எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Friday, January 28, 2011

கலைஞருக்கு நன்றி"ன்னு பேட்டி குடுத்தால் தமிழக மீனவர்களுக்கு விடிவு காலம் பிறக்குமோ ???

நம்ம கும்மியும் , செந்தழல் ரவியும் ஒரு முக்கிய மான விசயத்துக்கு பதிவு எழுத சொல்லி இருக்காங்க . கண்டிப்பா எல்லோரும் அவசியம் செய்ய வேண்டிய ஒரு விஷயம் . தயவு செய்து அனைவரும் முயற்சி செய்யுங்கள் .

நமது மீனவர்கள் கடலுக்குள் அடிக்கடி இலங்கை கடற்படையால் தாக்கப் படுவது , கொள்ளப் படுவதும் சர்வ சாதாரண விஷயம் . அதற்கு உடனடியாக நமது தமிழக அரசு மத்திய அரசுக்கு ஒரு கடிதமும் , இறந்தவர்களுக்கு இழப்பீடும் தருவது டிராபிக் போலீஸ் லஞ்சம் வாங்குவது மாதிரி அதைவிட சாதாரண விஷயம் .

எனக்கு ஒன்னு மட்டும் புரியவே இல்லைங்க முன்னாடி தான் விடுதலைப்புலிகளின் நடமாட்டம் இருந்ததால் சந்தேகத்தின் பெயரில் தாக்கப்பட்டார்கள் தமிழக மீனவர்கள் ...... இது கூட கொஞ்சம் நியாயமான விஷயம் ..... ஆனா இப்ப என்ன நடக்குது???

புதிதாக சேரும் இலங்கை கடற்படை வீரர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி நமது தமிழக மீனவர்கள் தான் ஜாலினான இலக்கு . ஆனா இப்போது சீன மற்றும் இலங்கை கூட்டு கடற்படைக்கும் நமது மீனவர்கள் தான் இலக்கு . இன்னும் கொஞ்ச நாள் போனா ஐ.நா. சபைலே உலக நாட்டு கடற்படை வீரர்கள் துப்பாக்கி சுடுவதில் பயிர்ச்சி பெற இந்திய கடலோர பகுதி உலகின் சிறந்த பகுதின்னு அறிவிச்சாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை .

என்ன சார் முட்டாத்தனமா இருக்கு ... ஒரு தடவை ரெண்டு தடவை என்றால் பரவாயில்லை ஏதோ கவனக்குறைவு என்று கூறலாம் ..........

இந்த நியுஸ் வர்றப்ப நாம என்ன பன்றோம் டீ, தம்மோட பேப்பர் படிச்சுக்கிட்டே ...ச்சு...ச்சு....ச்சுன்னு கவலைப்பட்டு , "கள்ளக்காதல் கொலை " இல்லை "உல்லாச அழகிகள் கைது" நியுஸ் எங்கடா இருக்குன்னு தேட ஆரம்பிச்சிடுவோம் .

இதற்கு நம்மால் ஒன்றும் செய்ய முடியாது ...அரசாங்கம் மட்டுமே கடுமையான நடவடிக்கை எடுத்து தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை தடுக்க வேண்டும். ஆனா நாம் எல்லாரும் சேர்ந்து குரல் கொடுத்து அரசாங்கத்தை நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு கொண்டுவரலாம்.

ஒரு வேலை தமிழக மீனவர்கள் தினமும் கடலுக்குள் சென்று விட்டு வந்து "இலங்கை கடற்படை தாக்குதில் இருந்து நாங்கள் தப்பி வந்தற்காக கலைஞருக்கு நன்றி"ன்னு பேட்டி குடுத்தால் தமிழக மீனவர்களுக்கு விடிவு காலம் பிறக்குமோ ???

