எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Thursday, December 30, 2010

நாமெல்லாம் நாண்டுகிட்டு சாகலாம்


முஸ்கி : ஒரு ஏழை விவசாயி ஸ்டெப் எடுத்திருக்கான் - நாமெல்லாம் நாண்டுகிட்டு சாகலாம்



புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப்பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.


கடந்த 23-ம் தேதிகொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.. பெரியண்ண அரசு தலமையில் இலவசவண்ணத் தொலைக்காட்சி வழங்கும் விழாநடந்து கொண்டிருந்தது.அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து விஜயகுமார் என்ற பெயர்வாசிக்கப்பட்டதும், கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச்சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி மேடையேறினார்.


அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியைவாங்கிக் கொண்டார் . ஒரு விநாடி அங்கே நின்றவர், டி.வி.யை பெரியண்ண அரசுவிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு, கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார். ஏதோ கோரிக்கை மனுகொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக வாங்கிப்படித்தார்.


அதில்மனிதனுக்கு டி.வி. என்பதுபொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால் வாழ அதைவிட முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள் இருக்கின்றன. இவைன்னிறைவு அடைந்துவிட்டனவா? குறிப்பாக, விவசாயிகளைப் பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு அடைந்துவிட்டதா?


துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த டி.வி.யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும் எங்கிருந்து நிதி வந்தது? இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள்தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள். டி.வி. வழஙகும் பணத்தை வைத்துவிவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.


தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒருமாவட்டத்தையாவது தன்னிறைவு அடையச் செய்திருக்கலாம். இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான மருத்துவம், கல்வி, மும்முனைமின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கினாலே போதும்.


அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி.வி.முதல் கார்வரை அனைத்தையும் வாங்கிக்கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோஅதை நாங்களேபூர்த்திசெய்துதன்னிறைவு அடைந்துவிடுவோம்.


விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர்பற்றாக்குறை, லஞ்சம், ஊழல் என்று ஆயிரக்கணக்கா குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந டி.வி. வேண்டாம். முதல்வர்கருணாநிதி மீதுஎனக்கு மிகுந்தமதிப்பும், மரியாதையும், அன்பும்உள்ளது.


எனவே, இந்த டி.வி.யை அவருக்கேஅன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர் ப்பத்தைப்பயன்படுத்திக் கொள்கிறேன். அவர் இதை ஏற்றுக்கொள்ளாவிட்டால் என் மனம் மேலும் வேதனைப்படும். அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச்செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகிவிடும்என்று நீண்டது அந்தமனு.


இதைப் படித்தபெரியண்ண அரசுமுகத்தில் ஈயாடவில்லை.அருகில்இருந்த

திகாரிகள் அதிர்ந்து போனார்கள். என்றாலும் அந்த மனுவையும் டி.ி.யையும் வாங்கிவைத்துக் கொண்டு மேலும் பரபரப்பை உண்டாக்காமல்

விஜயகுமாரை அனுப்பிவைத்தார் அரசு.


இதன் பின்னர் விஜயகுமாரிடம் கூறியது .


நான் ஒரு சாதாரண விவசாயி. விவசாயிகள் எல்லாம் மின் வெட்டால் பாதிக்கப்பட்டு விளைநிலத்தை ரியல் எஸ்டேட்காரன் கிட்ட வித்துட்டு நகரத்துல போய் கூலி வேலைக்கும் ,ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்கிட்டிருக்கான்.


இந்த நிலை, நாளைக்கு எனக்கும் ன் பிள்ளைகளுக்கும் வரப் போகிறது. எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய் இருக்கிறது. ராத்திரியிலபடுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது.


