எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Friday, October 29, 2010

சுயசொறிதல் - பரிணாம வளர்ச்சி

நேற்று இரவு முதல் சென்னையில் பருவமழை ஆரம்பித்து தொடர்ந்து மழை , வழக்கம் போல் மழை மற்றும் சாக்கடை நீர் நிறைந்த , மேடுபள்ளமான , குண்டும் குழியுமான சென்னை இன்று காலை அனைத்து மக்களின் அவசர கதியான இயந்திர வாழ்க்கையின் அசுர வேகத்தை மட்டுப் படுத்தி மக்களை பொறுமையாகவும் , நிதானமாகவும் இயங்க ஆண்டி முதல் அரசர் வரை அனைவருக்கும் உத்தரவிட்டது.

இது மழையின் உத்தரவா? இல்லை குண்டும் குழியுமான சாலையின் உத்தரவா? இல்லை அந்த சாலைகளை சரிசெய்யாமல் விட்ட அதிகாரிகள் உத்தரவா? அல்லது இந்தியாவை வல்லரசாக மாற்றிக்கொண்டு இருப்பதால் இந்த வேலைகளை கவனிக்க முடியாத அரசியல் வாதிகளின் உத்தரவா?

ஏதோ ஒன்னு , ஆனால் ஆப்பு மட்டும் எல்லா தரப்பு மக்களுக்கும் , இதில் ஏழை , நடுத்தர வர்க்கம் , பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் மழையில் நனைந்த தமிழ் நாட்டின் தலைநகரம் சென்னை ஜனநாயக மற்றும் கம்யுனிச கொள்கைகளுடன் தனது கடமையை செவ்வனே செய்து கொண்டுள்ளது .

சென்னையின் மையப் பகுதியில் இப்படி என்றால் புறநகர் பகுதிகளை பற்றி கொஞ்சம் யோசித்து பாருங்கள்? சென்னையை சுற்றி உள்ள அனைத்து நீர் நிலைக்கும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மழை நீர் வடிந்து செல்ல வழியில்லாம புறநகர் பகுதிகளை சுற்றிவளைத்து மிதக்க வைக்கிறது .

வற்றிய நிலையில் உள்ள ஏரியில் வீடுகட்டி விட்டு மழைகாலங்களில் வீட்டிருக்குள் தண்ணீர் வருகிறது என்று புலம்பும் பைத்தியக்கார மக்களுக்கு அந்த புறம்போக்கு இடங்களை விற்ற அரசியல் வாதிகள் அறிவாளிகளா ? இல்லை அந்த வீடுகளுக்கு மின்சார இணைப்பும் , குடிநீரி இணைப்பும் குடுத்துவிட்டு இப்பொழுது வந்து அந்த வீடுகளை ஆக்கிரமிப்புகள் என்று கூறி அகற்றும் அதிகாரிகள் அறிவாளிகளா ?

மின்சார இணைப்பும் , குடிநீரி இணைப்பும் வழங்கும் அரசு அதிகாரிகளுக்கு அந்த இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நீர் நிலைகள் என்று இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கும் போது தெரியவில்லையா ?

தென்னை மரத்தில் உள்ள இளநீர் முற்றி கீழே உள்ள பலா மரத்தில் உள்ள கனிந்த பலா பழத்தின் மேல் விழுந்து அந்த பலா பழத்தை உடைத்து அதற்கு கீழ் மாமரத்தில் விழுந்து மாங்கனிகளை உதிர்த்து பின் அதற்க்கு கீழே உள்ள வாழை மரத்தின் மீது விழுந்த வாழைத்தாரை சிதைத்து அதற்குபின் தரையில் அந்த தென்னகாய் விழுந்தது என்று நமது நாட்டின் இயற்க்கை வளத்தை பற்றி பாடிவைத்துள்ளனர் .

ஆனால் இப்பொழுது அந்த நியதி மாறி கீழிருந்து மேலாக ஒரு மத்திய அல்லது மாநில அரசு அலுவலகத்தில் உள்ள பியூன் வாங்கும் லஞ்சத்தின் பங்கு அது அப்படியே பயணப்பட்டு கிளார்க் , அதிகாரி , உதவி ஆய்வாளர் , ஆய்வாளர் , கலக்டர் , மந்திரி அப்புறம் தலைமை என்று பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது .

அட அதெல்லாம் விடுங்க சாமி , சென்ற ஆண்டின் தீபாவளி மதுபான வருமானமான 250 கோடியை உயர்த்தி இந்த ஆண்டிக்கு 300 கோடியாக வரம்பு நிர்ணயித்துள்ள நமது அரசு கொள்கைகள் வெற்றிபெற பொது மக்களாகிய நாம் நமது ஜனநாயக கடைமையை செய்து அரசின் இந்த முயற்சி வெற்றி பெற உறுதுணையாக இருப்போம்.

ஜெய் ஹிந்த்

டிஸ்கி : பாவம் யாரும் பெத்த புள்ளையோ ஒரு நாள் மழைக்கே இப்படி மனநிலை பாதிக்கப்பட்டு கிடக்குறான்.123 comments:

NaSo said...

me the first

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

எப்பயா. நான் வெச்ச தலைப்ப எனக்கே தெரியாம சுட்ட?

NaSo said...

//
டிஸ்கி : பாவம் யாரும் பெத்த புள்ளையோ ஒரு நாள் மழைக்கே இப்படி மனநிலை பாதிக்கப்பட்டு கிடக்குறான்.
//

ஒரு நாள் மழைக்கே இப்படியா?

karthikkumar said...

சுயசொரிதல்னா என்ன அய்யா

சாருஸ்ரீராஜ் said...

நல்லா இருக்கு

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

எப்பயா. நான் வெச்ச தலைப்ப எனக்கே தெரியாம சுட்ட?
////

அடப்பாவி உன் ப்ளாக் பார்க்கலையே ? நீ அடுத்தவாரம்தான் கிடவேட்டுன்னு சொன்ன ????

Chitra said...

என்னய்யா பதிவர், நான்? சுயசொறிதல்னா என்னன்னு தெரியாம தமிழ் அகராதியை புரட்டிக்கிட்டு இருக்கிறேன்.... அவ்வ்வ்.....

NaSo said...

//அட அதெல்லாம் விடுங்க சாமி , சென்ற ஆண்டின் தீபாவளி மதுபான வருமானமான 250 கோடியை உயத்தி இந்த ஆண்டிக்கு 300 கோடியாக வரம்பு நிர்ணயித்துள்ள நமது அரசு கொள்கைகள் வெற்றிபெற போது மக்களாகிய நாம் நமது ஜனநாயக கடைமையை செய்து அரசின் இந்த முயற்சி வெற்றி பெற உறுதுணையாக இருப்போம். //

அமைச்சரே மற்றதெல்லாம் விடுங்க. இதற்கு நாமும் உறுதுணையாய் இருப்போம்.

