எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, May 9, 2011

இன்னைக்கு நம்ம ஜாதகத்துல சனி உச்சத்துல இருக்கு போல???

ஒரு வேலைவிசயமா அசோக் லேலண்டு ஆபீசுக்கு போனேங்க . அண்டர் கிரவுண்டுல போயி நம்ம பிஃப்டி பிரசன்ட் கார பார்க் பண்ணிட்டு ரிசப்சனுக்கு போனேன் .

"எஸ் , வாட் கேன் ஐ டூ ஃபார்  யு? "

" மீ  வான்ட்டு மீட்டு ஒன் ஆபீசர் அண்ட் டேக்   ஒன் கையெழுத்து ஃபிரம் தட் ஆபீசர் "  (எங்க கிட்டயே இங்கிலீசா ........ நாங்களும் பேசுவம்ல )

"பிப்த் ப்ளோர் போங்க "

சரின்னு நேரா லிப்ட்டுல அஞ்சாவது மாடிக்கு போனேன் , அங்க ஒரு ஆபீசர்கிட்ட  டீடைல் சொன்னே அவுங்களும் கீழ ரிசப்சன்ல வெயிட்பன்னுங்க ஒரு 20 மினிட்ஸ்ல    கூப்புடுறேன்னு சொன்னாங்க , நானும் கீழ வந்து  வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்

அந்த நேரம் பாத்து நம்ம  பிரபல  பதிவர் வெங்கட்  போன்  பண்ணினாப்ள , ஆஹா.....  இன்கம்மிங் கால் ஓசில  மொக்க போட ஒரு ஆள் கிடச்சிட்டான்னு மொக்கபோட ஆரம்பிச்சேன் ............

ரிசப்சனிஸ்ட் " மிஸ்டர் உங்கள மேல கூப்புடுறாங்க "

போன் பேசிக்கிட்டே(பின்ன கட்பன்னிட்டா மறுபடியும் நான் கால் பண்ணினா துட்டு செலவாகுமே ) லிப்ட்டுல போயி பிப்த் புளோர் பட்டன அமுக்கினேன் , லிப்ட்டு போயி நின்னிச்சு.

நானும் சுவாரசியமா போன்ல பேசிக்கிட்டே   லிப்ட்ட விட்டு இறங்கி பாத்தா .................

ஆபீஸ் செட்டப்பே  மாறி இருக்கு ........... 

"ஐயையோ இங்க இருந்த ஆஃபீசக்காணோம் ,ஆஃபீசக்காணோம் ,ஆஃபீசக்காணோம் ......."

டக்குன்னு  அங்க இருந்த செகுரிடி என்னைய புடிச்சு 

"யோவ் என்னையா கெனத்த காணோம்     கதையா இருக்கு , எந்த ஆஃபீசைய்யா காணோம்? "

" சார் , சார் ஒரு அரைமணி நேரத்துக்கு  முன்னாடி இருந்த ஆபீஸ இப்போ காணோம் சார் மாறிப்போயிருக்கு "

"மொதோ எந்த ஆபீசுயா இருந்தது? "

"அசோக் லேலாண்ட் சேல்ஸ் டிபார்ட்மென்ட் சார் "

"அட நாதாரி நாயே , அது ஃபிப்த்து புளோர்ல இருக்கு "

"என்னது ஃபிப்த்து புளோரா ??? அப்போ இது எந்த புளோறு ? "

" பன்னாட இது தேர்டு புளொரு "

அடங்....ங்கொன்னியா , எவனோ லிப்ட்ட யூஸ் பண்ண பட்டன அழுத்தி இருக்கான் , அதுக்குள்ள வேற லிப்ட்டுவந்து அதுல போயிட்டான் . நான் வந்த லிப்ட்டு தேர்டு புளோருல  நிக்கவும்  போன் பேசுற சுவாரசியத்துல அத கவனிக்காம   இறங்கிருக்கேன் .......அவ்வ்வ்வவ்வ்வ்வவ்

சரின்னு ஃபிப்த்து புளோர் போயி வேலைய முடிச்சிட்டு லிப்ட்டுக்கு வந்தேன். நான் பேஸ்மென்ட் போயி பைக்க எடுக்கணும் ......... லிப்ட்டுல இருந்த கடைசி பட்டன அழுத்தினேன் , லிப்ட்டும் கீழ போயி நின்னிச்சு .