சாராயத்தை குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும் வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு. ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும் ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில் ரெண்டு கோடிகுடும்ப அட்டைகள் இருக்கு.2கோடி குடும்ப ட்டைக்கும் டி.வி. கொடுத்தால்

இருபது லட்சம் கோடி செலவாகும்.இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு அடையச் செய்தாலே போதுமே.


கனத்த இதயத்தோடும், வாடியவயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு டி.வி .? அவன் பொழப்பே சிரிப்பா

சிரிக்கும்போது அவன் டி.வி. பாத்துவே சிரிக்கணுமாக்கும்.அதுனாலதான் நான் டி.வி.யைதிருப்பிக் கொடுத்தேன்’’ என்றார்.


டி.வி.யை திருப்பிக் கொடுத்தகையோடு முதல்வர்கருணாநிதிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார்.



அந்தக் கடிதத்தில்கொத்தமங்கலத்துக்கு வந்தடி.வி.க்கள் 2519. அதில் 2518 மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். எனக்கான ஒரு டி.வி.யை எனது அன்புப்பரிசாகநீங்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும்என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ் செய்துள்ளார்.

மக்களிடம்
இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்படும் லஞ்சம்தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார்

பொட்டில் அடித்தாற்போல் தெளிவுபடுத்தியுள்ளார். மக்களை சோம்பேறிகளாக்ககும் இலவசத்துக்கு எதிராக போர் தொடுத்திருக்கும் அவரைபாராட்டத்தான் வார்த்தைகளே கிடைக்கவில்லை...!

நன்றி - வெளிச்சம் .

Tuesday, December 28, 2010

நீ எங்கையாவது என் தீப்பெட்டிய பாத்தியா ?

நைட்டு ஒரு 12 மணி இருக்கும் .........

என்சோக கதைய கேளு தாய்குலமே ...... ஆமா தாய்குலமே .........
(அட நம்ம ரிங் டோனுங்க, ஊர்ல இருந்து நம்ம பிரண்டுதான் )

"ஹலோ சொல்றா மாப்ள எப்படி இருக்க ?"

"நல்லா இருக்கண்டா ..... "

"அப்புறம் என்னடா இந்த நேரத்துல ?"

"அது ஒன்னும் இல்லைமாமா இங்க இன்னைக்கு ஒரு பார்ட்டி அதான் மப்பும் , மந்தாரமுமா இருக்கேன் "

"ரைட்டு என்ஜாய் பன்னு, அப்புறம் சொல்லு என்ன விஷயம்.?"

"இரு ஒரு தம்மை பத்த வச்சுக்கிர்றேன்.....................இம் ... நம்ம கவுருமென்ட்டுக்கு அறிவே இல்லை மாமா "

"அதான் தெரியுமே , என்ன விஷயம் சொல்லு ?"

"இன்னைக்கு மதுரைக்கு போயிட்டு வந்தேன் , வழியில ஒரு இடத்துல ஆபத்தான வளைவுன்னு போர்டு போட்டு இருந்தானுக "

"சரி அதுக்கு என்ன ?"

"என்னாத்துக்கு ரோட்ட அவ்ளோ கஷ்ட்டப்பட்டு வளைச்சு போடணும்? , அப்புறம் எதுக்கு போர்டு வக்கணும்? "

(அடப்பாவிகளா .....நைட்டு 12 மனுக்கு போன் பண்ணி கேக்க வேண்டிய டவுட்டாட இது .... அவ்வ்வ்வ்வ்வ்வ்............. இன்னைக்கு இவன் போதைக்கு நாமதான் ஊறுகா போல )

"டேய் மாப்பள உனக்கு ரொம்ப ஓவராயிடுச்சு போயி தூங்கு "

"அது இல்ல மாமா , இன்னொரு இடத்துல விபத்துப் பகுதின்னு போர்டு போட்டு இருந்தானுக "

"சரி ......"

