எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Friday, January 28, 2011

கலைஞருக்கு நன்றி"ன்னு பேட்டி குடுத்தால் தமிழக மீனவர்களுக்கு விடிவு காலம் பிறக்குமோ ???

நம்ம கும்மியும் , செந்தழல் ரவியும் ஒரு முக்கிய மான விசயத்துக்கு பதிவு எழுத சொல்லி இருக்காங்க . கண்டிப்பா எல்லோரும் அவசியம் செய்ய வேண்டிய ஒரு விஷயம் . தயவு செய்து அனைவரும் முயற்சி செய்யுங்கள் .

நமது மீனவர்கள் கடலுக்குள் அடிக்கடி இலங்கை கடற்படையால் தாக்கப் படுவது , கொள்ளப் படுவதும் சர்வ சாதாரண விஷயம் . அதற்கு உடனடியாக நமது தமிழக அரசு மத்திய அரசுக்கு ஒரு கடிதமும் , இறந்தவர்களுக்கு இழப்பீடும் தருவது டிராபிக் போலீஸ் லஞ்சம் வாங்குவது மாதிரி அதைவிட சாதாரண விஷயம் .

எனக்கு ஒன்னு மட்டும் புரியவே இல்லைங்க முன்னாடி தான் விடுதலைப்புலிகளின் நடமாட்டம் இருந்ததால் சந்தேகத்தின் பெயரில் தாக்கப்பட்டார்கள் தமிழக மீனவர்கள் ...... இது கூட கொஞ்சம் நியாயமான விஷயம் ..... ஆனா இப்ப என்ன நடக்குது???

புதிதாக சேரும் இலங்கை கடற்படை வீரர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி நமது தமிழக மீனவர்கள் தான் ஜாலினான இலக்கு . ஆனா இப்போது சீன மற்றும் இலங்கை கூட்டு கடற்படைக்கும் நமது மீனவர்கள் தான் இலக்கு . இன்னும் கொஞ்ச நாள் போனா ஐ.நா. சபைலே உலக நாட்டு கடற்படை வீரர்கள் துப்பாக்கி சுடுவதில் பயிர்ச்சி பெற இந்திய கடலோர பகுதி உலகின் சிறந்த பகுதின்னு அறிவிச்சாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை .

என்ன சார் முட்டாத்தனமா இருக்கு ... ஒரு தடவை ரெண்டு தடவை என்றால் பரவாயில்லை ஏதோ கவனக்குறைவு என்று கூறலாம் ..........

இந்த நியுஸ் வர்றப்ப நாம என்ன பன்றோம் டீ, தம்மோட பேப்பர் படிச்சுக்கிட்டே ...ச்சு...ச்சு....ச்சுன்னு கவலைப்பட்டு , "கள்ளக்காதல் கொலை " இல்லை "உல்லாச அழகிகள் கைது" நியுஸ் எங்கடா இருக்குன்னு தேட ஆரம்பிச்சிடுவோம் .

இதற்கு நம்மால் ஒன்றும் செய்ய முடியாது ...அரசாங்கம் மட்டுமே கடுமையான நடவடிக்கை எடுத்து தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை தடுக்க வேண்டும். ஆனா நாம் எல்லாரும் சேர்ந்து குரல் கொடுத்து அரசாங்கத்தை நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு கொண்டுவரலாம்.

ஒரு வேலை தமிழக மீனவர்கள் தினமும் கடலுக்குள் சென்று விட்டு வந்து "இலங்கை கடற்படை தாக்குதில் இருந்து நாங்கள் தப்பி வந்தற்காக கலைஞருக்கு நன்றி"ன்னு பேட்டி குடுத்தால் தமிழக மீனவர்களுக்கு விடிவு காலம் பிறக்குமோ ???

டிஸ்கி : பதிவெழுதும் நண்பர்கள் தங்களுடைய பதிவுகளை கீழே உள்ள தளத்தில் இணைக்கவும்

"www.savetnfisherman.org "

59 comments:

அஞ்சா சிங்கம் said...

மோதல் வெட்டு

Arun Prasath said...

just miss

பன்னிக்குட்டி ராம்சாமி said...

