இப்ப எங்க பாத்தாலும் லேயவுட் போட்டு அவனுக பண்ணுற அளப்பர தாங்க முடியலைங்க , முக்கியமா அவனுக NRI தான் குறிவக்கிரானுக ...... நமக்கு தான் நிறைய NRI பிரண்ட்ஸ் இருக்காங்களே அப்படின்னு நானும் அந்த பிசினஸ்ஸ ஆரம்பிச்சிட்டேன் . டீடைல்ஸ் கீழ இருக்கு ....
கேப்மாரி பில்டர்ஸ் வழங்கும் V.V.I.P நகர் (இப்படி போட்டாதான் பயபுள்ளைக உச்சி குளுந்துபோய் வாங்குறாங்க )
சென்னை நகருக்கு மிக அருகில் , ஏர்போர்ட்டிலிருந்து பத்து நிமிட பயணத்தில் (பத்து நிமிடம் பிளைட்ல போகணும் ) நேசனல் ஹைவேசுக்கு(இதுக்கும் பிளைட்லதான் போகனும்) பக்கத்தில் அமைத்துள்ளது நமது V.V.I.P நகர்.
இது உங்களுக்காவென்றே பிரத்தியேகமாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. அரசிடமிருந்த ABCD அப்ரூவல் பெற்ற மனைகள் .
V.V.I.P நகரில் நான்கைந்து இடங்களில் ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டு அப்படியே உங்களுக்காக மூடாமல் விட்டு இருக்கிறோம். எனவே குழந்தைகளை நீங்கள் வெளியே விட மாட்டிங்க. அதுனால விளையாட்டு திடல் அமைத்து இடம் வீணாகாமல் உங்களுக்காக கேப்மாரி பில்டர்ஸ் மிச்சப்படுத்தி இருக்காங்க .
வீட்டு மனைகளுக்கு தண்ணி வசதி ரொம்ப முக்கியம் , எங்க கேப்மாரி பில்டர்ஸ் வழங்கும் V.V.I.ப நகரில் நீங்கள் 1000 அடி தோண்டினாலும் தண்ணிவராது , எனவே உங்கள் வசதிக்காக நாங்களே ஒரு லிட்டர் தண்ணீர் 21 ரூபாயிக்கு குறைந்த விலையில் சப்பளை செய்கிறோம் .
அப்புறம் முக்கியமாக இந்த நகரை சுற்றி அடர்ந்த காட்டுப் பகுதியாக இருப்பதால் நிறைய கொடிய மிருகங்களின் நடமாட்டம் இருக்கும் , எனவே உங்களுக்கு திருட்டு பயம் சுத்தமாக தேவை இல்லை . அதேபோல் சொந்த காரவுங்க யாரும் பயந்துகிட்டு வந்து போக மாட்டாங்க , இது தான் இந்த கேப்மாரி பில்டர்ஸ் வழங்கும் V.V.I.P நகரின் சிறப்பு அம்சம்.
அது மட்டும் இல்லைங்க , இந்த நகரை சுற்றி மருத்துவகல்லூரி , இன்ஜினியரிங் காலேஜ் , கலக்டர் அலுவலகம் , ICICI மற்றும் AXIS Banks , பள்ளி வளாகம் , பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரயில்வே ஸ்டேசன் எல்லாம் இன்னும் குறைந்தது நூறு ஆண்டுகளுக்கு எதுவுமே வராது எனவே நீங்கள் டிராபிக் தொல்லை இல்லாமல் இருக்கலாம் .
என்ன உங்க மனைய தேர்வு செய்திட்டிங்களா ? ரூபாய் 99999999999 குடுத்து இப்பவே புக் பண்ணினால் இருநூறு தங்க காசுகள் இலவசம் .
அது தவிர ஒரு மனை வாங்கினால் , மூன்று மனைகள் இலவசமாக உங்களுக்காக வழங்குறாங்க கேப்மாரி பில்டர்ஸ் . இன்னும் பதினைந்து நாட்ட்களில் நீங்க ரிஜிஸ்தர் பண்ணிங்கன்னா LCD டி.வி., பிரிட்சு , ஹோம் தியேட்டர் , மைக்ரோ ஓவன் , ஆட்டோமேடிக் வாசிங் மெசின் என நிச்சைய பரிசுகள் உண்டு .