எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, April 19, 2010

தனக்கு தானே சூனியம் வச்சுகிறது இது தானோ ?

டிஸ்கி :ஒரு மனுஷன் பல்பு வாங்கலாம் , ஒரு பல்பு கடையே ஒரு மனுசனவாங்குனா ?

நாலாவது வாட்டியும் காலிங் பெல் அடிச்சு , எவன்டா அவன், கதவ தொறக்காம விட்டம்னா வீட்ல ஆள் இல்லைன்னு போயிடுவான்னு பாத்தாவிடாம அடிக்கிறானே ? நாம யாரு? அப்பையும் விடாம தூங்குற மாதிரியே நடிச்சோம் . ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு

"போடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு.... போடா .போடா ........ ..... ... ........ ...."

அட நம்ம மொபைல் ரிங் டோனுங்க, அட நம்ம சிவா திருச்சிலருந்து

"ஹலோ, என்னடா சிவா இந்த நேரத்துல ? "
"ஒன்னுமில்ல சுமாதான் , ஆமா இப்ப நீ எங்க இருக்க ? "
"ஏன்? வீட்லதான் "
"கதவ தொரடா பன்னாட "

ஆஹா , சனிகிழமை அதுவுமா சனி சங்கூத ஆரபிசுடுசே எழுந்து மணி பாத்தா 6 , தக்காளி மிட்நைடட்ல வந்து உயிரை வாங்குறான்னு நினசுகிட்டே போய் கதவ திறந்தேன்

"வாடா சிவா , என்னா திடீர்ன்னு? "

"ஒண்ணுமில்ல சும்மா ஒரு ஆபிஸ் மீட்டிங் , நினச்சன்டா நாலுவாட்டிபெல்அடிச்சும் தொறகலையா? நீ உள்ளதான் இருக்கேன்னு கன்பாம்பன்னிட்டேன்"

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....... எல்லா பயபுள்ளைகளும் நம்மள பத்தி நல்லா தெரிஞ்சு வச்சிருகானுக, திடீர்னு மனசுல ஒரு பல்ப் பளீன்னு எஞ்சிசு , ஆஹா... அடிமை சிக்கிட்டான் இவன வச்சு இன்னைக்கு பொழுத குஜாலா ஓட்டிடலாம் , பயபுள்ளவேற நல்லா சம்பாரிகிரானாம்.

சரின்னு காலைல கிளம்பி இவன்தான பில்லு குடுக்க போறான்னு டெய்லி நாமசாப்புடுற கையேந்தி பவன விட்டு நேரா அசோக் நகர் சரவணபவனுக்கு வண்டியவிட்டேன்.

பொங்கல் , வடை , பூரி , நெய்ரோஸ்ட் (ஓசிதானே ) சாப்படு பாத்தா? , கரக்டாஅவன் கைகழுவ போனப்ப சர்வர் பில்ல கொண்டுவந்து நீட்றான் , சரிகாலைடிபன் கம்மி பில்லு தானேன்னு நானே 280 அழுது தொலைச்சேன்.

"என்னாடா அதுக்குள்ள பில்ல குடுத்திட்டியா , சரி வா போகலாம் "

சரின்னு வெளிய வந்து கார எடுத்து மூவ் பன்றேன் , காருக்கு முன்னாடி ஒருத்தன் ஓடி வந்து கை ரெண்டையும் தூக்கி மறிச்சு கிட்டு போலிஸ் , போலிஸ்ன்னு கத்துறான் , இதென்னடா இம்சையா போச்சுன்னு இறங்கி என்னடான்னு கேட்டா "காரு" அவனுதாம் ,அப்பத்தான் இந்த சிவா பன்னாட சொன்னான்

"டே, நாம பைக்ல வந்தோம் "

(அடப்பாவி இத முன்னாலே சொல்லகூடாதா , அடிவாங்க விட்டு வேடிக்க பாப்பான் போலருக்கே ?)

சாரி சார் , உங்க கார எடுத்துகங்க , ஆனா பாருங்க பஸ்டு கார மாத்துங்க, பைக்சாவிகே ஸ்டார்ட் ஆகிடுச்சுன்னு, கார் காரனுக்கு அட்வைஸ் பன்னிட்டுநம்ம பைக்க எடுத்திட்டு நேரா போய் அவன் ஆபீஸ் மீட்டிங் முடிச்சிட்டு ,அப்புறம்நேரா நம்ம மேட்டருக்கு போனோம்.

பில்லு 1320 அங்க போனா பந்தாவா கிரெடிட் கார்ட்எடுத்து குடுத்தான் , சர்வர்போயிட்டு வந்து கூலா...

"சார், கிரெடிட் கார்ட் வொர்க் பன்னல"
"அடடா... என்கிட்ட கேஷ் இல்ல போய் ATM எடுக்கணும், மச்சான் உன் கார்டகுடு "

டுஸ்கி : சனி சம்மனம் போட்டு என் தல மேல உட்காந்துரிச்சு

என் மூஞ்சி ஹைவேஸ்ல நேசனல் பெர்மிட் லாரில அடிபட்ட நாய் மாதிரி ஆச்சு, அப்புறம் வேற வழியில்லாம என் கார்ட குடுத்தேன். (பட்டா விசிடிங் கார்டு இல்ல கிரடிட்கார்டு, தக்காளி இவன் கரக்ட்டா நொன்ன தனமா கேட்பான் )

முடிச்சிட்டு வெளிய வந்தோம் , இப்ப லஞ்ச சாப்பிடனும், இந்த நாயி கார்டுவொர்க் பன்னல , பேசாம லட்சுமி பவன் போய் ரெண்டு வெஜ் மீல்ஸ் சாப்டம்னா , 60 பது ரூபாயோட முடின்சிடும்ன்னு, இப்ப கரக்ட்டா என் பைக்க போய்எடுத்தேன்.

"மச்சான் நேரா ஏதாவது ATM போ "

என் காதுல தேன் வந்து பாய்ந்தது , அப்பாடா லட்சுமி பவன் வேண்டாம் , நேராஅஞ்சப்பர் போனோம்.

கொய்யாலே.... எப்படியாவது பில்ல ஏத்தனும். நடப்பன , ஊர்வன , பறப்பன , நீந்துவன எல்லா வகைளையும் ஒரு கை பாத்தேன். சாப்டு முடிச்சிட்டு கைகழுவிபீடா போடும்போது சிவாவோட மொபைல் ரிங் ஆச்சு , என்னை பாத்து , உஸ்ஸ்ஸ்..... உதட்டு மேல கைய வச்சு சொல்லிட்டு , மொபைல எடுத்திட்டுவெளிய போய் பேச ஆரம்பிச்சிட்டான் , நம்மள பத்தி எப்படிதான் கண்டு புடிகிரான்களோ, தக்காளி கரக்டா சர்வர் அந்த நேரம் பாத்து பில்லு கொண்டுவந்தான் .

ஹா.... ஹா.... ஹா..... விதி வலியது , கடவுள் இருக்காரு சார்

660 பில்லு எந்தலைல . ஆஹா .......... இவன்கூடசுத்துனம்னா நம்ம டவுசர கிழிசிருவான்னு, அங்கிருந்தது நேரா வீட்டுக்குபோய்டோம்.

தூங்கி எழுந்து ஈவினிங் நேரா பஸ் ஸ்டாண்ட்லபோய் டிராப் பன்னேன். பஸ்சுலஏறி உட்காந்தான், பஸ்ஸு கிளம்ப போச்சு,(அப்பாடா...... நைட் டிபன் செலவில இவன்ட இருந்து தப்பிச்சிட்டோம் )

"ஓகே , பை டா சீ யு"
"டே ... மச்சான் கூலா ஒரு வாடர் பாட்டில் வாங்கு , மச்சான், மச்சான் அப்படியே ஒரு ஆனந்தவிகடன் , ஒரு பாக்கட் கிங்க்ஸ் "

"வாழ்வே மாயம் , இந்த வாழ்வே மாயம் , வாழ்வே மாயம் .......... .......... ....... ....."

பக்கத்துல யாரோட மொபைலோ இந்த பாட்ட ரிங்குச்சு.

"இந்தாடா"
"ஓகே பை டா மச்சான் , அனேகமா அடுத்த வெனஸ்டே மறுபடியும் வந்தாலும்வருவேன் , நீ இருப்பில்ல ? கொஞ்சம் சாபிங் போய் டிரஸ் எடுக்கனும் "
"%&#*%&#"

டிஸ்கி : யாரும் தயவு செய்து நான் வாங்குன பல்ப எண்ணி கமண்டஸ்ல போட்டு மானத்த வாங்கிடாதிங்க

கிஸ்கி: சன்டே , நாலாவது வாட்டி காலிங் பெல் அடிச்சு , முழிச்சேன் மணி பாத்தேன் மிட்னைட் 6 , டக்குன்னு மொபைல சுவிட்ச் ஆப் பண்ணினேன்155 comments:

settaikkaran said...

ஹையா, நான் தான் ஃபர்ஸ்ட்டா...? :-)))

பைக் சாவிக்கே திறக்கிற காரு மேட்டரு படு சூப்பரு! ஆனா, சாவியே இல்லாம திறக்கிற ஒரு காரைப்பத்தி எனக்குத் தெரியும். லவட்டிக்கிட்டு வந்து சொல்றேன். :-)

பித்தனின் வாக்கு said...

நல்ல பதிவு, இதுல கடைசி வரியை, முதலில் செய்து இருந்தால் இத்தனை செலவு இல்லை. நாலு தரம் பெல் அடித்தவுடனே ஸ்விச் ஆப்பும் செய்து இருக்கனும்.

மங்குனி நான் கூட சென்னை வரலாம்னு இருக்கேன். வீட்டு அட்ரஸ் கொடுப்பா, எங்க கிட்ட கார்டு எல்லாம் இல்லை. இப்பவே சொல்லிட்டேன். எல்லாம் நீதான் மாமு.

'பரிவை' சே.குமார் said...

மங்குனி நான் கூட சென்னை வரலாம்னு இருக்கேன். வீட்டு அட்ரஸ் கொடுப்பா.........

hi..... hi........ hi.........