"அது தான் விபத்துப் பகுதின்னு தெரியுதே அப்புறம் அங்க போயி ஏன் ரோடு போடணும்? "

"டேய் மாப்ள .... , ஏற்கனவே என் பொண்டாட்டிகிட்ட படுகேவலமா திட்டு வாங்கிட்டு வேகாலத்துல இருக்கேன் என்னைய தேவை இல்லாம இப்ப ஒரு ஆஃப் அடிக்க வச்சிடாத, மரியாதையா ஃபோன வச்சிட்டு படு "

"ஹி.ஹி.ஹி...........தங்கச்சிகிட்ட திட்டு வாங்கினியா ....சரி ,,சரி படு ....குட் நைட், ஜூஜூ .......... "

கொஞ்ச நேரம் கழிச்சு மறுபடியும் போன் அடிச்சது ........... அதே நாய் தான் ......டென்சனா போன ஆன் பண்ணி

"என்னடா மாப்ள ?"

"சாரி மாமா கோவிச்சுக்காத ............ தம்மடிக்கனும் தீப்பட்டியகாணோம் ... நீ எங்கையாவது என் தீப்பெட்டிய பாத்தியா ?"

"டேய் ............நீ போடில இருக்க , நான் இங்க சென்னைல இருக்கண்டா "

"இல்லை மாமா கடைசியா நாம ரெண்டுபேருதான் பேசிக்கிட்டு இருந்தோம் அதான் நீ எங்கயாவது பாத்தியான்னு கேட்டேன் "

"@#@#%%$%%>>>>>......................."

Thursday, December 23, 2010

என்னைய கெட்ட வார்த்தைல திட்டுறானுக சார்

கண்ணா இந்த லெட்டர 15 ஜெராக்ஸ் காப்பி எடுத்திட்டு வா "

நம்ம ஆபீஸ்பாய் கிட்ட சொன்னேங்க , பையன் ஜெராக்ஸ் மெசின் ரூமுக்கு போயிட்டு வந்து

" சார் , ஜெராக்ஸ் எடுக்குற பேப்பர் ( ஒயிட் சீட்) இல்லை , 4 வொயிட் சீட் தான் இருக்கு, பேப்பர் வாங்கணும் "

"அடடா .....இப்ப அவசரமா வேணுமே , நீ ஒன்னு பண்ணு பஸ்ட்டு ஒரு ஒயிட் சீட்ட வச்சு 15 ஒயிட்சீட் ஜெராக்ஸ்போட்டுக்க , அப்புறம் அந்த பேபர்கள வச்சு லெட்டர ஜெராக்ஸ் எடு"

"சார் , ஜெராக்ஸ் போடத்தான் பேப்பர் இல்லை "

"அதாம்பா , பஸ்ட்டு ஒயிட் சீட்ட வச்சு ஜெராக்ஸ் போட்டேன்னா , உனக்கு நிறையா ஒயிட் சீட் கிடைச்சிடும் , அதை யூஸ் பண்ணிக்கோ "

"என்னங்க சார் வாழப்பழ கதையா இருக்கு, ஒயிட் சீட்ட ஜெராக்ஸ் போடவா ?"

" ஆமா கண்ணா"

"போங்கடா நீங்களும் உங்க வேலையும் ...................இத பொழப்புக்கு நான் கேரளாவுக்கு அடிமாடா போகலாம்.......... நீ எல்லாம் ஒரு மனுசனா .........அடிங்... ங்கொ..........@@##$%^&^%%............."

"ஹேய் , ஹேய் ....நோ பேட் வேர்ட்ஸ் ........."

(அடப்பாவி என்னா கோவக்காரனா இருக்கான் ? )

நீங்களே சொல்லுங்க சார் ஜெராக்ஸ் எடுக்க ஒயிட் சீட் பத்தலைன்னா , இருக்க ஒரு ஒயிட் சீட்ட ஒரு 20 காபி ஜெராக்ஸ் போட்டா அப்புறம் நமக்கு 20 ஒயிட் சீட் எக்ஸ்ட்ரா கிடைச்சிடும் அதை வச்சு அப்புறம் லெட்டர ஜெராக்ஸ் எடுத்துக்கிரலாம்ல, இதைச்சொன்னா என்னைய கெட்ட வார்த்தைல திட்டுறானுக ..... எல்லாம் கலிகாலம் சார் ..

