எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, May 9, 2011

இன்னைக்கு நம்ம ஜாதகத்துல சனி உச்சத்துல இருக்கு போல???

ஒரு வேலைவிசயமா அசோக் லேலண்டு ஆபீசுக்கு போனேங்க . அண்டர் கிரவுண்டுல போயி நம்ம பிஃப்டி பிரசன்ட் கார பார்க் பண்ணிட்டு ரிசப்சனுக்கு போனேன் .

"எஸ் , வாட் கேன் ஐ டூ ஃபார்  யு? "

" மீ  வான்ட்டு மீட்டு ஒன் ஆபீசர் அண்ட் டேக்   ஒன் கையெழுத்து ஃபிரம் தட் ஆபீசர் "  (எங்க கிட்டயே இங்கிலீசா ........ நாங்களும் பேசுவம்ல )

"பிப்த் ப்ளோர் போங்க "

சரின்னு நேரா லிப்ட்டுல அஞ்சாவது மாடிக்கு போனேன் , அங்க ஒரு ஆபீசர்கிட்ட  டீடைல் சொன்னே அவுங்களும் கீழ ரிசப்சன்ல வெயிட்பன்னுங்க ஒரு 20 மினிட்ஸ்ல    கூப்புடுறேன்னு சொன்னாங்க , நானும் கீழ வந்து  வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்

அந்த நேரம் பாத்து நம்ம  பிரபல  பதிவர் வெங்கட்  போன்  பண்ணினாப்ள , ஆஹா.....  இன்கம்மிங் கால் ஓசில  மொக்க போட ஒரு ஆள் கிடச்சிட்டான்னு மொக்கபோட ஆரம்பிச்சேன் ............

ரிசப்சனிஸ்ட் " மிஸ்டர் உங்கள மேல கூப்புடுறாங்க "

போன் பேசிக்கிட்டே(பின்ன கட்பன்னிட்டா மறுபடியும் நான் கால் பண்ணினா துட்டு செலவாகுமே ) லிப்ட்டுல போயி பிப்த் புளோர் பட்டன அமுக்கினேன் , லிப்ட்டு போயி நின்னிச்சு.

நானும் சுவாரசியமா போன்ல பேசிக்கிட்டே   லிப்ட்ட விட்டு இறங்கி பாத்தா .................

ஆபீஸ் செட்டப்பே  மாறி இருக்கு ........... 

"ஐயையோ இங்க இருந்த ஆஃபீசக்காணோம் ,ஆஃபீசக்காணோம் ,ஆஃபீசக்காணோம் ......."

டக்குன்னு  அங்க இருந்த செகுரிடி என்னைய புடிச்சு 

"யோவ் என்னையா கெனத்த காணோம்     கதையா இருக்கு , எந்த ஆஃபீசைய்யா காணோம்? "

" சார் , சார் ஒரு அரைமணி நேரத்துக்கு  முன்னாடி இருந்த ஆபீஸ இப்போ காணோம் சார் மாறிப்போயிருக்கு "

"மொதோ எந்த ஆபீசுயா இருந்தது? "

"அசோக் லேலாண்ட் சேல்ஸ் டிபார்ட்மென்ட் சார் "

"அட நாதாரி நாயே , அது ஃபிப்த்து புளோர்ல இருக்கு "

"என்னது ஃபிப்த்து புளோரா ??? அப்போ இது எந்த புளோறு ? "

" பன்னாட இது தேர்டு புளொரு "

அடங்....ங்கொன்னியா , எவனோ லிப்ட்ட யூஸ் பண்ண பட்டன அழுத்தி இருக்கான் , அதுக்குள்ள வேற லிப்ட்டுவந்து அதுல போயிட்டான் . நான் வந்த லிப்ட்டு தேர்டு புளோருல  நிக்கவும்  போன் பேசுற சுவாரசியத்துல அத கவனிக்காம   இறங்கிருக்கேன் .......அவ்வ்வ்வவ்வ்வ்வவ்

சரின்னு ஃபிப்த்து புளோர் போயி வேலைய முடிச்சிட்டு லிப்ட்டுக்கு வந்தேன். நான் பேஸ்மென்ட் போயி பைக்க எடுக்கணும் ......... லிப்ட்டுல இருந்த கடைசி பட்டன அழுத்தினேன் , லிப்ட்டும் கீழ போயி நின்னிச்சு .

இறங்கி போயி பாத்தா  நான் பைக்க நிப்பாட்டி இருந்த பைக் ஸ்டாண்ட்டையே   காணோம் , என்ன கருமாந்திரம்புடிச்ச பில்டிங்க்டா இது

"அய்யோ..... இங்க இருந்த பைக் ஸ்டாண்ட்ட காணோம் , பைக் ஸ்டாண்ட்ட காணோம், பைக் ஸ்டாண்ட்ட காணோம்.."