இறங்கி போயி பாத்தா  நான் பைக்க நிப்பாட்டி இருந்த பைக் ஸ்டாண்ட்டையே   காணோம் , என்ன கருமாந்திரம்புடிச்ச பில்டிங்க்டா இது

"அய்யோ..... இங்க இருந்த பைக் ஸ்டாண்ட்ட காணோம் , பைக் ஸ்டாண்ட்ட காணோம், பைக் ஸ்டாண்ட்ட காணோம்.."

அங்க இருந்த செகுரிடி

"யோவ் என்னைய்யா சொல்ற , தெளிவா சொல்லு , பைக்க காணுமா , பைக் ஸ்டாண்ட்ட காணுமா? "

"ஐய்யா என் பைக்கோட பைக் ஸ்டாண்ட்ட காணோம்யா "

"ஏய் பொறம்போக்கு , ஒழுங்கா சொல்லு பைக்க எங்க நிப்பாட்டுன/? "

"சார் , இங்க கூட ஒரு ஈ .பி ரூம் இருந்துச்சு , அதுக்கு பக்கத்துல இருக்க ஸ்டாண்ட்டல தான் வண்டிய நிப்பாட்டினேன்"

"அடிங் ...... நன்னாறிப் பயலே , அது இதுக்கு மொதோ புளோருடா  , மேல போயி பாரு "

அடப்பாவிகளா , பார்க்கிங்க்கு அண்டர் கிரவுண்டுல ரெண்டு புளோர் கட்டி வச்சிருக்கானுக .........


இன்னைக்கு நம்ம ஜாதகத்துல சனி உச்சத்துல இருக்கு போல ......69 comments:

Anonymous said...

எஸ் ...,மங்கு ..,நான் இன்னிக்கி லீவ் !!! உன்ன நான் இன்னிக்கி கதற கதற ..,க ........,டிக்க போறேன்

Chitra said...

"யோவ் என்னைய்யா சொல்ற , தெளிவா சொல்லு , பைக்க காணுமா , பைக் ஸ்டாண்ட்ட காணுமா? "

"ஐய்யா என் பைக்கோட பைக் ஸ்டாண்ட்ட காணோம்யா "


..... :-))))))

மங்குனி அமைச்சர் said...

பனங்காட்டு நரி said...

எஸ் ...,மங்கு ..,நான் இன்னிக்கி லீவ் !!! உன்ன நான் இன்னிக்கி கதற கதற ..,க ........,டிக்க போறேன்/////

பாவம் உனக்கும் உன்னிக்கு ஜாதகத்துல ஏதோ பிசகு போல

மங்குனி அமைச்சர் said...

Chitra said...

"யோவ் என்னைய்யா சொல்ற , தெளிவா சொல்லு , பைக்க காணுமா , பைக் ஸ்டாண்ட்ட காணுமா? "

"ஐய்யா என் பைக்கோட பைக் ஸ்டாண்ட்ட காணோம்யா "


..... :-))))))////

நன்றிங்கோ மேடம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

விளக்கெண்ணை முதல்ல போய் ஒன்னு ரெண்டு மூணு படிச்சிட்டு வா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உனக்கு ஜாதகம் வேற இருக்கா. பெரிய ஆளுதான்யா நீ

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

விளக்கெண்ணை முதல்ல போய் ஒன்னு ரெண்டு மூணு படிச்சிட்டு வா////


ஒன்னு........ ,
ரெண்டு .......,
மூணு .......