களிங்கர் ஜீ வால்க...! இப்படித்தான் சொல்லோனும் இல்லேன்னா, அதையும் கண்டுக்க மாட்டோம்....!

உமர் | Umar said...

பதிவிட்டதற்கு நன்றி.

இன்று இங்கு பின்னூட்டமிடுவதை விட கொல்லப்படும் நம் சகோதரனுக்கு ஆதரவாக நீங்கள் இடும் ஒரு ட்வீட் வலிமைமிக்கது.

தயவு செய்து அனைவரும் உங்கள் பங்களிப்பை வழங்குங்கள்.

---


கழுத்துக்கு கத்தி வராது. நீங்கள் படுத்துக்கொண்டே டுவிட்டலாம் பாலோயர்களே.. பிளீஸ் சப்போர்ட் #TNFisherman

எதிர்ப்பைக் கூட காட்டவேண்டாம், நாங்கள் கவனித்துக் கொண்டுதானிருக்கிறோம் என்பதை உணர்த்த ட்விட்டலாம் #tnfisherman

Yesterday Tamils in Eezham. Today Tamils on Sea. Tomorrow you may be the victim. Act now to save #tnfisherman

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன ப்ராப்ளம்னு நான் கண்டுபுடிச்சிட்டேன், ஆனா சொல்ல மாட்டேன்....!

Speed Master said...

சிறப்பான பதிவு

உமர் | Umar said...

மற்ற நண்பர்களும் இதனைப் பற்றி பதிவிட்டு உங்கள் ஆதரவைத் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

முழுமையான விபரங்கள் எங்களது பதிவில் உள்ளது

http://allinall2010.blogspot.com/2011/01/tnfisherman.html

அஞ்சா சிங்கம் said...

நானும் இத கூர்ந்து கவனிச்சிருக்கேன் . இந்தியா கிரிகெட் மேட்ச் ஆடும் போது அவங்க மீனவர்கள கொல்றாங்க .
போன முறை இந்தியா சவுத் ஆப்ரிகா கடைசி மேட்ச் ..
இதுக்கு முன்னால இலங்கை மேட்ச் .....
என்ன காரணமா இருக்கும் ?
ஜனங்க எந்த செய்திக்கு முக்கியம் குடுப்பாங்க ...............

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பாராட்டு விழா வேற எடுக்கணும்

vinu said...

indraiya thinagaran papper vaangip padikkavum;

namathu kavithai kaathalanukku thiraippadap paadal eluthum vaayppu kidaththullathu;


vaalthukkal mani @http://kavithaikadhalan.blogspot.com/

mobile :+919043194811

Anonymous said...

வக்காலி ..,இங்க கும்மி அடிகிரேன்யா ..,எந்த சொரியாண்மை வந்தாலும் பராவில்லை ...,எவன் அவன் ந்கோதப்பய வுக்கு சொம்பு தூக்கிட்டு வரவனுக்கெலாம் இங்கேயே வாய்கரிசி போடப்படும்

Anonymous said...

@பன்னி ,டெர்ரர் , பட்டாபட்டி

தாயரா ? டோமர் இங்கனு வந்திச்சினா !!!!!!!!!!

இம்சைஅரசன் பாபு.. said...

//"இலங்கை கடற்படை தாக்குதில் இருந்து நாங்கள் தப்பி வந்தற்காக கலைஞருக்கு நன்றி"ன்னு பேட்டி குடுத்தால் தமிழக மீனவர்களுக்கு விடிவு காலம் பிறக்குமோ ???//

ஆமா .....ஆமா மீனவ நண்பர்கள் எல்லாம் ஒன்னு சேர்ந்து ஒரு நன்றி அறிவிப்பு விழா நடத்தனும் ....அதுல கலா அக்கா...நமீதா எல்லோரும் வந்து ஆட்டம் போட்டு விழா நடத்துனும் ....தூ .....பாடைல போற வயசுல இந்த மனம் கெட்ட மனுஷன் .....இப்படி எல்லாம் செயுறாரே ன்னு வயிறு எரியுது ......

