எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Saturday, July 31, 2010

கேப்மாரி பில்டர்ஸ்

இப்ப எங்க பாத்தாலும் லேயவுட் போட்டு அவனுக பண்ணுற அளப்பர தாங்க முடியலைங்க , முக்கியமா அவனுக NRI தான் குறிவக்கிரானுக ...... நமக்கு தான் நிறைய NRI பிரண்ட்ஸ் இருக்காங்களே அப்படின்னு நானும் அந்த பிசினஸ்ஸ ஆரம்பிச்சிட்டேன் . டீடைல்ஸ் கீழ இருக்கு ....


கேப்மாரி பில்டர்ஸ் வழங்கும் V.V.I.P நகர் (இப்படி போட்டாதான் பயபுள்ளைக உச்சி குளுந்துபோய் வாங்குறாங்க )

சென்னை நகருக்கு மிக அருகில் , ஏர்போர்ட்டிலிருந்து பத்து நிமிட பயணத்தில் (பத்து நிமிடம் பிளைட்ல போகணும் ) நேசனல் ஹைவேசுக்கு(இதுக்கும் பிளைட்லதான் போகனும்) பக்கத்தில் அமைத்துள்ளது நமது V.V.I.P நகர்.

இது உங்களுக்காவென்றே பிரத்தியேகமாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. அரசிடமிருந்த ABCD அப்ரூவல் பெற்ற மனைகள் .

V.V.I.P நகரில் நான்கைந்து இடங்களில் ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டு அப்படியே உங்களுக்காக மூடாமல் விட்டு இருக்கிறோம். எனவே குழந்தைகளை நீங்கள் வெளியே விட மாட்டிங்க. அதுனால விளையாட்டு திடல் அமைத்து இடம் வீணாகாமல் உங்களுக்காக கேப்மாரி பில்டர்ஸ் மிச்சப்படுத்தி இருக்காங்க .

வீட்டு மனைகளுக்கு தண்ணி வசதி ரொம்ப முக்கியம் , எங்க கேப்மாரி பில்டர்ஸ் வழங்கும் V.V.I.ப நகரில் நீங்கள் 1000 அடி தோண்டினாலும் தண்ணிவராது , எனவே உங்கள் வசதிக்காக நாங்களே ஒரு லிட்டர் தண்ணீர் 21 ரூபாயிக்கு குறைந்த விலையில் சப்பளை செய்கிறோம் .

அப்புறம் முக்கியமாக இந்த நகரை சுற்றி அடர்ந்த காட்டுப் பகுதியாக இருப்பதால் நிறைய கொடிய மிருகங்களின் நடமாட்டம் இருக்கும் , எனவே உங்களுக்கு திருட்டு பயம் சுத்தமாக தேவை இல்லை . அதேபோல் சொந்த காரவுங்க யாரும் பயந்துகிட்டு வந்து போக மாட்டாங்க , இது தான் இந்த கேப்மாரி பில்டர்ஸ் வழங்கும் V.V.I.P நகரின் சிறப்பு அம்சம்.


அது மட்டும் இல்லைங்க , இந்த நகரை சுற்றி மருத்துவகல்லூரி , இன்ஜினியரிங் காலேஜ் , கலக்டர் அலுவலகம் , ICICI மற்றும் AXIS Banks , பள்ளி வளாகம் , பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரயில்வே ஸ்டேசன் எல்லாம் இன்னும் குறைந்தது நூறு ஆண்டுகளுக்கு எதுவுமே வராது எனவே நீங்கள் டிராபிக் தொல்லை இல்லாமல் இருக்கலாம் .

என்ன உங்க மனைய தேர்வு செய்திட்டிங்களா ? ரூபாய் 99999999999 குடுத்து இப்பவே புக் பண்ணினால் இருநூறு தங்க காசுகள் இலவசம் .

அது தவிர ஒரு மனை வாங்கினால் , மூன்று மனைகள் இலவசமாக உங்களுக்காக வழங்குறாங்க கேப்மாரி பில்டர்ஸ் . இன்னும் பதினைந்து நாட்ட்களில் நீங்க ரிஜிஸ்தர் பண்ணிங்கன்னா LCD டி.வி., பிரிட்சு , ஹோம் தியேட்டர் , மைக்ரோ ஓவன் , ஆட்டோமேடிக் வாசிங் மெசின் என நிச்சைய பரிசுகள் உண்டு .


