எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Thursday, February 24, 2011

பொளேர்ன்னு ஒரு அறை.....

அப்பாடா பிளாக் ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆகிடுச்சு ................இந்த ஒரு வருசத்துல நாம இந்த பதிவுலகில் பண்ணின சாதனைகள் என்னன்னு மலரும் நினைவுகளுக்காக அப்படியே பின்னாடி திரும்பி பார்த்தேன் சார்.......................
.
.
.
.
.
.
.

பொளேர்
ன்னு ஒரு அறை ....


"பன்னாட முன்னாடி ரோட்ட பாத்து வண்டிய ஓட்டுடா "எனக்கு பின்னாடி உட்கார்ந்து இருந்த போலீசோட கைங்கரியம்தான் சார் இந்த அறை .......

எல்லாம் என் தலை எழுத்து சார் ....... லிப்ட்டு கொடுத்தது தப்பா சார் ????

சரி அதவிடுங்க நமக்கு பழகிப்போன விசயம்தான்.................

எதுக்கு வம்புன்னு போலீஸ் காரர் இறக்கிவிட்டு நேரா ஒரு டீ கடைல வண்டிய நிறுத்தி .....சமோசா , டீ , வடைன்னு ஒரு கட்டு கட்டிட்டு , ஒரு தம்ம வாங்கி வளைய வளையமா புகை விட்டுக்கிட்டே திரும்பிப்பார்க்கலாம்னு கடைய விட்டு கொஞ்ச தூரம் தள்ளி ஒரு மரத்தடில போயி வளைய வளையமா புகை விட்டுக்கிட்டே கனவுகளோட திரும்பிப் பார்த்தேன் சார்.........
.
.
.
.
.

பொளேர்ன்னு இன்னொரு அறை ........?????


இது கடைக்காரன் ......................

"நாதாரி நாயே , தின்னுட்டு துட்டு குடுக்காம ஓடிடலாம்ன்னு பாத்தியா??? , துட்ட குடுடா "அவ்வ்வ்வ்வ்வ்.................எப்படித்தான் நம்மள பாத்தவுடன் கரக்ட்டா கண்டுபுடிக்கிரானுகளோ ?????எதுக்கு வம்புன்னு நேர வீட்டுக்கு போயி ...... ஜன்னலோரமா (பிளாஸ் பேக் அப்படித்தான ஆரம்பிக்கணும்) கடந்த ஒரு வருடத்தின் இனிமையான மலரும் நினைவுகளுக்காக மறுபடியும் அப்படியே திரும்பிப் பாத்தேன் சார்.
.
.
.
.
.
.
.
பொளேர்ன்னு மறுபடியும் ஒரு அறை .......

"தூ ....நீயெல்லாம் ஒரு மனுசனா பக்கத்து வீட்டு பொண்ணு குளிக்கிறத எட்டிப் பாக்குற ???"

இது நம்ம வீட்டுக்காரம்மா ...............

என்ன கொடுமை சார் இது??? , பிளாக் ஆரம்பிச்சது தப்பா சார்????

அவ்வ்வ்வ்வ்............முடியல.....வலிக்குது , அழுதுடுவேன் ...........எவ்ளோ நேரம்தான் வலிக்காதது மாதிரியே நடிக்கிறது ......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
................... யோசிக்ககூட விடாம இப்படி கொலையா கொல்றானுகளே ?????


நமது ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே!!!!
இன்னும் பயிற்சி வேண்டுமோ ????

Monday, February 14, 2011

நமிதா மேல இருக்க மரியாதை கூடிப்போச்சு சார்

காலைல வந்து மெயில் ஓபன் பண்ணி பாத்தேங்க .........நமிதா புஃல் டிரெஸ் போட்டு வந்தது மாதிரி என்னால நம்பவே முடியலை ......... ஹிப் , ஹிப் ......ஹுர்ர்ர்ர்ரே......................

இருண்டுபோயிருந்த என்னோட வாழ்க்கையில மாருதி சுசுகி நிறுவனம் விளக்கு ஏத்தாம ஸ்ட்ரைட்டா லிப்ட்டு வச்சு சூரியனுக்கே கூட்டிட்டு போயிடுச்சு ......