டிஸ்கி : யாருக்காவது ஏதாவது புரிஞ்சிச்சு ???? புரிந்தவர்கள் தயவு கூர்ந்து எனக்கு விளக்கமளிக்கவும் .

கிஸ்கி : திட்டுபவர்கள் ஒரு புறமும் , அடிக்க நினைப்பவர்கள் இன்னொரு புறமும் வரிசையில் வரும்படி விழாக்குழுவின் சார்பாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள் .

இந்த மங்குனி ஒரு டம்மி பீசு , எனவே அடிப்பவர்கள் நிதானபோக்கை கடைப்பிடித்து கொலைகேசில் உள்ளே போகாமல் தற்காத்துக்கொள்ளும்படி எச்சரிக்கை செய்யப் படுகிறார்கள் ......

ஓகே ...... ரெடி .....

ஒன்....


டூ.....

த்திரி.....


ஸ்டார்ட்
மூசிக்.....

Tuesday, December 21, 2010

வெங்காயம் கிலோ 80 ரூபாய் - நாடு வெளங்கிடும்

சே........ இதுவரைக்கும் இந்த்தனை நூற்றாண்டுகளா மழையே பெய்யாத நம்ம நாட்டுல இந்த வருஷம் மட்டும் மழை பேஞ்சு வெங்காயம் எல்லாம் அழுகிப்போய் இப்ப வெங்காய விலை 80 ரூபா விக்குது மத்த சில காய் கறிகளும் கண்ட மானிக்கு விலை ஏறிப்போச்சு . எப்பயும் போல மழை பெய்யாம இருந்திருந்தா இந்த விலையேற்றம் வந்திருக்காது .......கடவுளுக்கு மூளையே இல்லை சார் .


இது தாங்க சன் டி.வி , கலைஞர் டி.வி. யோட வெங்காய கூடுனதுக்கு சொல்லுற காரணம். நியூசுல வர்றா எல்லா வியாபாரிகளும் , விவசாயிகளும் திரும்பத் திரும்ப மழை , மழை ,மழை தான் காரணமின்னு சொல்றாங்க .

சைடுல
ஒரு விவசாயி சார் எங்களுக்கு எக்ஸ்போர்ட் ஆர்டர் நிறையா இருக்கு , ஆனா வெங்காயம்தான் கிடைக்கலன்னு உளறிட்டார், உளறிட்டார் , உளறிட்டார் .


லோகல் மக்கள் எல்லாம் எக்கேடு கெட்டும் நாசமாப்போங்க, நாங்க வெங்காயத்த எக்ஸ்போர்ட் பண்ணி சம்பாரிபோம்ன்னு வியாபாரிகள் எல்லாம் ஒரு உயர்ந்த குறிக்கோளோட இருக்காங்க .

ஒரு அத்தியாவிசய பொருளோட விலை பலமடங்கு ஏறிக்கிட்டு இருக்கு , அதை கட்டுப்படுத்த ஏற்றுமதிய கூட இன்னும் தடைசெய்யவில்லை இந்த அரசாங்கம் ...... ஏற்கனவே இதே விசயத்துல சூடுபட்டும் இன்னும் திருந்தலை ............

இதுல கேஸ் சிலிண்டருக்கு இன்னும் 100 ரூபாய் ஏத்தப் போறாங்களாம் . ஒரு சிலிண்டருக்கு 327 ரூபாய் மானியம் தருவதை குறைக்கப் போகிறதாம் மத்திய அரசு , அதனால் தான் இந்த விலை ஏற்றமாம் . நாடு வெளங்கிடும் ............