Chitra said...

மிட்னைட் ஆறு மணிக்கு பெல் அடிச்சு, செல் போன் ஆப் ஆகி இருந்தா, நீங்க வீட்டுலதான் இருக்கீங்க னு நாங்க தெரிஞ்சிக்கிட்டோம். அந்த கிரெடிட் கார்டை மட்டும் கதவு இடுக்கு வழியா தள்ளி விட்டீங்கனா - உங்களை தொந்தரவு பண்ணாமலே நண்பர் போய் இருந்துருப்பார்ல ...... ஸ்ஸ்ஸ்ஸ்....... முறைக்காதீங்க...... இப்படியும் பல்ப் கொடுப்பாக.

Unknown said...

//மிட்னைட் ஆறு மணிக்கு பெல் அடிச்சு, செல் போன் ஆப் ஆகி இருந்தா, நீங்க வீட்டுலதான் இருக்கீங்க னு நாங்க தெரிஞ்சிக்கிட்டோம். அந்த கிரெடிட் கார்டை மட்டும் கதவு இடுக்கு வழியா தள்ளி விட்டீங்கனா - உங்களை தொந்தரவு பண்ணாமலே நண்பர் போய் இருந்துருப்பார்ல ...... ஸ்ஸ்ஸ்ஸ்....... முறைக்காதீங்க...... இப்படியும் பல்ப் கொடுப்பாக//

மங்குனி, அடுத்து நான் சென்னை வரும்போது இதே மாதிரி செஞ்சுடுங்க.. உங்களுக்கெதுக்கு பைக் ஓட்டுற சிரமம் எல்லாம்.. :)))))

S Maharajan said...

அமைச்சரே உங்க மொபைல் நம்பர் வேணுமே! நானும் வருவேன்ல!

Balamurugan said...

அடச்சே! மிஸ் பண்ணிட்டமே.
தெருஞ்சிருந்தா முன்னாடியே நம்மளும் போயிருக்கலாமே.
வட போச்சே!

ஜெய்லானி said...

மங்கு நான் உன்வீட்டுக்கு வந்தா நீ கதவை எப்படியும் திறந்துதான் ஆகனும். திறக்காட்டி ராத்திரி வரை கேட்டை விட்டு நகரமாட்டேன்.

கொய்யால மெயின் சுவிட்சை ஆப் பண்ணிட்டா எப்படியும் நீ சூடு பொருக்காம வெளிய வந்துதானல ஆகனும்.

பல்ப்புக்கே பல்பு குடுக்குற ஆள் நானு,

வர்ட்டா!!!!!!!

ஜெய்லானி said...

நீ இவ்வளோ நல்லவன்னு தெரியாம போச்சே.

ஜெய்லானி said...

மச்சான் எப்ப நீ ஃப்ரீ, உன்னை பாக்க வீட்டுக்கு வரலாம்னு இருக்கேன்.

ஜெய்லானி said...

//நாலுவாட்டிபெல்அடிச்சும் தொறகலையா? நீ உள்ளதான் இருக்கேன்னு கன்பாம்பன்னிட்டேன்"//

சேம் பிளட்.

Ahamed irshad said...

பாத்து சூதனமா நடந்துங்கப்பு....

ஜெய்லானி said...

//டிஸ்கி : யாரும் தயவு செய்து நான் வாங்குன பல்ப எண்ணி கமண்டஸ்ல போட்டு மானத்த வாங்கிடாதிங்க//

சேச்சே நாம அப்படியா பழகி இருக்கோம். அப்ப அடுத்த சனிக்கிழமை வரவா ?

Mohan said...

சூப்பர் நகைச்சுவை... நல்லா சிரிச்சேங்க! ரொம்ப நன்றி!!

நாடோடி said...

விதி வ‌லிய‌து அமைச்ச‌ரே....

யாசவி said...

நல்ல எழுத்து நடை

நடத்துங்க :))

கண்ணா.. said...

மாப்பி... நாம எந்த ரெஸ்டாரண்ட்ல மீட் பண்ணலாம்??

சுவிட்ச் ஆப் பண்ணாலும் வாசல்லயே காத்து கிடந்து கபால்னு பிடிப்போம்

ஜெய்லானி said...

@@@ கண்ணா--//சுவிட்ச் ஆப் பண்ணாலும் வாசல்லயே காத்து கிடந்து கபால்னு பிடிப்போம்//

கண்ணா நா ஏற்கனவே டேரா போட்டாச்சி. ரெண்டு பேரும் சேர்ந்தே பிடிப்போம். தக்காளி வசமா மாட்டுவான்....ஐ.....

கண்ணா.. said...

@ஜெய்லானி

ரைட்டு தல எனக்கும் சேர்த்து துண்டு போட்டு வை. அமைச்சரு கஜானாவ காலி பண்ணிருவோம்...:))

சைவகொத்துப்பரோட்டா said...

கணக்கு வழக்கில்லாம வாங்கினா பல்ப்
பீசாயிருமே :))

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அட..
இவ்வளவு நல்லவனைப்போயி கலாச்சிட்டோமே..
வெளியூரு, ரெட்டை.. மூட்டைய கட்டுங்கப்பா..நேரா போயி மன்னிப்பு கேட்கலாம்..

பனித்துளி சங்கர் said...

ஏலே மக்கா நாங்க காலிங் பெல் வச்சாத்தானால நீங்க அமுக்குவிக .
நாங்க காலிங் பெல்லில கரண்ட் தான்ல வைப்போம் .

ஏலே மீண்டும் வருவோம்ல காலிங்பெல் அமுக்க .

Ganesh Babu said...

மங்குனி அமைச்சரே உங்கள் பதிவுகள் அருமை

தமிழர், மற்றும் தமிழ் வலை பதிவர்களுக்காக tamilar.co.cc என்று புதிய தளத்தை ஆரம்பித்து உள்ளேன், அதில் சேர்ந்து தமிழர்களுடன் உரையாடுங்கள், அது twitter+tamilish போன்றதொரு சேவை.

இப்படிக்கு
டென்த் ரிசெல்டுக்கு வெயிட் பண்ணும் மாணவன்

கணேஷ் பாபு

வரதராஜலு .பூ said...

//"தனக்கு தானே சூனியம் வச்சுகிறது இது தானோ ?"//

இத்தினி பல்பு வாங்கி இன்னுமா இந்த டவுட்டு அமைச்சரே? பச்ச புள்ள மாதிரி இருக்கிங்களே? ம்ம்ம்.

கார் மேட்டர்தான் சூப்பரு

Unknown said...

இப்பிடித்தான் செத்துப்போன கார்ட தூக்கிட்டுவந்து பிலிம் காட்டுவானுங்க
கடைசிலே நாமதான் மினிமம் அமவுண்ட் கட்டிட்டு ஒளியனும்,
நானும் ஓடி ஒளிஞ்சு பாத்தேன் ஒன்னும் நடக்கல,
இப்ப நானே போன் போட்டு அவசரமா அஞ்சு, பத்து தேவைபடுதுன்னு
தொல்லை பண்ணுவேன், ஒரு பய வரணுமே,
இத பாலோ பண்ணுங்க அமைச்சரே...
மொதல்ல பட்டா, வெளியூரு, ரெட்டை மூணு பேறுக்கும்
போன போடுங்க தம்பிங்க அப்புறம் உங்க பக்கமே வரமாட்டங்க ....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே உங்க வெலாசம்...வெலாசம் கொஞ்சம் கொடுங்க....அஞ்சப்பர்ல சாப்ட்டு ரொம்ப நாளாச்சு! (அஞ்சப்பர்ல மீன் கொழம்பு நல்லாருக்குமாமே?)

எல் கே said...

anne neenga namma oorthana, intha sunday 6 maniku varenna . sapida polaam

ராஜ நடராஜன் said...

மங்குனி அமைச்சரே!சிப்பாய் வேலை காலி இருக்குதா:)))))

Kiruthigan said...

அடேங்கப்பா..

MUTHU said...

மங்கு நான் மூன்று வாரம் லீவுக்கு ஊருக்கு வருகின்றேன் எப்படி உங்கள் வசதி

பெசொவி said...

இத்தினி பேரு பின்னூட்டங்களைப் பார்த்தா, தலைப்பு பதிவுக்கா, பின்னூட்டங்களுக்கா, அமைச்சரே!
(உங்க பதிவுகளைப் படிக்கறதுக்கு முன்னாடி வயித்துவலி மாத்திரை வாங்கி வச்சுக்கணும் போலிருக்கே!)

Jaleela Kamal said...

உங்கள் பல்பும், உங்களுக்கு நீங்களே சூனியம் வைத்து கொன்டதும் சூப்பரப்பு/

எல்லா ஒரே ஊர்கரவுக அப்ப அப்ப்டி தான்.

சித்ரா சொன்னபடி சரி தான் கிரிடிட் கார்ட கதவுல சொரிகிட்டு தூங்கிட்ட நோ பிராப்ளம் நீங்க மறுநாள் வரை நிம்மதியா தூங்கலாம்.

சைவ கொத்ஸ் சொன்னா மாதிரி ஓவரா பல்பு வாங்கினா பிஸ் போக தான் செய்யும்.

பனித்துளி சங்கர் சொன்ன மாதிரி காலிங் பெல்ல வைக்கலன்னா, ஐய்யோ எல்லா ஓடி வாங்க அமைச்சர் உள்ளே மாட்டிக்கிட்டார் கதவ திறக்க முடியலைன்னு சொல்லி கதவ ஒடச்சிடமாட்டாஙக்.... சும்மா ஒரு கெஸ் ஸு தேன்...

அன்புடன் அருணா said...

நல்லா எரிந்தது பல்பு!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கே.ஆர்.பி.செந்தில் said...

