எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Tuesday, May 24, 2011

வாடகைக்கு - புதிதாக கட்டிய சட்டசபை

நம்ம வெங்கட் இருக்காரே சும்மாவே இருக்கிறது இல்லை போன போட்டு புதுசா கட்டுன   சட்டசபைய என்ன செய்யலாம் ஐடியா கேட்டு ஒரே தொந்தரவு ,


 "நானும் பத்து  ஐடியா சொன்னேன் வொர்கவுட் ஆகல அதுனால நீங்கதான் ஏதாவது பண்ணியே ஆகனுமின்னு" 


சட்டசபை கட்டிடத்தோட பொறுப்ப  எந்தலைல  கட்டிட்டு போயிட்டார் , வேற வழியில்லாம நானும் செயல்ல இறங்கிட்டேன் .......பஸ்ட்டு வருமானத்துக்கு ஏதாவது  வழியிருக்கா  பார்ப்போம் ???


வாடகைக்கு - புதிதாக கட்டிய சட்டசபை
301524 சதுர அடிகள் பரப்புள்ள புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடம்  சட்டசபைக்கு (மட்டும்)  வாடகைக்கு விடப்படும் . எந்த மாநில அரசாக இருந்தாலும் பரவாயில்லை . 

* வாடகை Rs 4000/-

* அட்வான்ஸ் - பத்துமாச வாடகை 

* புரோக்கர் கமிசன் - ரெண்டுமாச  மாச வாடகை (ஹி.ஹி.ஹி....)

* காலைல 6 டு 8  , சாயந்திரம் 7 டு 9  இந்த டைம்ல தான் தண்ணி திறந்து விடுவோம்  நீங்க தேவைக்கு ஏற்ப புடிச்சு வச்சிக்கிரனும் 

* அதேமாதிரி கரண்ட் - காலைல 11 டு 12  சாயந்திரம் 4  டு 5  டைம்ல மட்டும்  தான் இருக்கும் . யூனிட்டுக்கு Rs  250 /-  

* பிரதி மாதம் 5 தேதி கரக்ட்டா வாடகைய குடுத்திடனும் 

* சுவத்துல கண்ட இடத்துல ஆணி அடிக்ககூடாது  

* சொந்தக்காவுங்க யாரும் வந்து தங்கக்கூடாது

* நான்-வெஜ் சமைக்க கூடாது 

* நைட்டு 10  மணிக்கு கேட் மூடிடுவோம் 

விருப்பமுடையவர்கள் தொடர்பு  கொள்ளவேண்டிய தொலைபேசி எண் - 99999 99999 .


அப்படி வருமானத்துக்கு செட் ஆகலைன்னா , மக்களுக்கு உபயோகப்படுறது மாதிரி சில ஐடியா இருக்கு அதை வேணா டிரை பண்ணுங்க .....


1  ) அதுக்குள்ளார ஒரு பீச் கட்டி விட்டோமின்னா மக்கள் பகல்ல வெயில் தொந்திரவு இல்லாம ஜாலியா பீச்சுக்கு வந்து போவாங்க .

2  ) இல்லைன்னா அதுக்குள்ளே ஒரு ரெண்டுமூணு புளோர்ல  மொட்டைமாடி கட்டிவிட்டா பசங்க பட்டம் விட வசதியா இருக்கும் .  இந்த பட்ட நூல் ஆக்ஸிடன்ட்   நடக்காது .

3 ) இல்லன்னா ஒரு இன்டோர் ஏர்போர்ட் கட்டலாம் , மழை காலங்கள்ல பிளைட் வந்து போக ஈசியா இருக்கும் . 

4 ) அதுவும் சரியில்லைன்னா  பேசாம எனக்கு எழுதி வச்சிடலாம் . (ஹி.ஹி.ஹி......  இது நல்லா இருக்குல்ல )

டிஸ்கி : இன்னும் ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன

(இந்த பதிவு  சும்மா காமடிக்கு மட்டும் ) 


76 comments:

Anonymous said...

ஹை வட. திங்கள் போஸ்ட் போடறீங்கன்னு திட்டிட்டாங்கனு இன்னைக்கு போட்டீங்களா

Anonymous said...

இருங்க படிச்சுட்டு வறேன். ஹி ஹி

Anonymous said...

