எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Wednesday, November 2, 2011

இப்படி ஒரு பிரண்டு தேவையா மச்சான் ?

காலைல ஆறுமணிக்கு   எழுந்து .........."ஹேய் இரு,இரு,இரு, ஆமா நீ என்ன கருமத்துக்கு  ஆறுமணிக்கு எழுந்த ?"

ஷட்டில் விளையாட , ஹேய் பேசிகலி  ஐ எம் எ ஸ்போட்ஸ் மென் யா .

"அடிங்... நாதாரி நாயே பாத்திரம் கழுவி ,வீட்ட கூட்டி, பையன ஸ்கூலுக்கு ரெடிபண்ணி அனுப்பனும் , அதுக்குத்தான உன்னோட வீட்டுக்காரம்மா மூஞ்சில சுடுதண்ணிய  ஊத்தி எழுப்பிவிட்டுச்சு . "

"அடப்பாவிகளா ஊருக்கே தெரிஞ்சுபோச்சா ? சரி விடு மேட்டருக்கு வர்றேன் "

"வா "

காலைல ஆறுமணிஎழுந்து பல்லு விளக்காம வீட்டுக்காரம்மா குடுத்த  டீ சாப்டுகிட்டே 

" மறுபடியும் ஸ்டாப் "

"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.........  இப்போ என்ன ?"

"உனக்கு வீட்டுல டீயெல்லாம் போட்டு தர்றாங்களா ?"

" நானா போட்டுக்கிட்டது தாண்டா, ஐய்யோ சாவடிக்கிரானுகளே , சொல்ல வந்தத சொல்ல விடுங்கடா "

"சரி சொல்லு  "
  
காலைல ஆறுமணிஎழுந்து பல்லு விளக்காம வீட்டுக்காரம்மா குடுத்த  டீ சாப்டுகிட்டே பால்கனிலருந்து கீழ பாத்தா கீழ் போர்சன்ல இருக்க  நம்ம கண்ணன் பைக்ல  வந்து சேர்ந்தான் . அந்த பயபுள்ள ரெகுலரா இந்த நேரத்துல  வாக்கிங் போற ஆளு ..........

"என்ன கண்ணா இந்நேரத்துல வாக்கிங் போகாம பைக்ல  எங்க போயிட்டு வர்ற ?"

"இல்லைண்ணே இன்னைக்கு சீக்கிரம் ஆஃபீஸ்  போகணும் , நடந்து வாக்கிங்(?) போனா லேட் ஆகும் அதான் பைக்லே வாக்கிங் போயிட்டு வந்துட்டேன் "

# இப்படி ஒரு பிரண்டு தேவையா மச்சான் ?