எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Wednesday, April 4, 2012

ஹேப்பி நியுஸ் - மச்சி ஓபன் த பாட்டில்கங்ராஜுலேசன் நீங்க அப்பா (அம்மா ) ஆகபோரிங்க .சீ, தூ ......... இந்த தமிழ் படம் பார்த்து, பார்த்து ஹேப்பி நியுஸ் அப்படின்னாலே இதுதான் நியாபகத்துக்கு வருது . சாரி பாஸ் .........

விஷயம் என்னான்னா வருசா வருஷம் நம்ம கவுருமெண்ட்டு நியு இயர் பொங்கல் ,  தீபாவளி ,ரம்ஜான் , பக்ரீத் , குட் ஃபிரைடே , கிறிஸ்மஸ் , காந்தி ஜெயந்தி , சுதந்திர தினம் , குடியரசு தினம் அப்படின்னு லீவு விடுவாங்க . 

பாருங்க இந்த லீவுல சில பண்டிகைகள் சண்டேல வந்து அந்த லீவு வேஸ்ட்டா போகும். 

இந்த வருஷம் கூட பாருங்க இது வரைக்கும்  நியு இயர் , பொங்கல் ,மிலாடி நபி சண்டேல வந்து மூணு லீவு வேஸ்ட்டா போச்சு .

நானும் காலண்டர் எடுத்து இந்த வாரம் ஏதாவது லீவ் வருதா , அது எதுவும் சண்டேல வருதான்னு பார்த்தேங்க .............

ஆஹாஹாஹாஹாஹா...............

 வர்ற வெள்ளிக்கிழமை லீவு .

ஏன் ?


அன்னைக்கு குட் ஃபிரைடே 


இதுல சந்தோசமான சேதி என்னன்னா???

நல்ல வேலை இந்த வருசமும் குட் ஃபிரைடே சண்டேல வரல, ஒரு லீவு தப்பிச்சது 

நானும் சின்ன புள்ளைல இருந்து பாக்குறேங்க குட் ஃபிரைடேதான் ஒரு வாட்டி கூட சண்டேல வரல .