எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Saturday, October 9, 2010

உங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா? (தொடர் பதிவு )

முஸ்கி : நண்பர்களே நேற்று சந்தோஷ்பக்கங்கள் இந்த பதிவை போட்டு இருந்தார் , "இந்த விஷயத்தை உங்களால் முடிந்தால் நாலு பேருக்கு பகிருங்க" அப்படின்னு கேட்டு இருந்தார் , ரொம்ப நல்ல விஷயம் எனவே நண்பர்களே உங்களால் முடிந்த அளவுக்கு அனைவரும் குறைந்த பட்சம் ஒரே ஒரு நாளாவது உங்கள் பிளாக்கில் இந்த பதிவை போடுங்க நிறைய பேருக்கு ரீச் ஆகும் . விருப்பமுள்ளவர்கள் அனைவரும் இந்த தொடர்பதிவை தொடரலாம் .

For referance: http://santhoshpakkangal.blogspot.com/2010/10/blog-post.html

உங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா?

உங்க கிட்ட நீங்க உபயோகப்படுத்தாத பொருட்கள் ஆடைகள், பொம்மைகள் இருக்கா? அதை தூக்கி எறியவும் மனசு இல்லாமல் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிங்களா? அதை எங்களிடம் குடுங்க நாங்க அதை ஏழை எளியவர்களுக்கு குடுக்குறோம்.


CTC - Chennai Trekking Club என்று ஒரு இயக்கம் இருக்கிறது.. நீங்க மேற் சொன்ன விஷயங்களை எங்களிடம் அளிக்க விரும்பினால் இந்த சுட்டியில் (https://spreadsheets1.google.com/viewform?hl=en&formkey=dEU1d2gzVnNVVTBMR3Z2eGNiMS1RaVE6MQ#gid=0) உள்ள Excel Formஜ நிரப்பினால் எங்க தன்னார்வலர் ஒருவர் உங்களை தொடர்பு கொண்டு உங்களை சந்தித்து அதை பெற்றுக்கொள்வார். இப்போதைக்கு இது சென்னையில் உள்ளவர்களுக்கு மட்டுமே.. உங்களால் நீங்க அளிக்க இருக்கும் பொருட்களை சென்னைக்கு அனுப்ப முடிந்தால் நீங்க கூட எங்களை தொடர்பு கொள்ளலாம்.

முத்துலட்சுமி அக்கா சொன்ன மாதிரி இது ஆதரவற்ற முதியோர்களுக்கும், குழந்தைகளுக்கும் குடுக்க போறாங்க..எனவே தயவு செய்து திரும்ப உபயோகப்படுத்தும் நிலையில் இருந்தால் மட்டும் குடுங்க.. கிழிந்த துணிகளை எல்லாம் குடுக்காதிங்க பிளீஸ்..

பொதுவா நான் ஓட்டு போடுங்க, கமெண்டு போடுங்கன்னு கேக்க மாட்டேன். இது ஒரு நல்ல விஷயம் நாலு பேருக்கு தெரிந்தால் கூட நாலு ஜந்து பேருக்கு உதவி செய்யலாம். இந்த விஷயத்தை உங்களால் முடிந்தால் நாலு பேருக்கு பகிருங்க.
(நன்றி :சந்தோஷ்பக்கங்கள் )

-------------------
டிஸ்கி :உதவி பண்றேன்னு பெருமைக்காக நிறைய பேர் கிழிந்த , உடைந்த பொருட்களை தருகிறார்கள் , உங்களை யாரும் கட்டாயப் படுத்தவில்லை , கொடுக்கபோகும் துணிகளை நன்றாக துவைத்து , அயன் பன்னி உபயோகிக்கும் நிலையில் கொடுங்கள் இல்லையென்றால் சும்மா இருங்கள் யாரும் உங்களை குறைசொல்ல மாட்டார்கள். . அனைவரும் கட்டாயம் ஓட்டுப் போடுங்க , அது நிறைய பேரை சென்றடைய உதவும் .

நண்பர்களே பிளீஸ் இந்த பதிவில் கும்மி வேண்டாம்.


39 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கண்டிப்பா செய்யுறோம் தல

சௌந்தர் said...