72 comments:

எல் கே said...

nijamave intha builders tollai taangala ippa

Unknown said...

இப்ப பரவாயில்லைங்க, என் நண்பர் சிங்கப்பூரில் இருந்துகொண்டு பத்து லட்சம் கொடுத்து வாங்கினார், இன்னும் பத்து ஆண்டுகள் போனாலும் அந்த அமோவுண்டுக்கு விக்க முடியாது..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

நாங்க வேற இடத்துல பிளாட் வாங்கிக்கிறோம்...

உங்க சலுகைகள் சரியில்ல.. :D :D

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

////அது மட்டும் இல்லைங்க , இந்த நகரை சுற்றி மருத்துவகல்லூரி , இன்ஜினியரிங் காலேஜ் , கலக்டர் அலுவலகம் , ICICI மற்றும் AXIS Banks , பள்ளி வளாகம் , பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரயில்வே ஸ்டேசன் எல்லாம் இன்னும் குறைந்தது நூறு ஆண்டுகளுக்கு எதுவுமே வராது ////

அடுத்த நூறு வருஷத்துக்குள வந்திரோம்ல :))))

எப்படியும் ஒரு நிலத்தை வாங்கி போட்டு தன்னை தானே ஏமாற்றுவோர் சங்கம்

அருண் பிரசாத் said...

கேப்மாரி பில்டர்ஸ்கு பக்கதிலயே ஒரு மொள்ளமாரி பில்டர்ஸ் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். உங்க அறிவுரை என்ன மங்குனி?

ஜெயந்த் கிருஷ்ணா said...

அமைச்சரே நமக்கொரு வீடு பார்சல்ல அனுப்ப முடியுமா...

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

மங்கு ,
ஜெ கடைக்கு போய் பாரேன்...,பண்டோரா,மில்கி வே ,galaxy ,இந்திரலோகம் லா இருந்து எந்திரன் பாட்ட விமர்சிக்க சொல்றாங்க ...,ஒரே ஆச்சர்யமா இருக்கு ...நேத்து இரவு யாரோ பிளான் பண்ணி ஜெ ப்ளோக சிதைசிருக்காங்க :))))))))

ஜெய்லானி said...

வீடு எனக்கு வேனாம் பார்ட்னரா சேர என செய்ய....?

மங்குனி அமைச்சர் said...

LK said...

nijamave intha builders tollai taangala ippa ///

அப்ப உங்களுக்கு பிளாட் வேண்டாமா ?

மங்குனி அமைச்சர் said...

கே.ஆர்.பி.செந்தில் said...

இப்ப பரவாயில்லைங்க, என் நண்பர் சிங்கப்பூரில் இருந்துகொண்டு பத்து லட்சம் கொடுத்து வாங்கினார், இன்னும் பத்து ஆண்டுகள் போனாலும் அந்த அமோவுண்டுக்கு விக்க முடியாது..////

எங்க கிட்ட வாங்க சொல்லுங்க , அப்படி பட்ட ஆளுதான் எங்களுக்கு வேணும்

மங்குனி அமைச்சர் said...

Ananthi said...

நாங்க வேற இடத்துல பிளாட் வாங்கிக்கிறோம்...

உங்க சலுகைகள் சரியில்ல.. :D :D////

மேடம் உங்களுக்கா ஒரு மனை வாங்கினால் , ஆறு மனைகள் பிரீயா தர்றோம்

மங்குனி அமைச்சர் said...

பனங்காட்டு நரி said...