டிஸ்கி : பதிவெழுதும் நண்பர்கள் தங்களுடைய பதிவுகளை கீழே உள்ள தளத்தில் இணைக்கவும்

"www.savetnfisherman.org "

Thursday, January 27, 2011

எங்க குரூப்ப தறுதலைகன்னு செல்லமா கூப்பிடுவாங்க

நான் ஸ்கூல்ல படிக்கும் போது அப்ப வருசத்துக்கு ஒரு தடவை ஒரு பங்கசன் வரும் ................. ஊர்ல இருக்க எல்லாரும் நைட்டு 2 , 3 மணிவரைக்கு முழிச்சிருந்து புது டிரஸ் எல்லாம் போட்டுக்கிட்டு ஊரே ஜே.ஜே.ன்னு இருக்கும் . (அட அந்த "ஜே" இல்லைப்பா ??? எப்பவும் குதர்க்கமா யோசிச்சே நமக்கு பழகிப்போச்சு )


நாம எப்பவுமே நம்ம பிரண்ட்ஸ் க்ரூப்போட சுத்துவோம் (எங்கம்மா எப்பவுமே எங்க குரூப்ப தறுதலைகன்னு செல்லமா கூப்பிடுவாங்க ...... அவ்வ்வ்வ்வ் ....... ..............) .

அன்னைக்கு நம்ம கைல காசும் கொஞ்சம் தாராளமா புழங்கும் , நம்ம குரூப் பசங்க எல்லாம் அன்னைக்கு இவுங்களுக்கெல்லாம் டிமிக்கி குடுத்துட்டு நைட் சோ படத்துக்கு போயிடலாமுன்னு ஒரு வாரத்துக்கு முன்னாடியே செயற்குழு கூட்டி முடிவெடுத்திட்டோம்.

அந்த நாளும் வந்தது .......... பிளான் படி எங்க அண்ணன் குரூப்புக்கு தெரியக்கூடாதுன்னு நைசா சைக்கிள் எடுத்துக்கிட்டு ஊருக்கு கடைசில இருக்க தியேட்டருக்கு போனா ??? அங்க எங்களுக்கு முன்னாடியே எங்க அண்ணன் குரூப் டிக்கட் எடுக்க வரிசைல நிக்கிறானுக .......... ( இந்த நாதாரிக வருசா வருஷம் இந்த வேலைதான் பாத்திருக்கானுகன்னு அப்புறம் தான் தெரிஞ்சது )

சரி சைக்கிள்ள ரிவர்ஸ் கியர் போட்டு அப்படியே ஒரு யு டேர்ன் எடுத்து ஊருக்கு இந்தப்பக்கம் கடைசில இருக்க தியேட்டருக்கு போனோம் .

அதான் வீட்டு தெரியாம பஸ்ட்டு, பஸ்ட்டு அதுவும் நைட் சோ படத்துக்கு போறது .........பயந்துக்கிட்டே உள்ள போயி உட்கார்ந்தோம் .......... பென்ச் டிக்கட் ......... பக்கத்துல எங்க வயசுள்ள நிறையா சின்னபசங்க எல்லாம் சட்டைய கழட்டி மடில சுருட்டி வச்சிக்கிட்டு படம் பாத்தாணுக ...ஹி,ஹி,ஹி....சரியான லூசுப்பசங்க.

படம் பாத்துட்டு நைட்டு ஒரு மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம் ..... வீட்டுக்குள்ள போனேன் எங்கப்பா பின்னாடி இருந்து இங்க வாடான்னு கூப்பிட்டார்

"எங்கப்பா போன ?"

"எங்கயும் இல்லைப்பா , இங்க தான் இருந்தேன் "

"டேய் மரியாதையா சொல்லு எந்த படத்துக்கு போன ?"
(ஆஹா, எந்த பரதேசியாவது போட்டு குடுத்துட்டானா )

"இல்லைப்பா ..........."

பொலேர்ன்னு ஒரு அரை விழுந்தது ............ எனக்கு தலைக்கு மேல வட்டமா குட்டி குட்டி பறவைகள் பறக்க ஆரம்பிச்சுச்சு ...........

" சட்டைய கலட்டி பின்னாடி பாருடா "

கலட்டி பாத்தா அடங் ங்கொன்னியா , புது சட்டை பூராம் ஓட்டை ஓட்டையா இருக்கு ,.....எவனோ சிகரட்டால ஓட்டை போட்டு இருக்கானுக , எனக்கு ஒண்ணுமே புரியல

(அப்படின்னா எங்கப்பாவும் சின்னவயசுல நைட் சோ படத்துக்கு போயிருப்பாரு ???? )

அப்பத்தான் எங்க அண்ணன் பக்கத்துல வந்து

"டேய் நைட் சோ படத்துக்கு போனா சட்டைய கழட்டி சுருட்டி மடில வச்சுக்கிரனும், பின்னாடி சிகிரட் பிடுக்கிரவன் புது சட்டைல ஓட்ட போட்டுடுவாணுக "

(இந்த பன்னாட நாயி இந்த நீதிய முதல்லே சொல்லி இருக்கலாம்ல ?)

