இதை படித்து விட்டு யாராவது கொலை அல்லது தற்கொலை முயற்ச்சியில் ஈடுபட்டால் அதற்க்கு நிர்வாகம் பொறுப்பல்ல .....
ஆபிசில இருந்து டீ சாப்டலாம்னு கிளம்பினேம்பா வெளிய பார்த்தா ஒரே டிராபிக்
சரின்னு அப்படி இப்படின்னு வளைஞ்சு நெளிஞ்சு சிக்னல தாண்டினா ஒரு 20
டிராபிக் போலீஸ் , அதுல நாலு என்னசுத்துபோட்டு ஓரமா கூட்டிட்டு போனாக.
போலிசு: யோவ் லைசென்ஸ் என்கையா ?
நம்ம : சார் மரியாதையா கேளுங்க ?
போலிசு: சரிங்க பப்ளிக் லைசென்ஸ் எங்க பப்ளிக் ?
நம்ம : லைசென்ஸ் இந்தாங்க
போலிசு : ஆர்சி புக் எங்க சார் ?
நம்ம : ஆர்சி புக் இந்தாங்க
போலிசு : இன்சூரன்ஸ் எங்க சார் ?
நம்ம : இன்சூரன்ஸ் இந்தாங்க
போலிசு : சார்ஜென்ட் சார் , இவரு எல்லாம் கரக்டா வச்சுருக்காரு சார்ஜென்ட் : எல்லாம் கரக்டா இருக்கா !!!!!!!!! ஏன்யா ஓவர் ஸ்பீட்ல வந்த ?
நம்ம : என்னது ஓவர் ஸ்பீட ? சார் நான் நடந்து வந்தேன்
சார்ஜென்ட் : அப்போ பைக எங்கையா ?
நம்ம : பைக் ஆபிசுல இருக்கு சார்
சார்ஜன்ட் : பைக் இல்லையா ? லைசென்சு , ஆர்சி புக், இன்சூரன்ஸ் எல்லாம் எடுத்திட்டு வந்திருக்க பைக் ஏன் எடுத்திட்டு வரல முன்னூர் ரூபா பைன் கட்டு
!!!!!!!
நம்ம : அய்யய்யோ சார்
சார்ஜென்ட் : இங்க கட்னா முன்னூறு கோர்ட்ல கட்னா ஆயிரம் , இங்க கட்டுறியா இல்ல கோர்ட்ல கட்டுறியா ?
நம்ம : ???????????????????????????
ஏற்கனவே கெரகம் சயில்லைன்னு நம்ம காரமடை ஜோசியர் சொல்லியிருக்கார்
சரின்னு முன்னூர் ரூபா fine -அ கட்டிட்டு டீ கூட குடிக்காம ஆபீஸ் வந்துட்டேன்.
- மீள் பதிவு
2 comments:
Like button enga'nu yosikiren. Facebook adiction :-(
நல்லவேளை நீங்க 4 வீலர் லைசென்ஸ் எடுத்துட்டு போகல... அப்புறம் " லாரி " எங்கேன்னு கேட்டு 2000 ரூபா பைன் கட்ட வேண்டி இருந்திருக்கும்.. :)
Post a Comment