ஒய்ன்சாப்ல நான் வச்சிருந்த கடன் பாக்கிய அந்த கடவுள் பாத்தானோ இல்லையோ ....... மாருதி சுசுகி கம்பனி காரன் பாத்திருக்கான் சார் ............ அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆடர், அத அனுப்பினான் பாரு மெயில்ல .......வாட்டர் பாக்கெட் வாங்க கூட காசில்லாம் ராவா சரக்கடிச்சு வறண்டு போயிருந்த என்னோட வயித்துல சில்லுன்னு ரெண்டு பீர வார்த்தான் ......... ..

//MARUTI_SUZUKI_LIMITED_RECRUITMENT_OFFER.docx /// //You will be pleased to know that the 62 candidates selected 55 candidates will be giving appointment meaning that your Application can progress to final stage.///

மாருதி சுசுகி கம்பனியோட ரெக்ரூட்மென்ட் செலெக்சன் பைனல் லிஸ்ட்ல என் பேரு இருக்கு . அப்புறம் சேலரிய பாருங்க ....எனக்கே தலை ஒரு யு டர்ன் போட்டு இம்மீடியட்டா இன்னொரு யு டர்ன் அடிக்குது ....

///Your offer letter with Air Ticket will be sent to you by courier before date of interview. The Company can offer you a salary with benefits for this post 62, 000/- to 200, 000/- P.M. + (HRA + D.A + Conveyance and other Company benefits. The designation and Job Location will be fixing by Company HRD. at time of final process. You have to come with photo-copies of all required documents.
///


வோட்கா , வோட்கா .......சே......., தூ.........சொக்கா , சொக்கா ........ ஆரம்பத்துல மாச சம்பளம் 62000 ரூபாய் ,....அது அப்படியே கூடி , கூடி . 200000 ரூபாய் ஆகும் ..........ஆனா என்ன ஆடர் வாங்க டெல்லிக்கு போறதுக்கு முன்னாடி ஒரு ரீபண்டபில் டெபாசிட் ஜஸ்ட்டு Rs .10200 கட்டனும்

///You have to deposit the (Cash) as an initial amount in favor of our company accountant name in charges to collect your payment for Rs. 10,200/- ( Ten thousand two hundred rupees ) through any [STATE BANK OF INDIA] OR [ICICI BANK] Branch from your Home சிட்டி///

அதுனால அன்புள்ளம் கொண்ட வலையுலக நண்பர்களே ஜஸ்ட்டு ஒரு Rs . 10200 குடுத்து உதவுங்கள் . யாரவது ஒருத்தர்கிட்ட பணம் வாங்கினா மத்தவுங்க மனசு சங்கடப்படும் , அதுனால உங்க மனசு சங்கடப்படக்கூடாதுன்கிற ஒரே காரணத்துக்காக நீங்க எல்லாருமே பணம் அனுப்பலாம் நான் அத பெருந்தன்மையோட ஏற்றுக்கொள்கிறேன் .

நான் முதல் மாத சம்பளம் வாங்கியவுடன் கேரளாவுல போயி உங்க பேருக்கு ஒரு செய்வன செய்ஞ்சிட்டு வந்திடுறேன் . (எவ்ளோ நாளைக்கு தான் கோவில்ல போயி அர்ச்சனையே பண்ணிக்கிட்டு இருக்கிறது )

டிஸ்கி 1 : உனக்கெல்லாம் எப்படி வேலை கிடைத்ததுன்னு யோசிக்கிற சந்தேகப் பிராணிகளுக்கும் , இது பொய்யா இருக்குமோன்னு நினைக்கிற நாதாரி நாய்களும்(கும்மி குரூப் ) எனக்கு வந்த முழு அப்பாயின்மென்ட் ஆடர பாக்க இங்கு கிளிக் பண்ணவும் .

டிஸ்கி 2 : அப்பிளிகேசனே போடாத எனக்கு அப்பாயின்ட்மென்ட் ஆடர் அனுப்பிய மாருதி சுசுகி நிருவனத்த நினைக்கும் போது நமிதா மேல இருக்க மரியாதை ரொம்ப கூடிப்போச்சு சார் (எவ்ளோ நாளைக்குதான் கடவுளுக்கே நன்றி சொல்றது ......அதான் ஒரு சேஞ்சுக்கு நமிதா )

Monday, February 7, 2011

பேருகள பாரு பட்டாப்பட்டி, பன்னிகுட்டி ராம்சாமி , பனங்காட்டு நரி

ஒரு மனுஷனுக்கு எப்படியெல்லாம் பிரச்சனை வருது பாருங்க சார்............