அங்க இருந்த செகுரிடி

"யோவ் என்னைய்யா சொல்ற , தெளிவா சொல்லு , பைக்க காணுமா , பைக் ஸ்டாண்ட்ட காணுமா? "

"ஐய்யா என் பைக்கோட பைக் ஸ்டாண்ட்ட காணோம்யா "

"ஏய் பொறம்போக்கு , ஒழுங்கா சொல்லு பைக்க எங்க நிப்பாட்டுன/? "

"சார் , இங்க கூட ஒரு ஈ .பி ரூம் இருந்துச்சு , அதுக்கு பக்கத்துல இருக்க ஸ்டாண்ட்டல தான் வண்டிய நிப்பாட்டினேன்"

"அடிங் ...... நன்னாறிப் பயலே , அது இதுக்கு மொதோ புளோருடா  , மேல போயி பாரு "

அடப்பாவிகளா , பார்க்கிங்க்கு அண்டர் கிரவுண்டுல ரெண்டு புளோர் கட்டி வச்சிருக்கானுக .........


இன்னைக்கு நம்ம ஜாதகத்துல சனி உச்சத்துல இருக்கு போல ......



Thursday, May 5, 2011

அடப்பாவிகளா ??? பிட்டு படம் போடுரானுக (18 +)



முஸ்கி 1   : கும்மி குரூப் ஒரு போரம் வச்சு இருக்கோங்க ..... அதுல ஒரு அப்பாவி  பயபுள்ள என்ன கார் வாங்கலாம்ன்னு எதார்த்தமா ஒரு ஐடியா கேட்டாங்க ........... அதுக்கு இந்த நாதாரி நாயிக்க என்னமா ஐடியா குடுத்திருக்காணுக பாருங்க ............

முஸ்கி 1 .25   : இதுல சில விசயங்கள டிங்கரிங் பெயிண்டிங் பண்ணி போட்டு இருக்கேன் ....... அப்படியே போட்டா .............இம்ம்ஹும் ............. வேணாம் , வேணாம் ......

முஸ்கி 1 .5  : நல்ல வேலை அன்னைக்கு பட்டாப்பட்டி போறத்துக்கு வரலை 

Arunprasath Muthukumaran : வணக்கம் அண்ணன்ஸ், கார் வாங்கலாம் னு இருக்கேன், எதாச்சும் suggestions குடுங்களேன்... டீசல் தான்.... sedan தான், Hatchback vaenaam...
Arunprasath : 4 wheel இருக்கறதா பார்த்து வாங்குப்பா.... நல்லா இருக்கும்
Terror பாண்டியன்: மச்சி! ஸ்டிரீங் வீல் ரொம்ப முக்கியம்.. அதைவிட்ட பாரு.. :)
அருன்ப்ரசாத்: அப்போ கார்ல Hand Bar இருக்காதா?.
Arunprasath Muthukumaran : அடடா எந்த கம்பெனி யும் 4 wheel இருக்கறது தயாரிக்கறது இல்ல, ஸ்டெப்னி ஓட 5 இருக்கும்...
அருன்ப்ரசாத் : //ஸ்டெப்னி ஓட// என்னது ஸ்டெப்னி ஓடுமா?
Terror பாண்டியன் : //அப்போ கார்ல Hand Bar இருக்காதா?//
 No. adhu GYM la dhan irukum... :)
அருன்ப்ரசாத் : அப்போ GYM எங்க இருக்கும்?
Arunprasath Muthukumaran : கண்டிப்பா odum... illana punture aana odaatha wheel vechitu enna panna???? யப்பா யாராச்சும் ஐடியா சொல்லுங்களேன் 
மாலுமி : நீ ஒரு பிட்டு படம் போட்டு ஐடியா கேளு.............பதில் தான வரும்..........
Arunprasath Muthukumaran : ஹி ஹி வீட்ல இருக்கேன்.... எப்டி படம் போட?
மங்குனி அமைச்சர் : நான் போடுறேன் பிட்டு படம் .......



இந்த படம் போதுமா ??? இன்னும் கொஞ்சம் வேணுமா ???
அ....   இந்த படம் போதுமா ??? இன்னும் கொஞ்சம் வேணுமா ???
அ....அ....../    இந்த படம் போதுமா ??? இன்னும் கொஞ்சம் வேணுமா ???

(காலேஜு பச்டியர்ல அடிச்ச பிட்டு , ஒரு நியாபகார்த்தமா வச்சு இருக்கேன் , 
நமக்கு இந்த இங்கிலீசு எக்ஸாம்  எல்லாம் படிச்சு எழுத வராதுங்க, 
எப்பவும்  பிட் அடிச்சுதான் பாஸ் பண்ணுவோம் )