இப்பிடித்தான் செத்துப்போன கார்ட தூக்கிட்டுவந்து பிலிம் காட்டுவானுங்க
கடைசிலே நாமதான் மினிமம் அமவுண்ட் கட்டிட்டு ஒளியனும்,
நானும் ஓடி ஒளிஞ்சு பாத்தேன் ஒன்னும் நடக்கல,
இப்ப நானே போன் போட்டு அவசரமா அஞ்சு, பத்து தேவைபடுதுன்னு
தொல்லை பண்ணுவேன், ஒரு பய வரணுமே,
இத பாலோ பண்ணுங்க அமைச்சரே...
மொதல்ல பட்டா, வெளியூரு, ரெட்டை மூணு பேறுக்கும்
போன போடுங்க தம்பிங்க அப்புறம் உங்க பக்கமே வரமாட்டங்க ....
//

சார்.. நாங்க, மரு வெச்சுகிட்டு வர்ற பய புள்ளைக..

ஒரு குவார்டர் வாங்கி கொடுத்து, சொத்தை( பல்லு சொத்தைய சொல்லலைங்க..Asset..ஆங்...) எழுதி வாங்கிற ஜாதி.. ஹா..ஹா...

ரசிகன்! said...

adadaaaaaaaaaaa......

vaai vittu sirikka vachitteeenga :):):)

romba nanri :)

சுசி said...

//"தனக்கு தானே சூனியம் வச்சுகிறது இது தானோ ?"//

அதேதாங்க..

அமைச்சருக்கே இந்த கதின்னா..

goma said...

சிரிப்புன்னா சிரிப்பு அப்படி சிரிப்பா சிரிச்சேன்

ஸாதிகா said...

//என் மூஞ்சி ஹைவேஸ்ல நேசனல் பெர்மிட் லாரில அடிபட்ட நாய் மாதிரி ஆச்சு, அப்புறம் வேற வழியில்லாம என் கார்ட குடுத்தேன். (பட்டா விசிடிங் கார்டு இல்ல கிரடிட்கார்டு, தக்காளி இவன் கரக்ட்டா நொன்ன தனமா கேட்பான் )///எப்பூடி சாரே இப்பூடியெல்லாம் யோசிக்கறீங்க??ஜி அர் டி சோழா ஷெரட்டனில் ரூம் போட்டு யோசிப்பீங்களா?இல்லே லி மெரிடியனில் ரூம் போட்டு யோசிப்பீங்களா?

Kiruthigan said...

சர் எவ்வளவு பல்பு வாங்கினாலும் தாங்கறீங்க சார்..
நீங்க ரெம்ப நல்லவங்க சார்..
உங்க அட்ரஸ் குடுங்க சார்..

பித்தனின் வாக்கு said...

// அந்த கிரெடிட் கார்டை மட்டும் கதவு இடுக்கு வழியா தள்ளி விட்டீங்கனா - //

அப்படியே அக்கவுண்ட் போலன்சும், பாஸ் வேர்டும் சொல்லிட்டின்னா,

இராசாஆஆஆஆஆஆஆஆ நி மகராசனாஆஆஆஆஆஆ இருக்கனும்.

என்ன மங்கு எல்லா இடத்திலும் ஆப்பு வைச்சு, இன்னிக்கு உனக்கே ஆப்பாஆஆஆஆஆஆ..

பித்தனின் வாக்கு said...

// அட..
இவ்வளவு நல்லவனைப்போயி கலாச்சிட்டோமே..
வெளியூரு, ரெட்டை.. மூட்டைய கட்டுங்கப்பா..நேரா போயி மன்னிப்பு கேட்கலாம்.. //

பட்டா அண்ணே !! நானும் அல்லைல (அல்லக்கையா) ஒட்டிக்கிறேன் அண்ணே. அப்புறம் வருலைன்னு நம்ம மங்கு வருத்தப்படுவான். பாவம். போகாம இருந்தா நல்லா இருக்காது.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@பித்தனின் வாக்கு said...
@மங்குனி

மங்குனி.. போடுயா எல்லாத்துக்கும் ஏர் டிக்கெட்ட..( 1st class போதும்..ஏன்னா, நாங்க படிச்சு, பட்டம் பெற்றது 1st class -ல..ஹி..ஹி)

நேரா வந்து உங்கூட பேசனும் போல இருக்குயா...சாணி சாரு ஏதோ பாருக்கு போனபோது, அந்தாளை, வெள்ளக்காரனு நினைச்சுகிட்டாங்களாம்.
அதனாலே, அதே பாருக்கு போறோம்..கொண்டாடுறோம்..
அப்புறம், அங்க ஒண்ணா போயிட்டு, அடுத்த ப்ளைட் ஏறி, பொழப்ப பார்க்க போறோம்..டீலா?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மங்குனியைக் காணவில்லை..
கண்டுபிடிப்பவர்கள், இந்த ப்ளாக்கிலுள்ள. கேமரா போனை எடுத்துக்கொள்ளலாம்..

( இது ஒரு அரசாங்க சுற்றறிக்கை..)
கையொப்பம்...
பட்டாபட்டி...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@Muthu said...

மங்கு நான் மூன்று வாரம் லீவுக்கு ஊருக்கு வருகின்றேன் எப்படி உங்கள் வசதி
//

என்ன கேள்வி இது.. போங்க ராசா.. போங்க.. ஆனா சம்பளம் போட்டதும் போங்க..( மங்குனிக்கு..)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Blogger Ganesh Babu said...

மங்குனி அமைச்சரே உங்கள் பதிவுகள் அருமை

தமிழர், மற்றும் தமிழ் வலை பதிவர்களுக்காக tamilar.co.cc என்று புதிய தளத்தை ஆரம்பித்து உள்ளேன், அதில் சேர்ந்து தமிழர்களுடன் உரையாடுங்கள், அது twitter+tamilish போன்றதொரு சேவை.

இப்படிக்கு
டென்த் ரிசெல்டுக்கு வெயிட் பண்ணும் மாணவன்

கணேஷ் பாபு
//

ஏய்யா மங்குனி..
உன்னொட ப்ளாக்குக்கு, படிச்ச பய புள்ளைகளா வராங்க.. எனக்கு பயமாயிருக்குயா..

மங்குனி அமைச்சர் said...

/// சேட்டைக்காரன் said...

ஹையா, நான் தான் ஃபர்ஸ்ட்டா...? :-)))

பைக் சாவிக்கே திறக்கிற காரு மேட்டரு படு சூப்பரு! ஆனா, சாவியே இல்லாம திறக்கிற ஒரு காரைப்பத்தி எனக்குத் தெரியும். லவட்டிக்கிட்டு வந்து சொல்றேன். :-)///

சேட்ட, சீக்கிரம் அந்த வண்டிய ஓட்டிட்டு வா ?

மங்குனி அமைச்சர் said...

// பித்தனின் வாக்கு said...

நல்ல பதிவு, இதுல கடைசி வரியை, முதலில் செய்து இருந்தால் இத்தனை செலவு இல்லை. நாலு தரம் பெல் அடித்தவுடனே ஸ்விச் ஆப்பும் செய்து இருக்கனும்.

மங்குனி நான் கூட சென்னை வரலாம்னு இருக்கேன். வீட்டு அட்ரஸ் கொடுப்பா, எங்க கிட்ட கார்டு எல்லாம் இல்லை. இப்பவே சொல்லிட்டேன். எல்லாம் நீதான் மாமு.///

சார் வாங்க சார் வாங்க , கரக்ட்டா என்னைக்கு வரேன்னு சொல்லுங்கோ நான் வந்து பிக் அப் பன்னிக்கிறேன் (தக்காளி மங்கு ஆப்கனிஸ்தான்னுக்கு ஓடிடு அங்க தான் யாரும் வரமாட்டானுக )

மங்குனி அமைச்சர் said...

//சே.குமார் said...

மங்குனி நான் கூட சென்னை வரலாம்னு இருக்கேன். வீட்டு அட்ரஸ் கொடுப்பா.........

hi..... hi........ hi.........///

please check tha number u have dailed , neengal dayal seitha yennai sari paarkavum

மங்குனி அமைச்சர் said...

// Chitra said...

மிட்னைட் ஆறு மணிக்கு பெல் அடிச்சு, செல் போன் ஆப் ஆகி இருந்தா, நீங்க வீட்டுலதான் இருக்கீங்க னு நாங்க தெரிஞ்சிக்கிட்டோம். அந்த கிரெடிட் கார்டை மட்டும் கதவு இடுக்கு வழியா தள்ளி விட்டீங்கனா - உங்களை தொந்தரவு பண்ணாமலே நண்பர் போய் இருந்துருப்பார்ல ...... ஸ்ஸ்ஸ்ஸ்....... முறைக்காதீங்க...... இப்படியும் பல்ப் கொடுப்பாக.///உங்கள மாதிரி நாலு பேரு , இல்லை நீங்க ஒரு ஆளே போதும் ம்ம்ம்மம்ம்மம்ம்ம்ம்......மங்கு ஆப்கனிஸ்தான் கன்பாம்

மங்குனி அமைச்சர் said...

/// முகிலன் said...

//மிட்னைட் ஆறு மணிக்கு பெல் அடிச்சு, செல் போன் ஆப் ஆகி இருந்தா, நீங்க வீட்டுலதான் இருக்கீங்க னு நாங்க தெரிஞ்சிக்கிட்டோம். அந்த கிரெடிட் கார்டை மட்டும் கதவு இடுக்கு வழியா தள்ளி விட்டீங்கனா - உங்களை தொந்தரவு பண்ணாமலே நண்பர் போய் இருந்துருப்பார்ல ...... ஸ்ஸ்ஸ்ஸ்....... முறைக்காதீங்க...... இப்படியும் பல்ப் கொடுப்பாக//

மங்குனி, அடுத்து நான் சென்னை வரும்போது இதே மாதிரி செஞ்சுடுங்க.. உங்களுக்கெதுக்கு பைக் ஓட்டுற சிரமம் எல்லாம்.. :)))))////

vaangappu vaangga

மங்குனி அமைச்சர் said...

//S Maharajan said...

அமைச்சரே உங்க மொபைல் நம்பர் வேணுமே! நானும் வருவேன்ல!///சார் , என்னா கேட்டிங்க , ஒன்னும் காதுல விளுகள

மங்குனி அமைச்சர் said...

