எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Showing posts with label மீள்பதிவு. Show all posts
Showing posts with label மீள்பதிவு. Show all posts

Monday, May 16, 2011

பெட்ரோல் விலை ஜஸ்ட்டு Rs. 67.22 தாங்க

பெட்ரோல் விலை ஜஸ்ட்டு  Rs. 67.22  தாங்க  ...........லிட்டருக்கு 5 ரூபாய்தான் கூட்டி இருக்காங்க ,   இதுக்கு போயி மக்கள்  ரொம்ப பீலிங்க்ஸ் காட்டுறாங்க ..... பாருங்க நான் போன வருசமே எப்படி டெக்னிக் பண்ணி சமாளிச்சு இருக்கேன்னு .......

***************

ஆகா பெட்ரோல் விலை மறுபடியும் ஏறிடுச்சு    , இனி நம்மக்கு பெட்ரோல் போட்டு கட்டுபடியாகாது , என்ன பன்னலாம்னு மெரிடியன்ல ரூம் போட்டு யோசிச்சப்ப ஒரு அருமையான ஐடியா தோணிச்சு ,

"பேசாம நாம் ஏன் ஒரு குதிரை வாங்ககூடாது "

குட் , உடனே நம்ம ஏரியாவுல இருக்க சூபர் மார்கெட் போய், குதிரை இருக்கா?  என்னா விலைன்னு கேட்டேன் , அதுக்கு டக்குன் அந்த சூபர் மார்கெட் ஓனர் வேலைய ரிசைன் பன்னிட்டு போயிட்டாரு .

டுஸ்கி: ஒன்னு இருக்குன்னு சொல்லனும் , இல்ல இல்லைன்னு சொல்லனும். என்னா கோபகாரனா இருக்கானுக .

விசாரிச்சப்ப குதிரைல்லாம் சூபர் மார்கெட்ல விக்க மாட்டாங்கன்னு சொன்னாக , சரி எங்க கிடைக்கும்னு விசாரிச்சா, பீச்சுல கிடைக்கும்னு சொன்னாக , சரின்னு பீச்சுக்கு போய் பாத்தா அங்க நாலுபேரு காக்கி டிரஸ் போட்டு குதிரை ஓட்டிகிட்டு இருந்தாக ,


அண்ணே இந்த குதிர என்னா விலைன்னு தாங்க கேட்டேன் அவரு என்னா கோபத்தில இருந்தாரோ , நேரா குதிரையோட போய் கடல்ல குதிச்சு தற்கொல பண்ணிகிட்டார் .

என்னான்னு கேட்டா அவரு போலிசாம் குதிரை கவுருமென்டு குதிரையாம் , அங்க இருந்து சத்தம் இல்லாம எஸ்கேப் ஆகி கூகுள் தேடினால குதிர சவுதி அரேபியாவுல கிடைக்கும்னு இருந்துச்சு , சரின்னு பக்கத்து வீட்டு காரரிடம் passport கடன் வாங்கிட்டு சவுதி அராபியாவுல போய் ஒரு குதிரை வாங்கிட்டு வந்தேன்


மறுநாள் காலைல பந்தாவா ஆபிசுக்கு குதிரைல போனேன் , போகும்போது ஒன்னும் பிரச்னை இல்லை , ஆனா வரும் போது வழக்கம் போல நாலு டிராபிக் போலீஸ் நம்மள சுத்துபோட்டாக. என்னான்னு கேட்டேன் , மறுபடியும் ஆர்சி புக் , இன்சூரன்ஸ் , டிரைவிங் லைசென்ஸ் , எங்க குதிரைக்கு ஹெட் லைட்டு , அப்படி இப்படின்னு ...கேட்டாக , என்னாது ? குதிரைக்கு ஆர்சி புக் , இன்சூரன்ஸ் , டிரைவிங் லைசென்ஸ்ஆ....... நான் டென்சனாகி குதிரைய அவுகல்டே குடுத்துட்டு பொடி நடையா வூடுபோய் சேந்தேன்.


டிஸ்கி:அன்னைக்கு நைட் புல்லா தூங்காம கொசு வத்தி சுருள சுத்திகிட்டே யோசிச்சதுல ஒரு சூபர் ஐடியா கிடைச்சு , இப்ப அத தான் நான் பாலோ பன்றேன், அது எப்படின்னு தெரியணும்னா கொஞ்சம் கீழ போங்க 

??
?
?
?
?
?
?

?
?

?
கிஸ்கி : நல்லா பிராக்டிஸ் பன்னிட்டு அப்புறம் தான் ஓட்டனும்,....சரியா .......

?
?
?

?

?
?
?
?





பட்டாப்பட்டி said......
ஆமா இவரு பெரிய்ய லாடு லபக்கு தாசு , மீள்பதிவு போடுராராம்....மீள்பதிவு ...... போடா போயி  வேலை ம@#% பாரு ..

Saturday, October 16, 2010

சிரிப்பு போலிசு (மீள்பதிவு )

இதை வழங்குவோர்
லீவு நாளில் புது பதிவு போட சோம்பேறித்தனம் பட்டுகிட்டு ஆவ்வ்வ்வ்வ்................ கொட்டாவி விட்டுக் கொண்டே காப்பி பேஸ்ட் செய்து மீள்பதிவு போட்டு அரைத்தூக்கம் தூங்குவோர் சங்கம் .

------@@@@@------


முஸ்கி : இதை படித்து விட்டு யாராவது கொலை அல்லது தற்கொலை முயற்ச்சியில் ஈடுபட்டால் அதற்க்கு நிர்வாகம் பொறுப்பல்ல .....