ஆஹா ........... அப்ப நாங்க தான் லூசா (ஹி.ஹி.ஹி........ இத எங்க வாயல வேற சொல்லனுமா ?)............ மறுநாள் தான் தெரிஞ்சது நம்ம குரூப்புல நாலஞ்சு பேரு வீட்டுல பொளக்க காச்சி இருக்காங்க .

நீதி : ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது போயி புள்ள குட்டிகள படிக்க வையுங்க

Wednesday, January 19, 2011

டேய்....என்கவுன்டர்ல போட்டு தள்ளிடுவேன் ஜாக்கிரத

ஐயோ , ஐயோ , ஐயோ ............ என் பொண்டாட்டி மடார் மடார்ன்னு தலையிலே அடிச்சுக்கிட்டு

" இப்படி ஒரு பைத்தியக்காரனுக்கு போயி என்னைய கட்டி வச்சிருக்கான் பாரு எங்கப்பன செருப்பால அடிக்கணும்..... என் பொழப்பு இப்படி நாசமா போச்சேன்னு" பொலம்ப ஆரம்பிச்சா ...........

என் பையன் அவனோட புக்கு நோட்டு எல்லாத்தையும் கிழிச்சு போட்டு

"மம்மி நீ அழுகாத மம்மி , பேசாம இந்த ஆள டைவேர்ஸ் பண்ணிட்டு வா நான் உன்னைய மாடு மேச்சாவது காப்பாத்துறேன் , இந்த ஆளுக்கு புள்ளையா பொறத்ததுக்காக இனி நான் ஸ்கூல் பக்கமே போகமாட்டேன் "

திடீர்ன்னு பக்கத்து வீட்டுல ஒரே சத்தம் என்னான்னு போயி பாத்தா.........

அவுங்க வீட்டு நாய் நடு ஹால்ல தூக்கு மாட்டி தொங்குது .

வெளிய வந்து பாத்தா பக்கத்து வீட்டு ஹவுஸ் ஓனர் ரெண்டாவது மாடியில இருந்து கீழ குதிச்சு சூசைட்டு டிரை பன்னி கால உடைச்சிக்கிட்டார் ............

ரோட்டுல ஒரே சைரன் சத்தம் போலீசு , ஆம்புலன்சுன்னு ஒரே களேபரம் ......

போலீசு நேர என்கிட்ட வந்து

"யோவ் , இதுவரைக்கு 67 போன் கம்ப்ளைன்ட் வந்திருக்கு , மரியாதையா இனி பாட்டு பாடாத , அப்படியே பாடனும்னாலும் அடுத்து வீடுகளுக்கு கேக்காம சத்தமில்லாம வாயில சைலன்சர் வச்சிக்கிட்டு பாடு , இல்லை உன்னைய என்கவுன்டர்ல போட்டு தள்ளிடுவேன் ஜாக்கிரத "

இது என்னங்க சார் அநியாயமா இருக்கு , அப்படி என்ன சார் நான் பெரிய்ய தப்பு பன்னிட்டேன் .......... நீங்களே சொல்லுங்க சார் , அயன் படத்துல வர்ற

"விழி மூடி யோசித்தால்
அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே "

பாட்ட இங்கிலீசுல கீழ உள்ளது மாதிரி பாடினேன் சார் ,ஐஸ்மூடி திங்க்பன்னினால்
தெயரும் கம்முனாய் பிரன்டே பிரன்டே
லோன்லியாக டாக்கிடும் ஹெப்பியை
கிவ்வுனாய் பேக்கே பேக்கே
அடி திஸ்போல் ரெயின் காலம் மை லைபில் கம்முமா
ரெயின் பேரட்டே ரெயின் பேரட்டே உன் ஐஸை சீத்தேனே
ஐஸ் வழியே ஐஸ் வழியே மீ மையை சீத்தேனே ............ ரெட்ஹனியே ...............இது ஒரு தப்பா சார் ............. நான் இங்கிலீசு பேசுறது , பாடுறத பாத்து எல்லாரும் பொறாம புடிச்ச பேட் பீபுளா இருக்காங்க சார் .

