எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Saturday, October 2, 2010

நானும் எந்திரன் பாத்துட்டனே !!!!! பாத்துட்டனே !!!!! பாத்துட்டனே !!!!!

வழக்கம் நேத்து போல தொழில பாக்க காலைல கார எடுத்துக்கிட்டு மாயாஜால் போனேங்க , தன்க்காளி ஒரே டிராபிக் ஜாம் , ஏகப்பட்ட காருகள் , அந்த கூட்டத்துல ஒரு வழியா போய் கார பார்க் பண்ணிட்டு , நம்ம வழக்கமா பிச்சை எடுக்குற என்ட்ரன்ஸ் பக்கத்துல வந்து குத்தவச்சு உட்கார்ந்து பிஸினெஸ் ஸ்டார்ட் பண்ணேன் , செம கலக்க்சன் சார். அதுல நமக்கு ரெகுலரா பிச்சை போடுற ஒரு பொண்ணு (அண்ணா யுனிவர்சிட்டில இப்ப செகண்டு இயற் படிக்குது ) டக்குன்னு ஒரே சின்ன பிட்டு பேபர போட்டுச்ச்சு , என்னடான்னு பாத்தா "எந்திரன்" படத்துக்கு டிக்கட்டு , சரின்னு நம்ம பிசினச்சுக்கு லீவு விட்டு உள்ள போய் உட்கார்தேன் , எனக்கு பக்கத்து சீட்ல அந்த பொண்ணு கைல பீசா, பர்கர் , மக்ருன்னி கோக் எல்லாம் வாங்கி வச்சுகிட்டு ரெடியா இருந்துச்சு .(யோவ் பட்டாப்பட்டி பன்னாட , படம் பாக்கத்தான் ).

இப்போ எந்திரன் ???????


இது ரஜினி படம் இல்லை , ரஜினி இந்த படத்துல நடிச்சு இருக்கார் அவ்வளவுதான். ரஜினியோட ஸ்டைல்,மேனரிசம், பஞ்ச டையலாக் எதுவமே இல்லை.இது டைரக்டர் சங்கர் படம்.

முதல் பாதி ரோபோ ரஜினி , ஐஸ்வர்யாராய் இவர்களுடன் அருமையாக நல்ல காமடியா ஜாலியா போச்சு . தியேட்டரில் ஒரே விசில் கும்மாளம் . ஆனா செகண்ட் பார்ட் ??????

நீ வெண்ணெய்கட்டி மாதிரி இருக்க , நான் பன்னிகுட்டி மாதிரி இருக்கேன் . (யோவ் பன்னி இது படத்துல வர்ற டைலாக் )

செகண்டு ஆஃப் சொதப்பி எடுத்துட்டாங்க , ஏதோ சின்ன பசங்க வீடியோ கேம் ஆடுறமாதிரி இருக்குது. ஓவர் கிராபிக்ஸ் . வில்லன் ரோபோ ரஜினி மாதிரியே எல்லாம் ரோபோக்களும் வடிவைக்க பட்டது சரியா இல்லை. ரஜினிய வேலைக்கார ரோபோக்களாக பார்க்க நன்றாக இல்லை .வில்லன் ரஜினி ரோபோ தவிர மற்ற ரோபோக்களுக்கு வேறு கெடப் குடுத்து இருக்கலாம் .

செகண்டு ஆஃப்ல தியேட்டர் முழுவது அமைதியாக இருந்தது . ரஜினி ரசிகர்களுக்கு எப்படி ரியாக்ட் பண்ணறதுன்னு தெரியாம கன்பியுஸ் ஆகிட்டாங்க.மொத்தத்துல முதல் பாதியோட என்டர்டைன்மன்ட்ட ரெண்டாவது பாதி கெடுத்திடுச்சு.

டைரக்சன் , கிராபிக்ஸ் , எடிடிங் , முயூசிக் மற்றும் யெல்லாம் டெக்னிகல் சார்ந்த விசயங்களும் சூப்பர் . இந்த படத்திற்கு ரஜினி என்னும் பெரிய்ய மாஸ் ஹீரோ தேவையே இல்லை .

