எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, August 9, 2010

இன்பச்சுற்றுலா...(டெர்ரராக )

டிஸ்கி : சாரி, திட்டாதிங்க , பதிவு கொஞ்சம் பெரிசா போச்சு , நானும் எவ்ளவோ எடிட் பண்ணிப் பாத்தேன் அப்பவும் முடியல , very sorry .

இன்பச்சுற்றுலா ............... பேரே நல்லா இருக்குல்ல ? நான் ஸ்கூல்ல படிக்கும் போது வருடா வருடம் கூட்டிகிட்டு போவாங்க . அத அப்புறம் பார்க்கலாம் . இப்ப நான் சிங்கபூர், மலேசியா , இந்தோனேசியா இன்பச்சுற்றுலா போயிட்டு வந்த கதைய சொல்றேன் .

அங்க ஒரு பிரண்டு ஃபேமிலியோட இருக்கான், அவனும் அடிக்கொருதரம் சிகபூருக்கு என்னை வரசொல்லுவான் , நாம என்ன மயிலாப்பூர் பார்த்தசாரதியா? இல்லை பட்டாபட்டியா ? ஃபேமிலி மேன் கூடபோயி சும்மா கோயில் குளமுன்னு சுத்தி பாக்க???

அப்புறம் ஒரு பேச்சுலர் பிரண்டு சிங்கபூருக்கு போனான் , அவனும் என்னைய சிங்கபூருக்கு வாடா , வாடான்னு கூப்பிட்டான் (பாவம் அவன் நாக்குல சனி , அவன் தலைஎழுத்து ) . ரைட்டு ரெண்டு அடிமைக சிக்கிட்டாணுக இனி விடுவமா ..... நானும் கிளம்பிட்டேன் .

சிங்கபூர் எபோர்ட்டுல இறங்கிய உடன் ஃபிரண்டுக்கு போன் பண்ணினேன் ........... புல் ரிங்கு போய் கடைசீல ஒரு பொண்ணு.......

"சூ கவாங் கிட்டாசி மிச்ட்ஜுபுச்சி மொஹாங்"

அப்படின்னு ஏதோ சைனீசுல சொல்லுச்சு. எனக்கு பகீருன்னு போச்சு , (நாம ஒரு கணக்கு போட்ட கடவுள் வேற கணக்கு போடுவாருன்னு சும்மாவா சொன்னாங்க ) ஆஹா ... இவனுக நம்மள இங்க பிச்சை எடுக்க விட்டுட்டானுகன்னு ...... அங்க இருந்த ஒரு மேடம் கிட்ட

"எச்சூச்மி மேடம் இந்த ஊருல எங்க பிட்ச்சை எடுத்தா அதிக கல்லா கட்டும்? "

"இல்தக்க கொச்சு மச்ஹூங்கி சூமியா சைய்யா "

அடப்பாவிகளா பிட்ச்சை எடுக்க பஸ்ட்டு சைனீஸ் கத்துக்கமே , சரின்னு இன்னொரு வாட்டி நம்ம பிரண்டுக்கு போன் டிரை பண்ணினேன் ,

ரிங்கு போச்சு ....................

போச்சு ............

ச்சு ................

சு................

"ஹலோ
(ஃபிரண்டுதான் , ஹிப் , ஹிப் ஹுர்ர்ர்ர்ரே ) "

"டே மச்சான் நான்தாண்டா ... "

"செல்லுடா மச்சான் என்ன விசேஷம்?"

"என்ன விசேஷமா??? அடப்பாவி நான் இப்ப சிங்கபூர் ஏர்போர்ட்ல இருக்கன்டா"

"அட ஆமா நீ வர்றேன்னு சொன்னில? , மறந்துட்டேன்? , சரி
டாக்ஸி புடிச்சிட்டு நான் குடுத்த அட்ரஸ்க்கு வா "

"மறந்துட்டேனா ??" அட நன்றி கெட்டவனே , இந்த நாயி ஒவ்வொரு வாட்டியும் வெளிநாடு போகும்போதும் , வரும்போதும் சென்னை ஏர்போர்டுக்கு போயிட்டு வந்தமே , நாம இப்பத்தான் முதல் வாட்டியா வெளிநாடு வந்திருக்கோம் இவன் ஏர்போர்டுக்கு கூட வரலையேன்னு ரொம்ப கவலைப்பட்டேன் . (உண்மைலே ரொம்ப ஃபீல் பண்ணேன் சார் )

அப்புறம் டாக்ஸி புடிச்சு "திலக் பிளாங்கா ரைஸ் " (இந்த பேர வச்சு ஒரு காமடி நடந்துச்சு அத அப்புறம் சொல்றேன் ) போனேன் . செகண்டு புளோர் போய் அவன் சொன்ன டோர் நம்பர் கதவ தட்டினே , ஒரு அழகான சைனீஸ் பொண்ணு வந்து கதவ தொரந்துச்சு . (ஆகா .... இவன் ஊருக்கு தெரியாம இங்க குடும்பமே நடத்துறானே ?) . அட்ரஸ் எழுதின பேபர காட்டினேன் , அது கீழ் புளோர கைய காட்டுச்சு ,

(என்னடான்னு பாத்தா , சிங்கபூருல கிரவுண்டு புளோர பஸ்ட்டு புலோருங்குறான் பஸ்ட்டு புளோர செகண்டுபுலோருங்கறான் , ஆஹா ... வந்த உடனே குழப்புரானுகளே ?) குழம்பிபோய் கீழ போய் கதவ தட்டினா , அது தான் அவன் ரூம் அங்க இருந்த அவன் பிரண்டு

"சார் , அவரு பிரண்டு ஒருத்தர் இந்தியாவுல இருந்து வர்றாரு , அவர பிக்அப் பண்ண ஏர்போர்ட் போயிருக்கார் ."