//(இந்த பதிவு சும்மா காமடிக்கு மட்டும் ) //
என்னாச்சு சார் உங்களுக்கு? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஹா.......ஹா....... வாடகை ரொம்ப கம்மியா இருக்கே!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

* சுவத்துல கண்ட இடத்துல ஆணி அடிக்ககூடாது ///

நோ இந்த நிபந்தனைய ஏற்கமுடியாது! அப்புறம் தலைவர்களோட படத்த எங்க மாட்டுறது?

ஷர்புதீன் said...

மன்குநியாரே உங்கள பத்தி கொஞ்சம் என்னுடைய பதிவுலக திட்டியிருக்கேன், முடிஞ்சா வந்து பாருங்க

மாணவன் said...

//(இந்த பதிவு சும்மா காமடிக்கு மட்டும் ) //

அப்ப ஓகே.. ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அங்கு மங்குக்கு சமாதி கட்டலாம்

செல்வா said...

/// * காலைல 6 டு 8 , சாயந்திரம் 7 டு 9 இந்த டைம்ல தான் தண்ணி திறந்து விடுவோம் நீங்க தேவைக்கு ஏற்ப புடிச்சு வச்சிக்கிரனும் ////

குளிக்கிற தண்ணி , குடிக்கிற தண்ணின்னு இரண்டு வகையா வருமா ?

செல்வா said...

//அதேமாதிரி கரண்ட் - காலைல 11 டு 12 சாயந்திரம் 4 டு 5 டைம்ல மட்டும் தான் இருக்கும் . யூனிட்டுக்கு Rs 250 /-//

இந்த டைம்ல டிவி பாக்கலாமா ?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

:-)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சொல்லவேயில்ல...!!!

செல்வா said...

//அதுக்குள்ளார ஒரு பீச் கட்டி விட்டோமின்னா மக்கள் பகல்ல வெயில் தொந்திரவு இல்லாம ஜாலியா பீச்சுக்கு வந்து போவாங்க .//

கடல் இருந்தாதானே பீச் வரும் ? அப்படின்னா முதல்ல ஒரு கடல் கட்டுங்க .

Unknown said...

என்னாம்மமமமா வூடு கட்ராங்க...

Chitra said...

அதுவும் சரியில்லைன்னா பேசாம எனக்கு எழுதி வச்சிடலாம் . (ஹி.ஹி.ஹி...... இது நல்லா இருக்குல்ல )

டிஸ்கி : இன்னும் ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன

(இந்த பதிவு சும்மா காமடிக்கு மட்டும் )


......உங்க நேர்மையை பாராட்டணும். பாராட்டு விழாவை அங்கேயே வைக்க மண்டபம் வாடகைக்கு கிடைக்குமா என்று வெங்கட் கேட்கச் சொன்னார். :-)))))

சென்னை பித்தன் said...

’அரசு எந்திரம்’னு சொல்றாங்களே அது எவ்வளவு பெரிசு இருக்கும்? ஒண்ணா,நிறையவா?எந்திரம்னா ரிப்பேர் ஆகும்தானே?அப்படி ரிப்பேர் ஆன எந்திரங்களை போட்டு வைக்கும் கோடானா யூஸ் பண்ணலாமா?

Madhavan Srinivasagopalan said...

கலைஞர் டி.வி ஆபீசுக்கு தானமா தந்துடலாம்.

MANO நாஞ்சில் மனோ said...

பதிவர்கள் வந்து தங்கி போக இலவசம்னு போர்டு போட்டு வைங்கப்பா ஹி ஹி ஹி ஹி....

Sathish said...

aaaahhhhhh... mudiayala

A.R.ராஜகோபாலன் said...

எல்லாம் சரி வாடகைதான் கொஞ்சம் ஜாஸ்தியா தெரியுது
ஆறுமாச அட்வான்ஸ் தானே
புரோக்கர் கமிசன் கூட ஒரு மாசம்தான்
கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க அமைச்சரே

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பதிவர்கள் வந்து தங்கி போக இலவசம்னு போர்டு போட்டு வைங்கப்பா ஹி ஹி ஹி ஹி....
//

அதுவரை..மங்குனி ப்ளாக்கை யூஸ் பண்ணுக்கலாம்..ஹி..ஹி

மொக்கராசா said...

