எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Friday, July 23, 2010

திருட்டுப்பதிவு

என்ன அநியாயம் இது , ஒரு வாரம் லீவில் சென்று வருவதற்குள் எங்கு பார்த்தாலும் திருட்டு கொள்ளை . நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது , காவல்துறை கையாலாகாமல் போய்விட்டது . நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு இல்லை . (பார்ரா பெரிய்ய கண்டுபுடிப்பா இருக்கே ?)

பா.மு.க அரசு என்ன செய்து கொண்டு இருக்கிறது? (இம் .... பிள்ளையார் கோவில்ல உண்ட கட்டி சாப்டுகிட்டு இருக்கு )

மன்னர் அந்தப்புரமே கதியாய் கிடக்கிறார் (கொடுத்து வச்ச மனுஷன் ) , நாட்டை பாதுகாக்க வேண்டிய ராணுவ அமைசர் காதல் வலையில் விழுந்துள்ளார் (உனக்கு ஏன் வயிறு எரிது?) . மற்றொரு முக்கிய அமைச்சரோ ஆணி புடுங்குவதில் பிசியாக உள்ளார் . இந்த நிலையில் நாட்டு மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் ?

எங்கும் கொள்ளை , திருட்டு . காவல் நிலையத்தில் திருடுபோயுள்ளது . மற்றும் மற்றொருவரது கடையே திருடப்பட்டுள்ளது .

திருடர்களுக்கு பகிங்கர எச்சரிக்கை விடுக்கிறேன் (ஆமா இவரு பெரிய்ய பா.சிதம்பரம் , வந்துட்டாரு !!!!!)

இனி உங்கள் கைவரிசை இங்கு பலிக்காது . கூடிய விரைவில் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள். பின் கடுமையான தண்டனை வழங்கப்படும் . (இருடி உனக்கு ஆப்பு வக்கிறேன் )

திருடர்களே தைரியம் இருந்தால் பிளாக்கை திருடிப்பாருங்கள் ?
(ஆமா இது பெரிய்ய மைசூர் மகாராஜா பேலஸ் ? இத திருடிட்டாலும் .......).

பிளாக் என்ன இதில் இருக்கு ஒரு பதிவை திருடிப்பாருங்கள் ?
(அட தொங்குனா கொடுக்கா , மனசுல நீ என்னடா நினைச்சுகிட்டு இருக்க? )

திருடினால் உங்கள் கைகள் இரண்டும் துண்டிக்கப்பட்டு , பின் கழுவில் ஏற்றப் படுவீர்கள் . (திருடர் சார் , திருடர் சார் , இதெல்லாம் சும்மா ஒல ஒலாயிக்கு , நான் டம்மி பீசு , நீங்க பாட்டுக்கு டென்சனாகி என் பிளாக்கில எதுவும் கைவச்சுடாதீக)

போடா பொறம்போக்கு , நீ ஓசியா கொடுத்தாலும் ஒரு பய வாங்கமாட்டான் .

டிஸ்கி : இந்தப்பதிவு இந்தப்பதிவு மங்குனி அமைச்சரிடம் திருடியது (இப்ப எப்படி திருடுவிக , இப்ப எப்படி திருடுவிக .......................)

நண்பர்களே நாடு இருக்கும் நிலையில் இந்த பதிவை கூட யாரும் திருட வாய்ப்புள்ளது , எனவே என்னை மாதிரி நீங்களும் இப்படி டிஸ்கி போட்டு வையுங்கள் . யாராவது திருடினால் ஈசியாக கண்டுபிடித்து விடலாம் . எப்படி நம் லாவகமான சிந்தனை ????
--------@@@@@--------

ஓகே , பிரண்ட்ஸ் இப்ப மேட்டருக்கு வருவோம் , இப்பஎல்லாம் அடுத்தவுக பதிவ திருடி போடுவது ஃபேசன் ஆயிடுச்சு . அதுனால நானும் மேல உள்ள பதிவ ஒரு பதிவர்ட இருந்து திருடி போட்டு இருக்கேன் . எங்க யாரு அந்த பதிவர்ன்னு கண்டுபிடிங்க பாக்கலாம் ??????

கண்டுபிப்பவர்களுக்கு முதல் பரிசாக டோனி கூட நாயர் கடை டீயும் , கிட்டிபுல்லையும் விளையாட வாய்ப்பு ........

84 comments:

Karthick Chidambaram said...