//பாலமுருகன் said...

அடச்சே! மிஸ் பண்ணிட்டமே.
தெருஞ்சிருந்தா முன்னாடியே நம்மளும் போயிருக்கலாமே.
வட போச்சே!//

அப்பாடா , தக்காளி தபிச்சடா மங்கு

மங்குனி அமைச்சர் said...

// ஜெய்லானி said...கொய்யால மெயின் சுவிட்சை ஆப் பண்ணிட்டா எப்படியும் நீ சூடு பொருக்காம வெளிய வந்துதானல ஆகனும்.

/////

அடப்பாவி , கொலைகாரப் பயலா இருக்கானே

மங்குனி அமைச்சர் said...

// ஜெய்லானி said...

நீ இவ்வளோ நல்லவன்னு தெரியாம போச்சே.///

ரொம்ப நல்லவன்டா நீ

மங்குனி அமைச்சர் said...

//ஜெய்லானி said...

மச்சான் எப்ப நீ ஃப்ரீ, உன்னை பாக்க வீட்டுக்கு வரலாம்னு இருக்கேன்.//

அட்ரஸ் நோட் பன்னிக்க

மங்குனி அமைசர்

குறுக்கு சாந்து

மெயின் ரோடு

ஆப்கானிஸ்தான்

மங்குனி அமைச்சர் said...

//அஹமது இர்ஷாத் said...

பாத்து சூதனமா நடந்துங்கப்பு....//

very very thanks ahmadthu

மங்குனி அமைச்சர் said...

// Mohan said...

சூப்பர் நகைச்சுவை... நல்லா சிரிச்சேங்க! ரொம்ப நன்றி!!///

thanks mohan sir

மங்குனி அமைச்சர் said...

///நாடோடி said...

விதி வ‌லிய‌து அமைச்ச‌ரே....///

ஆமா....... சார் ஆமா .................

மங்குனி அமைச்சர் said...

//யாசவி said...

நல்ல எழுத்து நடை

நடத்துங்க :))///

thnak you yaasavi

மங்குனி அமைச்சர் said...

//கண்ணா.. said...

மாப்பி... நாம எந்த ரெஸ்டாரண்ட்ல மீட் பண்ணலாம்??

சுவிட்ச் ஆப் பண்ணாலும் வாசல்லயே காத்து கிடந்து கபால்னு பிடிப்போம்///

இந்த அட்ரசுக்கு வரவும்

மங்குனி அமைசர்

குறுக்கு சாந்து

மெயின் ரோடு

ஆப்கானிஸ்தான்

மங்குனி அமைச்சர் said...

//சைவகொத்துப்பரோட்டா said...

கணக்கு வழக்கில்லாம வாங்கினா பல்ப்
பீசாயிருமே :))///

அது எப்பவோ ஆகிபோச்சு

மங்குனி அமைச்சர் said...

//பட்டாபட்டி.. said...

அட..
இவ்வளவு நல்லவனைப்போயி கலாச்சிட்டோமே..
வெளியூரு, ரெட்டை.. மூட்டைய கட்டுங்கப்பா..நேரா போயி மன்னிப்பு கேட்கலாம்..///

ரொம்ப நல்லவன்டா நீ

இந்த அட்ரசுக்கு வரவும்
மங்குனி அமைசர்
குறுக்கு சாந்து
மெயின் ரோடு
ஆப்கானிஸ்தான்

மங்குனி அமைச்சர் said...

///♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

ஏலே மக்கா நாங்க காலிங் பெல் வச்சாத்தானால நீங்க அமுக்குவிக .
நாங்க காலிங் பெல்லில கரண்ட் தான்ல வைப்போம் .

ஏலே மீண்டும் வருவோம்ல காலிங்பெல் அமுக்க .///

சார் சூப்பர் ஐடியா குடுத்திங்க சார்

மங்குனி அமைச்சர் said...

// Ganesh Babu said...

மங்குனி அமைச்சரே உங்கள் பதிவுகள் அருமை

தமிழர், மற்றும் தமிழ் வலை பதிவர்களுக்காக tamilar.co.cc என்று புதிய தளத்தை ஆரம்பித்து உள்ளேன், அதில் சேர்ந்து தமிழர்களுடன் உரையாடுங்கள், அது twitter+tamilish போன்றதொரு சேவை.

இப்படிக்கு/
டென்த் ரிசெல்டுக்கு வெயிட்
பண்ணும் மாணவன்

கணேஷ் பாபு//////

வந்துட்டா போச்சு கணேஷ் பாபு சார்

மங்குனி அமைச்சர் said...

/// வரதராஜலு .பூ said...

//"தனக்கு தானே சூனியம் வச்சுகிறது இது தானோ ?"//

இத்தினி பல்பு வாங்கி இன்னுமா இந்த டவுட்டு அமைச்சரே? பச்ச புள்ள மாதிரி இருக்கிங்களே? ம்ம்ம்.

கார் மேட்டர்தான் சூப்பரு////

ஆமா சார் , ஒன்னும் புரிய மாட்டேங்குது

மங்குனி அமைச்சர் said...

///கே.ஆர்.பி.செந்தில் said...

இப்பிடித்தான் செத்துப்போன கார்ட தூக்கிட்டுவந்து பிலிம் காட்டுவானுங்க
கடைசிலே நாமதான் மினிமம் அமவுண்ட் கட்டிட்டு ஒளியனும்,
நானும் ஓடி ஒளிஞ்சு பாத்தேன் ஒன்னும் நடக்கல,
இப்ப நானே போன் போட்டு அவசரமா அஞ்சு, பத்து தேவைபடுதுன்னு
தொல்லை பண்ணுவேன், ஒரு பய வரணுமே,
இத பாலோ பண்ணுங்க அமைச்சரே...
மொதல்ல பட்டா, வெளியூரு, ரெட்டை மூணு பேறுக்கும்
போன போடுங்க தம்பிங்க அப்புறம் உங்க பக்கமே வரமாட்டங்க ....///

சூப்பர் ஐடியா குடுத்திங்க சார்

மங்குனி அமைச்சர் said...

/// பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே உங்க வெலாசம்...வெலாசம் கொஞ்சம் கொடுங்க....அஞ்சப்பர்ல சாப்ட்டு ரொம்ப நாளாச்சு! (அஞ்சப்பர்ல மீன் கொழம்பு நல்லாருக்குமாமே?)////

வாங்க பன்னிக்குட்டி ராம்சாமி

இந்த அட்ரசுக்கு வரவும்
மங்குனி அமைசர்
குறுக்கு சாந்து
மெயின் ரோடு
ஆப்கானிஸ்தான்

மங்குனி அமைச்சர் said...

/// LK said...

anne neenga namma oorthana, intha sunday 6 maniku varenna . sapida polaam///

சார் , என்னா கேட்டிங்க , ஒன்னும் காதுல விளுகள

மங்குனி அமைச்சர் said...

// ராஜ நடராஜன் said...

மங்குனி அமைச்சரே!சிப்பாய் வேலை காலி இருக்குதா:)))))///

எனக்கே ஒழுங்கா சம்பளம் தரமாட்ட்ராணுக சார்

மங்குனி அமைச்சர் said...

//Cool Boy said...

அடேங்கப்பா..///

thank you coll boy

மங்குனி அமைச்சர் said...

/// பெயர் சொல்ல விருப்பமில்லை said...

இத்தினி பேரு பின்னூட்டங்களைப் பார்த்தா, தலைப்பு பதிவுக்கா, பின்னூட்டங்களுக்கா, அமைச்சரே!
(உங்க பதிவுகளைப் படிக்கறதுக்கு முன்னாடி வயித்துவலி மாத்திரை வாங்கி வச்சுக்கணும் போலிருக்கே!)////

கரக்டுங்க , நானே என் தலைல மன்ன வாரி போட்டு கிட்டனோ

மங்குனி அமைச்சர் said...

/// Jaleela said...

உங்கள் பல்பும், உங்களுக்கு நீங்களே சூனியம் வைத்து கொன்டதும் சூப்பரப்பு/

எல்லா ஒரே ஊர்கரவுக அப்ப அப்ப்டி தான்.

சித்ரா சொன்னபடி சரி தான் கிரிடிட் கார்ட கதவுல சொரிகிட்டு தூங்கிட்ட நோ பிராப்ளம் நீங்க மறுநாள் வரை நிம்மதியா தூங்கலாம்.

சைவ கொத்ஸ் சொன்னா மாதிரி ஓவரா பல்பு வாங்கினா பிஸ் போக தான் செய்யும்.

பனித்துளி சங்கர் சொன்ன மாதிரி காலிங் பெல்ல வைக்கலன்னா, ஐய்யோ எல்லா ஓடி வாங்க அமைச்சர் உள்ளே மாட்டிக்கிட்டார் கதவ திறக்க முடியலைன்னு சொல்லி கதவ ஒடச்சிடமாட்டாஙக்.... சும்மா ஒரு கெஸ் ஸு தேன்...////
சூபரு மேடம் , காமன்ட்சுக்கு கமண்ட்ஸ் போட ஆரபிசுடீக , இன்னும் கொஞ்சம் மொக்கையா யோசிச்சு போடுங்க

மங்குனி அமைச்சர் said...

//அன்புடன் அருணா said...

நல்லா எரிந்தது பல்பு!///

thank you anbudan arunaa

மங்குனி அமைச்சர் said...

///ரசிகன்! said...

adadaaaaaaaaaaa......

vaai vittu sirikka vachitteeenga :):):)

romba nanri :)///

thank you rasigan sir

மங்குனி அமைச்சர் said...

///சுசி said...

//"தனக்கு தானே சூனியம் வச்சுகிறது இது தானோ ?"//

அதேதாங்க..

அமைச்சருக்கே இந்த கதின்னா..////

ஆமாங்க ஆமா

மங்குனி அமைச்சர் said...

// goma said...

சிரிப்புன்னா சிரிப்பு அப்படி சிரிப்பா சிரிச்சேன்///

பாத்திகளா என்பொலப்பு சிப்பா சிரிச்சு போச்சு

மங்குனி அமைச்சர் said...