"என்னது எர்போர்ட்டுக்கா ? நான் தான் சார் இந்தியாவுல இருந்து வந்த
அவரோட பிரண்டு "

"அப்ப , உங்கள பிக்கப் பண்ணத்தான் ஏர்போர்ட் போயிருக்கான் , உடனே நீங்க ஏர்போர்ட் போங்க "

(அவ்வ்வ்வ்வ்வ்....................... டேய்... என்னங்கடா சின்னபுள்ள தனமா இருக்கு ), மறுபடியும் ஃபிரண்டுக்கு போன் போட்டேன் , டே , நீ அங்கே இரு நான் வர்றேன்னு சொல்லிட்டு வந்து சேந்தான் .

என்னடான்னா...???? ஏர்போர்ட்டுக்கு வரலைன்னு சொல்லிட்டு , ஏர்போர்ட்டுக்கு வந்து அப்புறம் திடீருன்னு நம்ம முன்னாடி வந்து சர்ப்ரைஸ் தரனுமின்னு, கதவோரமா இருந்த குப்ப தொட்டிக்கு பின்னாடி குத்த வச்சு உட்காந்து இருந்திருக்கான் , நானும் கவனிக்கல , அவனும் என்னைய மிஸ்பன்னிட்டான். கடைசீல ரெண்டு டாக்ஸி செலவு .
இது பரவா இல்லைங்க இன்னொரு டெர்ரர் வேலை பன்னான் பாருங்க ..................................... தொடரும்

108 comments:

மங்குனி அமைச்சர் said...

மொதோ வெட்டு நான்தான்

Jey said...

பதிவபோட்டவுடனே நீதான்ய்யா வெட்ட முடியும்... இரு படிசிட்டு வாரேன்...

பட்டிகாட்டானும் கீரிப்பிள்ளையும் ...., http://pattikattaan.blogspot.com/2010/08/blog-post_09.html

இதை படிச்சிரு

Jey said...

///சாரி, திட்டாதிங்க , பதிவு கொஞ்சம் பெரிசா போச்சு , நானும் எவ்ளவோ எடிட் பண்ணிப் பாத்தேன் அப்பவும் முடியல , very sorry .///

நொன்னை இப்ப தெரியுதா...., பதிவு நீளமா போடுரேண்ணு, என்னை திட்டுனே வெளக்கெண்ணை....

Jey said...

//"எச்சூச்மி மேடம் இந்த ஊருல எங்க பிட்ச்சை எடுத்தா அதிக கல்லா கட்டும்///

அடப்பாவி.. அங்க போயும் ந்ம்ம புத்திய காமிச்சிட்டீரே...ஊர் பேரை கெடுத்திடியே பரட்டை...

மங்குனி அமைச்சர் said...

மங்குனி அமைசர் said...

மொதோ வெட்டு நான்தான் ///

ஹி,ஹி,ஹி வட உங்களுக்குத்தான்

மங்குனி அமைச்சர் said...

Jey said...

பதிவபோட்டவுடனே நீதான்ய்யா வெட்ட முடியும்... இரு படிசிட்டு வாரேன்...

பட்டிகாட்டானும் கீரிப்பிள்ளையும் ...., http://pattikattaan.blogspot.com/2010/08/blog-post_09.html

இதை படிச்சிரு///

ரைட்டு

மங்குனி அமைச்சர் said...

Jey said...

///சாரி, திட்டாதிங்க , பதிவு கொஞ்சம் பெரிசா போச்சு , நானும் எவ்ளவோ எடிட் பண்ணிப் பாத்தேன் அப்பவும் முடியல , very sorry .///

நொன்னை இப்ப தெரியுதா...., பதிவு நீளமா போடுரேண்ணு, என்னை திட்டுனே வெளக்கெண்ணை....///

யோவ் நான் எப்பவாவது தான் பெரிய பதிவு போடுறோம் , நீ எழுத ஆரம்பிச்சா நிறுத்த மாட்டேங்கிறியே

Mohamed Faaique said...

singapore போன சிங்கம்" என்று தலைப்பு குடுத்திருக்கலாம். (ஏண்டா ஆறறிவு மனிதனா பொறந்துட்டு ஐந்தரிவு சிங்கத்துக்கு campare பண்றீங்க.. ஆடு'ன்டு சொன்னா அருக்கவாவது முடியும். மாடு'ண்டு சொன்னா கரக்கவாவது முடியும். அத விட்டுட்டு ஒண்டுக்குமே பிரயோசனம் இல்லாத சிங்கத்துக்கு ஏண்டா ஒப்பிட்றீங்க...)

மங்குனி அமைச்சர் said...

Jey said...

//"எச்சூச்மி மேடம் இந்த ஊருல எங்க பிட்ச்சை எடுத்தா அதிக கல்லா கட்டும்///

அடப்பாவி.. அங்க போயும் ந்ம்ம புத்திய காமிச்சிட்டீரே...ஊர் பேரை கெடுத்திடியே பரட்டை...///

என்னா பண்றது பழக்க தோசத்துல கேட்டுட்டேன்

மங்குனி அமைச்சர் said...

Mohamed Faaique said...

singapore போன சிங்கம்" என்று தலைப்பு குடுத்திருக்கலாம். (ஏண்டா ஆறறிவு மனிதனா பொறந்துட்டு ஐந்தரிவு சிங்கத்துக்கு campare பண்றீங்க.. ஆடு'ன்டு சொன்னா அருக்கவாவது முடியும். மாடு'ண்டு சொன்னா கரக்கவாவது முடியும். அத விட்டுட்டு ஒண்டுக்குமே பிரயோசனம் இல்லாத சிங்கத்துக்கு ஏண்டா ஒப்பிட்றீங்க...)///

உண்மையிலேயே நல்ல தலைப்பு , நானும் அப்படித்தான் யோசிச்சேன் , ஆனா எங்க பய புள்ளைக்க சிங்கமுன்னு போட்டா வேற ஒரு கேள்வி கேட்டு மடக்கு வானுக், அதான் இப்படி

Jey said...

//அப்ப , உங்கள பிக்கப் பண்ணத்தான் ஏர்போர்ட் போயிருக்கான் , உடனே நீங்க ஏர்போர்ட் போங்க "//

ஹஹஹா, இது ஹைலட் மச்சி....