Madhavan Srinivasagopalan said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
"என்ன ப்ராப்ளம்னு நான் கண்டுபுடிச்சிட்டேன், ஆனா சொல்ல மாட்டேன்....! " //

பிராப்ளத்தை நீயே வெச்சிக்க..
சொலுஷன / தீர்வ எல்லாருக்கும் சொல்லு..

vinu said...

நான் ஒரு ஆலோசனை சொல்லலாமா

உமர் | Umar said...

நண்பர்களே, இங்கு நீங்கள் கூற விரும்பும் கருத்துகளை ட்விட்டரில் கூறுங்கள். நம் ஆதரவை ஒரே இடத்தில் தெரிவிப்போம்.

Anonymous said...

/// பிராப்ளத்தை நீயே வெச்சிக்க..
சொலுஷன / தீர்வ எல்லாருக்கும் சொல்லு.///

தீர்வா ..,அது தான் இலவசம் ..,மாதவன் சார் ..,

Anonymous said...

கும்மி said...
நண்பர்களே, இங்கு நீங்கள் கூற விரும்பும் கருத்துகளை ட்விட்டரில் கூறுங்கள். நம் ஆதரவை ஒரே இடத்தில் தெரிவிப்போம்.////////





@ கும்மி

அந்த அட்ரஸ் ல போய் ஓபன் பண்ணினா ..,என் சிஸ்டம் சேவ் பண்ணுது .,இந்த ட்விட்டர் அக்கௌன்ட் ஓபன் பண்றது சொல்லிடீங்க ...,செத்தான் ..,ங்கோத்தா பய

உமர் | Umar said...

@தில்லு முல்லு

www.twitter.com சென்று கணக்கு துவங்கினால் எளிதாக ட்வீட் செய்யலாம்

இந்தப் பின்னூட்டத்தை பாருங்கள்

இந்தப் பதிவையும் பாருங்கள்.

Anonymous said...

@ கும்மி

நன்றி கும்மி

அருண் பிரசாத் said...

மங்குனி

இந்த பேனரை எல்லாருடைய பிளாக்கிலும் வைக்க சொல்லலாம்

http://a1.twimg.com/profile_background_images/198322867/banner.png

karthikkumar said...

தில்லு முல்லு said...
வக்காலி ..,இங்க கும்மி அடிகிரேன்யா ..,எந்த சொரியாண்மை வந்தாலும் பராவில்லை ...,எவன் அவன் ந்கோதப்பய வுக்கு சொம்பு தூக்கிட்டு வரவனுக்கெலாம் இங்கேயே வாய்கரிசி போடப்படும்///

இன்னும் எவனையும் காணோமே.... எவனாவது சிக்குவான்னு பாக்குறேன் ஹி ஹி ......

MANO நாஞ்சில் மனோ said...

//"இலங்கை கடற்படை தாக்குதில் இருந்து நாங்கள் தப்பி வந்தற்காக கலைஞருக்கு நன்றி"ன்னு பேட்டி குடுத்தால் தமிழக மீனவர்களுக்கு விடிவு காலம் பிறக்குமோ ???///


தமிழ் ரத்தம் உடம்புல ஓடுனாதானே தமிழன் இன்னல் தெரியும்....???
நம்ம உலக தமிழ் தலைவன் [ப்பூப்ப்] களிங்கறு'தான் ஆந்திராக்காரன் ஆச்சே....
உண்மை தமிழனாக இருந்தால்....குறைந்த பட்சம் "சதையாவது ஆடுமே"
ம்ஹும் இங்கே ஸ்பெக்ட்ரம்தான் ஆடுது போங்கடா ங்கொய்யால, கோட்டி பயலுவளா.....

Madhavan Srinivasagopalan said...

// தீர்வா ..,அது தான் இலவசம் ..,மாதவன் சார் .., //

ஆட்டாமை(இலவசங்கற பேருல ரோம்பத்தான் ஆட்டுராங்களே அதான் ) .. .. 'தீர்வ' மாத்தி சொல்லு..

Anonymous said...

இவர்கள் எல்லாம் ஒண்ணு சேர்ந்து ஒரு பாராட்டு விழா நடத்தணும்னு நெனைக்கிறேன்.
அது தான் இப்ப ஃபேஷனாய்டுச்சே..