மர்மயோகி said...

மங்குனி மப்பு அடிக்காமல் எழுதிய பதிவாக இருக்கும்..குட் மங்குனி..

அருண் பிரசாத் said...

மங்குனி அமைச்சர் சீரியஸ் அமைச்சராகிடார்... இவர் இந்தியாவில் வாழ தகுதி இல்லாதவர் என்று தீர்ப்பளிக்கபடுகிறது

Arun Prasath said...

இப்போ தான் உங்க பதிவ பத்தி அருண் பிரசாத் அண்ணே சொன்னாரு, ஆமா வந்ததும் ரொம்ப யோசிக்க வெச்சுடீங்களே! ஒன்னும் இல்ல சுயசொறிதல்னா என்னாங்க?

Praveenkumar said...

மங்குனியாரே..! மிகவும் சிந்திக்க வைத்த நியாயமான கேள்வி கணைகள். தொடரட்டும் ”குடி”மகன் பற்று. வந்தே மாதரம்.

மனோ சாமிநாதன் said...

"தென்னை மரத்தில் உள்ள இளநீர் முற்றி கீழே உள்ள பலா மரத்தில் உள்ள கனிந்த பலா பழத்தின் மேல் விழுந்து அந்த பலா பழத்தை உடைத்து அதற்கு கீழ் மாமரத்தில் விழுந்து மாங்கனிகளை உதிர்த்து பின் அதற்க்கு கீழே உள்ள வாழை மரத்தின் மீது விழுந்த வாழைத்தாரை சிதைத்து அதற்குபின் தரையில் அந்த தென்னகாய் விழுந்தது என்று நமது நாட்டின் இயற்க்கை வளத்தை பற்றி பாடிவைத்துள்ளனர் .

ஆனால் இப்பொழுது அந்த நியதி மாறி கீழிருந்து மேலாக ஒரு மத்திய அல்லது மாநில அரசு அலுவலகத்தில் உள்ள பியூன் வாங்கும் லஞ்சத்தின் பங்கு அது அப்படியே பயப்பட்டு கிளார்க் , அதிகாரி , உதவி ஆய்வாளர் , ஆய்வாளர் , கலக்டர் , மந்திரி அப்புறம் தலைமை என்று பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது ."

அருமையான கருத்து!

Madhavan Srinivasagopalan said...

என்ன ஆச்சு மன்குனிக்கு.. சொம்சம் சீரியசான மேட்டரா தெரியுது ?

Katz said...

ஆடு மழையில நனைஞ்சிடுச்சு. துலுக்கி தலைய ஆட்டிருச்சுன்னா, ஒரே வெட்டு.

மங்குனி அமைச்சர் said...

நாகராஜசோழன் MA said...

me the first
////

எனக்கு கொஞ்சம் வடை குடுய்யா ???

மங்குனி அமைச்சர் said...

நாகராஜசோழன் MA said...

//
டிஸ்கி : பாவம் யாரும் பெத்த புள்ளையோ ஒரு நாள் மழைக்கே இப்படி மனநிலை பாதிக்கப்பட்டு கிடக்குறான்.
//

ஒரு நாள் மழைக்கே இப்படியா?////

திடீர்ன்னு கிளைமேட் மாறினா ஒத்துக்க மாட்டேங்குது நாகராஜசோழன்

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...

சுயசொரிதல்னா என்ன அய்யா///

யாரப்பாத்து என்னா கேள்வி கேட்டிங்க ? இதுகெல்லாம் பதில் தெரிஞ்சா நான் மூணாப்பு பாஸ்பன்னிருப்பன்ல

மங்குனி அமைச்சர் said...

சாருஸ்ரீராஜ் said...

நல்லா இருக்கு////

ரொம்ப நன்றி சாருஸ்ரீராஜ்

Unknown said...

नीरे ओरु अमेचर थाणे चेंनैयाई उम्माल साडी सिया मुदियाधा ?
மன்னிக்கவும்
அமைச்சருக்கு ஹிந்தி தெரியும் என்று நினைத்துவிட்டேன் .அதன் அர்த்தம்
நீரே ஒரு அமைச்சர் தானே சென்னையை உம்மால் சரி செய்ய முடியாதா?
மறுபடியும் மன்னிக்கவும்
நீர் ஒரு மங்குனி அமைச்சர் என்பதை மறந்துவிட்டேன்
அது என்னையா சுயசொறிதல் நானும் மண்டையை சொரிந்து யோசித்து பார்த்துவிட்டேன் ஒன்றும் புலப்படவில்லையே

ரோஸ்விக் said...

ஆமா, மழைக்கெல்லாமா மனநிலை பாதிக்கும்...? நானும் ஒரு இதுக்குத்தான் கேட்டேன்.

செல்வா said...

அதுக்குள்ளவா திருந்திட்டீங்க ..? ஆனா பலாப்பழ கதை நல்லா இருந்துச்சு ..!!

மங்குனி அமைச்சர் said...

Chitra said...

என்னய்யா பதிவர், நான்? சுயசொறிதல்னா என்னன்னு தெரியாம தமிழ் அகராதியை புரட்டிக்கிட்டு இருக்கிறேன்.... அவ்வ்வ்.....
///

மேடம் மேடம் , கண்டுபுடிச்ச உடனே எனக்கு ஒரு மெயில் அனுப்புங்க மேடம்

மங்குனி அமைச்சர் said...

நாகராஜசோழன் MA said...

//அட அதெல்லாம் விடுங்க சாமி , சென்ற ஆண்டின் தீபாவளி மதுபான வருமானமான 250 கோடியை உயத்தி இந்த ஆண்டிக்கு 300 கோடியாக வரம்பு நிர்ணயித்துள்ள நமது அரசு கொள்கைகள் வெற்றிபெற போது மக்களாகிய நாம் நமது ஜனநாயக கடைமையை செய்து அரசின் இந்த முயற்சி வெற்றி பெற உறுதுணையாக இருப்போம். //

அமைச்சரே மற்றதெல்லாம் விடுங்க. இதற்கு நாமும் உறுதுணையாய் இருப்போம்.////

நாட்டுப் பற்றுள்ள நாகராஜசோழன் வாழ்க , வாருங்கள் இப்பொழுதே செயலில் இறங்குவோம்

மங்குனி அமைச்சர் said...

மர்மயோகி said...

மங்குனி மப்பு அடிக்காமல் எழுதிய பதிவாக இருக்கும்..குட் மங்குனி..////

கைல காசில்ல மர்மயோகி அதான் இந்த புலம்பல் , யாராவது பார்சல் அனுப்புங்க

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

மங்குனி அமைச்சர் சீரியஸ் அமைச்சராகிடார்... இவர் இந்தியாவில் வாழ தகுதி இல்லாதவர் என்று தீர்ப்பளிக்கபடுகிறது////

இன்னும் ஜாமீனே கிடைக்கல , அதுக்குள்ளே தீர்ப்பா ????