அருண் பிரசாத் said...

ஆரம்பதிலயே சாசி கேட்டு சரண்டர் ஆகியாச்சா?

//இன்பச்சுற்றுலா ............... பேரே நல்லா இருக்குல்ல ? நான் ஸ்கூல்ல படிக்கும் போது வருடா வருடம் கூட்டிகிட்டு போவாங்க . அத அப்புறம் பார்க்கலாம்//

அப்புறம் பாக்குறதுக்கு எதுக்கு, இப்ப சொன்னீங்க. இப்படிலாம் போட்டு பதிவை பெரிசா காட்டினாலும் ஜெய் பதிவை மிஞ்ச முடியாது

Jey said...

//திடீருன்னு நம்ம முன்னாடி வந்து சர்ப்ரைஸ் தரனுமின்னு, கதவோரமா இருந்த குப்ப தொட்டிக்கு பின்னாடி குத்த வச்சு உட்காந்து இருந்திருக்கான் , நானும் கவனிக்கல , அவனும் என்னைய மிஸ்பன்னிட்டான். கடைசீல ரெண்டு டாக்ஸி செலவு .///

இதெல்லாம் ஒரு விசயமா, மங்குனி ஃபிறண்டு புத்திசாலினாதா அதிசயம்.....

மங்குனி அமைச்சர் said...

Jey said...

//அப்ப , உங்கள பிக்கப் பண்ணத்தான் ஏர்போர்ட் போயிருக்கான் , உடனே நீங்க ஏர்போர்ட் போங்க "//

ஹஹஹா, இது ஹைலட் மச்சி.... ////

ஹி,ஹி,ஹி ..................

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

ஆரம்பதிலயே சாசி கேட்டு சரண்டர் ஆகியாச்சா?////

இல்லாட்டி உங்கள் தப்பிக்க முடியாதே

////இன்பச்சுற்றுலா ............... பேரே நல்லா இருக்குல்ல ? நான் ஸ்கூல்ல படிக்கும் போது வருடா வருடம் கூட்டிகிட்டு போவாங்க . அத அப்புறம் பார்க்கலாம்//

அப்புறம் பாக்குறதுக்கு எதுக்கு, இப்ப சொன்னீங்க. இப்படிலாம் போட்டு பதிவை பெரிசா காட்டினாலும் ஜெய் பதிவை மிஞ்ச முடியாது////

ஆமா அருண் பிரசாத் அவன மிஞ்ச முடியாது

மங்குனி அமைச்சர் said...

Jey said...

//திடீருன்னு நம்ம முன்னாடி வந்து சர்ப்ரைஸ் தரனுமின்னு, கதவோரமா இருந்த குப்ப தொட்டிக்கு பின்னாடி குத்த வச்சு உட்காந்து இருந்திருக்கான் , நானும் கவனிக்கல , அவனும் என்னைய மிஸ்பன்னிட்டான். கடைசீல ரெண்டு டாக்ஸி செலவு .///

இதெல்லாம் ஒரு விசயமா, மங்குனி ஃபிறண்டு புத்திசாலினாதா அதிசயம்.....////

ஆமா நண்பா , நீ எதையும் கரக்ட்டா கண்டுபுடிச்சிடுவ

சாருஸ்ரீராஜ் said...

ம் நல்லா இருக்கு சிங்கப்பூர் போனவுடனே பல்பு வாங்கியாச்சா ...
வெயிட்டிங் அடுத்த பதிவுக்கு...

பித்தனின் வாக்கு said...

//"எச்சூச்மி மேடம் இந்த ஊருல எங்க பிட்ச்சை எடுத்தா அதிக கல்லா கட்டும்///

kooda companykku antha ponnaiyum pick up panna vendiyathuthana.

thambi complan kudippa, nee innum valara vendi irukku.

கருடன் said...

@மங்குனி
//"சூ கவாங் கிட்டாசி மிச்ட்ஜுபுச்சி மொஹாங்" //

யோ மங்குனி அர்த்தம் சொல்லு...

கருடன் said...

@மங்குனி
//"மறந்துட்டேனா ??" அட நன்றி கெட்டவனே , இந்த நாயி ஒவ்வொரு வாட்டியும் வெளிநாடு போகும்போதும் , வரும்போதும் சென்னை ஏர்போர்டுக்கு போயிட்டு வந்தமே , //

மங்குனி நீர் போனது அவரு வாங்கி வந்த நியூ வாட்டர் ஏர்போர்ட்லே அமுக்க...

மங்குனி அமைச்சர் said...

சாருஸ்ரீராஜ் said...

ம் நல்லா இருக்கு சிங்கப்பூர் போனவுடனே பல்பு வாங்கியாச்சா ...
வெயிட்டிங் அடுத்த பதிவுக்கு... ////

ரொம்ப நன்றி மேடம்

மங்குனி அமைச்சர் said...

பித்தனின் வாக்கு said...

//"எச்சூச்மி மேடம் இந்த ஊருல எங்க பிட்ச்சை எடுத்தா அதிக கல்லா கட்டும்///

kooda companykku antha ponnaiyum pick up panna vendiyathuthana.

thambi complan kudippa, nee innum valara vendi irukku.////

வாங்க , வாங்க பித்தன் சார் , எப்படி இருக்கிங்க ?

ஆமா சார் , எனக்கு கொஞ்சம் மூளை வரச்சி கம்மி

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

@மங்குனி
//"சூ கவாங் கிட்டாசி மிச்ட்ஜுபுச்சி மொஹாங்" //

யோ மங்குனி அர்த்தம் சொல்லு...///

ஏம்பா டெர்ரர் பாண்டி , நான் என்னா வச்சிகிட்டா வஞ்சகம் பண்றேன் , பஸ்ட்டு அது என்னா லாங்குவேசுன்னு சொல்லு

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

@மங்குனி
//"மறந்துட்டேனா ??" அட நன்றி கெட்டவனே , இந்த நாயி ஒவ்வொரு வாட்டியும் வெளிநாடு போகும்போதும் , வரும்போதும் சென்னை ஏர்போர்டுக்கு போயிட்டு வந்தமே , //

மங்குனி நீர் போனது அவரு வாங்கி வந்த நியூ வாட்டர் ஏர்போர்ட்லே அமுக்க...///

ஹி,ஹி,ஹி ..................