அட டா கும்மி அடிக்கலாம் வந்தோம் நல்ல பதிவு டிஸ்கி சூப்பர்

இம்சைஅரசன் பாபு.. said...

கண்டிப்பாக இதை எல்லோரும் செய்யணும்

இம்சைஅரசன் பாபு.. said...

எலேய் ரமேஷ் மங்குனி சொன்னத செய்.......
நீ சென்னை ல தான இருக்க ..........நான் ஊர் நாட்டான் .......நீ நம்ம மங்கிநிகிட்ட அட்ரெஸ் வாங்கிட்டு பொய் செய்திரு ..........நல்ல விஷத்தை உடனே செய் தள்ளி போடதே

ஆர்வா said...

நான் எனக்கு தெரிஞ்ச நண்பர்கள் கிட்ட இதை பகிர்ந்துகிட்டேன். ஒரு உபயோகமான பதிவு நண்பா.. எங்கள் வீட்டுக்கு அருகில் மாதம் ஒருமுறை ஆஸிரமத்தில் இருந்து வருபவர்களிடம் நாங்கள் பழைய துணிகளை கொடுத்துவிடுவோம். மிகவும் உபயோகமான பதிவு.. இதைப்படிப்பவர்கள் தயவுசெய்து மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்

elamthenral said...

ரொம்ப உபயோகமுள்ள பதிவு.. நானும் என்னால் முடிந்தவரை என் நண்பர்களிடம் இதை பகிர்ந்துக்கொள்வேன்...அவர்களுக்கு கண்டிப்பாக எங்களால் முடிந்த உதவிகள் போய் சேரும்...

n.d. shan said...

நல்ல முயற்ச்சி, இங்கு நாங்கள் ஒவ்வொரு வருட நோன்பிலும் ( ரமலான் மாதம்) கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம்

Chitra said...

நல்ல பதிவு.... பலரை சென்றடைய வேண்டும். பலரும் உதவ முன் வர வேண்டும்.

பவள சங்கரி said...

நல்ல பதிவுங்க.....ஓட்டு உண்டு....

கருடன் said...

மிக நல்ல பதிவு.... பலரை சென்றடைய வேண்டும். பலரும் உதவ முன் வர வேண்டும்.....

செல்வா said...

நான் நேத்து சந்தோஷ் அண்ணா ப்ளாக்ல படிச்சேன் ...
கூகுள் பஸ்ல ஷேர் பண்ணிருந்தேன்..
நல்ல முயற்சி அண்ணா ..

Starjan (ஸ்டார்ஜன்) said...

கண்டிப்பா செய்யுறோம்..
நல்ல பகிர்வு.

எஸ்.கே said...

ஏற்கனவே செய்துள்ளோம். மீண்டும் செய்கிறோம்!

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல பகிர்வு,நண்பர்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்

priyamudanprabu said...

உபயோகமான பதிவு
எல்ல்ல்லா ஒட்டும் போட்டாச்சு

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல பகிர்வு.

ஜெயந்த் கிருஷ்ணா said...

nalla pakirvu... nanpare..

மாதேவி said...

நல்ல பகிர்வு.

செய்துகிட்டு இருக்கிறோம்.

Anonymous said...

நல்ல பதிவு.

Unknown said...

மங்குனி உங்க பிறப்பிலேயே செஞ்ச நல்ல வேலை இதுவாதான் இருக்கும்.கால காட்டுயா? நீங்க இருக்கும் திசையபாத்து வேண்டிகிட்டேன்.வாழ்த்துக்கள்.

erodethangadurai said...

அகில உலக வடிவேலு ரசிகர் மன்ற தலைவரான நான் இத்தனை நாள் உங்களை எப்படி மிஸ் பண்ணினேன் ? சாரி தலைவா ....!

karthikkumar said...

வோட்டும் போட்டுவிட்டேன்

sakthi said...

நல்ல பகிர்வு

VISA said...

Voted

Asiya Omar said...

அருமையான பகிர்வுக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் said...

கண்டிப்பாக இதை எல்லோரும் செய்யணும்.

NaSo said...

பகிர்வுக்கு நன்றி அமைச்சரே!