பன்னாட , பரதேசிகளா ....... நாட்டுல இருக்க கறுப்புப் பணம் , ஊழல் பணம் இதெல்லாம் வெளிய கொண்டுவராம மானியத்த குறைக்கபோரானுகலாம் . சுவிஸ் வங்கில நம்ம ஆட்கள் போட்டு வச்சிருக்க கருப்பு பணத்த வெளிய எடுத்தாலே நம்ம நாட்டோட கடனையெல்லாம் அடைச்சிரலாம்னு சொல்றாங்க.

அதெல்லாம் நோண்டுனா அவுக பணமும் சேந்து வெளிய வந்து வண்டவாளத்த தண்டவாளத்துல எத்திடுமோ ??????

Friday, December 17, 2010

பிளாக் தொலைந்து போகாமல் இருக்க

முன்னாடியெல்லாம் வீட்டுல இருக்க பாத்திரம் , பண்டம் (எவனாவது பண்டம்ன்னா என்னான்னு கேட்டிங்க ........????) நகை , நட்டு (நட்டு - கரக்ட்டா இதுக்கும் கமண்டல ஆப்பு வப்பானுகளே) , பணம் இதுகதான் காணாமப் போகும் ....

இப்ப பாத்திங்கன்னா மொத்த வீடே (பிளாக் ) காணாமப் போகுது .. எனக்கு நம்ம வீடு காணாப்போனா என்ன பண்றதுன்னு திடீர்ன்னு பயம் வந்திடுச்சு (....ங்கொய்யாலே பட்டா ஏதாவது ஏட்டிக்கு போட்டியா கேள்வி கேட்ட நடக்கிறதே வேற ???......... நாங்க கால்ல விழுக அஞ்சமாட்டோம் தெரியும்ல .... இம் ...அந்த பயம் இருக்கட்டும் ) .....

என்னடா பன்றதுன்னு நம்ம பகல்கொள்ளை பக்கிரி கிட்ட ஐடியா கேட்டேன் ... அதுக்கு அவரு குடுத்த டிப்ஸ் ............


1 . நாமலே நம்ம பிளாக்க தொலைச்சிட்டா ( டெலிட்)...... அப்புறம் எப்படி காணாப்போகும், காணாப்போகும், காணாப்போகும்...
(பன்னாட மங்கு நீ மொதல்ல அதப்பன்னு.....)


2 . முன்னாடி ஹோட்டல்ல சில்வர் கிளாசுல எல்லாம் "இது சரவணபவனில் திருடியது" ன்னு ஹோட்டல்காரனே போட்டு வச்சு இருப்பான் அது மாதிரி பிளாக்குல உங்க பிளாக் பேர போட்டு திருடியதுன்னு போட்டு வைக்கலாம் (நான் போட்டு இருக்கிற மாதிரி) , யாராவது திருடி வச்சிருந்தா ஈசியா கண்டு புடிச்சிடலாம் .

3 . உங்க பிளாக்க உங்க வீட்டு பீரோக்குள்ள வைக்காம சமையல் ரூமுல இருக்க உப்பு டப்பா , இல்லை மிளகாய் டப்பா இந்த மாதிரி ஏதாவது டப்பாக்குள போட்டு வையுங்க .

4 . உங்க பிளாக் (கம்ப்யுடர்) பக்கத்துல நல்ல 6 உயரம் இருக்க ஒரு மொரட்டு நாய் வாங்கி கட்டிப் போடலாம் .