//இந்தப்பதிவு இந்தப்பதிவு மங்குனி அமைச்சரிடம் திருடியது (இப்ப எப்படி திருடுவிக , இப்ப எப்படி திருடுவிக .......................) // டீ எனக்கா ?

அருண் பிரசாத் said...

டீ போச்சே... வடையும் போச்சு... நான் போடலாமுனு ஜெய் கூட டிஸ்கஸ் பண்ணிவெச்சத மங்குணி கவ்விட்டு போய்டாரே!

சரி யார் போட்டா என்ன? நமக்கு தேவை நல்ல டீ? சே, நல்ல தீர்வு

ராம்ஜி_யாஹூ said...

Just now I saw vadakarai velan's Monkey poem in 1 more blog-Isaikarukkal..
http://isaikarukkal.blogspot.com/2010/07/blog-post_22.html

Chitra said...

கண்டுபிப்பவர்களுக்கு முதல் பரிசாக டோனி கூட நாயர் கடை டீயும் , கிட்டிபுல்லையும் விளையாட வாய்ப்பு ........

...... சொல்லிடுவேன்..... ஆனால், முதலில் அந்த கிட்டிபுல்லை, டோனி எங்கே இருந்து திருடினார் என்று சொல்ல வேண்டும். எப்பூடி!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அடப்பாவி நானும் இந்த பதிவை யோசிச்சு வச்சேன். மனசுல நினைச்சத கூடவா திருடுவீக..

ராஜவம்சம் said...

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வரைவில் இருந்தப்பதிவைத்திருடிய
மங்குனி மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி 203ம் புலிகேசி மன்னரிடம் புகார் அளிக்க அந்தப்புரம் செல்ல இறுக்கிறேன்.

அட்ரஸ் பிலீஸ்.

Balamurugan said...

//எனவே என்னை மாதிரி நீங்களும் இப்படி டிஸ்கி போட்டு வையுங்கள் . யாராவது திருடினால் ஈசியாக கண்டுபிடித்து விடலாம்//

உங்களின் இந்த திடீர் அறிவு வளர்ச்சியின் காரணம் என்னவோ?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பதிவே போடாம, பப்ளிஸ் பண்ணுப்பாரு மங்குனி...

ஏதாவது நடக்கும் பாரேன்...

Jey said...

யோவ், மங்குனி, எல்லாத்துக்கும் நீதான்யா காரணம்.., நீ பாட்டுக்கு ஊருக்கு போய்ட்டே, இங்க பதிவுலகதுல சட்டம் & ஒழுங்கு சீர்குலைஞ்சி போச்சு.

ஒருத்தரோட, வீட்டையே அலேக்கா தூக்கிட்டானுக, நம்ம சொந்தபந்தங்களோட( இத்துப்போன என் வீட்டயும் சேத்துதான்)விட்ல பொருள் திரிடிட்டாங்க...

ஒன்னுருசைடு எந்த வீட்டுக்கு போனாலும், விதவித குத்திட்டிருக்காங்க... ஒன்னும் முடியலை... இதுக்கு அரசவை கூட்டி, ஒரு முடிவு எடுய்யா...
( தக்காளி முடிவு எடுத்துடாலும்... இந்தாளு திருடனுக மொறைச்சி பாத்தாலெ, பயந்து போய், அவனுக கூட சேந்து திருடுர ஆளாச்சே....)

Jey said...

/// பட்டாபட்டி.. said...
பதிவே போடாம, பப்ளிஸ் பண்ணுப்பாரு மங்குனி...

ஏதாவது நடக்கும் பாரேன்...//

பட்டா, ஆள் இருக்கிற வீட்டையே தரயோட தூக்கிட்டு போறாகலாம், அதனால் அடிக்கடி உன் வீட்டுபக்கம் வந்து எடிப்பத்துட்டு போயிரு...
இல்லைனா, நம்ம மங்குனியை காவலுக்கு வைத்து விட்டு செல்லவும்...

தமிழ் உதயம் said...

என்ன அநியாயம் இது , ஒரு வாரம் லீவில் சென்று வருவதற்குள் எங்கு பார்த்தாலும் திருட்டு கொள்ளை . நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது ////

நீங்க ஊருல இல்லங்கிறதுக்காக யாரும் திருடக்கூடாதா. பாவம் திருடன் சார்கள் பொழைச்சிட்டு போகட்டும்.

செல்வா said...