Thursday, January 13, 2011

"18 +" 1992 - ஸ்பெசல்....

பாருங்க நேத்து நைட்டு நம்ம குலசாமி கனவுல வந்து ஏன்டா எல்லாரும் தொடர் பதிவ போட்டாங்க நீ என்ன பொரிய வெண்ணையான்னு பட்டாபட்டியோட ருத்ரதாண்டவம் ஆடுச்சுங்க , பதிவு போடலைன்னா அப்புறம் உன் பிளாக்கு 6 மாசத்துக்கு ஹிட்ஸ் கிடைக்காகாது , ஓட்டு விழுகாதுன்னு சாபம் வேற விட்டுச்சு .........நம்ம ஜலீலா மேடம் வேற இன்வைட் பன்னி இருந்தாங்க .........சரி நமக்கு ஏன் சாமி குத்தம்ன்னு .....2010 நமக்கு கிடைத்த அனுபவங்களை எழுதி இருக்கேன் .......
1. நமக்கு பிடித்த நல்ல விஷயங்கள்

அடுத்தவன் நாசமா போறது , ரெண்டு பேரு பிரண்ட்ஸா இருந்தா இடைல புகுந்து போட்டு கொடுத்து ரெண்டு பேரையும் அடிதடி வரைக்கு கொண்டுபோய் விடுவது . (என்ன ஒரு நல்ல எண்ணம் ??? இம் ....விளங்கிரும் )2. மறக்க முடியாத சம்பவம்

எதுன்னு சொல்றது ......நாம என்ன கொஞ்சநஞ்ச இடத்திலையா அடிவாங்கி இருக்கோம் .............இம்........ஆனாலும் வந்த புதுசுல நம்ம பட்டா , வெளியூரு , ரெட்டை இவனுக கிட்ட மாட்டி சின்னாபின்னம் ஆனேனே அத மறக்க முடியுமா ???? (ஆமா மக்கா உங்க கிட்ட அடி வாங்கினதுக்கு அப்புறம் இந்த உலகத்துல எவன் அடிச்சாலும் தாங்குற சக்தி வந்துடுச்சுய்யா )


3. மகிழ்ச்சி தந்த அல்லது பிடித்த பொழுதுபோக்கு

ஹி.ஹி.ஹி..........

மகிழ்ச்சி - ஃபிகர் பாக்குறது

பொழுதுபோக்கு - அந்த ஃபிகர்களோட அண்ணன் தம்பிக கைல சிக்காம பின்னங்கால் பிடரில அடிக்க ஓடுறது

4. அன்பு அல்லது பரிசுகள்


உடம்பு பூராம் இருக்கு (தழும்பு போகவே மாட்டேங்குது யாராவது ஏதாவது மருந்து இருந்தா சொல்லுங்களேன் )6. பிடித்த நல்ல மனிதர்கள்

சிங்கைல ஒரு நாதாரி இருக்கான் (சரக்கு வாங்கி குடுத்துவிட்டான்ப்பா ) அப்புறம் நம்ம வெங்கட் (பீச்சுல பஜ்ஜி வாங்கிதந்தாருப்பா )

நண்பர்கள்/நண்பிகள்

த்ரிஸா, தமனா , ஸ்னேஹா , ஸ்ரேயா , நயன்தாரா .......அட அவுங்களே ...நாங்கல்லாம் திக் பிரான்டுஸ்ன்னு சொன்னதா பேப்பர்ல போட்டு இருந்தாங்கப்பா ...........யோவ் ........யாருய்யா அது பேசிக்கிட்டு இருக்கும் போதே அடிக்கிறது ..........பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் .........

ஓ.......... நீங்க என்னோட கேர்ள் பிரண்ட்ஸ் பத்தி கேட்டிங்களா ? ஹி.ஹி.ஹி.......அஸ்க்கு , புஸ்க்கு ...........ஆசை , தோசை , அப்பளம் , வடை (ஹாய்........ செல்வா வடை , வடை ,.........ஓடியா ...ஓடியா ).............ஏன் ? என் கேர்ள் பிரெண்ட்ஸ் பேரச்சொல்லி என் பொண்டாட்டிகிட்ட செருப்படி வாங்குறதுக்கா ?