////அது மட்டும் இல்லைங்க , இந்த நகரை சுற்றி மருத்துவகல்லூரி , இன்ஜினியரிங் காலேஜ் , கலக்டர் அலுவலகம் , ICICI மற்றும் AXIS Banks , பள்ளி வளாகம் , பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரயில்வே ஸ்டேசன் எல்லாம் இன்னும் குறைந்தது நூறு ஆண்டுகளுக்கு எதுவுமே வராது ////

அடுத்த நூறு வருஷத்துக்குள வந்திரோம்ல :))))

எப்படியும் ஒரு நிலத்தை வாங்கி போட்டு தன்னை தானே ஏமாற்றுவோர் சங்கம்///


என்ன ஒரு தொலைநோக்கு பார்வை

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

கேப்மாரி பில்டர்ஸ்கு பக்கதிலயே ஒரு மொள்ளமாரி பில்டர்ஸ் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். உங்க அறிவுரை என்ன மங்குனி?///


அதுக்கு பக்கத்துல நூறு வருசத்துக்கு ஒன்னும் வராதுன்னு சொல்லிருக்கேன் , அது உங்களுக்கும் சேத்து தான்

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

அமைச்சரே நமக்கொரு வீடு பார்சல்ல அனுப்ப முடியுமா...////


அதுக்கு தானே வச்சு இருக்கோம் ? நீங்க பணத்த என் அக்கவுன்ட்டுல கிரடிட் பண்ண உடனே பார்சல் அனுப்பிடுவோம்

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...

வீடு எனக்கு வேனாம் பார்ட்னரா சேர என செய்ய....?///

அப்படி வா ஜெய்லானி , இது சம்பந்தமா நாம ரகசியமா மெயில் ல பேசிகல்லாம்

மங்குனி அமைச்சர் said...

பனங்காட்டு நரி said...

மங்கு ,
ஜெ கடைக்கு போய் பாரேன்...,பண்டோரா,மில்கி வே ,galaxy ,இந்திரலோகம் லா இருந்து எந்திரன் பாட்ட விமர்சிக்க சொல்றாங்க ...,ஒரே ஆச்சர்யமா இருக்கு ...நேத்து இரவு யாரோ பிளான் பண்ணி ஜெ ப்ளோக சிதைசிருக்காங்க :))))))))////

நேத்தே பாத்தேன் ஒன்னும் இல்லையே ? இரு மறுபடியும் பாக்குறேன்

Anonymous said...

மங்குனி இவ்ளோ நல்ல திட்டங்கள் இருக்கே அப்போ உள்ளூர் வாசிகள்கும்( எனக்கு தான் ) ஒரு பிளாட் கிடைக்காதா ?

சாருஸ்ரீராஜ் said...

இப்போதைக்கு பிளாட் வாங்கும் எண்ணம் இல்லை , வாங்கும் போது கட்டாயமாக உங்கள் கேப்மாரி பில்டர்ஸை அணுகுகிறேன்.

பார்த்து எற்கனவே போலீஸ் தேடிகிட்டு இருக்கு , இப்ப இந்த ரியல் எஸ்டேட் பிஸ்னசுமா , உங்களை அந்த ஆண்டவன் தான் காப்பாத்தனும் ஹா ஹா....

பித்தனின் வாக்கு said...

anna ennaiyum partnerra serthukkunga. pattapatti moonu, veliyurukku nallu, jailanikku pathu site vithrulam. retaikku commission kodutha pothum ivangalai kothu viduvar. namma patta oruthar pothum ithu pola 1000 site vanguvar. eppdi namma idea????

vasu balaji said...

முக்கியமா சனி ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் மனையை பார்வையிட பேருந்து வசதி செய்யப்படும் போடலயே. அப்புறமெப்படி கல்லா கட்டுறது?

மர்மயோகி said...

எப்படித்தான் யோசிக்கிறீங்களோ.
சிரிப்பை அடக்க முடியவில்லை அமைச்சரே..

vinu said...

kalakkal manguni appidiyea oru share warra lobaththilea ingittu annupurathu ok

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

டாஸ்மாக் இருக்குதா?

Anonymous said...

//ரூபாய் 99999999999 குடுத்து இப்பவே புக் பண்ணினால் இருநூறு தங்க காசுகள் இலவசம் //

அடிங் கொய்யாலே.. என்ன இது சின்னப்புள்ளத் தனமா இருக்கு.. ராஸ்கல்..

இராகவன் நைஜிரியா said...

ஹி...ஹி...

Jey said...

//இந்த நகரை சுற்றி///

டாஸ்மாக் இல்லியே அமைச்சரே, எனக்கு இந்த இடத்துல வீடு வேண்டாம்....