டிஸ்கி : எவனாவது என்கூட படம் பாத்த பொண்ண பத்தி அப்புறம் என்ன ஆச்சுன்னு கேட்டிங்க பிச்சு போடுவேன் பிச்சு

70 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எந்திரன் பீவர் இறங்கிடிச்சா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வழக்கம் நேத்து போல தொழில பாக்க காலைல கார எடுத்துக்கிட்டு மாயாஜால் போனேங்க ,///

மாயாஜால்ல அப்பிடி என்னா தொழிலு நடக்குது வாத்தியாரே?

dheva said...

எந்திரன் பாத்தாச்சா.. பங்காளி.. ஜென்ம சாபல்யம் பல பேரு அடைஞ்சுட்டாங்க... நீயுமா? கங்கிராஜுலேசன்...!

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வழக்கம் நேத்து போல தொழில பாக்க காலைல கார எடுத்துக்கிட்டு மாயாஜால் போனேங்க ,///

மாயாஜால்ல அப்பிடி என்னா தொழிலு நடக்குது வாத்தியாரே?
///

பதிவ முழுசா படிடா டோமரு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நீ வெண்ணெய்கட்டி மாதிரி இருக்க , நான் பன்னிகுட்டி மாதிரி இருக்கேன் . (யோவ் பன்னி இது படத்துல வர்ற டைலாக் )///

அப்பவே சொன்னேன் நான் எப்படிப்பட்ட பிரபல பதிவர்னு நீங்கதான் யாருமே நம்பல, பாத்தீங்களா, ஷங்கர், ரஜினி வரைக்கும் நம்ம மேட்டர் ரீச் ஆயிருக்கு?

மங்குனி அமைச்சர் said...

dheva said...

எந்திரன் பாத்தாச்சா.. பங்காளி.. ஜென்ம சாபல்யம் பல பேரு அடைஞ்சுட்டாங்க... நீயுமா? கங்கிராஜுலேசன்...!///

அந்த கொடுமைய ஏன் சார் கேட்குறிங்க ? எல்லாம் போன ஜென்மத்து சாபம் தேவா சார்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///டிஸ்கி : எவனாவது என்கூட படம் பாத்த பொண்ண பத்தி அப்புறம் என்ன ஆச்சுன்னு கேட்டிங்க பிச்சு போடுவேன் பிச்சு///

நான் கேக்க மாட்டேன், ஏன்னா என்ன ஆகும்னு தெரிஞ்சதுதானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைசர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வழக்கம் நேத்து போல தொழில பாக்க காலைல கார எடுத்துக்கிட்டு மாயாஜால் போனேங்க ,///

மாயாஜால்ல அப்பிடி என்னா தொழிலு நடக்குது வாத்தியாரே?
///

பதிவ முழுசா படிடா டோமரு////

அய்யய்யோ அப்போ அது இல்லியா?

அன்பரசன் said...

//மொத்தத்துல முதல் பாதியோட என்டர்டைன்மன்ட்ட ரெண்டாவது பாதி கெடுத்திடுச்சு.//

அடடா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மொத்தத்துல முதல் பாதியோட என்டர்டைன்மன்ட்ட ரெண்டாவது பாதி கெடுத்திடுச்சு.///

படம் பாக்கலாமா வேணாமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஓவர் கிராபிக்ஸ் . ///

ஆமா, வெட்டிப் பய ஷங்கரு ஜீன்ஸ் படத்துல அருமையான பாடலை கிராபிக்ஸ்னு சொல்லி கெடுத்து வெச்சாரே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி அப்புறம் பீசா, பர்கர், மக்ருன்னி, கோக் எல்லாம் சாப்பிட்டீங்களா இல்லியா? (எப்பூடி? கொக்கி போட்டுடோம்ல?)

தினேஷ் ராம் said...