படிச்சிட்டேன் ...... வேணுமின்னா எக்ஸாம் வையி

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உனக்கு ஜாதகம் வேற இருக்கா. பெரிய ஆளுதான்யா நீ ////


அட அப்போ ஜாதகம் இருந்தா பெரியா ஆளா ???


அதான் நீ வளரவே இல்லையா ..... முதல்ல பர்மா பஜார் போயி ஒரு ஜாதகம் வாங்கு

சாருஸ்ரீராஜ் said...

நல்லா இருக்கு ..

மங்குனி அமைச்சர் said...

சாருஸ்ரீராஜ் said...

நல்லா இருக்கு ..///

ஹி.ஹி.ஹி....... நன்றி

Unknown said...

சனி உங்களுக்கு இல்லை அமைச்சரே!, இந்தப் பதிவைப் படிக்கும் எங்களுக்கு!

லிப்ட் வேலை செய்யாம இருந்திருந்தா!!!

பெம்மு குட்டி said...

ஒவ்வொரு வாரமும் உங்களுக்கு 4 அல்லது 5 ஃபாலோயர்ஸ் கிடைக்காங்களா?

ரஜினிகாந்த்க்கு அப்புறம் அதிக பேமஸான ஆள் மங்குனி அமைச்சரை நான் ஃபாலோ செய்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

மாலுமி said...

இதுக்கு தான் சொல்லுறது....அக்னி நச்சத்திரம் டைம்மா பாத்து வெளிய சுத்தாதே....
இப்போ பாரு மண்ட கொழம்பி போயி எப்படி திரியற............
எத்தன டைம் சொல்லுறது கூட பன்னாட ரமேசு, டம்மி தீவரவாதி நரிய கூட்டிட்டு போகணும்

அமுதா கிருஷ்ணா said...

நீங்க தெளிவா 50% கார் ஸ்டாண்டை காணோம் என்றல்லவா தேடி இருக்கணும்.

♔ℜockzs ℜajesℌ♔™ said...

யோவ் மங்கு , நான் ஒன்னு சொல்லவா?
பைக் ஓட்ட கத்துகிட்ட நீ இன்னும் லிப்ட் ஓட்ட கத்துகலையா யோவ் , முதல்ல போய் நல்ல லிப்ட் ஓட்டுற ட்ரிவிங் ஸ்கூல்லா பார்த்து லிப்ட் ஓட்ட கத்துகிட்டு லைசென்ஸ் எடுத்துட்டு அப்புறமா லிப்ட் ஓட்டு அத விட்டுட்டு அத காணாம் , இத கானாம்ன்னு சும்மா சவுண்ட் குடுத்துக்கிட்டு . . .

குறையொன்றுமில்லை. said...

இதுலேந்து என்ன தெரியுதுன்னா போன்பேசிகிட்டே லிப்ட்ல போகக்கூடாதுன்னு.

♔ℜockzs ℜajesℌ♔™ said...

அப்புறம் இன்னொரு விஷியம் , லிப்ட் ல நீ தனிய போய் இருக்க அதான் இப்படி பயந்து இருக்க மங்கு , இனிமே நீ லிப்ட் ல தனியா போகாதே , ஏதாவது பிகர் போற லிப்ட்ஆ பார்த்து டிரவேல் பண்ணு . . .
அப்பத்தான் நீங்க பிகர் பார்த்த சந்தோசத்துல எந்த ப்ளோர்க்கு போகன்னுன்னே மறந்துடுவே , என்ன வேலைக்கு வந்தேன்னே மறந்துடுவ அப்புறம் அந்த பிகர் follow பண்ண ஆரம்பிச்சுடுவ , அப்புறம் என்ன? நீ ப்ளோர்ர தேட போரைய ஒன்ன? ஒரு பிரச்சன்னையும் இல்ல
என்ஜாய் . . . .

செல்வா said...