எம் அப்துல் காதர் said...

//வீடு எனக்கு வேனாம் பார்ட்னரா சேர என செய்ய....?///

//அப்படி வா ஜெய்லானி, இது சம்பந்தமா நாம ரகசியமா மெயில்ல பேசிகல்லாம்//

இதுல ஏதோ உள் குத்து இருக்கு. அமைச்சரவைய கூட்டி பேசினாத் தான் நாங்க ஒப்புக்குவோம். என்னாங்கிறீங்க!!

Anonymous said...

கலக்கலோ கலக்கல்.....வயிறு புண்ணாயிடுச்சு...

எல் கே said...

//அப்ப உங்களுக்கு பிளாட் வேண்டாமா /

vendaaam

'பரிவை' சே.குமார் said...

வீடு எனக்கு வேனாம்... உங்க சலுகைகள் சரியில்ல..

ஜெயந்தி said...

அந்த தங்கக் காசுகளை மட்டும் என்னிடம் கொடுத்துவிடுங்கள்.

வார்த்தை said...

காத்தாவது வீசுமா....?
இல்ல அதுக்கும் .....

சிநேகிதன் அக்பர் said...

மங்குனி இதெல்லாம் அமைச்சரைவையில முடிவு பண்ணிதான் செய்றீங்களா.

இதுல ஜெய்லானியும் கூட்டா? நடக்கட்டும்.

எனக்கு அந்த இலவச ஃபளாட் மட்டும் கிடைக்குமா :)

மங்குனி அமைச்சர் said...

sandhya said...

மங்குனி இவ்ளோ நல்ல திட்டங்கள் இருக்கே அப்போ உள்ளூர் வாசிகள்கும்( எனக்கு தான் ) ஒரு பிளாட் கிடைக்காதா ? ///


உங்க தலை எழுத்து , சொந்த காலுல சூனிய வச்சுகிரனுமின்னு அடம் புடுக்கிரிங்க , வாழ்க வளமுடன்

எத்தினை பிளாட் வேணும் மேடம் , உடனே புக் பண்ணிடுவோம்

மங்குனி அமைச்சர் said...

சாருஸ்ரீராஜ் said...

இப்போதைக்கு பிளாட் வாங்கும் எண்ணம் இல்லை , வாங்கும் போது கட்டாயமாக உங்கள் கேப்மாரி பில்டர்ஸை அணுகுகிறேன்.

பார்த்து எற்கனவே போலீஸ் தேடிகிட்டு இருக்கு , இப்ப இந்த ரியல் எஸ்டேட் பிஸ்னசுமா , உங்களை அந்த ஆண்டவன் தான் காப்பாத்தனும் ஹா ஹா.... ////

என்ன பண்றது மேடம் வயித்து பொழப்பு

மங்குனி அமைச்சர் said...

பித்தனின் வாக்கு said...

anna ennaiyum partnerra serthukkunga. pattapatti moonu, veliyurukku nallu, jailanikku pathu site vithrulam. retaikku commission kodutha pothum ivangalai kothu viduvar. namma patta oruthar pothum ithu pola 1000 site vanguvar. eppdi namma idea????////


வாங்க பித்தன் சார் , நல்லா இருக்கிங்களா ??

மங்குனி அமைச்சர் said...

வானம்பாடிகள் said...

முக்கியமா சனி ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் மனையை பார்வையிட பேருந்து வசதி செய்யப்படும் போடலயே. அப்புறமெப்படி கல்லா கட்டுறது?///

சார் , எல்லாம் NRI பார்ட்டிதான் வேணும் , நோ லோகல் (லோகல் காரனுகளுக்கு தெரிஞ்சு போகும் சார் ) அதுனால நோ ட்ரிப்ஸ்

மங்குனி அமைச்சர் said...

மர்மயோகி said...

எப்படித்தான் யோசிக்கிறீங்களோ.
சிரிப்பை அடக்க முடியவில்லை அமைச்சரே.///

ஹலோ சிரிக்கிறதுக்காக இத போடல , பிளாட் எப்ப புக் பண்றீங்க ?