MANO நாஞ்சில் மனோ said...

கரடியாய் கத்தியும் மீனவர்கள் சாவுவதை கண் மூடி ரசிக்கும், தமிழக அரசும், மத்திய அரசும் நாசாமாக போவதாக.....

தினேஷ்குமார் said...

நல்ல பதிவு நண்பரே

எஸ்.கே said...

உயிரின் மதிப்பை புரிந்துகொள்ளாமல் சுயநலமாக இருக்கும் இவர்களை என்ன சொல்வது?

உமர் | Umar said...

சர்வசாதாரணமாக ஆயிரம் பின்னூடங்களை நோக்கிச் செல்லக் கூடிய நண்பர்கள் இணைந்தால் ட்விட்டரில் சாதிக்க முடியும். இன்று ஒருங்கிணைந்த போராட்டம் எப்பொழுது என்று தெரிவிக்கின்றேன். அந்த ஒரு மணி நேரத்தில் அனைவரும் இணைந்து ட்விட்டினால், உலகைத் திரும்பிப் பார்க்க வைக்க முடியும். ட்விட்டர் கணக்கில்லாதவர்கள் அதற்கு முன்னர் ட்விட்டரில் கணக்கு தொடங்கி சில ட்விட்டுகள் அனுப்பி ட்விட்டரை பழக்கப்படுத்தி கொள்ளுங்கள்.

பெசொவி said...

Surely this is a sensitive issue and all tamils should unitedly express their solidarity.

I will publish a post tomorrow.

அமுதா கிருஷ்ணா said...

மீனவர்கள் கலைவிழா நடத்தணும் அப்ப தான் 3 மணிநேரம் உட்கார்ந்து பார்க்கலாம்.

Anonymous said...

/////////// நமது மீனவர்கள் கடலுக்குள் அடிக்கடி இலங்கை கடற்படையால் தாக்கப் படுவது , கொள்ளப் படுவதும் சர்வ சாதாரண விஷயம் . ////////////

வெக்காமா இருக்குயா !!!!! மங்குனி ..,வேற ஸ்டேட் காரன் காரி மூஞ்சியிலே துப்புரான்யா ..,அரசியல் அரசியல் லாபத்துக்காக மட்டுமே இந்த கட்சிகள் எல்லாம் நம்மளை யூஸ் பண்ணுது ,,,மனசு ரொம்ப வருத்தம் ஆயிடுசியா .,,இந்த தி .தே.பய ( திண்ணை தேங்கா பையன் .,நீங்க வேற எதுனா நினைசீங்கான அது தான் உண்மை ) ராஜபக்ஷே மூஞ்சிய பார்க்கும் போது அது மேலயே மூத்திரம் அடிக்கணும் போல இருக்குது மங்குனி

Anonymous said...

/// அதற்கு உடனடியாக நமது தமிழக அரசு மத்திய அரசுக்கு ஒரு கடிதமும் , இறந்தவர்களுக்கு இழப்பீடும் தருவது டிராபிக் போலீஸ் லஞ்சம் வாங்குவது மாதிரி அதைவிட சாதாரண விஷயம் ./////

அந்த பரதேசி பன்னாடைக்கு தெரியுமா உயிரின் விலை ......,

Anonymous said...

///// எனக்கு ஒன்னு மட்டும் புரியவே இல்லைங்க முன்னாடி தான் விடுதலைப்புலிகளின் நடமாட்டம் இருந்ததால் சந்தேகத்தின் பெயரில் தாக்கப்பட்டார்கள் தமிழக மீனவர்கள் ...... இது கூட கொஞ்சம் நியாயமான விஷயம் ..... ஆனா இப்ப என்ன நடக்குது??? ////////

அவனுக்கு தெரியும் ...,ஒய் ..,தமிழன் சொன்னாலே மூத்திரம் போய்டுவான் சிங்களவன் ..,வக்காலி இங்க அவங்களுக்கு சப்போர்ட் பண்ணிட்டு கமெண்ட் எவனாவது போடட்டும் ..,சங்கு " தமிழன் " தமிழன் சத்தியாம அறுக்கப்படும் .,

@மங்குனி

அந்த மாதிரி கமெண்ட் வந்தா தயவு செய்ஞ்சி அலோ பண்ணு ..,

Anonymous said...