Bleachingpowder said...

Shit !!!! mistakenly voted negative i guess...my apologies

Jey said...

///பித்தனின் வாக்கு said...
//"எச்சூச்மி மேடம் இந்த ஊருல எங்க பிட்ச்சை எடுத்தா அதிக கல்லா கட்டும்///

kooda companykku antha ponnaiyum pick up panna vendiyathuthana.

thambi complan kudippa, nee innum valara vendi irukku.///

மங்குனி நோட் பண்ணுய்யா..., நீரு ரொம்ப தோஸ்த்துன சொன்னவரே சொல்லிருக்காரு...

கருடன் said...

@மங்குனி
//ஒரு அழகான சைனீஸ் பொண்ணு வந்து கதவ தொரந்துச்சு//

உங்க பிரன்ட் விலாசம் கிடைக்குமா?? அதுக்கு மேல இருக்க ப்ளோர் நான் வழி கண்டுபிடிசிகிறேன்

மங்குனி அமைச்சர் said...

Bleachingpowder said...

Shit !!!! mistakenly voted negative i guess...my apologies ////

நோ பிராபளம் , பிளீச்சிங் , டென்சன் ஆகாதிங்க , தவறா நடந்ததது தானே

மங்குனி அமைச்சர் said...

Jey said...

///பித்தனின் வாக்கு said...
//"எச்சூச்மி மேடம் இந்த ஊருல எங்க பிட்ச்சை எடுத்தா அதிக கல்லா கட்டும்///

kooda companykku antha ponnaiyum pick up panna vendiyathuthana.

thambi complan kudippa, nee innum valara vendi irukku.///

மங்குனி நோட் பண்ணுய்யா..., நீரு ரொம்ப தோஸ்த்துன சொன்னவரே சொல்லிருக்காரு...////

ஓகே ஓகே

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

@மங்குனி
//ஒரு அழகான சைனீஸ் பொண்ணு வந்து கதவ தொரந்துச்சு//

உங்க பிரன்ட் விலாசம் கிடைக்குமா?? அதுக்கு மேல இருக்க ப்ளோர் நான் வழி கண்டுபிடிசிகிறேன்////

அப்போ நீ , சிங்கபூருல தான் இருக்கியா ?

Jey said...

/// TERROR-PANDIYAN(VAS) said...
@மங்குனி
//ஒரு அழகான சைனீஸ் பொண்ணு வந்து கதவ தொரந்துச்சு//

உங்க பிரன்ட் விலாசம் கிடைக்குமா?? அதுக்கு மேல இருக்க ப்ளோர் நான் வழி கண்டுபிடிசிகிறேன்///

பாண்டி பாத்து சாக்கிசானுக்கு உறவுக்கார பொண்ணா இருக்கபோவுது..., அப்புறம் விளியூரும் பட்டாவும் வேற அங்கதான் சுத்திகிட்டு இருக்ககளாம், அவக கண்ணுல பட்டாலும்... கடிச்சி துப்பிருவானுக...

Jey said...

//மங்குனி அமைசர் said...
Bleachingpowder said...

Shit !!!! mistakenly voted negative i guess...my apologies ////

நோ பிராபளம் , பிளீச்சிங் , டென்சன் ஆகாதிங்க , தவறா நடந்ததது தானே///

இலல நீரு அடுத்த பதிவு போடும்போதுநான் தெரிஞ்சே போடுரேன், என்னய்யா பண்ணுவீரு... பாத்துரலாமா .. ஒத்தைக்கு ஒத்த...

மங்குனி அமைச்சர் said...

Jey said...

/// TERROR-PANDIYAN(VAS) said...
@மங்குனி
//ஒரு அழகான சைனீஸ் பொண்ணு வந்து கதவ தொரந்துச்சு//

உங்க பிரன்ட் விலாசம் கிடைக்குமா?? அதுக்கு மேல இருக்க ப்ளோர் நான் வழி கண்டுபிடிசிகிறேன்///

பாண்டி பாத்து சாக்கிசானுக்கு உறவுக்கார பொண்ணா இருக்கபோவுது..., அப்புறம் விளியூரும் பட்டாவும் வேற அங்கதான் சுத்திகிட்டு இருக்ககளாம், அவக கண்ணுல பட்டாலும்... கடிச்சி துப்பிருவானுக... ////

ஆமாப்பு , ஜாக்கிரத , அந்த ரெண்டு பயபுள்ளைகளும் டேஜரான ஆளுக

மங்குனி அமைச்சர் said...

Jey said...

//மங்குனி அமைசர் said...
Bleachingpowder said...

Shit !!!! mistakenly voted negative i guess...my apologies ////

நோ பிராபளம் , பிளீச்சிங் , டென்சன் ஆகாதிங்க , தவறா நடந்ததது தானே///

இலல நீரு அடுத்த பதிவு போடும்போதுநான் தெரிஞ்சே போடுரேன், என்னய்யா பண்ணுவீரு... பாத்துரலாமா .. ஒத்தைக்கு ஒத்த...///

எனக்கு மிருகங்க கூட சண்டை போட்டோ தெரியாதே ?

கருடன் said...

@மங்குனி
//நோ பிராபளம் , பிளீச்சிங் , டென்சன் ஆகாதிங்க , தவறா நடந்ததது தானே //

நாங்க எல்லாம் பிளான் பண்ணி போடுவோம்...

கருடன் said...

@மங்குனி
//அப்போ நீ , சிங்கபூருல தான் இருக்கியா ?//

அப்போ துபாய், சிங்கபூர் இரண்டும் வேறைய?

கருடன் said...

