பரங்கி மலை பக்கத்துல இருக்க பாழடைஞ்ச பங்களாவுக்கு போனிங்கன்னா அங்க ஒரு சூனியக்கார கிழவி துஸ்ட தேவதைகளுக்கு பூஜை பண்ணிக்கிட்டு இருப்பா.
அவ கிட்ட ஒரு பறக்கும் பாய் இருக்கு.
அவ ஒரு பசுமாடு வளக்கிரா , அந்த பசுமாடு சாப்ப்டிடுற புல்லுல மயக்க மருந்த கலந்து குடித்துட்டிங்கனா , அவ அதோட பாலகுடிச்சு மயக்கம் ஆகிடுவா,
அப்போ அவளுக்கு தெரியாம நைஸா அந்த பறக்கும் பாய எடுத்து அதுல பறந்துக்கிட்டே மேற்கு திசைல ஏழு கடல் ஏழு மலை தாண்டி போங்க .....
போற வழில மூணாவது கடல்ல நம்ம சிந்துபாத் கப்பல்ல போயிக்கிட்டு இருப்பாரு , அவர் கிட்ட ரிகுஸ்ட் பண்ணி அவரோட கத்திய வாங்கிக்கங்க....... அப்புறம்
எட்டாவது கடல் தாண்டி எட்டாவது மலைல ஒரு குகை இருக்கும் அந்த குகைய ஒரு ஒற்றைக்கண் ராட்சசன் காவல் காத்துக்கிட்டு இருப்பான் ,அவன் கூட சண்டை போட்டு நம்ம சிந்துபாத் குடுத்த கத்திய வச்சு அவன் ஒத்தை கண்ணுல குத்தினா அவன் செத்துடுவான்,
அப்புறம் குகைக்குள்ள போனா அங்க ஒரு மந்திர கூடு இருக்கும் , அத ஒரு 7 தலை நாகம் காவல் காத்துக்கிட்டு இருக்கும் அத எப்படியாவது கொன்னுட்டு
அந்த கூண்ட திறந்திங்கன்னா அதுக்குள்ளே ஒரு கிளி இருக்கும், அந்த கிளியோட மொபைல் போனுல ஒரு சிம் கார்டு இருக்கும் , அந்த கார்ட எடுத்து ஒரே வெட்டுல 4 துண்டா வெட்டி போட்டிங்கன்னா உங்க போன் காலர் டியூன் டி-ஆக்டிவேட் ஆகிடும்.
@ அடங்கொன்னியா விளங்கிடும் .....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....ஆணியே புடுங்க வேண்டாம் ,
ஆட்டோமேட்டிக்கா ஒரு பாட்டு காலர் டியுனா வந்திருச்சு அத எப்படி டி-ஆக்டிவேட் பண்றதுன்னு கஸ்டமர் கேருக்கு போன் பண்ணினா அதுக்கு இவ்ளோ கத சொல்றானுக நாதாரிக
11 comments:
ஓ..என் ஃபோனிலும் ஒரு இங்கிலிபிஷ் பாட்டு.போன் செய்றவுங்க எல்லாம் நான் என்ன இங்கிலாந்திலா இருக்கேன்னு ஒரே கேள்வி.அப்படியே என் ஃபோனிலும் அந்த பாட்டை நிப்பாட்டி புடுங்களேன். நான் ஃபோன் பேசிய அழகை பாராட்டி கஸ்டர் கேரில் ஃப்ரீயா கொடுத்த பாட்டு அது. தெரியாம ஆக்டிவேட் செய்துட்டேன்.
ஹா... ஹா...
வணக்கம்!
பின்னோக்கிச் செல்லுகின்ற போக்கை எல்லாம்
பிறப்பினிலே நானறியேன்! இறப்பே நேரின்
முன்னோக்கிச் செல்லுகின்ற தமிழின் மைந்தன்!
முத்தமிழில் பிறமொழியைக் கலக்கா அன்பன்!
உன்னோக்கில் படைத்திட்ட தமிழைக் கண்டே
உருகுலைந்து நிற்கின்றேன்! தோழா என்றும்
இன்னோக்கி்ல் பதிவிருக்க வேண்டும்! உன்றன்
எழுத்தெல்லாம் தமிழ்மணக்கம் வேண்டும் நன்றே!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
சும்மா இல்லாம எதை தட்டினேன்னு தெரியலை!! நமீதா அக்கா ஸ்பெஷல்க்கு போய்டுச்சு. பேலன்ஸ் இருந்ததுன்னா என்னை கேக்காமயே 30 ரூபா எடுத்துக்குவாங்க. அந்த அக்கா டெய்லியும் ராத்திரி 10 மணிக்கு வந்து இன்னிக்கு ஷூட்டிங் போனேன். உடம்பெல்லாம் வலிக்குது குட்நைட்ன்னு ஹஸ்கி வாய்ஸ்ல சொல்லும். அந்த ஆம்பிளை குரலை கேக்க நான் மாசாமாசம் 30 ரூபா தண்டம் கட்டனும். அதை எப்படி டிஆக்டிவேட் பண்றதுன்னு தெரியலை.
