எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, March 21, 2011

நாங்கலாம் அவ்ளோ வெவரமான ஆளுக

நான் பீ.ஜி முடிச்சிட்டு (ங்கொய்யாலே நம்பவா போறீங்க? ) சென்னைல  வேலைக்கு சேர்ந்த  புதுசு....... ஒரு வருஷம் தான் ஆகிருந்துச்சு  ............  ஃபாரின் ரெக்ரூட்டிங் டிராவல்ஸ் அது .....சவுதி  விசா ஸ்டாம்பிங் பன்றதுக்காக   சிலபேர் அடக்கடி மும்பை , டெல்லி , கொச்சின்னு பிளைட்டுல சுத்திக்கிட்டே இருப்பாங்க . பிளைட்டுல போற வேலைக்கு  சீனியர் ஸ்டாப்ஸ்ச மட்டும் தான் அனுப்புவாங்க .   

எங்களுக்கு  வயிறு எரியும்.எங்களையெல்லாம் பஸ்லையும், டிரைன்லையும் போற வேலைக்குதான் அனுப்புவானுக, அதுவும் அவசரம் டிக்கட் கிடைக்கலைன்னு   அன்-ரிசர்வுடுல தான் அனுப்புவானுக  .

ஒரு நாள் அப்படித்தான் டெல்லிக்கு போகவேண்டிய சீனியர் ஒருவருக்கு உடம்பு சரியில்லாம போச்சு . வேற ஆளும் கிடைக்கல .....மேனேஜெர் என்னைய  கூப்ட்டு நீ டெல்லிக்கு போறியான்னு கேட்டார் .

எனக்கு ஒரே சந்தோசம் , பஸ்ட்டு டைம் பிளைட்டுல போறதுன்னா சும்மாவா ....    ....ஆனா..... 

"இல்லை சார் நான் போகலை ."

"ஏன் போகல ? டேய் பிளைட்டுல போரடா நீ "

"இல்லை வேணாம் சார் "

மேனேஜர் நேரா  எம்.டி ரூமுக்கு போனார் . எனக்கு பக்குன்னுச்சு .நான் நினைச்ச மாதிரியே எம்.டி கிட்ட இருந்த அழைப்பு வந்தது ........அவரு ரூமுக்கு போனேன் 

"ஏம்பா , டெல்லிக்கு போயேன் "

"இல்லை சார் , வேணாம் "

"பிளைட்டுல எல்லாம் ஒன்னும் பயம் இல்லை சும்மா போயிட்டு வா "

"இல்லைங்க சார் , நான் போகலைங்க சார் "

எம்.டி டென்சன் ஆகி கத்த  ஆரம்பிச்சுட்டார் , 

"நீ இப்போ , போறியா இல்லையா ?"

"இல்லை சார் , நான் போகலை "

"யோவ் , ஏன்யா போகலை ?"

"அது வந்து ............ என்கிட்ட பாஸ்போர்ட் இல்லைங்க சார் "

என்னது  டெல்லிக்கு போக பாஸ்போர்ட்ஆ...........

அன்னைக்கு போனவருதான் அந்த எம்.டி ...அதுக்கப்புறம் அவரு ஆபீஸ் பக்கம் வரவே இல்லை .

ஏன் சார் , அப்போ சென்னைல இருந்து டெல்லிக்கு போக பாஸ்போர்ட்  தேவையில்லையா ??? பிளைட்டுல எங்க போகனுமின்னாலும் பாஸ்போர்ட் வேணுன்னு நினைச்சு இருந்தேன் ............

டிஸ்கி :  இப்ப தெரியுதா நான் ஏன் படிச்சிருக்கேன் , படிச்சிருக்கேன்னு சொல்றேன்னு. 

கிஸ்கி : ஹி.ஹி.ஹி.............இது உண்மையிலே நடந்ததுங்க .........எம்.டி. வரைக்கும் போகலை மேனேஜெர் லெவல்லே முடிஞ்சிருச்சு  ..ஹி,ஹி,ஹி..........

146 comments:

settaikkaran said...

//எங்களையெல்லாம் பஸ்லையும், டிரைன்லையும் போற வேலைக்குதான் அனுப்புவானுக, அதுவும் அவசரம் டிக்கட் கிடைக்கலைன்னு அன்-ரிசர்வுடுல தான் அனுப்புவானுக //

நீங்க standing. சீனியருங்க மட்டும் outstanding-னு நினைச்சிட்டாங்களா? :-).

settaikkaran said...

//அன்னைக்கு போனவருதான் அந்த எம்.டி ...அதுக்கப்புறம் அவரு ஆபீஸ் பக்கம் வரவே இல்லை .//

சரிதான், உங்களுக்குப் பதிலா அவரு டெல்லிக்குப் போயி அங்க செட்டில் ஆயிட்டாரா? :-))

உமர் | Umar said...

நல்ல வேளை! இட்லி, மிளகாய்ப் போடி, பூண்டு பதிவு வருமோ என்று பயந்து கொண்டே இருந்தேன்.

ரஹீம் கஸ்ஸாலி said...

present

முத்தரசு said...

இந்த வரென்

Unknown said...
This comment has been removed by the author.
மர்மயோகி said...

அப்போ வெளிநாட்டுக்காரனுங்கல்லாம் அவங்க அவங்க நாட்டுலேர்ந்து டெல்லிக்கு வர்றாங்களே..பாஸ்போர்ட் இல்லாமாலா வர்றாங்க மங்குனி?

ரஹீம் கஸ்ஸாலி said...

எனக்கொரு சந்தேகம் மங்குனி.....
நாம ஆந்த்ரா, கர்நாடகா,கேரளான்னு போகணும்ன்னா ஆள் இந்தியா பர்மிட் எடுத்து வச்சிருக்கணுமா?

குறையொன்றுமில்லை. said...

அந்த ஆபிசில எப்படி வேலைக்கு சேந்தீங்க? உங்க பயோ டேட்டால்லாம் செக் பண்ணவே இல்லியா?

சக்தி கல்வி மையம் said...

இன்னும் சிரிச்சுகிட்டே இருக்கேன்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஓஹோ.... டெல்லிக்கு போக பாஸ்போர்ட் தேவையில்லியா? அடடா முன்னாடியே தெரியாம போச்சே? அப்போ இனிமே நேரா டெல்லி போயி அங்கேருந்து சென்னை வர வேண்டியதுதான்........

karthikkumar said...

அப்போ சென்னைல இருந்து டெல்லிக்கு போக பாஸ்போர்ட் தேவையில்லையா ??? பிளைட்டுல எங்க போகனுமின்னாலும் பாஸ்போர்ட் வேணுன்னு நினைச்சு இருந்தேன் ..////
இது தெரியாம நான் வேற ஒரு மூணு நாலு தடவ டெல்லிக்கு போயிட்டு வந்திட்டனே....:)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////நான் பீ.ஜி முடிச்சிட்டு (ங்கொய்யாலே நம்பவா போறீங்க? ) சென்னைல வேலைக்கு சேர்ந்த புதுசு....... ///////

பீ ஜின்னா பேயிங் கெஸ்ட்டுதானே? அத முடிச்சா வேல கெடைக்குமா? நல்ல டெக்னிக்குலாம் வெச்சிருக்கேய்யா....!

vinu said...

meyum presentttuuuuu

vinu said...

naanum puthu possttu pottu irrukeanneay...

pimbilikky pilaaappyyyyyyy

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மேனேஜெர் என்னைய கூப்ட்டு நீ டெல்லிக்கு போறியான்னு கேட்டார் .
எனக்கு ஒரே சந்தோசம் , பஸ்ட்டு டைம் பிளைட்டுல போறதுன்னா சும்மாவா ..../////

டீவி வெளம்பரத்துல வர்ர ஏர்ஹோஸ்டசை பாத்துட்டு அப்படி நெனச்சிருப்பே, தக்காளி உன்னையெல்லாம் இந்தியன் ஏர்லைன்ஸ்ல அனுப்பி வைக்கனும்யா....