மங்குனி அமைச்சர் said...

arunmaddy said...

இப்போ தான் உங்க பதிவ பத்தி அருண் பிரசாத் அண்ணே சொன்னாரு, ஆமா வந்ததும் ரொம்ப யோசிக்க வெச்சுடீங்களே! ஒன்னும் இல்ல சுயசொறிதல்னா என்னாங்க?///

வாருங்கள் arunmaddy நன்றி

மங்குனி அமைச்சர் said...

பிரவின்குமார் said...

மங்குனியாரே..! மிகவும் சிந்திக்க வைத்த நியாயமான கேள்வி கணைகள். தொடரட்டும் ”குடி”மகன் பற்று. வந்தே மாதரம்.///

ரொம்ப, ரொம்ப நன்றி பிரவின்குமார் சார்

மங்குனி அமைச்சர் said...

மனோ சாமிநாதன் said...

"தென்னை மரத்தில் உள்ள இளநீர் முற்றி கீழே உள்ள பலா மரத்தில் உள்ள கனிந்த பலா பழத்தின் மேல் விழுந்து அந்த பலா பழத்தை உடைத்து அதற்கு கீழ் மாமரத்தில் விழுந்து மாங்கனிகளை உதிர்த்து பின் அதற்க்கு கீழே உள்ள வாழை மரத்தின் மீது விழுந்த வாழைத்தாரை சிதைத்து அதற்குபின் தரையில் அந்த தென்னகாய் விழுந்தது என்று நமது நாட்டின் இயற்க்கை வளத்தை பற்றி பாடிவைத்துள்ளனர் .

ஆனால் இப்பொழுது அந்த நியதி மாறி கீழிருந்து மேலாக ஒரு மத்திய அல்லது மாநில அரசு அலுவலகத்தில் உள்ள பியூன் வாங்கும் லஞ்சத்தின் பங்கு அது அப்படியே பயப்பட்டு கிளார்க் , அதிகாரி , உதவி ஆய்வாளர் , ஆய்வாளர் , கலக்டர் , மந்திரி அப்புறம் தலைமை என்று பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது ."

அருமையான கருத்து!///

ரொம்ப நன்றி மனோ சாமிநாதன் மேடம்

மங்குனி அமைச்சர் said...

Madhavan said...

என்ன ஆச்சு மன்குனிக்கு.. சொம்சம் சீரியசான மேட்டரா தெரியுது ?////

ஆமாங்க சார் , டக்குன்னு கிளைமேட் மாரிப்போச்சா நமக்கு லைட்டா ஒத்துக்க மாட்டேங்குது

மங்குனி அமைச்சர் said...

Katz said...

ஆடு மழையில நனைஞ்சிடுச்சு. துலுக்கி தலைய ஆட்டிருச்சுன்னா, ஒரே வெட்டு.//////

ஹி.ஹி.ஹி......... ஆடு இன்னைக்கு ஹெல்மட் போட்டு வந்ததால தலை நினையல

மங்குனி அமைச்சர் said...

நா.மணிவண்ணன் said...

नीरे ओरु अमेचर थाणे चेंनैयाई उम्माल साडी सिया मुदियाधा ?
மன்னிக்கவும்
அமைச்சருக்கு ஹிந்தி தெரியும் என்று நினைத்துவிட்டேன் .அதன் அர்த்தம்
நீரே ஒரு அமைச்சர் தானே சென்னையை உம்மால் சரி செய்ய முடியாதா?
மறுபடியும் மன்னிக்கவும்
நீர் ஒரு மங்குனி அமைச்சர் என்பதை மறந்துவிட்டேன்
அது என்னையா சுயசொறிதல் நானும் மண்டையை சொரிந்து யோசித்து பார்த்துவிட்டேன் ஒன்றும் புலப்படவில்லையே////

சார் , யார் சொன்னா சார் எனக்கு ஹிந்தி தெரியாதுன்னு ? எனக்கு நல்லா ஹிந்தி தெரியும் சார் , இப்ப பாருங்க நீங்க எழுதினது கூட நல்லா தெரியுது , ஆனா என்னா .................படிக்கத்தான் தெரியாது .

மங்குனி அமைச்சர் said...

ரோஸ்விக் said...

ஆமா, மழைக்கெல்லாமா மனநிலை பாதிக்கும்...? நானும் ஒரு இதுக்குத்தான் கேட்டேன்.////

அட ஆமால்ல , எப்பயும் வெயில் ஜாஸ்த்தி ஆனா தானே இந்த பிரச்சனை வரும் , சபாஸ் சரியான கேள்வி ரோஸு

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

அதுக்குள்ளவா திருந்திட்டீங்க ..? ஆனா பலாப்பழ கதை நல்லா இருந்துச்சு ..!!////

இல்லைப்பா , ஏதோ காத்து கருப்பு அடிச்சிருச்சுன்னு நினைக்கிறேன் , எல்லாம் மந்திருச்சா சரியாப்போகும்

செல்வா said...

//இல்லைப்பா , ஏதோ காத்து கருப்பு அடிச்சிருச்சுன்னு நினைக்கிறேன் , எல்லாம் மந்திருச்சா சரியாப்போகும்
//

அதானே பார்த்தேன் ., சரி சரி சீக்கிரமா பொய் தாயத்து கட்டிட்டு வாங்க ..!!

Arun Prasath said...

//ஆமா வந்ததும் ரொம்ப யோசிக்க வெச்சுடீங்களே! ஒன்னும் இல்ல சுயசொறிதல்னா என்னாங்க?//
//வாருங்கள் arunmaddy நன்றி//

என்னது நன்றி மட்டுமா? கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க அமைச்சர!!

மங்குனி அமைச்சர் said...

arunmaddy said...

//ஆமா வந்ததும் ரொம்ப யோசிக்க வெச்சுடீங்களே! ஒன்னும் இல்ல சுயசொறிதல்னா என்னாங்க?//
//வாருங்கள் arunmaddy நன்றி//

என்னது நன்றி மட்டுமா? கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க அமைச்சர!!
////

யாரப்பாத்து என்னா கேள்வி கேட்டிங்க ? இதுகெல்லாம் பதில் தெரிஞ்சா நான் மூணாப்பு பாஸ்பன்னிருப்பன்ல

உங்களுக்கும் அதே பதில்தான்

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

//இல்லைப்பா , ஏதோ காத்து கருப்பு அடிச்சிருச்சுன்னு நினைக்கிறேன் , எல்லாம் மந்திருச்சா சரியாப்போகும்
//

அதானே பார்த்தேன் ., சரி சரி சீக்கிரமா பொய் தாயத்து கட்டிட்டு வாங்க ..!!///

செல்வக்குமார் யாராவது தெரிஞ்ச கேரளா மதிரவாதி இருந்தா அட்ரஸ் குடுப்பா ???

செல்வா said...