அண்ணா இதுல உங்க தப்பு எங்கயுமே இல்ல! எல்லாமே உங்களை ஏமாத்திட்டாங்க. நீங்க அஞ்சாவது புளோர் போகும்போது மூனாவது புளோர எடுத்து அங்க வச்சிட்டாங்க.

அதே மாதிரி பைக் ஸ்டாண்ட் பைக்ல தானே இருக்கும் ? இது கூட தெரியாம ?!

மொக்கராசா said...

// மீ வான்ட்டு மீட்டு ஒன் ஆபீசர் அண்ட் டேக் ஒன் கையெழுத்து ஃபிரம் தட் ஆபீசர்

பாருடா துரை இங்கிலிபீஸு எல்லாம் பேசுது.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே இப்போ எத்தனாவது புளோர்லண்ணே இருக்கீங்க?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

"அடிங் ...... நன்னாறிப் பயலே , அது இதுக்கு மொதோ புளோருடா , மேல போயி பாரு "

அடப்பாவிகளா , பார்க்கிங்க்கு அண்டர் கிரவுண்டுல ரெண்டு புளோர் கட்டி வச்சிருக்கானுக .........///

ஹி ஹி ஹி ஹி ஹி ...........!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஓ சாரி, டங் ஸ்லிப்பு, சுமால் மிஸ்டேக், அண்ணே இப்போ எத்தனாவது ரவுண்ட்லண்ணே இருக்கீங்க?

ஆயிஷா said...

வாட்சமேனிடம் இத்தனை திட்டும் வாங்கணும் என்று இருக்கு. நல்ல ரசனையோடு எழுதி இருக்கீர்கள்
வாழ்த்துகள்.

Anonymous said...

மங்கு சார்.. மாறி மாறி செக்யுரிட்டி கிட்ட திட்டு வாங்கினாலும் அசராம பல்பு வாங்குற உங்க தைரியத்த பாராட்டுறேன்.

Anonymous said...

//மங்கு சார்.. மாறி மாறி செக்யுரிட்டி கிட்ட திட்டு வாங்கினாலும் அசராம பல்பு வாங்குற உங்க தைரியத்த பாராட்டுறேன்.///
நானும் பாராட்டுறேன். ஹி ஹி.

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா அசத்தல் மக்கா....

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் பத்தாவது ஓட்டு நாந்தேன் ஹி ஹி...

மாணவன் said...

:)

சிநேகிதன் அக்பர் said...

ஃபிப்டி % கார நிறுத்திட்டு பைக்க தேடுனா எப்படி கிடைக்கும் ? #டவுட்டு

வெங்கட் said...

மக்களே..! இந்த கொடுமையை படிக்கிற
உங்களுக்கே இப்படி இருந்தா.. அன்னிக்கு
இதை எல்லாம் லைவ் கமெண்ட்டரி கேட்ட
எனக்கு எப்படி இருக்கும்.!?

வெங்கட் said...

அப்படியே போன் பேசிட்டே
பக்கத்து ஆபீசுக்கு போயி

" இங்க இருந்த அசோக் லேலண்டு
ஆஃபீசக்காணோம், அசோக் லேலண்டு
ஆஃபீசக்காணோம்.." சவுண்ட் விட்டு...

அந்த செக்யூரிட்டி கழுத்தை பிடிச்சு
தள்ளி விட்டானே.. அதை எங்கே காணோம்..?!
சென்சாரா..? இமேஜ் ப்ராப்ளமா..?

Gayathri said...

சுத்தமா தாங்கவே முடியல நல்லா சிரிச்சேன் ஹீ ஹீ ஹீ

Mohamed Faaique said...

வெங்கட் சாரோட கொஞ்ச நேரம் பேசினதுக்கே சனி உச்சதுக்கு வந்துடுச்சா....?

Mohamed Faaique said...
This comment has been removed by the author.
ஷர்புதீன் said...

ச்சச்ச்ச்ஸ் தாங்களே சாமியோவ்

Unknown said...