5 . நம்ம கேப்டன் கி(?)ருதகிரியோட ஒரு ஸ்டில், ஒரே ஒரு ஸ்டில் பிளாக்குல போட்டு வச்சிங்கன்னா , ஒசாமா கூட நம்ம பிளாக் பக்கம் வர பயப்படுவான் . (எனக்கே வந்து போக கொஞ்சம் டரியலாத்தான் இருக்கு )

(இப்ப வாங்கடா பாக்கலாம் )

6 . பேசாம மிஸ்டர் . திருடர்கள் கிட்ட டீல் பேசி மாசா மாசம் மாமுல் குடுத்திடலாம். (இந்த டீல் ஓகேன்னா மிஸ்டர் .திருடர் பிளீஸ் காண்டாக்ட் மீ )


டிஸ்கி: திருடர் சார் , திருடர் சார் ..... சும்மா காமடிக்கு இந்த பதிவு போட்டேன் சார் , தப்பா எதுவும் எடுத்துக்கிட்டு என் வீட்டுல கை வச்சிராதிங்க ... (உயிர் பொழைக்க என்னன்னா வேலை பாக்கவேண்டி இருக்கு )

கிஸ்கி: இன்னும் சிறந்த ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன



Wednesday, December 15, 2010

போங்கடா நீங்களும் உங்க............?????

நம்ம மொக்கச்சாமி ஏதோ டென்சனா போயிக்கிட்டு இருந்தான் . நிப்பாட்டி

"என்ன மொக்க இவ்ளோ கோவமா போற ?"

"நேத்துவரைக்கும் ஒரு ரூபாயிக்கு மூணு பீடி குடுத்த நம்ம பெட்டிக்கட இசக்கி இன்னைக்கு ரெண்டு பீடி தான் குடுத்தான் மங்கு , என்னடான்னு கேட்டா பெட்ரோல் விலை கூடிப்போச்சுங்குறான். நீயே சொல்லு மங்கு பெட்ரோல் விலைக்கும் நான் குடிக்கிற பீடிக்கும் என்ன சம்பத்தம் மங்கு ? "

"அது ஒன்னும் இல்ல மொக்க , பெட்ரோல் விலை கூடுச்சுன்னா , டிரான்பொடேசன் ரேட் கூடி காஸ்டாப் லிவிங் கூடிடும் " (கண்டுபுடிச்சிட்டாருயா கவர்னரு )

"காஸ்டாப் லிவிங்ன்னா என்ன மங்கு ?"

"ஏய் , விளக்கம் சொன்னா கேட்டுக்கணும் , திருப்பி கேள்வி கேட்கக் கூடாது " (என்னமா மடக்குராணுக? , தெரிஞ்சா சொல்லமாட்டமா? )

"சரி மங்கு , இதை என்னன்னு பாக்காம நம்ம துரைமாருங்க எல்லாம் என்னா பன்றாங்க மங்கு ?"

"அடப்போய்யா பாவம் அவுங்களே 17500000 ஆயிரம் கோடி ஊழல்ல பங்கு வரலைன்னு பாராளு மன்றத்தையே முடக்கிட்டாங்க "

"17500000 ஆயிரம் கோடின்னா எவ்ளோ மங்கு?"

"இம் ......... ஒரு பத்து லாரி நிறையா பீடி வாங்கலாம் "(17500000 ஆயிரம் கோடின்னா எவ்ளோ சார் ?)

"அடேங்கப்பா ................. அவ்ளோ பணமா ? ஊழல்ன்னா என்னா மங்கு ?"

"அதெல்லாம் பெரிய எடத்து விவகாரம் மொக்க , நமக்கேன் வம்பு , அத விடு அவுங்கதான் நமக்கு ஒரு ரூபாயிக்கு ஒரு கிலோ அரிசி , இலவச வேட்டி சேலை , இலவச டி.வி எல்லாம் தர்றாங்களே "

"அட ஆமா மங்கு , பெட்ரோல் விலைவேற ஏறிப்போச்சு , ஒரு ரூபா அரிசிய 10 ரூபாயிக்கு நம்ம பாய் கடைக்கு குடுப்பேன் , இனி 12 ரூபாயிக்கு தான் குடுக்கணும் "

"பாத்தியா பெட்ரோல் விலை கூடினது உனக்கும் உதவுது "