ஆபிசில இருந்து டீ சாப்டலாம்னு கிளம்பினேம்பா வெளிய பார்த்தா ஒரே டிராபிக் சரின்னு அப்படி இப்படின்னு வளைஞ்சு நெளிஞ்சு சிக்னல தாண்டினா ஒரு 20 டிராபிக் போலீஸ் , அதுல நாலு என்னசுத்துபோட்டு ஓரமா கூட்டிட்டு போனாக.

போலிசு: யோவ் லைசென்ஸ் என்கையா ?

நம்ம : சார் மரியாதையா கேளுங்க ?

போலிசு: சரிங்க பப்ளிக் லைசென்ஸ் எங்க பப்ளிக் ?

நம்ம : லைசென்ஸ் இந்தாங்க

போலிசு : ஆர்சி புக் எங்க சார் ?

நம்ம : ஆர்சி புக் இந்தாங்க

போலிசு : இன்சூரன்ஸ் எங்க சார் ?

நம்ம : இன்சூரன்ஸ் இந்தாங்க

போலிசு : சார்ஜென்ட் சார் , இவரு எல்லாம் கரக்டா வச்சுருக்காரு சார்ஜென்ட் : எல்லாம் கரக்டா இருக்கா !!!!!!!!! ஏன்யா ஓவர் ஸ்பீட்ல வந்த ?

நம்ம : என்னது ஓவர் ஸ்பீட ? சார் நான் நடந்து வந்தேன்

சார்ஜென்ட் : அப்போ பைக எங்கய ?

நம்ம : பைக் ஆபிசுல இருக்கு சார்

சார்ஜன்ட் : பைக் இல்லையா ? லைசென்சு , ஆர்சி புக், இன்சூரன்ஸ் எல்லாம் எடுத்திட்டு வந்திருக்க பைக் ஏன் எடுத்திட்டு வரல முன்னூர் ரூபா பைன் கட்டு
!!!!!!!
நம்ம : அய்யய்யோ சார்

சார்ஜென்ட் : இங்க கட்னா முண்ணூறு கோர்ட்ல கட்னா ஆயிரம் , இங்க கட்டுறியா இல்ல கோர்ட்ல கட்டுறியா ?

நம்ம : ???????????????????????????

ஏற்கனவே கெரகம் சயில்லைன்னு நம்ம பட்டாப்பட்டி ஜோசியர் சொல்லியிருக்கார்
சரின்னு முன்னூர் ரூபா fine -அ கட்டிட்டு டீ கூட குடிக்காம ஆபீஸ் வந்துட்டேன்.

டுஸ்கி: இவ்வளவு தூரம் வந்துட்டிங்களா !!! உயிர்மேல பயம் இல்லையா ? ஹா.. ஹா.. ஹா.. ..காட் மஸ்ட் டு பீ கிரேசி................



ஆபீஸ்ல மூடே சரியில்ல சரின்னு லீவ போட்டு நைட் (????????) சோ சினிமாக்கு கிளம்பிட்டேன்.படம் பாத்திட்டு மிட்நைட் திரும்பி வரும்போது பாத்தா தேனாம்பேட்ட சிக்னல்ல மறுபடியும் டிராபிக் போலிஸ் வழக்கம் போல நாலு பேர் நம்மள மடக்குனாக . நாம தான் இப்ப பைக் -கும் எடுத்திட்டு வந்திருக்கமேனு தெனாவெட்டா வண்டிய நிறுத்தினேன் .



போலிசு: லைசென்ஸ், ஆர்சி புக் , இன்சூரன்ஸ் காமிங்க

நம்ம : இந்தாங்க சார்

போலிசு : சார்ஜென்ட் சார் , இவரு எல்லாம் கரக்டா வச்சுருக்காரு

சார்ஜென்ட்: எங்க சார் போயிடு வர்ரிங்க ?

நம்ம : படத்துக்கு சார்

சார்ஜென்ட்: என்னா படம் ?

நம்ம : அந்த கொடுமைய ஏன் சார் கேட்குறிங்க ?

சார்ஜென்ட்: சரி, சரி ...........எந்த தியேட்டர் ?

நம்ம : சத்யம் சார்

சார்ஜென்ட்: எங்க டிக்கெட்ட காமிங்க ?

நம்ம : இந்தாங்க சார்

சார்ஜென்ட்: என்ன சார் இது ?

நம்ம : சார் டிக்கெட் சார்

சார்ஜென்ட்: இந்த டிக்கெட் யாருக்கு வேணும் , நான் கேட்டது IPL டிக்கெட் ?

நம்ம : சார் ..............................................

சார்ஜென்ட்: அது தான் எல்லா டிவி-லையும் விளம்பரம் போடுறாங்களே சார் IPL டிக்கெட் தான் பெரிய டிக்கெட்-ன்னு?


நம்ம : *****&&&&&^^^^^%%%%%$$$$$#####@@@@@!!!!!!

சார்ஜென்ட்: IPL டிக்கெட்-அ காட்றீகளா இல்ல முன்னூர் ரூபா பைன் கட்ரீகளா ?

நம்ம : !!!@@@###$$$%%%^^^&&&***((()))



(அப்புறம் நம்மள குற்றாலம் கூப்பிட்டு போய் ரெண்டு வாரம் ட்ரீட்மென்ட் எடுத்தா எங்க அப்பா சொன்னார்)

டிஸ்கி : சென்னைல நைட் சோ படம் பார்த்திட்டு வந்தா படத்தோட டிக்கெட்ட வெரிபிகேசனுக்கு போலீஸ் கேட்பாங்கோ ......