சிவனேன்னு சிஸ்டத்துல சீட்டு விளையாடிக்கிட்டு இருந்தேன், யாரு கண்ணு பட்டுச்சோ டேமேஜர் என்னைய கூப்பிட்டு பேங்க் போயிட்டு வர சொன்னான் .....
(அவ்வ்வ்வ்.....என்னது நாமதானே இந்த கம்பனி ஓனர் இந்த டேமேஜர் நம்மள வேலைவாங்குறான் , எனக்கு வந்த கோவத்துக்கு .....சரி பேங்குல நல்ல பிகர் ஒன்னு இருக்கு அதவாவது பார்த்திட்டு வரலாம்ன்னு கிளம்பினேன் )
பேங்க்ல ஃபார்ம் ஃபில் பண்ண ஒரு பொண்ணுகிட்ட பேனா கேட்டேன் ,
அது என்னைய ஹைவேஸ்ல நேசனல் பெர்மிட் லாரில அடிபட்டு செத்துப்போன சொறிநாய பாக்கிறது மாதிரி பார்த்திட்டு பேனா குடுத்திச்சு ,
(ங்கொய்யாலே 5 ரூபாய் பேனாவுக்கு இவ்ளோ அலட்டலா என்னமோ தங்கத்துல செஞ்ச பேனா மாதிரி ஓவரா பன்னுறாளே )
நானும் குழம்பிப்போய் ஃபார்ம் ஃ பில்பன்னிட்டு பேனாவ திரும்ப குடுத்தேன்,
மறுபடியும் அதே லுக்.....
என்ன கருமம்டா இது , நாம என்ன இப்போ I love you வா சொன்னோம் பேனாதானே கேட்டோம்ன்னு ஏன் இப்படி ஓவரா பில்ட் அப் குடுக்குதுன்னு யோசிச்சு பார்த்தா.....
ஹி,ஹி,ஹி... என் பாகட்டுலேயே என்னோட பேனா இருக்கு...
(நல்ல வேலை காரி, காரி துப்பாம கவுரவமா விட்டாளே )
@ பேங்க் போனா ஓசில தான் பேனா வாங்கணுமின்னு நம்ம சப் கான்சியஸ் மைண்ட்ல செட்டாகிடுச்சு போல ???
@ பேங்க் போனா ஓசில தான் பேனா வாங்கணுமின்னு நம்ம சப் கான்சியஸ் மைண்ட்ல செட்டாகிடுச்சு போல ???
4 comments:
ஹாஹா மங்குனி மங்குனி
//ஹி,ஹி,ஹி... என் பாகட்டுலேயே என்னோட பேனா இருக்கு...//
நல்லா யோசிச்சு சொல்லுங்க.. அது 'உங்க' பேனா தானா ?
சக்கர கட்டி said...
ஹாஹா மங்குனி மங்குனி ///
தேங்க்ஸ் ... :-)))))
Madhavan Srinivasagopalan said...
//ஹி,ஹி,ஹி... என் பாகட்டுலேயே என்னோட பேனா இருக்கு...//
நல்லா யோசிச்சு சொல்லுங்க.. அது 'உங்க' பேனா தானா ?///
ஏன் ? ஏன் ? ஏன் ??? இதுல எதுவும் டபுள் மீனிங் இருக்கா ?? :-)))
Post a Comment