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

Nalla visayanga.. pakiruvukku nanri.. :-)

Jaleela Kamal said...

நல்ல பகிர்வு அமைச்சரே.
நாங்களும் செய்து கொண்டு தான் இருக்கோம்.

ராஜ நடராஜன் said...

பயன் தரும் பதிவு.அப்பப்ப இந்த மாதிரியும் இடுகை போடுங்க!வாழ்த்துக்கள்.

Santhosh said...

சூப்பர் அருமையான விஷயம் பண்ணி இருக்கிங்க அமைச்சரே.. ரொம்ப நன்றி....

எம் அப்துல் காதர் said...

நண்பா! நீங்கள் கேட்டுக் கொண்டபடி, எங்களின் வலைப்
பூவிலும் பதிவு போட்டு இருக்கிறோம்.
நீங்களும் வந்து ஒட்டு போடுங்க!!

அன்புடன்
எம் அப்துல் காதர்
"ஆஹா பக்கங்கள்"

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

Pannalaam Manguni ...,miga nallapathivu

'பரிவை' சே.குமார் said...

ரொம்ப உபயோகமுள்ள பதிவு.

பருப்பு (a) Phantom Mohan said...

தரமான பதிவத்தான்யா போட்டிருக்க.

நல்ல விசயம்.

மொள்ளமாரித்தனம், முடிச்சவிக்கித்தனம், தெள்ளவாரித்தனம் பண்றவன் எல்லாம், கொஞ்சமாது புண்ணியம் தேட உதவி பண்ணுங்க.

இந்தியாவில் இருக்கும் நண்பர்களிடம் சொல்லி என் பங்கு உதவியை செய்கிறேன்.

Aathira mullai said...

உங்க மீசை மட்டும் இல்ல எழுத்தும் கொஞ்சம் பயமுறுத்த நடுங்கிகிட்டே உள்ளே வந்தேன்.
எவ்வளவு நல்ல வேலையெல்லாம் செஞ்சுகிட்டு இருக்கீக. வீர பாண்டிய கட்ட பொம்மன் மாதிரி..(சும்மா..விளையாட்டுக்கு)

உண்மையிலே பயனுள்ள தொண்டு..தொடர்க.. நானும் பகிர்கிறேன் தெரிந்தவர்களுக்கு..

என தோட்டத்தில் உலவியதற்கும், தொடர்ந்து உலவ இருப்பதற்கும், ஒரு மலர்ச்செடி நட்டு வந்தமைக்கும் மிக்க நன்றி..

ஆனந்தி.. said...

நல்ல பதிவு !! இங்கயும் ஆஸ்ரமத்தில் இருந்து வந்து வாங்கிட்டு போவாங்க..
(சுனாமி நேரத்தில் எங்க ஏரியாவில் நிறைய அரிசி,எண்ணெய்,மளிகை பொருட்கள்,துணிகள் எல்லாம் கொடுத்து விட்டோம்..ஆனால் அந்த நேரத்தில் அவங்களுக்கு துணிகளை விட பணம் மற்றும் சாப்பாடு பொருள்கள் தான் தேவையை இருந்தது போலும்..கொண்டு போயி கொடுத்த காலனி செயலாளர்கள் சொன்னாங்க..நாகபட்டினம் என்ட்ரன்ஸ் இல் கொண்டு போன துணியெல்லாம் சிதரிகிடக்கு ரோடு பூராவும் னு..அப்போ கொஞ்சம் கஷ்டமா இருந்தது..) very essential and most priority needs எதுன்னு அப்போ புரிஞ்சது..)

சாருஸ்ரீராஜ் said...

நல்ல பதிவு. இங்கேயும் ஆஸ்ரமத்தில் இருந்து வந்து கலெக்ட் பண்ணிக்குவாங்க , பசங்கள் படிக்கும் பள்ளியிலும் வருடத்திற்கு ஒரு முறை வாங்கிக்கொள்வார்கள்.

மங்குனி அமைச்சர் said...

இந்த பதிவிற்கு ஒட்டு , மற்றும் பின்னூட்டம் இட்ட அனைத்து பதிவர்களுக்கும் நன்றி