மங்குனி அத லவ்வர்ஸ் பார்க்கா(lovers park) மாத்திடுங்கோ..ஏன்னா நிறைய டேபிள், சேர் எல்லாம் இருக்கு,

டேபிலு சேருக்கு அடியில மறைவா லவ்வு பன்னலாம். உங்களுக்கு தான் ரெம்ப உஸ்புல்லா இருக்கும்...
கூட்டமும் நிரய வரும்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பேசாம அத டாகுடர் பிரகாசுக்கு வாடகைக்கு விட்ரலாம், தொழில் வளர்ச்சியாவது ஏற்படும்.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////* புரோக்கர் கமிசன் - ரெண்டுமாச மாச வாடகை (ஹி.ஹி.ஹி....)////////


நீங்க இந்த புரோக்கரா வேற இருக்கீங்களாண்ணே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நம்ம வெங்கட் இருக்காரே சும்மாவே இருக்கிறது இல்லை போன போட்டு புதுசா கட்டுன சட்டசபைய என்ன செய்யலாம் ஐடியா கேட்டு ஒரே தொந்தரவு ,//////

இந்த பொழப்புக்கு பேசாம பல்லாவரத்துல கல்லு ஒடைக்க போய்டலாம்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////* நைட்டு 10 மணிக்கு கேட் மூடிடுவோம் /////////

இந்த ஒரு கண்டிசனை மட்டும் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்குங்கண்ணே, இல்லேன்னா தொழில் ரொம்ப பாதிக்கும்ணே...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////டிஸ்கி : இன்னும் ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன//////

நம்ம சேலத்து லேகிய டாகுடருங்க 10-15 பேர அப்பிடியே மொத்தமா தூக்கிட்டு வந்து புது சட்டசபை பில்டிங்ல மெகா சித்தவைத்தியசாலா தொடங்கிடலாம், உங்களுக்கும் யூஸ் ஆகும், வருமானமும் நிறைய கிடைக்கும், எப்பூடி.....?

மர்மயோகி said...

//(இந்த பதிவு சும்மா காமடிக்கு மட்டும் ) //

வாட் ஹேப்பண்ட் டு யு மங்க்ஸ்?

வெங்கட் said...

// நம்ம வெங்கட் இருக்காரே சும்மாவே
இருக்கிறது இல்லை போன போட்டு
புதுசா கட்டுன சட்டசபைய என்ன
செய்யலாம் ஐடியா கேட்டு ஒரே தொந்தரவு , //

என் பதிவை பாத்து காப்பி
அடிச்சிட்டு., எனக்கே ஆப்பா..?!!

ஹி., ஹி., ஹி..!!

எங்க கிட்ட ஒரு வேலைய ஒப்படைச்சா
நாலு பேர்கிட்ட ஐடியா கேட்டாவது
அதை கரெக்ட்டா முடிப்போம்ல..!

வெங்கட் said...

//4 ) அதுவும் சரியில்லைன்னா பேசாம
எனக்கு எழுதி வச்சிடலாம் . //

இதுக்கு தான் நான் அப்பவே சொன்னேன்..
பேசாம இந்த Building-ஐ குண்டு வெச்சி
தரைமட்ட மாக்கிடலாம்னு..

Mathuran said...

முதன்முறையாக வருகிறேன்.. பதிவு நகைச்சுவையாக இருக்கிறது...

இனி தொடர்ந்து வருவேன்

இராஜராஜேஸ்வரி said...

எந்த மாநில அரசாக இருந்தாலும் பரவாயில்லை . ????!!!!!!!
சரிதான்

Unknown said...

கலைஞர் சரித்திரத்துல இடம் புடிக்கலாம்னு கட்டுன வசந்தமாளிகைய எல்லாரும் சேர்ந்து கட்டணக்கழிப்பறை ரேஞ்சுக்கு கொண்டு வந்துருவீங்க போல..ம்ம் நடத்துங்க
நடத்துங்க

Anonymous said...

//அங்கு மங்குக்கு சமாதி கட்டலாம்//
:D மங்கு மகால்

//இல்லன்னா ஒரு இன்டோர் ஏர்போர்ட் கட்டலாம் , மழை காலங்கள்ல பிளைட் வந்து போக ஈசியா இருக்கும் . //
சே! சார் நீங்க "இங்க" இருக்க வேண்டிய ஆளே இல்ல :P

// அதுவும் சரியில்லைன்னா பேசாம எனக்கு எழுதி வச்சிடலாம் . (ஹி.ஹி.ஹி...... இது நல்லா இருக்குல்ல )
//
உங்க ப்ளாக்ல அந்த பாப்பா அடிச்சிக்கற மாதிரி கருணா சுத்தியல் வச்சி அடிச்சிகிட்டு செத்துடுவார் ஹா ஹா

belated b'day wishes :)

Unknown said...

http://anbudansaji.blogspot.com/2011/05/blog-post_22.html

NKS.ஹாஜா மைதீன் said...