முத்தரசு said...

பீ ஜீ ஆ நம்பிடொம்ல

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////என்னது டெல்லிக்கு போக பாஸ்போர்ட்ஆ...........
அன்னைக்கு போனவருதான் அந்த எம்.டி ...அதுக்கப்புறம் அவரு ஆபீஸ் பக்கம் வரவே இல்லை .///////

அவருக்கு பொறாம மங்கு, எங்க நீ எம்டி ஆகிடுவியோன்னு, அதான் பயந்துக்கிட்டு ஆபீஸ் பக்கமே வரல போல......!

vinu said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
பீ ஜின்னா பேயிங் கெஸ்ட்டுதானே? அத முடிச்சா வேல கெடைக்குமா? நல்ல டெக்னிக்குலாம் வெச்சிருக்கேய்யா....!

ithu eatho padichap pullay pola irruku englishellaam pesuthu.....

ithukittey sagavaasam vachukkakkoodaathu....

Unknown said...

நண்பா நானும் அப்படித்தான் ரொம்ப நாளு நெனச்சிருந்தேன் ஹிஹி!

Madhavan Srinivasagopalan said...
This comment has been removed by the author.
karthikkumar said...

மங்குனி மாம்ஸ் இத பாருங்க :)
http://www.youtube.com/watch?v=jNt7Hvt3kRo
இனிமேல் இதையே நம்ம பாலோ பண்ணுவோம்....:))

Madhavan Srinivasagopalan said...

நாங்கலாம் உங்களை விட உஷார் பார்டி..
ஆந்திரா போகனும்னாலும் பாஸ்போர்ட் டதான் போவோம்..
(ஹி.. ஹி.. இருக்குறது அந்த ஒரு ஐ.டி.தான் டிரைன்ல (இ-டிக்கெட்) ஐ.டி. கேப்பாங்களே.. அதான்)

ராஜகோபால் said...

விடு பாஸ் நாமள்லாம் பஸ் பாஸ் வச்சு பரலோகம் வரைக்கும் போறவங்க ஒரு பாஸ்போர்ட்டுக்காக டெல்லி ப்ரோக்ராம்ம கேன்சல் பண்ணிடியே மங்கு

sulthanonline said...

//அன்னைக்கு போனவருதான் அந்த எம்.டி ...அதுக்கப்புறம் அவரு ஆபீஸ் பக்கம் வரவே இல்லை .//

உங்க கூட வேலைபார்த்தார்ல மென்டல் ஆஸ்பத்திரில போயி செட்டில் ஆகியிருப்பார்.

பித்தனின் வாக்கு said...

அட மங்குனி நண்பா நானும் உங்க பிரண்டுதாம்பா. நான் எங்க பாஸ் மும்பைக்கு போக சொன்ன போது விவரமா பாஸ்போர்ட் இல்லைன்னு பதில் சொன்னேன். அவரு சிரிச்சுக்கிட்டு உள்ளூருக்கு தேவையில்லை. உன் பான் கார்டு போதும் சொல்லி அனுப்பி வைத்தார். நான் எல்லா புரூப்பும் எடுத்துக்கிட்டு போனேன்.

Unknown said...

மங்குனி இப்படித்தான் நிறைய மேன்பவர் கம்பெனிகள் இயங்குது..

உ.ம் : விந்தை மனிதன்

♔ℜockzs ℜajesℌ♔™ said...

வந்துட்டேன் , ஆனா இன்னும் பதிவ படிக்கல , ஒட்டு மட்டும் போட்டு இருக்கேன் , இது படிச்சுட்டு வரேன் . . .
ஆல் வைடிஸ் . . .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பிளைட்டுல எங்க போகனுமின்னாலும் பாஸ்போர்ட் வேணுன்னு நினைச்சு இருந்தேன் ............/////

நல்லவேளை அப்பவே டெல்லிக்கு போகச்சொன்னாங்க, இல்லீன்னா இப்பவும் பாஸ்போர்ர்ட் தான்........?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ராஜகோபால் said...
விடு பாஸ் நாமள்லாம் பஸ் பாஸ் வச்சு பரலோகம் வரைக்கும் போறவங்க ஒரு பாஸ்போர்ட்டுக்காக டெல்லி ப்ரோக்ராம்ம கேன்சல் பண்ணிடியே மங்கு///////

ங்கொய்யால பஸ்பாச வெச்சி பஹ்ரைன் வரைக்கும் போயிட்டியா?

Unknown said...

இதுல என்ன தப்பு நல்ல சந்தேகம் தானே.. :-)

உங்களை மாதிரித்தான் பலபேர் நினைச்சுட்டு இருந்தோம்.. :-)

♔ℜockzs ℜajesℌ♔™ said...

//// நான் பீ.ஜி முடிச்சிட்டு (ங்கொய்யாலே நம்பவா போறீங்க? )////
ரைட்டு , தெரிஞ்ச சரி ....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////karthikkumar said...
அப்போ சென்னைல இருந்து டெல்லிக்கு போக பாஸ்போர்ட் தேவையில்லையா ??? பிளைட்டுல எங்க போகனுமின்னாலும் பாஸ்போர்ட் வேணுன்னு நினைச்சு இருந்தேன் ..////
இது தெரியாம நான் வேற ஒரு மூணு நாலு தடவ டெல்லிக்கு போயிட்டு வந்திட்டனே....:)/////////

அப்போ பஸ்பாஸ் வெச்சு போனியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// vinu said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
பீ ஜின்னா பேயிங் கெஸ்ட்டுதானே? அத முடிச்சா வேல கெடைக்குமா? நல்ல டெக்னிக்குலாம் வெச்சிருக்கேய்யா....!

ithu eatho padichap pullay pola irruku englishellaam pesuthu.....

ithukittey sagavaasam vachukkakkoodaathu....///////

தொர இங்கிலீசுலாம் பேசுது.......

பெசொவி said...

சென்னைல இருக்கற பர்மா பஜாருக்கும் பாரீசுக்கும் போகணும்னா கூட பாஸ்போர்ட் வேணும்னு நான் சொல்றேன், யாரும் நம்ப மாட்டேங்குறாங்க, நீ என்ன சொல்றே, மங்குனி?

Mohamed Faaique said...

என்னுடைய PCஇல் ஓட்டுப் பட்டை வர மாட்டேங்குது.....
பதிவுக்கும் இந்த சம்பவத்துக்கும் சம்பந்தமே இல்லையே!!!
எனக்கு இந்த பாஸ்போர்ட் சந்தேகம் இருந்து கிட்டே இருந்துச்சு.... இப்போ ஓ.கே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////டிஸ்கி : இப்ப தெரியுதா நான் ஏன் படிச்சிருக்கேன் , படிச்சிருக்கேன்னு சொல்றேன்னு. /////////

யோவ் என்னய்யா படிச்சே? கொஞ்சமாவது திங் பண்ண வேணாம்? பேசாம ஒரு வாடகை சைக்கிளை எடுத்து போயிருந்தா பிளைட் டிக்கட் காசு மிச்சம் பண்ணி பாக்கெட்ல போட்டிருக்கலாம்ல?