@மங்குனி
//பாண்டி பாத்து சாக்கிசானுக்கு உறவுக்கார பொண்ணா இருக்கபோவுது..., அப்புறம் விளியூரும் பட்டாவும் வேற அங்கதான் சுத்திகிட்டு இருக்ககளாம், அவக கண்ணுல பட்டாலும்... கடிச்சி துப்பிருவானுக...//

அட அப்போ சாக்கிசான் எனக்கு மச்சான் முறை.... அப்புறம் என்பா அந்த பச்சை புள்ளைங்கள பத்தி தப்ப பேசற...

கருடன் said...

@மங்குனி
//ஆமாப்பு , ஜாக்கிரத , அந்த ரெண்டு பயபுள்ளைகளும் டேஜரான ஆளுக//

அட நம்ப பட்டு ஒரு அப்பாவி... வெளி ஒரு அப்ராணி... இதுகள போய்.....

Anonymous said...

நல்லா ஒளிஞ்சு விளையாடி இருக்கீங்க..
அமைச்சர் பதிவிக்கே உரிய விளையாட்டு தான்..

எல் கே said...

singapore jaila adi vaangineengale atha sollama vitratheenga

எம் அப்துல் காதர் said...

//((நானும் எவ்ளவோ எடிட் பண்ணிப் பாத்தேன் அப்பவும் முடியல, very சாரி :))-//

அமைச்சரே தொடரும்னு வேற போட்டு,,, யாரையோ கிண்டல் பண்ற மாதிரி இருக்கு...! ஹி..ஹி..(யார் அது ??)

ஜெய்லானி said...

//உண்மையிலேயே நல்ல தலைப்பு , நானும் அப்படித்தான் யோசிச்சேன் , ஆனா எங்க பய புள்ளைக்க சிங்கமுன்னு போட்டா வேற ஒரு கேள்வி கேட்டு மடக்கு வானுக், அதான் இப்படி //

அப்ப உஷாராதான் இருக்கே...

எம் அப்துல் காதர் said...

//அப்புறம் டாக்ஸி புடிச்சு "திலக் பிளாங்கா ரைஸ் "(இந்த பேர வச்சு ஒரு காமடி நடந்துச்சு அத அப்புறம் சொல்றேன்) //

மறக்காம தொடரா எழுதணும் சொல்லிட்டேன்.

ஜெய்லானி said...

////"எச்சூச்மி மேடம் இந்த ஊருல எங்க பிட்ச்சை எடுத்தா அதிக கல்லா கட்டும்//

அதுக்கு எதுக்குயா போன் பண்னி கேக்குறே..இமிக்கிரேஷனியேயே சொல்லுவானுங்களே..

ஜெய்லானி said...

@@@ LK said...

singapore jaila adi vaangineengale atha sollama vitratheenga//

எல் கே அதுக்கு மங்கு பதில் சொல்லாம போகாது அப்படி போனாலும் நாங்க விட மாட்டோம்..

S Maharajan said...

//நான் ஸ்கூல்ல படிக்கும் போது//

எவ்வளவு பெரிய பொய்

SEMA KALAKAL WAITING FOR NEXT..............

Gayathri said...

ஐயோ ஐயோ என்ன கூத்து..ஆரம்பமே படு கலக்கலா இருக்கு

Starjan (ஸ்டார்ஜன்) said...

அன்புள்ள மங்குனி.. உங்களுக்கு ஒரு விருது கொடுத்துள்ளேன்.. அன்போடு பெற்றுக்கொள்ளுங்கள்..

என்றும் அன்புடன்
உங்கள் ஸ்டார்ஜன்.

http://ensaaral.blogspot.com/2010/08/blog-post_07.html

Anonymous said...

தொடக்கமே கலக்கல் தான் ..அடுத்த பார்ட் க்கு வெய்டிங் .

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//"அப்ப , உங்கள பிக்கப் பண்ணத்தான் ஏர்போர்ட் போயிருக்கான் , உடனே நீங்க ஏர்போர்ட் போங்க "//

உங்களை மாதிரியே ரொம்ப புத்திசாலியா இருப்பங்களோ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் பட்டாகிட்ட நியூ வாட்டர் வாங்கினியா?

சிநேகிதன் அக்பர் said...

//"அப்ப , உங்கள பிக்கப் பண்ணத்தான் ஏர்போர்ட் போயிருக்கான் , உடனே நீங்க ஏர்போர்ட் போங்க "//

இது டாப்பு

தொடர்ந்து ஊர் சுத்தி காண்பிங்க...

'பரிவை' சே.குமார் said...

ஹஹஹா....

தொடர்ந்து ஊர் சுத்தி காண்பிங்க...

பருப்பு (a) Phantom Mohan said...

Friend yaaru The Great Pattapatti????

Mohan said...

நல்ல நகைச்சுவையுடன் (வழக்கம்போல) எழுதி இருக்கீங்க... தொடருங்கள்...

Jey said...

//Phantom Mohan said...
Friend yaaru The Great Pattapatti????///

இதுக்கு நாந்தேன் பதில் சொல்லுவேன்..

அது என்னான்னா...இந்த ஊசிப்போன பருப்போட... ஒன்னுவிடாத ரெண்டாவது சித்தப்பாவோட, மூனாவது மருமகனோட ஒன்னா வேலை பாத்த முருகேஷோட ரூம் மேட்டோட ஒன்னுவிட்ட பங்காளி, பரமேஷு இருக்கான்ல, அவனோட தூரத்து உறவுக்கார தாத்தாவோட ப்தினெட்டாவது பேரன், தன்னோட 32-வது வயசுல கடையில வாங்கி தைச்ச கோடு போட்ட அன்றாயருதான்... இந்த பட்டாபட்டி..., எங்கே நான் சொன்னத ஒரு வாட்டி மறுக்கா சொல்லு...., யோவ் பருப்பு எங்க போர ... நில்லுய்யா... இந்தா... சொல்லிகிட்டே இருக்கேன்ல...

செல்வா said...

///"சூ கவாங் கிட்டாசி மிச்ட்ஜுபுச்சி மொஹாங்" ///
இது உண்மைலேயே சைனீசா...??

ஜெயந்த் கிருஷ்ணா said...

உங்க ஆட்டத்துக்கே நான் வரலப்பா....

சுசி said...