எனக்கு ஒரு ரெண்டு மாசத்துக்கு வாடகைக்கு கிடைக்குமா அமைச்சரே?

மங்குனி அமைச்சர் said...

அனாமிகா துவாரகன் said...
ஹை வட. திங்கள் போஸ்ட் போடறீங்கன்னு திட்டிட்டாங்கனு இன்னைக்கு போட்டீங்களா ////அட .... எங்கிட்டு போனாலும் கேட்டு போட்டு மடக்கிடுரான்களே ????

மங்குனி அமைச்சர் said...

அனாமிகா துவாரகன் said...
இருங்க படிச்சுட்டு வறேன். ஹி ஹி ///பாவம் , யாரு பெத்த புள்ளையோ ??? அது தலைல அப்படி எழுதி இருக்கும்போது நாம என்ன செய்ய முடியும் ........... ஆனாலும் உங்களுக்கு தைரியம் ஜாஸ்த்தி

மங்குனி அமைச்சர் said...

அனாமிகா துவாரகன் said...
//(இந்த பதிவு சும்மா காமடிக்கு மட்டும் ) //
என்னாச்சு சார் உங்களுக்கு? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் ///ஹி.ஹி.ஹி........ அது கூட சுமா காமெடிக்குதாங்க

மங்குனி அமைச்சர் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ஹா.......ஹா....... வாடகை ரொம்ப கம்மியா இருக்கே! ////எதுனாலும் பேசி தீத்துக்கிரலாம் ..... இன்னும் நூறோ , இருநூறோ கூட குறைச்சுக்கங்க

மங்குனி அமைச்சர் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
* சுவத்துல கண்ட இடத்துல ஆணி அடிக்ககூடாது ///

நோ இந்த நிபந்தனைய ஏற்கமுடியாது! அப்புறம் தலைவர்களோட படத்த எங்க மாட்டுறது? ///மொட்ட மாடில

மங்குனி அமைச்சர் said...

ஷர்புதீன் said...
மன்குநியாரே உங்கள பத்தி கொஞ்சம் என்னுடைய பதிவுலக திட்டியிருக்கேன், முடிஞ்சா வந்து பாருங்க ///ஹி.ஹி.ஹி.......... என்னா தைரியம் ..... இரு வர்றேன்

மங்குனி அமைச்சர் said...

மாணவன் said...
//(இந்த பதிவு சும்மா காமடிக்கு மட்டும் ) //

அப்ப ஓகே.. ஹிஹி ///நல்ல வேலை அதைப் போட்டேன் .... இல்லைன்னா என்ன ஆகிருக்கும் .............. ஆத்தாடி நினைச்சாலே ஈரக்கொலையே நடுங்குது

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அங்கு மங்குக்கு சமாதி கட்டலாம் ///சபாஸ் சரியான முடியு ..... ஆமா அது யாரு மங்கு ???

மங்குனி அமைச்சர் said...

கோமாளி செல்வா said...
/// * காலைல 6 டு 8 , சாயந்திரம் 7 டு 9 இந்த டைம்ல தான் தண்ணி திறந்து விடுவோம் நீங்க தேவைக்கு ஏற்ப புடிச்சு வச்சிக்கிரனும் ////

குளிக்கிற தண்ணி , குடிக்கிற தண்ணின்னு இரண்டு வகையா வருமா ? ///குடிக்கிறதுக்கு தண்ணியெல்லாம் நீங்க உங்க சொந்த செலவுல டாஸ்மாக்க்ள வாங்கிக்கிரனும்

மங்குனி அமைச்சர் said...

கோமாளி செல்வா said...
//அதேமாதிரி கரண்ட் - காலைல 11 டு 12 சாயந்திரம் 4 டு 5 டைம்ல மட்டும் தான் இருக்கும் . யூனிட்டுக்கு Rs 250 /-//

இந்த டைம்ல டிவி பாக்கலாமா ? //நீங்க எப்ப வேணுமின்னாலும் டி.வி. பாக்கலாமே , ஆனா டி.வி யா ஆன் பண்ணி பக்கனுமின்னா கரண்ட் வரணும்

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.... said...
:-)//பார்ரா

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.... said...
சொல்லவேயில்ல...!!! //நீ கேக்கவேயில்ல

மங்குனி அமைச்சர் said...