//அடப்பாவிகளா , பார்க்கிங்க்கு அண்டர் கிரவுண்டுல ரெண்டு புளோர் கட்டி வச்சிருக்கானுக //
இவிய்ங்க எப்பவுமே இப்படித்தாங்க கோக்குமாக்கு பேர்வழிங்க
:-)kalakkal

மங்குனி அமைச்சர் said...

கே.ஆர்.பி.செந்தில் said...
சனி உங்களுக்கு இல்லை அமைச்சரே!, இந்தப் பதிவைப் படிக்கும் எங்களுக்கு!///ஹி.ஹி.ஹி........ அப்போ உங்களுக்கு சனி தோஷம் தானா ????

///லிப்ட் வேலை செய்யாம இருந்திருந்தா!!!////ஐய்யய்யோ ......... அப்போ நான் அண்டர் கிரவுடுலேயே கிடக்க வேண்டியதுதானா

மங்குனி அமைச்சர் said...

பெம்மு குட்டி said...
ஒவ்வொரு வாரமும் உங்களுக்கு 4 அல்லது 5 ஃபாலோயர்ஸ் கிடைக்காங்களா?

ரஜினிகாந்த்க்கு அப்புறம் அதிக பேமஸான ஆள் மங்குனி அமைச்சரை நான் ஃபாலோ செய்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். ///நன்றிங்க பெம்மு குட்டி ..... அது சரி பொம்மு குட்டி கேள்வி பட்டு இருக்கேன் அதுஎன்ன பெம்மு குட்டி ??? # டவுட்டு

மங்குனி அமைச்சர் said...

மாலுமி said...
இதுக்கு தான் சொல்லுறது....அக்னி நச்சத்திரம் டைம்மா பாத்து வெளிய சுத்தாதே....
இப்போ பாரு மண்ட கொழம்பி போயி எப்படி திரியற............
எத்தன டைம் சொல்லுறது கூட பன்னாட ரமேசு, டம்மி தீவரவாதி நரிய கூட்டிட்டு போகணும் ///ஏன் நான் திட்டு வாங்கிரதொட வர்றது உனக்கு புடிக்கலையா ? இவனுகள கூட்டிட்டு போயி அடிவேற வாங்கனுமா ???

என்ன ஒரு நல்ல எண்ணம் .........

மங்குனி அமைச்சர் said...

அமுதா கிருஷ்ணா said...
நீங்க தெளிவா 50% கார் ஸ்டாண்டை காணோம் என்றல்லவா தேடி இருக்கணும். ///ஹி.ஹி.ஹி........... நம்மளால ஒரு செகுரிடி சூசைட் பண்ணிக்க கூடாதுங்கிற ஒரு நல்ல எண்ணம் தான் மேடம்

மங்குனி அமைச்சர் said...

♔ℜockzs ℜajesℌ♔™ said...
யோவ் மங்கு , நான் ஒன்னு சொல்லவா?
பைக் ஓட்ட கத்துகிட்ட நீ இன்னும் லிப்ட் ஓட்ட கத்துகலையா யோவ் , முதல்ல போய் நல்ல லிப்ட் ஓட்டுற ட்ரிவிங் ஸ்கூல்லா பார்த்து லிப்ட் ஓட்ட கத்துகிட்டு லைசென்ஸ் எடுத்துட்டு அப்புறமா லிப்ட் ஓட்டு அத விட்டுட்டு அத காணாம் , இத கானாம்ன்னு சும்மா சவுண்ட் குடுத்துக்கிட்டு . . .///அடடா ........ ராஜேஷ் இந்த விஷயம் எனக்கு முன்னாடியே தெரியாம போச்சே.......? விடுங்க உங்களுக்கு தெரிஞ்சு யாராவது லிப்ட்டு டிரைவர் இருந்தா சொல்லுங்க நான் கத்துக்கிற வரைக்கும் அவர யூஸ் பண்ணிக்கிர்றேன்

மங்குனி அமைச்சர் said...