சிரிச்சுக்கிட்டே அடுத்த போஸ்ட்டுக்கு வெயிட்டிங் :))

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...
@மங்குனி
//நோ பிராபளம் , பிளீச்சிங் , டென்சன் ஆகாதிங்க , தவறா நடந்ததது தானே //

நாங்க எல்லாம் பிளான் பண்ணி போடுவோம்...
////

நான் தான் சொல்லி குடுத்தேன்னு யாரு கிட்டயும் சொல்லிடாத

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...
@மங்குனி
//அப்போ நீ , சிங்கபூருல தான் இருக்கியா ?//

அப்போ துபாய், சிங்கபூர் இரண்டும் வேறைய?
////

சிங்கபூரோட கேபிடல் தானே துபாய் ????

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...
@மங்குனி
//பாண்டி பாத்து சாக்கிசானுக்கு உறவுக்கார பொண்ணா இருக்கபோவுது..., அப்புறம் விளியூரும் பட்டாவும் வேற அங்கதான் சுத்திகிட்டு இருக்ககளாம், அவக கண்ணுல பட்டாலும்... கடிச்சி துப்பிருவானுக...//

அட அப்போ சாக்கிசான் எனக்கு மச்சான் முறை.... அப்புறம் என்பா அந்த பச்சை புள்ளைங்கள பத்தி தப்ப பேசற...
////

பாத்துப்பு ஜாக்கிசான் கூட பல நேரம் போம்பலவேசம் போட்டு அலையுராராம்

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...
@மங்குனி
//ஆமாப்பு , ஜாக்கிரத , அந்த ரெண்டு பயபுள்ளைகளும் டேஜரான ஆளுக//

அட நம்ப பட்டு ஒரு அப்பாவி... வெளி ஒரு அப்ராணி... இதுகள போய்.....
////

பாவம் பச்ச மண்ணுக , நீ பாத்தா குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி கொடு

மங்குனி அமைச்சர் said...

Indhira said...
நல்லா ஒளிஞ்சு விளையாடி இருக்கீங்க..
அமைச்சர் பதிவிக்கே உரிய விளையாட்டு தான்..
////

அட நீங்க வேற , நான் போலிசுக்கு பயந்து ஒளிந்ஜெங்க

மங்குனி அமைச்சர் said...

LK said...
singapore jaila adi vaangineengale atha sollama vitratheenga
////

ஆஹா, உங்களுக்கு அது தெரிய்சு போச்சா ???

மங்குனி அமைச்சர் said...

எம் அப்துல் காதர் said...
//((நானும் எவ்ளவோ எடிட் பண்ணிப் பாத்தேன் அப்பவும் முடியல, very சாரி :))-//

அமைச்சரே தொடரும்னு வேற போட்டு,,, யாரையோ கிண்டல் பண்ற மாதிரி இருக்கு...! ஹி..ஹி..(யார் அது ??)
////

ஹி,ஹி,ஹி சும்மா தமாசு

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...
//உண்மையிலேயே நல்ல தலைப்பு , நானும் அப்படித்தான் யோசிச்சேன் , ஆனா எங்க பய புள்ளைக்க சிங்கமுன்னு போட்டா வேற ஒரு கேள்வி கேட்டு மடக்கு வானுக், அதான் இப்படி //

அப்ப உஷாராதான் இருக்கே...
////

என்னா பண்றது உன்கூட பழகின புறம் உசாரா இருந்து பழகிட்டேன்

மங்குனி அமைச்சர் said...

எம் அப்துல் காதர் said...
//அப்புறம் டாக்ஸி புடிச்சு "திலக் பிளாங்கா ரைஸ் "(இந்த பேர வச்சு ஒரு காமடி நடந்துச்சு அத அப்புறம் சொல்றேன்) //

மறக்காம தொடரா எழுதணும் சொல்லிட்டேன்.
/////

ரைட்டு (ஏம்பா இவருக்கு ஒரு டீ சொல்லு , பாவம் எவ்ளோ அடிச்சாலும் தாங்குராப்புல )

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...
////"எச்சூச்மி மேடம் இந்த ஊருல எங்க பிட்ச்சை எடுத்தா அதிக கல்லா கட்டும்//

அதுக்கு எதுக்குயா போன் பண்னி கேக்குறே..இமிக்கிரேஷனியேயே சொல்லுவானுங்களே..
////

நண்பா அவனுக கிட்ட தான் கேட்டேன் , பயபுள்ளை சொல்ல மாட்டேன்னுட்டாணுக , பொறாம

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...
@@@ LK said...

singapore jaila adi vaangineengale atha sollama vitratheenga//

எல் கே அதுக்கு மங்கு பதில் சொல்லாம போகாது அப்படி போனாலும் நாங்க விட மாட்டோம்..
////

அதோட விடியோ கிளிபிங்க்ஸ் வச்சிருப்பியே ???

மங்குனி அமைச்சர் said...

S Maharajan said...
//நான் ஸ்கூல்ல படிக்கும் போது//

எவ்வளவு பெரிய பொய்

SEMA KALAKAL WAITING FOR NEXT..............
/////

சார் , நீங்க ரொம்ப மோசம் , கரக்க்ட்டா பொய் சொன்ன கண்டுபுடுச்சிடுரிங்க

மங்குனி அமைச்சர் said...

Gayathri said...
ஐயோ ஐயோ என்ன கூத்து..ஆரம்பமே படு கலக்கலா இருக்கு
///

வாங்க வாங்க காயத்திரி , இன்னும் இருக்கு

மங்குனி அமைச்சர் said...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அன்புள்ள மங்குனி.. உங்களுக்கு ஒரு விருது கொடுத்துள்ளேன்.. அன்போடு பெற்றுக்கொள்ளுங்கள்..