//யாரப்பாத்து என்னா கேள்வி கேட்டிங்க ? இதுகெல்லாம் பதில் தெரிஞ்சா நான் மூணாப்பு பாஸ்பன்னிருப்பன்ல//

அதானே ., அதுக்கு வேற படிக்கணும் ..!!

Mohan said...

நகைச்சுவையாகவும், அதில் கொஞ்சம் நக்கலாகவும் ஒரு நல்ல கருத்தை சொல்ல
வருகிறீர்கள் என தெரிகிறது. மக்களும் திருந்த முயற்சிக்க வேண்டும்.
வாழத் தெரியாதவர்கள் வாழும் நாட்டை ஆளத் தெரியாதவர்கள் ஆள்வார்கள் என
எங்கோ படித்தது ஞாபகத்திற்கு வருகிறது.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பாவம் யாரும் பெத்த புள்ளையோ ஒரு நாள் மழைக்கே இப்படி மனநிலை பாதிக்கப்பட்டு கிடக்குறான்.
//

இதுயாரை சொல்றே?..

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

பாவம் யாரும் பெத்த புள்ளையோ ஒரு நாள் மழைக்கே இப்படி மனநிலை பாதிக்கப்பட்டு கிடக்குறான்.
//

இதுயாரை சொல்றே?..
////

சுயசொறிதல் மாதிரி இது சுயபுலம்பலா இருக்குமோ

மங்குனி அமைச்சர் said...

Mohan said...

நகைச்சுவையாகவும், அதில் கொஞ்சம் நக்கலாகவும் ஒரு நல்ல கருத்தை சொல்ல
வருகிறீர்கள் என தெரிகிறது. மக்களும் திருந்த முயற்சிக்க வேண்டும்.
வாழத் தெரியாதவர்கள் வாழும் நாட்டை ஆளத் தெரியாதவர்கள் ஆள்வார்கள் என
எங்கோ படித்தது ஞாபகத்திற்கு வருகிறது.///

சரியா சொன்னிங்க சார், அரசியல் வாதிகள் மேல தப்பே இல்லை

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

//யாரப்பாத்து என்னா கேள்வி கேட்டிங்க ? இதுகெல்லாம் பதில் தெரிஞ்சா நான் மூணாப்பு பாஸ்பன்னிருப்பன்ல//

அதானே ., அதுக்கு வேற படிக்கணும் ..!!////

வேறன்னா ???? என்னா படிக்கணும் செல்வக்குமார்????

Arun Prasath said...

//யாரப்பாத்து என்னா கேள்வி கேட்டிங்க ? இதுகெல்லாம் பதில் தெரிஞ்சா நான் மூணாப்பு பாஸ்பன்னிருப்பன்ல

உங்களுக்கும் அதே பதில்தான்//

என்ன நீங்க அப்போ ரெண்டாவது பாஸ் பண்ணிடீங்களா? சொல்லவே இல்ல... அப்போ மன்னர் ஆகிறுக்கலாமே, அமைச்சரே!

அந்நியன் said...

தனது சுய நலத்திற்க்காக பதிவர்களின் பதிவுகளை வரிசைபடுத்தி தன்னை மேதாவியாக காட்டிகொள்ளும், வதே மாதரம் சசி வலைபக்கத்தை இருட்டடிப்பு செய்யும் சுதந்திர இலவச வலை பக்கத்தை புறக்கணிப்போம் அவர் நாடு நிலையை வெளியிடும் வரை ஆதரவு தாரீர் …அந்நியன்

Anonymous said...

வெயில்ல சுத்துனாதான் இப்டி ஆவாங்கனு சொல்லுவாங்க..
மழைல நெனஞ்சாலுமா??
மங்குனிய யாராவது காப்பாத்துங்கப்பா..

மங்குனி அமைச்சர் said...

arunmaddy said...

//யாரப்பாத்து என்னா கேள்வி கேட்டிங்க ? இதுகெல்லாம் பதில் தெரிஞ்சா நான் மூணாப்பு பாஸ்பன்னிருப்பன்ல

உங்களுக்கும் அதே பதில்தான்//

என்ன நீங்க அப்போ ரெண்டாவது பாஸ் பண்ணிடீங்களா? சொல்லவே இல்ல... அப்போ மன்னர் ஆகிறுக்கலாமே, அமைச்சரே!
////

என்னது மூணாவது படிக்கனுமின்னா ரெண்டாவது பாஸ்பன்னிருக்கனுமா? என்ன உலகமடா இது , எல்லாம் கலிகாலம் சார்.........

மங்குனி அமைச்சர் said...

இந்திரா said...

வெயில்ல சுத்துனாதான் இப்டி ஆவாங்கனு சொல்லுவாங்க..
மழைல நெனஞ்சாலுமா??
மங்குனிய யாராவது காப்பாத்துங்கப்பா..////

ஆமாங்க மேடம் ,.... எல்லாம் தலைகீழா நடக்குது

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

சுய சொறிதல்னா தன்னை தானே சொரிஞ்சு விட்டுகுறது தான,
எதாவது படை,அரிப்பா இருக்கும்

தேவா said...

ஆஹா கண்ணத்தொறந்து விட்டுடீங்க அமைச்சரே. உங்களுக்காக நான் மந்திரிச்சு வச்ச முட்டைய தமிழ்நாடு அரசியல்வாதிகளுக்காக புதைச்சுடறேன்.

மங்குனி அமைச்சர் said...

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

சுய சொறிதல்னா தன்னை தானே சொரிஞ்சு விட்டுகுறது தான,
எதாவது படை,அரிப்பா இருக்கும்
////

அட சூப்பர் சார் , இது தெரியாம இவ்ளோ நேரம் ரொம்ப பேரு குழம்பி போயிட்டோம் சார்

மங்குனி அமைச்சர் said...

தேவா said...

ஆஹா கண்ணத்தொறந்து விட்டுடீங்க அமைச்சரே. உங்களுக்காக நான் மந்திரிச்சு வச்ச முட்டைய தமிழ்நாடு அரசியல்வாதிகளுக்காக புதைச்சுடறேன்.////

சீக்கிரம் பொதச்சு வைய்யி , அப்புறம் முட்டை குஞ்சு போரிச்சிற போகுது

செல்வா said...

//சீக்கிரம் பொதச்சு வைய்யி , அப்புறம் முட்டை குஞ்சு போரிச்சிற போகுது
/

அப்படி குஞ்சு பொரிச்சா அந்த முட்டைல இருந்து என்ன வரும் .?

என்னது நானு யாரா? said...

ஜனங்க யோசிக்கணும்! ஜனங்களை யோசிக்க வைக்க நீங்கள் செய்யும் முயற்சி நல்ல முயற்சி! வாழ்த்துக்கள்

தேவா said...