Lakshmi said...
இதுலேந்து என்ன தெரியுதுன்னா போன்பேசிகிட்டே லிப்ட்ல போகக்கூடாதுன்னு.///ஆமாங்க மேடம் , கட் பண்ணிட்டா அப்புறம் கால் பண்ணினா நம்ம காசு போயிடுமேன்னு கஞ்சத்தனம் பட்டத்துக்கு எப்படியெல்லாம் நடக்குது பாருங்க

மங்குனி அமைச்சர் said...

♔ℜockzs ℜajesℌ♔™ said...
அப்புறம் இன்னொரு விஷியம் , லிப்ட் ல நீ தனிய போய் இருக்க அதான் இப்படி பயந்து இருக்க மங்கு , இனிமே நீ லிப்ட் ல தனியா போகாதே , ஏதாவது பிகர் போற லிப்ட்ஆ பார்த்து டிரவேல் பண்ணு . . .
அப்பத்தான் நீங்க பிகர் பார்த்த சந்தோசத்துல எந்த ப்ளோர்க்கு போகன்னுன்னே மறந்துடுவே , என்ன வேலைக்கு வந்தேன்னே மறந்துடுவ அப்புறம் அந்த பிகர் follow பண்ண ஆரம்பிச்சுடுவ , அப்புறம் என்ன? நீ ப்ளோர்ர தேட போரைய ஒன்ன? ஒரு பிரச்சன்னையும் இல்ல
என்ஜாய் . . . .////ஹி.ஹி.ஹி........... அப்புறம் அதானே நடந்தது .....பைக்க எடுத்திட்டு ஒரு பிகர பாலோ பண்ணி ஆபீசுக்கு வராம நேரா காஞ்சிபுரம் போயிட்டேன்

மங்குனி அமைச்சர் said...

கோமாளி செல்வா said...
அண்ணா இதுல உங்க தப்பு எங்கயுமே இல்ல! எல்லாமே உங்களை ஏமாத்திட்டாங்க. நீங்க அஞ்சாவது புளோர் போகும்போது மூனாவது புளோர எடுத்து அங்க வச்சிட்டாங்க.///துரோகிகள்

///அதே மாதிரி பைக் ஸ்டாண்ட் பைக்ல தானே இருக்கும் ? இது கூட தெரியாம ?!///அப்போ பஸ் ஸ்டான்ட் பஸ்ஸிலே இருக்குமா # டவுட்

மங்குனி அமைச்சர் said...

மொக்கராசா said...
// மீ வான்ட்டு மீட்டு ஒன் ஆபீசர் அண்ட் டேக் ஒன் கையெழுத்து ஃபிரம் தட் ஆபீசர்

பாருடா துரை இங்கிலிபீஸு எல்லாம் பேசுது.....///ஹி.ஹி.ஹி........... நாங்க இங்கிலீசுல பாட்டே பாடுவோம் ...கேட்டு இருக்கிங்களா

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
அண்ணே இப்போ எத்தனாவது புளோர்லண்ணே இருக்கீங்க? ///தெரியலையே பன்னி....... நாம ஒன்னு சொன்னா , வேற ஒன்னு நடக்குது

மங்குனி அமைச்சர் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
"அடிங் ...... நன்னாறிப் பயலே , அது இதுக்கு மொதோ புளோருடா , மேல போயி பாரு "

அடப்பாவிகளா , பார்க்கிங்க்கு அண்டர் கிரவுண்டுல ரெண்டு புளோர் கட்டி வச்சிருக்கானுக .........///

ஹி ஹி ஹி ஹி ஹி ...........!!! ////நீங்களாவது என்னோட கஷ்டத்த புடிஞ்சுக்கிட்டின்களே ????? நன்றி ஓட்ட வடை சார்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஓ சாரி, டங் ஸ்லிப்பு, சுமால் மிஸ்டேக், அண்ணே இப்போ எத்தனாவது ரவுண்ட்லண்ணே இருக்கீங்க?///டங் சிலிப் ஆகுற அளவுக்கு ரவுண்டு போயிடுச்சா ???? ஹி.ஹி.ஹி...........சேம் பிளட்

மங்குனி அமைச்சர் said...