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@ பன்னிக்குட்டி ராம்சாமி said...
டீவி வெளம்பரத்துல வர்ர ஏர்ஹோஸ்டசை பாத்துட்டு அப்படி நெனச்சிருப்பே, தக்காளி உன்னையெல்லாம் இந்தியன் ஏர்லைன்ஸ்ல அனுப்பி வைக்கனும்யா.... / / / /

ஹி ஹி ஹி ... பன்னி குட்டி கரெக்ட் அஹ சொன்ன போ ..

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@பதிவுலகில் பாபு said...

இதுல என்ன தப்பு நல்ல சந்தேகம் தானே.. :-)

உங்களை மாதிரித்தான் பலபேர் நினைச்சுட்டு இருந்தோம்.. :-) / / /

பல பேருன்னு ஏன் என்னையும் , பன்னி குட்டியையும் சேக்குற ? நாங்க எல்லாம் ட்ரெயின்ல போறதுக்கே பாஸ்போர்ட் எடுத்தவங்க ....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////கிஸ்கி : ஹி.ஹி.ஹி.............இது உண்மையிலே நடந்ததுங்க .........எம்.டி. வரைக்கும் போகலை மேனேஜெர் லெவல்லே முடிஞ்சிருச்சு ..ஹி,ஹி,ஹி..........//////

அந்த மேனேஜரு இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருக்காரு? (அனேகமா ட்ராவல்ஸ் தொழிலையே விட்டிருக்கனும்...!)

♔ℜockzs ℜajesℌ♔™ said...

/// @ மர்மயோகி said...

அப்போ வெளிநாட்டுக்காரனுங்கல்லாம் அவங்க அவங்க நாட்டுலேர்ந்து டெல்லிக்கு வர்றாங்களே..பாஸ்போர்ட் இல்லாமாலா வர்றாங்க மங்குனி?/////

வெரி குட் question .....

நீ இங்க இந்திய ல பொறக்க வேண்டிய ஆளே இல்ல , வெளிநாட்டுல பொறந்து இருக்க வேண்டிய ஆளுய யோ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////♔ℜockzs ℜajesℌ♔™ said...
///@பதிவுலகில் பாபு said...

இதுல என்ன தப்பு நல்ல சந்தேகம் தானே.. :-)

உங்களை மாதிரித்தான் பலபேர் நினைச்சுட்டு இருந்தோம்.. :-) / / /

பல பேருன்னு ஏன் என்னையும் , பன்னி குட்டியையும் சேக்குற ? நாங்க எல்லாம் ட்ரெயின்ல போறதுக்கே பாஸ்போர்ட் எடுத்தவங்க ....//////

யோவ் நீ ஏன்யா என்ன சேக்குற? நான் பஸ் பாசை வெச்சே பாம்பே போனவன்.... தெரியும்ல?

middleclassmadhavi said...

visa வேண்டாமா?!!

♔ℜockzs ℜajesℌ♔™ said...

/// @பன்னிக்குட்டி ராம்சாமி said...
////////கிஸ்கி : ஹி.ஹி.ஹி.............இது உண்மையிலே நடந்ததுங்க .........எம்.டி. வரைக்கும் போகலை மேனேஜெர் லெவல்லே முடிஞ்சிருச்சு ..ஹி,ஹி,ஹி..........//////
அந்த மேனேஜரு இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருக்காரு? (அனேகமா ட்ராவல்ஸ் தொழிலையே விட்டிருக்கனும்...!) ////

"அதான் மங்குனி தெளிவா சொல்லி இருகாரு இல்ல மேனேஜர்ர முடிச்சாச்சுன்னு , இன்னும் அந்த மேனேஜர் உயிரோட இருப்பாருன்னு நினைக்குற ? "

pichaikaaran said...

செம காமடி...

சம்பவமும், சொன்ன விதமும் அருமை

♔ℜockzs ℜajesℌ♔™ said...

/// @ middleclassmadhavi said...

visa வேண்டாமா?!! ///

விசாவ எதுக்கு இப்போ கூப்பிடுறாரு ? அவர்தான் பிரபல பதிவர் ஆச்சே , அவருக்கு டெல்லி க்கு வர எல்லாம் நேரம் இருக்குமா ? . . .

♔ℜockzs ℜajesℌ♔™ said...

//// @ Lakshmi said...

அந்த ஆபிசில எப்படி வேலைக்கு சேந்தீங்க? உங்க பயோ டேட்டால்லாம் செக் பண்ணவே இல்லியா? / / /

அதெல்லாம் செக் பன்னி இருந்த மங்குனிய ஆபீஸ் வாசபடிக்குள்லையே விட்டு இருக்க மாட்டாங்க மேடம் ஹி ஹி ஹி

ஆமா பயோ டேட்டா இருந்த டெல்லி க்கு போலாமா ? ? ?

'பரிவை' சே.குமார் said...

நம்பிடொம்ல...
நம்பிடொம்ல ...

அமுதா கிருஷ்ணா said...

அப்புறம் டெல்லி போனீங்களா இல்லையா??

வைகை said...

என்னது டெல்லிக்கு போக பாஸ்போர்ட்ஆ...........
அன்னைக்கு போனவருதான் அந்த எம்.டி ...அதுக்கப்புறம் அவரு ஆபீஸ் பக்கம் வரவே இல்லை //

ஏன்... வழிய மறந்திட்டாரா?

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////மேனேஜெர் என்னைய கூப்ட்டு நீ டெல்லிக்கு போறியான்னு கேட்டார் .
எனக்கு ஒரே சந்தோசம் , பஸ்ட்டு டைம் பிளைட்டுல போறதுன்னா சும்மாவா ..../////

டீவி வெளம்பரத்துல வர்ர ஏர்ஹோஸ்டசை பாத்துட்டு அப்படி நெனச்சிருப்பே, தக்காளி உன்னையெல்லாம் இந்தியன் ஏர்லைன்ஸ்ல அனுப்பி வைக்கனும்யா....//

ஹி ஹி...சேம் பிளட்...

வெட்டிப்பேச்சு said...

ஹி..ஹி..ஹி..

வைகை said...

வேடந்தாங்கல் - கருன் *! said...
இன்னும் சிரிச்சுகிட்டே இருக்கேன்..//

சார் இன்னுமா சிரிக்கிறிங்க? நிப்பாட்டிருங்க... அப்பறம் எல்லாரும் மங்குனி ப்ளாக்க படிச்சிதான் சிரிசிங்கன்னு தப்பா நினைப்பாங்க.. அவரு எவ்வளவு பெரிய கருத்து சொல்லியிருக்காரு? ஹி ஹி

செல்வா said...

நீங்க வேற நான் எங்க ஊர் ல இருந்து பஸ் ல போகவே பாஸ்போர்ட் வேணும்னு நினைச்சேனாக்கும் .. ஹி ஹி

செல்வா said...

உங்க எம்.டி பாவம்ல ... ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>>நான் பீ.ஜி முடிச்சிட்டு

அண்ணே.. உங்க காதலி பி கோதாவரியை நீங்க ஷார்ட்டா பி ஜின்னு கூப்பிடுவீங்களாண்ணே..? ரைட்டு

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஏன் சார் , அப்போ சென்னைல இருந்து டெல்லிக்கு போக பாஸ்போர்ட் தேவையில்லையா ??? பிளைட்டுல எங்க போகனுமின்னாலும் பாஸ்போர்ட் வேணுன்னு நினைச்சு இருந்தேன் ............