///ஸாதிகா said...

//என் மூஞ்சி ஹைவேஸ்ல நேசனல் பெர்மிட் லாரில அடிபட்ட நாய் மாதிரி ஆச்சு, அப்புறம் வேற வழியில்லாம என் கார்ட குடுத்தேன். (பட்டா விசிடிங் கார்டு இல்ல கிரடிட்கார்டு, தக்காளி இவன் கரக்ட்டா நொன்ன தனமா கேட்பான் )///எப்பூடி சாரே இப்பூடியெல்லாம் யோசிக்கறீங்க??ஜி அர் டி சோழா ஷெரட்டனில் ரூம் போட்டு யோசிப்பீங்களா?இல்லே லி மெரிடியனில் ரூம் போட்டு யோசிப்பீங்களா?////

இல்ல மேடம் , சின்ன வயசுல தலைல அடிபட்டுசாம் , அதுலருந்து இப்படி ஆகிபோச்சு

மங்குனி அமைச்சர் said...

//Cool Boy said...

சர் எவ்வளவு பல்பு வாங்கினாலும் தாங்கறீங்க சார்..
நீங்க ரெம்ப நல்லவங்க சார்..
உங்க அட்ரஸ் குடுங்க சார்..////

இந்த அட்ரசுக்கு வரவும்
மங்குனி அமைசர்
குறுக்கு சாந்து
மெயின் ரோடு
ஆப்கானிஸ்தான்

மங்குனி அமைச்சர் said...

//பித்தனின் வாக்கு said...

// அந்த கிரெடிட் கார்டை மட்டும் கதவு இடுக்கு வழியா தள்ளி விட்டீங்கனா - //

அப்படியே அக்கவுண்ட் போலன்சும், பாஸ் வேர்டும் சொல்லிட்டின்னா,

இராசாஆஆஆஆஆஆஆஆ நி மகராசனாஆஆஆஆஆஆ இருக்கனும்.

என்ன மங்கு எல்லா இடத்திலும் ஆப்பு வைச்சு, இன்னிக்கு உனக்கே ஆப்பாஆஆஆஆஆஆ..////பித்தனின் வாக்கு சார் , தொரத்தி தொரத்தி அடிகிராணுக

மங்குனி அமைச்சர் said...

///
Blogger பட்டாபட்டி.. said...

@பித்தனின் வாக்கு said...
@மங்குனி

// அட..
இவ்வளவு நல்லவனைப்போயி கலாச்சிட்டோமே..
வெளியூரு, ரெட்டை.. மூட்டைய கட்டுங்கப்பா..நேரா போயி மன்னிப்பு கேட்கலாம்.. //

பட்டா அண்ணே !! நானும் அல்லைல (அல்லக்கையா) ஒட்டிக்கிறேன் அண்ணே. அப்புறம் வருலைன்னு நம்ம மங்கு வருத்தப்படுவான். பாவம். போகாம இருந்தா நல்லா இருக்காது.

//

மங்குனி.. போடுயா எல்லாத்துக்கும் ஏர் டிக்கெட்ட..( 1st class போதும்..ஏன்னா, நாங்க படிச்சு, பட்டம் பெற்றது 1st class -ல..ஹி..ஹி)

பட்டாபட்டி.. said...

@பித்தனின் வாக்கு said...
@மங்குனி

// அட..
இவ்வளவு நல்லவனைப்போயி கலாச்சிட்டோமே..
வெளியூரு, ரெட்டை.. மூட்டைய கட்டுங்கப்பா..நேரா போயி மன்னிப்பு கேட்கலாம்.. //

பட்டா அண்ணே !! நானும் அல்லைல (அல்லக்கையா) ஒட்டிக்கிறேன் அண்ணே. அப்புறம் வருலைன்னு நம்ம மங்கு வருத்தப்படுவான். பாவம். போகாம இருந்தா நல்லா இருக்காது.

//

மங்குனி.. போடுயா எல்லாத்துக்கும் ஏர் டிக்கெட்ட..( 1st class போதும்..ஏன்னா, நாங்க படிச்சு, பட்டம் பெற்றது 1st class -ல..ஹி..ஹி)

நேரா வந்து உங்கூட பேசனும் போல இருக்குயா...சாணி சாரு ஏதோ பாருக்கு போனபோது, அந்தாளை, வெள்ளக்காரனு நினைச்சுகிட்டாங்களாம்.
அதனாலே, அதே பாருக்கு போறோம்..கொண்டாடுறோம்..
அப்புறம், அங்க ஒண்ணா போயிட்டு, அடுத்த ப்ளைட் ஏறி, பொழப்ப பார்க்க போறோம்..டீலா?

/////பட்டாப்பட்டி , ட்ரெயின் அன்ரிசர்வுடுல பஸ்டு கிளாஸ் இருக்கா என்னா ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அமைச்சரே இப்பிடி கோக்கு மாக்கா அட்ரஸ் கொடுத்தா விட்ருவமா? அதுசரி, எல்லாரும் அந்த அட்ரச தேடி போகட்டும், நம்ம ரெண்டு பேரும் அஞ்சப்பர் போயி சாப்ட்டு சாப்ட்டு வெளையாடுவமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//மங்குனி அமைச்சர் said//
//பட்டாப்பட்டி , ட்ரெயின் அன்ரிசர்வுடுல பஸ்டு கிளாஸ் இருக்கா என்னா ? //

அன்ரிசர்வ்டுலாம் எதுக்கு அமைச்சரே, நமக்கு ஒரு நியூஸ் பேப்பர் பத்தாதா, அப்பிடியே டாய்லெட்ல உக்காந்துகிடலாம்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மங்குனி.. போடுயா எல்லாத்துக்கும் ஏர் டிக்கெட்ட..( 1ச்ட் cலச்ச் போதும்..ஏன்னா, நாங்க படிச்சு, பட்டம் பெற்றது 1ச்ட் cலச்ச் -ல..ஹி..ஹி)

நேரா வந்து உங்கூட பேசனும் போல இருக்குயா...சாணி சாரு ஏதோ பாருக்கு போனபோது, அந்தாளை, வெள்ளக்காரனு நினைச்சுகிட்டாங்களாம்.
அதனாலே, அதே பாருக்கு போறோம்..கொண்டாடுறோம்..
அப்புறம், அங்க ஒண்ணா போயிட்டு, அடுத்த ப்ளைட் ஏறி, பொழப்ப பார்க்க போறோம்..டீலா?//

அண்ணே நம்மளையும் பாருக்குக் கூட்டிடுப் போங்கண்ணே, எப்பிடியாவது ஒரு வெள்ளைகாரிய ஏற்பாடு பண்ணுங்கண்ணே, இதுவரைக்கும் ஒரு வெள்ளைக்காரியோட தண்ணி அடிச்சதே இல்ல.

Shankar said...

Dear Manguni minister,
Just happened to see your site today and became a instant follower.
terrific sense of humour.
Same blood here too. I was once made to buy tickets for 8 opersons in a movie theatre. I could never enjoy the movie at all.Ase were standing in the queue, my friend's childhood street friends joined and they renewed their relationship. Since i reached the counter first and slipped a 500 note, I had to bear the entire cost. It has happened more than once. Ellam namba time?

Onnume nadakadha madiri moonjiye vachikkanum. Adhu vere.

Shankar

ஷர்புதீன் said...

perfect casual blog!!

மங்குனி அமைச்சர் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

அமைச்சரே இப்பிடி கோக்கு மாக்கா அட்ரஸ் கொடுத்தா விட்ருவமா? அதுசரி, எல்லாரும் அந்த அட்ரச தேடி போகட்டும், நம்ம ரெண்டு பேரும் அஞ்சப்பர் போயி சாப்ட்டு சாப்ட்டு வெளையாடுவமா?///

இது நல்லா இருக்கே ?

மங்குனி அமைச்சர் said...

///பன்னிக்குட்டி ராம்சாமி said...

//மங்குனி அமைச்சர் said//
//பட்டாப்பட்டி , ட்ரெயின் அன்ரிசர்வுடுல பஸ்டு கிளாஸ் இருக்கா என்னா ? //

அன்ரிசர்வ்டுலாம் எதுக்கு அமைச்சரே, நமக்கு ஒரு நியூஸ் பேப்பர் பத்தாதா, அப்பிடியே டாய்லெட்ல உக்காந்துகிடலாம்ல?///

இது மனுஷனுக்கு அழகு

மங்குனி அமைச்சர் said...

//ஷர்புதீன் said...

perfect casual blog!!///thank you sharfudeen

மங்குனி அமைச்சர் said...

///Shankar said...

Dear Manguni minister,
Just happened to see your site today and became a instant follower.
terrific sense of humour.
Same blood here too. I was once made to buy tickets for 8 opersons in a movie theatre. I could never enjoy the movie at all.Ase were standing in the queue, my friend's childhood street friends joined and they renewed their relationship. Since i reached the counter first and slipped a 500 note, I had to bear the entire cost. It has happened more than once. Ellam namba time?

Onnume nadakadha madiri moonjiye vachikkanum. Adhu vere.

Shankar///

வாங்க வாங்க சங்கர் சார் , ரொம்ப பாதிக்க பட்டு இருப்பிக போல இருக்கு , என்னா பன்றது தல எழுத்து

மங்குனி அமைச்சர் said...

///கண்ணா.. said...

@ஜெய்லானி

ரைட்டு தல எனக்கும் சேர்த்து துண்டு போட்டு வை. அமைச்சரு கஜானாவ காலி பண்ணிருவோம்...:))///

தக்காளி ஒரு குரூபா தான்யா அலையுரானுக

மங்குனி அமைச்சர் said...

//ஜெய்லானி said...

@@@ கண்ணா--//சுவிட்ச் ஆப் பண்ணாலும் வாசல்லயே காத்து கிடந்து கபால்னு பிடிப்போம்//

கண்ணா நா ஏற்கனவே டேரா போட்டாச்சி. ரெண்டு பேரும் சேர்ந்தே பிடிப்போம். தக்காளி வசமா மாட்டுவான்....ஐ.....//

ஏன் இந்த கொல வெறி

மங்குனி அமைச்சர் said...

