் பைக்க நிப்பாட்டி இருந்த பைக் ஸ்டாண்ட்டையே   காணோம் , என்ன கருமாந்திரம்புடிச்ச பில்டிங்க்டா இது

"அய்யோ..... இங்க இருந்த பைக் ஸ்டாண்ட்ட காணோம் , பைக் ஸ்டாண்ட்ட காணோம், பைக் ஸ்டாண்ட்ட காணோம்.."

அங்க இருந்த செகுரிடி

"யோவ் என்னைய்யா சொல்ற , தெளிவா சொல்லு , பைக்க காணுமா , பைக் ஸ்டாண்ட்ட காணுமா? "

"ஐய்யா என் பைக்கோட பைக் ஸ்டாண்ட்ட காணோம்யா "

"ஏய் பொறம்போக்கு , ஒழுங்கா சொல்லு பைக்க எங்க நிப்பாட்டுன/? "

"சார் , இங்க கூட ஒரு ஈ .பி ரூம் இருந்துச்சு , அதுக்கு பக்கத்துல இருக்க ஸ்டாண்ட்டல தான் வண்டிய நிப்பாட்டினேன்"

"அடிங் ...... நன்னாறிப் பயலே , அது இதுக்கு மொதோ புளோருடா  , மேல போயி பாரு "

அடப்பாவிகளா , பார்க்கிங்க்கு அண்டர் கிரவுண்டுல ரெண்டு புளோர் கட்டி வச்சிருக்கானுக .........


இன்னைக்கு நம்ம ஜாதகத்துல சனி உச்சத்துல இருக்கு போல ......Thursday, May 5, 2011

அடப்பாவிகளா ??? பிட்டு படம் போடுரானுக (18 +)முஸ்கி 1   : கும்மி குரூப் ஒரு போரம் வச்சு இருக்கோங்க ..... அதுல ஒரு அப்பாவி  பயபுள்ள என்ன கார் வாங்கலாம்ன்னு எதார்த்தமா ஒரு ஐடியா கேட்டாங்க ........... அதுக்கு இந்த நாதாரி நாயிக்க என்னமா ஐடியா குடுத்திருக்காணுக பாருங்க ............

முஸ்கி 1 .25   : இதுல சில விசயங்கள டிங்கரிங் பெயிண்டிங் பண்ணி போட்டு இருக்கேன் ....... அப்படியே போட்டா .............இம்ம்ஹும் ............. வேணாம் , வேணாம் ......

முஸ்கி 1 .5  : நல்ல வேலை அன்னைக்கு பட்டாப்பட்டி போறத்துக்கு வரலை 

Arunprasath Muthukumaran : வணக்கம் அண்ணன்ஸ், கார் வாங்கலாம் னு இருக்கேன், எதாச்சும் suggestions குடுங்களேன்... டீசல் தான்.... sedan தான், Hatchback vaenaam...
Arunprasath : 4 wheel இருக்கறதா பார்த்து வாங்குப்பா.... நல்லா இருக்கும்
Terror பாண்டியன்: மச்சி! ஸ்டிரீங் வீல் ரொம்ப முக்கியம்.. அதைவிட்ட பாரு.. :)
அருன்ப்ரசாத்: அப்போ கார்ல Hand Bar இருக்காதா?.
Arunprasath Muthukumaran : அடடா எந்த கம்பெனி யும் 4 wheel இருக்கறது தயாரிக்கறது இல்ல, ஸ்டெப்னி ஓட 5 இருக்கும்...
அருன்ப்ரசாத் : //ஸ்டெப்னி ஓட// என்னது ஸ்டெப்னி ஓடுமா?
Terror பாண்டியன் : //அப்போ கார்ல Hand Bar இருக்காதா?//
 No. adhu GYM la dhan irukum... :)
அருன்ப்ரசாத் : அப்போ GYM எங்க இருக்கும்?
Arunprasath Muthukumaran : கண்டிப்பா odum... illana punture aana odaatha wheel vechitu enna panna???? யப்பா யாராச்சும் ஐடியா சொல்லுங்களேன் 
மாலுமி : நீ ஒரு பிட்டு படம் போட்டு ஐடியா கேளு.............பதில் தான வரும்..........
Arunprasath Muthukumaran : ஹி ஹி வீட்ல இருக்கேன்.... எப்டி படம் போட?
மங்குனி அமைச்சர் : நான் போடுறேன் பிட்டு படம் .......இந்த படம் போதுமா ??? இன்னும் கொஞ்சம் வேணுமா ???
அ....   இந்த படம் போதுமா ??? இன்னும் கொஞ்சம் வேணுமா ???
அ....அ....../    இந்த படம் போதுமா ??? இன்னும் கொஞ்சம் வேணுமா ???