7. பிடித்த உணவுகள் புதியதாய் ஏதாவது ட்ரை செய்து சாப்பிட்டது

ஓசியில் கிடைக்கும் அனைத்து உணவுகளும் ( நாங்கல்லாம் பிரியா கிடைச்சா... சே ...தூ ....ஃப்ரீயா கிடைச்சா ஃபினாயில கூட குடிக்கிற ஜாதி )


8. பார்த்தவற்றில் பிடித்த அல்லது மறக்கமுடியாத இடங்கள்

ஸ்ரேயாவோட அந்த ரெண்டு ............... யோவ் ....எவன்டா அவன் தப்பு தப்பா யோசிக்கிறது .... ரெண்டு கண்களை சொன்னேப்பா , அப்புறம் நயந்தாராவோட அந்த வலைந்த ......... டேய் ....தலைமுடிய சொன்னேன்டா ........ஸ்டாப் ...ஸ்டாப் ...
எதுக்கெடுத்தாலும் இந்த அடிக்கிற பழக்கத்த இந்த புது வருசத்தோடவாவது விட்டுததொலைங்க.......

ஓ........ நீங்க டூரிஸ்ட் பிலேசஸ்ஸ கேட்டிங்களா ????9. வாழ்க்கையில் நடந்த மனதை தொடுகிற சம்பவங்கள்.

ஹி.ஹி.ஹி.........ஐய்யோ, ஐய்யோ ...சொக்கா என்ன ஒரு அருமையான கேள்வி ....ஆனா போன கேள்விக்கு மட்டும் தான் 18 + போட அனுமதி குடுத்திருக்காங்க ...........


இதுல முக்கியமான விஷயம் 2010 பிளாக் ஆரம்பித்த பிறகு உலகம் பூராம் நிறையா பிரண்ட்ஸ் கிடைச்சிருக்காங்க .......அதுல ரொம்ப முக்கியமா குளோஸ் பிரண்ட்ஸ் ஒரு பெரிய டீமே இருக்கு ........... ஏற்கனவே நிறையா பிளாக்குல அந்த டீடைல்ஸ் குடுத்துட்டாங்க ...... அப்படியும் நீங்க தெரிஞ்சுக்கிரனும்ன்னா கீழ கமண்ட்ஸ் பாக்ஸ்ல எந்த எந்த நாதாரிஎல்லாம் காரிதுப்பி இருக்கோ அதெல்லாம் என்னோட குளோஸ் பிரண்ட்ஸ்ங்க

டிஸ்கி : "18 +"1992 = 2010 ...ஹி.ஹி.ஹி.....சும்மா ஒரு ஜெனரல் நாலேஜுக்கு

Monday, January 10, 2011

போலீஸ் அதிகாரிகள் தற்கொலை முயற்சி

வேண்டுகோள் : முன்னாடியெல்லாம் நான் அடுத்தவர்களின் நல்ல பதிவுகளுக்கு போடும் தமிழ்மண ஓட்டுக்கள் மங்குனி அமைச்சர் என்று விழும் .......ஆனா தற்போது yasinshaji@gamil.com என்ற மெயில் ஐடி பெயரில் விழுகிறது ஏன் என்று தெரியவில்லை ? சரிசெய்ய தெரிந்தவர்கள் தயவு செய்து கூறவும் ......... மங்குனி அமைச்சர் என்ற பெயரில் ஓட்டுக்கள் விழ வேண்டும்

------@@@@@-----

சார் சமீபகாலமா ஆபீசுல ஒரே ஆணி சார் ........... (ஆனா கடைசி வரைக்கு நான் ஒரு ஆணி கூட புடுங்கல சார் )...