மங்குனி அமைச்சர் said...

vinu said...

kalakkal manguni appidiyea oru share warra lobaththilea ingittu annupurathu ok///

சார் , பஸ்ட்டு பிளாட் புக் பண்ணுங்க

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

டாஸ்மாக் இருக்குதா?///

அது இல்லாமலா ?

மங்குனி அமைச்சர் said...

Indhira said...

//ரூபாய் 99999999999 குடுத்து இப்பவே புக் பண்ணினால் இருநூறு தங்க காசுகள் இலவசம் //

அடிங் கொய்யாலே.. என்ன இது சின்னப்புள்ளத் தனமா இருக்கு.. ராஸ்கல்..///

மேடம் பத்தலைனா சொல்லுங்க இன்னும் நூறு தங்க காசுகள் செத்து தர்றோம்

மங்குனி அமைச்சர் said...

இராகவன் நைஜிரியா said...

ஹி...ஹி...///


வாங்க ராகவன் சார் , அப்ப ரெண்டு பிளாட் புக் பண்ணிறவா ??

மங்குனி அமைச்சர் said...

Jey said...

//இந்த நகரை சுற்றி///

டாஸ்மாக் இல்லியே அமைச்சரே, எனக்கு இந்த இடத்துல வீடு வேண்டாம்....////

யோவ் , அது இல்லாம விடுவனா , கண்டிப்பா இருக்கப்பு

மங்குனி அமைச்சர் said...

எம் அப்துல் காதர் said...

//வீடு எனக்கு வேனாம் பார்ட்னரா சேர என செய்ய....?///

//அப்படி வா ஜெய்லானி, இது சம்பந்தமா நாம ரகசியமா மெயில்ல பேசிகல்லாம்//

இதுல ஏதோ உள் குத்து இருக்கு. அமைச்சரவைய கூட்டி பேசினாத் தான் நாங்க ஒப்புக்குவோம். என்னாங்கிறீங்க!!////

எச்சூச்மி சார் , அதெல்லாம் சும்மா தமாசுக்கு , ஜெயலானியும் இந்த புராஜெக்க்ள பார்னர் தான்

மங்குனி அமைச்சர் said...

ஜூனியர் தருமி said...

கலக்கலோ கலக்கல்.....வயிறு புண்ணாயிடுச்சு...////


வாங்க தருமி , நன்றி

மங்குனி அமைச்சர் said...

LK said...

//அப்ப உங்களுக்கு பிளாட் வேண்டாமா /

vendaaam./..///

சார் அப்ப நான் எப்படி போலிக்கிறது , உங்கள நம்பித்தான் பில்டரானேன் ?

மங்குனி அமைச்சர் said...

சே.குமார் said...

வீடு எனக்கு வேனாம்... உங்க சலுகைகள் சரியில்ல..////

சார் , உங்ககளுக்காக இன்னும் நிறைய ஆபார் வேணா தர்றோம்

மங்குனி அமைச்சர் said...

ஜெயந்தி said...

அந்த தங்கக் காசுகளை மட்டும் என்னிடம் கொடுத்துவிடுங்கள்.////

இது நல்லா இருக்கே ? மேடம் எல்லாம் போலி தங்க காசு

மங்குனி அமைச்சர் said...

வார்த்தை said...

காத்தாவது வீசுமா....?
இல்ல அதுக்கும் .....////


அது கூட குறிஞ்ச விலைல நாங்களே சப்ளை பண்றோம் சார்

மங்குனி அமைச்சர் said...

50

மங்குனி அமைச்சர் said...

அக்பர் said...

மங்குனி இதெல்லாம் அமைச்சரைவையில முடிவு பண்ணிதான் செய்றீங்களா.

இதுல ஜெய்லானியும் கூட்டா? நடக்கட்டும்.

எனக்கு அந்த இலவச ஃபளாட் மட்டும் கிடைக்குமா :)////

சார் , ஒரு பிளாட் வாங்குனா மூணு பிளாட் இலவசம்

சீமான்கனி said...

சுடுகாட்டுல பிளாட்டு போட்டு வச்சுகிட்டு அமைச்சருக்கு அலப்பறைய பாரு...ஐயா நாங்க 80 வயசுல வந்து வாங்கிக்கிறோம்...

Katz said...

மனை வாங்குனா கூட மனைவியும் தருவிங்களா?