அரிக்கும் பொழுது ஆள்வைத்து சொரியாமல் சுயமாக சொரிதலே சுயசொறிதல். அதே போல தன் மனதில் அரித்துகொண்டிருக்கும் தலைநகரத்தின் துயரை (ஆட்டோ வந்தாலும் பரவைல்லைஎன தைரியமாக ) தன் பதிவில் சொன்னதால் அமைச்சர் இந்த வார்த்தையை யூஸ் பண்ணி இருக்கிறார்.(நான் மூணாங்கிளாசு பாஸ் பண்ணிட்டேனே)

கருடன் said...

@மங்கு

மிக அருமையான பதிவு..தாங்கள் பதிவை படித்து பலரும் மனம் திருந்து உள்ளனர். தமிழ்னாடு காவல்துறை முழு வீச்சுடன் உங்களை தேடுகிறது... உண்மையில் இப்பொழுது எனக்கு உங்கள் ப்ளாக்கில் உள்ள சுத்தி தேவை படுகிறது... யோ மங்கு மழை வந்து தண்ணி நின்ன அதுல மண்ண அள்ளி போட நம்ம பதிவுலகில் நிறைய பேர் இருக்காங்க... நீயுமா??

vasu balaji said...

அய்யய்யோ. மங்குனி எளக்கியவ்யாதியாகிட்டீங்களா:))

பொன் மாலை பொழுது said...

நம்ம மங்குனி அபூர்வமா உருப்படியா ஏதோ சொல்லியிருக்கு எல்லாரும் அந்த புள்ளைய வாருறீங்களே?!

மங்குனி நீர் எழுதைய்யா ....... ஆமா எங்க அந்த பன்னிய காணும்?
ஊருக்கு பூடிச்சா?

'பரிவை' சே.குமார் said...

//சென்ற ஆண்டின் தீபாவளி மதுபான வருமானமான 250 கோடியை உயர்த்தி இந்த ஆண்டிக்கு 300 கோடியாக வரம்பு நிர்ணயித்துள்ள நமது அரசு //

எல்லாம் தண்ணி படுத்தும் பாடுதான் அமைச்சரே..!

vasan said...

என்ன‌ கோவ‌ம்? நேத்து ம‌ழைல‌, நனைச்சுட்டே, வீட்டுக்கு லேட்டாப் போய் அடி வாங்குன வ‌லி.
க‌ட்டுன‌ வீடு, ப‌ழைய‌ ஏரின்னு இப்ப‌த்தான் தெரியுது. இந்த‌ நேர‌ம் பாத்தா குற்றால குற‌வ‌ஞ்சி பாட்டை டீவில‌ போடுவான்? ச‌ரி த‌லைய‌ தெடைச்சிட்டு சூடா டீ குடிங்க‌ எல்லாம் ச‌ரியாயிரும்.
எல்லாத்தையும் நல்லா க‌வர் ப‌ண்ணி, க‌வர் ஸ்டேரி அளவு எழுதி இருக்கிறீர்க‌ள் அமைச்ச‌ரே.

NaSo said...

// மங்குனி அமைசர் said...

நாகராஜசோழன் MA said...

me the first
////

எனக்கு கொஞ்சம் வடை குடுய்யா ???//

சரி அமைச்சரே ஆளுக்கு பாதி.

NaSo said...

//மங்குனி அமைசர் said...

நாட்டுப் பற்றுள்ள நாகராஜசோழன் வாழ்க , வாருங்கள் இப்பொழுதே செயலில் இறங்குவோம்//

சரி அமைச்சரே. பரங்கிமலை ஜோதிக்கு பக்கத்தில் உள்ள டாஸ்மாக்ற்கு உடனடியாக வரவும்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

யாருக்கும் சொல்லாதீங்க... நான் இங்கே வந்திட்டு போனது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//
டிஸ்கி : பாவம் யாரும் பெத்த புள்ளையோ ஒரு நாள் மழைக்கே இப்படி மனநிலை பாதிக்கப்பட்டு கிடக்குறான்.///

அதான எல்லாருக்கும் வெயில்லதான் மூளை குழம்பும். உனக்கு மழை பெஞ்சாவா? அதிசிய பிறவிடா நீ...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஸ்ரேயாவுக்காக மழை படத்த அம்பது தடவ பாத்த. நிஜம்மா மழை பெஞ்சா குத்தம் சொல்லுவியா நீ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன அமைச்சரே எப்போ எஸ்டிடி யெல்லாம் படிக்க ஆரம்பிச்சீங்க?

பவள சங்கரி said...

அமைச்சரே வரவர உங்க ரவுசு தாங்கல.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நேற்று இரவு முதல் சென்னையில் பருவமழை ////

பருவ மழைன்னா என்ன அமைச்சரே? அன்று பெய்த மழையில்னு ஒரு நல்ல படம் எப்பவோ வந்திச்சி, அதான் தெரியும்!

அஞ்சா சிங்கம் said...

என்ன ரொம்ப யோசிக்க வச்சிடிங்க நான் ஒரு குவாட்டர் அடிச்சுட்டு வந்து கருத்து சொல்றேன் .

வெட்டிப்பேச்சு said...

//ஆனால் இப்பொழுது அந்த நியதி மாறி கீழிருந்து மேலாக ஒரு மத்திய அல்லது மாநில அரசு அலுவலகத்தில் உள்ள பியூன் வாங்கும் லஞ்சத்தின் பங்கு அது அப்படியே பயணப்பட்டு கிளார்க் , அதிகாரி , உதவி ஆய்வாளர் , ஆய்வாளர் , கலக்டர் , மந்திரி அப்புறம் தலைமை என்று பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது .//

//அட அதெல்லாம் விடுங்க சாமி , சென்ற ஆண்டின் தீபாவளி மதுபான வருமானமான 250 கோடியை உயர்த்தி இந்த ஆண்டிக்கு 300 கோடியாக வரம்பு நிர்ணயித்துள்ள நமது அரசு கொள்கைகள் வெற்றிபெற பொது மக்களாகிய நாம் நமது ஜனநாயக கடைமையை செய்து அரசின் இந்த முயற்சி வெற்றி பெற உறுதுணையாக இருப்போம். //நீர் சூடான ஆள்தான் அப்பு..!!!

வாழ்த்துக்கள்

suneel krishnan said...

சவுக்கடி!! ஆனா சிரிசுகிட்டே அடி பின்றீங்க அமைச்சரே

Ramesh said...

அமைச்சரே ஆட்சி சரி இல்லேன்னு சொல்லலாமா... நீர் சரியான மங்குனி அமைச்சர் என்று நொடிக்கொரு முறை காட்டிக்கொண்டிரும்...

மங்குனி அமைச்சர் said...

அந்நியன் said...