கோமாளி செல்வா said...
//அதுக்குள்ளார ஒரு பீச் கட்டி விட்டோமின்னா மக்கள் பகல்ல வெயில் தொந்திரவு இல்லாம ஜாலியா பீச்சுக்கு வந்து போவாங்க .//

கடல் இருந்தாதானே பீச் வரும் ? அப்படின்னா முதல்ல ஒரு கடல் கட்டுங்க .///கடல கட்டவா ??? அவ்ளோ பெரிய கயித்துக்கு நான் எங்க போவேன் கோமாளி ???

மங்குனி அமைச்சர் said...

அன்புடன் சஜீ... said...
என்னாம்மமமமா வூடு கட்ராங்க...///அது வூடு இல்லைங்க சட்டசபை , எங்க சொல்லுங்க சட்டசபை

மங்குனி அமைச்சர் said...

Chitra said...
அதுவும் சரியில்லைன்னா பேசாம எனக்கு எழுதி வச்சிடலாம் . (ஹி.ஹி.ஹி...... இது நல்லா இருக்குல்ல )

டிஸ்கி : இன்னும் ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன

(இந்த பதிவு சும்மா காமடிக்கு மட்டும் )


......உங்க நேர்மையை பாராட்டணும். பாராட்டு விழாவை அங்கேயே வைக்க மண்டபம் வாடகைக்கு கிடைக்குமா என்று வெங்கட் கேட்கச் சொன்னார். :-))))) ////ஹி.ஹி.ஹி...... எனக்கு பாராட்டு விழான்ன மண்டபம் ப்ரி

மங்குனி அமைச்சர் said...

சென்னை பித்தன் said...
’அரசு எந்திரம்’னு சொல்றாங்களே அது எவ்வளவு பெரிசு இருக்கும்? ஒண்ணா,நிறையவா?எந்திரம்னா ரிப்பேர் ஆகும்தானே?அப்படி ரிப்பேர் ஆன எந்திரங்களை போட்டு வைக்கும் கோடானா யூஸ் பண்ணலாமா? ///ஆஹா ,அருமையான கேள்வி கேட்டு இருக்கிங்களே ......... யாராவது படிச்சவுங்க இருந்தா பதில் சொல்லுங்கப்பா

மங்குனி அமைச்சர் said...

Madhavan Srinivasagopalan said...
கலைஞர் டி.வி ஆபீசுக்கு தானமா தந்துடலாம். ///என்னது டி.வி ஆபீசா ???? விளங்கிடும்

மங்குனி அமைச்சர் said...

MANO நாஞ்சில் மனோ said...
பதிவர்கள் வந்து தங்கி போக இலவசம்னு போர்டு போட்டு வைங்கப்பா ஹி ஹி ஹி ஹி....///ஹி.ஹி.ஹி...... இது கூட நல்ல ஐடியாதான்

மங்குனி அமைச்சர் said...

Sathishkumar said...
aaaahhhhhh... முடியல ////விடுங்க , விடுங்க ஏன் இவ்ளோ கஷ்ட்டப் படுரிங்க

மங்குனி அமைச்சர் said...

A.R.ராஜகோபாலன் said...
எல்லாம் சரி வாடகைதான் கொஞ்சம் ஜாஸ்தியா தெரியுது
ஆறுமாச அட்வான்ஸ் தானே
புரோக்கர் கமிசன் கூட ஒரு மாசம்தான்
கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க அமைச்சரே ///அதெல்லாம் முடியாது .... நான் பிசினஸ்ல்ல ஸ்ட்ரிக்ட்டு,ஸ்ட்ரிக்ட்டு,ஸ்ட்ரிக்ட்டு..........

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.... said...
பதிவர்கள் வந்து தங்கி போகஇலவசம்னு போர்டு போட்டு வைங்கப்பா ஹி ஹி ஹி ஹி....
//

அதுவரை..மங்குனி ப்ளாக்கை யூஸ் பண்ணுக்கலாம்..ஹி..ஹி ///அடப்பாவிகளா ............... சரி என்னவோ நல்லா இருங்க

மங்குனி அமைச்சர் said...