//டிஸ்கி : எவனாவது என்கூட படம் பாத்த பொண்ண பத்தி அப்புறம் என்ன ஆச்சுன்னு கேட்டிங்க பிச்சு போடுவேன் பிச்சு //

கேட்கல. அதுக்குப்புறம் உங்களுக்கு என்ன ஆச்சு? :-)

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி அப்புறம் பீசா, பர்கர், மக்ருன்னி, கோக் எல்லாம் சாப்பிட்டீங்களா இல்லியா? (எப்பூடி? கொக்கி போட்டுடோம்ல?)/////


ஹி.ஹி.ஹி..........(எபோஊடி தப்பிச்சிட்டம்ல )

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மொத்தத்துல முதல் பாதியோட என்டர்டைன்மன்ட்ட ரெண்டாவது பாதி கெடுத்திடுச்சு.///

படம் பாக்கலாமா வேணாமா?
///

யாரு ;என்ன சொன்னாலும் உன் தலைல என்ன எழுதி இருக்கோ அதுதானே நடக்கும்

Anonymous said...

எந்திரன் நல்ல பொழுது போக்கு படம்..அதில் சந்தேகம் இல்லை செம ஹிட் ஆகும்

எல் கே said...

எலேய் இன்னிக்கு படம் பார்த்தப்புறம் வந்து பேசிக்கிறேன் உன்னை

மங்குனி அமைச்சர் said...

சாம்ராஜ்ய ப்ரியன் said...

//டிஸ்கி : எவனாவது என்கூட படம் பாத்த பொண்ண பத்தி அப்புறம் என்ன ஆச்சுன்னு கேட்டிங்க பிச்சு போடுவேன் பிச்சு //

கேட்கல. அதுக்குப்புறம் உங்களுக்கு என்ன ஆச்சு? :-)
///

ஹி.ஹி.ஹி....... எப்ப பாத்தாலும் காரியத்துலே கண்ணா இருக்கிங்களே

மங்குனி அமைச்சர் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

எந்திரன் நல்ல பொழுது போக்கு படம்..அதில் சந்தேகம் இல்லை செம ஹிட் ஆகும்///

ஹிட் ஆனா நல்லதுதான சார்

மங்குனி அமைச்சர் said...

LK said...

எலேய் இன்னிக்கு படம் பார்த்தப்புறம் வந்து பேசிக்கிறேன் உன்னை///

ரைட்டு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

thiyettarla watchman velai pakkurathukku lolla paaru ekathaalatha paaru

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

thiyettarla watchman velai pakkurathukku lolla paaru ekathaalatha paaru
///

ரமேஷ் சார் , வாட்ச்மேன் வேலை பாக்குறேன்னு சொல்லி என்னைய ரொம்ப அசிங்கப்படுத்திங்க , நான் கவுரவமா பிச்சை எடுத்து வாழ்ந்துகிட்டு இருக்கேன் . பதிவ ஒழுங்கா படிக்கலையா ?

என்னது நானு யாரா? said...

அப்போ முதல் பாதி வரைக்கும் பார்க்குறதுக்கு டிக்கெட் விலையில 50% தள்ளுபடி கொடுக்கிற மாதிரி எந்த தியாட்டரிலாவது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கா அமைச்சரே?

சும்மா ஜெனரல் நாலெட்ஜ்க்காக கேட்டேன். தெரிஞ்சா சொல்லுங்க. நமக்கு பயன்படும்.

vinu said...

naaan innum paakvillai so ungal karuththai aammothikkavoooooooo eathirkkavoooooooo ennam illathathaal pinar varugiraennnnnnnn

ஜெயந்த் கிருஷ்ணா said...

யோவ் மங்குனி படம் பாத்தா கதைய விடுயா... பக்காத்தில உக்காந்த அந்த பிகர பத்தி சொல்லு...

கருடன் said...

(எக்ஸ்கியுஸ் மீ சார் ப்ளாக் உள்ள வரலாமா?)