ஹா.....ஹா..... ஹா...... நீங்கமட்டுமா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

செம நக்கல் நையாண்டி கம் காமெடி!

எஸ்.கே said...

பாஸ்னாலேயே பாஸ்போர்ட்டுக்கு பயப்படுவாங்க போல!

Anonymous said...

\.நானும் ரொம்ப நாள் இப்படி நினைச்சிகிட்டிருந்தவந்தான் ஹிஹி

Jey said...

மங்கு/பன்னி, டெல்லி அப்ப இந்தியாலதான் இருக்கா?!!!,

என்னப்பா, இவ்வளவு பலகிட்டு சொல்லவே இல்ல பாத்தியா....

Jey said...

மங்கு, ஏதோ பிஜி படிச்சிருக்கேனு சொல்லிருக்கியே, அது என்ன படிப்பு, அத எங்க போயி எப்படி படிக்கிறதூனு சேத்து சொல்லிருந்த நாங்களும் படிப்போமில்ல.....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

என்னாள முடியல..

தேரியாம வந்துட்டேன் நான் கிளம்புறேன்..

vasan said...

Narration is super. Enjoyed the finishing touch.

மங்குனி அமைச்சர் said...

சேட்டைக்காரன் said...
//எங்களையெல்லாம் பஸ்லையும், டிரைன்லையும் போற வேலைக்குதான் அனுப்புவானுக, அதுவும் அவசரம் டிக்கட் கிடைக்கலைன்னு அன்-ரிசர்வுடுல தான் அனுப்புவானுக //

நீங்க standing. சீனியருங்க மட்டும் outstanding-னு நினைச்சிட்டாங்களா? :-).///ஹி,ஹி.ஹி........அவுட் ஸ்டேன்டிங் அப்படின்னு ...........ஆபீசுக்கு வேலைய போயி நிக்கிறதா ???

மங்குனி அமைச்சர் said...

சேட்டைக்காரன் said...
//அன்னைக்கு போனவருதான் அந்த எம்.டி ...அதுக்கப்புறம் அவரு ஆபீஸ் பக்கம் வரவே இல்லை .//

சரிதான், உங்களுக்குப் பதிலா அவரு டெல்லிக்குப் போயி அங்க செட்டில் ஆயிட்டாரா? :-))////ஹி.ஹி.ஹி.................. தெரியலையே ????? அனேகமா உகாண்டாவுக்கு ஓடியே போயிட்டதா கேள்விப்பட்டேன்

மங்குனி அமைச்சர் said...

கும்மி said...
நல்ல வேளை! இட்லி, மிளகாய்ப் போடி, பூண்டு பதிவு வருமோ என்று பயந்து கொண்டே இருந்தேன்.///இம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம்......அந்த பயம் இருக்கட்டும்..........

மங்குனி அமைச்சர் said...

ரஹீம் கஸாலி said...
ப்ரெசென்ட்////பிரசென்ட் போடனுமின்னா கொஞ்சம் செலவாகும் பரவா இல்லையா ???

மங்குனி அமைச்சர் said...

மனசாட்சி said...
இந்த வரென்///இங்கயே வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன் ...சீக்கிரம் வாங்க

மங்குனி அமைச்சர் said...

மர்மயோகி said...
அப்போ வெளிநாட்டுக்காரனுங்கல்லாம் அவங்க அவங்க நாட்டுலேர்ந்து டெல்லிக்கு வர்றாங்களே..பாஸ்போர்ட் இல்லாமாலா வர்றாங்க மங்குனி?/////என்ன ஒரு புத்திசாலித்தனம் .............அப்போ வெளிநாட்டுல இருந்து இந்தியாவுக்கு வரணுமின்னா பாஸ்போர்ட் வேணுமா ? அப்போ வெளிநாட்டு காரங்களுக்கு இந்தியா பாஸ்போர்ட் எங்கவச்சு குடுக்கும் ?????

மங்குனி அமைச்சர் said...

ரஹீம் கஸாலி said...
எனக்கொரு சந்தேகம் மங்குனி.....
நாம ஆந்த்ரா, கர்நாடகா,கேரளான்னு போகணும்ன்னா ஆள் இந்தியா பர்மிட் எடுத்து வச்சிருக்கணுமா?////கண்டிப்பா ,........ அதோட லாரியும் வாங்கி வச்சிருக்கணும்

மங்குனி அமைச்சர் said...

Lakshmi said...
அந்த ஆபிசில எப்படி வேலைக்கு சேந்தீங்க? உங்க பயோ டேட்டால்லாம் செக் பண்ணவே இல்லியா?////அதையேன் கேக்குறிங்க மேடம் ..... என் பயோடேட்டாவ செக் பண்ணினவரு ................ பாவம் அப்பவே வேலைய ரிசைன் பண்ணிட்டு போயிட்டாராம்

மங்குனி அமைச்சர் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
இன்னும் சிரிச்சுகிட்டே இருக்கேன்..///ஹா,ஹா,ஹா.................... ரொம்ப நன்றி கருண்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஓஹோ.... டெல்லிக்கு போக பாஸ்போர்ட் தேவையில்லியா? அடடா முன்னாடியே தெரியாம போச்சே? அப்போ இனிமே நேரா டெல்லி போயி அங்கேருந்து சென்னை வர வேண்டியதுதான்........////அத விட ஆப்கானிஸ்தான் போனின்னா அதுக்கு டிக்கட் கூட வேண்டாம் ,.....அங்க போயிட்டு அப்படியே இப்படிக்கா வா......(அப்பாட எப்படியோ ஒருத்தனுக்கு ஆப்பு ரெடிபன்னியாச்சு )

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...
அப்போ சென்னைல இருந்து டெல்லிக்கு போக பாஸ்போர்ட் தேவையில்லையா ??? பிளைட்டுல எங்க போகனுமின்னாலும் பாஸ்போர்ட் வேணுன்னு நினைச்சு இருந்தேன் ..////
இது தெரியாம நான் வேற ஒரு மூணு நாலு தடவ டெல்லிக்கு போயிட்டு வந்திட்டனே....:)///ஐயய்யோ , அப்படியா ..........? அப்படின்னு எல்லாத்தையும் ரீவைண்ட் பண்ணி முதல்ல இருந்து டெல்லிக்கு போங்க

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////நான் பீ.ஜி முடிச்சிட்டு (ங்கொய்யாலே நம்பவா போறீங்க? ) சென்னைல வேலைக்கு சேர்ந்த புதுசு....... ///////

பீ ஜின்னா பேயிங் கெஸ்ட்டுதானே? அத முடிச்சா வேல கெடைக்குமா? நல்ல டெக்னிக்குலாம் வெச்சிருக்கேய்யா....!////எப்படியல்லாம் யோசிக்கிராணுக ......................

மங்குனி அமைச்சர் said...

vinu said...
meyum ப்ரெஸெந்த்த்தூஊஉ////ரைட்டு

மங்குனி அமைச்சர் said...

vinu said...
naanum puthu possttu pottu irrukeanneay...

pimbilikky பிலாப்ப்ய்யய்ய்ய்யி///வினு உன் போஸ்ட்டு லிங்க் குடு .............நான் டிரை பண்ணினே ஓபன் ஆகலை

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////மேனேஜெர் என்னைய கூப்ட்டு நீ டெல்லிக்கு போறியான்னு கேட்டார் .
எனக்கு ஒரே சந்தோசம் , பஸ்ட்டு டைம் பிளைட்டுல போறதுன்னா சும்மாவா ..../////

டீவி வெளம்பரத்துல வர்ர ஏர்ஹோஸ்டசை பாத்துட்டு அப்படி நெனச்சிருப்பே, தக்காளி உன்னையெல்லாம் இந்தியன் ஏர்லைன்ஸ்ல அனுப்பி வைக்கனும்யா..../////அந்த கருமத்த என் கேக்குற .............. எப்பவும் நாங்க ஜெட் ஏர்வேஸ் தான் யூஸ் பண்ணுவோம் ......ஒரு வாட்டி தெரியாம இந்தியன் ஏர்லைன்ஸ்ல போயிட்டேன் .......யப்பா சாமி ..............ஒரு தடவைக்கு மேல குடிக்க தண்ணி கூட தரமாற்றாளுக

மங்குனி அமைச்சர் said...