மொக்கராசா said...
மங்குனி அத லவ்வர்ஸ் பார்க்கா(lovers park) மாத்திடுங்கோ..ஏன்னா நிறைய டேபிள், சேர் எல்லாம் இருக்கு,

டேபிலு சேருக்கு அடியில மறைவா லவ்வு பன்னலாம். உங்களுக்கு தான் ரெம்ப உஸ்புல்லா இருக்கும்...
கூட்டமும் நிரய வரும்...////ஹி.ஹி.ஹி............. விட்டா கடைசில தொழிலையே மாத்திருவிங்க போல :-)))

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
பேசாம அத டாகுடர் பிரகாசுக்கு வாடகைக்கு விட்ரலாம், தொழில் வளர்ச்சியாவது ஏற்படும்.....!///மச்சி அவன் இப்போ ஜெயில்லே தொழில பண்ணிக்கிட்டு இருக்காராம்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////* புரோக்கர் கமிசன் - ரெண்டுமாச மாச வாடகை (ஹி.ஹி.ஹி....)////////


நீங்க இந்த புரோக்கரா வேற இருக்கீங்களாண்ணே? ///

பப்ளிக் , பப்ளிக் .....

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////நம்ம வெங்கட் இருக்காரே சும்மாவே இருக்கிறது இல்லை போன போட்டு புதுசா கட்டுன சட்டசபைய என்ன செய்யலாம் ஐடியா கேட்டு ஒரே தொந்தரவு ,//////

இந்த பொழப்புக்கு பேசாம பல்லாவரத்துல கல்லு ஒடைக்க போய்டலாம்.....////ஹி.ஹி.ஹி.......... அந்தாளு ஏற்கனேவ சேலத்துல கல்லு உடைச்சுக்கிட்டு தான் இருக்காரு

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////* நைட்டு 10 மணிக்கு கேட் மூடிடுவோம் /////////

இந்த ஒரு கண்டிசனை மட்டும் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்குங்கண்ணே, இல்லேன்னா தொழில் ரொம்ப பாதிக்கும்ணே...!///சரி விடு அதுக்கு தனியா பேமென்ட் பேசிக்கிரலாம்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////டிஸ்கி : இன்னும் ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன//////

நம்ம சேலத்து லேகிய டாகுடருங்க 10-15 பேர அப்பிடியே மொத்தமா தூக்கிட்டு வந்து புது சட்டசபை பில்டிங்ல மெகா சித்தவைத்தியசாலா தொடங்கிடலாம், உங்களுக்கும் யூஸ் ஆகும், வருமானமும் நிறைய கிடைக்கும், எப்பூடி.....? ///ஹா,ஹா,ஹா............. அவுக டெயிலி டெயிலி தெருத் தெருவா , ஊர் ஊரா சுத்துரவுக ஒரு இடத்துல எப்படி உட்காருவாக

மங்குனி அமைச்சர் said...

மர்மயோகி said...
//(இந்த பதிவு சும்மா காமடிக்கு மட்டும் ) //

வாட் ஹேப்பண்ட் டு யு மங்க்ஸ்? //ஹி.ஹி.ஹி...... ஒன்னும் இல்லை நமக்கும் காமடி வருதான்னு டிரை பண்ணினேன்

மங்குனி அமைச்சர் said...

வெங்கட் said...
// நம்ம வெங்கட் இருக்காரே சும்மாவே
இருக்கிறது இல்லை போன போட்டு
புதுசா கட்டுன சட்டசபைய என்ன
செய்யலாம் ஐடியா கேட்டு ஒரே தொந்தரவு , //

என் பதிவை பாத்து காப்பி
அடிச்சிட்டு., எனக்கே ஆப்பா..?!!

ஹி., ஹி., ஹி..!!

எங்க கிட்ட ஒரு வேலைய ஒப்படைச்சா
நாலு பேர்கிட்ட ஐடியா கேட்டாவது
அதை கரெக்ட்டா முடிப்போம்ல..! ////ஆமா அந்த பீச்ச விக்க சொன்னனே அது என்ன ஆச்சு ?

மங்குனி அமைச்சர் said...