வாங்க மங்கு.. நான் என்னால முடிஞ்ச வரைக்கும் நம்ம அமைச்சரவைய நல்லா பார்த்துக்கிட்டேன்.. ஆனா எனக்கு கொஞ்சம் ஆணி இருந்ததால இந்த மாதிரி ஆகிப்போச்சு .. சரி எப்படியோ நீங்க வந்துட்டீங்க .. இனி கோமாளி அவனோட வேலைய பார்க்கலாம்ல...?

அமுதா கிருஷ்ணா said...

என்னாச்சு? என்னாச்சு?

பெசொவி said...

//பட்டாபட்டி.. said...
பதிவே போடாம, பப்ளிஸ் பண்ணுப்பாரு மங்குனி...

ஏதாவது நடக்கும் பாரேன்
//

அதைவிட, பதிவை draft - ஆவே வச்சிருந்தா நிச்சயம் திருட முடியாதுன்னு நினைக்கிறேன்.

Unknown said...

நாமலே நம்ம பதிவையே இது டுப்ளிகேட்ன்னு போட்டா யாரும் இது ஏற்கனவே திருடதுன்னு நெனச்சு கை வைக்க மாட்டாங்க...

Prasanna said...

டிஸ்கி ஐடியா சூப்பர் ஓய

பொன் மாலை பொழுது said...

// நாமலே நம்ம பதிவையே இது டுப்ளிகேட்ன்னு போட்டா யாரும் இது

ஏற்கனவே திருடதுன்னு நெனச்சு கை வைக்க மாட்டாங்க..//

-------கே.ஆர்.பி.செந்தில் said...அட இது கூடா நல்ல ஐடியாதான். யோவ் மங்குனி ...நீர் வீட்டுக்கு போகலாம் .

நமக்கு வேறு நல்ல
ஒரு "மினிஷ்டரு " கிடச்சிட்டாறு ....கே. ஆர்.பி. தான்.

Anonymous said...

வந்ததும் ஆரம்பிச்சுட்டீங்களா???
அமைச்சரே.. உமக்கு விருது கொடுத்தேனே பார்க்கலையா??

ஜெய்லானி said...

யோவ் இந்த தடவையும் எப்படியா தப்பிச்ச . ச்சே.. நீ திரும்பி வந்தத பாக்கும் போது நாட்டு நிலம மோசமாதான் தெரியுது.

ஜெய்லானி said...

பதிவுக்கு முதல் வரியில இது இன்னார் பிளாக்கில திருடியதுன்னு போட்டா ஈசியா கண்டு பிடிச்சிடலாம் மங்கு..

அப்படியே காப்பி அடிப்பவனும் அதையே போட்டுடுவான்

ஹேமா said...

"திருடர்கள்(ளே) ஜாக்கிரதைன்னு" ஒரு போர்ட் போட்டு வையுங்க
உங்க தளத்தில.

சீமான்கனி said...

சும்மா இருக்குறவங்கல சொரிஞ்சு விடுவதே இந்த அமைச்சரின் முக்கிய பணியா போச்சு...யாரங்கே...

வால்பையன் said...

//இந்தப்பதிவு இந்தப்பதிவு மங்குனி அமைச்சரிடம் திருடியது//

பதிவுக்கு மேலயே பெயர் மாற்றப்படுள்ளதுன்னு போட்டுருவோமே!

வால்பையன் said...

சித்ரா!

எங்கேங்க அந்த கண்ணாடி, எனக்கு ஒன்னு கேட்டிருந்தேன்ல!

'பரிவை' சே.குமார் said...

அது சரி... இதுவும் நல்லாத்தான் இருக்கு...
திருடர்கள் ஜாக்கிரதை... இது மங்குனியின் திருட்டுப் பதிவு.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//நாமலே நம்ம பதிவையே இது டுப்ளிகேட்ன்னு போட்டா யாரும் இது ஏற்கனவே திருடதுன்னு நெனச்சு கை வைக்க மாட்டாங்க... //

சூப்பர் ஐடியா செந்தில் அண்ணே. இப்ப draft-லையே திருடுராங்கலாம்

Shri ப்ரியை said...

லீவ்ல போய் எங்கயோ திருடி வசமா மாட்டியிருக்கிறிங்க போல இருக்கு..........

பிராது said...

இந்த அமைச்சரின் கருத்து நகைச்சுவையாக உள்ளது. வாழ்த்துக்கள்.
என்னால் முடிந்த அளவு திருட்டுப் பதிவுகளைத் தொகுக்கிறேன். நீங்களும் படித்துப்பாருங்கள்.

http://pirathu.blogspot.com

Unknown said...

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டாலும் திருட்டை ஒழிக்க முடியும்.