Chitra said...

அது தவிர ஒரு மனை வாங்கினால் , மூன்று மனைகள் இலவசமாக உங்களுக்காக வழங்குறாங்க கேப்மாரி பில்டர்ஸ் . இன்னும் பதினைந்து நாட்ட்களில் நீங்க ரிஜிஸ்தர் பண்ணிங்கன்னா LCD டி.வி., பிரிட்சு , ஹோம் தியேட்டர் , மைக்ரோ ஓவன் , ஆட்டோமேடிக் வாசிங் மெசின் என நிச்சைய பரிசுகள் உண்டு .


....... மாப்பு..... வச்சுட்டாங்கையா ஆப்பு!

மங்குனி அமைச்சர் said...

சீமான்கனி said...

சுடுகாட்டுல பிளாட்டு போட்டு வச்சுகிட்டு அமைச்சருக்கு அலப்பறைய பாரு...ஐயா நாங்க 80 வயசுல வந்து வாங்கிக்கிறோம்...////


அது பக்கத்துல கூட சுடுகாடு இல்லைங்க

மங்குனி அமைச்சர் said...

வழிப்போக்கன் said...

மனை வாங்குனா கூட மனைவியும் தருவிங்களா?/////


ஆகா இவரு நம்மா மேட்ரிமோநியல்ஸ் வேற ஆரம்பிக்க சொல்லுவிக போல ?

மங்குனி அமைச்சர் said...

Chitra said...

அது தவிர ஒரு மனை வாங்கினால் , மூன்று மனைகள் இலவசமாக உங்களுக்காக வழங்குறாங்க கேப்மாரி பில்டர்ஸ் . இன்னும் பதினைந்து நாட்ட்களில் நீங்க ரிஜிஸ்தர் பண்ணிங்கன்னா LCD டி.வி., பிரிட்சு , ஹோம் தியேட்டர் , மைக்ரோ ஓவன் , ஆட்டோமேடிக் வாசிங் மெசின் என நிச்சைய பரிசுகள் உண்டு .


....... மாப்பு..... வச்சுட்டாங்கையா ஆப்பு!///


எச்சூச்மி மேடம் , உங்களுக்கு எத்தினை பிளாட் வேணுமின்னு சொல்லவே இல்லையே

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

வித்துட்டு ..பேசின காசை செட்டில் பண்ணு சீக்கிரம்...

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

வித்துட்டு ..பேசின காசை செட்டில் பண்ணு சீக்கிரம்...///

வாப்பு , எங்கபோன ரெண்டு நாளா ஆளக் காணும் ? உன் போன் நம்பர எனக்கு மெயில் பண்ணி விடு (சும்மா ஒரு சேபிடி, அவசரத்துக்கு தான் )

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மங்குனி அமைசர் said...

பட்டாபட்டி.. said...

வித்துட்டு ..பேசின காசை செட்டில் பண்ணு சீக்கிரம்...///

வாப்பு , எங்கபோன ரெண்டு நாளா ஆளக் காணும் ? உன் போன் நம்பர எனக்கு மெயில் பண்ணி விடு (சும்மா ஒரு சேபிடி, அவசரத்துக்கு தான் )
//

போன் நம்பர் என்னையா பெரிய போன் நம்பர்..

உம்-னு சொல்லு...வெளியூரானொட கிட்னியவே கூரியர்ல போட்டு அனுப்புறேன்...ஹி..ஹி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மங்குனி அமைசர் said...

பட்டாபட்டி.. said...

வித்துட்டு ..பேசின காசை செட்டில் பண்ணு சீக்கிரம்...///

வாப்பு , எங்கபோன ரெண்டு நாளா ஆளக் காணும் ? உன் போன் நம்பர எனக்கு மெயில் பண்ணி விடு (சும்மா ஒரு சேபிடி, அவசரத்துக்கு தான் )
//

போன் நம்பர் என்னையா பெரிய போன் நம்பர்..

உம்-னு சொல்லு...வெளியூரானொட கிட்னியவே கூரியர்ல போட்டு அனுப்புறேன்...ஹி..ஹி

வால்பையன் said...

எனக்கு சும்மா கொடுத்தாலும் வேண்டாம்

சீமான்கனி said...