இடைல வந்து பாத்தா இந்த நாதாரிக என் பேருல ஒரு மேட்டர போட்டு போறத்துல கும்மி எடுத்திருக்காணுக ........ பாருங்க பரதேசிக்க ன்னா வேலை பன்னிருக்கானுகன்னு

//////மங்குனி அமைச்சர்
to terror-kummi
show details Jan 6 (4 days ago)

மன்குவுக்கு மூளையா ? # டவுட்

இதனால் சகலமான பொது மக்களுக்கு தெரிவிப்பது என்ன வென்றால் .......... நமது மன்குவிர்க்கு மூளை வறண்டு , காய்ந்து கருவாடாய் போனதால் .... யாராவது பதிவெழுத ஐடியா (கரு) கொடுக்கும்படி அன்புடன் கேட்டுக்கொளப்படுகிறார்கள் ......... ஐடியா குடுப்பவர்களை புகழ்ந்து நமது தேவா சார் கவிதை எழுதுவார் (தக்காளி ஒண்ணுமே புரியாம சாகுங்கடா ) மேலும் நமது பண்ணிக்குட்டியின் சிபாரிசின் பேரில் நமிதாவுடன் நடனமாட வாய்ப்பு வழங்கப்படும் ......//////எனக்கு ஒரே டென்சனாகிப் போச்சு ............ இதுக்கு காரணமானவுங்க மேல நான் சட்டப்படி நடவடிக்கை எடுக்க போறேன் சார்........... கம்ளைன்ட் குடுக்கலாம்ன்னு போலீஸ் ஸ்டேசன் போனேன் சார் .

BA 2 (ரெண்டு அரியர்ஸ் ) போலீஸ் ஸ்டேசன்

வாசல்ல நம்ம சிரிப்பு போலீசு சொங்கி மாதிரி காவலுக்கு நின்னு இருந்தான் சார்

உள்ள போனா ஏற்கனவே நம்ம பட்டாபட்டி , வெங்கட் எல்லாம் கம்ப்ளைன்ட் குடுக்குரத்துக்காக உட்கார்ந்து இருந்தாங்க ............

இன்ஸ்பெக்டர் பட்டாபட்டிய கூப்டார்

இன்ஸ்: என்ன சார் பிரச்சனை

பட்டா : சார் என் பிளாக்குல இருந்த என் ஃபோன் நம்பர காணோம் சார்

இன்ஸ்: சார் சரியா சொல்லுங்க உங்க பிளாக்குல இருந்த ஃபோனக்காணோமா, ஃபோன் நம்பர காணோமா?

பட்டா : ஃபோன் இருக்கு சார் ஃபோன் நம்பராத்தான் காணும்

இன்ஸ்: என்னாது ஃபோன் நம்பரக்கானுமா ? ................@#@$!!@@##$#.............சார் நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க .......அடுத்து யாருப்பா ?

நம்ம வெங்கட் போனாரு

இன்ஸ் : உங்க கம்ப்ளைன்ட் என்ன சார் ?

வெங்கட் : சார் என் பையன் ஹோம் வொர்க் பண்ண மாட்டேங்குறான் ?

இன்ஸ் : என்னது பையன் ஹோம் வொர்க் பண்ண மாட்டேங்குறானா? (என் பொண்டாட்டி அப்பவே சொன்னா ..இந்த வேலைய ரிசைன் பண்ணிட்டு வாய்யா நாம கோயம்பேடு மார்கெட்டுல போயி மூட்ட தூக்கி கவுருவமா வாழலாம்ன்னு .....கேட்டனா ? கேட்டனா ? கேட்டனா ? ) சார் நீங்களும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க .........நெக்ஸ்ட்

நான் போனேன்

"சார் பசங்க எல்லாம் என்னை பற்றி பொய் பிரச்சாரம் செய்றாங்க சார் ?"

"சரி அதுக்கு நான் இப்ப என்ன பண்ணனும் ......அவுங்க மேல கேஸ் போடவா ?"

"அதெல்லாம் வேணாம் சார் ....எங்க ஆபீசுல என்னைய ஆணி புடுங்க சொன்னதாலதான் நான் பதிவு போட முடியல .......அதுனால என்னோட எம்.டி இனிமேல் ஆணிபுடுங்க சொல்லக் கூடாதுன்னு கேஸ் பைல் பண்ணுங்க சார்"

"WHAT ...... ???"


சன் டிவி
(எப்பா எல்லாரும் அந்த சன் நியுஸ் முயுசிக்க பேக்ரவுண்டா கேட்டுகங்க)

முக்கிய செய்திகள்

இன்று தேனாம்பேட்டையில் உள்ள BA 2 (ரெண்டு அரியர்ஸ் ) போலீஸ் ஸ்டேசனில் வேலை பார்த்த சிரிப்பு போலீஸ் தவிர (அது மானங்கெட்டதுதான) அனைத்து போலீஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கூண்டோனு ராஜினாமா செய்து விட்டு தற்கொலைக்கு முயன்றவர்களை காப்பாற்றி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர் .....மேலும் .........