வெங்கட் said...
//4 ) அதுவும் சரியில்லைன்னா பேசாம
எனக்கு எழுதி வச்சிடலாம் . //

இதுக்கு தான் நான் அப்பவே சொன்னேன்..
பேசாம இந்த Building-ஐ குண்டு வெச்சி
தரைமட்ட மாக்கிடலாம்னு..///ரெண்டும் ஒண்ணுதான் .....குண்டு வாங்க செலவு பண்றதுக்கு எனக்கு எழுதி வைக்கிறதே பெட்டர்

மங்குனி அமைச்சர் said...

மதுரன் said...
முதன்முறையாக வருகிறேன்.. பதிவு நகைச்சுவையாக இருக்கிறது...

இனி தொடர்ந்து வருவேன் ///வாங்க , வாங்க .....மதுரன் ....ரொம்ப நன்றி

மங்குனி அமைச்சர் said...

இராஜராஜேஸ்வரி said...
எந்த மாநில அரசாக இருந்தாலும் பரவாயில்லை . ????!!!!!!!
சரிதான் ///வேனுமின்ன பக்கத்துக்கு நாடாக இருந்தாலும் பரவயில்லைங்க மேடம்

மங்குனி அமைச்சர் said...

கிச்சா said...
கலைஞர் சரித்திரத்துல இடம் புடிக்கலாம்னு கட்டுன வசந்தமாளிகைய எல்லாரும் சேர்ந்து கட்டணக்கழிப்பறை ரேஞ்சுக்கு கொண்டு வந்துருவீங்க போல..ம்ம் நடத்துங்க
நடத்துங்க ///வசந்த மாளிகை .... பாவம் அவரு கைகாசபோட்டு கட்டி பாருங்க இப்போ எவ்ளோ சங்கடப்படவேண்டி இருக்கு

மங்குனி அமைச்சர் said...

Anonymous said...
//அங்கு மங்குக்கு சமாதி கட்டலாம்//
:D மங்கு மகால்

//இல்லன்னா ஒரு இன்டோர் ஏர்போர்ட் கட்டலாம் , மழை காலங்கள்ல பிளைட் வந்து போக ஈசியா இருக்கும் . //
சே! சார் நீங்க "இங்க" இருக்க வேண்டிய ஆளே இல்ல :P

// அதுவும் சரியில்லைன்னா பேசாம எனக்கு எழுதி வச்சிடலாம் . (ஹி.ஹி.ஹி...... இது நல்லா இருக்குல்ல )
//
உங்க ப்ளாக்ல அந்த பாப்பா அடிச்சிக்கற மாதிரி கருணா சுத்தியல் வச்சி அடிச்சிகிட்டு செத்துடுவார் ஹா ஹா

belated b'day wishes :)

நன்றிங்கோ

மங்குனி அமைச்சர் said...

அன்புடன் சஜீ... said...
http://anbudansaji.blogspot.com/2011/05/blog-post_22.ஹ்த்ம்ல் //

எஸ்

மங்குனி அமைச்சர் said...

NKS.ஹாஜா மைதீன் said...
எனக்கு ஒரு ரெண்டு மாசத்துக்கு வாடகைக்கு கிடைக்குமா அமைச்சரே? ////ரைட்டு ..... பஸ்ட்டு அட்வைஸ் குடுங்க

நிரூபன் said...

விருப்பமுடையவர்கள் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண் - 99999 99999//

ஐயா அமைச்சரே! இந்த நம்பருக்குப் போன் பண்ணுகையில், தற்போது ரூ லேட் என்று சொல்லுதே.

சட்ட சபை ஏற்கனவே காலியாகி விட்டதாம்,
இப்போ வாடகைக்கு பணம் பதுக்கும் இரகசிய அறைகள் தான் இருப்பதாக போனில் பேசுறவங்க சொல்லுறாங்க.

நிரூபன் said...

அமைச்சரே, தங்களின் லேட்டஸ் பதிவை அடியேன் தவற விட்டு விட்டேன், ஆனால் வந்து பார்த்தால், காணலையே .

erodethangadurai said...

நீங்கள் ... புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவரா ? - Must Read ... !

http://erodethangadurai.blogspot.com/2011/05/must-read_31.html

சூன்யா said...

உங்க பேருக்கே எழுதி வச்சிடலாம்...

எப்பவாவதுதான் வரேன்.. வந்து முடிஞ்ச வரைக்கு படிக்கிறேன்..
நலமா அமைச்சரே?

www.soonya007.blogspot.com