200க்கு வாழ்த்துக்கள்.

vanathy said...

மங்குனி, யார்ன்னு நீங்களே சொல்லிடுங்க???? எனக்கு துப்பு துலக்கி கண்டு பிடிக்க நேரம் இல்லை.

மங்குனி அமைச்சர் said...

Karthick Chidambaram said...

//இந்தப்பதிவு இந்தப்பதிவு மங்குனி அமைச்சரிடம் திருடியது (இப்ப எப்படி திருடுவிக , இப்ப எப்படி திருடுவிக .......................) // டீ எனக்கா ? ////

டீ , வடை எல்லாம் கண்பாமா உங்களுக்குத்தான்

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

டீ போச்சே... வடையும் போச்சு... நான் போடலாமுனு ஜெய் கூட டிஸ்கஸ் பண்ணிவெச்சத மங்குணி கவ்விட்டு போய்டாரே!

சரி யார் போட்டா என்ன? நமக்கு தேவை நல்ல டீ? சே, நல்ல தீர்வு////

அதுக்கு தான் உசாரா இருக்கணும் , இங்க திருடர்கள் ஜாஸ்த்தி

மங்குனி அமைச்சர் said...

ராம்ஜி_யாஹூ said...

Just now I saw vadakarai velan's Monkey poem in 1 more blog-Isaikarukkal..
http://isaikarukkal.blogspot.com/2010/07/blog-post_22.html////

thank you for the referance

மங்குனி அமைச்சர் said...

Chitra said...

கண்டுபிப்பவர்களுக்கு முதல் பரிசாக டோனி கூட நாயர் கடை டீயும் , கிட்டிபுல்லையும் விளையாட வாய்ப்பு ........

...... சொல்லிடுவேன்..... ஆனால், முதலில் அந்த கிட்டிபுல்லை, டோனி எங்கே இருந்து திருடினார் என்று சொல்ல வேண்டும். எப்பூடி!////

அதெல்லாம் தொழில் ரகசியம் மேடம் , சொல்லமுடியாது

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அடப்பாவி நானும் இந்த பதிவை யோசிச்சு வச்சேன். மனசுல நினைச்சத கூடவா திருடுவீக..////

விடுவமா , யாரு நாங்க , பரம்பர திருடர்கள்

மங்குனி அமைச்சர் said...

ராஜவம்சம் said...

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வரைவில் இருந்தப்பதிவைத்திருடிய
மங்குனி மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி 203ம் புலிகேசி மன்னரிடம் புகார் அளிக்க அந்தப்புரம் செல்ல இறுக்கிறேன்.

அட்ரஸ் பிலீஸ்.////

நம்பர் 3333 , முருங்கக்காய் நகர்

மங்குனி அமைச்சர் said...

பாலமுருகன் said...

//எனவே என்னை மாதிரி நீங்களும் இப்படி டிஸ்கி போட்டு வையுங்கள் . யாராவது திருடினால் ஈசியாக கண்டுபிடித்து விடலாம்//

உங்களின் இந்த திடீர் அறிவு வளர்ச்சியின் காரணம் என்னவோ?///

அம்மாவாச வந்தா இப்படித்தான் எனக்கு ஆயிடுது

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

பதிவே போடாம, பப்ளிஸ் பண்ணுப்பாரு மங்குனி...

ஏதாவது நடக்கும் பாரேன்...////

என்னாதுன்னு சொல்லிரு பட்டா , ஒரே டென்சனா இருக்கு

மங்குனி அமைச்சர் said...

Jey said...

யோவ், மங்குனி, எல்லாத்துக்கும் நீதான்யா காரணம்.., நீ பாட்டுக்கு ஊருக்கு போய்ட்டே, இங்க பதிவுலகதுல சட்டம் & ஒழுங்கு சீர்குலைஞ்சி போச்சு.

ஒருத்தரோட, வீட்டையே அலேக்கா தூக்கிட்டானுக, நம்ம சொந்தபந்தங்களோட( இத்துப்போன என் வீட்டயும் சேத்துதான்)விட்ல பொருள் திரிடிட்டாங்க...

ஒன்னுருசைடு எந்த வீட்டுக்கு போனாலும், விதவித குத்திட்டிருக்காங்க... ஒன்னும் முடியலை... இதுக்கு அரசவை கூட்டி, ஒரு முடிவு எடுய்யா...
( தக்காளி முடிவு எடுத்துடாலும்... இந்தாளு திருடனுக மொறைச்சி பாத்தாலெ, பயந்து போய், அவனுக கூட சேந்து திருடுர ஆளாச்சே....)///

ஜெய் , சத்தம்போடாதே , எல்லாம் நம்ம பசங்கதான்

மங்குனி அமைச்சர் said...