Monday, January 3, 2011

பதிவுலகின் டான் (பெரிய்ய பருப்புன்னு நினைப்பு )

முஸ்கி : தயவு செய்து பட்டாப்பட்டி இந்த பதிவை படிக்க வேண்டாம் (நாம சொன்னா கேக்கவா போறானுக ? பன்னாட படிச்சிட்டு அப்புறம் இந்த ரேங்கிங்க வச்சு என்ன பன்றதுன்னு கண்ட மானிக்கு கெட்டவார்த்தைல திட்டுவான் )

----------@@@@@@-----------

"டேய் இப்ப ஒழுங்கு மரியாதைய இந்த ரெண்டு தோசைய சாப்புடுரியா இல்ல உங்கப்பனோட பிளாக்க படிக்கிறியா ?"

"ஐயய்யோ .......... வேணாம்மா, வேணாம்மா ............ நான் தோசையே சாப்புட்டுறேன் , தயவு செய்து டாடியோட பிளாக்க மட்டும் படிக்கச்சொல்லாத "

என் வைஃப்தான் என் பையன மிரட்டிக்கிட்டு இருந்தா ...........

"பிளடி , ஸ்டுபிட், நான்சென்ஸ், கன்ட்ரிபுரூட் என்ன சின்ன புள்ளதனமா இருக்கு என் பிளாக்க பாத்தா உனக்கு எப்படி தெரியுது ? பையன என் பிளாக் பேர சொல்லி மிரட்டுற "

இடைல என் போன் அடிச்சு ......... எடுத்தா என்னோட சிஸ்டர் .....

"டேய் மங்கு புது பதிவு எதுவும் போடலையா ???"

ஆஹா , இதுவல்லவோ ரத்த பாசம் .......

"இல்லைக்கா ரெண்டு நாள் லீவா அதான் போடல, ஏங்க்கா? "

"இல்லைடா இங்க உங்க மச்சானுக்கு துளிர் விட்டுப் போச்சு , உன்னோட பழைய பதிவுமேல இருந்த பயமெலாம் போச்சு , அதான் ஒரு புது பதிவு போடு , அப்பத்தான் அத சொல்லி மிரட்டலாம், சீக்கிரமா போடு "

அப்படின்னு சொல்லிட்டு போன வச்சிடுச்சு.

"அடிப்பாவிகளா ...............எல்லாரும் என் பிளாக்க பத்தி என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க, கூடிய சீக்கிரம் பதிவுலகின் டான் ஆகப்போறேன் ....... ஆரம்பிச்சு 10 மாசம்தான் ஆகுது , அதுலயும் கொஞ்சம் ஆக்டிவா இந்த நாலு மாசமாத்தான் இருக்கேன் இதுக்கே 2010 தமிழ்மணம் ரேங்கிங்க்ள 17 இடத்தையும் லாஸ்டு த்ரி மந்த்ஸ் டிராபிக்ல நாலாவது இடத்துலையும் இருக்கேன், உங்களுக்கு நக்கலா இருக்கா ?"

உடனே என்னோட வைஃப்

"அது ஒன்னும் இல்லைங்க சொல்பேச்சு கேட்காதவுங்களை எல்லாம் உங்க பிளாக்க காமிச்சு தான் "பூச்சாண்டி " , "பூச்சாண்டி "ன்னு சொல்லி பயமுத்துறாங்க,
அட அதவிடுங்க கவுருமன்ட்டு கூட திருடனுக , கொலைகாரனுகள உங்க பிளாக் பேர சொல்லி மிரட்டித்தான் உண்மைய வாங்குராங்கன்னா பாத்துக்கங்க ,கவலையே படாதிங்க அடுத்த வருஷம் நீங்கதான் பஸ்ட்டு "

என்னது பூச்சாண்டியா ........... அவ்வ்வ்வ்வ்வ்வ்...... இதென்னங்கடா புது பொரளியா இருக்கு ........ அப்ப நாம டான் இல்லையா ??? , டண்டணக்கா டானா ??? .................. அவ்வ்வ்வ்வ்வ்வ்...............