என் வேலை மசுரு எல்லாம் விட்டுட்டு வந்திருக்கேன் ,,என் மக்கள் கடலில் படும் அவஸ்தைகள் ,கொடும் மரணங்கள் ..,என்னை கடந்த சில நாட்காளாக தூக்கம் இழக்க வைக்கின்றன ..,அந்த ஒரு மனிதன் எவ்வளவு சித்ரவதை அனுபவித்திருப்பான் என்று நினைக்கும் போதே ..,சோறு இறங்க மாட்டந்து .,

உமர் | Umar said...

Please join The Global Campaign for #TNfisherman on twitter . 28.01.11 Time 9.00PM - 10.00PM Indian Standard Time. RT pls

மங்குனி அமைச்சர் said...

கும்மி said...

Please join The Global Campaign for #TNfisherman on twitter . 28.01.11 Time 9.00PM - 10.00PM Indian Standard Time. RT pls///

கும்மி ....நான் என்னோட ட்விட்டர் யூசர் நேம் , பாஸ்வேர்டு ...ரெண்டையும் மறந்துட்டேன் ..எப்படி கண்டு புடிக்கிறது ??? அப்புறம் இந்த டைமிங் பகல்ல வர்றது மாதிரி இருந்தா நால்லது ...என்னோட வீட்ல நெட் கிடையாது. கொஞ்சம் உலகம் பூராம் காம்னா வர்ற ஆபீஸ் டைமா இருந்தா நல்லது

என்னோட மெயில் ஐடி : yasinshaji@gmail.com, manguniamaicher@gmail.com ............ என்னை தொடர்பு கொள்ளவும்

செல்வா said...

//சர்வசாதாரணமாக ஆயிரம் பின்னூடங்களை நோக்கிச் செல்லக் கூடிய நண்பர்கள் இணைந்தால் ட்விட்டரில் சாதிக்க முடியும். இன்று ஒருங்கிணைந்த போராட்டம் எப்பொழுது என்று தெரிவிக்கின்றேன். அந்த ஒரு மணி நேரத்தில் அனைவரும் இணைந்து ட்விட்டினால், உலகைத் திரும்பிப் பார்க்க வைக்க முடியும். ட்விட்டர் கணக்கில்லாதவர்கள் அதற்கு முன்னர் ட்விட்டரில் கணக்கு தொடங்கி சில ட்விட்டுகள் அனுப்பி ட்விட்டரை பழக்கப்படுத்தி கொள்ளுங்கள்.
//

கண்டிப்பா பண்ணலாம்க .. ஆனா நேரம் ஒன்பது லிருந்து பத்து மணிவரைக்கும் என்பது கொஞ்சம் சிரமம் .. முயற்சிக்கிறேன் ...

செங்கோவி said...

மிகவும் நல்ல பதிவு...நிறையபேர் இதற்குப் பதிவிட்டு விட்டதால் நான் பதிவிடவில்லை..ஏதாவது செய்யவேண்டுமென மனசாட்சி சொல்கிறது..ட்வீட்டர் எனக்குப் பழக்கமில்லை..முயற்சிக்கிறேன்..

உமர் | Umar said...

//ஆனா நேரம் ஒன்பது லிருந்து பத்து மணிவரைக்கும் என்பது கொஞ்சம் சிரமம் .. //

இந்தப் போராட்டம் உலகம் முழுதும் நடைபெறுவதால், மற்ற நாடுகளில் இருக்கும் நண்பர்களின் வசதிக்காகவும் இரவு 9 முதல் 10 வரை நேரம் முடிவு செய்யப்பட்டுள்ளது. உங்களுக்கு அந்த நேரத்தில் வர முடியாவிட்டாலும் இன்றும் நாளையும் எந்த நேரத்தில் முடியுமோ அந்த நேரத்தில் ட்விட்டுங்க. கடந்த மூன்று நாட்களாக முதல் இடத்தில் வைத்திருக்கின்றோம். விகடன் உள்ளிட்ட சில தமிழ் பத்திரிகைகளும் முழுமையான ஆதரவு அளிக்கின்றனர்.