"என்னங்க கண்ணன் வொய்ஃப் ஃபோன் ரிபேராம் அவுங்க பிரேம் அண்ணன் வொய்ஃப் கூட பேசணுமாம் உங்க ஃபோன் கேட்டாங்க " (என்னோட வொய்ஃப் தாங்க )

"சரி , ஃபோன் பிரிட்ஜு மேல இருக்கு எடுத்திட்டு போ "

போன எடுத்துக்கிட்டு கீழ போன என் வொய்ஃப் , கீழ இருந்து சத்தமா .....

"ஏங்க பிரேம் அண்ணன் வொய்ஃப் போன் நம்பர என்ன பேர்ல ஸ்டோர் பண்ணி வச்சிருக்கிங்க? "

" P-ல பாரும்மா , பிரேம் மிஸ்ஸஸ்ன்னு இருக்கும் பாரு "

"சரிங்க "

கொஞ்ச நேரத்துல என் பொண்டாட்டி கோவமா மேல வந்தா ..........

என் பிரண்டு கண்ணன் வீட்டை காலிபண்ணிட்டு உன்கூட சேந்தா நானும் கெட்டுப்போயிடுவேன்னு சொல்லிட்டு குடுபத்தோட இயமலைக்கு சாமியாரா போயிட்டான் .

எனக்கு வீட்ல சோறு தண்ணி குடுக்கல ..........

"ஏம்மா என்னதான் நடந்தது? "

என் வொய்ஃப் கிட்ட கேட்டேன் , அவ மதிக்காம வீடு கூட்டிக்கிட்டு இருந்தா .....

எனக்கு வந்துச்சு பாருங்க கோவம்.............. , கதவ சாத்திட்டு என் பொண்டாட்டி கைல இருந்த வெளக்கமாத்த புடுங்கி.............புடுங்கி ..................ஓரமா ஒளிச்சு வச்சிட்டு டக்குன்னு வழக்கம்போல கால்ல விழுந்துட்டேன் .

அப்பத்தான் சொன்னா ........

பிரேம் வொய்ஃப் நம்மர தேட என் போன்ல P-ல போயி பாத்திருக்கு கண்ணன் வொய்ஃப்...........

அதுல வரிசையா


panangattu nari .............

pannikutti ramsamy ................

pattaapatti ....


"பிரண்ட்ஸ் பேருகள பாரு பட்டாப்பட்டி, பன்னிகுட்டி ராம்சாமி , பனங்காட்டு நரி ........................"

பன்னாடைக , பரதேசிகள் , நாதாரிக , கசுமாலங்க, பேமானிக , @#$@$#@$#, %^&$%#$#$,..................... இந்த நாயிக பேருவச்சதுக்கு எனக்கு வீட்டுல தர்ம அடி சார் .

டிஸ்கி : ஹா,ஹா,ஹா............ இந்த விஷயம் உண்மையிலேயே நடந்ததுங்க ........ பேருகள பாத்திட்டு என் வொயிஃபும் , கண்ணன் வொயிஃபும் விழுந்து, விழுந்து சிரிச்சாங்க . அவுங்க ரெண்டு பேருக்கும் பிளாக்குகள் பத்தி தெரியாது .

Tuesday, February 1, 2011

போடா பன்னாட போயி பொழப்ப பாரு

கல்லூரி முடித்து எந்தஒரு குறிக்கோளும் (ஆமா இவரு பெரிய்ய ஆபிரகாம்லிங்கன்......குறிக்கோளாம் , குறிக்கோளு ...அடிங் ) இல்லாமல் விட்டேத்தியாக , ஜாலியாக சென்னைக்கு வந்தேன் . (பொறம்போக்கு , வீட்டுல அடிச்சு தொரத்திவிட்டாங்கன்னு சொல்லு)

ஒரு டிராவல்ஸ் (ஃபாரின் ரெக்ரூடிங் ஏஜென்ட் ) நிறுவனத்தில் ஆபீஸ் அசிஸ்டன்ட் வேலைக்கு சேர்ந்தேன் .