@மங்குனி

/ அதுல நமக்கு ரெகுலரா பிச்சை போடுற ஒரு பொண்ணு (அண்ணா யுனிவர்சிட்டில இப்ப செகண்டு இயற் படிக்குது )//

இதுக்கு முன்னாடி உங்க பக்கத்துல உக்காந்து பிச்சை எடுத்துதா?? அதான் ரெகுலரா பிச்சை போடராங்களா?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

//டிஸ்கி : எவனாவது என்கூட படம் பாத்த பொண்ண பத்தி அப்புறம் என்ன ஆச்சுன்னு கேட்டிங்க பிச்சு போடுவேன் பிச்சு /

//

சரி..சரி.. பிச்சுப்போட்டுட்டு சொல்லு..
பிகர் அட்ட்ட்ட்டா.. இல்ல அடாடாடாடாசா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஒரு அட்டு பிகரோட படம் பாத்துட்டு வந்து பண்ற அலும்ப பாரு, கொழுப்பப் பாரு, எகத்தாளத்தப் பாரு?

Unknown said...

இரண்டாம் பாதி மொத்தமும் உங்கள் சில்மிசத்த மொத்த தியேட்டரும் பாத்துச்சாமே உண்மையா ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கே.ஆர்.பி.செந்தில் said...
இரண்டாம் பாதி மொத்தமும் உங்கள் சில்மிசத்த மொத்த தியேட்டரும் பாத்துச்சாமே உண்மையா ..///


அந்த CD நம்ம கிட்டதான் இருக்கு, you tube-ல ஏத்தலாமா? இல்ல வெச்சி பேரம் பேசுனா ஏதாவது தேறுமான்னு பாத்துக்கிட்டு இருக்கேன்!

உமர் | Umar said...

//எவனாவது என்கூட படம் பாத்த பொண்ண பத்தி அப்புறம் என்ன ஆச்சுன்னு கேட்டிங்க பிச்சு போடுவேன் பிச்சு //

படம் முடிஞ்சி வெளியில வரும்போதே டிக்கெட்ட பிச்சி போடற பழக்கம் கிடையாதா? இப்ப போயி பிச்சி போடுறீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// கும்மி said...
//எவனாவது என்கூட படம் பாத்த பொண்ண பத்தி அப்புறம் என்ன ஆச்சுன்னு கேட்டிங்க பிச்சு போடுவேன் பிச்சு //

படம் முடிஞ்சி வெளியில வரும்போதே டிக்கெட்ட பிச்சி போடற பழக்கம் கிடையாதா? இப்ப போயி பிச்சி போடுறீங்க?///

அது அந்தப் பிச்சக்காரி கொடுத்த டிக்கட்டுல, ஞாபகமா வெச்சுப்பாராக்கும்!

உமர் | Umar said...

//அது அந்தப் பிச்சக்காரி கொடுத்த டிக்கட்டுல, ஞாபகமா வெச்சுப்பாராக்கும்! //

ஆட்டோகிராப் படம் மாதிரி ஆட்டோகிராப் பதிவு போடுவாரோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சேரன ஆட்டொகிராப்பு போட்டுப்புட்டாரு, மங்குனிக்கு டிவில மெகாசீரியல்தான் எடுக்கனும்!

சௌந்தர் said...

ரெண்டாவது பாதி நீங்க படம் பார்த்தீங்களா இல்லை அந்த

access said...

உங்களின் நேர்மையான உண்மையான
நாணயமான
சாரி நகைச்சுவையான
விமர்சனத்திற்கு நன்றி
நான் சொல்ல வந்ததை நீங்க சொல்லீடீங்க
முதல் பாதி கலக்கல் காமெடி
இரண்டாம் பாதி சிறு பிள்ளை தனமான
கிராபிக்ஸ் கலக்கல் சாரி கொலை

Jayadev Das said...