ஆயிஷா அபுல். said...
வாட்சமேனிடம் இத்தனை திட்டும் வாங்கணும் என்று இருக்கு. நல்ல ரசனையோடு எழுதி இருக்கீர்கள்
வாழ்த்துகள்.////நன்றிங்க மேடம்

மங்குனி அமைச்சர் said...

அடிச்சான் பாரு 50

மங்குனி அமைச்சர் said...

இந்திரா said...
மங்கு சார்.. மாறி மாறி செக்யுரிட்டி கிட்ட திட்டு வாங்கினாலும் அசராம பல்பு வாங்குற உங்க தைரியத்த பாராட்டுறேன்.///நாமெல்லாம் யாரு ??? விடுவமா ??? தாமஸ் ஆல்வா எடிசன் பல்ப்பு கண்டு புடிச்சதே நமக்காததான்

மங்குனி அமைச்சர் said...

அனாமிகா துவாரகன் said...
//மங்கு சார்.. மாறி மாறி செக்யுரிட்டி கிட்ட திட்டு வாங்கினாலும் அசராம பல்பு வாங்குற உங்க தைரியத்த பாராட்டுறேன்.///
நானும் பாராட்டுறேன். ஹி ஹி.///அட ஆமாங்க ..... நானும் பாராட்ட மறந்துட்டேன் ....... மங்குனி அமைச்சரை நானும் பாராட்டுகிறேன்

மங்குனி அமைச்சர் said...

MANO நாஞ்சில் மனோ said...
ஹா ஹா ஹா ஹா அசத்தல் மக்கா....///நன்றி மனோ சார்

மங்குனி அமைச்சர் said...

MANO நாஞ்சில் மனோ said...
தமிழ்மணம் பத்தாவது ஓட்டு நாந்தேன் ஹி ஹி...///தமிழ் மனம் எலேச்சன்ல நிக்குதா சார் ???? பாருங்க யாரும் சொல்லவே இல்லை ..... தெரிஞ்சிருந்தா நானும் ஒட்டு போட்டு இருப்பேன்ஹி.ஹி.ஹி.......... நன்றி சார்

மங்குனி அமைச்சர் said...

மாணவன் said...
:)///அட எவ்ளோ பெரிய கமண்ட்டு ...................:))

மங்குனி அமைச்சர் said...

சிநேகிதன் அக்பர் said...
ஃபிப்டி % கார நிறுத்திட்டு பைக்க தேடுனா எப்படி கிடைக்கும் ? #டவுட்டு ///ஹி.ஹி.ஹி............. எனக்கு அதே டவுட் ...... இந்த மங்கு ஒரு லூசுப்பய சா

மங்குனி அமைச்சர் said...

வெங்கட் said...
மக்களே..! இந்த கொடுமையை படிக்கிற
உங்களுக்கே இப்படி இருந்தா.. அன்னிக்கு
இதை எல்லாம் லைவ் கமெண்ட்டரி கேட்ட
எனக்கு எப்படி இருக்கும்.!? ///ஹி.ஹி.ஹி......... அப்போ உனக்கு அன்னைக்கு சனி உச்சத்துல தான் இருந்திருக்கு

மங்குனி அமைச்சர் said...

வெங்கட் said...
அப்படியே போன் பேசிட்டே
பக்கத்து ஆபீசுக்கு போயி

" இங்க இருந்த அசோக் லேலண்டு
ஆஃபீசக்காணோம், அசோக் லேலண்டு
ஆஃபீசக்காணோம்.." சவுண்ட் விட்டு...

