எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, March 21, 2011

நாங்கலாம் அவ்ளோ வெவரமான ஆளுக


நான் பீ.ஜி முடிச்சிட்டு (ங்கொய்யாலே நம்பவா போறீங்க? ) சென்னைல  வேலைக்கு சேர்ந்த  புதுசு....... ஒரு வருஷம் தான் ஆகிருந்துச்சு  ............  ஃபாரின் ரெக்ரூட்டிங் டிராவல்ஸ் அது .....சவுதி  விசா ஸ்டாம்பிங் பன்றதுக்காக   சிலபேர் அடக்கடி மும்பை , டெல்லி , கொச்சின்னு பிளைட்டுல சுத்திக்கிட்டே இருப்பாங்க . பிளைட்டுல போற வேலைக்கு  சீனியர் ஸ்டாப்ஸ்ச மட்டும் தான் அனுப்புவாங்க .   

எங்களுக்கு  வயிறு எரியும்.எங்களையெல்லாம் பஸ்லையும், டிரைன்லையும் போற வேலைக்குதான் அனுப்புவானுக, அதுவும் அவசரம் டிக்கட் கிடைக்கலைன்னு   அன்-ரிசர்வுடுல தான் அனுப்புவானுக  .

ஒரு நாள் அப்படித்தான் டெல்லிக்கு போகவேண்டிய சீனியர் ஒருவருக்கு உடம்பு சரியில்லாம போச்சு . வேற ஆளும் கிடைக்கல .....மேனேஜெர் என்னைய  கூப்ட்டு நீ டெல்லிக்கு போறியான்னு கேட்டார் .

எனக்கு ஒரே சந்தோசம் , பஸ்ட்டு டைம் பிளைட்டுல போறதுன்னா சும்மாவா ....    ....ஆனா..... 

"இல்லை சார் நான் போகலை ."

"ஏன் போகல ? டேய் பிளைட்டுல போரடா நீ "

"இல்லை வேணாம் சார் "

மேனேஜர் நேரா  எம்.டி ரூமுக்கு போனார் . எனக்கு பக்குன்னுச்சு .நான் நினைச்ச மாதிரியே எம்.டி கிட்ட இருந்த அழைப்பு வந்தது ........அவரு ரூமுக்கு போனேன் 

"ஏம்பா , டெல்லிக்கு போயேன் "

"இல்லை சார் , வேணாம் "

"பிளைட்டுல எல்லாம் ஒன்னும் பயம் இல்லை சும்மா போயிட்டு வா "

"இல்லைங்க சார் , நான் போகலைங்க சார் "

எம்.டி டென்சன் ஆகி கத்த  ஆரம்பிச்சுட்டார் , 

"நீ இப்போ , போறியா இல்லையா ?"

"இல்லை சார் , நான் போகலை "

"யோவ் , ஏன்யா போகலை ?"

"அது வந்து ............ என்கிட்ட பாஸ்போர்ட் இல்லைங்க சார் "

என்னது  டெல்லிக்கு போக பாஸ்போர்ட்ஆ...........

அன்னைக்கு போனவருதான் அந்த எம்.டி ...அதுக்கப்புறம் அவரு ஆபீஸ் பக்கம் வரவே இல்லை .

ஏன் சார் , அப்போ சென்னைல இருந்து டெல்லிக்கு போக பாஸ்போர்ட்  தேவையில்லையா ??? பிளைட்டுல எங்க போகனுமின்னாலும் பாஸ்போர்ட் வேணுன்னு நினைச்சு இருந்தேன் ............

டிஸ்கி :  இப்ப தெரியுதா நான் ஏன் படிச்சிருக்கேன் , படிச்சிருக்கேன்னு சொல்றேன்னு. 


கிஸ்கி : ஹி.ஹி.ஹி.............இது உண்மையிலே நடந்ததுங்க .........எம்.டி. வரைக்கும் போகலை மேனேஜெர் லெவல்லே முடிஞ்சிருச்சு  ..ஹி,ஹி,ஹி..........

Monday, March 14, 2011

சித்தப்பா மீசைய எடுத்திட்டா அத்தையா மாறிடுவாரோ ???

சார் , நான் இப்ப கீழ உள்ள எல்லா பழமொழிகளையும் நம்புறேன் சார்

உலகம் உருண்டை தான் சார்
(கண்டு புடிச்சிட்டாருயா விஞ்ஞானி !!! விஞ்ஞானிகள் மட்டும் தான் கண்டுபுடிப்பாங்களா ??? # டவுட் 1 ) ,

ஆஹா , வந்துட்டாண்டா பிராக்கட் நாதாரி இனி சீவி , சிங்காரிச்சு , பொட்டுவச்சு, பூ முடிக்காம போகமாட்டானே !!!!

அத்தைக்கு மீசை முளைச்சா சித்தப்பாதான் சார்
(அப்போ சித்தப்பா மீசைய எடுத்திட்டா அத்தையா மாறிடுவாரோ ??? # டவுட் 2 ) ,

பேய் , பிசாசு எல்லாம் வெள்ளைகலரா அதுவும் டிரெஸ் போட்டுக்கிட்டு தான் சார் இருக்கும் , (எல்லா பேய் களும் டிரெஸ் போட்டு வருதே , டிரெஸ்சும் செத்துப் போயி ஆவியா , பேயா ஆகிடுமோ ??? # டவுட் 2 )

மேல உள்ளது கீழ வரும் கீழ உள்ளது மேலவரும்
(இதுக்கு எந்த டபுள் மீனிங்கும் கிடையாது # நோ டவுட் ) ,

வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் ,ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்
(ஏன் ரெண்டும் சரக்கடிச்சிருக்கா ? #டவுட் 3 )


யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வரும்
(என்னாது வரும் சுச்சாவா ??? ஏன் ரெண்டுக்கு ஒரே காலம் , நேரத்துல சுச்சா வரக்கூடாதா ??? # டவுட் 4 )


அட ஒன்னும் இல்லை சார் ..... எங்க ஆபீஸ் டபுள் பெட்ரூம் பிளாட் டைப் , அதுல சின்ன கிட்சன் கூட இருக்கும் . இதுவரைக்கு அந்த கிட்சன பழைய பொருள் எல்லாம் போட்டு ஒரு குப்பை கிடங்கு மாதிரி வச்சு இருந்தோம் .........அவ்வ்வ்வ்வ்வ்வ்........... ஆனா பாருங்க இப்போ ஆபீசு ரூமா இருந்த ரெண்டு ரூம்லயும் மாடுலர் கிட்சனோட டிஸ்பிளே ரெண்டு போட்டு இப்ப அந்த பழைய கிட்சன் ரூம ஆபீஸ் ரூமா மாத்தி அதுக்குள்ளே உட்கார்ந்து இருக்கேன் ........இப்ப புரியுதா நான் மேல சொன்னது எல்லாம் உண்மைன்னு..........அவ்வ்வ்வ்வ்வ்வ்...............

டிஸ்கி: இதற்கு மேல் உங்களுக்கு வரும் சந்தேகங்களை திரு. பன்னிகுட்டி ராமசாமி தீர்த்து வைப்பார்