Jey said...

/// பட்டாபட்டி.. said...
பதிவே போடாம, பப்ளிஸ் பண்ணுப்பாரு மங்குனி...

ஏதாவது நடக்கும் பாரேன்...//

பட்டா, ஆள் இருக்கிற வீட்டையே தரயோட தூக்கிட்டு போறாகலாம், அதனால் அடிக்கடி உன் வீட்டுபக்கம் வந்து எடிப்பத்துட்டு போயிரு...
இல்லைனா, நம்ம மங்குனியை காவலுக்கு வைத்து விட்டு செல்லவும்.../////\ஜெய் , ஒன்னும் பீல் பண்ணாத அங்கன ஆள் போட்டு இருக்கு

மங்குனி அமைச்சர் said...

தமிழ் உதயம் said...

என்ன அநியாயம் இது , ஒரு வாரம் லீவில் சென்று வருவதற்குள் எங்கு பார்த்தாலும் திருட்டு கொள்ளை . நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது ////

நீங்க ஊருல இல்லங்கிறதுக்காக யாரும் திருடக்கூடாதா. பாவம் திருடன் சார்கள் பொழைச்சிட்டு போகட்டும்./////

இந்த பாயிட்டு கூட சரியாத்தான் தோணுது

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

வாங்க மங்கு.. நான் என்னால முடிஞ்ச வரைக்கும் நம்ம அமைச்சரவைய நல்லா பார்த்துக்கிட்டேன்.. ஆனா எனக்கு கொஞ்சம் ஆணி இருந்ததால இந்த மாதிரி ஆகிப்போச்சு .. சரி எப்படியோ நீங்க வந்துட்டீங்க .. இனி கோமாளி அவனோட வேலைய பார்க்கலாம்ல...?////

விடுங்க கோமாளி , எல்லாம் ஒரு செடப்தான்

மங்குனி அமைச்சர் said...

அமுதா கிருஷ்ணா said...

என்னாச்சு? என்னாச்சு?///

ஒன்னும் இல்லைங்க மேடம் , ஒரு ப்ளாக் ஹேக் பண்ணிட்டாங்க , அப்புறம் நிறைய பதிவுகள திருடி அவுங்க எழுதின மாதிரி பப்ளிஸ் பண்ணிட்டாங்க

மங்குனி அமைச்சர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//பட்டாபட்டி.. said...
பதிவே போடாம, பப்ளிஸ் பண்ணுப்பாரு மங்குனி...

ஏதாவது நடக்கும் பாரேன்
//

அதைவிட, பதிவை draft - ஆவே வச்சிருந்தா நிச்சயம் திருட முடியாதுன்னு நினைக்கிறேன்.////

சார் , வீட்டையே திருடிட்டு போயிடுறாங்க

மங்குனி அமைச்சர் said...

கே.ஆர்.பி.செந்தில் said...

நாமலே நம்ம பதிவையே இது டுப்ளிகேட்ன்னு போட்டா யாரும் இது ஏற்கனவே திருடதுன்னு நெனச்சு கை வைக்க மாட்டாங்க...////

இது பாயிண்ட்டு , அடுத்து நானும் அப்படியே போட்டுவிடுகிறேன்

மங்குனி அமைச்சர் said...

பிரசன்னா said...

டிஸ்கி ஐடியா சூப்பர் ஓய////

நன்றி பிரசன்னா சார் , நீங்களும் பாலோ பண்ணுங்க

மங்குனி அமைச்சர் said...

கக்கு - மாணிக்கம் said...

// நாமலே நம்ம பதிவையே இது டுப்ளிகேட்ன்னு போட்டா யாரும் இது

ஏற்கனவே திருடதுன்னு நெனச்சு கை வைக்க மாட்டாங்க..//

-------கே.ஆர்.பி.செந்தில் said...அட இது கூடா நல்ல ஐடியாதான். யோவ் மங்குனி ...நீர் வீட்டுக்கு போகலாம் .

நமக்கு வேறு நல்ல
ஒரு "மினிஷ்டரு " கிடச்சிட்டாறு ....கே. ஆர்.பி. தான்.///

என்னா சார் , என்னைய கலட்டி விடுறிங்க , நான் சும்மா அப்படி ஓரமா உட்காந்துகிர்றேன்

மங்குனி அமைச்சர் said...