என்றும் அன்புடன்
உங்கள் ஸ்டார்ஜன்.

http://ensaaral.blogspot.com/2010/08/blog-post_07.html
////

ரொம்ப ரொம்ப , நன்றி ஸ்டார்ஜன் சார் வந்துடுறேன்

மங்குனி அமைச்சர் said...

sandhya said...
தொடக்கமே கலக்கல் தான் ..அடுத்த பார்ட் க்கு வெய்டிங் .
///

நன்றி சந்தியா , நன்றி

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//"அப்ப , உங்கள பிக்கப் பண்ணத்தான் ஏர்போர்ட் போயிருக்கான் , உடனே நீங்க ஏர்போர்ட் போங்க "//

உங்களை மாதிரியே ரொம்ப புத்திசாலியா இருப்பங்களோ?
////

நம்ம பிரண்ட்ஸ் எல்லாமே இவன மாதிரியே ரொம்ப புத்திசாலிக்க சார்

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
யோவ் பட்டாகிட்ட நியூ வாட்டர் வாங்கினியா?
///

பரதேசி , நான் வர்றேன்னு தேரின வுடன் போன ஆப் பண்ணிட்டான் ரமேஷ்

மங்குனி அமைச்சர் said...

அக்பர் said...
//"அப்ப , உங்கள பிக்கப் பண்ணத்தான் ஏர்போர்ட் போயிருக்கான் , உடனே நீங்க ஏர்போர்ட் போங்க "//

இது டாப்பு

தொடர்ந்து ஊர் சுத்தி காண்பிங்க...
////

நன்றி அக்பர் , கண்டிப்பா காடிருவோம்

மங்குனி அமைச்சர் said...

சே.குமார் said...
ஹஹஹா....

தொடர்ந்து ஊர் சுத்தி காண்பிங்க...
////

காட்டிருவோம் , எங்க போன வுடனே உள்ள புடுச்சு போட்டானுக

மங்குனி அமைச்சர் said...

Phantom Mohan said...
Friend yaaru The Great Pattapatti????
////

அவனுக் எங்க இவ்ளோ அறிவு இருக்கு

மங்குனி அமைச்சர் said...

Mohan said...
நல்ல நகைச்சுவையுடன் (வழக்கம்போல) எழுதி இருக்கீங்க... தொடருங்கள்...
///

thank you mohan

மங்குனி அமைச்சர் said...

Jey said...
//Phantom Mohan said...
Friend yaaru The Great Pattapatti????///

இதுக்கு நாந்தேன் பதில் சொல்லுவேன்..

அது என்னான்னா...இந்த ஊசிப்போன பருப்போட... ஒன்னுவிடாத ரெண்டாவது சித்தப்பாவோட, மூனாவது மருமகனோட ஒன்னா வேலை பாத்த முருகேஷோட ரூம் மேட்டோட ஒன்னுவிட்ட பங்காளி, பரமேஷு இருக்கான்ல, அவனோட தூரத்து உறவுக்கார தாத்தாவோட ப்தினெட்டாவது பேரன், தன்னோட 32-வது வயசுல கடையில வாங்கி தைச்ச கோடு போட்ட அன்றாயருதான்... இந்த பட்டாபட்டி..., எங்கே நான் சொன்னத ஒரு வாட்டி மறுக்கா சொல்லு...., யோவ் பருப்பு எங்க போர ... நில்லுய்யா... இந்தா... சொல்லிகிட்டே இருக்கேன்ல...
///

ஜெய் ஆள விடாத புடிச்சு இன்னும் புல் டீடைலா சொல்லு

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...
///"சூ கவாங் கிட்டாசி மிச்ட்ஜுபுச்சி மொஹாங்" ///
இது உண்மைலேயே சைனீசா...??
////

சைனீசா , சைனீஸ் அப்படின்னா என்ன தல ?

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...
உங்க ஆட்டத்துக்கே நான் வரலப்பா....
..////

அண்ணே அண்ணே , நீங்க அப்படி எல்லாம் சொல்லக்கூடாது , கண்டிப்பா ஆட்டைல சேரனும்

மங்குனி அமைச்சர் said...

சுசி said...
சிரிச்சுக்கிட்டே அடுத்த போஸ்ட்டுக்கு வெயிட்டிங் :))
////

நன்றி சுசி , எங்க முழு பேரு சுசீலா வா ?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பரதேசி , நான் வர்றேன்னு தேரின வுடன் போன ஆப் பண்ணிட்டான் ரமேஷ்
//

இப்ப எதுக்கு ரமேஸ திட்டறே?..
( அப்பாடா.. கோத்து விட்டாச்சு...
பட்டாபட்டி... எஞ்சாய்..)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஹா ஹா... உங்க பிரண்ட்டும் உங்கள மாதிரியே தான் போலிருக்கு..

என்ன ஒரு அறிவு, என்ன ஒரு அறிவு... ஒளிஞ்சு இருந்து
"Peek-A-Boo" விளையாட நினைச்சார் போலிருக்கு :D :D

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

அவர நம்பி போன உங்கள சொல்லணும் :-))

சீமான்கனி said...

//"அப்ப , உங்கள பிக்கப் பண்ணத்தான் ஏர்போர்ட் போயிருக்கான் , உடனே நீங்க ஏர்போர்ட் போங்க "//

8-))))))
நீங்களும் உங்க நண்பரும் மட்டுந்தான் அப்டின்னு பார்த்த அவரோட நண்பரும் அப்டிதானா வெளங்கிரும்.....அவசரமாய் தொடரவும்

Karthick Chidambaram said...

மங்குனி - சரியான coincidence - இன்னைக்குதான் நான் சிங்கை கிளம்புறேன்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஏ ராசா.. மலேசியாக்கு கீழ ஒட்டிக்கிட்டு இருக்குற சிங்கப்பூரையா சொல்றே?...

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

பரதேசி , நான் வர்றேன்னு தேரின வுடன் போன ஆப் பண்ணிட்டான் ரமேஷ்
//

இப்ப எதுக்கு ரமேஸ திட்டறே?..
( அப்பாடா.. கோத்து விட்டாச்சு...
பட்டாபட்டி... எஞ்சாய்..) ////

இங்க எங்கயுமே ரமேசுன்குற பேரே இல்லை , ஏன் இப்படி கோத்து விட்டு வேடிக்கை பாக்குற? அப்புறம் அந்த ஏர்போர்ட்டுக்கு போன அந்த பிரண்டு யாருன்னு நான் வெளிய சொல்லவேண்டிவரும் , ஜாக்க்க்க்க்க்கிரத .............