இதுவரைக்கும் படிச்சதெல்லாம் ரஜினி பையித்தியம் என்ற சாயத் தொட்டியில் விழுந்த நரிகளின் விமர்சனம் மட்டுமே. படத்துக்கு முன்னாடி போடுற விளம்பரத்துல இருந்து படம் முடிஞ்சதுக்காப்புரம் போடுற லைட் வரைக்கும் ஆஹா.. ஓஹோ... என்று இருப்பதாக பீலா விட்டுக் கொண்டிருக்கின்றனர். இப்பத்தான் படத்தோட சாயம் கொஞ்சம் கொஞ்சமா வெளுக்க ஆரம்பிச்சிருக்குது. இது போல நடுநிலையான விமர்சகர்களின் விமர்சனம் வந்தால் தான் படத்தின் உண்மையான லட்சணம் புரியும்.

Jayadev Das said...

.

'பரிவை' சே.குமார் said...

nalla vimarsanam...

ellarum sum tv mathiri enthiranai katti ezhukkirathai eppa viduvinga amaichcharey?

Anonymous said...

Sabhash... Nanum ithe thaan nenachen.,, intha padatjukku rajini ye thevai ellai....

Unknown said...

மிக அருமையான பதிவு

http://denimmohan.blogspot.com/

Anonymous said...

Sir, Padam bayangara bore. Indha padathukku ivalavu build up thevayaa??? Earkanavae ROBOT hindiyila FLOP aayiduchi. Andhravilum edhirpartha alavukku illa. Tamilians seekram vivaram theriyarthukulla, eppadiyavadhu, innum one weekla panatha allanum. After One week, neraya theatreyilirundhu padathai edukku pogiraargal.

பங்குனி தளபதி said...

எந்திரனுக்கு டேரக்டாவே டிக்கட்டை பிச்சை எடுத்துத்தான் பார்த்தேன் என்று எழுதி இருப்பது... பிரபல சினிமா விமர்சன பதிவர் ......க்கு செம கிண்டல்.


//கும்மி//---அயோத்தி தீர்ப்பால் இன்ப போதையில் ஒரு வாரமாய் காணாமல்போன நான்கில் ஒரு அழுக்கு ராஜா விழிச்சாச்சு...

மங்குனி அமைச்சர் said...

என்னது நானு யாரா? said...

அப்போ முதல் பாதி வரைக்கும் பார்க்குறதுக்கு டிக்கெட் விலையில 50% தள்ளுபடி கொடுக்கிற மாதிரி எந்த தியாட்டரிலாவது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கா அமைச்சரே?

சும்மா ஜெனரல் நாலெட்ஜ்க்காக கேட்டேன். தெரிஞ்சா சொல்லுங்க. நமக்கு பயன்படும்.
/////

கொஞ்ச நாள்ல கண்டிப்பா உங்களுக்கு 50 % ஆப்பார்ல டிக்கட் கிடைக்கும் .

மங்குனி அமைச்சர் said...

vinu said...

naaan innum paakvillai so ungal karuththai aammothikkavoooooooo eathirkkavoooooooo ennam illathathaal pinar varugiraennnnnnnn/////

சீக்கிரம் பாத்துட்டு வாங்க

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

யோவ் மங்குனி படம் பாத்தா கதைய விடுயா... பக்காத்தில உக்காந்த அந்த பிகர பத்தி சொல்லு...///

சார் , டிஸ்கிய படிக்காம விட்டிகளோ ? போய் கொஞ்சம் படிச்சு பாருங்க ராசா

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

(எக்ஸ்கியுஸ் மீ சார் ப்ளாக் உள்ள வரலாமா?)////

எஸ் கம் இன் ...........

என்ன இருந்தாலும் படிச்சவன் , படிச்சவன் தான் , நிரூபிச்சிட்டா ராசா ........


////@மங்குனி

/ அதுல நமக்கு ரெகுலரா பிச்சை போடுற ஒரு பொண்ணு (அண்ணா யுனிவர்சிட்டில இப்ப செகண்டு இயற் படிக்குது )//

இதுக்கு முன்னாடி உங்க பக்கத்துல உக்காந்து பிச்சை எடுத்துதா?? அதான் ரெகுலரா பிச்சை போடராங்களா?////


எங்க சுத்தினாலும் எல்லாபயபுல்லை களும் அந்த பிகர்மேலே ஒரு கண்ணா இருக்கானுக

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

//

சரி..சரி.. பிச்சுப்போட்டுட்டு சொல்லு..
பிகர் அட்ட்ட்ட்டா.. இல்ல அடாடாடாடாசா?////

வாப்பா வந்துதிய்யா ... எங்கிட்டு போனாலும் கேட் போடுரானுகளே

மங்குனி அமைச்சர் said...