Indhira said...

வந்ததும் ஆரம்பிச்சுட்டீங்களா???
அமைச்சரே.. உமக்கு விருது கொடுத்தேனே பார்க்கலையா??////

நம்ம வேலையே அதுதானே மேடம் , விருதுக்கு உங்க ப்ளாக் ல நன்றி சொல்லிட்டேன் , விருதை எடுத்து பத்திரமா வச்சுக்கிட்டேன்

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...

யோவ் இந்த தடவையும் எப்படியா தப்பிச்ச . ச்சே.. நீ திரும்பி வந்தத பாக்கும் போது நாட்டு நிலம மோசமாதான் தெரியுது.////

ஒழுங்கா ஒரு பாம் கூட வக்க தெரியல நீயெல்லாம் ஒரு பதிவர் , வெளிய சொல்லாத வெட்கக்கேடு

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...

பதிவுக்கு முதல் வரியில இது இன்னார் பிளாக்கில திருடியதுன்னு போட்டா ஈசியா கண்டு பிடிச்சிடலாம் மங்கு..

அப்படியே காப்பி அடிப்பவனும் அதையே போட்டுடுவான்///

யோவ் , லூசு ஜெய்லானி டிஸ்கி படிச்சியா ? முதல்ல பதிவ படிச்சியா ?

மங்குனி அமைச்சர் said...

ஹேமா said...

"திருடர்கள்(ளே) ஜாக்கிரதைன்னு" ஒரு போர்ட் போட்டு வையுங்க
உங்க தளத்தில.///

என்னங்க ஹேமா மேடம் , திருடன் வீட்ட்லே போர்டு போடா சொல்ரிக்க

மங்குனி அமைச்சர் said...

சீமான்கனி said...

சும்மா இருக்குறவங்கல சொரிஞ்சு விடுவதே இந்த அமைச்சரின் முக்கிய பணியா போச்சு...யாரங்கே...///

கலவரத்த உண்டு பண்ணினாத்தான் வாழ்கை சுவாரசியமா இருக்கு சீமான்கனி சார்

மங்குனி அமைச்சர் said...

வால்பையன் said...

//இந்தப்பதிவு இந்தப்பதிவு மங்குனி அமைச்சரிடம் திருடியது//

பதிவுக்கு மேலயே பெயர் மாற்றப்படுள்ளதுன்னு போட்டுருவோமே!////

இது கூட நல்லா இருக்கே

மங்குனி அமைச்சர் said...

வால்பையன் said...

சித்ரா!

எங்கேங்க அந்த கண்ணாடி, எனக்கு ஒன்னு கேட்டிருந்தேன்ல!////

மேடம் ஒரு கண்ணாடி வால்சுக்கு பார்சல்

மங்குனி அமைச்சர் said...

சே.குமார் said...

அது சரி... இதுவும் நல்லாத்தான் இருக்கு...
திருடர்கள் ஜாக்கிரதை... இது மங்குனியின் திருட்டுப் பதிவு./////

சே , கண்டு புடிச்சுட்டிகளே

Jey said...

மங்குனி, 200-வது ஃபளோயரா, ’டெர்ரர்பாண்டிய’ சேத்திவிட்டுருக்கேன்...
கமிஷனை என்னோட பேங்க் அக்கவுண்ட்ல போட்ரு...

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//நாமலே நம்ம பதிவையே இது டுப்ளிகேட்ன்னு போட்டா யாரும் இது ஏற்கனவே திருடதுன்னு நெனச்சு கை வைக்க மாட்டாங்க... //

சூப்பர் ஐடியா செந்தில் அண்ணே. இப்ப draft-லையே திருடுராங்கலாம்////

முதல்ல கடைய பத்திரமா பாத்துகங்க

மங்குனி அமைச்சர் said...

Shri ப்ரியை said...

லீவ்ல போய் எங்கயோ திருடி வசமா மாட்டியிருக்கிறிங்க போல இருக்கு..........////

கரக்ட்டா கண்டு புடுச்சிட்டிகளே

மங்குனி அமைச்சர் said...

பிராது said...

இந்த அமைச்சரின் கருத்து நகைச்சுவையாக உள்ளது. வாழ்த்துக்கள்.
என்னால் முடிந்த அளவு திருட்டுப் பதிவுகளைத் தொகுக்கிறேன். நீங்களும் படித்துப்பாருங்கள்.

http://pirathu.blogspot.com////

நன்றி பிராது சார் , வந்து பாத்துட்டா போச்சு

மங்குனி அமைச்சர் said...