மனசாட்சி said...
பீ ஜீ ஆ நம்பிடொம்ல////பார்ரா .........நீங்க அவ்ளோ நல்லவரா ??? இது தெரியாம போச்சே தெரிஞ்சிருந்தா இன்னும் ரெண்டு கூட சொல்லிருப்பனே

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////என்னது டெல்லிக்கு போக பாஸ்போர்ட்ஆ...........
அன்னைக்கு போனவருதான் அந்த எம்.டி ...அதுக்கப்புறம் அவரு ஆபீஸ் பக்கம் வரவே இல்லை .///////

அவருக்கு பொறாம மங்கு, எங்க நீ எம்டி ஆகிடுவியோன்னு, அதான் பயந்துக்கிட்டு ஆபீஸ் பக்கமே வரல போல......!////ஆமா பண்ணி , நம்ம மூளைய பத்து எல்லா பயலுகளும் பொறாமைப் படுராணுக

மங்குனி அமைச்சர் said...

vinu said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
பீ ஜின்னா பேயிங் கெஸ்ட்டுதானே? அத முடிச்சா வேல கெடைக்குமா? நல்ல டெக்னிக்குலாம் வெச்சிருக்கேய்யா....!

ithu eatho padichap pullay pola irruku englishellaam pesuthu.....

ithukittey sagavaasam vachukkakkoodaathu....///

அப்படியா சொல்ற வினு....................... ரைட்டு................. இனி சகவாசத்த கட் பன்னிரிடுறேன்

மங்குனி அமைச்சர் said...

விக்கி உலகம் said...
நண்பா நானும் அப்படித்தான் ரொம்ப நாளு நெனச்சிருந்தேன் ஹிஹி!///அப்போ , நம்மை போல் சிறந்த அறிவாளிகள் நிறைய பேர் இருக்காங்க போல

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...
மங்குனி மாம்ஸ் இத பாருங்க :)
http://www.youtube.com/watch?v=jNt7Hvt3kRo
இனிமேல் இதையே நம்ம பாலோ பண்ணுவோம்....:))////ரைட்டு ............பண்ணிடுவோம்

மங்குனி அமைச்சர் said...

Madhavan Srinivasagopalan said...
நாங்கலாம் உங்களை விட உஷார் பார்டி..
ஆந்திரா போகனும்னாலும் பாஸ்போர்ட் டதான் போவோம்..
(ஹி.. ஹி.. இருக்குறது அந்த ஒரு ஐ.டி.தான் டிரைன்ல (இ-டிக்கெட்) ஐ.டி. கேப்பாங்களே.. அதான்)/////ஹா,ஹா,ஹா.................... என்ன ஒரு மேதாவித்தனம் .......................

மங்குனி அமைச்சர் said...

ராஜகோபால் said...
விடு பாஸ் நாமள்லாம் பஸ் பாஸ் வச்சு பரலோகம் வரைக்கும் போறவங்க ஒரு பாஸ்போர்ட்டுக்காக டெல்லி ப்ரோக்ராம்ம கேன்சல் பண்ணிடியே மங்கு////ஐயோ ...... நீக பஸ் பாசஎல்லாம் வச்சு இருக்கிங்களா .................??? வெரி பேட் நான் எல்லாம் பக்கத்துல இர்க்கவன் பஸ் பாஸுல டிராவல் பண்ற ஆட்கள்

மங்குனி அமைச்சர் said...

sulthanonline said...
//அன்னைக்கு போனவருதான் அந்த எம்.டி ...அதுக்கப்புறம் அவரு ஆபீஸ் பக்கம் வரவே இல்லை .//

உங்க கூட வேலைபார்த்தார்ல மென்டல் ஆஸ்பத்திரில போயி செட்டில் ஆகியிருப்பார்.////ஹா,ஹா,ஹா............................ இருக்கும் ,இருக்கும்....................

மங்குனி அமைச்சர் said...

பித்தனின் வாக்கு said...
அட மங்குனி நண்பா நானும் உங்க பிரண்டுதாம்பா. நான் எங்க பாஸ் மும்பைக்கு போக சொன்ன போது விவரமா பாஸ்போர்ட் இல்லைன்னு பதில் சொன்னேன். அவரு சிரிச்சுக்கிட்டு உள்ளூருக்கு தேவையில்லை. உன் பான் கார்டு போதும் சொல்லி அனுப்பி வைத்தார். நான் எல்லா புரூப்பும் எடுத்துக்கிட்டு போனேன்.////ஹா,ஹா,ஹா....................சேம் பிளட்

மங்குனி அமைச்சர் said...

கே.ஆர்.பி.செந்தில் said...
மங்குனி இப்படித்தான் நிறைய மேன்பவர் கம்பெனிகள் இயங்குது..

உ.ம் : விந்தை மனிதன்

/////நன்றி செந்தில் சார்.............. இல்லை எனக்கு நிஜம்மா இந்த சந்தேகம் இருந்தது சார்

மங்குனி அமைச்சர் said...

♔ℜockzs ℜajesℌ♔™ said...
வந்துட்டேன் , ஆனா இன்னும் பதிவ படிக்கல , ஒட்டு மட்டும் போட்டு இருக்கேன் , இது படிச்சுட்டு வரேன் . . .
ஆல் வைடிஸ் . . ./////வெயிட் பண்ணுறோம் ....வரும்போது சரக்கு , சைடிஸ் எல்லாம் வாங்கிட்டு வந்திடுங்க

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////பிளைட்டுல எங்க போகனுமின்னாலும் பாஸ்போர்ட் வேணுன்னு நினைச்சு இருந்தேன் ............/////

நல்லவேளை அப்பவே டெல்லிக்கு போகச்சொன்னாங்க, இல்லீன்னா இப்பவும் பாஸ்போர்ர்ட் தான்........?///இது மேட்டரு .............. இல்லைன்னு இன்னும் நாம அதி புத்திசாளியாவே இருந்திருப்போம்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// ராஜகோபால் said...
விடு பாஸ் நாமள்லாம் பஸ் பாஸ் வச்சு பரலோகம் வரைக்கும் போறவங்க ஒரு பாஸ்போர்ட்டுக்காக டெல்லி ப்ரோக்ராம்ம கேன்சல் பண்ணிடியே மங்கு///////

ங்கொய்யால பஸ்பாச வெச்சி பஹ்ரைன் வரைக்கும் போயிட்டியா?////அது பஸ்பாஸ் கூட இல்லை பண்ணி .........அது ரேசன் கடை ரசீது

மங்குனி அமைச்சர் said...

பதிவுலகில் பாபு said...
இதுல என்ன தப்பு நல்ல சந்தேகம் தானே.. :-)

உங்களை மாதிரித்தான் பலபேர் நினைச்சுட்டு இருந்தோம்.. :-)///அட ஆமாங்க சார் ...........அது அப்புறம் தான் தெரிந்தது ............நம்மள மாதிரி அறிவாளிக்க நிறையா பேரு இருந்திருக்காங்கன்னு

மங்குனி அமைச்சர் said...