தனது சுய நலத்திற்க்காக பதிவர்களின் பதிவுகளை வரிசைபடுத்தி தன்னை மேதாவியாக காட்டிகொள்ளும், வதே மாதரம் சசி வலைபக்கத்தை இருட்டடிப்பு செய்யும் சுதந்திர இலவச வலை பக்கத்தை புறக்கணிப்போம் அவர் நாடு நிலையை வெளியிடும் வரை ஆதரவு தாரீர் …அந்நியன்
////

சார் வணக்கம் , என்ன சொல்றிங்க ஒன்னும் புரியலை , கொஞ்சம் எல்லாத்துக்கும் லிங்க் குடுங்க

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

//சீக்கிரம் பொதச்சு வைய்யி , அப்புறம் முட்டை குஞ்சு போரிச்சிற போகுது
/

அப்படி குஞ்சு பொரிச்சா அந்த முட்டைல இருந்து என்ன வரும் .?////

கங்காரு முட்டை வரும் செல்வக்குமார்

மங்குனி அமைச்சர் said...

என்னது நானு யாரா? said...

ஜனங்க யோசிக்கணும்! ஜனங்களை யோசிக்க வைக்க நீங்கள் செய்யும் முயற்சி நல்ல முயற்சி! வாழ்த்துக்கள்////

ரொம்ப, ரொம்ப நன்றி சார்

மங்குனி அமைச்சர் said...

தேவா said...

அரிக்கும் பொழுது ஆள்வைத்து சொரியாமல் சுயமாக சொரிதலே சுயசொறிதல். அதே போல தன் மனதில் அரித்துகொண்டிருக்கும் தலைநகரத்தின் துயரை (ஆட்டோ வந்தாலும் பரவைல்லைஎன தைரியமாக ) தன் பதிவில் சொன்னதால் அமைச்சர் இந்த வார்த்தையை யூஸ் பண்ணி இருக்கிறார்.(நான் மூணாங்கிளாசு பாஸ் பண்ணிட்டேனே)////

வாழ்த்துக்கள் தேவா , அப்படியே நீக அடிச்ச பிட்ட குடுங்க , எனக்கு நாளைக்கு எக்ஸாம்

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

@மங்கு

மிக அருமையான பதிவு..தாங்கள் பதிவை படித்து பலரும் மனம் திருந்து உள்ளனர். தமிழ்னாடு காவல்துறை முழு வீச்சுடன் உங்களை தேடுகிறது... உண்மையில் இப்பொழுது எனக்கு உங்கள் ப்ளாக்கில் உள்ள சுத்தி தேவை படுகிறது... யோ மங்கு மழை வந்து தண்ணி நின்ன அதுல மண்ண அள்ளி போட நம்ம பதிவுலகில் நிறைய பேர் இருக்காங்க... நீயுமா??////

விடு விடு , ஒரு புலோவுல வந்திருச்சு , ரொம்ப கோபப்படாதே டெர்ரர் , இந்த ஒரு வாட்டி கொஞ்சம் மன்னிச்சு விட்ரு

மங்குனி அமைச்சர் said...

வானம்பாடிகள் said...

அய்யய்யோ. மங்குனி எளக்கியவ்யாதியாகிட்டீங்களா:))////

அய்யய்யோ........ வானம்பாடிகள் பொய் சொல்லி பலகிட்டாருங்கோ

மங்குனி அமைச்சர் said...

கக்கு - மாணிக்கம் said...

நம்ம மங்குனி அபூர்வமா உருப்படியா ஏதோ சொல்லியிருக்கு எல்லாரும் அந்த புள்ளைய வாருறீங்களே?!

மங்குனி நீர் எழுதைய்யா ....... ஆமா எங்க அந்த பன்னிய காணும்?
ஊருக்கு பூடிச்சா?/////

ரொம்ப நன்றி கக்கு - மாணிக்கம் சார் , பன்னிக்கு ஜனனி வந்திருச்சு போல

மங்குனி அமைச்சர் said...

vasan said...

என்ன‌ கோவ‌ம்? நேத்து ம‌ழைல‌, நனைச்சுட்டே, வீட்டுக்கு லேட்டாப் போய் அடி வாங்குன வ‌லி.
க‌ட்டுன‌ வீடு, ப‌ழைய‌ ஏரின்னு இப்ப‌த்தான் தெரியுது. இந்த‌ நேர‌ம் பாத்தா குற்றால குற‌வ‌ஞ்சி பாட்டை டீவில‌ போடுவான்? ச‌ரி த‌லைய‌ தெடைச்சிட்டு சூடா டீ குடிங்க‌ எல்லாம் ச‌ரியாயிரும்.
எல்லாத்தையும் நல்லா க‌வர் ப‌ண்ணி, க‌வர் ஸ்டேரி அளவு எழுதி இருக்கிறீர்க‌ள் அமைச்ச‌ரே.////

எல்லாத்தையும் அப்படியே நேர்ல பாத்தமாதிரியே சொல்றிங்களே ??? நன்றி வாசன் சார்

மங்குனி அமைச்சர் said...

நாகராஜசோழன் MA said...

// மங்குனி அமைசர் said...

நாகராஜசோழன் MA said...

me the first
////

எனக்கு கொஞ்சம் வடை குடுய்யா ???//

சரி அமைச்சரே ஆளுக்கு பாதி.////

நன்பேண்டா

மங்குனி அமைச்சர் said...

நாகராஜசோழன் MA said...

//மங்குனி அமைசர் said...

நாட்டுப் பற்றுள்ள நாகராஜசோழன் வாழ்க , வாருங்கள் இப்பொழுதே செயலில் இறங்குவோம்//

சரி அமைச்சரே. பரங்கிமலை ஜோதிக்கு பக்கத்தில் உள்ள டாஸ்மாக்ற்கு உடனடியாக வரவும்.////

யோவ் நீ எங்கைய்யா போன? , நானும் வந்து ரெண்டு மணிநேரமா காத்துகிடந்தேன் ?

மங்குனி அமைச்சர் said...

சே.குமார் said...

//சென்ற ஆண்டின் தீபாவளி மதுபான வருமானமான 250 கோடியை உயர்த்தி இந்த ஆண்டிக்கு 300 கோடியாக வரம்பு நிர்ணயித்துள்ள நமது அரசு //

எல்லாம் தண்ணி படுத்தும் பாடுதான் அமைச்சரே..!///

ஆமா சார் , ஆமா , எல்லாம் தண்ணி படுத்துற பாடுதான்

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

யாருக்கும் சொல்லாதீங்க... நான் இங்கே வந்திட்டு போனது...////

அடிச்சு கேட்டாகூட சொல்லமாட்டேன் வெறும்பய

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//
டிஸ்கி : பாவம் யாரும் பெத்த புள்ளையோ ஒரு நாள் மழைக்கே இப்படி மனநிலை பாதிக்கப்பட்டு கிடக்குறான்.///

அதான எல்லாருக்கும் வெயில்லதான் மூளை குழம்பும். உனக்கு மழை பெஞ்சாவா? அதிசிய பிறவிடா நீ...////

நாமெல்லாம் தெய்வீகப் பிறவிகள்

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஸ்ரேயாவுக்காக மழை படத்த அம்பது தடவ பாத்த. நிஜம்மா மழை பெஞ்சா குத்தம் சொல்லுவியா நீ?///

எத எதோட கம்பெற்பன்னுரா போலீசு, தக்காளி உனக்கு மூளைவரச்சி கொஞ்சம் கம்மின்னு நம்ம பண்ணி சொன்னான் , சரியாத்தான் இருக்கும் போல . ஸ்ரேயா நனைஞ்சா நாமெல்லாம் விடுவமா
????