NDTV, போன்ற வட இந்தியா ஊடகங்களை சிறிது அசைத்துள்ளோம். இந்நிலை தொடர்ந்தால், நிச்சயம் மீனவர்களின் அவல நிலையை உலகம் முழுதும் எடுத்து வைக்க முடியும். அதற்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டும். உங்களால் முடியும் நேரத்தில் சில ட்வீட்டுகளையாவது இடுங்கள்.

என்னுடைய ட்விட்டர் ஐடி @kummichennai

மேலும் சில முக்கிய ஐடி கள் (In no particular order)
@savetnfisherman
@TBCD
@Sharankay
@thennarasu
@4SN
@scanman
@rajavanaj
@zq__
@andalmagan
@mankuthira
@icarusprakash
@msidhard
@UVMP
@saran
@ksawm
@gpradeesh
@umarudhran
@sandanamullai
@Manoj_Daniel

இந்தப் போராட்டத்தில் நான் அறிந்த சில முக்கிய ட்விட்டர்கள். இன்னும் பலரும் இருக்கின்றனர். இவர்களை follow செய்தால் பெரும்பாலான விஷயங்களை அறிந்துகொள்ள முடியும்.

karthikkumar said...

TWITTER- ல இப்பவே எல்லோரும் TWEET பண்ண ஆரம்பிச்சிடாங்க. ONLINE ல இருக்குறவங்க வாங்க .... #tnfisherman

எல் கே said...

ட்வீட் பண்ணியாச்சு அமைச்சரே

வெங்கட் said...

எனக்கு ட்வீட்டர் பழக்கமில்ல..
இருந்தாலும் எதாவது செய்யறேன்..

என் நண்பர்கள்கிட்ட இதை கொண்டு
போயி சேர்க்கறேன்..

Unknown said...

ராஜபக்சே மனைவி கோவில்களில் வேண்டுதல் # உம் புருசன் உசுரு மட்டும் உசத்தி ? #tnfishermen #tnfisherman :

Unknown said...

நாங்களும் டிவீட்டி இருக்கிறோம் எனபதால், உங்களின் அழைப்பு புரிகிறது.. தொடரட்டும் டிவிட்டரின் நெருப்பு, அதன் ஒளியிலாவது, அரசியல் கண்கள் திறக்கட்டும்..

Anonymous said...

U can also sign online petition thro' this link

http://www.petitiononline.com/TNfisher/petition.html

Unknown said...

நீங்கள் சொல்வது சரியென்றே படுகிறது...

settaikkaran said...

//கண்டிப்பா எல்லோரும் அவசியம் செய்ய வேண்டிய ஒரு விஷயம் . தயவு செய்து அனைவரும் முயற்சி செய்யுங்கள் //

நான் ஏற்கனவே எழுதிட்டேன் மங்குனி.
(கடுதாசு போடுவோம் வாங்க!)
http://settaikkaran.blogspot.com/2011/01/blog-post_24.html

ஆதங்கமும் குமுறலும் அவங்களுக்குப் புரியணுமே? :-(

Asiya Omar said...

நல்ல முயற்சி.

முத்தரசு said...

கலைஞருக்கு பாராட்டு விழா (அது தானே இப்ப ட்ரென்ட்) எடுத்தால் ஒரு வேலை காப்பாற்ற படலாமோ?

உமர் | Umar said...

பதிவர் நீச்சல்காரனின் இந்த இடுகை மிகவும் சிறப்பாக நீங்கள் பங்கெடுக்கக்கூடிய அனைத்து வழிகளையும் விவரிக்கின்றது. அதில் இருக்கும் எந்த வழிகளில் எல்லாம் உங்களால் உதவ முடியுமோ, அப்படியெல்லாம் செய்யுங்கள்.

மர்மயோகி said...