♔ℜockzs ℜajesℌ♔™ said...
//// நான் பீ.ஜி முடிச்சிட்டு (ங்கொய்யாலே நம்பவா போறீங்க? )////
ரைட்டு , தெரிஞ்ச சரி ....///எதிலையும் ஒரு நேர்மை இருக்கணும்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////karthikkumar said...
அப்போ சென்னைல இருந்து டெல்லிக்கு போக பாஸ்போர்ட் தேவையில்லையா ??? பிளைட்டுல எங்க போகனுமின்னாலும் பாஸ்போர்ட் வேணுன்னு நினைச்சு இருந்தேன் ..////
இது தெரியாம நான் வேற ஒரு மூணு நாலு தடவ டெல்லிக்கு போயிட்டு வந்திட்டனே....:)/////////

அப்போ பஸ்பாஸ் வெச்சு போனியா?////யோவ் அவரு சைக்கிள போயிட்டு வந்து இருக்காரு.............சைக்கிள்ள போகவெல்லாம் பாஸ்போர்ட் தேவையில்லை

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////// vinu said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
பீ ஜின்னா பேயிங் கெஸ்ட்டுதானே? அத முடிச்சா வேல கெடைக்குமா? நல்ல டெக்னிக்குலாம் வெச்சிருக்கேய்யா....!

ithu eatho padichap pullay pola irruku englishellaam pesuthu.....

ithukittey sagavaasam vachukkakkoodaathu....///////

தொர இங்கிலீசுலாம் பேசுது.......////தொரைய பாரு தமிழ கூட இங்கிலீசுல பேசுறாரு

மங்குனி அமைச்சர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...
சென்னைல இருக்கற பர்மா பஜாருக்கும் பாரீசுக்கும் போகணும்னா கூட பாஸ்போர்ட் வேணும்னு நான் சொல்றேன், யாரும் நம்ப மாட்டேங்குறாங்க, நீ என்ன சொல்றே, மங்குனி?/////

ஆமாங்க சார்............. கான்பிடன்ட் இல்லாத பாயிஸ் சார் இவனுக

மங்குனி அமைச்சர் said...

Mohamed Faaique said...
என்னுடைய PCஇல் ஓட்டுப் பட்டை வர மாட்டேங்குது..... ////பட்டை வரலன்னா , பிராந்தி , விஸ்க்கி இப்படி ஏதாவது வருதா பாரு

///பதிவுக்கும் இந்த சம்பவத்துக்கும் சம்பந்தமே இல்லையே!!!
எனக்கு இந்த பாஸ்போர்ட் சந்தேகம் இருந்து கிட்டே இருந்துச்சு.... இப்போ ஓ.கே///\அடப்பாவிகளா எல்லாரும் இப்படித்தான் இருந்திங்களா...........நானாதான் சொல்லிக்குடுத்திட்டனா ............

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////டிஸ்கி : இப்ப தெரியுதா நான் ஏன் படிச்சிருக்கேன் , படிச்சிருக்கேன்னு சொல்றேன்னு. /////////

யோவ் என்னய்யா படிச்சே? கொஞ்சமாவது திங் பண்ண வேணாம்? பேசாம ஒரு வாடகை சைக்கிளை எடுத்து போயிருந்தா பிளைட் டிக்கட் காசு மிச்சம் பண்ணி பாக்கெட்ல போட்டிருக்கலாம்ல?////யோவ்..........வடக்கை சைக்கிள் கடைக்கான அட்ரஸ் புரூப் கேட்குறான் ..........அப்புறம் கேரண்டி கேக்குறான்

மங்குனி அமைச்சர் said...

♔ℜockzs ℜajesℌ♔™ said...
///@ பன்னிக்குட்டி ராம்சாமி said...
டீவி வெளம்பரத்துல வர்ர ஏர்ஹோஸ்டசை பாத்துட்டு அப்படி நெனச்சிருப்பே, தக்காளி உன்னையெல்லாம் இந்தியன் ஏர்லைன்ஸ்ல அனுப்பி வைக்கனும்யா.... / / / /

ஹி ஹி ஹி ... பன்னி குட்டி கரெக்ட் அஹ சொன்ன போ ..///என்ன ஒரு சந்தோசம்...........இம்ம்ம்..............இருக்கட்டும் பாத்துக்கிர்றேன்

மங்குனி அமைச்சர் said...

♔ℜockzs ℜajesℌ♔™ said...
///@பதிவுலகில் பாபு said...

இதுல என்ன தப்பு நல்ல சந்தேகம் தானே.. :-)

உங்களை மாதிரித்தான் பலபேர் நினைச்சுட்டு இருந்தோம்.. :-) / / /

பல பேருன்னு ஏன் என்னையும் , பன்னி குட்டியையும் சேக்குற ? நாங்க எல்லாம் ட்ரெயின்ல போறதுக்கே பாஸ்போர்ட் எடுத்தவங்க ....

மங்குனி அமைச்சர் said...

♔ℜockzs ℜajesℌ♔™ said...
///@பதிவுலகில் பாபு said...

இதுல என்ன தப்பு நல்ல சந்தேகம் தானே.. :-)

உங்களை மாதிரித்தான் பலபேர் நினைச்சுட்டு இருந்தோம்.. :-) / / /

பல பேருன்னு ஏன் என்னையும் , பன்னி குட்டியையும் சேக்குற ? நாங்க எல்லாம் ட்ரெயின்ல போறதுக்கே பாஸ்போர்ட் எடுத்தவங்க ....////யோவ் ....நம்ம பன்னிகுட்டி போர்க்கும் போதே பாஸ்போர்ட் இல்லாம தான் பொறந்திருக்கான்................அவன்கிட்டையா ..........

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////////கிஸ்கி : ஹி.ஹி.ஹி.............இது உண்மையிலே நடந்ததுங்க .........எம்.டி. வரைக்கும் போகலை மேனேஜெர் லெவல்லே முடிஞ்சிருச்சு ..ஹி,ஹி,ஹி..........//////

அந்த மேனேஜரு இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருக்காரு? (அனேகமா ட்ராவல்ஸ் தொழிலையே விட்டிருக்கனும்...!)////ஹி,ஹி,ஹி,............ லைட்டா இப்போ ஞா ஞா ஞான்னு தலைல சொறிஞ்சுக்கிட்டு அலையிராராம்

மங்குனி அமைச்சர் said...

♔ℜockzs ℜajesℌ♔™ said...
/// @ மர்மயோகி said...

அப்போ வெளிநாட்டுக்காரனுங்கல்லாம் அவங்க அவங்க நாட்டுலேர்ந்து டெல்லிக்கு வர்றாங்களே..பாஸ்போர்ட் இல்லாமாலா வர்றாங்க மங்குனி?/////

வெரி குட் question .....

நீ இங்க இந்திய ல பொறக்க வேண்டிய ஆளே இல்ல , வெளிநாட்டுல பொறந்து இருக்க வேண்டிய ஆளுய யோ////ஆமாங்க அவரு வேனாட்டுல தாங்க பொறந்தாரு ..........அந்த நாடு பேருகூட ஏதோ தமிழ்நாடாம்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////♔ℜockzs ℜajesℌ♔™ said...
///@பதிவுலகில் பாபு said...