"ஆமா மங்கு , பீடி விலை வேற கூடிப்போச்சு , இந்த வாட்டி 1500 ரூபா குடுத்தாவெல்லாம் ஓட்டுப் போடமாட்டேன் , 2000 குடுத்தாத்தான் ஓட்டுப் போடணும் , சரி , சரி லேட் ஆகுது நம்ம வாத்தியார் படம் போட்றப்போறான் நான் கிளம்புறேன் "

" அட ஆமா மொக்க நானும் மறந்திட்டேன் பாரு , நானும் போயி பதிவு போடணும் , இந்த வாட்டி எப்படியும் தமிழ் மணத்துல 20 குள்ள வந்திடனும் "

டிஸ்கி : ??????????????????


Monday, December 13, 2010

பிரபல பதிவர்கள் ஜாக்கிரதை

முஸ்கி : கீழே உள்ள பதிவு , தமிழ், மலையாளம், தெலுங்கு , கன்னடம் மற்றும் உலகத்தில் உள்ள எந்த பதிவர்களையும் குறிப்பிடுபவை அல்ல ..... மேலும் வேற்று கிரக பதிவர்களையும் குறித்து எழுத்தப்படவில்லை என்பதை கம்பனியின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம் .

"எலேய் மாப்ளே........................"

யார்ரா அது நம்ம பயபுள்ளைக குரல் மாதிரி இருக்கேன்னு கதவ தொறந்து பாத்தா , அவனுகளேதான் .......... விருமாண்டி , சங்கிலி முருகன் , மாயாண்டி ..........

"எலேய் மக்கா நல்லா இருக்கிங்களா ??"
"நல்லா இருக்கோம் மாப்ள "

எல்லா பேரும் கையில நல்ல முரட்டு தாம்புக் கயிறு வச்சு இருந்தாய்ங்க , இவனுக எல்லாம் அருவாளோட தான அலைவானுக இப்ப எதுக்கு கயிரோட அலையிராணுக ......

ஒரு வேலை கல்யாணம் ஏதும் பண்ணப்போரானுகளா ????

இதுல என் தலைய வேற உத்து உத்து பாக்குறானுக , என்னவா இருக்கும் ??????




"என்ன மக்கா எல்லாம் கையில கயிரோட வந்து இருக்கீங்க ?"

"அது ஒன்னும் இல்லை மாப்ளே , பொங்கல் வருதுல்ல அதான் ஜல்லிக்கட்டுக்கு மாடு புடிக்க வந்தோம் "

"அது சரி சென்னைல ஏது மாடு ?"

"அதான் பதிவர்கள் எல்லாம் பிரபலம் ஆகிட்டா தலைல கொம்பு முளைச்சிருதாமே , எங்க உன் கிரீடத்த கொஞ்சம் கழட்டு?"

அடங்..... கொன்னியா இது என்னடா புது பொரளியா இருக்கு ..........


"மக்கா யாரோ உனக்கு தப்பான இன்பர்மேசன் குடுத்திருக்காங்க, நான் டம்மி பீசு "

"அட பாத்தாலே தெரியுது நீ டம்மி பீசுன்னு , எங்க கொஞ்சம் பிரபல பதிவர்கள் பேரெல்லாம் சொல்லு ?"

ஓ.... அதான் இங்க நிறையா பேரு கொம்பு முளைச்சு அலையுரானுகளா ??? சரி அவனுகள பத்தி நமக்கேன் .... நா நம்ம கூட்டாளிகள கோர்த்துவிடுவோம்

"இம்........ மக்கா , எனக்கு தெரிஞ்சு ஒருத்தர் இருக்காரு ஆனா அவரு சிங்கைல இருக்காரு, அப்புறம் இங்க... இங்க .... "லாஃபிங் - திருடன புடிக்கிரவரு"............