(காலேஜு பச்டியர்ல அடிச்ச பிட்டு , ஒரு நியாபகார்த்தமா வச்சு இருக்கேன் , 
நமக்கு இந்த இங்கிலீசு எக்ஸாம்  எல்லாம் படிச்சு எழுத வராதுங்க, 
எப்பவும்  பிட் அடிச்சுதான் பாஸ் பண்ணுவோம் )

மாணவன் (சிலம்பு) : சரி சரி படம் பார்த்தது போதும் எல்லாரும் வந்து ஒழுங்கா ஐடியா கொடுங்க.... :)))
Terror பாண்டியன் : //அப்போ GYM எங்க இருக்கும்?//
kitchen la... ada ramesh eppavum anga dhan  exercise seivanam... :)
Ramesh சுப்புராஜ் : நல்லா சைடு ஸ்டாண்ட் இருக்கற மாத்ரி வாங்கு. straight ஸ்டாண்ட் நா வெயிட் க்கு  ஸ்டாண்ட் போட கஷ்டமா இருக்கும் 
மாணவன் (சிலம்பு) : ஆஹா...என்னா ஒரு அறிவுகொழுந்து... :))
karthik குமார் : மச்சி எந்த கார் வேணும்னாலும் வாங்கு ஆனா கிளீன் பண்ணா இந்தமாதிரி பொண்ணுகள வெச்சு பண்ணு..:))


ஜூனியர்  அருண் : ஹுஸ் அப்பா.... ஒரு கேள்வி கேட்டது தப்பா... :)

டிஸ்கி : இது இப்படியே தொடருதுங்க ............. முழுவதையும் போட்டா ஆப்புறம் என் போடோவுக்கு மாலைபோடவேண்டி   இருக்கும் ..... 

இப்படிக்கு 
அவ்வ்வ்வ் ........... கொட்டாவி விட்டுக்கொண்டே காபி பேஸ்ட் செய்து பதிவு தேத்துவோர் சங்கம் 

Monday, May 2, 2011

கோவக்கார பயபுள்ளைகளா இருக்கானுகளே

டிரிங் , டிரிங் ..........டிரிங் , டிரிங் ........................
(காலிங் பெல் இல்லைங்க ,  ரிங்டோன் தாங்க,.......... அட........ நம்ம ஃபிரண்டு  சிவா )

"ஹலோ சிவா  சொல்றா மச்சான் எப்படி இருக்க? "

"மச்சான்  , நம்ம ரவிய பாத்தியா ? "

"இல்லையே , ஏன்டா ? "


"ஒன்னும் இல்லை மச்சான் , ரெண்டுநாளைக்கு முன்னால அவசரமா அமெரிககா போறேன் ஈவிங் வந்துடுவேன்   ஒரு நூறு    ரூபா கடன் குடு ஈவிங் வந்தது தந்துடுறேன்னு சொல்லி வாங்கிட்டு போனவன்  ஆளையே காணும் . நீ எங்கையாவது பார்த்தா சொல்லு "

"தக்காளி அந்த பன்னாட அப்படியா பண்ணினான் , விடு மச்சான் எங்க பாத்தாலும் உன்கிட்ட சொல்றேன் "

"சரிடா மச்சான் பை "

இது நடந்து ரெண்டு நாள் கழிச்சு , ஆபீசுல போயி அர்ஜென்ட்டா  ரெஸ்ட்டு  எடுக்கிறதுக்காக அவரசரமா பைக்குள போயிக்கிட்டு இருந்தேன் , திடீர்ன்னு பாத்தா ரவி  எனக்கு ஆப்போசிட் சைடுல  பைக்குள போயிக்கிட்டு இருந்தான் .

டக்குன்னு வண்டிய ஓரங்கட்டி , சிவாவுக்கு  போன் போட்டேன் 

"ஹலோ,  டேய் மச்சான்  அந்த கடன்காரன்  ரவி இப்பதான் எனக்கு ஆப்போசிட் ரோட்ல போறான்டா "

"டேய் மாமா விடாத பின்னாடியே போயி தொரத்திபுடி "

"பின்னாடியேவா ??? சாரி மச்சான்  என்னால   பின்னாடியே தொரத்திபோக முடியாதுடா , ஏன்னா................... என் பைக்குள ரிவர்ஸ் கியர் இல்லை"

" என்னது பைக்கு ரிவர்ஸ் கியரா ???? அடிங் ...........ங்கோ..... @#$@@#  நன்னாறிப் பயலே , பைக்க திருப்பிட்டு போடா "

" பைக்க திருப்பிட்டு போனா அது முன்னாடில்ல போகும் , அப்புறம் எப்படி நான் அவன பின்னாடியே தொரத்தமுடியும் ?"

" ஐயோ சாவடிக்கிறானே  .......... டேய் ,  ஒரு ஆட்டோ புடிச்சு  போடா  "

"என்ன மச்சான் சொல்ற , ஆட்டோவ புடிச்சிக்கிட்டா அப்புறம் அது எப்படி போகும்? "

"அடக்கொலகாரப் பாவி???  இதுக்கு அந்த ரவிக்கு கோவில்கட்டி கும்பிடலாம் , என்ன கொடுமைடா  இது , டேய் நீ நல்லா இருடா ................. நான் இப்படியே  திருட்டுரயிலேறி கேரளாவுக்கு அடிமாடா போயிடுறேன் , எங்க வீட்ட்ல சொல்லிடு "

" டேய் , டேய்....... மச்சான் , மச்சான் ..................."
(நான் இப்போ என்ன சொல்லிட்டேன்னு இவ்ளோ கோவப்படுறான் , கோவக்கார பயபுள்ளைகளா  இருக்கானுகளே  )