அந்த செக்யூரிட்டி கழுத்தை பிடிச்சு
தள்ளி விட்டானே.. அதை எங்கே காணோம்..?!
சென்சாரா..? இமேஜ் ப்ராப்ளமா..? ///ஹி.ஹி.ஹி...... இமேஜா நமக்கா ???? சும்மா காமடி பண்ணாதிங்க வெங்கட்

மங்குனி அமைச்சர் said...

Gayathri said...
சுத்தமா தாங்கவே முடியல நல்லா சிரிச்சேன் ஹீ ஹீ ஹீ /நன்றிங்க காயத்திரி மேடம்

மங்குனி அமைச்சர் said...

Mohamed Faaique said...
வெங்கட் சாரோட கொஞ்ச நேரம் பேசினதுக்கே சனி உச்சதுக்கு வந்துடுச்சா....? ///என்கிட்ட் பேசின வெங்கட்டுக்கு என்ன ஆச்சுன்னு நீங்க கேக்கவே இல்லையே ???

மங்குனி அமைச்சர் said...

Comment deleted
This post has been removed by the author.///என்ன கெட்ட வார்த்தையில திட்டுநின்களா ?????

மங்குனி அமைச்சர் said...

ஷர்புதீன் said...
ச்சச்ச்ச்ஸ் தாங்களே சாமியோவ் / ///ஆமாங்க சார் வெய்யில் கொஞ்சம் அதிகம்தான்

மங்குனி அமைச்சர் said...

கிச்சா said...
//அடப்பாவிகளா , பார்க்கிங்க்கு அண்டர் கிரவுண்டுல ரெண்டு புளோர் கட்டி வச்சிருக்கானுக //
இவிய்ங்க எப்பவுமே இப்படித்தாங்க கோக்குமாக்கு பேர்வழிங்க
:-)கலக்கல் ///ஆமாங்க கிச்சா , சரியான லூசுப்பசங்க ...... இவனுக கட்டி வச்சிட்டு நம்மள லூசுன்னு சொல்றானுக

Asiya Omar said...

இப்ப எனக்கு என்ன தோணுதுன்னால் ஐந்து ஆறு மாடி லிஃப்ட் இல்லாம உங்களை ஏற இறங்க வச்சிருக்கனும்,ரொம்ப காமெடியாக இருந்திருக்கும்...

அருண் பிரசாத் said...

மங்குனி....
பைக் ஸ்டேண்ட் காணோம்...
பைக் ஸ்டேண்ட் காணோம்...னு
கத்துறீங்களே பைக்கோட Center stand காணோமா? Side Stand காணோமானு தெளிவா சொல்லுய்யா

கூடல் பாலா said...

நான் எஸ்கே ............................ப்

சண்முககுமார் said...

தங்கள் பதிவை இணைக்க புதிய தளம்
இணையவாசிகள் தங்கள் பதிவை இணைத்து பயன் பெறுங்கள்

http://tamilthirati.corank.com

சேக்காளி said...

//ஹி.ஹி.ஹி........... அப்புறம் அதானே நடந்தது .....பைக்க எடுத்திட்டு ஒரு பிகர பாலோ பண்ணி ஆபீசுக்கு வராம நேரா காஞ்சிபுரம் போயிட்டேன்//

காஞ்சிவரத்துல நின்னுகிட்டு ஆபிஸ காணல்லன்னு தேடுனது நீதானா?

பெம்மு குட்டி said...

எங்க தாத்தா (அம்மாவோட அப்பா)வோட பெயர் பெருமாள், அதுதான் என்னேட ஒரு பகுதி பெயரும். அதை அப்படியே கூப்பிட முடியாதுங்கிறதுனால சுருங்கி போய் பெம்மு வா மாறிடுச்சி.

வீட்டில் கடைசிங்கிறதுனால குட்டியும் ஒட்டிக்கிச்சி. அவ்வளவுதான்

:-))))))))))))))