கலாநேசன் said...

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டாலும் திருட்டை ஒழிக்க முடியும்.

200க்கு வாழ்த்துக்கள்.///

வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி கலாநேசன் சார்

மங்குனி அமைச்சர் said...

vanathy said...

மங்குனி, யார்ன்னு நீங்களே சொல்லிடுங்க???? எனக்கு துப்பு துலக்கி கண்டு பிடிக்க நேரம் இல்லை.////

என்னைய எப்படி நானே காட்டி கொடுப்பேன் மேடம்

மங்குனி அமைச்சர் said...

Jey said...

மங்குனி, 200-வது ஃபளோயரா, ’டெர்ரர்பாண்டிய’ சேத்திவிட்டுருக்கேன்...
கமிஷனை என்னோட பேங்க் அக்கவுண்ட்ல போட்ரு...////

யோவ் , இதெல்லாம் ரகசியமா பேசணும் , இப்படியா பப்ளிக் பண்ணுவ

Anonymous said...

மங்குனி வந்த உடன் திருட்டு பதிவா ...

"போடா பொறம்போக்கு , நீ ஓசியா கொடுத்தாலும் ஒரு பய வாங்கமாட்டான் ."

இது சரியா சொன்னிங்க ..அப்புறம் எனக்கு டி வேண்டாம் கூல் ட்ரின்க் போதும் ..

மங்குனி அமைச்சர் said...

sandhya said...

மங்குனி வந்த உடன் திருட்டு பதிவா ...

"போடா பொறம்போக்கு , நீ ஓசியா கொடுத்தாலும் ஒரு பய வாங்கமாட்டான் ."

இது சரியா சொன்னிங்க ..அப்புறம் எனக்கு டி வேண்டாம் கூல் ட்ரின்க் போதும் .. ///

கூல்ட்ரிங்க்சுன்ன கொஞ்சம் செலவாகுமே பரவைல்லையா மேடம்

சிநேகிதன் அக்பர் said...

நீங்கதானா அது. ம்ம்ம் நடத்துங்க.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///எங்க யாரு அந்த பதிவர்ன்னு கண்டுபிடிங்க பாக்கலாம் ????? //

எனக்கு தெரியும், எனக்கு தெரியும்..
ஆனா ஒரு டீ வாங்கி குடுத்தா தான் சொல்வேன்.. :-))

திருட்டுப் பதிவு, சூப்பர்.....
ரசித்து படித்தேன்... நன்றி :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

வந்ததும் சுட சுட.. ஒரு பதிவு.. :-))

கருடன் said...

@ஜெய்
// மங்குனி, 200-வது ஃபளோயரா, ’டெர்ரர்பாண்டிய’ சேத்திவிட்டுருக்கேன்...
கமிஷனை என்னோட பேங்க் அக்கவுண்ட்ல போட்ரு... //

ஏன்டா எப்பவும் என் ப்ளாக் கும்மி என் உசுர வாங்கர.... அங்க மங்குனி மங்குனி அப்படின்னு ஒரு ஆடு இருக்கு கொஞ்சம் போய் அங்க கும்மிட்டு வா சொல்லி அனுப்பிட்டு........ சைடுல கமிஷனா....

Shri ப்ரியை said...

என்ன அமைச்சர் நீங்க..... அமைச்சரை பற்றி அரசிக்கு( நான் தான்.. நான் தான்..) தெரியாதா.....

கருடன் said...

எங்க ஊர்ல 200 வது followerக்கு 200 தங்க காசு கொடுப்பாங்க... இங்க எப்புடி??

கருடன் said...

@மங்குனி
//இம் .... பிள்ளையார் கோவில்ல உண்ட கட்டி சாப்டுகிட்டு இருக்கு//

ஒரு வாரமா நீங்க அடிக்கடி பிள்ளையார் கோயில் பக்கம் சுத்தின ரகசியம் இதுதான??

jothi said...

ஓகே , பிரண்ட்ஸ் இப்ப மேட்டருக்கு வருவோம் , இப்பஎல்லாம் அடுத்தவுக பதிவ திருடி போடுவது ஃபேசன் ஆயிடுச்சு . அதுனால நானும் மேல உள்ள பதிவ ஒரு பதிவர்ட இருந்து திருடி போட்டு இருக்கேன் . எங்க யாரு அந்த பதிவர்ன்னு கண்டுபிடிங்க பாக்கலாம் ??????"

திருட்டு பதிவுக்கே இவ்வளவு பில்டப்பா.........