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன அமைச்சரே எப்போ எஸ்டிடி யெல்லாம் படிக்க ஆரம்பிச்சீங்க?////

நான் ஒன்னாப்பு படிக்கும் போது ஒரு வாத்தியாரு தூக்கத்துல கனவுல வந்து சொல்லிக்குடுத்துட்டு போயிட்டாரு பண்ணி , நானும் மறக்கனுமின்னு பாக்குறேன் எப்படின்னு தெரியல ????

மங்குனி அமைச்சர் said...

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

அமைச்சரே வரவர உங்க ரவுசு தாங்கல.........////

விடுங்க சார் ஒரு நாள் தானே , நான் பாவம் சார்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நேற்று இரவு முதல் சென்னையில் பருவமழை ////

பருவ மழைன்னா என்ன அமைச்சரே? அன்று பெய்த மழையில்னு ஒரு நல்ல படம் எப்பவோ வந்திச்சி, அதான் தெரியும்!////

என்ன ஒரு அவார்டு மூவி அது , நீயும் பாத்துரிக்கியா பண்ணி ?????

மங்குனி அமைச்சர் said...

மண்டையன் said...

என்ன ரொம்ப யோசிக்க வச்சிடிங்க நான் ஒரு குவாட்டர் அடிச்சுட்டு வந்து கருத்து சொல்றேன் ./////

ரைட்டு , வரும்போது பாத்து வாங்க

மங்குனி அமைச்சர் said...

வெட்டிப்பேச்சு said...நீர் சூடான ஆள்தான் அப்பு..!!!

வாழ்த்துக்கள்////

ரொம்ப நன்றி வெட்டிப்பேச்சு சார்

மங்குனி அமைச்சர் said...

dr suneel krishnan said...

சவுக்கடி!! ஆனா சிரிசுகிட்டே அடி பின்றீங்க அமைச்சரே///

ரொம்ப நன்றி சுனில் கிருஷ்ணன் சார்

மங்குனி அமைச்சர் said...

பிரியமுடன் ரமேஷ் said...

அமைச்சரே ஆட்சி சரி இல்லேன்னு சொல்லலாமா... நீர் சரியான மங்குனி அமைச்சர் என்று நொடிக்கொரு முறை காட்டிக்கொண்டிரும்...////

அட ஆமால்ல , இப்படி ஒரு ஆங்கிள்ள நான் யோசிக்கவே இல்லையே சார் ???? சரி சரி நான் சொன்னது எல்லாம் வாபஸ்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////தென்னை மரத்தில் உள்ள இளநீர் முற்றி கீழே உள்ள பலா மரத்தில் உள்ள கனிந்த பலா பழத்தின் மேல் விழுந்து அந்த பலா பழத்தை உடைத்து அதற்கு கீழ் மாமரத்தில் விழுந்து மாங்கனிகளை உதிர்த்து பின் அதற்க்கு கீழே உள்ள வாழை மரத்தின் மீது விழுந்த வாழைத்தாரை சிதைத்து அதற்குபின் தரையில் அந்த தென்னகாய் விழுந்தது என்று நமது நாட்டின் இயற்க்கை வளத்தை பற்றி பாடிவைத்துள்ளனர் .////

அமைச்சரே என்ன ஞாபக சக்திய்யா உமக்கு? +2 தமிழ்பாடத்துல வந்த சீவகசிந்தாமணி செய்யுள அப்படியே டைமிங்கா இறக்கிட்டிரே? என்ன +2வ அஞ்சு வாட்டி படிச்சீரா?

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அமைச்சரே என்ன ஞாபக சக்திய்யா உமக்கு? +2 தமிழ்பாடத்துல வந்த சீவகசிந்தாமணி செய்யுள அப்படியே டைமிங்கா இறக்கிட்டிரே? என்ன +2வ அஞ்சு வாட்டி படிச்சீரா?////

என்னது +2 ல நான் எழுதியது பாடத்திட்டமா வச்சிருக்காங்களா ???

அலைகள் பாலா said...

//
டிஸ்கி : பாவம் யாரும் பெத்த புள்ளையோ ஒரு நாள் மழைக்கே இப்படி மனநிலை பாதிக்கப்பட்டு கிடக்குறான்.///

க க கா போ

vinu said...

inthaa postin moolam namathu manguni enna solla varugiraar endraal varum theebavalikku sarakku adiththu mattayaaga plan seathullaaaar

vinu said...

me 99

vinu said...

me 100th, appadi naanum century pottuteaan, naanum rowdithaan,
rowdithaan,rowdithaan
rowdithaan
rowdithaan
rowdithaan
rowdithaan
rowdithaan

amaaam ellorukkum solliteaan

NaSo said...

//me 100th, appadi naanum century pottuteaan, naanum rowdithaan,
rowdithaan,rowdithaan
rowdithaan
rowdithaan
rowdithaan
rowdithaan
rowdithaan

amaaam ellorukkum solliteaan//

நாங்க ஒத்துக்க மாட்டோம். நீங்க மன்குனிய போட்டுத்தள்ளுனாத்தான் நம்புவோம்.

அன்பரசன் said...

//மங்குனி அமைச்சர் சீரியஸ் அமைச்சராகிடார்... இவர் இந்தியாவில் வாழ தகுதி இல்லாதவர் என்று தீர்ப்பளிக்கபடுகிறது //

Repeatu

சி.பி.செந்தில்குமார் said...

நேற்று இரவு முதல் சென்னையில் பருவமழை ஆரம்பித்து

என்னது பருவமழையா?அது நல்ல மலையாளப்படம் ஆச்சே?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நேற்று இரவு முதல் சென்னையில் பருவமழை ////

பருவ மழைன்னா என்ன அமைச்சரே? அன்று பெய்த மழையில்னு ஒரு நல்ல படம் எப்பவோ வந்திச்சி, அதான் தெரியும்!