இதுல என்ன தப்பு நல்ல சந்தேகம் தானே.. :-)

உங்களை மாதிரித்தான் பலபேர் நினைச்சுட்டு இருந்தோம்.. :-) / / /

பல பேருன்னு ஏன் என்னையும் , பன்னி குட்டியையும் சேக்குற ? நாங்க எல்லாம் ட்ரெயின்ல போறதுக்கே பாஸ்போர்ட் எடுத்தவங்க ....//////

யோவ் நீ ஏன்யா என்ன சேக்குற? நான் பஸ் பாசை வெச்சே பாம்பே போனவன்.... தெரியும்ல?/////டிரைன்ல கக்கூசுக்குள்ள உட்கார்ந்து தான போன .....அதுக்கு பஸ் பாஸ் கூட தேவை இல்லை

மங்குனி அமைச்சர் said...

middleclassmadhavi said...
visa வேண்டாமா?!!///இலிங்க எனக்கு விசாவெல்லாம் வேண்டாம்................ சரி என்ன விலைக்கு தருவிங்க

மங்குனி அமைச்சர் said...

♔ℜockzs ℜajesℌ♔™ said...
/// @பன்னிக்குட்டி ராம்சாமி said...
////////கிஸ்கி : ஹி.ஹி.ஹி.............இது உண்மையிலே நடந்ததுங்க .........எம்.டி. வரைக்கும் போகலை மேனேஜெர் லெவல்லே முடிஞ்சிருச்சு ..ஹி,ஹி,ஹி..........//////
அந்த மேனேஜரு இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருக்காரு? (அனேகமா ட்ராவல்ஸ் தொழிலையே விட்டிருக்கனும்...!) ////

"அதான் மங்குனி தெளிவா சொல்லி இருகாரு இல்ல மேனேஜர்ர முடிச்சாச்சுன்னு , இன்னும் அந்த மேனேஜர் உயிரோட இருப்பாருன்னு நினைக்குற ? "//அடப்பாவி கண்டுபுடிச்சிட்டானே .............

மங்குனி அமைச்சர் said...

பார்வையாளன் said...
செம காமடி...

சம்பவமும், சொன்ன விதமும் அருமை////ரொம்ப நன்றி சார்

மங்குனி அமைச்சர் said...

♔ℜockzs ℜajesℌ♔™ said...
/// @ middleclassmadhavi said...

visa வேண்டாமா?!! ///

விசாவ எதுக்கு இப்போ கூப்பிடுறாரு ? அவர்தான் பிரபல பதிவர் ஆச்சே , அவருக்கு டெல்லி க்கு வர எல்லாம் நேரம் இருக்குமா ? . . .///ஐயோ,செல்லம் , செல்லம் ............யாரு அந்த விசா ????

மங்குனி அமைச்சர் said...

♔ℜockzs ℜajesℌ♔™ said...
//// @ Lakshmi said...

அந்த ஆபிசில எப்படி வேலைக்கு சேந்தீங்க? உங்க பயோ டேட்டால்லாம் செக் பண்ணவே இல்லியா? / / /

அதெல்லாம் செக் பன்னி இருந்த மங்குனிய ஆபீஸ் வாசபடிக்குள்லையே விட்டு இருக்க மாட்டாங்க மேடம் ஹி ஹி ஹி

ஆமா பயோ டேட்டா இருந்த டெல்லி க்கு போலாமா ? ? ?/////தாராளமா கூடவே பயோதேட்டாவையும் கூட கூட்டிக்கிட்டு போகலாம்

மங்குனி அமைச்சர் said...

சே.குமார் said...
நம்பிடொம்ல...
நம்பிடொம்ல ...////ஆகா......................இன்னுமா நம்மள இந்த ஊரு நம்புது

மங்குனி அமைச்சர் said...

அமுதா கிருஷ்ணா said...
அப்புறம் டெல்லி போனீங்களா இல்லையா??////ஹி.ஹி.ஹி............போனேனுங்க மேடம்

மங்குனி அமைச்சர் said...

வைகை said...
என்னது டெல்லிக்கு போக பாஸ்போர்ட்ஆ...........
அன்னைக்கு போனவருதான் அந்த எம்.டி ...அதுக்கப்புறம் அவரு ஆபீஸ் பக்கம் வரவே இல்லை //

ஏன்... வழிய மறந்திட்டாரா?////வாப்பு ................ இல்லை ஆபிசையே மறந்திட்டாராம்

மங்குனி அமைச்சர் said...

வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////மேனேஜெர் என்னைய கூப்ட்டு நீ டெல்லிக்கு போறியான்னு கேட்டார் .
எனக்கு ஒரே சந்தோசம் , பஸ்ட்டு டைம் பிளைட்டுல போறதுன்னா சும்மாவா ..../////

டீவி வெளம்பரத்துல வர்ர ஏர்ஹோஸ்டசை பாத்துட்டு அப்படி நெனச்சிருப்பே, தக்காளி உன்னையெல்லாம் இந்தியன் ஏர்லைன்ஸ்ல அனுப்பி வைக்கனும்யா....//

ஹி ஹி...சேம் பிளட்...

மங்குனி அமைச்சர் said...

வெட்டிப்பேச்சு said...
ஹி..ஹி..ஹி..////நன்றி வெட்டிப் பேச்சு

மங்குனி அமைச்சர் said...

வைகை said...
வேடந்தாங்கல் - கருன் *! said...
இன்னும் சிரிச்சுகிட்டே இருக்கேன்..//

சார் இன்னுமா சிரிக்கிறிங்க? நிப்பாட்டிருங்க... அப்பறம் எல்லாரும் மங்குனி ப்ளாக்க படிச்சிதான் சிரிசிங்கன்னு தப்பா நினைப்பாங்க.. அவரு எவ்வளவு பெரிய கருத்து சொல்லியிருக்காரு? ஹி ஹி////ஆமாங்க சார் ......அப்புறம் மன்குனிக்கு கொம்பு முளைச்சிரும்...........அப்புறம் பெரிய்ய பிரபல பதிவராயிட்டேன்னு பீத்துக்குவான்

மங்குனி அமைச்சர் said...

கோமாளி செல்வா said...
நீங்க வேற நான் எங்க ஊர் ல இருந்து பஸ் ல போகவே பாஸ்போர்ட் வேணும்னு நினைச்சேனாக்கும் .. ஹி ஹி////பஸ்சுல போக பாஸ்போர்ட் அப்படின்னா டிரைன்ல போக டிரைன் போர்ட் வேணுமா ???# டவுட் செல்வா

மங்குனி அமைச்சர் said...

கோமாளி செல்வா said...
உங்க எம்.டி பாவம்ல ... ஹி ஹி///ஹா,ஹா,ஹா..........அவரு ஜாதகத்துல ஏதோ பிசகாம்

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...
>>>நான் பீ.ஜி முடிச்சிட்டு

அண்ணே.. உங்க காதலி பி கோதாவரியை நீங்க ஷார்ட்டா பி ஜின்னு கூப்பிடுவீங்களாண்ணே..? ரைட்டு///இதென்ன புது போராளியா இருக்கு ............செந்தில் சார் செந்தில் .........அந்த கோதாவரி எங்க இருக்குன்னு கொஞ்சம் சொல்லுங்க சார்

மங்குனி அமைச்சர் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ஏன் சார் , அப்போ சென்னைல இருந்து டெல்லிக்கு போக பாஸ்போர்ட் தேவையில்லையா ??? பிளைட்டுல எங்க போகனுமின்னாலும் பாஸ்போர்ட் வேணுன்னு நினைச்சு இருந்தேன் ............