மங்குனி அமைச்சர் said...

அக்பர் said...
நீங்கதானா அது. ம்ம்ம் நடத்துங்க.
///

நானே தான் தல

மங்குனி அமைச்சர் said...

Ananthi said...
///எங்க யாரு அந்த பதிவர்ன்னு கண்டுபிடிங்க பாக்கலாம் ????? //

எனக்கு தெரியும், எனக்கு தெரியும்..
ஆனா ஒரு டீ வாங்கி குடுத்தா தான் சொல்வேன்.. :-))

திருட்டுப் பதிவு, சூப்பர்.....
ரசித்து படித்தேன்... நன்றி :-))
///ஆனந்தி மேடம்க்கு ஒரு டீ பார்சல்

மங்குனி அமைச்சர் said...

Ananthi said...
வந்ததும் சுட சுட.. ஒரு பதிவு.. :-))
////

சும்மா விட்டா நம்ம கடையையும் திருடிருவாணுக போல மேடம்

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...
@ஜெய்
// மங்குனி, 200-வது ஃபளோயரா, ’டெர்ரர்பாண்டிய’ சேத்திவிட்டுருக்கேன்...
கமிஷனை என்னோட பேங்க் அக்கவுண்ட்ல போட்ரு... //

ஏன்டா எப்பவும் என் ப்ளாக் கும்மி என் உசுர வாங்கர.... அங்க மங்குனி மங்குனி அப்படின்னு ஒரு ஆடு இருக்கு கொஞ்சம் போய் அங்க கும்மிட்டு வா சொல்லி அனுப்பிட்டு........ சைடுல கமிஷனா....
////

வருகைக்கு நன்றி டெர்ரர் பாண்டியன் (கட்டிங்க ஜெய் உங்களுக்கு பங்கு குடுக்கலையா ??)

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...
@மங்குனி
//இம் .... பிள்ளையார் கோவில்ல உண்ட கட்டி சாப்டுகிட்டு இருக்கு//

ஒரு வாரமா நீங்க அடிக்கடி பிள்ளையார் கோயில் பக்கம் சுத்தின ரகசியம் இதுதான??
////ஹி,ஹி,ஹி சும்மா பிகர் பாக்க போனேன் பாண்டி

மங்குனி அமைச்சர் said...

jothi said...
ஓகே , பிரண்ட்ஸ் இப்ப மேட்டருக்கு வருவோம் , இப்பஎல்லாம் அடுத்தவுக பதிவ திருடி போடுவது ஃபேசன் ஆயிடுச்சு . அதுனால நானும் மேல உள்ள பதிவ ஒரு பதிவர்ட இருந்து திருடி போட்டு இருக்கேன் . எங்க யாரு அந்த பதிவர்ன்னு கண்டுபிடிங்க பாக்கலாம் ??????"

திருட்டு பதிவுக்கே இவ்வளவு பில்டப்பா.........
///

வேற என்னா பண்றது , ஒரு பயலும் நம்மள மதிக்க மாட்டேங்குறான் , அதுதான் நமக்கு நாமே பில்டப் குடுக்க வேண்டியதா இருக்கு

Matangi Mawley said...

:) saw in news... chennai-la fake police station and court nadaththinavanga kaithunnu!

neenga solrathilum gnyaayam irukku!

கருடன் said...

@மங்குனி
//ஹி,ஹி,ஹி சும்மா பிகர் பாக்க போனேன் பாண்டி //

பார்ரா.... ஒரு வரம் ஜாலிய பிகர் பாத்துட்டு வந்து " என்ன அநியாயம் இது , ஒரு வாரம் லீவில் சென்று வருவதற்குள் எங்கு பார்த்தாலும் திருட்டு கொள்ளை . நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது " அப்படின்னு சவுண்ட் விடரத.

r.v.saravanan said...

200க்கு வாழ்த்துக்கள்.

மங்குனி

பித்தனின் வாக்கு said...

aadu thirudalam, khozi thirudalam,
kovitha kovintha pathivai yaaravathu thiruduvaala???
kali muthip pochu.
enna manguni leave mudinjutha??
eppdi irukkinga?

பித்தனின் வாக்கு said...

eellai mankuni naanga elllam sutta padatha vaichu pathivu poduvem.

sutta pathivai vachup poda mattema???

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//திருடர்களே தைரியம் இருந்தால் பிளாக்கை திருடிப்பாருங்கள் ? //

நாங்க சொந்த செலவுல சூனியம் வெச்சுகரதில்லை அமைச்சரே...