/// பட்டாபட்டி.. said...

சார்.. நாங்க, மரு வெச்சுகிட்டு வர்ற பய புள்ளைக..

ஒரு குவார்டர் வாங்கி கொடுத்து, சொத்தை( பல்லு சொத்தைய சொல்லலைங்க..Asset..ஆங்...) எழுதி வாங்கிற ஜாதி.. ஹா..ஹா...///பட்டா , மரு ஒரு கெட்டப்பு , கூலிங் கிளாஸ் ஒரு கெட்டப்பு

மங்குனி அமைச்சர் said...

////பித்தனின் வாக்கு said...

// அட..
இவ்வளவு நல்லவனைப்போயி கலாச்சிட்டோமே..
வெளியூரு, ரெட்டை.. மூட்டைய கட்டுங்கப்பா..நேரா போயி மன்னிப்பு கேட்கலாம்.. //

பட்டா அண்ணே !! நானும் அல்லைல (அல்லக்கையா) ஒட்டிக்கிறேன் அண்ணே. அப்புறம் வருலைன்னு நம்ம மங்கு வருத்தப்படுவான். பாவம். போகாம இருந்தா நல்லா இருக்காது.////ஆனது ஆச்சு , இனி என்னா எல்லாம் வாங்க

மங்குனி அமைச்சர் said...

// பட்டாபட்டி.. said...

மங்குனியைக் காணவில்லை..
கண்டுபிடிப்பவர்கள், இந்த ப்ளாக்கிலுள்ள. கேமரா போனை எடுத்துக்கொள்ளலாம்..

( இது ஒரு அரசாங்க சுற்றறிக்கை..)
கையொப்பம்...
பட்டாபட்டி...///

ஐயா , மங்குனி அவர்கள் தனக்கு தானாகவே நாடு கடதிகிட்டார்

மங்குனி அமைச்சர் said...

/// பட்டாபட்டி.. said...

@Muthu said...

மங்கு நான் மூன்று வாரம் லீவுக்கு ஊருக்கு வருகின்றேன் எப்படி உங்கள் வசதி
//

என்ன கேள்வி இது.. போங்க ராசா.. போங்க.. ஆனா சம்பளம் போட்டதும் போங்க..( மங்குனிக்கு..)///ஆமா இப்படி சனியன கூடவே வச்சு இருந்தா ?????? அப்புறம் ஐடியா குடுக்காது

மங்குனி அமைச்சர் said...

///பட்டாபட்டி.. said...

Blogger Ganesh Babu said...ஏய்யா மங்குனி..
உன்னொட ப்ளாக்குக்கு, படிச்ச பய புள்ளைகளா வராங்க.. எனக்கு பயமாயிருக்குயா..////
ஆமா பட்டா , எனக்கும் தான் பயமா இருக்கு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மங்குனி அமைச்சர் வாழ்க்கையிலயே மொத தடவையா சாப்புட்டுட்டு பில் கட்டியிருக்காரா (அதுவும் மூணு வேளைக்கும்), அது அவரு வயித்துக்கே புடிக்கல போல, நைட்டு போனவருதான் கக்கூஸுக்குள்ள, இன்னும் வெளிய வரல, நிக்காம போயிக்கிட்டு இருக்காம். ஏல, யாரவது செகப்பு கொடி இருந்தா கொண்டு வாங்கலே, காட்டுவோம், அப்படியாவது நிக்கிதான்னு பாப்போம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

// பட்டாபட்டி.. said...

மங்குனியைக் காணவில்லை..
கண்டுபிடிப்பவர்கள், இந்த ப்ளாக்கிலுள்ள. கேமரா போனை எடுத்துக்கொள்ளலாம்..

( இது ஒரு அரசாங்க சுற்றறிக்கை..)
கையொப்பம்...
பட்டாபட்டி...///

மங்குனி அமைச்சர் வாழ்க்கையிலயே மொத தடவையா சாப்புட்டுட்டு பில் கட்டியிருக்காரா (அதுவும் மூணு வேளைக்கும்), அது அவரு வயித்துக்கே புடிக்கல போல, நைட்டு போனவருதான் கக்கூஸுக்குள்ள, இன்னும் வெளிய வரல, நிக்காம போயிக்கிட்டு இருக்காம். ஏல, யாரவது செகப்பு கொடி இருந்தா கொண்டு வாங்கலே, காட்டுவோம், அப்படியாவது நிக்கிதான்னு பாப்போம்.

மங்குனி அமைச்சர் said...

me the 100

மங்குனி அமைச்சர் said...

//// பன்னிக்குட்டி ராம்சாமி said...

// பட்டாபட்டி.. said...

மங்குனியைக் காணவில்லை..
கண்டுபிடிப்பவர்கள், இந்த ப்ளாக்கிலுள்ள. கேமரா போனை எடுத்துக்கொள்ளலாம்..

( இது ஒரு அரசாங்க சுற்றறிக்கை..)
கையொப்பம்...
பட்டாபட்டி...///

மங்குனி அமைச்சர் வாழ்க்கையிலயே மொத தடவையா சாப்புட்டுட்டு பில் கட்டியிருக்காரா (அதுவும் மூணு வேளைக்கும்), அது அவரு வயித்துக்கே புடிக்கல போல, நைட்டு போனவருதான் கக்கூஸுக்குள்ள, இன்னும் வெளிய வரல, நிக்காம போயிக்கிட்டு இருக்காம். ஏல, யாரவது செகப்பு கொடி இருந்தா கொண்டு வாங்கலே, காட்டுவோம், அப்படியாவது நிக்கிதான்னு பாப்போம்./////ஆஹா , இவனுக நம்ம பொணத்த பாக்காம போக மாட்டானுக போலருக்கு ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன அமைச்சரே, கக்கூஸுக்குள்ளேயே இன்டர்னெட் கனெக்சன் வந்துடுச்சா...ஜமாய்ங்க....

மனோ சாமிநாதன் said...

சிரிப்பு தாங்க முடியவில்லை. நல்ல நகைச்சுவையான எழுத்து! மேலும் தொடருங்கள்!

அன்புடன் மலிக்கா said...

கார்ட் வாங்கலையோ கார்ட் கிரிட்கார்ட்.

என்ன அமைச்சரே போன் ஆனில் இருக்கு.

பாத்து இருங்கப்பு பாதகம் வந்துடப்போகுது ஏன்னா எல்லாரும் அட்ரஸுல்ல கேக்குதாக..

அப்படியே வாங்க இங்க
http://fmalikka.blogspot.com/2010/04/blog-post.html.

http://niroodai.blogspot.com/2010/04/blog-post_21.html..

ஜெயந்தி said...

ஒருத்தர்கிட்ட ஏமாந்தத போட்டு இப்ப ஊரே கெளம்பீருச்சே என்ன பண்ணப் போறீங்க? இதுதான் சொந்த துட்டுல சூனியம் வச்சுக்கறது.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அமைச்சரே பாத்தீங்களா..உங்கள் ஏமாத்த எத்தன பேரு வெறியோட அலைறாங்கன்னு... பாத்து சூதானாமா இருங்க..இனிமே எங்கேயாவது வெளியே தனியா போகாதீங்க, போனா கூட நம்மளையும் சேத்துங்கங்க (ஒரு பாதுகாப்புக்குத்தான்) முக்கியமா சாப்புட போகும்போது...!
ஆமா வேலு மெஸ்ல நண்டுக்கறி நல்லா இருக்குமாமே? ஓக்கே...அப்போ இந்த சண்டே 6 மணிக்கு மீட் பண்ணுவோமா?

Ananya Mahadevan said...

மங்குனி,
சிரிச்சு சிரிச்சு வயித்த வலிக்குதுபா.. சூப்பர்!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

எப்பவும் போல கலக்கிட்டீங்க..
இன்னமும் சிரிச்சிட்டே இருக்கேன்..போங்க..

இனிமே காலிங் பெல் அடிச்சா செல் ஆப் ஆ?? ஓகே ஓகே..

இனிமே உங்க வீட்டுக்கு வந்து, பெல் அடிக்காம உங்க செல்-ல கூப்பிடறேன்.. :D :D
இது எப்புடி......:)

மங்குனி அமைச்சர் said...

///மனோ சாமிநாதன் said...

சிரிப்பு தாங்க முடியவில்லை. நல்ல நகைச்சுவையான எழுத்து! மேலும் தொடருங்கள்!///

ரொம்ப நன்றி மேடம்

மங்குனி அமைச்சர் said...

/// அன்புடன் மலிக்கா said...

கார்ட் வாங்கலையோ கார்ட் கிரிட்கார்ட்.

என்ன அமைச்சரே போன் ஆனில் இருக்கு.

பாத்து இருங்கப்பு பாதகம் வந்துடப்போகுது ஏன்னா எல்லாரும் அட்ரஸுல்ல கேக்குதாக..

அப்படியே வாங்க இங்க
http://fmalikka.blogspot.com/2010/04/blog-post.html.

http://niroodai.blogspot.com/2010/04/blog-post_21.html..///

பிளீஸ் செக் தா நம்பர் யு ஹேவ் டையல்டு , என்ங்கல் டயல் செய்த வாடிகையாலம் தற்போது ஆப்கனிஸ்தானில் உள்ளார்

மங்குனி அமைச்சர் said...

// ஜெயந்தி said...

ஒருத்தர்கிட்ட ஏமாந்தத போட்டு இப்ப ஊரே கெளம்பீருச்சே என்ன பண்ணப் போறீங்க? இதுதான் சொந்த துட்டுல சூனியம் வச்சுக்கறது.///

கண் கேட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ணி................................. , என்னா பண்றது மேடம் மாட்டிகிட்டேன்

மங்குனி அமைச்சர் said...

///பன்னிக்குட்டி ராம்சாமி said...