மங்குனி அமைச்சர் said...

Ananthi said...
ஹா ஹா... உங்க பிரண்ட்டும் உங்கள மாதிரியே தான் போலிருக்கு..

என்ன ஒரு அறிவு, என்ன ஒரு அறிவு... ஒளிஞ்சு இருந்து
"Peek-A-Boo" விளையாட நினைச்சார் போலிருக்கு :D :D
///

ஆமாங்க ஆனந்தி "நம்ம" பிரண்ட்ஸ் எல்லாமே இப்படித்தான் .

மங்குனி அமைச்சர் said...

Ananthi said...
அவர நம்பி போன உங்கள சொல்லணும் :-))
///

விடுவமா நம்ம , இன்னும் பாருங்க நடந்த கதைய

மங்குனி அமைச்சர் said...

சீமான்கனி said...
//"அப்ப , உங்கள பிக்கப் பண்ணத்தான் ஏர்போர்ட் போயிருக்கான் , உடனே நீங்க ஏர்போர்ட் போங்க "//

8-))))))
நீங்களும் உங்க நண்பரும் மட்டுந்தான் அப்டின்னு பார்த்த அவரோட நண்பரும் அப்டிதானா வெளங்கிரும்.....அவசரமாய் தொடரவும்
///

நம்ம கூட சேந்துட்டா , அப்புறம் தப்பிக்கவே முடியாது

மங்குனி அமைச்சர் said...

Karthick Chidambaram said...
மங்குனி - சரியான coincidence - இன்னைக்குதான் நான் சிங்கை கிளம்புறேன்.
///

நல்ல படியா பாத்து போயிட்டு வாங்க

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...
ஏ ராசா.. மலேசியாக்கு கீழ ஒட்டிக்கிட்டு இருக்குற சிங்கப்பூரையா சொல்றே?...
///

அப்ப அங்க ஒரு சிங்கபூரு இருக்கா ?

vinu said...

intha dialogue ellam eatho Vivek padathulla vara mathiri ennakku niyabagam, unmaiyileayea neenga singai poneengala illai chummunattikku kallaikkureengalannu next eppisodes padichuttu sollurean

vinu said...

thanks you amichar neengalavathu ithu englishnu sonneengalea previous coment ellam paarunnga ellarum sema thittu thitti irrunkkaanga thnglishnu

thank you thank you inga PUNE vanthaula irrunthu englishum hindhiyum thaan oodittu irrukku ungallukkagavea next post tamilea pottudurean

ok va appuram intha nammaloda nanbar oruthar profile details paarunga konjam

மங்குனி அமைசர்
Gender: Male
Industry: Tourism
Occupation: BUSINESS
Location: CHENNAI : TAMILNADU : India

innama kallakkikittu irrukkurarunnu
6 aappu faillana maaka vaanu konjam doubtathaan irrukku pa

Unknown said...

ரிங்கு போச்சு ....................
போச்சு ............
ச்சு ................
சு................

வழக்கமா இப்ப ஒரு பாட்டு பாடுமே அத காணோம்...

Unknown said...

100

மங்குனி அமைச்சர் said...

vinu said...

intha dialogue ellam eatho Vivek padathulla vara mathiri ennakku niyabagam, unmaiyileayea neenga singai poneengala illai chummunattikku kallaikkureengalannu next eppisodes padichuttu sollurean ////

ஆகா இந்த பயபுள்ள ஆணிவேரையே ஆட்டுதே , எப்படி தப்பிக்கிறது , எச்சூச்மி ஜூஸ் ஏதாவது சாப்புடுரிகளா ?

மங்குனி அமைச்சர் said...

vinu said...

thanks you amichar neengalavathu ithu englishnu sonneengalea previous coment ellam paarunnga ellarum sema thittu thitti irrunkkaanga thnglishnu

thank you thank you inga PUNE vanthaula irrunthu englishum hindhiyum thaan oodittu irrukku ungallukkagavea next post tamilea pottudurean

ok va appuram intha nammaloda nanbar oruthar profile details paarunga konjam

மங்குனி அமைசர்
Gender: Male
Industry: Tourism
Occupation: BUSINESS
Location: CHENNAI : TAMILNADU : India

innama kallakkikittu irrukkurarunnu
6 aappu faillana maaka vaanu konjam doubtathaan irrukku pa///

ரொம்ப பெரிய படிப்பு படிச்ச புள்ளையா இருக்கும் போல , என்னமா கண்டுபுடிக்கிராக

மங்குனி அமைச்சர் said...

கலாநேசன் said...

ரிங்கு போச்சு ....................
போச்சு ............
ச்சு ................
சு................

வழக்கமா இப்ப ஒரு பாட்டு பாடுமே அத காணோம்...///

அட ஆமா சார், விட்டுப் போச்சு இருந்தாலும் அங்க வேற சைநீசுலே சொல்லுது ஒரு இழவும் புரியல

மங்குனி அமைச்சர் said...

கலாநேசன் said...

100///

சாருக்கு ஒரு வடை பார்சல்

கொல்லான் said...

அமைச்சரே, அடுத்த வாரம் அங்க வாறன். ஏர்போர்ட்டுல வந்து என்னை பிக்கப் பண்ணிக்கோங்க.

வால்பையன் said...

ஹாஹாஹா!

அந்த ஃப்ரெண்டும் பிரபல ப்ளாக்கரா!?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன அமைச்சரே, பக்கத்துல இருக்க சிங்கம்புணரிக்கிப் போய்ய்ட்டு வந்து சிங்கப்பூருன்னு இப்பிடி பீலா விடுறீரே! வரட்டும் புலிகேசி உம்மை உகாண்டாவுக்கு நாடுகடத்தச் சொல்லுகிறேன்!

அமுதா கிருஷ்ணா said...

அடுத்த தொடர் எப்ப?? எப்ப??