இம்........ அதெல்லாம் ஒன்னும் வேணாம் டெர்ரர் கும்மின்னு ஒரு பிளாக் இருக்கு அங்க இருக்க பூசாரிக எல்லாத்தையும் செக் பண்ணி பாரு ."


"சரி மாப்ள இனி நாங்க பாத்துக்கிறோம் "

(நல்ல வேலை நாம இன்னும் பூசாரி ஆகல ...இவனுக ஊருக்கு போனப்புறம் நாமா பூசாரி ஆகிடலாம் )

எனவே மக்களே நம்ம பயபுள்ளைக எல்லாம் லாரில மாடு தேடி சுத்திக்கிட்டு இருக்கானு , பிரபல பதிவர்கள் எல்லாரும் கொஞ்சம் உங்க தலைய தடவி பாத்துக்கங்க .....

இம் ..... தலைய தவிப் பாத்துட்டிங்களா ????

கொம்பு, கிம்பு மொளச்சிருந்தா பொங்கல் முடியிறவரைக்கும் வெளிய தலைய காட்டிராதிங்க ......... ஜாக்கிரதை

Friday, December 10, 2010

கோயம்புத்தூர் பல்பு

ஒரு ரெண்டுநாள் ஆபீஸ் வேலையா கோயம்பத்தூர் போனேங்க ...... (அதான் சென்னை மக்கள் சந்தோசமா இருந்தாங்களா ?)




அங்க லோகல் பஸ்சுல கண்டக்டர்கிட்ட

"சார் ஒரு காந்திபுரம் குடுங்க "

"எங்க ஊர்லே ஒரே ஒரு காந்திபுரம் தான் இருக்கு , அதையும் உனக்கு குடுத்துட்டா அப்புறம் நாங்க என்ன பன்றது?"

(அடங்.... ங்கொன்னியா இன்னைக்கு இவனுக போதைக்கு நாமதான் ஊறுகாயா? )

"சார் ஒரு டிக்கெட் குடுங்க "

"என்னது டிக்கெட்டா ? செருப்பால அடிப்பேன் நாயே , என்னைய பாத்தா உனக்கு எப்படி தெரியுது? "

(ஆஹா . இன்னைக்கு சனி சடைபோட ஆரம்பிச்சிருச்சு , இன்னும் என்னனென நடக்கப்போகுதோ ?)

"சார் காந்திபுரம் போக ஒரு பயணச்சீட்டு குடுங்க "

"........ அதுவா அப்படிக்கேளு , இந்தா "




(ஆஹா , இந்த ஊருக்காரனுக கிட்ட இனி வாயக்குடுத்து வாங்கிகட்டிக்க கூடாது )

போயி ஒரு சீட்ல உட்கார்ந்தேன் , நமக்கு அந்த ஊரு புதுசு , பக்கத்துல இருந்தவர்கிட்ட

"சார் காந்திபுரம் வந்தா சொல்லுங்க"

உடனே அவரு காந்திபுரம் , காந்திபுரம் நாலுவாட்டி சத்தமா சொன்னாரு , அப்புறம் என்னைய பாத்து

"சார் , நான் கூப்பிட்டு பாத்தேன் காந்திபுரம் வரமாட்டேங்குது , நீங்க வேணா ஒரு வாட்டி கூப்பிட்டு பாருங்க "

(அடப்பாவிகளா.................... வீட்டுலே யோசிச்சிட்டு வருவானுகளோ )

"இல்லை சார் காந்திபுரம் ஸ்டாப் வந்தா சொல்லுங்க , நான் அங்க இறங்கனும் "

"உங்க போன் நம்பர் குடுங்க "

"ஏன் சார் ?"

"இல்லை நான் அந்த ஸ்டாப்புக்கு முன்னாடியே இறங்கிடுவேன் , நாளைக்கு அந்தப்பக்கம் போவேன் , அப்ப காந்திபுரம் வந்த உடனே உங்களுக்கு போன் பண்ணத்தான் "

"@#$%##$#$$%$........................."