எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Tuesday, August 13, 2013

இது நிஜமாக நடந்த விஷயம், அலட்சியம் செய்யாதீர்

கண்டமன்னூர் பக்கத்தில் உள்ள காரமடை கோவிலில் சாமி கும்பிட சென்ற தம்பதியினர் கோவில் வளாகத்தில் இரண்டு மாத குழந்தையை வைத்துவிட்டு சாப்பிட்டு கைகழுவி விட்டு பார்த்த அந்த தம்பதியினர் அதிர்ச்சியில் உறைந்தனர், அங்கு அந்த கோவிலுக்கு சொந்தமான பாம்பும் , அந்த இரண்டு மாத குழந்தையும் பேசிக்கொண்டு இருந்தனர், இவர்கள் வருவதை பார்த்த அந்த பாம்பு இவர்களிடம் 



"இப்பொழுது நீங்கள் பார்த்த விஷயத்தை உங்கள் பிளாக்கில் பதிவாக  போடுங்க, அதை படிப்பவர்கள் வோட்டு, கமண்ட்  போட்டு மறுபதிவிடனும் அப்படி செய்தால்  15 நாட்களில் அவர்கள் குடும்பத்திற்கு நல்லது நடக்கும்" என்று சொல்லி அந்த பாம்பு மறைந்து விட்டது.....

உடனடியாக அந்த தம்பதியினர் பிளாக்கில் பதிவு  போட்டனர், அவர்கள் போட்டு 12 நாட்களில் அவர்களுக்கு சொந்தமான வீட்டின் மீது இருந்த கேஸ் இவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது ......

இதை பதிவிட்ட அசிடன்ட் கமிசினர் ஆறுச்சாமி பிரமோசன் கிடைத்து கான்ஸ்டபில் கந்தசாமியா ஆகிட்டாரு.

இதை படித்து விட்டு அலட்சியபடுத்திய பட்டுகோட்டையை சேர்த்த பரந்தாமன் 2 நாட்களில் ரத்தம் கக்கி செத்தான்.

அலட்சியபடுத்திய குமாரமங்களும் குப்புசாமியோட ரெண்டாவது பொண்டாட்டி எதிர்த்தவீட்டு ஏகாம்பரத்தோட ஓடிப்போயிட்டா 

4 comments:

ராஜி said...

நான் கமெண்ட் போட்டுட்டேன். கொஞ்ச நேரத்துல ஓட்டும் போட்டு போய்டுறேன். ப்ளீஸ் என் மாமியார் சொந்த ஊருல இருக்காங்க. நான் சண்டை போட ஆள் இல்லாம தவிக்குறேன். அவங்க என் ஊருக்கு என் வீட்டுக்கு வந்துட்டா, சண்டை போட வசதியா இருக்கும். எனக்கு இந்த நல்லது மட்டும் நடந்தா போதும்!! அதுக்கு ரெக்கமண்ட் மங்குனி சார்!!

ப.கந்தசாமி said...

இந்தப் பதிவு போட்டவங்களும் பின்னூட்டம் போட்டவங்களும் இன்னும் நூறு வருசத்தில ரத்தம் கக்கி சாவாய்ங்க.

அபயாஅருணா said...

Technology யை நல்லாவே யூஸ் பண்ணியிருப்பது இன்டரஸ்டிங்காக இருக்கு

அமுதா கிருஷ்ணா said...

என்னமோ எதுவோ என்று அரக்க பரக்க படிக்க வந்தா இதுவா விஷயம்.ஆனா அந்த ஃபோட்டோ அய்யோ...