நான் கிரேட் பிரிட்டன் போறேன் , நான் கிரேட் பிரிட்டன் போறேன், நான் கிரேட் பிரிட்டன் போறேன்
(கேபிள் ரொம்ப ரொம்ப பெரிசா தேவைப்படும் போல ???)
ஏன்னா???, நேத்து எனக்கு ஒரு மெயில் வந்துச்சு அதுல ...................
Wednesday December 01st
Draw No. 1559 20 21 22 24 27 34 BONUS 29
Dear Winner...
This is to inform you that you have won a
prize money of seven hundred and
fifty thousand Great Britain Pound
Sterlings (750,000.00) for the month of
December 2010 Lottery promotion which is
organized by BBC ONE LOTTERY on our 2010
CHARITY/AWARDS
We Congratulate you for being one of the
five person selected.
The draw no.1559 brought out your e-mail address
from a Data Base of Internet Email Users and qualified
you a bonafied winner of the stated winning amount.
How ever you will have to fill and submit
the informations below to the Claims Manager ///
இப்ப இந்த பணத்த என்னபன்றதுன்னு தான் தெரியல .........
ஏற்கனவே இங்கிலாந்துல இருந்து ஒரு பொண்ணு "என்னோட பேரன்ட்ஸ் ஒரு ஆக்சிடண்ட்ல செத்துட்டாங்க எனக்கு இங்க இருக்க புடிக்கல அதுனால என்னோட 460 கோடி மதிப்புள்ள சொத்தோட இந்தியாவுக்கு வந்து உங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆவேன்னு ஒத்த கால்ல நிக்குது" (பாவம் ரொம்ப நாளவேற நிக்குது , கால் வலிக்காது ?)
அப்புறம் பிரான்ச்சுல இறந்து போன ஒருத்தரோட பணம் 300 கோடி வாரிசில்லாம அனாதையா கிடக்கு அதைநான் உங்களுக்குதான் டிரான்ஸ்பார் பண்ணிவிடுவேன்னு ஒரு ஆபீசர் ரொம்ப பிரசர் குடுக்குறார் ..........
இப்ப என்ன செய்றது ???? ஆயிரம், லட்சம் இதெல்லாம் ஈசிய செலவு பண்ணிடலாம் ....இந்த கோடி அதுவும் மொத்தம் கிட்டத்தட்ட ஆயிரம் கோடி வரும்போல ........... எப்படி செலவுபன்றது ??????
சே....மனுசன நிம்மதியா இருக்க விடுரானுகளா ??? இப்ப எப்படி செலவுபன்றதுன்னு யோசிச்சு யோசிச்சு மண்டை காயுது ...........
1 . பஸ்ட்டு டிரைன்ல போறதுக்கு தேவையான கேபிள் வாங்கணும் .(நாமே ஏன் டிரைன்ல போகணும் ???? இனி எல்லாம் பிளைட்டு தான் ...... வானத்துல கேபிளுக்கு எப்படி சப்போர்ட் குடுக்குதது ?)
2 . பைக்கு பெட்ரோல் டேங்க்க புல்பன்னிடனும்
3 . மளிகை கடை கடன அடிச்சிடனும்
4 . வீட்டு ரெண்டுமாச வாடக பாக்கிய கொடுத்திடனும்
சீ........... நம்ம புத்தி எப்படி சில்லரைத்தனமா யோசிக்கிறது பாருங்க ???????
மங்கு பெரிசா யோசிடா ?????????
ஏன்டா மங்கு , என்னா சுயநலம் உனக்கு ? பதிவுலகத்துல எவ்ளோ பிரண்ட்ஸ் இருக்காங்க அவுங்கள பத்தி யோசிச்சுப்பாத்தியா ?????
ஆஹா..... சே ....... என்னைய நினைச்சா எனக்கே வெக்கமா இருக்கு சார் ...எவ்வளவு சுயநலமா யோசிக்கிறேன் ....... ரொம்ப நன்றி மனசாட்சி .........
பணம் எல்லாத்தையும் நான் பதிவுல நண்பர்களுக்கே பிரிச்சு கொடுத்துடுறேன் ....
அதுனால நண்பர்களே எப்படியும் உங்க ஒவ்வொருவருக்கும் ரெண்டுகோடி ரூபாயிக்கு மேல வரும் . அந்த பணத்த உங்க பேருல டி.டி. எடுத்து அனுப்ப டி.டி கமிசன் மட்டும் ஆளாளுக்கு ஒரு 3500 ரூபாய கீழ உள்ள என்னோட அக்கவுன்ட்டுல போட்ருங்க
NAME.: மங்குனி அமைசர்
S/B A/C NO: 000 000 000 000 000