49

மங்குனி அமைச்சர் said...

ஐ .... போட்டேன் பாரு 50

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஒரு அட்டு பிகரோட படம் பாத்துட்டு வந்து பண்ற அலும்ப பாரு, கொழுப்பப் பாரு, எகத்தாளத்தப் பாரு?////

போறாம வயித்தெரிச்சல்

மங்குனி அமைச்சர் said...

கே.ஆர்.பி.செந்தில் said...

இரண்டாம் பாதி மொத்தமும் உங்கள் சில்மிசத்த மொத்த தியேட்டரும் பாத்துச்சாமே உண்மையா ..////

அப்படியா , நான் கவனிக்கலையே
நான் ரொம்ப பிசியா இருந்தேன் சார் , அட படம் பாக்குறத சொன்னே சார்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கே.ஆர்.பி.செந்தில் said...
இரண்டாம் பாதி மொத்தமும் உங்கள் சில்மிசத்த மொத்த தியேட்டரும் பாத்துச்சாமே உண்மையா ..///


அந்த CD நம்ம கிட்டதான் இருக்கு, you tube-ல ஏத்தலாமா? இல்ல வெச்சி பேரம் பேசுனா ஏதாவது தேறுமான்னு பாத்துக்கிட்டு இருக்கேன்!////

எனகொன்னு,எனகொன்னு

மங்குனி அமைச்சர் said...

கும்மி said...

படம் முடிஞ்சி வெளியில வரும்போதே டிக்கெட்ட பிச்சி போடற பழக்கம் கிடையாதா? இப்ப போயி பிச்சி போடுறீங்க?////

என்ன சார் நீங்க , அது என் கேர்ள் பிரண்டு கொடுத்தது , பத்திரமா செத்து வச்சிக்கிட்டு இருக்கேன்

மங்குனி அமைச்சர் said...

கும்மி said...

//அது அந்தப் பிச்சக்காரி கொடுத்த டிக்கட்டுல, ஞாபகமா வெச்சுப்பாராக்கும்! //

ஆட்டோகிராப் படம் மாதிரி ஆட்டோகிராப் பதிவு போடுவாரோ?///

இது வரைக்கு எட்டு பேரைத்தான் லவ் பண்ணிருக்கேன் , பத்தாகட்டும் ஆட்டோகிராப் பதிவு பாடலாமுன்னு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்

மங்குனி அமைச்சர் said...

சௌந்தர் said...

ரெண்டாவது பாதி நீங்க படம் பார்த்தீங்களா இல்லை அந்த////

இந்த இடத்தில் கேள்விக்குறியா , இல்லை ஆச்சரியக்குறியா ???

மங்குனி அமைச்சர் said...

access said...

உங்களின் நேர்மையான உண்மையான
நாணயமான
சாரி நகைச்சுவையான
விமர்சனத்திற்கு நன்றி
நான் சொல்ல வந்ததை நீங்க சொல்லீடீங்க
முதல் பாதி கலக்கல் காமெடி
இரண்டாம் பாதி சிறு பிள்ளை தனமான
கிராபிக்ஸ் கலக்கல் சாரி கொலை////

ரொம்ப நன்றி access (ஆமா இது என்ன பேருங்க ?)

மங்குனி அமைச்சர் said...

Jayadeva said...