அமைச்சரே பாத்தீங்களா..உங்கள் ஏமாத்த எத்தன பேரு வெறியோட அலைறாங்கன்னு... பாத்து சூதானாமா இருங்க..இனிமே எங்கேயாவது வெளியே தனியா போகாதீங்க, போனா கூட நம்மளையும் சேத்துங்கங்க (ஒரு பாதுகாப்புக்குத்தான்) முக்கியமா சாப்புட போகும்போது...!
ஆமா வேலு மெஸ்ல நண்டுக்கறி நல்லா இருக்குமாமே? ஓக்கே...அப்போ இந்த சண்டே 6 மணிக்கு மீட் பண்ணுவோமா?///

அட்ரஸ் நோட் பன்னிக்க
மங்குனி அமைசர்
குறுக்கு சாந்து
மெயின் ரோடு
ஆப்கானிஸ்தான்

கரக்டா சன்டே ஆறு மணிக்கு வந்திடு

மங்குனி அமைச்சர் said...

// அநன்யா மஹாதேவன் said...

மங்குனி,
சிரிச்சு சிரிச்சு வயித்த வலிக்குதுபா.. சூப்பர்!///

thank you ananyaa mahaadevan

மங்குனி அமைச்சர் said...

/// Ananthi said...

எப்பவும் போல கலக்கிட்டீங்க..
இன்னமும் சிரிச்சிட்டே இருக்கேன்..போங்க..

இனிமே காலிங் பெல் அடிச்சா செல் ஆப் ஆ?? ஓகே ஓகே..

இனிமே உங்க வீட்டுக்கு வந்து, பெல் அடிக்காம உங்க செல்-ல கூப்பிடறேன்.. :D :D
இது எப்புடி......:)////

ஆஹா , புதுசு புதுசா கண்டுபுடிகிரான்களே , இப்புடி ஓட விட்டு அடிச்ச எப்புடி ?

Asiya Omar said...

மங்குனி மொத்ததுல நீ பிழைக்க தெரியாத ஆளுய்யா?பாரு எல்லாரும் கிளம்பி வரப்போறாங்க.

Jaleela Kamal said...

அமைச்சரே ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டு தூங்கியது போதும் அங்கு வாரும் உங்களை ஜெய்லானி கூப்பிடுகீறார்.

தக்குடு said...

அமைச்சரே! நான் சென்னை வரும்போது டேரக்டா உங்க வீட்டுக்குத்தான் வரப் போறேன்...;) கிரெடிட் கார்டோட ரெடியா இருக்கவும்...:) classic post...:) LOL

மங்குனி அமைச்சர் said...

// asiya omar said...

மங்குனி மொத்ததுல நீ பிழைக்க தெரியாத ஆளுய்யா?பாரு எல்லாரும் கிளம்பி வரப்போறாங்க.///

ஆமா மேடம் இப்படி வசம்மா மாட்டிகிட்டேன்

மங்குனி அமைச்சர் said...

//Jaleela said...

அமைச்சரே ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டு தூங்கியது போதும் அங்கு வாரும் உங்களை ஜெய்லானி கூப்பிடுகீறார்.///தோ..... வந்துட்டே இருக்கேன்

மங்குனி அமைச்சர் said...

//தக்குடுபாண்டி said...

அமைச்சரே! நான் சென்னை வரும்போது டேரக்டா உங்க வீட்டுக்குத்தான் வரப் போறேன்...;) கிரெடிட் கார்டோட ரெடியா இருக்கவும்...:) classic post...:) LOL///

வாங்க தக்குடு பாண்டி சார்,
இந்த அட்ரசுக்கு வரவும்
மங்குனி அமைசர்
குறுக்கு சாந்து
மெயின் ரோடு
ஆப்கானிஸ்தான்

ஹரீகா said...

என்னதிது... 19ம் தேதிக் கப்புறம் நகர்வலம் செல்லவே இல்லையா அமைச்சரே!! இன்னமும் இப்படி மங்குனியாவே இருந்தா எப்படி?

**(( நான் புதன் கிரதகதுல இருக்கேன், ஜெய்லானி சனி கிரகத்துல இருக்கான், சித்ரா மேடம் செவ்வாய் கிரகத்துல இருக்காங்க கீதா சரசு ரெண்டு பெரும், நிலாவுல விவசாயம் பண்ணிக்கிட்டு இருக்காக))**

ஹா.. ஹா.. நல்ல டைமிங் சென்ஸ் ஜோக் மங்கு. ஆகவே ஒரு முறை எல்லோரும் ஜோரா கைதட்டுங்க ப்ளீஸ்!!(அய்யய்யோ நானும் வேற்று கிரகத்து வாசிகளிடம் வந்து மாட்டிக்கொண்டேனோ) பரவா இல்லையா ஷாஜஹான் பாய்..

Aba said...

@சேட்டை,

//பைக் சாவிக்கே திறக்கிற காரு மேட்டரு படு சூப்பரு! ஆனா, சாவியே இல்லாம திறக்கிற ஒரு காரைப்பத்தி எனக்குத் தெரியும். லவட்டிக்கிட்டு வந்து சொல்றேன். :-)//

ஆங்.. எனக்கும் தெரியும்! அந்த ஹாட்வீல்சோட வெளையாட்டு ரிமோட் கார்தானே? அப்பிடியே எனக்கும் ஒன்னு எடுத்துட்டு வாங்க!

Aba said...

//நல்ல பதிவு, இதுல கடைசி வரியை, முதலில் செய்து இருந்தால் இத்தனை செலவு இல்லை. நாலு தரம் பெல் அடித்தவுடனே ஸ்விச் ஆப்பும் செய்து இருக்கனும். //

அதான் மங்குனிங்கிறது... சுத்த ட்யூப் லைட்டு...

Aba said...

@சித்ரா அக்கா, மங்குனி,

//அந்த கிரெடிட் கார்டை மட்டும் கதவு இடுக்கு வழியா தள்ளி விட்டீங்கனா - உங்களை தொந்தரவு பண்ணாமலே நண்பர் போய் இருந்துருப்பார்ல ...... ஸ்ஸ்ஸ்ஸ்....... முறைக்காதீங்க...... இப்படியும் பல்ப் கொடுப்பாக.//

எலேய் மங்குனி, நா ஒரு சூப்பர் ஐடியா சொல்றேன்! நீ மொதல்ல சித்ரா மேடமோட கிரெடிட் கார்ட சுட்டு ஒரு நாலு மாசம் யூஸ் பண்ணாம வச்சுக்கோ... (அதுக்குள்ளே அவங்க காரட லாக் பண்ணிடுவாங்க) அப்புறமா நீ அவங்களோட கார்ட கதவு இடுக்கு வழியா தள்ளி விடு.. அதுக்கப்புறமா உன்னோட ப்ரெண்டு உன் வீட்டுப் பக்கமே தல வச்சுப் படுக்க மாட்டான்!

Aba said...

@முகிலன், மங்கு,

//மங்குனி, அடுத்து நான் சென்னை வரும்போது இதே மாதிரி செஞ்சுடுங்க.. உங்களுக்கெதுக்கு பைக் ஓட்டுற சிரமம் எல்லாம்.. :)))))//

அதானே, டேய் மங்கு, இனிமே நீ உன்னோட பைக்கையும் வெளியே வச்சுடு....

அல்லது உன்னோட பைக் சாவியையும் அந்த பைக் சாவிக்கு தொறக்கற காரோட நம்பரையும் வெளியே வச்சுடு... நாங்க யூஸ் பண்ணிக்கறோம்!

Aba said...

@ஜெய்லானி,

//கொய்யால மெயின் சுவிட்சை ஆப் பண்ணிட்டா எப்படியும் நீ சூடு பொருக்காம வெளிய வந்துதானல ஆகனும்.//

அவ்வளவு எதுக்கு? பேசாம மங்குனிய பாக்க தமன்னா வந்திருக்கறாங்கன்னு யன்னல் வழியா சத்தம் போடு... அலறி அடிச்சுட்டு வெளிய வந்துடுவான்!

Aba said...

@ஜெய்லானி,

//மச்சான் எப்ப நீ ஃப்ரீ, உன்னை பாக்க வீட்டுக்கு வரலாம்னு இருக்கேன்.//

மச்சானுக்கு ஏகப்பட்ட அப்பாயின்ட்மன்ட்ஸ்... நம்மளப் பாக்கெல்லாம் டைம் இல்ல!

Aba said...

@கண்ணா,

//சுவிட்ச் ஆப் பண்ணாலும் வாசல்லயே காத்து கிடந்து கபால்னு பிடிப்போம்//

சிங்கிள் கார்டுக்காக நாய் ரேஞ்சுக்கு ஆயிட்டோம் நாம!

Aba said...

//சுவிட்ச் ஆப் பண்ணாலும் வாசல்லயே காத்து கிடந்து கபால்னு பிடிப்போம்//

கஜானால காலி பண்ண என்ன இருக்கு? வேணும்னா கஸானா போலாமா?

Aba said...

//அட..
இவ்வளவு நல்லவனைப்போயி கலாச்சிட்டோமே..
வெளியூரு, ரெட்டை.. மூட்டைய கட்டுங்கப்பா..நேரா போயி மன்னிப்பு கேட்கலாம்..//

எலேய்... நானும் வர்றேன்லே..

Aba said...

@பனித்துளி,

//ஏலே மக்கா நாங்க காலிங் பெல் வச்சாத்தானால நீங்க அமுக்குவிக .
நாங்க காலிங் பெல்லில கரண்ட் தான்ல வைப்போம் .//

நாங்க மொதல்ல மெயினப் புடுங்குவோம்! அப்புறமா தமன்னாவ கூப்பிடுவோம்! (இல்லைன்னா விஜயகாந்த கூப்பிட்டு கதவ ஒடைப்போம்!)

Aba said...

@செந்தில்,

/இப்பிடித்தான் செத்துப்போன கார்ட தூக்கிட்டுவந்து பிலிம் காட்டுவானுங்க
கடைசிலே நாமதான் மினிமம் அமவுண்ட் கட்டிட்டு ஒளியனும்//

அதான் நம்ம ஸ்டைல்!