யோவ்,நீ எல்லாம் ஒரு பிரபல பதிவரா?அது சூப்பர் மலியாளப்படம்யா.1988 ல ரிலீஸ் ஆச்சு 4 சீன் இருக்கு

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////தென்னை மரத்தில் உள்ள இளநீர் முற்றி கீழே உள்ள பலா மரத்தில் உள்ள கனிந்த பலா பழத்தின் மேல் விழுந்து அந்த பலா பழத்தை உடைத்து அதற்கு கீழ் மாமரத்தில் விழுந்து மாங்கனிகளை உதிர்த்து பின் அதற்க்கு கீழே உள்ள வாழை மரத்தின் மீது விழுந்த வாழைத்தாரை சிதைத்து அதற்குபின் தரையில் அந்த தென்னகாய் விழுந்தது என்று நமது நாட்டின் இயற்க்கை வளத்தை பற்றி பாடிவைத்துள்ளனர் .////

அமைச்சரே என்ன ஞாபக சக்திய்யா உமக்கு? +2 தமிழ்பாடத்துல வந்த சீவகசிந்தாமணி செய்யுள அப்படியே டைமிங்கா இறக்கிட்டிரே? என்ன +2வ அஞ்சு வாட்டி படிச்சீரா?

யோவ் அது பிளஸ் டூவும் இல்ல பிளவுஸ் டூவும் இல்ல.எட்டாவது தமிழ் செய்யுள்

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

மங்கு ,
உருப்படியான பதிவு போட்டிருக்கே ...,

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

நெட்டு வேலை செய்யலை மாமு...... இல்லை பொலி போட்டிருபேன் ....,: )))
எனக்கு கொஞ்சம் கிரகம் சரியில்லை ( வேலை போயிடுச்சு ) ....,இல்ல .........,

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நரி, என்னது வேலை போயிடிச்சா? என்ன சொல்ற?

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

ஆமாயா ....காஸ்ட் கட்டிங் ன்னு துரத்திடானுங்க ....,வேற INTERIEW கெலிச்சாச்சு ....,

Unknown said...

முக்கனிகள் கருத்து அருமை மங்குனியாரே....

மங்குனி அமைச்சர் said...

அலைகள் பாலா said...

//
டிஸ்கி : பாவம் யாரும் பெத்த புள்ளையோ ஒரு நாள் மழைக்கே இப்படி மனநிலை பாதிக்கப்பட்டு கிடக்குறான்.///

க க கா போ
////

உங்களுக்கு சந்தோசம் ,இம் ..... நடக்கட்டும் நடக்கட்டும்

மங்குனி அமைச்சர் said...

vinu said...

inthaa postin moolam namathu manguni enna solla varugiraar endraal varum theebavalikku sarakku adiththu mattayaaga plan seathullaaaar/////

நம்பேண்டா ,நம்பேண்டா ,நம்பேண்டா

மங்குனி அமைச்சர் said...

vinu said...

me 100th, appadi naanum century pottuteaan, naanum rowdithaan,
rowdithaan,rowdithaan
rowdithaan
rowdithaan
rowdithaan
rowdithaan
rowdithaan

amaaam ellorukkum solliteaan////

பிரபல ரவுடி வினு வாழ்க

மங்குனி அமைச்சர் said...

நாகராஜசோழன் MA said...

//me 100th, appadi naanum

amaaam ellorukkum solliteaan//

நாங்க ஒத்துக்க மாட்டோம். நீங்க மன்குனிய போட்டுத்தள்ளுனாத்தான் நம்புவோம்.////

என்னா வில்லத்தனம்

மங்குனி அமைச்சர் said...

அன்பரசன் said...

//மங்குனி அமைச்சர் சீரியஸ் அமைச்சராகிடார்... இவர் இந்தியாவில் வாழ தகுதி இல்லாதவர் என்று தீர்ப்பளிக்கபடுகிறது //

Repeatu////

ஆஹா, கூட்டம் கூடுரானுகே , மங்குனி எஸ் ஆகிடு

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...

நேற்று இரவு முதல் சென்னையில் பருவமழை ஆரம்பித்து

என்னது பருவமழையா?அது நல்ல மலையாளப்படம் ஆச்சே?////

ஆமாப்பு , இங்க சென்னைல அந்த படத்த செகண்டு ரிலீஸ் பண்றாங்க

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நேற்று இரவு முதல் சென்னையில் பருவமழை ////

பருவ மழைன்னா என்ன அமைச்சரே? அன்று பெய்த மழையில்னு ஒரு நல்ல படம் எப்பவோ வந்திச்சி, அதான் தெரியும்!

யோவ்,நீ எல்லாம் ஒரு பிரபல பதிவரா?அது சூப்பர் மலியாளப்படம்யா.1988 ல ரிலீஸ் ஆச்சு 4 சீன் இருக்கு////

என்ன ஒரு புள்ளிவிவரம் ???, மிக்க நன்றி செந்தில்குமார்

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ் அது பிளஸ் டூவும் இல்ல பிளவுஸ் டூவும் இல்ல.எட்டாவது தமிழ் செய்யுள்////

அப்ப நீ எட்டாவதெல்லாம் படிச்சிருக்கியா ????

மங்குனி அமைச்சர் said...

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

மங்கு ,
உருப்படியான பதிவு போட்டிருக்கே ...,
////

நீ சொல்றத பாத்தா ஏதோ வஞ்சப்புகழ்ச்சி அணி மாதிரி தெரியுதே ???? எதுவும் உள்குத்து இல்லையே ????

மங்குனி அமைச்சர் said...

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

நெட்டு வேலை செய்யலை மாமு...... இல்லை பொலி போட்டிருபேன் ....,: )))
எனக்கு கொஞ்சம் கிரகம் சரியில்லை ( வேலை போயிடுச்சு ) ....,இல்ல .........,////INTERIEW கெலிச்சாச்சு ....,///

good going nari keep itup

மங்குனி அமைச்சர் said...

கலாநேசன் said...

முக்கனிகள் கருத்து அருமை மங்குனியாரே....////

ரொம்ப நன்றி கலாநேசன் சார்

Anisha Yunus said...

//டிஸ்கி : பாவம் யாரும் பெத்த புள்ளையோ ஒரு நாள் மழைக்கே இப்படி மனநிலை பாதிக்கப்பட்டு கிடக்குறான்.
//

அமைச்சரே எதுக்கும் மன்னரிடம் சொல்லி ரெண்டு நாள் விடுமுறை எடுத்துக்குங்க.

வெயில்ல நின்னாவேணா மூளை குழம்பிடுச்சுன்னு சொல்லலாம்... மழைல நனைஞ்சு புத்தி பேதலிச்சிருக்குன்னு எழுதினா...இது எதிர்க்கட்சியின் சதியேதான் உடன்பிறப்பே...ஊர் முழுவதும் இலவசமாய் மழை நீரை சேகரித்து நாம் ரோடுகளிலும், தெருக்களிலும் அணை போட்டு வைப்பதை தவறாக புரிந்துள்ளார்கள் இவர்கள். இதோ எழுதுகிறேன் ஒரு எதிர் அறிக்கை...இதை முறியடிப்போம்...!!

வால்பையன் said...

//பாவம் யாரும் பெத்த புள்ளையோ ஒரு நாள் மழைக்கே இப்படி மனநிலை பாதிக்கப்பட்டு கிடக்குறான்.//

ஹாஹாஹாஹா!