ஹா.....ஹா..... ஹா...... நீங்கமட்டுமா?///அப்போ நீயுமா ???? அடப்பாவிகளா .........கொள்ளபேரு இப்படித்தான் திரியிரின்களா ???

மங்குனி அமைச்சர் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
செம நக்கல் நையாண்டி கம் காமெடி!///நன்றி ஓனர்

மங்குனி அமைச்சர் said...

எஸ்.கே said...
பாஸ்னாலேயே பாஸ்போர்ட்டுக்கு பயப்படுவாங்க போல!///அட எதுகை மோனை..............கலக்குறிங்க எஸ்.கே.............

மங்குனி அமைச்சர் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...
\.நானும் ரொம்ப நாள் இப்படி நினைச்சிகிட்டிருந்தவந்தான் ஹிஹி//////////ஆகா ..........இதோட ஒரு பதினஞ்சு இருபது பேர் நம்ம ஜாதிதான்னு சொல்லிட்டாங்களே

மங்குனி அமைச்சர் said...

Jey said...
மங்கு/பன்னி, டெல்லி அப்ப இந்தியாலதான் இருக்கா?!!!,

என்னப்பா, இவ்வளவு பலகிட்டு சொல்லவே இல்ல பாத்தியா....///அப்படியா ........இந்தியா எங்க இருக்கு ????

மங்குனி அமைச்சர் said...

Jey said...
மங்கு, ஏதோ பிஜி படிச்சிருக்கேனு சொல்லிருக்கியே, அது என்ன படிப்பு, அத எங்க போயி எப்படி படிக்கிறதூனு சேத்து சொல்லிருந்த நாங்களும் படிப்போமில்ல.....////ஹி.ஹி.ஹி..........அது தெரிஞ்சா நான் என் போயி படிக்கப் போறேன் ....தெரியாதது நாலா தானே படிச்சேன்

மங்குனி அமைச்சர் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
என்னாள முடியல..

தேரியாம வந்துட்டேன் நான் கிளம்புறேன்..////ஹா.ஹா.ஹா...........நன்றி சவுந்தர்

மங்குனி அமைச்சர் said...

vasan said...
Narration is super. Enjoyed the finishing touch.//////ரொம்ப நன்றி வாசன் சார்

சிநேகிதன் அக்பர் said...

செம காமெடி மங்குனி

Unknown said...

பீ.ஜி அப்படினா எல்.கே.ஜி.க்கு அடுத்த படிப்பா?

Unknown said...

ஹா.ஹா.ஹா...பதிவு இது

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

:-)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஆகா.. சூப்பர்..
வாழ்த்துக்கள்..
அருமை நண்பா..
கலக்குங்க..
எப்படி சார் இப்படி?..
ஹா..ஹா
:-)
:-(
ம்..ம்..
Online...
வடை எனக்கு...
வடைபோச்சே....

//

மேலே உள்ளவற்றில் ஏதாவது ஒன்றை, எடுத்துப்போட்டுக்கோ..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

யோவ்.. இப்பத்தான் பதிவை படிச்சேன்..

நீ மூளக்காரனு நினச்சுக்கிட்டு இருந்தேன்..
இப்பதான் தெரியுது..
அதனால உனக்கு மைனஸ் ஓட்டு...

ஹி..ஹி

Anonymous said...

//
யோவ்.. இப்பத்தான் பதிவை படிச்சேன்..

நீ மூளக்காரனு நினச்சுக்கிட்டு இருந்தேன்..
இப்பதான் தெரியுது..
அதனால உனக்கு மைனஸ் ஓட்டு...

ஹி..ஹி //

நானும் ஒன்னு போடறேனே. ப்ளீஸ் ப்ளீஸ்.

மங்குனி அமைச்சர் said...

சிநேகிதன் அக்பர் said...
செம காமெடி மங்குனி///

ரொம்ப நன்றி அக்பர்

மங்குனி அமைச்சர் said...

பாரத்... பாரதி... said...
பீ.ஜி அப்படினா எல்.கே.ஜி.க்கு அடுத்த படிப்பா?/////

என்னது பீ.ஜின்னா படிப்பா ..? எனக்கு இவ்ளோநாள் தெரியாம போச்சே

மங்குனி அமைச்சர் said...

பாரத்... பாரதி... said...
ஹா.ஹா.ஹா...பதிவு இது///

நன்றிங்கோ ........
March 21, 2011 11:08

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.... said...
:-)///

:-))))))

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.... said...
ஆகா.. சூப்பர்..
வாழ்த்துக்கள்..
அருமை நண்பா..
கலக்குங்க..
எப்படி சார் இப்படி?..
ஹா..ஹா
:-)
:-(
ம்..ம்..
Online...
வடை எனக்கு...
வடைபோச்சே....

//

மேலே உள்ளவற்றில் ஏதாவது ஒன்றை, எடுத்துப்போட்டுக்கோ..////

"ஹி.ஹி.ஹி.........." இத விட்டுட்ட

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.... said...
யோவ்.. இப்பத்தான் பதிவை படிச்சேன்..

நீ மூளக்காரனு நினச்சுக்கிட்டு இருந்தேன்..
இப்பதான் தெரியுது..
அதனால உனக்கு மைனஸ் ஓட்டு...

ஹி..ஹி////

என்னது என்னைய மூளைக்காரன்னு நினைச்சுகிட்டு இருந்தியா ????? அய்யஹோ ........... யாரோ தப்பான தகவல் குடுத்திருக்காங்க பட்டி

மங்குனி அமைச்சர் said...

அனாமிகா துவாரகன் said...
//
யோவ்.. இப்பத்தான் பதிவை படிச்சேன்..

நீ மூளக்காரனு நினச்சுக்கிட்டு இருந்தேன்..
இப்பதான் தெரியுது..
அதனால உனக்கு மைனஸ் ஓட்டு...

ஹி..ஹி //

நானும் ஒன்னு போடறேனே. ப்ளீஸ் ப்ளீஸ்.////

நானும் நானும் ....... அட இது தெரியாம நேத்து பாசிடிவ் ஒட்டு போட்டனே ..........வட போச்சே
March 22, 2011 7:49 AM

Anonymous said...

அப்படினா டெல்லி போகணும்னா பாஸ்போர்ட் தேவையில்லையா???

♔ℜockzs ℜajesℌ♔™ said...

my new post : தேர்தல் 2011 , ஓட்டு அள்ளும் பதிவர்கள் ...

///
சும்மா ஆடு அறுக்குறோம் , கோழி அறுக்குறோம் , கெடா வெட்டறோம் பொங்க வைக்குறோம் ன்னு இவங்க பண்ணுற அழிச்சாட்டியம் தாங்க முடிய ( இது பட்டாபட்டி யையோ இல்ல , மங்குனி அமைச்சர் ரியோ குறிப்பதாக நினைத்தால் அதற்க்கு கம்பெனி பருப்பு வேகாது , அட ச்சா , கம்பெனி பருப்பாகாது , அட ச்சா ........கம்பெனி பொறுப்பாகாது ..... ) ( அப்பாடி ரெண்டு போரையும் வம்புக்கு இழுத்தாச்சு ஹி ஹி . . . ) ///

http://rockzsrajesh.blogspot.com/2011/03/2011.html

goma said...

இப்போ கூட அது மாதிரி நிறைய பேர் இருப்பாங்க...என்ன உங்களை மாதிரி தைரியமா ஒத்துக்க மாட்டாங்க

Jaleela Kamal said...

என்ன அமைச்சரே ஊட்டுல எல்லாம் நலமா?

Tamil Movies said...

மிக நல்ல பதிவு நன்றி :)