//மொதல்ல பட்டா, வெளியூரு, ரெட்டை மூணு பேறுக்கும்
போன போடுங்க தம்பிங்க அப்புறம் உங்க பக்கமே வரமாட்டங்க ....//

அதயெல்லாம் போன் வச்சிருக்கற பிச்சக்காரங்ககிட்ட போய் சொல்லுய்யா...

Aba said...

@பன்னி,

//அண்ணே உங்க வெலாசம்...வெலாசம் கொஞ்சம் கொடுங்க....அஞ்சப்பர்ல சாப்ட்டு ரொம்ப நாளாச்சு! (அஞ்சப்பர்ல மீன் கொழம்பு நல்லாருக்குமாமே?)//

வாடா பன்னி, அங்க ஒரு கூட்டமே உன்னைய வறுத்து பீஸ் போட அலையுறானுக.. ஒனக்கு அஞ்சப்பர் மீன்கொளம்பு கேக்குதா?

Aba said...

//மங்குனி அமைச்சரே!சிப்பாய் வேலை காலி இருக்குதா:))))//

அட ஏனய்யா வைத்தெரிச்சலை கிளப்புகிறீர்? நமது மங்குவே அரண்மனைச் சிப்பாய்களுக்குச் சேவகம் செய்து தன் கால்வயிற்றைக் கழுவிக்கொண்டிருக்கின்றார்... நீர் புதிதாக ஒரு சிப்பாய் வேண்டுமாவென கேட்கிறீர்!

Aba said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//(உங்க பதிவுகளைப் படிக்கறதுக்கு முன்னாடி வயித்துவலி மாத்திரை வாங்கி வச்சுக்கணும் போலிருக்கே!)//

நாங்க நாப்பத்தைஞ்சு தூக்க மாத்திர வாங்கிகிட்டுதான் படிக்கிறோம்.. தூக்க மாத்திரைக்கு போகாதா உசிரா வைத்துவலி மாத்திரைக்கு போகப்போவுது?

சரி, உசிரு போகணும்னு முடிவு பண்ணிட்டா அந்தக்கழுத எதுல போனா நமக்கென்ன??

Aba said...

@ஜலீலா,

// ஐய்யோ எல்லா ஓடி வாங்க அமைச்சர் உள்ளே மாட்டிக்கிட்டார் கதவ திறக்க முடியலைன்னு சொல்லி கதவ ஒடச்சிடமாட்டாஙக்.... சும்மா ஒரு கெஸ் ஸு தேன்...//

அக்கா, மங்குவுக்கு கடன் குடுத்தவனுகள கூப்பிடுங்க மொதல்ல... அவனுங்க காப்பாத்துவானுக

Aba said...

@பட்டா,

//சார்.. நாங்க, மரு வெச்சுகிட்டு வர்ற பய புள்ளைக..//

ஏது போனுக்கா?

//ஒரு குவார்டர் வாங்கி கொடுத்து, சொத்தை( பல்லு சொத்தைய சொல்லலைங்க..Asset..ஆங்...) எழுதி வாங்கிற ஜாதி.. ஹா..ஹா...//

நீ சொன்னாலும் சொல்லாட்டியும் உன்னால பல்லு சொத்தை மட்டும்தான் எழுதி வாங்க முடியும். ஏன்னா அவன்கிட்ட அது மட்டும்தான் இருக்கு...

Aba said...
This comment has been removed by a blog administrator.
Aba said...

@பட்டா,

//மங்குனியைக் காணவில்லை..
கண்டுபிடிப்பவர்கள், இந்த ப்ளாக்கிலுள்ள. கேமரா போனை எடுத்துக்கொள்ளலாம்..

( இது ஒரு அரசாங்க சுற்றறிக்கை..)
கையொப்பம்...
பட்டாபட்டி...//

அந்த செல்போன பிச்சைக்காரன் கூட வாங்க மாட்டேங்கிறான்... அட்லீஸ்ட் சிங்கிள் பேரீச்சம்பழம்கூட கெடைக்காதாம்!..

Aba said...

@பட்டா,

//என்ன கேள்வி இது.. போங்க ராசா.. போங்க.. ஆனா சம்பளம் போட்டதும் போங்க..( மங்குனிக்கு..)//

என்ன கேள்வி இது? மங்குனிக்கு சம்பளம் போடறதே முத்துதானே???

Aba said...

@பட்டா,

//ஏய்யா மங்குனி..
உன்னொட ப்ளாக்குக்கு, படிச்ச பய புள்ளைகளா வராங்க.. எனக்கு பயமாயிருக்குயா.//

ஏன்? நம்மளை எல்லாம் பாத்தா எப்பிடி தெரியுது?

Aba said...

@மங்குனி,

//சார் வாங்க சார் வாங்க , கரக்ட்டா என்னைக்கு வரேன்னு சொல்லுங்கோ நான் வந்து பிக் அப் பன்னிக்கிறேன் (தக்காளி மங்கு ஆப்கனிஸ்தான்னுக்கு ஓடிடு அங்க தான் யாரும் வரமாட்டானுக )//

ஆஹா... மங்குனி, சொந்த ஊருக்கு போறே போலிருக்கு... அப்பிடியே உன்னோட கொள்ளுப் பேத்தியையும் கேட்டதா பட்டாபட்டி சொல்லிவிடச் சொன்னான்!

Aba said...

@மங்கு,

//அடப்பாவி , கொலைகாரப் பயலா இருக்கானே//

நம்மள்ள பாதிப்பேர் அப்பிடிதான்

//மங்குனி அமைசர்
குறுக்கு சாந்து
மெயின் ரோடு
ஆப்கானிஸ்தான்//

எங்க அட்ரஸ திருப்பிச் சொல்லு?

//பித்தனின் வாக்கு சார் , தொரத்தி தொரத்தி அடிகிராணுக//

நீ மொதல்ல ஓடாம நில்லு.. ரூம் போட்டு அடிக்கறோம்...

Aba said...

@பன்னி,

//நம்ம ரெண்டு பேரும் அஞ்சப்பர் போயி சாப்ட்டு சாப்ட்டு வெளையாடுவமா?//

இது நல்ல வெளையாட்டா இருக்கே!

//அன்ரிசர்வ்டுலாம் எதுக்கு அமைச்சரே, நமக்கு ஒரு நியூஸ் பேப்பர் பத்தாதா, அப்பிடியே டாய்லெட்ல உக்காந்துகிடலாம்ல//

டாய்லெட்ட நானும் பட்டாவும் ரிசர்வ் பண்ணியிருக்கோம்...

Aba said...

@மங்குனி,

//பட்டா , மரு ஒரு கெட்டப்பு , கூலிங் கிளாஸ் ஒரு கெட்டப்பு//

மாறுவேஷத்துக்கு உண்டான மரியாதையே போச்சேடா உங்களால!

//ஐயா , மங்குனி அவர்கள் தனக்கு தானாகவே நாடு கடதிகிட்டார்//

மந்திரிப் பதவியை கரிகாலன் கைப்பற்றினார்.....

Aba said...

@பன்னி,

//நைட்டு போனவருதான் கக்கூஸுக்குள்ள, இன்னும் வெளிய வரல, நிக்காம போயிக்கிட்டு இருக்காம். ஏல, யாரவது செகப்பு கொடி இருந்தா கொண்டு வாங்கலே, காட்டுவோம், அப்படியாவது நிக்கிதான்னு பாப்போம்.//

டேய்.. ஒரு டைனமைட் வைடா மொதல்ல...

Aba said...

//பிளீஸ் செக் தா நம்பர் யு ஹேவ் டையல்டு , என்ங்கல் டயல் செய்த வாடிகையாலம் தற்போது "ஆப்கனிஸ்தானில்" உள்ளார்//

ஹாஹாஹாஹஹஹா... சூப்பர் காமெடி..

Aba said...

48

Aba said...

49

Aba said...

Meeeee... the 150....

அப்பாடா... ரூம் போட்டு எழுதினதுக்கு பலன் கெடச்சுடிச்சு...

பித்தனின் வாக்கு said...

என்ன மங்குனி, பதிவைக் காணேம். குடிச்ச சரக்கும், அடிச்ச ஓப்பியமும், ஒட்டக கறியும் இன்னமும் ஜீரணம் ஆகவில்லையா?. சீக்கிரம் பதிவு போடுப்பா.

மங்குனி அமைச்சர் said...

//ஹரீகா said...

என்னதிது... 19ம் தேதிக் கப்புறம் நகர்வலம் செல்லவே இல்லையா அமைச்சரே!! இன்னமும் இப்படி மங்குனியாவே இருந்தா எப்படி?

**(( நான் புதன் கிரதகதுல இருக்கேன், ஜெய்லானி சனி கிரகத்துல இருக்கான், சித்ரா மேடம் செவ்வாய் கிரகத்துல இருக்காங்க கீதா சரசு ரெண்டு பெரும், நிலாவுல விவசாயம் பண்ணிக்கிட்டு இருக்காக))**

ஹா.. ஹா.. நல்ல டைமிங் சென்ஸ் ஜோக் மங்கு. ஆகவே ஒரு முறை எல்லோரும் ஜோரா கைதட்டுங்க ப்ளீஸ்!!(அய்யய்யோ நானும் வேற்று கிரகத்து வாசிகளிடம் வந்து மாட்டிக்கொண்டேனோ) பரவா இல்லையா ஷாஜஹான் பாய்.. ///

முதன் முதலில் , வந்த தாங்களை அன்புடன் அழைக்கிறோம் , வருக வருக

மங்குனி அமைச்சர் said...

//கரிகாலன் said...

Meeeee... the 150....

அப்பாடா... ரூம் போட்டு எழுதினதுக்கு பலன் கெடச்சுடிச்சு...///

உஸ் அப்பா போதுமா ?

ப.கந்தசாமி said...

ஆஹா, எத்தனை பின்னுட்டங்கள், நானும் உங்க மாதிரி ஒரு பதிவு போட்டு ஒரு ரிக்கார்டு நெம்பர் பின்னூட்டம் வாங்கறேன் பாருங்க :-)

Rajan said...

அமைச்ச்ரே நலமா! அரண்மனைப் பக்கம் ஆளை பார்க்கவே முடிவதில்லை!