மாணவன் (சிலம்பு) : சரி சரி படம் பார்த்தது போதும் எல்லாரும் வந்து ஒழுங்கா ஐடியா கொடுங்க.... :)))
Terror பாண்டியன் : //அப்போ GYM எங்க இருக்கும்?//
kitchen la... ada ramesh eppavum anga dhan  exercise seivanam... :)
Ramesh சுப்புராஜ் : நல்லா சைடு ஸ்டாண்ட் இருக்கற மாத்ரி வாங்கு. straight ஸ்டாண்ட் நா வெயிட் க்கு  ஸ்டாண்ட் போட கஷ்டமா இருக்கும் 
மாணவன் (சிலம்பு) : ஆஹா...என்னா ஒரு அறிவுகொழுந்து... :))
karthik குமார் : மச்சி எந்த கார் வேணும்னாலும் வாங்கு ஆனா கிளீன் பண்ணா இந்தமாதிரி பொண்ணுகள வெச்சு பண்ணு..:))


ஜூனியர்  அருண் : ஹுஸ் அப்பா.... ஒரு கேள்வி கேட்டது தப்பா... :)

டிஸ்கி : இது இப்படியே தொடருதுங்க ............. முழுவதையும் போட்டா ஆப்புறம் என் போடோவுக்கு மாலைபோடவேண்டி   இருக்கும் ..... 

இப்படிக்கு 
அவ்வ்வ்வ் ........... கொட்டாவி விட்டுக்கொண்டே காபி பேஸ்ட் செய்து பதிவு தேத்துவோர் சங்கம் 

Monday, May 2, 2011

கோவக்கார பயபுள்ளைகளா இருக்கானுகளே

டிரிங் , டிரிங் ..........டிரிங் , டிரிங் ........................
(காலிங் பெல் இல்லைங்க ,  ரிங்டோன் தாங்க,.......... அட........ நம்ம ஃபிரண்டு  சிவா )

"ஹலோ சிவா  சொல்றா மச்சான் எப்படி இருக்க? "

"மச்சான்  , நம்ம ரவிய பாத்தியா ? "

"இல்லையே , ஏன்டா ? "


"ஒன்னும் இல்லை மச்சான் , ரெண்டுநாளைக்கு முன்னால அவசரமா அமெரிககா போறேன் ஈவிங் வந்துடுவேன்   ஒரு நூறு    ரூபா கடன் குடு ஈவிங் வந்தது தந்துடுறேன்னு சொல்லி வாங்கிட்டு போனவன்  ஆளையே காணும் . நீ எங்கையாவது பார்த்தா சொல்லு "

"தக்காளி அந்த பன்னாட அப்படியா பண்ணினான் , விடு மச்சான் எங்க பாத்தாலும் உன்கிட்ட சொல்றேன் "

"சரிடா மச்சான் பை "

இது நடந்து ரெண்டு நாள் கழிச்சு , ஆபீசுல போயி அர்ஜென்ட்டா  ரெஸ்ட்டு  எடுக்கிறதுக்காக அவரசரமா பைக்குள போயிக்கிட்டு இருந்தேன் , திடீர்ன்னு பாத்தா ரவி  எனக்கு ஆப்போசிட் சைடுல  பைக்குள போயிக்கிட்டு இருந்தான் .

டக்குன்னு வண்டிய ஓரங்கட்டி , சிவாவுக்கு  போன் போட்டேன் 

"ஹலோ,  டேய் மச்சான்  அந்த கடன்காரன்  ரவி இப்பதான் எனக்கு ஆப்போசிட் ரோட்ல போறான்டா "

"டேய் மாமா விடாத பின்னாடியே போயி தொரத்திபுடி "

"பின்னாடியேவா ??? சாரி மச்சான்  என்னால   பின்னாடியே தொரத்திபோக முடியாதுடா , ஏன்னா................... என் பைக்குள ரிவர்ஸ் கியர் இல்லை"

" என்னது பைக்கு ரிவர்ஸ் கியரா ???? அடிங் ...........ங்கோ..... @#$@@#  நன்னாறிப் பயலே , பைக்க திருப்பிட்டு போடா "

" பைக்க திருப்பிட்டு போனா அது முன்னாடில்ல போகும் , அப்புறம் எப்படி நான் அவன பின்னாடியே தொரத்தமுடியும் ?"

" ஐயோ சாவடிக்கிறானே  .......... டேய் ,  ஒரு ஆட்டோ புடிச்சு  போடா  "

"என்ன மச்சான் சொல்ற , ஆட்டோவ புடிச்சிக்கிட்டா அப்புறம் அது எப்படி போகும்? "

"அடக்கொலகாரப் பாவி???  இதுக்கு அந்த ரவிக்கு கோவில்கட்டி கும்பிடலாம் , என்ன கொடுமைடா  இது , டேய் நீ நல்லா இருடா ................. நான் இப்படியே  திருட்டுரயிலேறி கேரளாவுக்கு அடிமாடா போயிடுறேன் , எங்க வீட்ட்ல சொல்லிடு "

" டேய் , டேய்....... மச்சான் , மச்சான் ..................."
(நான் இப்போ என்ன சொல்லிட்டேன்னு இவ்ளோ கோவப்படுறான் , கோவக்கார பயபுள்ளைகளா  இருக்கானுகளே  )