//அது பக்கத்துல கூட சுடுகாடு இல்லைங்க//

அதுவே சுடுகாடு அதுக்கு பக்கத்துல ஒரு சுடுகாடு தேவையா...???என் கொ சா இது...

Shri ப்ரியை said...

என்ன அமைச்சரே... தாங்கள் போட்ட திட்டம் பிழைத்துவிடும் போல் இருக்கிறதே.... எல்லாரும் உஷார் ஆயிட்டாங்க போல...
ஒரு வீடு வாங்கினா ஏர்போர்ட்டையே இலவசமா தர்ரோம்னு சொல்லுங்க.....அப்புறம் பாருங்க கூட்டத்த.....

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

மங்குனி அமைசர் said...

பட்டாபட்டி.. said...

வித்துட்டு ..பேசின காசை செட்டில் பண்ணு சீக்கிரம்...///

வாப்பு , எங்கபோன ரெண்டு நாளா ஆளக் காணும் ? உன் போன் நம்பர எனக்கு மெயில் பண்ணி விடு (சும்மா ஒரு சேபிடி, அவசரத்துக்கு தான் )
//

போன் நம்பர் என்னையா பெரிய போன் நம்பர்..

உம்-னு சொல்லு...வெளியூரானொட கிட்னியவே கூரியர்ல போட்டு அனுப்புறேன்...ஹி..ஹி ///


பட்டா பிரை பண்ணி பிரீசர்ல வச்சு அனுப்பு , நானும் கிட்னி சாப்டு ரொம்ப நாளாச்சு

மங்குனி அமைச்சர் said...

வால்பையன் said...

எனக்கு சும்மா கொடுத்தாலும் வேண்டாம்///

நீங்க அப்பை எல்லாம் சொல்லாக்கூடாது , அப்புறம் நாங்க எப்படி பொழைக்கிறது

மங்குனி அமைச்சர் said...

சீமான்கனி said...

//அது பக்கத்துல கூட சுடுகாடு இல்லைங்க//

அதுவே சுடுகாடு அதுக்கு பக்கத்துல ஒரு சுடுகாடு தேவையா...???என் கொ சா இது...////

சார் , சுடுகாடுன்னாலும் பொணத்த போதைக்க எரிக்க ஆள் வருவாங்க , இந்த அது கூட கிடையாது

மங்குனி அமைச்சர் said...

Shri ப்ரியை said...

என்ன அமைச்சரே... தாங்கள் போட்ட திட்டம் பிழைத்துவிடும் போல் இருக்கிறதே.... எல்லாரும் உஷார் ஆயிட்டாங்க போல...
ஒரு வீடு வாங்கினா ஏர்போர்ட்டையே இலவசமா தர்ரோம்னு சொல்லுங்க.....அப்புறம் பாருங்க கூட்டத்த.....///

ஆகா இது கூட நல்ல ஐடியாவா இருக்கே மேடம்

செல்வா said...

மங்குனி அமைச்சர் அவர்கள் கூறியது போல நிறைய வசதிகளுடன் கூடிய வீட்டு மனைகள் விற்பனைக்கு உள்ளதால் , நீங்கள் வீட்டு மனைகள் வாங்க ஆசைப்பட்டால் மங்குனி அவர்களை தொடர்புகொள்ளவும் ..!!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

http://muttalpaiyannan.blogspot.com/2010/08/blog-post.ஹ்த்ம்ல்

தல ஒரு பதிவு போடிருகேன் ..,ஏதோ என்னக்கு தெரிஞ்ச நடையில,நீ வோட்டு எல்லாம் போடவேண்டாம் ,எதாவது கருத்து பிழையோ ,தகவல் பிழையோ இருந்த சொல்லு தல திருத்திகிரேன்..,இனிமே தொடரலாம ????

Sweatha Sanjana said...

I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

Srividhya R said...

ஹலோ ..........சி பி ஐ ? நீங்க ரொம்ப நாலா தேடிட்ட்ருந்த ஆளு இங்க தான் ப்ளாக் எழுதிற்றுக்க்காறு ... ம்ம் ஆமாம் ....நீங்க வந்திங்கன்னா கூட்டிட்டு போய்டலாம்...