எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, August 19, 2013

பளார்ன்னு என் கன்னத்துல ஒன்னு விட்டான்.

லீவுக்கு ஊருக்கு போயிருந்தப்ப பக்கத்து ஊரு பிரண்டுகிட்ட இருந்து போன்வந்துச்சு

"ஹலோ......... சொல்றா மாமா "


"மச்சான் நான்தான் , என் குழந்தைக்கு காதுகுத்து வச்சிருக்கேன் , வந்திடு "

"எங்க? "

"குலசாமி கோவில்ல "

"அது எங்க இருக்கு? "

"நம்ம சிவாகிட்ட சொல்லிருக்கேன் நீ அவன் கூட வண்டில வந்திடு "

"கிடா வெட்டு இருக்கா"


"ஆமா"

"ஓகே டா"


ஆஹா , இன்னைக்கு எப்படியும் கிடாவெட்டுவாங்க விருந்துல போயி ஒரு கட்டு கட்டனுமின்னு காலைல இருந்தே பச்ச தண்ணி கூட பல்லுல படாம பாத்துகிட்டேன் .

கரக்ட்டா சிவாவும் வண்டிய எடுத்துகிட்டு வந்துட்டான் , வண்டிய பாத்ததும் பயங்கர சாக் ஆகிட்டேன்

"என்னடா மாமா வண்டில ரெண்டு வீல் தான் இருக்கு மீதி ரெண்டுவீலக்காணோம்?"

"நாயே..... இது பைக் ரெண்டுவீல்தான் இருக்கும் "

 "ஓ........ சாரிடா மாமா , வண்டின்னதும் நான் காருன்னு நினைச்சிட்டேன் "


சரின்னு கிளம்பி போனோம் . சரியான வெயில் அடிச்சு ...

"மாமா ஓவரா வெயிலா இருக்கு கொஞ்சம் ஏ.சிய போடு "


அவன் ஒண்ணுமே சொல்லல , வண்டிய ஓரமா நிப்பாடி பின்னாடி திரும்பி பளார்ன்னு என் கன்னத்துல ஒன்னு விட்டான்.

"இனிமே வாயத்தொறந்த மவனே உனக்கு இன்னைக்கு என் கைல தாண்டா சாவு ."

(எனக்கு கொய்ய்ய்ன்னு காதுக்குள்ள ஒரு சத்தம் , பைக்ல ஏ.சி இல்லன்னா வாயில சொல்லலாம்ல .......... என்னா கோவக்காரனா இருக்கான்? .)

கடைசீல இந்த நாயி ரூட்டு மாறிப்போய் , திரும்ப கோவில தேடி, தேடி நாங்க போயி சேர்றப்ப மணி 4.30 .

அங்க எல்லாம் சாப்ட்டு பாத்திரபண்டத்தைஎல்லாம் கழுவி வச்சிட்டு கிளம்பிக்கிட்டு இருந்தாங்க . கடைசில ரசம் சோறு கூட கிடைக்கல . (கடவுள் இருக்கார் சார் )

அப்புறம் என்ன பன்றது ஆத்துல ஓடுன தண்ணியத்தான் குடிச்சோம் .

-  பழைய பதிவிலிருந்து

3 comments:

ராஜி said...

ஆத்து தண்ணியாவது கிடைச்சுதேன்னு சந்தோச படுங்க.

'பரிவை' சே.குமார் said...

ஹா... ஹா...

ஆத்துத் தண்ணியா இல்ல ஆத்துப் பக்கம் விக்கிற தண்ணியா... கரெக்டா சொல்லுங்க அமைச்சரே...

Unknown said...

!!!!!1