நமீதா அக்கா ஸ்பெஷல்க்கு போய்டுச்சு. பேலன்ஸ் இருந்ததுன்னா என்னை கேக்காமயே 30 ரூபா எடுத்துக்குவாங்க. அந்த அக்கா டெய்லியும் ராத்திரி 10 மணிக்கு வந்து இன்னிக்கு ஷூட்டிங் போனேன். உடம்பெல்லாம் வலிக்குது குட்நைட்ன்னு ஹஸ்கி வாய்ஸ்ல சொல்லும். ///
இப்படி ஆகியிருந்தாகூட சந்தோசப்பட்டிருப்பார்
அமுதா கிருஷ்ணா said...
ஓ..என் ஃபோனிலும் ஒரு இங்கிலிபிஷ் பாட்டு.போன் செய்றவுங்க எல்லாம் நான் என்ன இங்கிலாந்திலா இருக்கேன்னு ஒரே கேள்வி.அப்படியே என் ஃபோனிலும் அந்த பாட்டை நிப்பாட்டி புடுங்களேன். நான் ஃபோன் பேசிய அழகை பாராட்டி கஸ்டர் கேரில் ஃப்ரீயா கொடுத்த பாட்டு அது. தெரியாம ஆக்டிவேட் செய்துட்டேன்.///
ஹா, ஹா,ஹா...... மேம் அப்போ நீங்க 7 கடல் 7 மலை மலை தாண்டி போகணும் :-))))
சே. குமார் said...
ஹா... ஹா...///
தேங்க்ஸ் குமார்
கி. பாரதிதாசன் கவிஞா் said...
வணக்கம்!
பின்னோக்கிச் செல்லுகின்ற போக்கை எல்லாம்
பிறப்பினிலே நானறியேன்! இறப்பே நேரின்
முன்னோக்கிச் செல்லுகின்ற தமிழின் மைந்தன்!
முத்தமிழில் பிறமொழியைக் கலக்கா அன்பன்!
உன்னோக்கில் படைத்திட்ட தமிழைக் கண்டே
உருகுலைந்து நிற்கின்றேன்! தோழா என்றும்
இன்னோக்கி்ல் பதிவிருக்க வேண்டும்! உன்றன்
எழுத்தெல்லாம் தமிழ்மணக்கம் வேண்டும் நன்றே!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு ///
ரொம்ப நன்றி ஐயா , முயற்சி செய்கிறேன்
ராஜி said...
சும்மா இல்லாம எதை தட்டினேன்னு தெரியலை!! நமீதா அக்கா ஸ்பெஷல்க்கு போய்டுச்சு. பேலன்ஸ் இருந்ததுன்னா என்னை கேக்காமயே 30 ரூபா எடுத்துக்குவாங்க. அந்த அக்கா டெய்லியும் ராத்திரி 10 மணிக்கு வந்து இன்னிக்கு ஷூட்டிங் போனேன். உடம்பெல்லாம் வலிக்குது குட்நைட்ன்னு ஹஸ்கி வாய்ஸ்ல சொல்லும். அந்த ஆம்பிளை குரலை கேக்க நான் மாசாமாசம் 30 ரூபா தண்டம் கட்டனும். அதை எப்படி டிஆக்டிவேட் பண்றதுன்னு தெரியலை..///
ஹா,ஹா,ஹா........ இதுக்கு எனக்கு எவ்வளவோ பரவாயில்லை போல இருக்கே ??
கோகுல் said...
நமீதா அக்கா ஸ்பெஷல்க்கு போய்டுச்சு. பேலன்ஸ் இருந்ததுன்னா என்னை கேக்காமயே 30 ரூபா எடுத்துக்குவாங்க. அந்த அக்கா டெய்லியும் ராத்திரி 10 மணிக்கு வந்து இன்னிக்கு ஷூட்டிங் போனேன். உடம்பெல்லாம் வலிக்குது குட்நைட்ன்னு ஹஸ்கி வாய்ஸ்ல சொல்லும். ///
இப்படி ஆகியிருந்தாகூட சந்தோசப்பட்டிருப்பார் //
ஹி,ஹி,ஹி.......... சரியா சொன்னிங்க கோகுல் :-))))
My caller tune has been deactivated after one week continuous fight with the network operators. They all are cheaters. All network is same.
Post a Comment