இன்சார்ஜ்
, செக்சன் ஹெட்
என்று முன்னேறி (அடிங்... கேப்மாரி .......... எவன் எவன் வாழ்க்கைல மன்ன போட்ட ?) பிறகு மற்றொரு டிராவல்ஸ்ல் மேனேஜர் (அடக்கலிகாலமே, யாரு அந்த கேன மொதலாளி) என்ற பொறுப்புடன் எனது வாழ்க்கைப் இனிமையாக (ஏன் சுகர் பேசன்ட்டா நீ ?) சென்று கொண்டு இருந்தது .

ஓகே இப்ப மேட்டருக்கு வருவோம் ...

2009 மே மாதம் , சென்னையில் உள்ள எங்கள் டிராவல்ஸ் அலுவலகம் சார்ந்த ஒரு மத்திய அரசு அலுவலகத்தில் சி.பி. அதிகாரிகள் சோதனையிட்டு சுமார் 15 கோடி அளவுக்கு அந்த அலுவலகத்தில் லஞ்சம் புரண்டு இருப்பதை கண்டுபிடித்தனர் . இரண்டு கோடி பணம் கைப்பற்றப் பட்டது . அந்த அலுவலகத்தின் உயர் அதிகாரி மட்டும் சுமார் 8 கோடி லஞ்சம் (மூன்று ஆண்டுகளில் ) வாங்கி இருப்பதாக சி.பி. பத்திரிக்கைகளுக்கு தகவல் கொடுத்தது .

இது
சம்பந்தமான சி.பி.ஐ விசாரணைக்கு பயந்து டில்லியில் உள்ள தலைமை அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நேரடியாக வரும் பொது மக்களிடம் அந்த அலுவலகம் மிகவும் நேர்மையாக நடந்து கொள்ளும் . இந்த பணம் முழுக்க டிராவல் ஏஜென்ட்கள் மூலமாகவே பெறப்பட்டது . இதில் நடக்கும் தகிடுதத்தங்களை பதிவாக எழுத வேண்டும் என்றால் குறைந்தது 15 பதிவுகள் எழுதலாம் .....அவ்வளவு பெரிய்ய மேட்டர் இதுக்குள்ள இருக்கு .


கைது
நடவடிக்கைக்கு பிறகு மத்திய அரசு பல கடும் சட்டங்களை கொண்டு வந்தது .அதில் ஒன்று பொதுமக்களே நேரடியாக அந்த அலுவலகத்திற்கு சென்று வேலைகளை முடித்துக்கொள்ளும் முறையை மத்திய அரசு கொண்டு வந்தது . இந்த நேரத்தில் விமான நிறுவனங்களும் எங்களுக்கு குடுக்கும் கமிசனை நிறுத்திக்கொண்டு பொதுமக்களே நேரடியாக e - ticket பெற்றுக்கொள்ளும் முறையை கொண்டு வந்தது . கடைசியில் டிராவல்ஸ்
நிறுவனங்கள் மொத்தமாக முடக்கப்பட்டது .

உண்மையில் இந்த நிலை பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளது . டிராவல் ஏஜென்ட்டுகள் லைசன்ஸ் வைத்திருந்த ஒரு காரணத்திற்க்காக பொது மக்களிடம் கொள்ளை கொள்ளையாக சம்பாரித்தது .

இனி இந்த தொழில் நிரந்தரமானதல்ல என்ற நிலை வந்து விட்டது .

இனி நம்ம மேட்டர் ..............

நான் எனது நண்பருடன் பார்ட்னர்ஷிப் முறையில் புதிதாக மாடுலர் கிச்சன் (Modular Kitchen) என்னும் புதிய தொழில் ஆரம்பிக்க இருக்கின்றேன் (அட கஷ்ட்ட காலமே .......மாடுலர் கிச்சன் பீல்டுக்கு சனி உச்சத்துல இருக்கு போல ?). அதன் வேலைப்பளு காரணமாகத்தான் கடந்த இரண்டு வாரங்களாக பிளாக் பக்கம் அதிகமாக வரமுடியவில்லை. (பட்டாப்பட்டி said...... அடிங் ..... நீ வரலன்னா உலகம் அழிஞ்சு போகும் பாரு ....போடா பன்னாட போயி பொழப்ப பாரு ) .

சரி இனி என்னதான் நடக்குதுன்னு பாப்போம் .