இதுவரைக்கும் படிச்சதெல்லாம் ரஜினி பையித்தியம் என்ற சாயத் தொட்டியில் விழுந்த நரிகளின் விமர்சனம் மட்டுமே. படத்துக்கு முன்னாடி போடுற விளம்பரத்துல இருந்து படம் முடிஞ்சதுக்காப்புரம் போடுற லைட் வரைக்கும் ஆஹா.. ஓஹோ... என்று இருப்பதாக பீலா விட்டுக் கொண்டிருக்கின்றனர். இப்பத்தான் படத்தோட சாயம் கொஞ்சம் கொஞ்சமா வெளுக்க ஆரம்பிச்சிருக்குது. இது போல நடுநிலையான விமர்சகர்களின் விமர்சனம் வந்தால் தான் படத்தின் உண்மையான லட்சணம் புரியும்.////

நன்றி ஜெயதேவா

மங்குனி அமைச்சர் said...

சே.குமார் said...

nalla vimarsanam...

ellarum sum tv mathiri enthiranai katti ezhukkirathai eppa viduvinga amaichcharey?////

என்னையும் செத்துத்தானே ................ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அஞ்சா சிங்கம் said...

யோவ் மங்குனி முக்கிய வேடத்தில் நடித்த அந்த கொசுவை பற்றி ஒன்னுமே சொல்லலையே . என்னமோ போ .

மங்குனி அமைச்சர் said...

Anonymous said...

Sabhash... Nanum ithe thaan nenachen.,, intha padatjukku rajini ye thevai ellai....////

கொஞ்சம் உங்க பேரோட கமன்ட் போட்டு இருந்திகன்னா நல்லா இருக்கும்

மங்குனி அமைச்சர் said...

denim said...

மிக அருமையான பதிவு

http://denimmohan.blogspot.com////

மிக்க நன்றி டெனிம்

மங்குனி அமைச்சர் said...

Anonymous said...

Sir, Padam bayangara bore. Indha padathukku ivalavu build up thevayaa??? Earkanavae ROBOT hindiyila FLOP aayiduchi. Andhravilum edhirpartha alavukku illa. Tamilians seekram vivaram theriyarthukulla, eppadiyavadhu, innum one weekla panatha allanum. After One week, neraya theatreyilirundhu padathai edukku pogiraargal.////

ரொம்ப நன்றி , அதுத்த முறை பேரோடு கமன்ட் போடுங்கள் பிளீஸ்

மங்குனி அமைச்சர் said...

மண்டையன் said...

யோவ் மங்குனி முக்கிய வேடத்தில் நடித்த அந்த கொசுவை பற்றி ஒன்னுமே சொல்லலையே . என்னமோ போ .////

அட ஆமாங்க , நமக்கு எங்க அந்த அளவுக்கு புத்தி இருக்கு ?

செல்வா said...

// ரஜினியோட ஸ்டைல்,மேனரிசம், பஞ்ச டையலாக் எதுவமே இல்லை.இது டைரக்டர் சங்கர் படம்.//

அட அட .. என்ன கண்டுபிடிப்பு ..?

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

// ரஜினியோட ஸ்டைல்,மேனரிசம், பஞ்ச டையலாக் எதுவமே இல்லை.இது டைரக்டர் சங்கர் படம்.//

அட அட .. என்ன கண்டுபிடிப்பு ..?////


வாப்பு , உலகம் உருடைன்னு கொலபசுக்கே நாங்க தான் கண்டு புடுச்சு சொன்னோம்

Anonymous said...

wow supar

சி.பி.செந்தில்குமார் said...

உங்க ஃபாலோயர் ஆகலாம்னு பார்த்தா,என்ன கொடுமை சார் இது,ஏற்கனவே ஃபாலோயரா இருக்கேன்,சரி இண்ட்லில,தமிழ்10 ல ஓட்டு போட்டுட்டேன்,ஏன் சார் தமிழ்மணம் ஓட்டு எனக்கு விழ மாட்டேங்குது/? யார் கிட்ட புகார் பண்ணனும்?

Anonymous said...

இன்று வரை எந்திரன் கரூரில் வெளியிடப்படவில்லை

Jaleela Kamal said...

ஒரு வழியா படத்த பார்த்தாச்சு,
முதல உங்க வீட்டம்மா மெயில் ஐடி கொடுங்க.