மங்குனி அமைச்சரே..தமிழ் ஆர்வலர் என்று சொல்லிக்கொள்ளும் எல்லோரும், இதையேதான் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்... எப்போதாவது ஒருமுறை சுட்டால் பரவால் இல்லை. இப்படி அடிக்கடி நடக்கிறதே என்று சொல்கிறீர்களே...அதேதான் நானும் கேட்கிறேன்..எப்போதாவது ஒரு முறை மீனவர்கள் தாக்கப்பட்டால் பரவாஇல்லை அடிக்கடி இப்படி நடக்கிறதே ஏன்?
தமிழர்கள் அனைவரும் தவறே செய்யாதவர்கள் என்றும், இலங்கை அரசு, தவறு செய்வதற்கென்ற பிறந்தவர்கள் என்றும் ஓட்டுப் பிச்சை எடுப்போர் வேண்டுமென்றால் கத்திக் கொண்டிருக்கட்டும்..
நடுநிலையாக பாருங்கள்..
மீன் பிடிப்போர் பெரும்பாலும் குடிபோதையிலும், அல்லது அதிக அளவு மீன் பிடிக்கலாம் என்ற பேராசையிலும் எல்லை தாண்டி செல்வதால்தான் இது போன்ற விபரீதங்கள் நடக்கின்றன...
இலங்கை மீனவர்கள் வந்தால் மட்டும் மீனவர்கள் அத்து மீறல் என்று செய்தி போடும் தமிழ் ஊடகங்கள்,
இலங்கை காரன் சுட்டால் இலங்கை கடற்படை அட்டூழியம் என்று செய்தி வெளியிடுகின்றன...எல்லாம் வியாபாரம் அமைச்சரே...
தவறு இருபக்கமும் இருக்கிறது, மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள், - இலங்கைகாரன் எச்சரித்து விடலாம்..அதை அவன் செய்வதில்லை,, தாக்குகிறான்...

உமர் | Umar said...

@மர்மயோகி

உங்கள் கருத்திற்கு மாற்றுக்கருத்து கொண்டுள்ளேன். ஆனால், விவாதிக்கும் நேரமல்ல இது. போராட்டத்தை இன்னும் விரிவாக்கும் நிலையில் இருக்கின்றோம். சில நாட்களுக்கு பிறகு வருகின்றேன். விவாதிப்போம்.

இப்போதைக்கு இந்தப் பதிவில் இருக்கும் கடல் எல்லை குறித்த விஷயங்களை படித்துக்கொள்ளுங்கள். சில நாட்களுக்கு பிறகு பேசுவோம்.

Jaleela Kamal said...

nalla pahtivu amaissaree,

ஜீவன்சிவம் said...

ஒவ்வொரு நாளும் தமிழ் வலைபதிவர்களை பார்த்து தான் அரசாங்கம் தன் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலை சீக்கிரம் வரவேண்டும்..என்ன அமைச்சரே நான் சொல்றது..சரி தானே

Anonymous said...

http://nekalvukal.blogspot.com/2011/01/blog-post_29.html

'பரிவை' சே.குமார் said...

ஒன்று படுவோம்...
வென்று காட்டுவோம்..!

Anonymous said...

நாளைக்கு கிரிக்கட்டு தொடங்கினப்புறம் இதெல்லாம் மறந்து போய்விடுவாங்க தமிழர்கள். அட ஒன்று இரண்டு பத்து என்று கொல்லும் போதே விழித்திருக்க வேண்டும்.இன்று நானுரையும் கடந்து விட்டது. இப்போது இந்த அவலம் இத்தனை முக்கியத்துவம் பெற்றதும் தேர்தல் சதிராட்டமோ என்ற சந்தேகமும் ஏற்படுகின்றது. இனியாவது அசிங்க திருட்டு அரசியல் வியாதிகளை நம்பாமல் அத்தனை தமிழரும் இன உணர்வோடு ஒன்று பட்டு இப்படுகொலைகளை நிறுதத முயற்சிப்போம்.

சாய்ராம் கோபாலன் said...

//புதிதாக சேரும் இலங்கை கடற்படை வீரர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி நமது தமிழக மீனவர்கள் தான் ஜாலினான இலக்கு//

What a tragedy ?

//Anonymous said... நாளைக்கு கிரிக்கட்டு தொடங்கினப்புறம் இதெல்லாம் மறந்து போய்விடுவாங்க தமிழர்கள்//

Absolutely true.